மிஸ்..யூ..டடா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2022
பார்வையிட்டோர்: 5,156 
 
 

தனது இளையமகனை வழியனுப்பிவிட்டு பொங்கிஎழுந்த அழுகையுடன் கன்னத்தால் வழிந்தோடும் கண்ணீரைக்கூட அடக்க முடியாமல் வாடகை வாகணத்தில் ஏறிக்கொள்கிறேன், இனி நானும் மனைவியும் வீட்டில் ஆளையாள் பார்த்துக்கொண்டு சோகங்களை சுமந்தவர்களாக நாட்களை கணக்கிடவேண்டியதுதான்.

என்ன வாழ்க்கை இது.. எனது ஒரே ஒரு மகளும் கண்காணாத நாட்டில் பிள்ளைகுட்டிகளுடன்…ஊரில் நல்லதோ கெட்டதோ ”வாட்சப்” மூலம் அறிந்து கொள்ளவேண்டியநிலமை, தொலைத்தொடர்புகள் கைவிரித்தால் யாரிடம் போய்முறையிடுவது.

மலைநாட்டின் ரம்மியமான காட்சிகளும்,உடலை வருடிச்செல்லும் குளிர்மையான காற்றும் ரசிக்கவோஉணரவோ முடியாதவனாய் பக்கத்தில் வெறுமையாகக்கிடக்கும் மகன் அமர்ந்து வந்த அந்த இருப்பிடத்தை நோக்கிஎன்னைஅறியாமலேஎன்கண்கள் மொய்த்துக்கொள்கின்றது,ஈரமாகிப்போன கண்ணங்களை, மனைவிக்கு தெரியாமல் துடைத்துக்கொள்கிறேன்,இந்நேரம் மகன் வாணத்தில் பறந்துகொண்டிருப்பான் எனது நினைவுகளோ லண்டனில் இருக்கும் மகள்,பேரப்பிள்ளைகளை நோக்கி தொற்றிக்கொள்கிறது.

நேற்றுப்போல்இருக்கின்றது நாட்டைவிட்டுசென்ற அந்த மூண்றுவருடங்கள்,குறைந்தது இரண்டுதடவைகளாவது நாட்டுக்கு அவர்களால் வந்துபோய்யிருக்கலாம் யார் செய்த தவறோ கொறோனா என்றும் ,லொக்டவுன் என்றும் வருடங்களை கடத்திவிட்டது , இந்த வருடமாவது வருவார்களா என்றால் மின்சாரத்துண்டிப்பு ஒரு புறம் விலையேற்றம் என்றாலும் பறவாய்யில்லை அடுத்த வேளைக்கு என்ன வாங்கலாம் எப்படி சமைக்கலாம் என்ற நிலைமை ஒரு புறம் ,கேஸ் இல்லை ,சமையலுக்கு அரிசி இல்லை ,விடிந்தால் கேஸ்போளினா பெற்றோல் போளினா இப்படியான நிலைமையில் அவர்கள் வந்துதான் என்ன செய்ய ,நாட்டுக்கு வருவதற்காய் தயார் படுத்திய விமானசீட்டைகூட ரத்துசெய்ததாக சென்றகிழமை பேரன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.

ஏதோ புரியவில்லை தினமும் பேரப்பிள்ளைகளுடன் பேசவேண்டும் ,வாரம் ஒரு முறையாவது “வாட்சப் ”பில் அவர்களின் முகத்தையாவது பார்க்கவேண்டும் அல்லது மனைவி பேசும்போது கேட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்ற உணர்வு உடம்போடு ஒட்டிவிட்டது,சில வேளைகளில் தொடர்பு கொள்ளமுடியாவிட்டால் ஏதோ என்னமோ என்று மனமெல்லாம் அன்றய நாளே இருப்புகொள்ளமல் போய்விடும்.

தொலைபேசி திரையில் எனது முகத்தை பார்த்தாலே போதும் “டடா.. டடா..” என்று பேரப்பிள்ளைகள் வாய் நிறைய சொல்லுவார்கள் டடா இல்லை அப்பா என்று சொல்லவேண்டும் என்றால் …கேட்டால்தானே…தினமும் மகள் அப்படி என்னை அழைக்கும்போது விபரம் தெரியாத பேரப்பிள்ளைகளும் அவ்வாறே பழகிவிட்டார்கள் இருந்தபோதும் விபரம் தெரிந்த ஆண்டு எட்டில் படித்துகொண்டிருக்கும் மூத்த பேரனாவது அப்பா என்று அழைப்பானா என்றால் …ம்.ஹும் .அவன்தான் முதலில் “ஹாய் டடா” என்பான் அப்படி அழைப்பதே அவர்களுக்கு ஒரு சந்தோசம்போலும்,,ஆனால் வாப்பாவை வாப்பா என்றுதான் வாய் நிறைய சொல்வார்கள்.

அதிகாலை வேளை மகனை வழியனுப்பிவிட்டு மதியமாகியும் இன்னும் ஊர் வந்து சேரவில்லை, ஹசலக்க தாண்டி மதிய சாப்பாட்டுக்காய் ஹோட்டலை நெருங்கியபோது “உம்மா நான் கட்டார் விமான நிலயத்தை அடைந்து விட்டேன் நீங்கள் …” மகன் உம்மாவிடம் பேசிவிட்டு என்னிடம் “இந்தாங்க மகன் பேசுது” என்று மனைவி தொலைபேசியை கையளித்தாள் சில வினாடிகள் வார்த்தைகள் வராமல் தடுமாறிக்கொண்டிருந்தேன் “மகன்….” மேற்கொண்டு என்னால் பேசமுடியவில்லை “ட.டா..ட.டா ..” என்ற அவனது அழைப்பிற்கு பதில் சொல்லமுடியாமல் மொளனமாகிவிட்டேன் “மகன் டடாவை தெரியும்தானே சின்ன கவலை என்றாலும் தாங்கமாட்டார் சரி மகன் ஊருக்கு போன உடன் கதைக்கிறம்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விடுகிறாள்.

சில வினாடிகள் என்கண்கள் இருண்டுவிட்டதான ஒரு ஊணர்வு ,மயக்கமா சோர்வா என்று எனக்கு எதுவுமே புரியவில்லை கண்களை இறுக மூடிக்கொள்கிறேன்.

”சாறுக்கு கவலை என்றால் தாங்க மாட்டாங்கபோல” சாரதி எனது மனைவியோடு கதைப்பது எனக்கு நண்றாக கேட்கின்றது ஆனால்..கண்களை திறக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருப்பதை மனைவி கண்டிருக்க வேண்டும் “நேற்றிலிருந்து தூக்கமில்லை தானே அதுதான் அப்படியே கொஞ்சநேரம் தூங்கினால் எல்லாம் சரியாகிடும் ”என்றாள், என்னால் கண்களை சுயமாக திறக்கமுடியாமல் இருக்கிறதே என்று சொல்வதற்கு நினைகின்றேன் ஆனால் பேசமுடியாமல் தடுமாற்றமடைகிறேன் ”அம்பாரைக்கு வந்துவிட்டோம் இனி வீடு வந்தமாதிரிதான் ”சாரதி சொல்வது எனக்கு கேட்கின்றது.

”இறங்கிட்டு வாங்க தூங்கினது போதும் வீடு வந்து சேர்ந்திட்டம்”மனைவி அழைப்பது கேட்கின்றது ,என்னால் ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியாமலும் பதிலுக்கு பேசமுடியாமலும் தடுமாறுவதை அவள் புரிந்திருக்க வேண்டும் அவளின் கைத்தான்கலில் இறக்கிவிடப்படுகிறேன்.

“ஊரில நடக்காததா நடந்திட்டு எத்தனையோபேர் உள்ளதும் ஒரே ஒரு பிள்ளைய வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு எதுவித கவலையும் இல்லாம சந்தோசமா இருக்காங்க, நீங்க என்னடாண்டா மகனையும் மகளையும் நினைச்சி நினைச்சி கவலப்பட்டுக்கொண்டே இருக்கிங்க அவங்களும் வாழத்தானே வேண்டும் எப்போதும் நம்மட பாதுகாப்பிலதான் இருக்க முடியுமா என்ன..நாம வாழ்ந்தவங்க அதுகள் வாழவேண்டியவைகள் அதுகள அதுகள்ற பாட்டிலவிட்டிடனும் “எனது கன்னத்தால் வழிந்தோடும் கண்ணீர்துளிகளை மனைவி தனது கரங்களால் அகற்றிவிடுகின்றாள் சற்று நேரம் அவள் மடியில் சாய்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன், பிரயாணக்களைப்பில் அவளுக்கும் தூக்கம் வந்துவிட்டதுபோலும் தலையனையில் என்னை தூங்கவைத்துவிட்டு பக்கத்தில் தரையில் தூங்கிவிடுகிறாள்.

என்னால் சுயமாக இயங்கமுடியாத கட்டத்திற்கு செண்று விட்டதுபோண்ற ஒரு நிலைமைக்கு அகப்பட்டுக்கொள்கிறேன் … இமைகளை சரியாக திறக்கவோ, நினைக்கின்ற வார்த்தைகளை வாய்விட்டு கூறவோ முடியாமல்..நான் நானாக இல்லாமல்…

“சரியாக யோசிக்கிறார்போல…”

“ஒரே ஒரு மகளும் வெளிநாட்டில இப்போஉதவிக்குவீட்டோடு இருங்த மகனும் வெளிநாட்டிற்கு போய்விட்டான் கடைசி காலத்தில பக்கத்தில பெற்றதுகள் இல்லையே அதுதான்…அடிக்கடி கவலைப்பட்டுக் கொள்ளுவார்’”

என்னை நலம் விசாரிக்க வருபவர்கள் வினவுவதும் மனைவியின் அந்த பதிலும் என்மனதிற்குள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் எனது இந்த நிலைகண்டு உடன் நாட்டுக்கு வர முடியாத எனது மூத்த மகளும் இழைய மகனும் ‘வாட்சப்’ பில் அழுவதும் அவர் அளுடன் ஒரு வார்த்தை கூட பேசமுடியாமலும், அவர்களின் முகத்தைகூட தெளிவாக பார்க்க முடியாமலும் அவர்களின் குரலுக்கு கண்ணீரை வடித்தபடியே நாட்கள் வாரங்களாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.

நாளையோ மறுதினமோ என் மூச்சுகூட அடங்கிப் போகலாம்..அப்போது எனது மகளின் இளைய மகன் “மிஸ் யூ டடா”..என்று முகநூலிலோ, வாட்சப் பிலோ எனது பழைய புகைப்படதிற்கு ”கொமண்ஸ்”எழுதக்கூடும்.

(கற்பனை)

நன்றி: தமிழன் வார இதழ், 26/06/2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *