மறக்க நினைத்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 10,994 
 
“ஏம்பா? கல்யாணமாகி இத்தனை வருமாயிடுச்சு, இன்னும் இவ வயிறு திறக்கவே இல்லியே! ஒடம்பில ஏதாவது கோளாறோ, என்ன எழவோ! டாக்டர்கிட்ட காட்டிப் பாரேன்!”

பக்கத்திலேயே மருமகள் மேசையைப் பளப்பளப்பாகத் துடைத்துக் கொண்டிருந்ததை சட்டை செய்யாது, கரிசனமாகக் கேட்டாள் தாய்.

“இவ மலடி இல்லேம்மா!” அதை வாய்விட்டுச் சொல்லவா முடியும்! கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தான். சுருங்கிய முகத்துடன், தன்னுடைய படபடப்பை அடக்கவென, வேகமாக இயங்கிய அவளது கரங்களும் கண்ணில் பட்டன. அவள்மீது இரக்கமும், கூடவே கோபமும் எழுந்தது.

அப்போதைக்குத் தாயிடமிருந்து தப்பித்தால் போதுமென்று, பேச்சை மாற்றினான்: “காஞ்சனா! நாம்ப ரெண்டுபேரும் லேக் கார்டனுக்குப் போகலாமா? போய் ரொம்ப நாள் ஆயிடுச்சில்ல?” வலிய வரவழைத்துக்கொண்ட அவனுடைய கலகலப்புக்கு அவளிடமிருந்து பதிலில்லை.

கசப்புடன் உதட்டைச் சுழித்துக் கொண்டாள் காஞ்சனா. எங்கே போனால்தான் நிம்மதி!

ஒரு காலத்தில், எவரும் அறியாவண்ணம், அந்தி மயங்கிய வேளையில், ஒருவரையொருவர் சந்திப்பதற்கென்றே அவர்கள் துடிப்புடன் காத்திருந்தது நினைவு வந்தது. அப்போதுதான் எத்தனை எத்தனை கனவுகள்!

எல்லாம் கனவாகவே அல்லவா நின்றுவிட்டன!

கணவன் காரை ஓட்டிச் செல்ல, பக்கத்தில் விறைப்பாக அமர்ந்திருந்தாள் காஞ்சனா. உடல்கள் அருகருகே இருந்தும், உறவில் நெருக்கமில்லை. ஆனால், சொல்லி வைத்தாற்போல, இருவருடைய  எண்ணங்களும் அந்த ஒரு சந்திப்பை நோக்கி ஓடின.

“ஏய்! கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு. மூஞ்சியை ஏன் இப்படி முழ நீளம் வெச்சுக்கிட்டிருக்கே?’

மூன்றாண்டுகளாகப் பழகி, தங்கள் உறவில் வெறும் நட்பைத் தவிர வேறு எதுவோ ஒரு பிணைப்பும் இருந்ததை இருவருமே உணர்ந்து, முதலில் எதிர்ப்புத் தெரிவித்த கதிர்வேலின் தாயும் ஒருவாறாக இணங்கிவிட, எதிர்காலமே தன் கையில் இருப்பதைபோல் ஒரு பெருமிதம் கதிர்வேலுக்கு. ஆனால், காஞ்சனா மட்டும் ஏன் இப்படி இருக்கிறாள்?

பிரயாசையுடன், தன் கண்களை அவனை நோக்கி நிமிர்த்தினாள். “நான் சொல்லப்போறதைக் கேட்டா, என்னை.. என்மேல..,” அவள் இழுக்க, முதன்முறையாக கதிர்வேலுக்குப் பயம் எழுந்தது.

“காஞ்சனா?”

“நாம்ப அவசரப்பட்டுட்டோம்!”

தங்கள் கல்யாணத்துக்கு நந்தியாக வழிமறித்த அம்மா ஒரு வழியாக விலகிக்கொண்டதும் உண்டான தாங்க முடியாத ஆனந்தத்தில் ஒரு கணம் இருவருமே தங்களை மறந்தது நினைவுக்கு வந்தது.

தன்னையும் மீறி, அவனுள் ஒரு பூரிப்பு. “ம்..?” இன்னும் சில மாதங்களில் பருத்துவிடப்போகும் காதலியின் வயிற்றில் பதிந்தது.

அவள் தலையை மேலும் தாழ்த்திக்கொண்டாள்.

புன்னகையுடன், “நல்லதுதானே நடந்திருக்கு! நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன், போ!”

“கல்யாணமாகி, ஏழு மாசத்திலேயே நான் ஒரு பிள்ளையைப் பெத்தெடுத்தா, ஒங்கம்மா என்னை என்ன நினைப்பாங்க?”

அலட்சியமாகச் சூள் கொட்டினான், அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில். “இது நம்ப குழந்தை! அதான் முக்கியம்,” என்று சொன்னாலும், அவனுக்கும் பயம் பிடித்துக்கொண்டது.

`ஏழைப்பெண்’ என்ற காரணம் காட்டி, காஞ்சனாவை ஏற்க மறுத்த அம்மா! இப்போதோ, எப்படியாவது தன் மகனை வளைத்துப்போட வேண்டும் என்று எதற்கும் துணிந்துவிட்டவள் என்றல்லவா நினைப்பாள்!

92 ஹெக்டேர் பரப்பில், 1,888-லேயே ஆங்கிலேயர் ஒருவரால் அமைக்கப்பட்ட மலர்ப் பூங்கா வந்தது.  அதனுள் நடந்தாலே செண்பகப்பூ வாசம் ஆளைத் தூக்கும். ஆர்கிட், செம்பருத்தி மலர்களுக்குத் தோட்டம். பறவைகள், வண்ணத்துப்பூச்சி மற்றும் மான்களுக்கென தனித்தனி பூங்கா.

அவர்களிருவரும் இருந்த நிலையில், எதுவும் மனதில் பதியவில்லை. பழக்கத்தின் காரணமாக, எப்போதும்போல், ஏரிக்கரையிலிருந்த புல் தரையில் அமர்ந்துகொண்டார்கள்.

அருகே ஒரு பாலம். அதன்மேல் நின்றிருந்த சில சிறுவர்கள் ரொட்டியைத் துகளாகச் செய்து, நீரில் தூவ, அதற்குப் போட்டியிட்டுக்கொண்டு நூற்றுக்கணக்கான சிறு மீன்கள் ஒரேயிடத்தில் குழுமின. பின், யாரோ இரு கைகளையும் ஓங்கித் தட்ட, சேர்ந்த வேகத்திலேயே அம்மீன்கள் பிரிவதைப் பார்த்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தனர்.

அம்மீன்களைப்போல்தான் சில பெண்களும் என்று காஞ்சனாவுக்குத் தோன்றியது. ரொட்டி இருந்த இடத்தில் ஓர் ஆடவன் — கதிர்வேல்! அவள் கணவன்!

அவளுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டியவன் ஏன் அப்படிப் பிற பெண்களை ஈர்க்கிறான்?

`முன்பெல்லாம் இவர் இப்படியா இருந்தார்!’ மனம் பொருமியது.

`பெண்டாட்டியே உலகம்னு இருந்த இந்த கதிர்வேல்தான் எவ்வளவு லூசாப் போயிட்டான்!’ என்று நாலுபேர் அவள் காதுபடவே பேசும் அளவுக்கு…சே!

தான் ஒதுங்கிப் போனால் மட்டும், ரொம்பத்தான் நொந்து போய்விட்டதுபோல் காட்டிக்கொள்வது!

தற்செயலாகக் கணவன் பக்கம் திரும்பியவள், அவன் பார்வை எங்கோ நிலைகுத்தி இருப்பதைப் பார்த்தாள்.

“ஐயையோ! இவ்வளவு வேகமா வேணாம். பிள்ளை பயந்துப்பான்!” என்ற ஒரு தாயின் குரலை லட்சியம் செய்யாது, ஊஞ்சலை வீசி ஆட்டி, அதனால் தன் மகனுக்குக் கிடைத்த ஆனந்தத்தைத் தானும் பகிர்ந்துகொண்டிருந்தான் ஓர் இளைஞன்.

காஞ்சனாவின் ஊடல் போன இடம் தெரியவில்லை. எல்லாம் நல்லபடி நடந்திருந்தால், தானும் இப்படி, ஒரு குழந்தையுடன் குழந்தையாக, ஆகியிருக்கலாமே என்ற ஏக்கமா இவருக்கு!

`நாம்ப ஏதோ வெறியில செஞ்ச தப்பை ஆயுசு பூராவும் நினைவுபடுத்திக்கிட்டு இருக்கும் இத!’ வயிற்றைத் தொட்டுக் காட்டினாள் அன்று. `அப்படியாவது இது எதுக்குங்க? தானே வேற பிள்ளைங்க பிறக்காமலா போயிடும்!’ என்று மன்றாடியபோது, `இவள் முகத்தில் மலர்ச்சி வந்தாலே போதும்,’ என்ற ஒரே எண்ணம்தான் கதிர்வேலுக்கு. தான் உருவாக்கியதை அழிக்கவும் உடனிருந்தான்.

மனச்சாட்சிக்குப் பயப்படாதவன், மலேசியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதம் ஆயிற்றே என்ற அஞ்சி, அண்டைநாட்டுக்கு அழைத்துப் போனான், தான் மணக்க இருந்தவளை.

எதை அடியோடு மறக்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அது என்றென்றும் உறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பது விதியின் முடிவாக இருந்த்து.

மிகுந்த பிரயாசையுடன், சிலமுறை தனக்குள் ஒத்திகை பார்த்துக்கொண்ட பின்னர், மெதுவாக ஆரம்பித்தாள்: “இதோ பாருங்க! நடந்த்து நடந்திடுச்சு. அதையே நினைச்சுக்கிட்டு, இருக்கிற சின்னப்பிள்ளைங்களை எல்லாம் பாத்து நீங்க எதுக்கு ஏங்கறீங்க?”

தனக்குள் தோன்றிய வெறுப்பை மறைக்க முயலாமல், கதிர்வேல் அவளைப் பார்த்தான். “ஒனக்கு எப்படிப் புரியும் என் வேதனை?”

உதட்டைக் கடித்துத் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள் காஞ்சனா. தனக்கு மட்டும் துக்கமில்லையா, என்ன!

“மத்தவங்க என்னைப் பழிச்சுப் பேசறது ஒனக்கு என்ன தெரியும்! `ஒரு பிள்ளையைப் பெத்துக்கக்கூட ஒனக்கு யோக்கியதை இல்லியே! நீயும் ஒரு ஆம்பளை!’ அப்படின்னு பாக்கற எடத்தில எல்லாம் கேலி பண்ணறாங்க, காஞ்சனா!” குரல் விக்க, குழந்தைபோல் சொன்னான்.

தங்களில் ஒருவனை புண்படுத்துகிறோமே என்ற நுண்ணிய உணர்வு கிஞ்சித்துமின்றி, பரிகாசப் பேச்சினால் கணவனைக் குத்திக் குதறும் பிற ஆண்களின்மேல் ஆத்திரம் பொங்கியது காஞ்சனாவுக்கு.

‘எத்தனைக்கெத்தனை அதிகமாகப் பிள்ளைகளை உருவாக்குகிறார்களோ, அதற்கேற்ப பிறர் மதிப்பில் அவர்கள் ஆண்மையும் உயருகிறது என்று எண்ணி, அல்ப சந்தோஷம் அடையும் அறிவிலிகள்!’ என்று ஆண்கள் வர்க்கத்தையே மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.

திடீரென வெளிச்சம் தெரிந்தது. `என் ஆண்மை அறவே செத்துவிடவில்லை!’ என்று எப்படித்தான் உலகிற்கு அறிவிப்பது?

`என்னாலும் ஒரு குழந்தைக்கு உயிர் கொடுக்க முடியும். கொடுத்துமிருக்கிறேன்!’ கதிர்வேலின் அந்தராத்மாவின் அவலக்கூவல்தான் மேலே எழும்ப முடியாதே!

கணவனுக்குச் சமீப காலமாக ஏற்பட்ட அதீத பெண் மோகத்திற்கு உண்மையான காரணம் புரிய, காஞ்சனாவிற்கு அவன்மீது பரிதாபம் உண்டாயிற்று.

தனது நிம்மதியை அவனுடன் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில், அவனது கையைப் பிடித்து அழுத்தினாள்.

“நாம்ப பெத்தாதான் பிள்ளையா? ஒரு பிள்ளையை த்த்து எடுத்துக்கலாம், என்ன!” அடிபட்ட குழந்தையிடம் பேசுவதுபோல, கொஞ்சலும், சமாதானமுமாகக் கேட்ட மனைவியை நன்றியுடன் பார்த்தான் கதிர்வேல்.

`எதிர்காலம் அவ்வளவு மோசமாக இருக்காது,’ என்ற எதிர்பார்ப்பிலேயே மனம் லேசாக, தன் விரல்களை அவளுடையதோடு கோர்த்துக்கொண்டு, அவைகளை இறுகப் பற்றிக்கொண்டான்.

(தமிழ் நேசன், 1985)

(தமிழ் நேசன், 1985), வல்லமை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *