கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 807 
 
 

வேலைக்கும் போய்ட்டு உங்க அம்மாக்கும் வேல பாக்க என்னால முடியல. உங்க அம்மாவ ஏதாவது ஒரு ஹோம்ல சேருங்கன்னு, எத்தன தடவ சொல்றது உங்ககிட்ட? என கிச்சனில் இருந்து கத்திக்  கொண்டு இருந்தாள் உமா. 

காலையிலேயே ஆரம்பிச்சுட்டியா, நானும் எத்தன தடவ சொல்றது? ஹோம்லலாம் சேக்க முடியாது. எங்க அப்பா எனக்கு அஞ்சு வயசு இருக்கப்ப  இறந்து போய்டார். அப்ப இருந்து எங்க அம்மா ஒத்த ஆளா, எவன் தயவும் இல்லாம என்ன வளத்து ஆளாக்கி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்திருக்காங்க. உன்னையும் கல்யாணம் பண்ணி வச்சாங்க. 

ஆமா நான் இல்லன்னு சொல்லல, என்னால இனிமேலும் பொருத்து போக முடியாது.  நீங்க வேலைக்கு போய்டு நைட்டு லேட்டா வரிங்க. அதுவரைக்கும் நான் தான பாத்துக்குறேன். எல்லா வேலையும் முடிச்சுட்டு  ரெஸ்ட் எடுக்கலாம்னு உக்கார போறப்ப உமா தண்ணி குடு உமா அத எடு இத எடுனு எதாவது சொல்றாங்க. 

அவங்களால  முடிஞ்சப்ப உனக்கு செஞ்சாங்க, இப்ப அவங்களுக்கு முடியல. நீ இத கூட செய்ய மாட்டியா? என்றான் பிரபு.

அங்க என்ன நான் சும்மாவா உக்காந்துட்டு வரேன். என்னால இதுக்கு மேல முடியாது, உங்க முடிவ சொல்லுங்க, அத பொருத்து நான் என் முடிவ சொல்றேன் என கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்.  

பிரபு அவன் அம்மாவின் ரூம்க்கு சென்றான். 

என்னால ஏன் தம்பி நீங்க சண்ட போடுறீங்க. என்னய ஹோம்ல விட்டுருப்பா. உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் என்றாள் பிரபுவின் அம்மா. 

என் சந்தோஷமே நீங்கதான மா நீங்க இல்லாம நான் ஒன்னுமே இல்லமா. அவ வரட்டும் நான் பேசிக்குறேன்.  நீங்க இதபத்தி யோசிக்காதீங்க அம்மா என பேசிவிட்டு ஹாலில் உள்ள  ஹோபாவில் அமர்ந்தான். 

மதியவேளை காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. கதவை திறந்தான். அவனின் மகன் விகாஷ்  வந்திருந்தான்.

என்னப்பா திடீர்னு வந்திருக்க, என்ன தம்பி எதுவும் பிரச்சனையா? என கேட்டார்.

அதெல்லாம் எதுவும் இல்லப்பா, செமஸ்டர் லீவு அதான் வந்தேன் என்றான். 

நெக்ஸ்ட் வீக் தான் முடியும்னு சொன்ன?

ஆமாப்பா சொன்னேன், பிளான மாத்திடாங்க என்றான். 

அது இருக்கட்டும் நீங்க ஏன் ஒருமாதிரி  இருக்கிங்க என கேட்டான். 

அது ஒன்னும் இல்லப்பா தலவலி அதான். 

சரி நீங்க ரெஸ்ட் எடுங்க, நான்  போய் பாட்டிய பாத்துட்டு அப்படியே என் ரூமுக்கு போறேன் என கூறிவிட்டு சென்றுவிட்டான். 

வேலை முடிந்து உமா வந்தாள்.

என்ன முடிவு எடுத்திருக்கீங்க என்றாள். 

என்ன முடிவு இங்க என்ன நடக்குது என விகாஷ் கேட்டான்.

நீ எப்ப வந்த என உமா கேட்டாள்.

மதியம் வந்தேன் அது இருக்கட்டும் என்ன முடிவு என கேட்டான்.

இருவரும் எதுவும் பேசவில்லை.

சொல்லுங்கப்பா என கேட்டான்,  பிரபு நடந்ததை கூறினார். 

விகாஷ் பேச ஆரம்பித்தான் அம்மா எனக்கு கல்யாணம் ஆகி எனக்கு வர மனைவி உங்கள  இந்த மாறி சொன்னா நான் என்ன முடிவெடுப்பேனோ அதான் அப்பாவோட முடிவும் என்றான். 

உமா தலை குனிந்து நின்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *