பெருந்திணைக் காமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 11,403 
 
 

கதிரேசன் பூச்சிமருந்து குடித்துவிட்ட செய்தி எனக குத் தெரிந்தபோது வானம் கருத்து விண் மீன்கள் பூத்திருந்தன. நிலா வெளிச்சம் கடல் நீரின்வெண்மைபோலப் படர்ந்திருந்தது. சித்திரை மாதத்துக் கோடையின் அனல் காற்று பு ழு க்கத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது. நிறமற்ற ரத்தம்போல் வியர்வைத் துளிகள் வழிந்தன. என் இதயப் படபடப்பும் மூச்சுக காற்றின் சத்தமும் அந்த இடத்தின் மௌனத்தைச் சிதறடித்தன. உறக்கத்திலிருந்து விடுபட்டிருந்தாலும், அது ஒருவேளை கனவோ என நினைத்தேன். கனவாகவே இருந்துவிடக கூடாதா என்று விரும்பியபடியே படுக கையைவிட்டு எழுந்துவெளியில் பார்த்தேன். தெருவே ஆள் நடமாட்டமற்றுக் கிடந்தது. தெருமுனையில் மின்கம்பத்தின் அருகில் இரண்டு நாய்கள் படுத்திருந்தன.

கதிரேசன் கடைசியில் அப்படிச் செய்துவிட்டானே என்ற ஆதங்கத்தோடு நடக கத் தொடங்கினேன். என் நிழல் நாய்க்குட்டியைப் போலப் பின்தொடர்ந்தது. அந்த நிசப்த வெளியில் என் செருப்புச் சத்தம் ஓநாயின் உறுமலாய் மாறி மனக் கலக்கத்தை ஏற்படுத்தியது.

அடுத்த தெருவிற்குள் நான் நுழைந்தபோது கதிரேசன் வீட்டு முன்னால்பெரிய கூட்டமே கூடியிருந்தது. கூட்டத்தை விலக்கிக கொண்டு நான் வீட்டிற்குள் நுழைந்தபோது புளித்த சாராயத்தின் வீச்சமும் பூச்சி மருந்தின் நெடியும் மூக கைத் துளைத்தன. வீட்டின் நடு அறையில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் கதிரேசனைக் கிடத்தியிருந்தார்கள். அவன் எடுத்திருந்த வாந்தி வழிந்து காதுகளின் பக கமாய் இறங்கிக் கழுத்து, சட்டை எனப் பரவிக்கிடந்தது. அந்த நேரத்திலும் ஈக கள் வாந்தியை மொய்த்துக்கொண்டிருந்தன.

கதிரேசன் மயக்கத்திலிருந்தான். கயிற்றுக் கட்டிலின் கீழ்ப்புறத்தில் மண்டியிட்டபடி “டே சாமி . . . என்னப் பெத்த ராசா . . . அம்மாவெக் கண்தொறந்து பாருடா” என்று நெஞ்சில் அடித்துக கொண்டு அவனுடைய அம்மா அழுதாள். அம்மாவின் பக கத்தில் நின்றுகொண்டு, அவன் தம்பியும் அழுதவாறிருந்தான். அவர்களின் அழுகையைக கண்டு சுற்றியிருந்த பெண்களுக கும் அழுகை வரச் சேலை முந்தானையால் துடைத்தபடி, ஆறுதல் சொல்லிக கொண்டிருந்தார்கள்.

கதிரேசனின் அப்பா வீட்டிற் கும் வீதிக கும் பரபரப்புடன் நடந்துகொண்டிருந்தார். எதையோ எதிர்பார்த்துக காத்திருந்த தவிப்பும் படபடப்பும் அவர் கண்களில் தெரிந்தன.

அந்தச சூழ நிலையின் இ றுக கம் தாளாமல், வெளியே வந்து தெருவில் நின்றேன். அப்போது சைரன் சத்தத்தோடும் இருளைக கிழித்த வெளிச்சத்தோடும் புழுதியைக கிளப்பியவாறு வந்த ஆம்புலன்ஸ் கதிரேசனின் வீட்டு முன்னால் நின்றது. கதவைத திறந்து வெளிப்பட்ட டிரைவர்

“சீக கிரமாத் தூக கிட்டு வாங்க” என்று அவசரப்படுத்தினான். கதிரேசனைத் தூக கி ஸ்ட்ரெச்சரில் போட்டு, ஆம்புலன்ஸுக்குள் எடுத்து வைத்தார்கள். அவசர கதியில் கதிரேசனின் அம்மாவும் அப்பாவும் மாமாவும் ஏறிக கொள்ள வேன் பெரும் சத்தத்தோடு சென்றது.

கதிரேசனின் வீட்டு முன்னால் கூடியிருந்தவர்கள் கலைந்து செல்ல மனமில்லாமல், அவனது தற்கொலை முயற்சியைப் பற்றி அவரவர் போக்கில் அலசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் அவன் தற்கொலைக்கான பின்புலம் பொதுவாகத் தெரிந்துதானிருந்தது. அவற்றைப்பொருட்படுத்தாமல், நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன்.

* * *

பதினொன்றாம் வகுப்பிலிருந்து நாங்கள் இணைபிரியாத நண்பர்கள். பள்ளிக்கூடத்தில் மட்டுமல்லாது வீதி, விளையாட்டுத் திடல், பள்ளிக குப் போகும் பேருந்து என எங்கும் ஒன்றாகவே திரிந்தோம். அதிலும் பேருந்தின்

படிகளில் தொங்கிக கொண்டு செல்வதிலும் பேருந்தில் வரும்பெண்பிள்ளைகளைப் பார்த்து ரசிப்பதிலும் எங்கள் இருவருக கும் அதிக விருப்பம். எங்கள் ஊருக கும் பள்ளிக கூடத்துக்கும் இடையே பத்து மைல் தூரம் என்பதால், வழியில் உள்ள கிராமங்களிலிருந்து நிறையப் பேர் ஏறுவதும் இறங்கிச் செல்வதும் வழக கம். அவர்களில் பக கத்துக் கிராமத்திலிருந்து ஏறும் கல்பனாவின் மீது எங்களுக்கு அளவற்ற பிரியம்.

நீண்ட கூந்தலுடன் தலைநிறையப் பூ வைத்திருப்பாள். அளவான குங்குமப்பொட்டுக்குக் கீழே விபூதிக் கீற்று தெரியும். மாநிறம்தானென்றாலும் களையான முகம். அதில் சிவப்புக்கல் மூக்குத்தி அவள் அழகுக்கு மேலும் மெருகூட்டியது. வசீகரமான சிரிப்பு அவள் உடம்பின் வனப்பை எடுப்பாக்கியது. உயரத்தில் மட்டும்தான் சற்றுக் குறைவாகத் தெறிந்தாள். வலது தோளில் கருப்பு நிறப் பையை மாட்டிக கொண்டு இடது கையில் தன பையனைப் பிடித்தவாறு பேருந்தில் ஏறுவாள்.

அவளது வருகைக காவே காத்திருக்கும் நாங்கள் அன்று அவள் எந்தக் கலரில் சேலை உடுத்தி வருவாள் என்றெல்லாம் பேசிக கொண்டு, அவளைப் பார்த்து ரசித்தபடியே வருவோம். ஒருமுறையாவது அவளிடம் பேசிவிடமாட்டோமா என்று ஏங்கினோம்.

ஒரு நாள் காலையில் “தம்பி நீங்கள்லாம் என்ன படிக கிறீங்க?” என்று கேட்டபடியே நாங்களிருந்த கடைசி இருக கைக்கு வந்தாள். அவளது வருகையைச் சற்றும் எதிர்பார்த்திராத நாங்கள் இன்ப அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தோம். அவளோ சினேகமான புன்னகையோடு தன்னைப் பற்றிய விபரங்களைச் சொன்னாள்.

அடுத்த ஞாற்றுக கிழமை தான் வேலைபார்க கும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒரு பேரணியும் பொதுக கூட்டமும் நடைபெறவிருப்பதாகவும் அதற்காகத் தன் சார்பில் இருபது பேரையாவது கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் விடுமுறை நாள் என்பதால் இவர்கள் வர முடியுமா என்றும் கேட்டாள். மதியச் சாப்பாட்டோடு ஐம்பது ரூபாயும் வாங்கித தருவதாகச் சொன்னாள். அவளுடன் பேசிப் பழக அது நல்ல சந்தர்ப பம் என்பதால் எங்களோடு பல நண்பர்களும் வரச் சம்மதித்தார்கள்.

விழாவில் கதிரேசன் காட்டிய ஈடுபாட்டாலும் கல்பனாவின் வேலைகளை எல்லாம் அவன் இழுத்துப் போட்டுக கொண்டு செய்ததாலும் அவளுக்குக் கதிரேசனை மிகவும் பிடித்துப்போனது. அதற்குப் பின் அவளை எங்கே பார்த்தாலும் கதிரேசன் “அக கா” என்று அழைத்தபடி ஓடிச் சென்று பேசுவதும் அவளும் அவனிடம் சிரித்துப் பேசுவதும் தொடர்ந்தன. கல்பனாவுக்கு இருபத்தைந்து வயதென்றாலும் பார்ப்பதற்கு எங்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் ப்ளஸ் டூ முடித்த பெண்ணைப் போலத்தெரிந்தாள். அவள் கதிரேசனிடம் மட்டும் அதிகம் பிரியம் காட்டியது

என்னையும் மற்ற நண்பர்களையும் அவன்மேல் பொறாமைப்பட வைத்தது. கதிரேசனின் நடவடிக்கைகளில் திடீரெனத் துலக்கமான மாற்றங்கள்தெரிந்தன. பள்ளிக்குச் சில நாட்கள் வராமலும் வந்தாலும் பல நாட்கள் மதியத்தோடு ஓடிவிடுவதுமாக இருந்தான். “எங்கடா போற?” என்று நண்பர்கள் கேட்டால், பெருமை பொங்க “அக கா ஏதோ மீட்டிங்குன்னு வரச் சொன்னாங்க” என்று சொல்லிப் போய்விடுவான். அதுவரை சனி, ஞாயிறுகளில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கதிரேசன் கல்பனாவின் வீட்டிற்குச் செல்லத் தொடங்கினான். நான் கோபத்தோடு “உன் போக கே சரியில்லடா” என்று எச்சரித்துத் திட்டினேன்.

“பாவண்டா கல்பனா அக கா. பத்தாவது படிச்சிட்டிருந்தப்பவே பிரசவத்துல அவுங்க அக கா செத்துப்போனதால அக கா குழைந்தைக்காக அக்கா புருஷனுக்கே இரண்டாம் தாரமாக் கட்டிவச்சுட்டாங்களாம். அந்த ஆள் சரியான குடிகாரனாம். தினமும் குடிச்சுட்டு வந்து ‘அவனோட என்ன

பேசிட்டியிருந்த? அவனுக கும் உனக்கும் என்ன தொடர்பு’ன்னெல்லாம் சந்தேகப்பட்டுக் கண்டபடி அடிப்பானாம். அக காவும் பொறுத்துட்டு அவனோட ரெண்டு பிள்ளைங்களையும் பெத்துக கிட்டாங்களாம். ஆனாலும் ஒரு நாள் வேறெ பொண்ணோட அவன் டெல்லிக கு ஓடிப்போயிட்டானாம். இப்ப வயசான அம்மாவோட மூணு பிள்ளைங்களை வைச்சுக்கிட்டுத் தனியாக் கஷ்டப்படுறாங்கடா” என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே கதிரேசன் அழுதுவிட்டான்.

முதல்முறை கேட்டபோது எனக்கும் கல்பனாவின் மேல் அனுதாபமும் மரியாதையும் ஏற்பட்டன. ஆனால் கல்பனாவின் ஊர்க்காரர்கள் சிலரோ அவளுக கும் சினிமாத் தியேட்டர் மேனேஜருக கும் கள்ளத் தொடர்பு என்றும் அவள் நடத்தை சரியில்லை என்பதால்தான் அவள் கணவனே வேறு பெண்ணோடு ஓடிவிட்டான் என்றும் சொன்னார்கள்.

எனக் கு எதை நம்புவது எனப் பெரிய குழப்பமாய் இருந்தது. நான்கேள்விப்பட்ட விஷயத்தைக் கதிரேசனிடம் சொல்லி எச்சரித்தேன். அவற்றையெல்லாம் அடியோடு மறுத்தவன் அது கல்பனாவின் குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் பரப்பிய வதந்தி என்றான். பின் நண்பர்களுக்குள் கல்பனாவைப் பற்றிய பேச்சு வந்தபோதெல்லாம் அந்த இடத்தைவிட்டேசென்றுவிடுவதைக் கதிரேசன் வழக்கமாக்கிக்கொண்டான்.கதிரேசன் சரியாய்ப் பள்ளிக குப் போகாமல் கல்பனாவின் வீட்டிலேயே கிடந்ததும் அவள் கூடவே சேர்ந்து சுற்றியதும் அவன் வீட்டிற்குத் தெரிந்து அவனுடைய அப்பா கண்டபடி திட்டி னார். அடித்தும்கூடப் பார்த்தார். ஆனாலும் அவள் வீட்டிற்குத் திருட்டுத்தனமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.

ஆரம்பத்தில் கதிரேசன் வீட்டிற்கு வந்தது கல்பனாவின் அம்மாவிற்குச சுத்தமாய்ப் பிடிக கவில்லை. அதற்காகத் தன் மகளிடம் பலமுறை சண்டைபோட்டாளாம். மாலை ஐந்து மணிக்கு மேல் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவன் தன் பேரப் பிள்ளைகளுக குப் பாடம் சொல்லிக்கொடுத்ததையும் சமையல் சாம £ன்கள் தீர்ந்துபோனால் கடைக குப் போய்வாங்கிவந்ததையும் சமையலில் மகளுக கு ஒத்தாசையாகக் காய்கறி,

வெங்காயம் என்று நறுக கிக கொடுத்ததையும் தன்னிடமும் தன் பேரன்களிடமும் அன்பாய் நடந்துகொண்டதையும் பார்த்துக் கதிரேசன் வீட்டிற்கு வருவதை அனுமதித்தாள். ஒரு நாள் போகாமல் விட்டால்கூட “ஏம்பா நேத்து வீட்டுக கு வரலே?” என்று பாசமாய் விசாரிக க ஆரம்பித்தாள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தொடக கத்திலேயே இனிமேல் பள்ளிக குப்போகமாட்டேன் என்றும் வேலைக்குத்தான் போவேன் என்றும் கதிரேசன் அடம்பிடித்தான். மேலும் தன்னைக் கட்டாயப்படுத்திப் பள்ளிக்கு அனுப்பினால் எங்காவது ஓடிவிடுவதாகவும் மிரட்டினான்.

கதிரேசனின் அம்மா அவன் ஜாதகத்தை எடுத்துக கொண்டுபோய்ப்பெத்தாம்பட்டிப் பண்டாரத்திடம் காட்டினாள். “சுட்டுப் போட்டாலும் இந்த ஜாதகக காரனுக குப் படிப்பு ஏறாது. இப்ப ஏழரை நாட்டான் புடிச்சதாலே, அவன் போக குலையே விட்டுடுங்க. இல்லன்னா பையன் உசுருக கே ஆபத்து” என்று பண்டாரம் பயமுறுத்தினாராம்.

ஜாதகம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து கதிரேசன் விசயத்தில் அவன்குடும்பமே தலையிடாமல்தான் இருந்தது. வீட்டாரின் மௌனத்தைத் தனக்குச்சாதகமாய்ப் பயன்படுத்திக கொண்டான் கதிரேசன். கல்பனா வேலைசெய்ததொண்டு நிறுவனத்திலேயே தனக கும் வேலை வேண்டும் என்று அவளை நச்சரித்து ஒரு வேலையையும் வாங்கிக கொண்டான்.

கிராமங்களுக குச் சென்று பெண்களிடம் சிறுசேமிப்புக் குழுக்களை உருவாக்கச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் சேர்த்த பணத்தை வங்கியில் போடவைப்பதும் அவர்களுக கு வங்கியின் மூலம் கடன் வாங்கித் தருவதும் கடன் தொகையை முறையாகக் கட்டுகிறார்களா எனக் கண்காணிப்பதுமே அவர்களின் அன்றாடப் பணியாய் இருந்தது

அக்காலகட்டத்தில் ஞாயிற்றுக கிழமைகளில்தான் என்னால் கதிரேசனைப் பார்க்க முடிந்தது. அப்போதெல்லாம் கதிரேசனை வேட்டி, முழுக்கைச் சட்டையில் பார்க்க முடிந்தது. சிகரெட் பிடிக்கவும் தொடங்கியிருந்தான். கதிரேசன் தனது வேலையைப் பற்றியும் கல்பனாவைப் பற்றியும் பெருமை

பொங்கச் சொல்லுவான். தனக கும் சேர்த்து அவளே தினமும் மதியச் சாப்பாடு எடுத்துவருவதையும் சில நாட்கள் தனக கு அவளே ஊட்டி விடுவாள் என்றும் ஒருமுறை சேலத்திற்கு சினிமாவுக்குப் போனோம் என்றும் மற்றொருமுறை ஏற்காடு போனோம் என்றும் மகிழ்ச்சியோடுசொல்லிக்கொண்டே இருப்பான். ஆனால் எனக குத்தான் அவற்றையெல்லாம் நம்பலாமா வேண்டாமா என்று பெரிய குழப்பமாய் இருந்தது. அனாலும் கதிரேசன் அப்படிச் சொல்லக கேட்பது எனக கு மிகவும் விருப்பமானதாய் இருந்தது. நான் கதிரேசனின் வரவுக்காக எப்போதும் ஆவலோடு காத்திருந்தேன். கல்பனாவின் நட்பு எனக்கும் கிடைக காமல் போய்விட்டதே என்று சில நேரங்களில் வருத்தமாகவும் இருந்தது.

வேலைக குச் சேர்ந்து நான்கு மாதங்களுக குப் பிறகு கதிரேசன் தொடர்ந்து ஒரு வாரம் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தான். “ஏன் வேலைக குப்போகலையா?” என்று கேட்டால், தனக கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லியபடியே சென்றுவிடுவான். வழக கமான கலகலப்பில்லாமல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு, யாரிடமும் சரியாகப் பேசாமல எப்போதும் சிகெரெட் பிடித்தவாறு, தனியாய் நின்றுகொண்டு எதையோ யோசித்தபடியே இருந்தான்.

கதிரேசன் தனியாய் இருந்த சமயம் இவன் “என்ன பிரச்சினைன்னு எங்கிட்ட சொல்லு?” என்று கட்டாயப்படுத்திக கேட்டதற்கு “வேலைக்குச் சேர்ந்ததுலயிருந்தே எனக்கு மேனேஜரோட நடத்தையே புடிக்கலடா. அங்க வேலைசெய்யற பெண்கள்கிட்ட அவன் நடந்துக்கறதும் சரியில்ல. அதுலயும் கல்பனாகிட்ட அவன் ரொம்ப உரிமையெடுத்துட்டு அத்துமீறி நடந்துக்கறான். கல்பனாகிட்டயும் அதைச் சொன்னேன். மேனேஜரையும் வார்ன் பண்ணிட்டேன்” என்று சொன்னான்.

மேனேஜர் விஷயத்தில் கதிரேசன் நடந்துகொண்ட விதம் கல்பனாவுக்கு எரிச்சலைத் தூண்டியதாம். தன் நடத்தையைப் பற்றி எச்சரிக்கவும் தான் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்க அவன் யார் என்று சண்டையிட்டாளாம். அந்தச் சண்டையால்தான் அவளோடு பேசாமல் ஒரு வாரமாய் வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே அடங்கியிருந்திருக்கிறான்.

“அவள் எப்படியோ போகிறாள், அவளை மறந்துவிட்டு இனி ஒழுங்காய்வேறு வேலையைப் பார்த்துக கொள்” என்று நான் சொன்னபோது, “என்னால அவளை மறக்க முடியாதுடா. நான் அவளை உயிருக்குயிராக் காதலிக்கிறேண்டா. அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேண்டா” என்று வசனம் பேசினான்.

கதிரேசனின் பதில் எனக்கு முதலில் அதிர்ச்சியாயிருந்தாலும், அவர்கள் உறவு அப்படி ஏதாவது சிக்கலில்தான் போய் முடியும் என ஏற்கனவே ஓரளவு ஊகித்திருந்ததால் அதிகம் பதற்றப்படாமல், “உன்னவிட ஏழெட்டு வயசு மூத்தவளைக் காதலிக்கறேங்றதும் அவளுக்கு ஏற்கனவே மூணு குழந்தைங்க இருக்கும்போது அவளையே கல்யாணமும் பண்ணிக்குவேங்கறதும் மடத்தனம்” என்றெல்லாம் கண்டபடி திட்டினேன். ஆனாலும் கதிரேசன் பைத்தியம் பிடித்தவன்போலத் தன் எண்ணத்திலேயே பிடிவாதமாய் இருந்தான்.

அடுத்த ஞாயிற்றுக கிழமை மாலை கல்பனாவின் அக்கா பையன் கதிரேசனைத் தேடிக கொண்டு எங்கள் கிராமத்திற்கே வந்துவிட்டான். “உங்களை அம்மா கையோடக் கூட்டி வரச் சொன்னாங்க. நீங்க வரலைன்னா அம்மாவே வருவாங்களாம்” என்று சொல்லி அழைத்தான்.

முதலில் கொஞ்சம் முரண்டுபிடித்தவன், பையனின் கட்டாயத்தால் அவனோடு சென்றான். கல்பனா அவனுக்குப் பிடித்தமான மீன் குழம்புச் சாப்பாடு போட்டு தன்மேலிருந்த கோபம் போய்விட்டதென்றால் சாப்பிடச் சொன்னாளாம். அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதே, அவன் கோபம் நியாயமானதுதான், இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் என்றாலும் வயதாலும் உடம்பாலும் இளையவளான தனக்கு இயற்கையாகவுள்ள வேட்கையை அவன்புரிந்துகொள்ள வேண்டும் எனப் பக்குவமாய்ச் சொல்லியிருக்கிறாள்.

“அப்படின்னா நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாமல்ல?” என்று கதிரேசன் கேட்டிருக்கிறான். அதற்கு அவள் “மூணு குழந்தைகளோட என்னை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க? அப்படியே யாராவது என்னைக் கல்யாணம் செஞ்சிக்கிட்டாலும் எனக்குப் புருசன் கிடைப்பாரு. ஆனா என் குழந்தைங்களுக்கு நல்ல அப்பா கிடைக்கமாட்டாரு” என்றாளாம்.

அப்படிப்பட்ட சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவன்போல, “நான் உன்னைக் காதலிக கிறேன். கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படறேன். உன்னையும் உன் குழந்தைங்களையும் நல்லாப் பாத்துக்குவேன். உங்கம்மாவுக்குக்கூட என்னை ரொம்பப் புடிக்கும்” என்று கதிரேசன் உருக்கமாகப் பேசியிருக்கிறான்.

கதிரேசனின் அப்படிப்பட்ட நேரடியான கோரிக்கையை எதிர்பார்த்திராத கல்பனா முதலில் ஆடிப்போய்விட்டாளாம். தான் கதிரேசனைத் தம்பியாகத்தான் நினைத்துவந்ததாகவும் தன்னைவிட வயதில் மிகவும் சின்னவனைத் திருமணம் செய்துகொண்டால் ஊர் கேவலமாகப் பேசும் என்றும் தன் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்றும் கல்பன தெளிவாகச் சொல்லியிருக்கிறாள்,

தன் ஆசையைச் சொன்னதும் கண்டபடி திட்டி, அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் என எதிர்பார்த்திருந்தவனுக குக் கல்பனாவின் பொறுமையான பேச்சு தன் ஆசையை மீண்டும் வலியுறுத்தும் நம்பிக கையைக கொடுத்தது. தனக கு ஊரைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்றும் தான் அவள்மேல்

உயிரையே வைத்திருப்பதாகவும் கல்யாணத்துக்கு அவள் சம்மதிக கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் அடித்துச் சொல்லியிருக்கிறான்.

கல்பனா தன் ஆத்திரத்தை அடக்க முடியாமல் அவனை மாறி மாறி அறைந்து கண்டபடி திட்டி அப்படிப்பட்ட எண்ணத்தோடு தன் வீட்டுப் பக்கம் வரக் கூடாது எனத் துரத்தியடித்தாளாம். ஆனால் கதிரேசன் “இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கல்யாணத்துக்கு ஒத்துக்கலண்ணா தற்கொலை பண்ணிக்குவேன்” என்று கத்திவிட்டு வந்தானாம அடுத்த நாள் மாலை வழக கம்போலக் கல்பனா வீட்டிற்குச் சென்றவனை, அவளுடைய அம்மா கண்டபடி திட்டினாளாம். கல்பனாவோ அவனை ஏறெடு த்தும் பார்க்காமல் வீட்டுக்குள் சென்றுவிட்டாள். இப்படி ஒரு வாரமாய் அவன் போவதும் அவர்கள் அவமானப்படுத்தி அனுப்புவதும் தொடர்ந்தன. ஒரு நாள் காலை கதிரேசனின் வீட்டிற்கே வந்த கல்பனாவின் அம்மா நடந்த எல்லாவற்றையும் சொல்லி அவனைக் கண்டித்து வைக்கச் சொல்லிச் சென்றாள்.

கல்பனாவின் அம்மா போன மறுகணமே, ஆடு மாடுகளை அடிக க வைத்திருக கும் சாட்டையால் தன் கோபம் தீரும்வரை கதிரேசனை அவன் அப்பா அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக நான் அங்கே போய்ச் சேர்ந்தேன். இனி வீட்டைவிட்டு எங்காவது போனால், அவனைக கொன்றுவிடுவதாக எச்சரித்தார். அவனுடைய அம்மாவோ அழுதபடி “உனக கு ஏன்டா இப்படிப் புத்தி போகுது? நம்ம குடும்பத்து மானத்தையே வாங்கறையே” என்று சொன்னாள்.

அடியை வாங்கிக கொண்டு கதிரேசன் படுத்த படுக்கையாய்க் கிடந்தான். சாப்பிடாமல் யாரிடமும் எதுவும் பேசாமல் பிடிவாதம் பிடித்தபடி, இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடந்தான். நான் முடிந்த நேரமெல்லாம் அவன் பக்கத்திலேயே இருந்தேன். அப்போது ஒருசமயம் “ராமனைவிட சீதை ரொம்பப் பெரியவ தெரியுமாடா? ஜனங்க ராமனைக் கடவுளாவே கொண்டாடறாங்க. நான் என்னைவிட வயசுல கொஞ்சம் பெரியவளைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னா திட்டறாங்க. திரௌபதியவிட நகுல சகாதேவர்கள் ரொம்பச் சின்னவங்க. அவங்க அவளுக்குப் புருஷனுங்களா இல்லியா? நான் ஏன் கல்பனாவுக்குப் புருஷனா இருக்கக் கூடாது? அவ்வளவு ஏன் சச்சினைவிட அவரு பொண்டாட்டி பெரியவங்கன்னு உலகத்துக்கே தெரியுமே. அவங்க சந்தோஷமாயில்லயா?” என்று கதிரேசன் என்னிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டான். அவன் எப்போது, எங்கிருந்து அத்தனை விஷயங்களைச் சேகரித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சனிக கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், குளித்து உடுத்திக்கொண்டு, பெட்டியில் இருந்த நூறு ரூபாய்ப் பணத்தையும் எடுத்துக கொண்டு வெளியே சென்றிருக்கிறான்.

சனிக கிழமை கல்பனாவிற்கு அலுவலகம் மதியம்வரைதான் செயல்படும் என்பதால், அவளை அலுவகத்திற்கே போய்ப் பார்த்திருக்கிறான். இவனிடம்

முகம் கொடுத்தே பேசாமல் தவிர்த்தவளிடம் தன்னிடம் பழையபடி நடந்துகொள்ள வேண்டும் என்று கெஞ்சினானாம். அவளைத் தன்னால் மறக க முடியவில்லை என்றும் அவள் தன்னை வெறுத்தால் அன்றே தற்கொலைசெய்துகொள்ளப்போவதாகவும் அழுதபடியே சொல்லியும், கல்பனா அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் இனியும் தன்னைத் தொந்தரவு செய்தால் போலீஸில் புகார்செய்யப்போவதாக எச்சாரித்தாளாம்.

அன்று மாலை எங்கள் வீட்டிற்கு வந்த கதிரேசன் மிகவும் சோர்ந்துபோய்த்தெரிந்தான். தான் கல்பனாவைப் போய்ப் பார்த்த தையும் நடந்த விஷயங்களையும் சொன்னான்.

பிறகு நீண்ட நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் சமாதானமடையட்டும் என்று நானும் பேசாமலிருந்தேன். அவனே பேசினான். “இன்னக்கிக் கல்பனா ஆபீசுலருந்து போனப்பறமும் நான் கொஞ்ச நேரம் அங்கயே ஒக்காந்திருந்தேன். அப்போ எங்க ஆபீசுல கணக்குல்லாம் பார்த்துக்கறவரு என்னைக் கூப்பிட்டுப் பேசுனாரு. அவர் கவர்மெண்ட வேலையிலருந்து ரிடையர் ஆனவரு. ஆபீசுல நடக்கற எல்லாமே அவருக்கு அத்துப்படி. ‘கதிரேசா, நீ ஏம்பா அவளுக்காக இப்பிடி அலையற? அவ புருஷன் ஓடிப்போனப்பறமும் அவளுக்கு ஒருத்தரு மாத்தி ஒருத்தரோட தொடர்பு. இப்ப நம்ம மேனேஜரோட நெருக்கமா இருக்கறா. உனக்கு ஒன்னு தெரியுமா, கல்பனாவைவிட மேனேஜர் வயசுல சின்னவரு. நீ பேசாம அவள மறந்துட்டு வேற வேலையப் பாருப்பா’ன்னாரு. கல்பனா என்னை வெறுக்கறதுக்குக் காரணமே இல்லைடா. கல்பனா இல்லாம எனக்கு வாழவே புடிக்கலடா” என்றான்.

நான் அவனைத் தேற்ற எவ்வளவோ முயன்றும், அவன் மன அமைதியில்லாதவனாகத் திரும்பிச் சொன்றான். எப்படியும் இன்னும் சில நாட்கள் சென்றால் சமாதானமாகிவிடுவான் என்று நினைத்துக கொண்டேன். ஆனால் மறுநாள் இரவு கதிரேசன் தற்கொலை செய்துகொண்ட செய்தி வரும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

* *

அடுத்த நாள் காலை கதிரேசனின் மாமா மட்டும் திரும்பி வந்திருந்தார். அவர் வந்த செய்தி கேள்விப்பட்டுப் பெரிய கூட்டமே கூடிவிட்டது. டாக டர்கள் எவ்வளவோ முயன்றும் கதிரேசன் இறந்துவிட்டான். அவனது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் பாய்சன் கேஸ் என்பதால் போலீஸில் புகார்செய்து, நாளை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் கதிரேசனின் உடலைத் தருவார்கள் என்றும் சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு என்னால் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை.

அப்போது கூட்டத்தை நோக கி ஓடிவந்த ஒருவன் கத்திக்குத்துப்பட்ட ஒரு பெண்ணின் உடல் ஆட்டையாம்பட்டி ஏரியில் கிடப்பதாகவும் தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்குப் போலீஸ் சென்றுள்ளதாகச் சொன்னான். எனக்கு ஏனோ கல்பனாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *