பெங்களூரு மாப்பிள்ளை !!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2014
பார்வையிட்டோர்: 8,570 
 

தினேஷ் கைநிறைய சம்பளத்தோடு பெங்களூரில் பணி புரிந்து கொண்டு இருந்தான். ஊரில் அவன் அம்மா சரசு மகனுக்கு பெண் பார்த்துக்கொண்டு இருந்தால், என் மகனுக்கு 60 ஆயிரம் சம்பளம் அதனால “5 லட்சம் 100 பவுன் ஒரு ப்ளசர்” கொடுக்கற மாதிரி இடம் வேணும். இதை எல்லாம் கொடுக்கற இடம் என்றால், உனக்கு கமிஷன் 10 ஆயிரம் என்று தரகரிடம் கறாராக சொன்னாள்.

தினேசைப்பொறுத்த வரை பெண் நன்றாக இருக்க வேண்டும், ஒரு டிகிரியாவது படித்து இருக்க வேண்டும், கிராமத்து மனசும், நகரத்து நடையும் வேண்டும் என்பது தான் அவனின் ஆவல். இதை வீட்டில் சொல்ல அவனுக்க பயம், இந்த மாதிரி பெண்கள் நம்மை விரும்பமாட்டாங்களா? என்ற கவலை வேறு.

தரகர் ஒரு நல்ல இடம் இருக்கும்மா, வரும் ஞாயிறு உங்கள் மகன் வந்ததும் சொல்லுங்க, பவானி கூடுதுறை கோயிலுக்கு அழைத்து செல்லலாம். பெண் வீட்டார் பள்ளிபளையம் தான் அவர்களையும், பெண்ணையும் அங்கே வரச்சொல்லிடலாம் என்றார்.

” பெண்ணை என்னப்பா பாக்கறது ? நான் சொன்னதை கொடுப்பாங்களா ? ”

” அம்மா, நீங்க கவலையே படாதீங்க, பையன் பெங்களூரில் வேலை என்றதும், 150 பவுன் நகை, ஒரு கார், அதுவுமில்லாமல் அவுங்களுக்கு 2 பொண்ணுங்கதான், 20 ஏக்கர் தோட்டம் இருக்கு அதுவும் காவிரி கரையோரம், முப்போகம் விலையும் பூமி, 30, 40 எருமைங்க இருக்கு இத விட வேறு என்ன வேண்டும் ”

” இந்த இடம் அமைஞ்சா? உனக்கு 10 ஆயிரம், இல்ல 25 ஆயிரம் ”

” அம்மா மனசு வெச்சா நல்லதே நடக்கும், எனக்கும் ”

“வரும் வாரம் மகன் வருவான் வந்ததும் சொல்கிறேன் ”

உடனே தினேசுக்க போனை போட்டவள் இந்த வாரம் வந்துருப்பா, உனக்கு பொண் பார்க்கபோறம் என்றாள். உனக்க நிறைய சீர் சிரத்தி செய்ய காத்திருக்கறாங்க !! மகனே வா, நிச்சயம் செய்திடலாம், பொண்ணு மட்டும் பிடிக்கலன்னு சொல்லிடாதே என்றாள்.

” எதுக்கும்மா, சீர் சிரத்தி எல்லாம், நல்ல குடும்பமாக இருந்தா பத்தாதா ? ”

“டேய் சும்மா இரு, உன்ன பெத்த எனக்கு தெரியும் எது நல்லது? எது கெட்டது? என்று !!”

அடுத்த நாள் காலை பெண் பார்க்க செல்லும் போது, தரகரிடம் நான் கேட்டது எல்லாம் தருகிறார்கள் தானே? என்று மீண்டும் ஒரு முறை உறுதிப் படுத்திவிட்டு புறப்பட்டார்கள ! தினேசின் பெற்றோர்கள் !!

சக சந்திப்புகள் முடிந்த பின் காயத்திரியை ரொம்பவே பிடிச்சிருந்தது தினேசுக்கு !! அம்மாவிடம், அம்மா நான் பொண்ணுடம் பேசனும் என்றான் ? இதில் என்னப்பா இருக்கு, பையன் பொண்ணு கூட பேசனுமாம், அப்படியே கோயிலைச் சுத்தி ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க, என்று அனுப்பினாள்.

” என்னை உங்களுக்கு, பிடிச்சிருக்கா? என்றான்”

” பிடிக்கலின்னு சொன்னா, வேண்டாம்ன்னு போய்டுவீங்களா?

” ம்ம்ம்…. உங்க விருப்பம் !! ”

” எனக்கு சம்மதம் தான், உங்களுக்கு சம்மதாமா? ”

” ம்.. சம்மதம் தான் !!”

” இந்த திருமணம் முழுவதும் உங்க விருப்பத்தில் நடக்குதா தினேஷ், இல்ல உங்க அப்பா அம்மா விருப்பத்துக்கு நடக்குதா? ஏன் கேக்கறன்னா, நீங்க இருப்பது பெங்களூர் அங்க அழகான பெண்கள் நிறைய இருப்பாங்க, டவுசர் போட்டுகிட்டு சுத்துவாங்க, இன்னும் சொல்லிகிட்டே போகலாம், அதனால கேக்கிறேன் ”

” ஐய்யய்யோ அப்படி எல்லாம் இல்லீங்கோ, என் முழு சம்மதத்துடன் தான் நடக்குது ”

” திருமணத்திற்கு அப்புறம் என்ன செய்யப்போறீங்க? என்றாள் !! ”

“திருமணம் முடிஞ்சு ஒரு வாரத்தில் பெங்களூர் போய்விடலாம். நான் முன்னாடியே வீடு பார்த்து விடுகிறேன் என்றான். ”

” எதுக்குங்க, பெங்களூர் போகனும் எங்களுக்கு 20 ஏக்கர் நிலம் இருக்கு, ஆடு மாடு நிறைய இருக்கு உங்களை 100 பவுன் 5 லட்சம் கொடுத்து கல்யாணம் செய்து வைக்கிறார் !! ”

” அதுல புது வீடு வாங்கிடலாம்ன்னு சொல்ல வர்றீங்களா? ”

” இல்லங்க, உங்கள நாங்க வாங்கிட்டோம்ன்னு சொல்ல வர்றேன் !!! ”

” என்னங்க சொல்றீங்க? ”

” உங்கள வாங்கி வீட்டோட மாப்பிள்ளையா வெச்சிக்கிறோம், இங்க 30 எருமை, மாடுங்க இருக்கு இத்தனை நாளா நான் தான் மேய்ச்சேன், இனி நாம ரெண்டு பேரும் மேய்ப்போம் !! ”

” பேசிட்டு திரும்பி பார்த்தாள், காயத்திரி !!

” வேகமாக நடந்தான் கோயிலின் வெளிப்புறம் நோக்கி தினேஷ் !! “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *