மாய மான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 137 
 
 

ஞாயிற்றுக் கிழமையாவது ஓய்வாக படுத்திருக்கலாம் என்ற நினைவை மூடிய யன்னலை உடைத்துக்கொண்டு ஒலித்த அம்மாவின் குரல் தடைப்படுத்திக் கொண்டே இருந்தது. போன சமருக்குநட்ட ரோசா மரம் பூத்துவிட்டது.

இரண்டு பூ, மூன்று மொட்டு என்று தன் சினேகிதிக்கு விபரித்துக் கொண்டிருக்கும் அம்மாவை நினைக்ககோபம்தான் வந்தது. தன்னைப்பற்றி மட்டும் சிந்திக்கும் அம்மாவுக்கு பக்கத்தில்ருப்பவர்களைப்பற்றி அக்கறையே இல்லை. இதைப்பற்றி அப்பா கதைத்தால்…

இவ்வளவு காசைக்கொட்டி வீட்டை வாங்கிப்போட்டு எனக்கு கதைக்கிறதுக்கு கூட சுதந்திரம் இல்லையெண்டால் பிறகென்னத்துக்கு சொந்த வீடு வாங்கினீங்கள் ? இது என்ர வீடு நான் இப்படித்தான்; கதைப்பன்.

ஆனால் நாடு உம்முடையதில்ல நினைவுவைச்சுக்கொள்ளும். அடிக்கடி தன் உண்மை நிலையை மறக்கும் அம்மாவுக்கு அப்பாவின் அச்சுறுத்தல் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. அதிசயமாக வாய் திறக்கும் அப்பா இந்த வீட்டை பொறுத்தவரை ஒரு பேசாப் பொருள்..

அம்மாவின் ஆதிக்கம் அப்பாவின் மௌனம் இவைகள்தான் என் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியது என்பதை இருவரும் உணர்ந்ததாக தெரியவேயில்லை. அம்மாவின் ரோஜா விமர்சனம் என்னை மறுபடியும் பள்ளத்தில் தள்ளியது. அதிலிருந்து எழுந்துவிட வேண்டும் என்று என்னை நானே தயார்படுத்தி எழும்பொழுதெல்லாம் அம்மா திரும்ப திரும்ப அந்த நரகத்தில் என்னை தள்ளிக்கொண்டே இருக்கின்றா. அன்றும் அப்படித்தான்…

சிவப்பு ரோஜா மாலை. பெண்ணும் மாப்பிள்ளையும் மாலையை மாற்றிக் கொள்ளுங்கோ ஜயரின் கட்டளை காதில் ஒலிக்க. ஒரு கணம் பிரகாஷாசை நிமிர்ந்து பார்த்தேன்.. அவன் என்னை அளந்தபடி இருந்தான். சட்டென அம்மாவின் அதிகார பார்வை நினைவில்வர தலையை குனிந்து கொண்டேன். நிமிர்ந்த நன்நடையும் நேர்கொண்ட பார்வையும். பாரதியாரின் கவிதை வரியை அடிக்கடி கூறும் அப்பா. பொம்பிளைப்பிள்ளை தலையை குனிந்து கொண்டு நட எனக்கூறும் அம்மா. மாறுபட்ட கருத்துக்களால் வழி நடத்தப்பட்ட நான். மாலைகள் தோளில் சரியஅதிலிருந்து சிந்திய இதழ்களுடன் என் கண்ணீரும் அவன் காலடியில் சமர்ப்பணமாக கர்வமாய் அவன் பார்த்த பார்வை…ஓ எவ்வளவு வக்கிரமான புத்தி அவனுக்கு மாலதி மரியாதையாக கதைக்கப் பழகு. பிரகாஷை அவன் என்று சொலலக் கூடாது என்று எத்தனைதரம் சொல்லியிருக்கிறன்.

அவன் மட்டும் நீ, வா, போ என்று கதைக்கலாம் ஏன் நான் கதைக்க கூடாது?

அதுதான் எங்கட சம்பிரதாயம்.

இஞ்சேருங்கோ, என்னங்கோ, அப்பா இப்படியெல்லாம் நான் கூப்பிடுவன் என்று நினைக்காதீங்கோ. பிரகாஷ் என்று கூட கூப்பிடக்கூடாதாம் பின்ன என்னத்துக்கு மனுசருக்கு பெயர்வைக்கிறது ? கூப்பிடத்தானே.

மாலதி விதண்டாவாதம் செய்ய இது நேரமில்லை.

இது விதண்டாவாதமில்லையம்மா உண்மை உண்மையை நேர்கொள்ள உங்களில ஒருத்தருக்கும் தைரியம் இல்லை. நினைவுகள் நீள நீள…என் கண்கள் கண்ணீரில் மூழ்கி தவித்தன என் வாழ்க்கையைப்போல.

இப்பொழுதெல்லாம் நினைவுகள் உறுத்தும் பொழுதுகளில் அடிமனதில் அமிழ்ந்திருக்கும் எங்கட ஊர், பெரியவீடு பூக்கள், மரங்கள் அந்த வீட்டையே உலகமாக்கி சுற்றி சுற்றிவரும் அம்மம்மா, ஜயா, முகம் மறவாத தோழிகள், பள்ளிக்கூடம் இவை அனைத்தும் எழுந்து கொண்டே இருக்கும்.

அம்மம்மாவின் விரலை பிடித்தபடி………அம்மம்மா ரோசா எண்டா என்ன ?

அது ஒரு நிறம் குஞ்சு..

ஏன் மஞ்சல், சிவப்பு, வெள்ளை எல்லாவற்றையுமே ரோசா என்று சொல்லினம் ? அதை மஞ்சல் சிவப்பு என்று சொல்லாம்தானே.

என்ர ராசாத்தி என்று என்னை அள்ளி அணைக்கும் அம்மம்மா சிரிக்கும் பொழுது அவவின் பல்லும் காதில் மின்னும் வைரமும் ஓரேமாதிரி பளிச்சென்று இருக்கும். அம்மம்மாவின் நினைவு என்னை வாடவைத்தது.

இப்படித்தான் அம்மம்மாவும் நானும் முனியப்பர் கோவிலுக்கு போயிட்டுவரும் வழியில் ஆஸ்பத்திரிக்கு முன்னால் பச்சை மலை மாதிரி அடுக்கியிருந்த தோடம் பழங்களை பார்த்ததும். வா ஒரேஞ் வாங்கிக்கொண்டு போவம் என்ற அம்மம்மாவிடம்

இது ஓரேஞ் இல்லை அம்மம்மா கிறீன் இமைக்கமறந்து என்னையே பார்த்துக்கொண்டிருந்தா. இப்பொழுதும் கடிதம் எழுதும் போது ரோஜா பூத்தாலும் தோடையை பார்த்தாலும் என்ர குஞ்சுவின்ர நினைவுதான் முதல்ல வருகிது. . அம்மம்மா எழுதும் பொழுதும் அழுதிருக்கிறா என்பதை அழிந்த எழுத்துக்களை வைத்து புரிந்து கொண்டேன். முற்போக்கு சிந்தனையுள்ள அம்மம்மாவுக்கு எதிர்மறையான அம்மா. எனக்கு அம்மம்மாவையும் ஜயாவையும் இப்பவே பார்க்கவேண்டும்போல ஆசையாய் இருக்கிது.

அப்பா ஜேர்மனியிலிருந்து எங்ளை அழைத்தபொழுது அம்மம்மா ஜயாவின் அழுத கண்கள் ஆறுவயதான என்னை அடிக்கடி கவலைப்படுத்தினாலும் அம்மாவின் கையை பிடித்தபடி விமானப்படிகளில் ஏறும் பொழுது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஆரம்ப கால பேர்லின் வாழ்க்கை இப்பவும் என் நினைவில். அதன் பின் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சுவிஸ் நாட்டுக்கு சென்றது. அங்கு பிறந்த தங்கைக்கு சுவிஸினி என்று பெயர் வைக்க வேண்டுமென்று அம்மா ஒற்றைக்காலில் நின்றது. அப்பா அடிக்கடி சொல்லுவார்….. இங்க வந்த எங்கட ஆட்களுக்கு அகதி அந்தஸ்து விண்ணபித்த நாடுகளிலெல்லாம் ஒரு இனம் தெரியாத நாட்டுப்பற்று இதேபற்று எங்கட நாட்டிலையும் இருந்திருந்தால்! அங்க பிறந்த பிள்ளைகளுக்கெல்லாம் யாழ்ப்பாணம்,மானிப்பாய் சுதுமலை, கொக்குவில் எண்டு பெயர் வைச்சிருப்பினமோ ?

அப்பா அப்படி பெயர் வைக்கிறதென்டா எங்கட அம்மாவுக்கு இணுவில் எண்டே பெயர் வைச்சிருப்பினம். அம்மா எப்ப பார்த்தாலும் இணுவில் ஆஸ்பத்திரி,கெங்கம்மா டொக்டர் என்டுதனே புழுகிகொண்டு இருப்பா இதைக் கேட்டு அப்பா வாய்விட்டு சிரித்ததும், அதற்காக அம்மாவிடம் நான் அடி வாங்கியதும் இப்ப நடந்தமாதிரி இருக்கிது.சன் ரீவியில் சுகி சிவத்தின் இந்த நாள் இனிய நாள் பார்ப்பதற்க்கு அப்பா தவறுவதே இல்லை அன்றும் அப்படித்தான் பெயர் வைப்பதை பற்றிய விளக்கம். இந்தியாவில் வாழும் நாடோடி இனம் நிரந்தர வசிப்பிட -மின்றியும் பிழைப்புக் கருதியும் இடம் விட்டு இடம் நகர்ந்தபடியே இருப்பார்களாம். அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அங்கு பிறக்கும் குழந்தைக்கு அந்த இடத்தின் பெயரையே நினைவாக சூட்டிவிடுவார்களாம் மதுரையில் பிறந்தால் மதுரை, திருச்சியில் பிறந்தால் திருச்சி. இதைக்கேட்டுக்கொண்டு இருந்த சுவிஸினி.

அப்ப நாங்களும் நாடோடிகளாப்பா? இதுபோதும் அம்மா கத்துவதற்கு கண்டறியாத புறோகிறாம் என அம்மா கத்திய கத்தலில் சன் ரீவியும் வாயை மூடிக்கொண்டது. அப்பாவை பார்க்க எனக்கு பாவமாக இருந்தது. அம்மாவை பொறுத்த மட்டில் சித்தி,அண்ணாமலை, அம்பிகை இவைகள்தான் தரமான நிகழ்சிகள். அவையள் அழக்கே அழுது சிரிக்கும் பொழுது சிரித்து, திட்டி இந்த நாடகங்களை பார்த்தே தன் பொழுதை நகர்த்தும் அம்மா இடைக்கிடையுத்தம் எங்களை துரத்தியதாக புலம்புவா….

ஏன் அம்மா அங்க இப்பவும் மனுசர் இருக்கினம்தானே கேட்கவேண்டும்போல இருக்கும். ஆனால் அம்மாவின் மரஅகப்பை கண்களில் வந்து வந்து வாயை இறுக மூடவைத்;துவிடும் எப்போதாவது அம்மாவின் உள் மனதிலிருந்த உண்மை தன் முகத்தை வெளிக்காட்டும். அப்போது மட்டும் ஆசை என்ற வார்த்தையும் கைகோர்த்துக் கொள்ளும். அம்மாவின் இந்த ஆசைதானே என் வாழ்க்கையிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. அம்மாவின்ர பிடிவாதம் என்ர வாழ்க்கையை ஆதியும் அந்தமும் இல்லாத அம்மாவின்ர சமயம் மாதிரி எப்போதொடங்கியது?எப்படி முடிந்தது? எதுவுமே புரியாது குழம்பிப்போய் கிடந்தது. வீட்டில ஒரு காலச்சாரம் வெளியில ஒரு காலச்சாரம் எதை வெளியில எறியிறது? எதை உள்ளே கொண்டு வாறது? என புரியாது எப்பவும் குழம்பிப்போய் நிற்பதே என்ர வாழ்க்கையாகிபோய்விட்டது.

பள்ளிக்கூடம் போகும் பொழுதும் மைதிலி திருநீறு பூசி பொட்டுவைச்சு சைவப்பிள்ளை மாதிரி போவேணும்; எண்டு உனக்கு எத்தனை நாள சொல்லுறன்.

எனக்கு வெட்க்கமா இருக்குதம்மா பள்ளிக்கூடத்தில மற்ற வகுப்பு பிள்ளைகளெல்லோரும் சிரிக்கினம்.

ஏன் அவைமட்டும் தங்கட சிலுவையை கழுத்தில தொங்கப்போட்டக்கொண்டுதானே வருகினம்.அதுக்கு நாங்க சிரிக்கிறமே?

இப்படி கத்தும் அம்மாவுக்கு பயந்து திருநீறு பூசி பொட்டுவைச்சு பிறகு பாடசாலைக்கு கிட்டபோனதும் பொட்டை உரித்து புத்தகத்தினுள் ஒட்டிவைத்துவிட்டு திருPறை அழிப்பதும் பின் வீட்டுக்கு வரும் பொழுது பொட்டை எடுத்து ஒட்டிவைப்பதும். ஆனால் சுவிஸினி மட்டும் அம்மாவின் விருப்பத்திற்கு ஏற்றமாதிரி நடப்பதால் அம்மாக்கு ஒரேபெருமை அவள்தான் தமிழ் பிள்ளைமாதிரி இருக்கிறாள். என அடிக்கடி பெருமையா கூறிக்கொண்டே இருப்பா.

அப்ப நான் என்ன சிங்கள பிள்ளைமாதிரியே இருக்கிறன் ?

இவ்வளவு விஷயம் நடந்து முடிஞ்சிருக்கு இவளின்ர கண்ணில ஒரு சொட்டு கண்ணீர் வருகுதாபாருங்க வாய்க்கு மாத்திரம் குறைச்சலில்லை.சிதறி உடைத்து சின்னாபின்னமாகிய என்வாழ்க்கை, எப்போதும் அழுதுவடியும்அம்மா இவைகளை பார்க்க எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருந்தது.

ஏன் நான் அழவேணும் ?

உன்ர வாழ்க்கையை தொலைச்சுபோட்டு நிக்கிறாய் அதுக்கு அழு.

இல்லை நான் அழவே மாட்டேன். ஏனென்டால் அது என்ர வாழ்க்கை இல்லை. விரும்பினா அதை தேடித்தந்த நீங்க அழுங்க.

பாருங்க அவள் என்ன சொல்லிறாள் கேட்டுக்கொண்டு சும்மா இருக்கிறீங்க.

அப்பா என்னையே பார்த்துக்கொண்டு மௌனமாக இருந்தார். பாவம் அப்பா எனக்கு கிடைத்த வாழ்க்கையால் அப்பாவுக்கு கிடைத்த பரிசு இருதய நோய். எல்லாம் அவனால வந்தது. எத்தனை முகம் கொண்ட மனிதர்களை வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மிருகங்களை பொறுத்தவரை அதன் குணாதிசயங்கள் வெளிப்படையாக புரிந்ததால் பகுத்தறிந்து எம்மை எதிர் நோக்கும் பிரச்சனைகளிலிருந்து விலகி எமை பாதுகாத்துக் கொள்ளலாம் ஆனால் குழந்தை முகமும் மிருக மனமும் கொண்ட பிரகாஷ் போன்றவர்களை நினைக்க இந்த உலகமே பயங்கரமானதாய் இருந்தது. இந்த நேரங்களில் எனக்கு அம்மம்மாவை பார்க்க வேண்டும் அவவின் மடியில படுக்க வேணும்போல் தோன்றும்.

சே எத்தனை அவமானங்கள். திருமணம் முடிந்த பின்கிடைத்த தனிமையை பயன்படுத்தி பகலை இரவாக்க எண்ணிய அந்த அசிங்க மனம்.

பிளீஸ் வேண்டாம் பிரகாஷ் கதவை மூடாதீங்க அம்மா, அப்பா, அம்மம்மா எல்லாரும் என்ன நினைப்பினம்.

அட ஜேர்மனியில்வளர்ந்த உனக்கு வெட்க்கமா?

அப்பா அடிக்கடி கூறும் வார்த்தை புயலாக இருக்கும் பொழுது புயலாக வீசு எனக்குள் வீசிய புயல் வார்த்தைகளாக வெடித்து வெளியில் விழுந்தது.

முட்டாள்மாதிரி கதைக்காதீங்க பிரகாஷ்

நான் முட்டாள்தான் நீ எப்படி பட்டவள் என்று தெரியாமல் உன்னை கட்டின முட்டாள். வார்த்தைளை விஷமாக்கினான்.

வார்த்தை நாகரீகம் கூட தெரியாத உங்களுக்கு என்னை விமர்சிக்க என்ன தகுதியிருக்கு? அம்மாக்கு தெரிஞ்ச ஆக்கள் எண்டதை தவிர உங்களைபற்றி எனக்கென்ன தெரியும் ?

நான் என்ன உன்னை மாதிரி வெளிநாட்டிலயே வளர்ந்தனான் ?

ஏன் வெளிநாட்டில வளர்ந்தா என்ன தப்பு? வெளிநாட்டு காசுக்கு ஆசைப்பட்டுத்தானே இந்த களியாணம் நடந்தது வார்த்தைகள் வளர்ந்தன. பின் அமைதியாகி அன்றையபொழுது ஊமையாக கழிந்தன. அதன்பின் அவனின் ஜேர்மன்வருகை என்னை நரகத்தினுள் தள்ளியது. இங்கு நடந்த அறிமுகவிழாவில் எவ்வளவு அநாகரிகமா நடந்துகொண்டான். என்னுடன் சின்ன வயதிலிருந்தே படித்த டொமினிக், லூக்காஸ் எல்லாரையும் எப்படி அவமானப்படுத்தினான். அவனுக்கு பக்கபாட்டு பாட அம்மாவும். என்ன இருந்தாலும் நீ அந்த வெள்ளைக்கார பெடியன்களோட டான்ஸ் ஆடி இருக்கக்கூடாது.

ஏன் ஆடக்கூடாது? அவையளும் நானும் ஆறுவயதிலிருந்தே குசநைனௌ என்று உங்களுக்கு தெரியும்மதானே.

ஏன் உனக்கு வெள்ளைக்கார பெட்டைகள் போததே பிரகாஷ்.

மருமகன் சொல்லிறதில்ல என்ன பிழை இருக்கு?

அம்மா உங்கட தமிழ் ஆட்கள் மாதிரி என்னுடைய குசநைனௌ ஜ நினைக்காதீங்க மனசுமுழுக்க வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வெளியில கலாச்சாரம,; விழுமியம் எண ;டு மற்றவர்களுக்கு பாடம் புகட்டிக்கொண்டு இருககிறவை மாதிரிஇல்லை. அவையள் நட்புக்கு மதிப்பு குடுத்து மற்றவர்களின்ர விருப்பு வெறுப்புக்கு மரியாதை கொடுககிறவையள்.

பார்த்தீங்களா ஆண்ரி உங்கட மகளுக்கு என்னைவிட வெள்ளையன்கள் பெரிசாபோச்சு.

எனக்கு என்னுடைய நண்பர்கள்தான் பெரிசு. அன்றைய பொழுதும் சுவர்களை முறைத்தபடி கழிந்தன.

அம்மா என்றால் எனக்கு தெரிவதெல்லாம் கலாச்சாரம் பொட்டு, தாவணி, கையால்சாப்பிடுவது,வணக்கம், நன்றி தமிழ்படம்பார்ப்பது இல்லாவிட்டால் பழம்பெருமை பேசுவது, ஒளிவீச்சு பார்ப்பது எங்கட நாட்டில நடக்கிற அனர்த்தங்களை நீங்களும் பார்க்க வேணும் பிள்ளைகள் எண்டு கட்டாயப்படுத்தி பார்க்கவைப்பா. அன்றும் அப்படித்தான் நாவாலி தேவாலயத்தில் நடந்த நிகழ்வுகளை பார்த்தநேரம் தொடக்கம் நித்திரை என்னைவிட்டு எங்கோயோ தொலைநதுபோய்விட்டது. கண்மூடினாலும் திறந்தாலும் இரத்தம், உடல்சிதறிய குழந்தைகள், வயதோதிபர்கள், ஓ என்ற அழுகுரல் எல்லாம் சேர்ந ;து என்னை சித்திரைவதை பண்ணியபடியே இருந்தது. படிக்க சாப்பிட முடியாமல் நான்பட்டபாடு. அந்தஅழுகுரல்கள் இப்பவும் எனக்குள்ள இருந்து கொணடு அழுதுகிறது இநத அம ;மாவுககு எங்க தெரியப்போகிறது ?. ஆனால் அம்மா அதைபார்க்கும் பொழுது அழுததோடு சரி. பின் வழமைபோல் சன் ரீவீ நாடகம், தமிழ் படம்.

அம்மாவின் தலையீடு படிப்பிலும் கத்தோலிக் சமயம் படிக்காதே, எவங்காலீஸ் அதுவும் வேண்டாம் அப்ப நான் என்ன சமயத்தை படிக்கிறது.?

எங்கட சமயத்தை படிப்பிக்கச் சொல்லு.

அதை படிக்கிறதென்றால் நாங்கள் நாட்டில இருந்திருக்கவேணும்

இருந்திருக்கலாம்தான் இந்த கண்டிறியாத நாட்டுக்கு ஏன் உன்னைக்கூட்டிக்கொண்டு வந்தன் என்டு இருக்குது ஆ அதோட இரவில நடக்கிற வகுப்புக்குகளுக்கு வரமாட்டன் என்டு சொல்லிப்போட்டு வா

ஏன்?

இலங்கையில நாங்கள் ஆறு மணிக்குபிறகு கேற்றைவிட்டு எங்கேயும் போறதில்லை.

அம்மா அது அங்க.

எங்கேயும் பொம்பிள பிள்ளையள ; பொம்பிளைபபிளளையளதான ; இருட்டினா வெளியிலை போகக்கூடாது.

ஏன் போகக்கூடாது ?

போகக்கூடாது என்டா பிறகென்ன எதிர்க்கேள்வி.

இல்லை நீங்க ஏன் என்டு சொல்லவேணும்.

சொல்லேல்ல என்டா?

எனக்கு தெரியும் இதன் பிறகுவழமைபோல் அகப்பை காம்பு. அம்மா என்படிப்பையும் என்னையும் குழப்பிக்கொண்டிருப்பதை கவுன்சிலரிடம் போய ; சொன்னதன் விளைவு என் முதுகில் இன்னும் ஆறாதவடுவாக நினைவுபடுத்திக்கொண்டுதான் இருக்கின்றது அடித்துவிட்டு இதையும் கவுன்சிலரிட்ட போய் சொல்லு. நான் ஒன்டும் சாரத அன்ரிமாதிரி இவங்கட கண ;டறியாத சட்டத்துக்கு பயந்து இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டுபோய் அடிச்சிட்டு கூட்டிக்கொண்டு வருவன் என்டுமட்டும ; நினைக்காதே இந்தியா என்டாலே பயப்படும் சாரதாஅன்ரியின்மகளின் பயந்த கண்கள்மனதில் பளிச்சிட்டன இரவு என்பதும் அம்மாவை பொறுத்தவரை ஒரு பயங்கரமானபொழுது. இதில அம்மாவில எந ;தப்பும் இல்லை. அம்மா வளாந்த சூழ்நிலை அப ;படி.

அம்மா தப்புக்கள் இரவில்தான் நடக்கும் என்டு ஏன்நினைக்கிறீங்கள் ? பகலிலையும் நடக்கலாம்.

மாலதி பேச்சு நீளுது

அம்மா உங்களுக்கு சில விஷயம் விளங்கவேணும்.

உன்னுடைய வாழ்கையையே உனக்கு விளங்கேல்ல பிறகு என்னத்தை நீ எனக்கு விளங்கப்படுத்த போறாய்? உன்னாலதானே பிரகாஷை நாட்டுக்கு அனுப்பினவங்கள்.

அம்மா அவன் என்னைவிரும்பேல்ல இந்த நாட்டில வாழமட்டும்தான் ஆசைப்பட்டவன். இப்படிபட்ட ஏமாற்றுக் காரன்களுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டும். உங்களுடைய குசநைனெ வசந்தி அன்ரியின்ர மகள் ஏமாந்தமாதிரி நான் ஏமாறவில்லையென்டு சந்தோஷப்படுங்க .

ஆனால் இங்க உள்ள தமிழ் சனங்கள் உன்னைப்பற்றி எப்டியெல்லாம் கதைக்கினம் என்டு உனக்கு தெரியுமே?

அம்மா அவையளுக்கு கதைக்கமட்டும்தான் தெரியும். நாள் முழுக்க மறறவையளைபறறி கதைச்சு கதைசசே பொழுதைபோக்கிறவை. மனுசரை அவர்களின் மெல்லிய உணர்வுகளை எதையுமே விளங்கிக் கொள்ளவும் மாட்டார்கள், விளங்க முயலவும் மாட்டார்கள். மற்றவர்களின் துன்பத்தில சந்தோஷம் காணுற நோய்பிடித்தவையள். மறைமுகமாகவோ நேரடியாகவோ ஏதாவது ஒருஉயிரினத்தை வருத்தியபடியே காலத்தை கரைப்பவர்கள். இவையளை நாஙக மனுசார மதிக்கவே கூடாது.

இதயத்தில் ஏற்பட்ட வலியை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிவைக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் பொழுது வடுக்களின் மீது தீயைக்கொட்டுவதுபோல் இந்த சமுதாயம் புண்ணாகியிருக்கும் ;இதயத்தில் வார்த்தை தீயை கொட்டுகின்றார்கள். நான் இந்த போலி சமுதாயத்தின் பிடியிலிருந்து எப்படி வெளியேவருவது? மாரீசன் மாயமானாகி இராமனை அந்த காடெல்லாம் அலையவைத்தான் என்று அம்மம்மா கூறிய கதைமாதிரி இங்கேயும் மாயமானை பிடிப்பதற்காய் பல பெற்றோர்கள் அதன் பின்னால் ஓடியபடியே இருக்கின்றார்கள். ஆனால் எங்களுக்குமட்டும் சீதைக்கு கீறிய கோடுபோல் ஒரு கோட்டை கீறிவைத்திருக்கின்றார்கள் நாங்களும் அதை தாண்டுவோமா ?தாண்டாவிட்டால் இராவணன்போல் யாராவது எங்களையும் கோட்டோடு தூக்கிச்சென்று சிறைவைத்து விடுவார்களோ? இப்படி எத்தனையோ கேள்விகள் எனக்குள்மட்டுமல்ல இங்கு வாழும் இளம் சமுதாயத்தின் அத்தனை உள்ளங்களிலும் முளைப்பதும் வாடுவதுமாக…நான் அம்மம்மாவோடேயே இருந்திருக்கலாம்.

– 2004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *