மன்னிப்பாயா..?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 3,401 
 
 

பவித்ரா வெறி பிடித்த மாதிரி அலமாரியிலிருந்த அத்தனை துணிகளையும் வெளியே உருவிப் போட்டாள்டிராயரிலிருந்த புத்தகங்கள்ஃபைல்கள் செக் புக்.. முக்கிய பில்கள் எல்லாம் வெளியில் வந்து விழுந்தது

கடைசியில் கையிலகப்பட்ட ஒரு கவரையும்ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டு சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தாள்

ஆல்பத்தை பிரிக்கும்போது கையெல்லாம் நடுங்கியது. ஒவ்வோரு பக்கமாய் புரட்டும்போது நெஞ்சு அடித்துக் கொண்டது.

முழுசும் பார்த்துவிட்டு தூக்கி எறிந்தாள்..

கவருக்குள் இருக்குமா?

அப்படியே கவரைப் பிரித்து டேபிளில் கொட்டினாள்
சிறிதும்..பெரிதுமாய்கருப்பும் ..
வெள்ளையுமாய்.. புகைப்படங்கள்

ம்ஹூம் அவள் தேடும் புகைப்படம்கிடைக்கவேயில்லை..
அப்படி ஒரு புகைப்படம் இருந்தால்தானே கிடைப்பதற்கு.?

பவித்ரா அப்படி என்னதான் தேடுகிறாள்.??

அவளுடைய இந்த செயலுக்குப் பின்னால் ஒரு நிகழ்ச்சி.

பத்து நாட்கள் முன்பு வந்த ‘‘அன்னையர் தினம்.’

முகநூலைத் திறந்ததுமே வரிசையாய் அணி வகுத்தன அன்னையர் தின வாழ்த்துகள்

‘அம்மாநீ தான் உலகிலேயே சிறந்த தாய்.. உன் மகளாய் பிறந்தது எனது பாக்கியம்!!!’

‘You are the most precious mom in the whole world..Love you mom..’

‘அம்மா..நான் உன்னை தாயாய் பெற என்ன தவம் சேய்தேனோ’

இன்னும் இது போல போய்க்கொண்டேயிருந்தது

அம்மாக்களும். மகள்களும். கட்டிப் பிடித்துக் கொண்டு.முத்தமிட்டுக்கொண்டு.
வித வித கோணங்களில்..

பவித்ரா அந்தப் படங்களையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
ஃபோனைத் தூக்கி எறிந்தாள்..

பவித்ராவுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. அடிக்கடி வரும் ‘Mood swings ’ தான் இந்த மனநிலை தானே அவளுடைய வாழ்க்கையையே தடம் புரள வைத்தது..

கொஞ்சம் நேரம் சோஃபாவில் உட்கார்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

‘அம்மாவுடன் ஒரு புகைப்படம் கட்டிப் பிடிக்க வேண்டாம்அட.. பக்கத்தில் நின்றிருந்தாலே கூட போதுமே.’

‘அம்மா.உன்ன நான் பக்கத்தில கூட நெருங்க விடலையே… எப்ப பாரு.. உனக்கும் எனக்கும் சண்டைசண்டைசண்டைதான்!
உங்கிட்ட நல்லதா ஒரு வார்த்தை பேசியிருப்பேனா.ஆனா. இப்போ நான் நீ இருந்த நிலைமைல..!

இப்போ உன்னை என்னால் நல்லா புரிஞ்சுக்க முடியுது.

‘But. It’s too..late..’

பிறந்த குழந்தை அம்மாவை வெறுக்குமா?? அவளுக்குத் தெரிந்து ஒரு நாளும் இல்லை.

பத்து மாதம் குடியிருந்தது தாய் வயிற்றில் தானே முதலில் கேட்ட குரல்.. முதல் ஸ்பரிசம்.முதல் முத்தம் எல்லாம் எல்லாம். அம்மாஅம்மா பின் அம்மா மேல் வெறுப்பு எப்படி.? எப்போதிலிருந்து..?

ஐந்து வயது வரை அம்மாவுக்கும் அவளுக்குமான உலகம் ஒரு வயது வரை அம்மா பால் குடுத்திருக்கவேண்டும்.

அம்மாவின் மார்பில் தலை புதைத்து பாலைக் குடிக்காமல்காம்பை மட்டும் சப்பிக்கொண்டே அடிக்கடி திரும்பிப் பார்த்து சிரித்திருப்பாள். அவள் மகள்
மகதி செய்தது போல

மூன்று வயது வரை நடந்ததொன்றும் சுத்தமாய் நினைவில்லை

அப்பா..அப்பா முகம். முதலில் நினைவுக்கு வருவது அவருடைய சுருட்டை முடியும் சிரிக்கும் கண்களும் பெண்களுக்கு இருப்பது போல் மெல்லிய நீண்ட.. விரல்களும்.. அதற்கு துளியும் பொருத்தமில்லாத…..அந்த அதிகாரக் குரலும்.

அப்பாவை அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் அம்மாவுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.

இதுதான் எல்லாவற்றுக்கும் தொடக்கப் புள்ளி.

அப்பாவை அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளும்போது அவளுக்கு வயது ஐந்து இருக்குமா.?

ஆனால் ஏன் பிடிக்கவில்லை என்பது இப்போதுதானே புரிகிறது.!!

அம்மா போனபின். ஆத்மாவை அவள் திருமணம் செய்தபின் அவனுடன் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின்.மகதி பிறந்த பின்ஆத்மாவை விட்டு அவள் விலகி வந்தபின்!

அம்மாஎன்னை மன்னித்து விடு

தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும். திருகு வலியும்..

அப்பா..

அப்பாவை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அப்பாவுக்கும் அவளை ஆனால் அப்பாவை அவள் பார்ப்பதே அரைத்தூக்கத்தில்தான்

“பவிபவிக்குட்டிமை ஏஞ்சல்.இதோ பாருஅப்பா என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்”

மணி பன்னிரண்டாஒண்ணா
இரண்டாதெரியாது

“அப்பா தூக்கம் வருது.!!!”

“இதோ பாரு அப்பா பவிக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு!”

ஒருநாள் சிக்கன் ஸிக்ஸ்டி ஃபைவ்.. ஒரு நாள் பிரியாணி ஒருநாள் பனீர் டிக்கா எல்லாம் கிளப்பில் இருந்துஆறிப்போய்

ஆனால் அப்பா கையால்
ஊட்டும்போது அமிர்தம்.

அம்மா ஒரு நாளும் அவளுக்கு ஊட்டியதில்லை..

“ம்.. தட்டைப் பாத்து சாப்பிடு எல்லாத்தையும் காலி பண்ணணும்”

அதட்டும் குரலில் சொல்லிவிட்டு போய்விடுவாள்.

பவி பாதிநாள் சாப்பிடாமலே எழுந்து விடுவாள்..

“வர்ரதே ஒரு மணி..தனக்குத்தான் நேரம் காலம் இல்லைனா பொண்ணையும் கெடுக்கணுமாகாலைல எழுந்திருந்து ஸ்கூல் போகவேண்டாம்.? இப்படியா அகாலத்தில சாப்பிடுவாங்க?”

“ஷ்ஷ்ஷ். அவளைப் பார்த்து சைகை காண்பிப்பான்..சில நாட்கள் “shut up and get out”என்று கத்துவான்..

“நீ சாப்பிடு கண்ணம்மா.!!!”

பொறுமையாய் ஒவ்வொரு வாயாய் ஊட்டி முடித்து விட்டுத்தான் எழுந்திருப்பான்..

அப்பாவிடம் எப்போதும் ஒரு பழவாசனை வரும்பவிக்கு அது பிடித்திருந்தது

ஆனால் இப்போது அது வாசனையாய் தெரியவில்லை ஆத்மா இரவு நேரம் கழித்து வந்து அவளை நெருங்கும் போது அதுவே நாற்றமாய் தோன்றியது எதனால்?

விவரம் புரியாத வயதில் பிடித்தது இப்போது வெறுப்பாய் மாறியது ஏன்.?? அம்மாவுக்கும் அப்படித்தானே தோன்றியிருக்க வேண்டும்…?

அப்பாஅம்மா அவள்
மூன்று பேரும் சேர்ந்து வெளியில் போனதாக நினைவில்லை..

அப்பாவுடன் பீச் கிளப் சினிமா என்று சுற்றியிருக்கிறாள் வீட்டுக்கு திரும்பவே மனதிருக்காது..

அப்பா கேட்டதெல்லாம் யோசிக்காமல் வாங்கித் தருவார்அவளை ஒரு இளவரசி போல நடத்துவார்..

அம்மாவுடன் புத்தகக் கண்காட்சி கோவில்.. ஹோட்டல்கள்.. நண்பர்கள்.. உறவினர்கள் வீடு என்று எத்தனை இடங்கள்.

அப்பாவுடன் இல்லாத அம்மா எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறாள்.!!!

ஆனால் அவளுக்கு இரண்டு பேருடனும் சேர்ந்து போக ஏக்கமாயிருக்கும்.

ஒன்றிரண்டு தடவை அது நடந்திருக்கிறது ஆனால் திரும்பி வரும்போது ஏன் சேர்ந்து போனோம் என்ற வெறுப்பு தான் மிஞ்சும்.

கிளம்பியதிலிருந்து வீடு திரும்பும் வரை எப்படித்தான் அவர்களால் இப்படி சண்டை போட முடிகிறதோ.

ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

நடுவில் அவள் இருப்பதையே மறந்தது போல.

அப்புறம் தீர்மானம் செய்து விட்டாள்.

ஒன்று அப்பா இல்லையென்றால் அம்மா!!

கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் விடவேண்டும்.. இருவரிடமும் சாதித்து பெற்றுக் கொள்வதில் அவள் திறமைசாலியானாள்!!!

அம்மாவைப் பற்றி அப்பாவும். அப்பாவைப் பற்றி அம்மாவும் மாறிமாறி குற்றப்பத்திரிகை வாசிக்கும் போது.அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு தனக்கு ஆதாயம் தேடிக் கொண்டாள்

தங்களுடைய கோபமும் வெறுப்பும் ..பவியின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ள முடியாத படித்த முட்டாள்கள்.!!

இப்போதெல்லாம் அவளுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வருகிறதுஅம்மா சொல்வதை செய்யக்கூடாதென்ற வீம்புஅம்மாவை எதிர்த்து பேசும் போது ஒருவித குரூர
மகிழ்ச்சி.

சில நாட்கள் அம்மா தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும்போது பாவமாயிருக்கும். நன்றாக வேண்டும் என்று கூட யோசித்திருக்கிறாள்.

பவி ஆத்மாவைத் திருமணம் செய்து கொள்ளும்போது அப்பா அம்மாவை விட்டுப் போயிருந்தார்.

அப்பாவுக்கு பவியை விட்டுக் கொடுக்க மனமேயில்லை ஆனால் கோர்ட் தீர்ப்பு அம்மா அன்று முதல் பவியின் எதிரியானாள்.

விவாகரத்திற்கான காரணம்??

நேரம் கழித்து வீட்டுக்கு வருவது.மது போதையில் தகாத வார்த்தைகளால் மனதை நோகடித்ததுகுழந்தையின் மனதில் வெறுப்பணர்சியை தூண்டியது இன்னும்.. இன்னும்

ஆனால் உண்மையான காரணம்.

அம்மாவின் புத்திசாலித்தனம்.

கை நிறைய அவள் வாங்கும் சம்பளம் ஆஃபீஸில் அவள் எட்டிய உயரம்அவனில்லாவிட்டாலும் அவளால் வாழ முடியுமென்ற காம்ப்ளக்ஸ்!

ஆனால் இதை புரிந்து கொள்ள எனக்கும் அதே அனுபவம் ஏற்பட வேண்டும் என்பது என்ன விதத்தில் நியாயம்? அம்மா உன் மனதை நோகடித்த காரணத்துக்காக இவ்வளவு பெரிய தண்டனையா.??

ஆத்மாவுக்கும் அவளுக்குமான விவாகரத்துக்கும் இதே காரணமா?

பவிக்கு வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது.

அப்பாவிடம் இல்லாத மற்றோரு குணம்.. சந்தேகம்ஆத்மாவிடம் நிறையவே இருந்தது.

அவளுக்குத் தெரியாமல் அவள் அலமாரியைக் குடைவது.. ஆஃபீஸ் போவதாகச் சொல்லிக் கொண்டு ஒளிந்திருந்து அவள் நடத்தையை கண்காணிப்பது அவள் ஃபோனை நோண்டுவது..

பவித்ரா சில நாட்கள் வெறி பிடித்தது போல கத்துவாள்அவளை குழந்தை முன்னால் கைநீட்டி அடித்ததுதான் எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க தூண்டியது அம்மாவை அப்பா அடித்து பார்த்ததில்லை..

மகதி இன்னொரு பவித்ராவாக வளருவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

அவள் டீனேஜ் பருவத்தில் அம்மாவுக்கு கொடுத்த சிரமங்கள் கொஞ்ச நஞ்சமா..??

அவள் படித்த பள்ளியில் ஆண்களும் படித்தார்கள்.. அவளுடைய நண்பர்கள் பெரும்பாலும் ஆண்களே..

அம்மாவுக்கு வயிற்றில் புளியைக் கரைப்பதற்காகவே அடிக்கடி அவர்களை வீட்டுக்கு கூட்டி வருவாள்..

“இன்னிக்கு என் ஃபிரண்ட்ஸ் எல்லாருக்கும் இங்கதான் சாப்பாடு”

குரலில் ஒரு பணிவோ கனிவோ ..இருக்காது.

ஆணையிடும் தோரணை!

கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவைப் போல மாறி வருகிறோமோ என்று அவளுக்கே தோன்றும்

“எப்படித்தான் அப்பா மாதிரி தப்பாம பிறந்திருக்கியோ.

இப்போ இரண்டு பேருக்கும் சேர்ந்து நான் பயப்படணுமா?? என்னோடே தலையெழுத்து!!”

பவிக்கு இந்த வார்த்தைகள் போதும்!

வெறி பிடித்த மாதிரி கத்த!

“அப்பாவை ஏன் இழுக்கிறவேணும்னா நான் வெளியே போறேன்.!!!”

அப்பா பிரிந்து போனபின் ஒரு நாள் சொன்னபடியே செய்தாள்..

மூன்று நாட்களாக பவியைக் காணாமல் பயித்தியம் பிடித்தது போலானாள்..

ஒரு நாள் ஃபோன்..

பவியின் ஃப்ரெண்ட் காயத்ரி.

“ஆன்ட்டி..பவி எங்க வீட்ல தான் இருக்கா.. உங்க கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்னாஆனா .. நான்தான் மனசு கேக்கல ஆன்டிஸாரி என்ன தப்பா நினைக்காதீங்க.”

அவளாகவே நாலு நாளில் திரும்பி வந்தாள்..

அம்மாவுக்கும் அவளுக்குமான பேச்சுவார்த்தை முற்றிலுமாக நின்றுபோனது..

அப்போதுதான் ஆத்மா அறிமுகமானான்!!

அவள் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம்..
ஏதோ ஒரு கல்சுரல் ப்ரோக்ராமில் அறிமுகமானான்.

கல்லூரி மாணவனல்ல ஆசிரியர் அவளைவிட பத்து வயது பெரியவனாயிருக்கக் கூடும்

அவனிடம் ஏன் மனதை பறிகொடுத்தாள் என்பது பவிக்கு இன்றுவரை புரியாத புதிர்..

சதா இழுத்து விடும் சிகரெட் புகைஎல்லோரையும் அலட்சியமாய் நோக்கும் பார்வை.. பெண்களிடம் அவன் தரக்குறைவாய் அடிக்கும் ஜோக்ஸ்.

எதைக்கண்டுமயங்கினாள்.??

அவளாக வலியப் போய்தான் பேசுவாள்.. அவன் அவளை அலட்சியப் படுத்த படுத்த அவன் மேல் அவளுக்கு மோகம் கூடிக் கூடி வந்தது..!!!

அவனுடைய நண்பர்களே எச்சரித்தனர் அவன் ஒரு முன்கோபக்காரன் முரடன்..என்று

அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்தவன் என்று தெரிந்தும் அவனுடன் இணையத் தீர்மானித்தாள்..

இதுவும் அம்மாவை வெறுப்பேற்றுவதற்காக இருக்குமோ?

முதல் பார்வையிலேயே அம்மாவுக்கு ஆத்மாவைப் பிடிக்கவில்லை.. வாழ்க்கையில் பவி எதிர்கொள்ளும் போகும் சவால்கள் அவள் கண்முன்னே திரைப்படமாய் ஓடியது

பவியைப்பார்த்து நாட்கள்மாதங்களாகி.. வருடங்களாய் ஓடியது..

பவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததும்ஆத்மா அவளை கொடுமைப்படுத்துவதும் அவள் ஆத்மாவை விட்டு பிரிந்து தனியாக வாழ்வதும்.. எல்லாம்.. எல்லாம்..காற்று வாக்கில் காதில் விழுந்தவை.

ஆத்மா மகதியுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர ஆரம்பித்தான்..

“நானும் அப்பாவும் சினிமாவுக்கு போறோமே..”

“அப்பா எனக்கு என்ன வாங்கிக் குடுத்திருக்காரு பாரும்மா”

ஏழெட்டு விலையுயர்ந்த உடைகள் காலணிகள்..மாலைகள்.. விளையாட்டு பொருட்கள்

“மகதி.. சாப்பிட வாஅம்மா என்ன பண்ணி வச்சிருக்கேன் பாரு!!!”

“ஐய்யே..வீட்டு சாப்பாடு சுத்த வேஸ்ட்நாம ஹோட்டல்ல. சூப்பர் டின்னர்..இல்லப்பா.”

அப்பாவும் பெண்ணும் திரும்பிக் கூட பார்க்காமல் உள்ளே போய் கதவைச் சாத்திக் கொண்ட நாட்கள் எத்தனை !!!

இப்போதெல்லாம் மகதி பவியை அடிக்கடி எதிர்த்து பேச ஆரம்பித்திருக்கிறாள்..

“மாட்டேன்போ”

“No means no.”

“முடியாதுபோம்மா.”

ஒரு நாள் அவள் கேட்ட வார்த்தையை அவளாலேயே நம்ப முடியவில்லை

“மகதி என்னடி சொன்ன.?”

“Get lost.”

மறுபடியும் தயக்கமில்லாமல் சொன்னது ஆறு வயது குழந்தை..

ஆத்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை.!

அன்று பவிக்கு வந்ததைப் போல ஆத்திரமும் ‌.. கோபமும் .என்றுமே வந்ததில்லை..அடி பின்னி எடுத்துவிட்டாள்..

மகதிக்கு குடுத்ததெல்லாம் இரட்டிப்பாக இரவே அவளுக்கு கிடைத்தது..

மகதி முகத்தில் ஒரு குரூர மகிழ்ச்சி..

தான் பதினைந்து வயதில் செய்ததை தன் பெண் ஆறு வயதிலேயே செய்யத் தொடங்கி விட்டாளா.?? பிஞ்சிலேயே பழுத்து விட்டாளா?

ம்ஹூம்இதை இப்படியே விடக்கூடாது இவள் நிச்சயம் இன்னொரு பவித்ராவாக மாற விடமாட்டேன்.

ஒரு நாள் ஆத்மாவிடம் மனம் விட்டு பேசினாள்.மகதிக்காக ஆத்மா மாறத் தயாராக இல்லை.

எல்லாமே அவளுடைய தவறு என்று வாதம் செய்பவனுடன் எப்படி ஒத்துப் போக முடியும்??

அவள் அம்மாவை கடைசியாய் பார்த்தது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில்..

பாதி நினைவு தப்பிய நிலையில் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றிய போதேல்லாம் , அவள் தன்மானம் இடம் கொடுக்க வில்லை..

இப்போதும் காலம் கடந்துதான் போய்விட்டது.

அம்மாவின் கைகளையும் பிடித்துக் கொண்டு அழத்தான் முடிந்தது..

ஆனால் ஒரு வாரமாய் மூடிக் கிடந்த கண்கள் இவளின் ‘அம்மா ‘என்ற ஒற்றை விளி கேட்டு திறந்தது மருத்துவ அற்புதம்..

ஆனால்.. ஆனால்

அம்மாவின் திறந்த கண்கள் ஆயிரம் கதை பேசியது.. இதுவரை அவர்கள் மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளையும் ரகசியங்களையும். உண்மைகளையும்கதை கதையாய் சொன்னது..

வார்த்தைகளுக்குக் கூட இவ்வளவு சக்தி இருந்திருக்குமா.. தெரியவில்லை

அம்மாவை அவளும்அவளை அம்மாவும் புரிந்து கொண்டு விட்டார்கள்அது போதும்.
பவி ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டாள்

“மகதி !! மகதி டார்லிங்..!!!”

“அம்மா மகதி குளிச்சிட்டிருக்குஅம்மா என்ன ‘வெளியே கூட்டிட்டு போறேன்..ரெடியா இரு’ன்னு சொல்லியிருக்காங்கன்னு சொல்லிட்டு இப்பத்தான் போச்சு”

“சரி..சாந்தம்மா..மகதி குளிச்சிட்டு ரெடியாரதுக்குள்ள நானும் தயாராகணும்”

“அம்மா..டீ போடட்டுங்களா??”

“இல்லசாந்தா.குடிச்சிட்டேன்.சொல்ல மறந்திட்டேனே.. ராத்திரிக்கு உனக்கு மட்டும் பண்ணிக்கோ.. நாங்க வெளில சாப்பிடப் போறோம்.. உனக்கு என்ன வேணும் சொல்லு.. வாங்கிட்டு வரேன்..”

“வேண்டாம்மா.. மோர் சாதம் போதும்.. சாப்பிட்டு சீக்கிரமே படுத்திடுவேன்..சாவி எடுத்திட்டு போங்க.”

இன்று பர்மிஷன் போட்டுவிட்டு நாலுமணிக்கே வந்து விட்டாள்..இன்று முழுவதும் மகதியுடன்தான்

“அம்மா.. என்னாச்சு இன்னிக்கு உனக்கு..இத்தன sefi யா..நீ எது செஞ்சாலும் ஓவராதான் செய்வ!!”

“ஆமாம்.. மகதி.. எனக்கு உணர்ச்சிகள அடக்கத் தெரியல..”

ஆனால் அதற்கு பவித்ரா மட்டுமா பொறுப்பு?

“அம்மா.. இட்ஸ் ஓகே சும்மா கலாட்டா பண்ணினேன்”

மகதிக்கு பிடித்த உணவகம்.

“உனக்கு என்ன வேணும்.. ஆர்டர் பண்ணு..!!!”

“நத்திங் டூயிங்..உனக்கு பிடிச்சது தான் இன்னிக்கு எனக்கு.”

மகதியை நினைத்து பவித்ராவுக்கு பெருமிதமாயிருந்தது..

இவள் வயசில் தான் எத்தனை குழந்தைத்தனமான நடந்து கொண்டிருக்கிறோம்.. எல்லோரையும் எடுத்தெறிந்து பேசிக்கொண்டு.. குறிப்பாக அம்மாவிடம் ..

“அம்மா..நாளைக்கு என்னோடே ஃபிரண்ட்ஸ் எட்டு பேர சாப்பிடக் கூப்பிடலாம்னு இருக்கேன்..Are you okay with that..?? உனக்கு கிடைக்கும் ஒரு நாள் ஓய்வையும் நான் கெடுக்கிறேனா..??”

“எனக்கு சந்தோஷம்தான் மகதி. Just go ahead…”

மகதி இன்னொரு பவித்ராவாக வளரமாட்டாள் ஒன்றைப் பெறுவதற்கு ஒன்றை இழக்க நேர்ந்துவிட்டது..என்ன செய்வது..??

அவளுடைய வாழ்வின் ஆரம்பகால சந்தோஷங்களை இழந்துவிட்டாள்.. ஆனால் மகதி என்ற புதையலை அடைந்து விட்டாள்.இனி அதை பத்திரமாய் பேணி பாதுகாக்க வேண்டும்.

அம்மா.. உன் ஆசீர்வாதம் எனக்கு கிடைக்குமா..என்னை மன்னிப்பாயா.?

காரில் ஏறப்போன பவியைப் பிடித்து நிறுத்தினாள் மகதி.

“அம்மா ஒரு நிமிஷம்”

அம்மாவைக் கட்டிபிடித்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் மகதி.

“You are the most precious mother in the whole worldLove you mom.”

திக்குமுக்காடிப் போனாள் பவி.

அம்மா அவளை மன்னித்து விட்டாளா.??

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *