மங்களம் உண்டாகட்டும் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 3,554 
 

எல்லோரும் அவசரமாக தங்கள் பணிக்காக ஓடுக்கொண்டிருந்த காலை நேரம். மும்பை தாராவி நேரு நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்த ரவியிடம் அம்மா ‘’மீனா உன் காதலி வீட்டிலிருந்து யாரும் எதுவும் கேட்க வரல். ஊரிலிருந்த நான் வந்து ஒரு மாசமாச்சு. இன்றைக்கு மத்தியானம் இரயிலில் ஊருக்குப் போகிறேன். எதிர் வீட்டிலிருந்து கிட்டு ஒரு நாளாவது வந்து பேசியிருக்கலாமில்லியா?” என்று கேட்டாள்.

“என்னம்மா. நாம் மாப்பிள்ளை வீட்டுக்கார நம்ம வந்து பேசணும்னு நெனச்சிருப்பாங்க.”

“அவங்க வந்து பேசறதா தானே உன் லவ்வர் தேவி சொன்னதா சொன்னாய்.”

“என்ன பிரச்சினையோ. தெரியல. நீ கெளம்பு. டிரெயினுக்கு நேரமாச்சு.”

“அப்படீன்னா ஊரிலே போய் நான் வேற பொண்ணு பார்க்கவா?”

“ஒண்ணும் வேண்டாம். நான் அவங்களப்பார்த்துப் பேசி, ஊருக்கு வந்து உன்னையும் அப்பாவையும் பார்க்கச்சொல்கிறேன்” என்றவன் டாக்ஸி பிடித்து வி.டி. ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவை வழியனுப்பி வைத்தான்.

மறுநாள், ரவி தேவியைச் சந்தித்தபோது, “ஏன் தேவி உங்க அம்மா எங்க அப்பா கிட்டே வந்து பேசப்போறதா தானே சொன்ன. அப்புறம் என்னாச்சு.” என்று கேட்டான் ரவி.

“வீட்டிலே என் தங்கச்சி எங்கேயோ மாட்டி கிட்டு… விடு ரவி. இப்ப என்ன செய்யலாம். பேசாம… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாமா?”

“நான் வீட்டுல கடைசி பையன். எல்லோரும் என் கல்யாணத்த ஜாம் ஜாமுண்ணு நடத்தணும்மு எதிர்பார்க்கிறாங்க. நீ ஒண்ணு பண்ணு. நான் நாளைக்கு ஊருக்கு கெளம்புறேன். நான் தார நம்பர்ல உங்க அப்பாவை நாளை மத்த நாள் கூப்பிடுப் பேசச்சொல்லு.” என்று தொலைபேசி எண் கொடுத்து விட்டு கிளம்பினான்.

ரவி ஊருக்கு வரும்போது வீடு திருமண களைக் கட்டியிருந்தது. பந்தல் எல்லாம் போட்டிருந்தது. ‘யாருக்குத் திருமணம்’ என யோசித்துக்கொண்டே வந்த போது “மாப்பிள்ளை வந்தாச்சு” என்ற ரவியின் மாமா (மீனாவின் தம்பி)

நேரக அம்மாவிடம் போய் “என்னம்மா யாருக்குக் கல்யாணம்?” என்றான் ரவி.

“எல்லாம் உனக்கும் உன் மாமா பொண்ணு திவ்யாவுக்குந்தான். சும்மா லவ்வு கிவ்வுண்ணு ஏதாவது சொன்ன…. அப்புறம் நடக்கிறதே வேற. ஒழுங்கா திவ்யா கழுத்துல தாலிய கட்டிகிட்டு இங்கே உள்ள வெவசாயத்தைப் பாரு. இல்லை, நான் தூக்கில தொங்குவேன்.” என்று அம்மா கத்திய போது அதிர்ந்து நின்றான் ரவி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *