அம்மா இறந்து போன செய்தி கேட்டதும் மீனா துடித்து தான் போய்விட்டாள்
இருக்காத பின்ன அன்றாடம் என் அம்மாவோட மணிகணக்கா பேசுவதும் ஊருக்கு போனால் அம்மாவுக்கு அது பிடிக்கும் இது பிடிக்கும் என்று பார்த்து பார்த்து வாங்கிகொண்டு போவதுமாய் இருந்தவளுக்கு திடிர்னு அம்மா இறந்த செய்தி இடி விழுந்தது போலத்தான் இருந்தது
நான் செய்தி சொன்னதும் அவள் ஊருக்கு போக துடித்த துடிப்பு இருக்கே அப்பப்பா சொந்த பொண்ணுக்கு கூட இருக்காது மெட்ராசிலிருந்து ஊருக்கு போவதற்குள் என்னை பிடுங்கி எடுத்து விட்டாள்
ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தது . காரிலிருந்து ஓடினாலே பார்க்கணும்
வாசலில் போட்டிருந்த அம்மாவின் சவத்தின் மேல் விழுந்து புரண்டு புரண்டு அழுதாலே பார்க்கணும் அப்படி ஒரு அழுகை
என் தங்கை மல்லிகா நாங்கள் வந்தது பின் தான் வந்தாள். அழுகையோடு அழுகையாய் அம்மாவின் கழுத்தில் இருந்த பத்து பவுன் சங்கிலியை சாமர்த்தியமாக அடித்து விட்டாள்
இது எனக்கே தெரியாது எல்லாம் முடிந்த பிறகு என் தங்கை மல்லிகா கேட்கும் போதுதான் அம்மாவிடம் அப்படி ஒரு நகை இருந்ததே தெரிய வந்தது
அந்த சங்கிலியை மீனா சாமர்த்தியமாக எடுத்த விஷயமோ மெட்ராஸ்சுக்கு
போகும் பொது தான் தெரிந்தது
மீனாவின் மாமியார் பாசத்தின் விலை பத்து பவுன் என்று புரிய வந்தது