வாழ்க்கை என்றால் என்ன ?
இந்த கேள்வி அன்று மாலை அகஸ்மாத்தமாய் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு “எல்லோருக்கும் எல்லா வளமும் கொடு தாயே” மனமுருகி வேண்டி விட்டு வெளிய கோயில் பிரகாரத்தில் ஒரு குத்துக்கல்லில் உட்கார்ந்து வானத்தை பார்த்தவனுக்கு மேலே கேட்ட கேள்வி மனதுக்குள் வந்தது.

எதற்காக இந்த போராட்ட வாழ்க்கை? யாருக்காக? மனம் பொங்கி அப்படியே ஆழத்திற்குள் செல்ல ஆரம்பிக்க கண்ணை மூடி அப்ப்டியே உட்கார்ந்தேன். உண்மைதானே ! மனிதனை சுற்றி சுற்றி வந்து தாக்கி கொண்டிருக்கும் இந்த துர்குணங்களால் பீடிக்கப்பட்டு நம் வாழ்க்கையை தொலைத்துக்கொள்கிறோம். இந்த எண்ணம் என் மனதுக்குள் ஓடி உடலை ஒரு நொடி “சிலிர்க்க” வைத்தது. .
இப்ப நான் சாமியை கும்பிட்டமே, அந்த ஒரு நிமிஷம் நம்ம மனசு எவ்வளவு சாந்தமாச்சு, அப்படியே ஏன் நம்மனால இருக்க முடியலை ! மனதுக்குள் நானே எனக்குள் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டேன்.
இனி எந்த காரணத்துக்கும் கோபப்படக்கூடாது, மனைவியோடோ, குழந்தைகளோடோ நம்முடைய கோபத்தை காட்டவே கூடாது, இனிமே நம்மோட கோப, தாபம், பேராசை இதெல்லாம் விட்டுடணும். நாமளே நம்ம குணத்தால நம்ம உடம்பை ஏன் கெடுத்துக்கணும்? இதை நினைக்கும்போதே மனசுக்குள் நம்முடைய பொண்டாட்டி, குழந்தைகள் நம்முடைய மாற்றத்தை கண்டவுடன் சந்தோஷமா கொண்டாடுவாங்க. மனதுக்குள் சாந்தி எழ அப்படியே வீட்டுக்கு கிளம்பினேன்.
வாசலிலே மனைவி நிற்க அன்பாய் புன்னகைத்து கையில் கொண்டு போயிருந்த பூவையும், கோயில் பிரசாத்த்தையும் நீட்டினேன். வாங்கியவள் ஏன் என்னையும் கூட்டிட்டு போயிருக்கலாமில்லை? அவளை மெல்லிய புன்னகையுடன் இல்லை, திடீருன்னு போகணும்னு தோணுச்சு, அப்படியே இழுக்க..
ஆமா..இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் கூட்டிகிட்டு போயிடாதீங்க..இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் எங்காவது போயிட்டு….அடுத்தடுத்த புலம்பல்கள் என் காதுகளை தாக்க ஆரம்பிக்க, அதுவரை கோயிலில் உறுதி எடுத்த அமைதி காணாமல் போய்…
தாமதமாய் வீட்டுக்கு வந்த மகனிடம் தம்பி இவ்வளவு லேட்டா வீட்டுக்கு வர்றியே? அன்பாய் புன்னகையுடன் கேட்க, பத்து மணி எல்லாம் ஒரு லேட்டா? அடுத்த கேள்வி என் “வீக்கான பாயிண்ட்டை”பிடித்து அவன் கேட்க அதுவரை கோயிலில் நான் எடுத்த உறுதி மொழி காணாமல் போய்…
ஏங்க அடுத்த மாசத்தில இருந்து கரண்ட் பில் ஏற போகுதாமா? வீட்டுக்காரரும் வாடகைய ஏத்த போறதா சொல்றாரு ! கேட்டவுடன் மனதில் வந்த கோபம்..அதுவரை கோயிலில் மனதுக்குள் எடுத்த உறுதி மொழி காணாமல் போய்…
நம்ம ராமசாமியோட பொண்ணுக்கு மெடிக்கல் சீட் கிடைச்சுடுச்சாம்..காதில் விழுந்த செய்தி “ஐயோ நம்ம மக காயத்ரிய விட பிளஸ்டூவுல கம்மி மார்க்க வாங்கினவளுக்கா?” மனதில் பொங்கிய பொறாமை..அதுவரை மனதுக்குள் எடுத்த உறுதி மொழி காணாமல் போய்…
அடுத்து அடுத்து அடுத்து இப்படி அடுக்கடுக்கா..இராத்திரிக்குள்ள ஏகப்பட்ட டென்ஷன்..
முடியலை……சார்… மனுசனுக்கு !
Fabulous
Salutations to Shri. Damodaran for his incisive ability to answer the opening question “Vazhkai Yenraal Yenna? ” within few hundred words. Classic .
Good luck
Thanks