சென்னையில் ஒரு பள்ளிக்கூடத்தில் எட்டாம ‘க்ளாஸ்’ படித்து வந்த ராதாகிருஷ்னன் குளிக் கும் போது ஒரு வாரமாகவே தன் உடம்பைக் கவனித்து வந்தான். அவனுக்கே கொஞ்சம் பயமாய் இருந்தது.
‘எப்படி இதை நாம் சொல்றது.முதல்லே நம்ம அம்மா கிட்டே சொல்லலாமா, இல்லே அப்பா கிட்ட சொல்லலாமா’ என்று யோஜனைப் பண்ணி வந்தான்.
‘எதுவாய் இருந்தாலும் இந்த கோடை விடுமுறை முடியறதுகுள்ளே இதை நாம் சொல்லியே ஆகணும்” என்று நினைத்து ‘நாம முதல்லே நம்ம அம்மா கிட்டேசொல்லலாம்’ என்று நினைத்து அப்பா இல்லாத நேரமாப் பாத்து ரகசியமாக “அம்மா இப்ப கொஞ்ச நாளாகவே, என் மார்பகங்கள் கொஞ்சம் பெரிசா ஆகி கிட்டு வருதும்மா” என்று ராதாகிருஷ்ணன் சொன்னதும் அவனுடைய அம்மாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அவள் உடனே “அப்படியாடா ராதா.எங்கே உன் பனியனையும் ஷர்ட்டையும் கழட்டு” என்று கத்தினாள். தன் மகன் ஷர்ட்டையும் பனியனையும் கழட்டி விட்ட பிறகு அவனைப் பார்த்த அம்மாவுக்கு பகீரென்று இருந்தது.ராதாகிருஷ்ணன் சொன்னது உண்மையாக இருந்தது. ‘அடப் பாவமே இந்தப் பையனுக்கு இந்தக் கோளாறு இருக்கா.நாம் என்ன பண்ணுவது’ என்று மிகவும் கவலைப் பட்டாள் வனஜா.
“சரி, நீ இதை இப்ப யார் கிட்டேயும் சொல்லிக் கிட்டு இருக்காதே. உனக்கு நான் கொஞ்சம் ‘பெரிய அளவு’ ஷர்ட்டை வாங்கித் தரேன்.அதை நீ போட்டு கிட்டு வா. அப்பா சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் நாங்க ரெண்டு பேரும் கலந்துப் பேசி மேலே ஆக வேண்டியதைக் கவனிக்கிறோம்” என்று சொல்லி அவனை அனுப்பி விட்டு யோஜனைப் பண்ணினான்.
சாயந்திரம் தன் கணவன் ராகவன் பாங்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் அவருக்குக் ‘காபி’ ‘டிபன்’ எல்லாம் கொடுத்து விட்டு அவரைத் தனியாக அழைத்து ராதாகிருஷ்ணனின் ‘ப்ராப்லெத் தை’ விவரமாகச் சொன்னாள் வனஜா.
விஷயம் கேள்விப் பட்ட ராகவன் மிகவும் கவலைப்பட்டார். அவரும் தீவிரமாக யோஜனைப் பண்ணினார். பிறகு அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
மனைவியைப் பக்கத்தில் உட்காரச் சொல்லி விட்டு “வனஜா, எனக்கு பாங்கிலே அவங்க வழக்கம் போல என்னை எங்கேயாவது வடக்கே ஒரு எட்டு வருஷம் மாத்தல் கொடுப்பாங்க. நான் ராதா கிருஷ்ணன் படிப்புக்காக அதை தள்ளிப் போட்டுக் கிட்டு இருந்தேன். ஆனா இப்போ அதை உடனே நான் கேட்டு வாங்கிக்கப் போறேன். கோடை விடுமுறை முடிஞ்சதும், நாம் மூவரும் வடக்கே போயிட்டு எட்டோ, பத்தோ வருஷம் இருந்துட்டு வரலாம். அங்கே போனதும் நீ ராதாகிருஷ்னனுக்கு பெண்கள் போட்டுக் கொள்ளும் ‘டிரஸ்களை’ அவனுக்குப் போட்டு வா. அவனுக்கு இப்ப ஏற்பட்ட ‘மாறுதலை’ நாம யார் கிட்டேயும் சொல்லி கிட்டு இருக்கவே வேணாம். நீ எனக்கு ஒரு பெரிய ‘ஹெல்ப்பை’ பண்ணணும் வனஜா” என்று சொல்லி விட்டு வனஜாவைப் பார்த்தார்.
“நீங்க சொன்னது ரொம்ப நல்ல ஐடியாங்க. நாம் அப்படியே செய்யலாங்க. நான் என்ன ‘ஹெல்ப்’ பண்ணனுங்க சொல்லுங்க. நான் உடனே பண்றேங்க” என்று கவலையுடன் கேட்டாள் வனஜா.
“நீ ராதா படிக்கிற ஸ்கூலுக்குப் போய், ‘ப்ரின்சிபால்’ கிட்டே ரகசியமா ராதாகிருஷ்ணனுக்கு ஏற்பட்டு இருக்கிற இந்த ‘உடல் மாறுதலை’ மெல்லச் சொல்லி, ’மேடம்,வெளி உலகத்துக்கு ராதா கிருஷ்ணன் உடல் மாறுதல் தெரிய வந்தா,அவனை எல்லோரும் கேலி செய்வாங்க.கோடை விடு முறை முடிஞ்சு அவன் ஸ்கூலுக்கு வந்தா, அவன் ‘பையன்’ இல்லைன்னு எல்லா பையன்களுக்கும் தெரிஞ்சிடும். ராதாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ராதாவோட அப்பா உடனே வடக்கே மாத்தல் கேட்டுக் கிட்டு, எங்க மூனு பேரையும் அழைச்சு கிட்டு வடக்கே போய் விடலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கார் மேடம். நீங்க தயவு செஞ்சி ராதாகிருஷ்ணன் பேரை வெறுமனே ‘ராதா’ன்னும், அவன் ‘ஜெண்டரை’ ‘F’ன்னு TC யிலேப் போட்டு குடுத்தா, நாங்க அவனை நாங்க மாத்தல் ஆகிப் போகும் ஊர்லே,ஒரு பெண்கள் படிக்கும் ஸ்கூல்லே சேக்க முடியும். நீங்களும் ஒரு ‘லேடி’ தானே மேடம். உங்களுக்கு எங்க ‘கஷ்டம்’ நல்லா புரியும்ன்னு நினைக்கிறேன். நீங்க இப்படி தயவு செஞ்சா ராதாகிருஷ்ணன் எந்த ‘கேவலமும்’ இல்லாம ஒரு பெண்ணேப் போல் வாழ்ந்து வர முடியும்.தயவு செஞ்சி இந்த உதவியை எனக்குப் பண்ணுங்க’ன்னு கெஞ்சிக் கேளு. எனக்கு என்னவோ அந்த ‘ப்ரின்சிபால்’ நிச்சியமா இந்த உதவியை நமக்கு இந்த ‘இக்கட்டான’ சமயத்லே செய்வார்ன்னு நம்பிக்கை இருக்கு வனஜா. நீ அவர் கிட்டே கொஞ்சம் அழுகையை வர வழைச்சுக்கிட்டு கெஞ்சினா அவங்க நிச்சியமா இந்த உதவி யை பண்ணுவார்” என்று கண்களில் நீர் தளும்பச் சொன்னார்.
வனஜாவுக்கு ராகவன் சொன்ன ஐடியா மிகவும் பிடித்து இருந்தது.
உடனே அவள் ”நான் இந்த வாரமே அவர் ஸ்கூலில் இருக்காறாரான்னு விசாரிச்சுட்டு, ராதா படிக்கற ஸ்கூலுக்குப் போய், நீங்க சொன்னா மாதிரி அவரை கெஞ்சி கேட்டு TC யை வாங்கி வறேனுங்க”என்று சொன்னாள்.
அவசியம் இல்லாமல் ராதாகிருஷ்னனை எங்கேயும் வெளியே அனுப்பாமல் இருந்து வந்தார்கள் வனஜாவும் ராகவனும்.
அடுத்த வாரமே பிரின்ஸிபால் ஸ்கூலுக்கு வந்து இருக்காரா என்று விசாரித்துக் கொண்டு வன ஜா ஸ்கூலுக்குப் போய் பிரின்ஸிபால் தனியாக இருக்கும் போது ராகவன் சொன்னது போல துக்கம் மேலிட அழுகையை வர வழைத்துக் கொண்டு கெஞ்சினாள்.
உடனே அந்த ப்ரின்சிபால் ‘ஜெண்டரை’ மாத்தி, பேரெ சுருக்கி, எல்லாம் நான் பொய் TC தர மாட்டேன், நீங்க போகலாம். சாரி” என்று சொல்லி வனஜாவை வெளியே போக சொன்னார்.
வனஜா விடாமல் “நீங்க கொஞ்சம் யோஜனைப் பண்ணுங்க மேடம். நீங்க ‘TC’ தர மாட்டேன்னு சொன்னா, ஸ்கூல் தொறந்ததும் நான் ராதாகிருஷ்ணனை ஸ்கூலுக்கும் அனுப்ப முடியாதே. நல்லா படிச்சு வர ராதாகிருஷ்ணன் வீட்டிலேயே மக்க வேண்டி இருக்குமே, அவன் ஸ்கூல்க்கு வரலையே ன்னு அவன் ‘ப்ரெண்ட்ஸ்’ வீட்டுக்கு வந்து கேப்பாங்களே. அப்ப அவன் ‘சமாசாரம்’ அவன் ‘ப்ரெண்ட்ஸ்’ எல்லோருக்கும் தெரிய வரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அவன் ‘சமாசாரம்’ தெரிய வரும். அவமானத்தாலே ராதாகிருஷ்ணன் அழுதுக் கொண்டு இருப்பதை நானும், எங்க வீட்டுக்காரரும் எத்தனை நாளைக்கு மேடம் பார்த்துக் கிட்டு இருந்து வெந்து, வெந்து சாவது. நீங்க மட்டும் கொஞ்ச பெரி ய மனசு வச்சு இந்த ‘ஹெல்ப்பை’ப் பண்ணுங்க. நீங்களும் என்னைப் போல ஒரு பெண்மணி தானே மேடம்.இந்த உலகத்திலே என் பையனுக்கு ஏற்பட்டு இருக்கும் ‘உடல் கோளாறு’ உள்ள பெண்கள் படும் ‘கேவலம்’ உங்களுக்குத் தெரியாதா.என் பையனும் அந்த மாதிரி ‘கேவலப் பட்டு‘ கஷ்டப் பட வேணாமே ‘மேடம்’ கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்று சொல்லி அழுதாள் வனஜா.
கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணீன ப்ரின்ஸிபால் “நீங்க இப்ப வீட்டுக்குப் போங்க.உங்க ‘டெலிபோன்’ நம்பரைக் என்னுடைய ‘செக்கரட்டரிக் கிட்டே கொடுத்துட்டு போங்க. நான் யோஜனைப் பண்ணி விட்டு சொல்றேன்”என்று சொல்லி வனஜாவை அனுப்பினாள்.
”மேடம், தயவு செஞ்சி நல்ல பதிலாச் சொல்லுங்க”என்று தன் கையைக் கூப்பி கண்களில் கண்ணீர் மல்க சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தாள் வனஜா.
ரெண்டு நாள் யோஜனைப் பண்ணி விட்டு பிரின்ஸிபால் பரிதாபப் பட்டு வனஜாவை போனில் கூப்பிட்டு ”மேடம், உங்க கணவரை வர திங்கக் கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு என் ரூமுக்கு, வந்து TC யை வாங்கிக் கிட்டு போவச் சொல்லுங்க.ஆனா இந்த விஷயம் ரொம்ப ‘கான்பிடென்ஷியலா’ இருக்கணும். யார் கிட்டேயும் இதை பத்தி மூச்சு விடாதீங்க” என்று கண்டிப்புடன் சொன்னார்.
உடனே வனஜா ”ரொம்ப தாங்ஸ் மேடம்,இந்த பெரிய உதவியை நாங்க மூனு பேரும் என்னைக் கும் மறக்க மாட்டோம்.நீங்க சொன்னா மாதிரி என் கணவரை நான் வர திங்கக் கிழமை சாயங்காலமா உங்க ரூமுக்கு வந்து TC யை வாங்கிக்க சொல்கிறேன்” என்று சொல்லி போனைக் ‘கட்’ பண்ணி னாள் வனஜா.
ராகவன் சாயங்காலம் வீட்டுக்கு வந்ததும் பிரின்சிபால் சொன்ன விஷயத்தைச் சொன்னாள் வனஜா.ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை.
ராகவன் அடுத்த திங்கட்கிழமை சாயங்காலம் ஆறு மணிக்கு மேல் பிரின்ஸிபால் ரூமுக்குப் போய் பிரின்ஸிபால் கொடுத்த TC யை வாங்கிக் கொண்டு,அவருக்கு கண்களில் கண்ணீர் தளும்ப தன் நன்றியைச் சொல்லி விட்டு வந்தார்.
உடனே அந்த பிரின்ஸிபால் ”இந்த TC விஷயம் ரொம்ப ‘கான்பிடென்ஷியலா’ இருக்கணும். யார் கிட்டேயும் இதைப் பத்தி பேசவே பேசாதீங்க” என்று எச்சரிக்கை செய்தாள்.”ரொம்ப ‘தாங்க்ஸ்’ மேடம்.நாங்க யார் கிட்டேயும் இதை சொல்ல மாட்டோம்” என்று தன் கையைக் கூப்பி சொல்லி விட்டு வந்தார் ராகவன்.
வீட்டுக்கு வந்த ராகவன் வனஜாவிடம் பிரின்ஸிபால் கொடுத்த TC யைக் காட்டினார். இருவ ரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.
அடுத்த வாரமே ராகவன் மேலிடத்துக்குச் சொல்லி தனக்கு நாக்பூருக்கு மாற்றல் வாங்கி தன் குடும்பத்துடன் நாக்பூர் வந்து விட்டார்.
நாக்பூரில் கோடை விடுமுறை முடிந்ததும் வனஜா ராதாகிருஷ்ணனுக்கு சூரிதார் கமீஸ் ‘டிரஸ்’ போட்டு விட்டு “ராதா,இனிமே யார் கேட்டாலும் உன் பேர் ‘ராதா’ன்னு சொல்லு,தெரியுதா” என்று தன் கண்களில் நீர் தளும்ப சொல்லி விட்டு,அவனை தன் கணவனோடு அனுப்பி அருகே இருந்த பெண் கள் பள்ளிக்கூடத்தில் ‘டொனேஷன்’ கொடுத்து, ஒன்பதாவது ‘க்லாஸில்’ சேர்த்து விட்டாள்.
‘ப்லஸ் டூவில்’ க்லாஸில் ‘ராதா’ ஸ்கூல் ‘பஸ்ட்டாக’ பாஸ் பண்ணினாள்.
ராகவன் ‘டொனேஷன்’ கொடுத்து நாக்பூர் ‘மெடிக்கல்’ காலேஜில் ஒரு சீட் வாங்கி ராதாவைச் சேர்த்தார்.’ராதா’ நாலு வருஷம் கழித்து MBBS படிப்பு முடித்து விட்டு,MD படிப்புக்கு சேர்ந்தாள்.
MD ‘பாஸ்’ பண்ணினவுடன் நாக்பூர் ‘மெடிக்கல் ஹாஸ்பிடலில்’ வேலைக்கு சேர்ந்து வேலைப் பண்ணி வர ஆரம்பித்தாள் ‘ராதா’.
பத்து வருஷ வடக்கில் வேலை செய்து வந்த ராகவன் தனக்கு ‘சீப் மானேஜர்’ பதவி கிடைத்த தும் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து சென்னை பாங்கில் ஒரு பெரிய கிளையில் ‘சீப் மானேஜராக’ வேலைக்கு சேர்ந்தார்.
‘ராதா’வுக்கு ரொம்ப நாளாக தான் ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’ ஆரமபித்து அதிலே நிறைய ஏழைக ளுக்கு இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்டு வந்தாள்.
தன் ஆசையை ‘ராதா’ தன் அம்மாவிடம் அப்பாவிடமும் சொன்னாள்.
ராகவனும் வனஜாவும் ‘தங்கள் வயித்லே பொறந்த ஒரே குழந்தைக்கு வாழ்க்கைலே ஒரு கல்யாணம், கணவன், கார்த்தி, குழந்தைன்னு ஒன்னும் இல்லாம போயிட்டது.அவ ஆசைப் பட்ட இந்த ஒன் னையாவது ‘அவளு’க்கு ஏற்படுத்திக் கொடுத்து,’அவ’ ஆசையை பூர்த்திப் பண்ணி வைக்கலாம்’ என்று முடிவு பண்ணினார்கள்.
அடுத்த மாதமே ராகவன் தன் பாங்கில் இருபது லக்ஷ ரூபாய் ‘லோன்’ வாங்கி,ஒரு அஞ்சு ரூம் ‘ப்லாட்டை’ வாடகைக்கு எடுத்து,அதில் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ வேண்டிய எல்லா ‘மெடிக்கல்’ சாதன ங்களையும் வாங்கிக் கொடுத்து,ஒரு நல்ல நாள் பார்த்து,வாத்தியாரை வர வழைத்து “ராதா நர்ஸிங்க் ஹோம்” என்கிற ‘நர்ஸிங்க் ஹோமை’த் திறந்து வைத்தார்.
தங்கள் வீட்டில் இருந்து ‘நர்ஸிங்க் ஹோம்’ போய் வர ‘ராதா’வுக்கு ஒரு சின்ன காரையும் வாங்கி க் கொடுத்தார்.’ராதா’ ரொம்ப சந்தோஷப் பட்டு ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’வந்த வியாதிஸ்தர்களை மிகவும் பரிவோடு கவனித்து வந்து ரொம்ப ஏழைகளுக்கு தன்னிடம் இருந்த மாத்திரைகளையும் இலவசமாகக் கொடுத்து வந்தாள்.
ஒரு நாள் ‘ராதா’ காலையிலே தன் காரில் ‘நர்ஸிங்க் ஹோம்’ வந்துக் கொண்டு இருக்கும் போது ஒரு பஸ் ‘ஸ்டாண்ட்டி’ல் ஒரு வயதான அம்மாவும்,ஒரு இளம் பெண்ணும் நின்றுக் கொண்டு இருந்ததார்கள்.
‘சிக்னலில்’ காரை நிறுத்தி இருந்த ‘ராதா’,அவர்கள் இருவரையும் கவனித்தாள்.
‘சிக்னல்’ கிடைத்ததும் தன் காரை ஓட்டி வந்து ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணினாள் ‘ராதா’.
பிறகு தைரியத்தை வர வழைத்துக் கொண்டு காரை விட்டு கிழே இறங்கி வந்து அந்த அம்மா கிட்டே வந்து “மேடம்,நீங்க மேனகா உயர் நிலைப் பள்ளி ‘ப்ரின்ஸிபால்’ சாரதா மேடம் தானே” என்று கேட்டு விட்டு தன் ‘கூலிங்க் க்ளாஸை’ கழட்டினாள்.
தன்னைக் கேட்ட பெண்ணைப் பார்த்து ஆச்சரியமாகப் பார்த்தாள் சாரதா.
பிறகு ”ஆமாம்மா.நான் பழைய ‘பிரின்சிபால்’ சாரதா மேடம் தாம்மா.நீ யாரு.உன் பேர் என்ன” என்று கேட்டாள் சாரதா.
உடனே ‘ராதா’, “என் பேர் ராதா தான்.என்னோடு வாங்க மேடம் நான் விவரமா சொல்றேன்”என் று சொல்லி சாரதா மேடத்தையும்,அந்த இளம் பெண்ணையும் தன் காரில் ஏற்றிக் கொண்டு அருகில் இருந்த ஒரு ‘காபி டே’வுக்கு அழைத்துப் போய்,மூனு பேருக்கும் ‘காபி’யும், ’கட்லெட்டு’ம் ஆர்டர் பண்ணினாள்.
‘ராதா’ ‘கடவுளை’ சந்தித்த சந்தோஷத்தை அடைந்தாள்.
ஐஞ்சு நிமிஷத்துக்கு எல்லாம் சர்வர் மூனு ‘ப்லேட்’ ‘கட்லெட்டை’ கொண்டு வந்து அவர்கள் உட்கார்ந்துக் கொண்டு இருந்த ‘டேபிள்’ மேலே வைத்தான்.
‘ராதா’ தன் கண்களில் கண்ணீர் மல்க “மேடம்,நீங்க மட்டும் என் அம்மா கேட்டா மாதிரி என் TC யைத் தராம இருந்தா,இன்னைக்கு நான் ஒரு டாக்டரா ஆகி,ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’ நடத்தி வர முடிஞ்சு இருக்காது. என் அம்மாவும்,அப்பாவும் திருப்பதி போய் விட்டு வீடு திரும்பி வரும் போது,ஒரு கார் விபத்திலே இறந்துப் போயிட்டாங்க” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் கை குட்டையால் துடைத்துக் கொண்டாள்.
கண்களைத் துடைத்துக் கொண்டே, ”அவங்க உயிரோடு இருந்த ஒவ்வொரு நாளும் உங்களைப் பத்தி சொல்லி,உங்களைத் ‘தாங்க்’ பண்ணாத நாளே இல்லை மேடம்.
என்னைக்காவது ஒரு நாள் உங்களை சந்திச்சு, நீங்க பண்ண இவ்வளவு ‘பெரிய உதவிக்கு’ எப்படியாவது ‘கைம்மாறு’ பண்ணனும் ன்னு சொல்லிக் கிட்டு இருந்தாங்க. அவங்க ரொம்ப வருத்தப் பட்டு கிட்டு இருந்தாங்க.அவங்க உங்க ளுக்கு ‘கைம்மாறு’ பண்றதுக்கு முன்னாடி இறந்துப் போயிட்டாங்க.நீங்க எனக்கு ஒரு நடமாடும் தெய்வம் மேடம்” என்று சொல்லி அந்த வயதான அம்மாவின் கால்களைத் தொட்டு தன் கண்களில் ஒத்திக் கொண்டாள் ‘ராதா’.
‘ராதா’ சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தார் சாரதா..
கொஞ்ச நேரம் ஆனதும் “நீ தான் அந்த ‘ராதாவா’.எனக்கு கேக்க ரொம்ப சந்தோஷமா இரு க்கு. உன் அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்திலே இறந்து போயிட்டாங்களா. எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ‘ராதா’.நீ இப்போ ஒரு பெரிய டாக்டராகி ஒரு ‘நர்ஸிங்க் ஹோம்’ நடத்தி வரயா” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் சாரதா.
‘ராதா’ சாரதா மேடத்தை கவனித்தாள்.
அந்த அம்மா தலை மயிர் எல்லாம் நரைத்து நெத்தியில் விபூதி இட்டுக் கொண்டு இருந்தாள்.
‘ராதா’ தன் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போன் பண்ணி தன்னுடைய ‘அஸிஸ்டென்ட்’ டாக்டரிடம் ‘தான் ‘நர்ஸிங்க் ஹோம்’ வர கொஞ்சம் லேட்டாகும்’ என்று சொன்னாள்.
‘ராதா’ ”ஆமாம் மேடம்.நான் கேக்கறேன்னு நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.நீங்க இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்க கூட இருக்கிறது உங்க பொண்ணா.இந்தப் பொண்ணுக்கு இப்போ அவங்க அப்பா இல்லையா மேடம்” என்று கேட்டாள்.
சாரதா தன் கண்களில் கண்ணீர் மல்க “பத்து வருஷம் முன்னாலே அவர் ஆபீஸ் போகும் போது ஒரு ஸ்கூட்டர் விபத்திலே இறந்துப் போயிட்டாரு ‘ராதா’.அவர் இறந்துப் போய் ஆறு வருஷம் ஆனவுடனே என் பையன் ஒரு கிருஸ்தவ பெண்ணை காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக் கொள்ளணும்ன்னு பிடிவாதம் பிடிச்சான்.நான் அவன் கிட்டே ‘இதோ பாருடா,நீ ஒரு கிருஸ்தவ பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டா,அப்புறமா லதாவே நம்ப ஜாதியிலே யாரும் கல்யாணமே பண்ணிக்கமாட்டாங்க. இந்தக் கிருஸ்தவ பொண்ணு வேணாம்டா ’ன்னு சொல்லி கெஞ்சினேன்” என்று சொல்லி விட்டுத் கண்களைத் துடைத்துக் கொண்டான்..
கொஞ்ச நேரம் ஆனதும் “ஆனா அவன் என் பேச்சைக் கேக்காம அந்தக் கிருஸ்தவ பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கிட்டு, எங்களை விட்டுட்டு தனிக் குடித்தனம் போயிட்டான். அவனுக்கும் லதாவுக்கும் பதினோரு வருஷ வித்தியாசம்.நான் ‘ரிடையர்’ஆகி ஐஞ்சு வருஷம் ஆவுது. நான் ‘சர்விஸிலே’ இருந்து வந்த போது என் சம்பளத்லே லதாவை படிக்க வச்சேன். இப்பவும் என் வீட்டிலே நான் பத்தாவது பையன்களுக்கு கணக்கு டியூஷன் எடுத்துக் கிட்டு வரேன். இந்த வருஷம் தான் லதா BSc படிச்சு முடிச்சா. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இவளுக்கு,அவருக்கு தெரிஞ்ச ஒரு கம்பனிலே வேலை வாங்கித் தரதா சொல்லி இருந்தாரு.நானும் லதாவும் அங்கே தான் போய்க் கிட்டு இருக்கோம்” என்று சொன்னாள்.
உடனே ‘ராதா’, “மேடம், லதா எங்கேயும் வேலைக்குப் போக வேணாம். லதாவை நான் என் ‘நர்ஸி ங்க் ஹோமிலேயே’ ஒரு ‘ரிஸப்ஷனிஸ்ட்டா’ வேலைக்குச் சேத்துக் கொள்றேன். பாண்டி பஜார்லே எனக்கு ஒரு மூனு பெட் ரூம் ‘ப்லாட்’ இருக்கு. சமையலுக்கு நான் ஒரு சமையல் கார அம்மாவை வேலைக்கு வச்சு இருக்கேன். அவ்வளவு பெரிய ‘ப்லாட்லே’ நான் தனியா இருந்துக்கிட்டு வறேன். நீங்க இப்ப இருக்கிற வீட்டை காலி பண்ணிட்டு எனக்குத் துணையாக லதாவுடன் என்னுடனேயே இருந்து வாங்க. கொஞ்ச மாசம் போனதும் நீங்க பார்க்கிற ஒரு நல்ல பையனுக்கு லதாவை என் செலவிலேயே கல்யாணம் பண்ணித் தறேன். நீங்க என் ‘ப்லாட்லே’ உங்க ‘டியூஷனை’ எடுத்துக்கிட்டு வாங்க. உங்க ரெண்டு பேருக்கும் இந்த உதவியை நான் பண்ணி, நீங்க செய்த ‘மாபெரும் உதவி’க்கு ஒரு ‘கைம்மாறு’ பண்ண எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க மேடம். எனக்கு இந்த உலகத்லே யாரும் கிடை யாது.தயவு செஞ்சி மறுக்காதீங்க மேடம்” என்று சொல்லி ‘ராதா’ மறுபடியும் சாரதா காலில் விழுந்துக் கேட்டாள்.
கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணின சாரதா “வேண்டாம்மா, நான் உன் கூட எல்லாம் இருந்து வந்து உனக்கு தொந்தரவு குடுக்க விரும்பலே.நான் இருக்கும் இடத்திலேயே இருந்து வறேன்” என்று சொன்னாள்.
ராதா தன் கண்களில் கண்ணீர் தளும்ப “மேடம்,நல்லா யோஜனைப் பண்ணுங்க.அன்னைக்கு மட்டும் நீங்க எனக்கு ‘அந்த மாதிரி’ ஒரு ‘சர்டிபிகேட்’ தராம இருந்தா, நான் எப்படி,எந்த ஸ்கூல்லே சேந்து படிச்சு இருக்க முடியும்.என்னுடைய இந்த ‘அங்க ஹீனத்தை’ மறைச்சு,நான் இந்த உலகத்லே கண்ணியமா ஒரு டாக்டரா வாழ்ந்து வர முடிஞ்சி இருக்கும் சொல்லுங்க.உங்களுக்கு ‘கைம்மாறு’ பண்ண எனக்கு ஒரு சந்தர்ப்பம் நீங்க குடுக்கக் கூடாதா.நான் உங்களுக்கு ‘கைம்மாறு’ பண்றதாலே அகாலமா மறைஞ்ச, என் அம்மா அப்பா ஆதமா சாந்தி அடையுமே மேடம்.தயவு செஞ்சி என் கூட வந்து தங்கினா, உங்களுக்குத் துணையா நானும்,எனக்குத் துணையா நீங்களும் இருந்து வரலாமே” என்று கெஞ்சினாள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்த லதா ”அம்மா, எனக்குக் கல்யாணம் ஆகி நான் எங்கோ தூரப் போயிட்டா உன்னை என்னால் கவனிச்சுக்க முடியாதும்மா. சேகரும் உன்னை விட்டுட்டுப் போயிட்டான். நான் என் கல்யாணம் ஆன பிறவு நீ தனியா வாழ்ந்து வர வேண்டிய ‘வாழ்க் கையை’ பல நாள் யோஜனைப் பண்ணி வந்து இருக்கேமேம்மா. அதெ நினைச்சு நான் கல்யாணமே பண்ணிக்காம இருக்கலாமான்னு கூட யோஜனைப் பண்ணி கிட்டு இருந்தேன்.’நாம கல்யாணம் பண்ணிக் கிட்டுப் போனா,அம்மா பாவம் தனியா இருந்து வரணுமேமன்னு கவலைப் படுக் கிட்டு இருந்தேன்.இப்போ உன்னே கடைசி காலம் வரை கவனிச்சு வற இவங்க கிடைச்சு இருக்காங்க.
இப்போ நானும் நிம்மதியா கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியும்மா.அவங்க சொல்றதைக் கேட்டு, நீங்க இவங்க கூட ஒரு கஷ்டமும் இல்லாம இருந்து வாங்க. சரின்னு சொல்லுங்கம்மா” என்று அம்மாவின் கையைப் பிடித்து கெஞ்சினாள் லதா.
லதா சொன்னதைக் கேட்ட சாரதா ‘சேகரோ நம்மோடு இனிமே வந்து இருக்கப் போறது இல்லேன்னு ஆயிடுச்சி.நாம ராதாவோட போக மாட்டேன்ன்னு பிடிவாதம் பிடிச்சா லதா கல்யாணமே பண்ணிக்க மாட்டா போல இருக்கே.லதா கல்யாணம் பண்ணிகிட்டு,அவ குழந்தை குட்டிகளோடு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு வரணும்.கடவுளா பார்த்து நமக்கு ஒரு நல்ல துணையைக் காட்டி இருக்கார். இதை நாம் ஏன் மறுக்கணும்’ என்று நினைத்து ராதாவைப் பார்த்து “சரி ராதா,நான் உன்னோடு வந்து இருக்கேன்” என்று ஒத்துக் கொண்டாள்.
ராதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை சாரதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதுக் கொண்டே தன் நன்றியைச் சொன்னாள்.
உடனே ராதா அவர்கள் தன் காரிலேயே தன் ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ அழைத்துப் போய் லதா வை அங்கே வேலை செய்து வரும் ‘ரிசப்ஷனிஸ்ட்’இடம் கொண்டுப் போய் விட்டு “இவங்களுக்கு ‘ரிசப்ஷனிஸ்ட்’ வேலை சொல்லிக் கொடுங்க.இவங்க பேர் லதா.இன்னியிலே இருந்து இவங்க இங்கே உங்களுக்கு ‘அஸிஸ்டெண்டா’ வேலை செஞ்சு வரட்டும்”என்று சொல்லி விட்டு சாரதா மேடத்தை தன் ரூமுக்கு அழைத்துப் போனாள்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு சாரதாவை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டாள்.
ரெண்டு வாரம் ஆனதும் சாரதா தன் வீட்டில் இருந்த சாமான்களை எல்லாம் விற்று விட்டு லதாவுடன்,தங்கள் துணி மணிகளை எடுத்துக் கொண்டு ‘ராதா’ ‘ப்லாட்டுக்கு’ வந்து விட்டாள்
ரெண்டு வருஷம் ஆனதும் சாரதா தன்னுடைய உறவுக்கார பையன் ஒருவனுக்கு லதாவை நிச்சியம் பண்ணினாள். ‘ராதா’ லதா கல்யாணத்தை தன் செலவிலேயே பண்ணி முடித்தாள்.
சாரதாவை சந்தோஷமாக வைத்துக் கொண்டு வந்தாள் ‘ராதா’
சாரதா காலம் முடிந்ததும் அவளுக்கு ‘இறுதி சடங்குகளை’ எல்லாம் செய்து முடித்தாள் ‘ராதா’.
அன்று ஒரு நாள் தன் ‘அங்கஹீனத்தை’ மறைக்க உதவி பண்ண ‘தெய்வத்துக்கு’ ஒரு நல்ல வாழக்கையை அமைத்துக் கொடுத்து, அவங்க பெண்ணுக்கும் நல்ல விதமா கல்யாணம் பண்ணிக் கொடுத்து, தன் ‘நன்றிக் கடனை’ நல்ல விதமா செலுத்த வைத்த கடவுளுக்கு தன் நன்றியை மனதார சொன்னாள் ‘ராதா’.
தன் அம்மா அப்பா ஆசைப் பட்டதையும் செய்து முடித்த திருப்தியுடன், நிறைய ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பண்ணிக் கொண்டு தன் காலத்தை கழித்து வந்தாள் டாக்டர் ‘ராதா’.