மறுவாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 2,740 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஈரத் தலையைத் துவட்டியபடிச் சாப்பகூடு மேசையை நோக்கி நடந்தேன். அம்மா வைத்துவிட்டுப் போன இட்பியில் ஆவி பறந்துகொண்டிருந்தது. “உன் பெரியப்பா பொண்ணு மல்லிகாவுக்குப் பொண்ணு பிறந்திருக்கு, அருண்”, ஒலிப்பேழையில் ஒலித்துக்கொண்டிருந்த கந்த கவசத்தையும் மீறி அம்மாவின் குரல் கேட்டது சமையல் கட்டிபிருந்து. “அதான் போன மாசம் தபால்ல எழுதியிருந்தியேம்மா” இருந்தாலும் அம்மாவுக்கு என்னிடம் நேரில் சொல்வதில் ஒரு நிறைவு இருந்தது. எனக்கும் அம்மாவிடம் சொல்வதற்கு ஒரு செய்தியிருந்தது. அது, நான் எம்.ஆர்.எல். நிறுவன வேலையில் நிரந்தரமாகிவிட்ட செய்தி. சொன்னால் மகிழ்ச்சி அடைவாள். இதனைப் பகிர்ந்துகொள்ள இன்னோர் உயிர் இருக்கிறது, அது கந்தசாமி.

என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “நீ இவ்வளவு நாள் உழைத்ததற்குப் பலன் கிடைச்சிருச்க, அருண்”, என்று மனமார உருகி, இமை விளிம்பில் கண்ணீர் காட்டுவான், அப்படியொரு போளித்தனமில்லாத அன்பு அவனுடையது

“நம்ம வனஜா எரிவாயு வாங்கிட்புள். அருண், போன மாசம் வீட்டுக்குள் கூட்டிப்போய் காமிச்சா. எரிவாயு உருளை, எரிவாயு அடுப்பு என்று அமர்க்களம் பண்றா. நமக்கு இந்த மண்ணெண்ணெய் அடுப்புப் போதும்பா. நீ வந்தா அவசியம் வீட்டுக்கு வரச் சொன்னா…”

நான் இட்லியில் கவனமாயிருந்தேன்.

“நல்லா சாம்பார் ஊத்திச் சாப்பிடுப்பா. அந்தக் கந்தசாமியில்லே, அவன் இறந்துட்டான் அருண்…” பேச்கவாக்கில் கூறிவிட்டு இலேசாக நாக்கைக் கடித்துக்கொண்டாள், இப்போது சொல்லியிருக்க வேண்டாமோ என்பது போல.

எனக்குச் சட்டென்று புரையேறிவிட்டது. தலையில் தட்டிக்கொண்டேன். “அம்மா என்ன சொல்கிறாள்?” என யோசித்தேன்.

“என்னம்மா சொல்றே ?”

“ஒண்ணுமில்லே, நீ சாப்பிடு. பிறகு விவரமாகச் சொல்றேன். மிளகாய்ப்பொடி வேணுமா அருண்…” பேச்சைத் திசை மாற்ற முயன்றாள். “வேணாம்மா… நீ இப்போ யாரோ இறந்துட்டதாச் சொன்னியே…” ‘இனி மறைக்க முடியாது’ என்று ஊகித்தவளாய், “அதான் அருண், உன் நண்பன் கந்தசாமி. அந்தத் தொகுப்புக்குடி இருப்பு வீட்டிலே குடியிருந்தானே, அவன் இறந்துட்டான்…”

என்னால் நம்ப முடியவில்லை. மனம் அதை ஏற்றுக்கொள்ள விரும்பாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

“எப்போ?”

“ஆறு மாசத்துக்கு முன்னே… மூளைக்காய்ச்சலாம் தீடீர்னு போயிட்டான்.” “எனக்குத் தபால்ல எழுதவேயில்லையேம்மா நீ…”

“என்னவோ தோணலே…”

வீட்டுக்கு ஒரிரு தடவை என்னைப் பார்க்க வந்திருக்கிறான் கந்தசாமி. மற்றபடி எங்கள் நட்பு வெளியில் தான். அம்மாவுக்கு அவ்வளவாக அறிமுகமில்லை. அதனால், அது ஒரு செய்தியளவில் முடிந்துவிட்டது எந்தவித முக்கியத்துவமுமில்லாமல். ஆனால், எனக்கு அப்படியில்லை.

அந்த இழப்பு என்னுள் பொங்கி நின்ற உற்சாகத்தைச் சட்டென்று வடித்துக்கொண்டு போனது.

சாப்பிடக்கூடத் தோன்றவில்லை. அம்மாவுக்காகச் சங்பிட்டு எழுந்தான். அதைக் கேள்விப்பட்டவுடன் கந்தசாமியின் மனைவியின் முகம்தான் நினைவுக்கு வந்தது. எத்தகைய குழந்தைத்தனமான முகம் அது. இந்தப் பேரிழப்பை எப்படித் தாங்கியிருப்பாள்? “கடைசியாக அவர்களை எப்போது பார்த்தேன்?” என நினைவுக்குறிப்பின் பக்கங்களைப் புரட்டினேன்.

இன்று சிற்றுண்டிக்கடையில் கந்தசாமியைப் பார்த்தபோது உற்சாகத்திலிருந்ததாக எனக்குத் தோன்றியது. “என்ன கந்தசாமி, இன்னிக்கு நிரம்ப மகிழ்ச்சியாக இருக்கிறே?” என்மேன்.

“அப்படியாத் தெரியுது ?” என்றான் போலியாய்.

“உண்மையா, இல்லையா?”

“நீ எப்படியாவது கண்டுபிடிச்கடுறே, அருண் எனக்கு அடுத்த மாசம் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்காங்க”

“எனக்குள் குழப்பமாக இருந்தது. அவர்களை இப்போது சந்திப்பது தேவையா? கொண்டு வந்திருந்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

வேறு ஒரு வரின் மனைவியான பின்பு செய்கிற தொல்லையாகப் போகுமா?”

“நிரம்ப அவசரமா? என்றேன் கண்ணடித்தபடி”

“எங்கப்பாவுக்குத்தான் அவசரம். என்னன்னு தெரியலே. நான் போறதுக்குன்ளே உன் கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போறேண்டான்னு குதிக்கிறார். நானும் சம்மநிச்கட்டேன்.”

“ஏன், கந்தசாமி! இந்த அச்சகச் சிற்றுண்டிக்கடையின் மேற்பார்வையாளரா இருக்கே, இந்தச் சம்பளத்திலே சமாளிச்சிடுவியா?” என்றேன்.

“மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான்”, என்கிறான் வேதாந்தியாய். “ஆமா, நீ எப்போ பத்திரிகை வைக்கப்போறே?” என்கிறான் என்னைப் பார்த்து.

“இப்போதான் ஐ.டி.ஐ முடிச்கட்டுச் சிறிது நாளாக இந்த அச்சகத்திலே பொருத்துநர் பயிற்சியிலே இருக்கிறேன். இதைவிட நல்ல வேலை கிடைக்கணும். எப்படியும் நாலைஞ்சு ஆண்டாவது ஆகும்”.

“உன் நல்ல மனகக்கு நல்ல வேலை கிடைக்கும், அருண்…” என்கிறான் சட்டென்று நெகிழ்ந்து.

“உன் தம்பி குமரேசனைப் பாடுபட்டுப் படிக்கவைச்கப் பட்டம் வாங்கிக் குடுத்திட்டே. அவனுக்கு வேலை கிடைச்சிடுச்சா?”

“நேற்று ஒரு வங்கியில் நேர்காணலுக்குப் போய்விட்டு வந்தான். என்னாச்சுன்னு தெரியலே”

இன்று வேலை முடிந்து மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தோம் நானும், கந்தசாமியும்.

“குமரேசனுக்கு வேலை கிடைச்சிடுச்க, அருண். உள்ளூர் வங்கியிலேயே வேலை. நிரம்ப வசதிதான். இந்தா அருண் இனிப்பு, நிறுவனத்நிலேயே சொல்ல நேரமில்லே…”

“மிக்க மகிழ்ச்சி. அவனுக்கும் உடனே கல்யாணந்தானா?”

“அவனுக்கு இப்பவே பொண்ணு குடுக்கத் தயாராயிருக்காங்க. வசதியான இடம், நாற்பது, அம்பது பவுன் தேரும். இவன்தான் சிறிது நாள் போகட்டும்கிமான்.”

வீட்டுக்கு வந்தபோது அம்மா ஒரு பதிவுத் தபாலை நீட்டுகிறாள். அது சென்னை எம்.ஆர்,எல்-லின் ஒரு தற்காலிக வேலைக்கான உத்தரவு. “எனக்கும் மகிழ்ச்சிக் கனவுகள் இனி வரும்.”

பிறகு, நான் சென்னை சென்றுவிட்டேன். கந்தசாமிக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், அடிக்கடிப் பதில் எழுத இயலவில்லை. நீண்ட இடைவெளி விட்டு ஒரு கடிதம் எழுதுவான். ஓரு கடிதத்தில் தனக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாக எழுதியிருந்தான். நானும் வாழ்த்து அனுப்பினேன். போன ஆண்டு ஊருக்கு வந்தபோது நேரில் சென்று பார்த்தேன். குழந்தைக்குப் புத்தாடை வாங்கி வந்து கொடுத்தேன். “சென்னையில் உடையமைப்பு நல்லாருக்கு”, என்று அவன் மனைவி பரவசப்பட்டுப்போனாள். அதன்பின் தபால் பரிமாற்றமில்லை. ஓர் ஆண்டுக் கழித்து இப்போது ஊருக்கு வந்த, இடத்தில் இப்படியொரு செய்தி. பாவம், எவ்வளவு பாசம்!என்மனம் கிடந்து அடித்துக்கொண்டது. கந்தசாமி! எவ்வளவு நல்ல மனம் அவனுக்கு? அவன் அப்பா இருக்கிறாரா? போய்விட்டாரா? தெரியவில்லை. அவனுக்குத்தான் தன் தம்பிமீது தெரிய நியாயமில்லை. நேரில் போய் விசாரித்து வரவேண்டும். அவ்வளவுதானா!

இனி என்ன செய்ய முடியும்? என்னால் என்ன செய்ய இயலும்? ஏன் முடியாது? முடியும். முடிந்த அளவுக்கு என்ன செய்யலாம்? யோசித்துப் பார்த்ததில் அவன் குழந்தையின் பேரில் ஐயாயிரம் ரூபாயை நிலைவைப்பு முறையில் வங்கியில் போட்டுவிடத் தீர்மானித்தேன். நம்மால் இயன்ற உதவி செய்தோம் என்று மனநிறைவுடன் இருக்கலாம். அம்மாவிடம் சொன்னால் ஏதாவது கூறி என் எண்ணத்தைத் திசை மாற்றி விடக்கூடும். பேசாமல் சட்டைப் பையில் ஐயாயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு அவன் வீட்டை நோக்கிக் கிளம்பினேன். மிதிவண்டியை மிதித்தபடி விரைந்தேன்.

பெரிய குளக் கண்மாய்க் கரையையொட்டிய சாலையில் பயணம் செய்து அவர்களின் வீடு இருந்த தொகுப்புக் குடியிருப்பினை நோக்கிப் போனேன். எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும். குமரேசன் திருமணம் முடிந்து தனியே போயிருக்கலாம். கந்தசாமியின் மனைவியும், குழந்தையும் அவள் தாய் வீட்டோடு போய்த் தங்கியிருக்கலாம்.

கந்தசாமியின் தந்தை வீட்டிபிருந்தார். என்னைப் பார்த்தவுடன் கண்ணாடியணிந்து அடையாளம் கண்டு உறுதிப்பட்டு ‘வாங்க தம்பி’ என்றார். ஒவ்வொரு வார்த்தையிலும் சோகம் இழையோடிற்று.

“கந்தசாமிக்கு என்ன ஆச்கங்கய்யா, திடீர்னு? நல்லாத்தானே இருந்தாரு…”

“என்னன்னு சொல்றது; தம்பி. எல்லாம் விதி அப்படிச் சொல்றதைத்தவிர நம்மால என்ன செய்ய முடியும்? மூளைக்காய்ச்சல்னு படுத்தான், ஒரு வாரத்துல எல்லாம் முடிஞ்சிடுச்சு”.

“ம்… நான் இன்னிக்குத்தான் சென்னையிலிருந்து வந்தேன். அம்மா சொன்னாங்க. என்னாலே நம்பவே முடியலே. பாவம், கந்தசாமி…”

“நான் சீக்கிரம் போயிடுவேன்னு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்கப் பார்த்தேன். ஆனா, இப்போ…” எனக்கெதிரே அழக்கூடாது என்ற அவரது துடிப்பு எனக்குப் புரிந்தது. எனினும் மகனது மறைவு சோகத்தை மாற்றிவிடவில்லை.

“சரி, ஆனது ஆகிவிட்டது…” அவரைத் திசை மாற்றுகின்ற முகமாக “ஆமா உங்க மருமக, பேத்தியெல்லாம் எங்கே ?” என்றேன். “நான் மட்டும்தான் இந்த வீட்டுலே… அவங்க வேற வீட்டுலே தனியாயிருக்காங்க. என்ன செய்றது? தம்பி… காலம் நிரம்ப மாறிக்கிட்ருக்கில்லே…”

“என்ன சொல்ல வருகிறார்” பெரியவர் தொடர்ந்தார். “அவளும் சின்ன வயசுதான். அதுவும் நம்ம வீட்டுப் புள்ளைதானே, தம்பி… அதான் என் மருமகளுக்கு வேறு கல்யாணம் பண்ணி வெச்சுட்டேன்…”

எத்தகைய சீர்திருத்தமான கருத்தைச் செயல்படுத்தி விட்டு இயல்பாகக் கூறுகிறார் இவர்?

“அவங்க இரண்டு தெரு தள்ளிக் குடியிருக்காங்க…”

எனக்குள் குழப்பமாக இருந்தவர்களை இப்போது சந்திப்பது தேவையா? கொண்டு வந்திருந்த பணத்தை யாரிடம் கொடுப்பது? வேறு ஒருவரின் மனைவியான பின்பு செய்கிற உதவி, தொல்லையாகப் போகுமா?

“வாங்க போகலாம்…” வீட்டை அப்படியே சாத்தி வெறும் தாழ் போட்டுவிட்டு, என்னை அழைத்துப் போனார். நான் அனிச்சையாய்த் தொடர்ந்தேன்.

அவளுக்கு மறுவாழ்வு கொடுத்த பெருந்தன்மை மிக்கவனைப் பார்த்து வாழ்த்துச் சொல்ல வேண்டும். எவ்வளவு உயர்ந்த செய்தி இது! அவர்கள் வீட்டை நெருங்கவும் “லொள்… லொள்…” என்று ஒரு நாய் அந்நியமான என்னைப் பார்த்துக் குரைத்தது. சற்றே மிரண்டேன். “அதொண்ணும் பண்ணாது, வாங்க…”

அவர் குரல் கேட்கவும் சட்டென்று வாசலுக்கு வெளியே தலை நீட்டி ஏறிட்டாள் அவர் மருமகள், பாக்கியம்.

“இந்த வீடுதான்…” என்றார் பெரியவர்.

“வாங்க…” பாக்கியம் என்னை வரவேற்றபடிக் கையிபிருந்த பசையை இரண்டு கைகளாலும் தேய்த்துவிட்டுக் கொண்ட தீப்பெட்டி ஒட்டிக்கொண்டிருந்த முக்காலிப் பலகையை ஓரமாய் ஒதுக்கி விட்டு ஒட்டிப் போட்டிருந்த மேல் பெட்டிகளைப் பெரிய கூடையில் விரைவாக அள்ளிப் போட்டாள்.

பெரியவர் மூலையில் கிடந்த முக்காலியை இழுத்துப்போட்டு ‘உட்காருங்க, தம்பி’ என்றார்.தூளியில் படுத்துக் கிடந்த குழந்தை ஈரம் பண்ணியிருந்தது. வெளியில் கிடந்த கோணியை எடுத்து அதற்கு நேரே இழுத்துப் போட்டார்.

“இருங்க, மாமா… காபி வாங்கியாறேன்…” கிளம்ப முயன்றாள் கந்தசாமியின் மனைவி “(மன்னிக்கவும்) பாக்கியம்.

“வேணாங்க, எதுக்கு அதெல்லாம்…” என்றதை மீறி “நான் போய் வாங்கியாறேன்…” பெரியவர் கிளம்பிப் போனார்.

ஒன்றும் பசத் தோன்றாமல் அமர்ந்திருந்தேன் நான். “நான் கந்தசாமியோட நண்பன்…” என்றேன் தட்டுத் தடுமாறி.

“ம்…ம்…”

“உங்க கல்யாணத்தின் போது பார்த்தது. நாக்கைக் கடித்துக் கொண்டேன். “அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது” என எண்ணினேன்

“என்னங்க பண்றது! நல்ல மனுசங்களுக்குத் தான் முடிவு விரைவில் வந்துடுது. நான் மாட்டேன்னுதான் சொன்னேன். எங்கள் மாமா தான், உனக்கு ஒன்னும் தெரியாது பேசாமல் நான் சொல்றதைக் கேளு; இல்லேன்னா நான் இப்பவே செத்துடுவேன்னு சொல்லி என்னை இந்த இரண்டாவது கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைச்கட்டாரு…”

அந்த உயர்ந்த உள்ளம் உடையவர் யாராக இருக்கும்! கவரில் மாட்டியிருந்த புகைப்படங்களில் ஊடுருவினேன் ஒன்றும் தெரியவில்லை. கந்தசாமியின் படம் கூடப் பார்க்க முடியவில்லை பாக்கியம் புது மனைவியாக மாறியிருந்தாலும் அவள் முகத்தில் துயரம் இன்னும் மிச்சமிருந்தது. “குமரேசனைப் பற்றிக் கேட்கலாமா?”என எண்ணினேன். அவர்களே அவனைப் பற்றி ஒன்றும் கூறவில்லை

ஏதோ வில்லங்கமான செய்தியாய் இருக்கலாம். புறப்படும் போது பெரியவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அவனை நல்ல வருமானம் உள்ளவனாக மாற்றி விட்டிருந்தான் கந்தசாமி. இனியென்ன. ஏறி வந்த ஏணி எதற்கென்று விலக்கித், தன் குடும்பத்தைக் கவனிக்கப் போயிருக்கலாம். இதுதானே உலக நியதி. குமரேசன் மட்டும் விதி விலக்கா! “எனக்கு அந்தக் கணத்தில் அவனைப்பற்றி நினைக்கக் பிடிக்க்வில்லை.

பெரியவர் காபி வாங்கி வந்து உடனே ஊற்றிக் கொடுத்தார் ஒப்புக்குக் குடித்து முடிக்கவும், குழந்தை எழுந்து அழவும் சரியாக இருந்தது. பாக்கியம் குழந்தையைத் தூக்கித் தோளில் சாய்த்து அமைதிப் படுத்தினாள். நான் கால் சட்டைப் பையில் கை விட்டுப் பணத்தை எடுத்துக் குழந்தையிடம் நீட்டினேன்.

“என்ன, தம்பி… எதுக்கு இதெல்லாம்…”

“இருக்கட்டுமுங்கய்யா… கந்தசாபியின் குழந்தைக்கு என்னால் இயன்ற உதவி…இருந்தாலும் மனம் விட்டுச் சொல்றேன், பெரியவரே, உங்க மருமகளுக்கு மறுவாழ்வு கொடுத்த பேருதவிக்கு முன்னால் இது அற்பம்…”

“இது வேணாம், மாமா…இந்த நல்ல மனமே நமக்குப் போதும் மாமா…” பாக்கியம் முடிவாக மறுத்துவிட்டாள். அதே சமயம் என் மனமும் நோகாமல்.

“அது சொல்றது தான் சரி, தம்பி… அதனாலென்ன… கடவுள் அவங்களுக்கு ஒரு குறையும் வைக்கலே…” – பெரியவர். குமரேசன் ஏதாவது உதவியிருப்பானோ? அல்லது, அவனையும் பிடிவாதமாய் ஒதுக்கியிருப்பார்களோ இதே போல்.

“சரிங்கய்யா, நான் புறப்படறேன்…”

“புறப்பட்டீங்களா…சரி தம்பி…” பெரியவர் என்னுடன் கிளம்பினார்.

அழுது கொண்டிருந்த குழந்தையை அமைதிப் படுத்திக் கொண்டிருந்தாள் பாக்கியம். “இதோ உங்கப்பா வர்றாரு, பாரு…”

நான் ஆவலாய் அவள் கை நீட்டிய திசையில் பார்வையைச் செலுத்தினேன்.

சற்றுத் தூரத்தில் குமரேசன் வந்துகொண்டிருந்தான்.

– மனங்கவர் மலர்கள் , முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *