அடுத்தடுத்து தனது இரண்டு மகளுக்கும் திருமணம் நடத்தி முடித்து விட்டார் நந்தகுமார். மிகப்பெரும் பணக்காரரான அவரது வீடு அரண்மனை மாதிரி. மகன்களுக்கு வாய்த்த இரண்டு மருமகள்களும் மகன்களோடு அதே வீட்டில் தான் வாசம்.
அன்று நந்தகுமாரை பார்க்க அவரது நண்பரொருவர் வந்திருந்தார். வந்தவர் பேச்சோடு பேச்சாக. வந்திருக்கிற புத்தம் பதிய மருமகள்கள் இரண்டு பேரும் எப்படி? என்று கேட்டு வைத்தார்.
என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள்… இரண்டு மருமகள்களுமே எனக்கு ரெண்டு கண்ணு மாதிரி என்று ஒரேயடியாக புகழ்ந்து தள்ளி விட்டார் நந்தகுமார். இதைக் கேட்டு கொண்டிருந்த அவரது மூத்தமகன் பாலகுமாரனுக்கு ஒரே அதிர்ச்சியாக போய்விட்டது.
இரண்டு மருமகள்களுமே ஒன்றுக்கும் லாயக்கில்லை..உதவாக்கரை.. என்று எப்போது பார்த்தாலும் கோபமும் சிடுசிடுப்புமாக இருக்கும் அப்பாவா இப்படி?
மிகுந்த ஆச்சரியத்தோடு அப்பாவின் முகத்தை ஏறிட்டு பார்த்தான் பாலகுமாரன். நண்பர் விடைபெற்று சென்ற பிறகு நந்தகுமார் மகனிடம் சொன்னார். குறைகளை ஏன் மற்றவங்க கிட்ட சொல்லணும்… நிறைவாகவே நாமிருப்போம்..
பாலகுமாரன் அப்பாவின் முகம் பார்த்து புன்னகைத்தான்.
– பானுமதி பாஸ்கோ (5-9-12)