அப்பா.. சாய்ங்காலம் சத்ஸங்கத்துல சுகி சிவம் பேசறார். போறோம். ஏம்மா காயு, காலேஜ் இருக்கு லேட் ஆகும்னு சொன்னியே. No problemப்பா.. நம்ம இங்க போகலாம்.
மிகவும் உருக்கமாக கேட்டிக்கொண்டிருந்த சரவணன் கையை பிடித்து அழுத்தினாள் காயு அப்பா கண்களில் கண்ணீர் வருவதை கண்டு. உரையை கேட்டு முடித்த சரவணன், சுகி சிவம் அவர்களின் CD. சிலவற்றை வாங்கினான். அப்பா, இதையைல்லாம் கூட you tube லியே பாக்கலாம் எதையெதையோ பாக்கறதுக்கு. சரவணன் பொய்யான கோபத்துடன் முறைக்க, அய்யோ சாரி, சாரி.. நீங்க அப்போதான் அப்படி. இப்போ சமத்து அப்பா என்று கொஞ்சினாள்.
இப்போதெல்லாம் அப்பாவும் மகளும் அடிக்கடி சத்ஸங்கம் விசிட்டிங். சந்தா கட்டி permanent membership வாங்கி கொடுத்துவிட்டாள் காயு. Next week காசி, கயா எல்லாம் போறதுக்கு பணம் கட்டிட்டேன். அம்மாவுக்கு போய் திதி குடுத்துட்டு வந்துடலாம்னு இருக்கேன் என்ற சரவணனின் ஆன்மீகத் தெளிவு.கண்டு பெருமிதமடைந்தாள் காயு.
சில மாதங்களுக்கு முன்னால்.
மீனாட்சியின் ஈமச்சடங்கு முடித்து விட்டு சோகமாக இருந்த சரவணன், கிட்டத்தட்ட நடைப்பிணமானான். வீட்டுக்கே சரியாக வருவதில்லை.
ஒருநாள் போதை தலைக்கேறி வீட்டுக்குள் நுழையும் முன் வாசற்படியில் தடுக்கி விழுந்து, காயு படாதபாடு பட்டு விட்டாள்.
ஒரு நாள் காயு வீட்டை பெருக்கி சுத்தம் செய்து, துணிமணிகளை தோய்த்து உலர்த்தி எல்லா வேலைகளையும் ஒண்டியாக செய்தாள். இதே நிலை இரண்டு மூன்று நாள் தொடரவே, ஏம்மா காயு, தாயம்மா வர்லியா. நீ ஏன் கஷ்டப்படற. இல்லப்பா ரெண்டு மாசம் வரமாட்டாங்களாம். ஏதோ சொந்தகாரங்க serious னு ஊருக்கு போயிருக்காங்க.
இதற்கு மூன்று நாள் முன்புதான் இந்த நிகழ்வு நடந்தது. ஆன்ட்டி இந்தாங்க இரண்டு மாசம் சம்பளம். நீங்க அப்பறமா நான் சொன்ன பிறகு வந்தா போதும். புரியுது தாயி.. எனக்கும் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மாவும் அப்பாவும் அவ்வளோ அன்னியோன்னியம். அவங்களோட பிரிவுதான் அப்பா இப்படி ஆயிட்டாரு. அவரு இப்பல்லாம் என்ன பாக்கறது கூட வித்தியாசமாதான் இருக்கு. தப்பா நெனச்சிக்காதே காயுமா இப்படி சொல்றனேன்னு. ச்சீச்சி எனக்கு தெரியும் ஆன்ட்டி. அதான் ரெண்டு மாசம் கழிச்சி வரச்சொல்றேன். நான் சரி பண்றேன் எல்லாத்தையும்.
சரவணன் அறையை சுத்தம் செய்யும் போது ஒரு நாள்… சில செக்ஸ் புக்குகளை பார்த்து அதிர்ச்சியடைந்தாள் காயு.
பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த புத்தக அட்டையை பார்த்து கடகடவென்று உள்ளே போய் சரவணன் எதையோ தேட.. என்னப்பா தேடரீங்க. நான் எரிச்சிட்டேன் எல்லாத்தையும்.
அப்படின்னா… ஒரு கணம் யோசித்து டேபிள் ட்ராயர் அடியில் துழாவ, தேடாதீங்கப்பா..அந்த CD யும் ஒடச்சி போட்டுட்டேன்.
ஏம்ப்பா.. ஏன் இப்படி ஆயிட்டீங்க. உங்க உணர்ச்சிகள் எனக்கு புரியுதுபா. But.. பெத்த மகளுக்கே அப்பாகூட இருக்கிறதுக்கு பயம் வந்துடக் கூடாதுப்பா. நீங்க அம்மா இருந்த வரைக்கும் எப்பிடி ஒரு நல்ல அப்பாவா இருந்தீங்களோ அப்படி பாக்கணும்ப்பா உங்கள.
அய்யோ காயு.. என்ன மன்னிச்சிடும்மா. மனசு ஏதோ அலை பாஞ்சிடிச்சு என்று மகளை பார்க்க கூச்சப்பட்டவராய் தேம்பினான் சரவணன்.
இன்று.. என்ன காயு எனக்கு வெச்ச டெஸ்ட்ல pass ஆயிட்டேனா. காயு, வித்தியாசமாக பார்க்க, புரியலையா.. தாயம்மாவ மார்க்கெட்ல பார்த்தேன். நீ ஒண்டியா கஷ்டப்படறது கஷ்டமா இருக்கு காயு.
ஓகேப்பா நாளைலேந்து வரச் சொல்லிடறேன்.
ஒரு மகள் தாயாகிறாள்..