மதி நுட்பம் – ஒரு பக்க கதை

1
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 5,863 
 

“மகேஷ்… தாத்தா உன்கிட்டே பேசணுமாம்…” – செல் போனை ஊஞ்சலில் வைத்துவிட்டு மீண்டும் சுந்தரகாண்டம் பாராயணத்தைத் தொடர்ந்தாள் பாட்டி.

“சொல்லுங்க தாத்தா…” என்றான் மகேஷ். அடுத்த நொடி “ சரி தாத்தா…” என்றான்.

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஜெனரல் மெர்ச்சன்ட்டில் தாத்தாவுக்கு ‘அதை’யும், கடை வாசலில் இருந்த பூக்காரியிடம் பூஜைக்காக பாட்டி வாங்கும் பூவையும் வாங்கி வந்தான் மகேஷ்.

“பாட்டி…பூ…” பூவை ஊஞ்சலில் வைத்துவிட்டு வேகமாக மாடிக்கு ஓடினான் மகேஷ்.

மாடியில் இருந்த தாத்தா ரூமைத் திறந்தான். குபீரென்று அடித்தது ஏ.சி. குளிர்.

‘ஃபுல் ஏசியோடு ஃபேனையும் போட்டுக்கொண்டு எப்படி இருக்க முடிகிறது இந்த தாத்தாவால்?…’ என்று நினைத்தபடியே “இந்தாங்க தாத்தா…” என்று தன் சட்டைக்குள் மறைத்து வித்திருந்த முனைகள் மிருதுவான நான்கு விரல்கள் விரிந்து வளைந்தாற்போல் வடிவமைக்கப்பட்ட ‘முதுகு சொறியும் கோலை தாத்தாவிடம் நீட்டினான் மகேஷ்.

பனை ஓலை விசிறியை கீழிருந்து தேடி எடுத்து வரச் சொன்னது, முதுகு சொறிவதற்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டு தன் பாக்கெட் மணி செலவு செய்து வாங்கி வந்த மகேஷின் மதி நுட்பத்தையும் வியந்து பேரனை கட்டி அணைத்து உச்சி முகர்ந்தார் தாத்தா.

– கதிர்ஸ் ஜனவரி 1–15–2021

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

1 thought on “மதி நுட்பம் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)