(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பத்மாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான். அங்கிருந்து வெளியில் சென் றால் தேவலாம் போல் இருந்தது.
அவனைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அங்கு யாரும் யாரைப்பற்றியும் கவலைப்பட்டதாகவும் தெரிய வில்லை. கவலை என்றால் என்னவென்றறியாத ஓருலகம் அங்கு இயங்கித் கொண்டிருந்தது. “கோஸ்கேட்” அரங்கம்! காலாங் பூங்காவில் கண் மளித்தது.
சிமிட்டிக்கொண்டு அந்த இரவிலும் எடுப்பாகத் தோற்ற
மேற்கத்திய இசையின் முழக்கம்-ஒளி குறைந்த வண்ண வெளிச்சம்-இளசுகளின் ஆட்டம். அங்கு ருந்தது.
“டிஸ்கோ” நடனம் வெகு முனைப்பாக நடந்து கொண்டி
ஆண்களும் பெண்களும் நெருங்கி நின்றும் உரசி மகிழ்ந்தும் ஒலிபெருக்கிகள் கக்கிக் கொண்டிருந்த மேற் கத்திய இசைக்கேற்ப ஆடிக்கொண்டிருந்தனர். கால்களை நொடித்தும், இடுப்பை அசைத்தும்,மார்பை குலுக்கியும் அவர்கள் ஆடிய ஆட்டத்தைக் கண்டு பத்மா
அதிர்ந்து போனான். நண்பர்களின் பேச்சைக் கேட்டு அங்கு வந்தது சரி தானா என்று அவன் மனம் குழம்பத் தொடங்கியது.
“பத்மா வா, எங்களோடு சேர்ந்து கொள். ஏன் பேசா மல் இருக்கிறாய்? வா…” அவன் வகுப்புத் தோழி ரகிமா உரிமையோடு அவன் கரத்தைப் பற்றி இழுத்தாள்.
தன் வகுப்பு நண்பர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு மயங்கி அங்கு வந்துவிட்டாலும், பெண்களைப் போல் ஆடுவதை அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
“இல்லை என்னை விட்டுவிடு. எனக்கு ஆடத் தெரியாது. நான் இப்படியே அமர்ந்திருப்பேன்….” அன் கெஞ்சினான். பத்மா தடுமாற்றத்தில் உளறிய தப்பும் தவறுமான ஆங்கிலத்திற்கு இரக்கப்பட்டாவது அவள் அவனை விட்டி ருக்கலாம். ரகிமா விடவில்லை. அவனை இழுத்துக் கொண்டு போய் நடன அரங்கில் நிறுத்திய பிறகே அவள் ஓய்ந்தாள். பத்மநாபன் என்ற தனது அழகான பெயரை பத்மா
என்று பெண்பாலாக்கிக் கொண்டதற்குக்கூட வெட்கப் படாதவன், மிகுந்த கூச்சத்துடன் முதல் முறையாக ஆடத் தொடங்கினான் வேறு வழியின்றி.
ரகிமா கண்களைச் சிமிட்டிக் கொண்டு உள்ளத்தைச் சுண்டி இழுக்கும் காந்தச் சிரிப்பைச் சிந்தியபடி அவனருகில் ஆடினாள். உள்ளாடை இல்லாமல் மஞ்சள் வண்ணத்தில் அமைந்த ஒரு பனியன் மட்டுமே அவள் அணிந்திருந்த தால், அவள் நெஞ்சைக் குலுக்கி ஆடும் போது!… பத்மா சிலையானான்.
நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு இல்லம் திரும்புகையில் பத்மா மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந் தான். வீட்டிற்கு அண்மையில் வந்தபோதுதான் நள்ளிரவு ஆகிவிட்டதை உணர்ந்தான். நல்லவேளையாக இரவு விருந்திற்குச் சென்றிருந்த அவன் பெற்றோர் வீடு திரும்பி யிருக்கவில்லை.
பத்மா புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அடுத்தாண்டில் பல்கலைக் கழகத்தில் சேர வேண்டியவன். “கோஸ்கேட் ” நடன அரங்கத்தின் முதல் அனுபவமே அவனுக்குப் பிடித்துப் போயிற்று தொடர்ந்து அங்குப் போக ஆரம்பித்தான். பெண்களோடு அணுக்கமாகப் பழகும் வாய்ப்யு அங்குத் தாராளமாய்க் கிடைத்தது. பதின்ம வயதினன் அவன். பற்று இல்லாமல் இருக்குமா?
இவ்வளவு நாளும் காலத்தை வீணே கழித்துவிட்டேனே என்று வருத்தப்படவும் செய்தான்.
அவன் தாயரர் வேலை முடிந்து இரவில் வீடு திரும்ப எட்டு மணியாகிவிடும். அவன் தொடர்ந்தாற்போல் தாமதமாக வரத்தலைப்பட்டவுடன் காரணம் கேட்டார். அவன் படிப்பு என்றும் , கலந்துரையாடல் என்றும் சொல்லி தப்பிவிட்டான் அவன் அப்பாவைப் பற்றிய கவலையே அவனுக்கில்லை. அவர் தினசரி இரவு பன்னிரண்டு மணிக்கு மேல்தான் திரும்புவது என்று ஒரு திட்டம் வைத் திருந்தரர்.
“ஜே ஜே…” என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட அந்த அலுவலகத்தில் எல்லாரும் பரபரத்துக் கொண்டிருந் தனர். வேலை இயந்திர வேகத்தில் நடைபெற்றுக் கொண் டிருந்தது. வெளிறிய நீலவண்ணக் கண்ணாடிக் கதவுகள், வெள்ளைத்திரைச் சீலைகள், ஏர்க்கோண் குளுமை, ஓர் அப் பட்டமான அலுவலகச் சூழல்.
அந்த நிறுவனத்தின் மேலதிகாரி மனோகரன் வேலையில் ஆழ்ந்து கணக்கைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார். தொலைபேசி அலறியது எடுத்துப் பேசினார்.
“நான் நாராயணசாமி பேசுறேன். பத்மாவின் டியூசன் ஆசிரியர்…” மறுமுனையில் குரல் பணிவாக ஒலித்தது. “வணக்கம். என்னங்க சேதி?….”
“பையன் வெளியூருக்குப் போய் இருக்கிறானா?…”
“யாரைக் கேட்கிறீங்க?…”
“பத்மாவைத்தான் கேட்கிறேன்… ”
“ஏன்? …”
“இரண்டு வாரமா, நான் டியூஷனுக்குப் போகும் போதெல்லாம் வீடு பூட்டியே இருக்கிறது. மத்தியானத்தில வழக்கமாக அவன் பாடம் படிக்கத் தவறுவதில்லை. அதனால் தான் கேட்டேன். ”
“அப்படியா? சரி விசாரிக்கிறேன். அவனுக்காக நான் மன்னிப்பு வாங்கிக்கொள்றேன். நீங்க அடுத்த வாரத்திலே இருந்து வழக்கம் போல வாங்க…வணக்கம்… ”
மனோகரனுக்கு ஒரே குழப்பம்.
அன்று அலுவலகத்திலிருந்து ”கிளப்பிற்கு”போகா மல் இல்லம் ஏகி மகனைக் கேட்டபோது, அவன் திருதிரு என்று விழித்தான். இறுதியில் வேறு வழியின்றி பகல் நேரத்தில் திரைப்படம் பார்க்கச் சென்ற உண்மையைக் கூறினான். ஆனால் நண்பர்களோடு என்பதைத் தணிக்கை செய்து விட்டான்.
“இந்தா பாரு பத்மா. உன் போக்கில் ஒரு மாற்றம் தெரிகிறது. அது சரியில்லை. இனிமே அப்படிச் செய்யக் கூடாது. நான் கடுமையாக நடந்து கொள்வேன்” என்றார் மனோகரன்.
தனது தந்தை ஒழுங்கைப் பற்றிப் பேசுவதை நினைக்க அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இருந்தாலும் அவர் மனத்தைப் புண்படுத்தாமல் வேறு வகையில் தன் உணர்வு களை வெளிக்கொணர வேண்டியது அவசியம் என்று பத்மா கருதினான்.
“நான் வீட்டில இருந்து என்ன செய்வது? …” என்று தந்தையை நோக்கிக் கேட்டான்.
“ஏன், படிப்பது?…”
“எவ்வளவு நேரம்தான் படிப்பது? எத்தனை நாட்கள் தான் படிப்பது? ஒரு மாற்றத்திற்கு உரையாடி மகிழ இங்கு யார் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன், பேச்சுத் துணைக்கு ஒரு நாதி உண்டா? நீங்களும் அம்மாவும் வேலைக்குப் போய் விடுகிறீர்கள்? நான் இந்த அடுக்கு மாடி வீட்டின் சுவர் களோடு உறவாடி மகிழ முடியுமா என்ன?…”
“அது வந்து… ”
“போதும். நான் அலுத்துவிட்டேன். பத்தாண்டு களுக்கு மேலாக நான் தனிமையிலும் வேலைக்காரி கண் காணிப்பிலும் இருந்து அலுத்துவிட்டேன். நான் வெளியே செல்ல வேண்டும். மற்றவர்களுடன் பேசி மகிழவேண்டும் . எனக்குத் துணை தேவை. இந்த அடுக்குமாடி வீட்டில் என்னைப் போல் பகல் முழுவதும் தனியாக இருந்து பாருங் கள். அப்போது தெரியும், வீடும் சிறையாக முடியும் என்று. உங்களுக்கு மட்டும்தான் மகிழ்ச்சி தேவையா?… சிந்தித்துப் பாருங்கள். இப்படிப் பேசுவதற்காக என்னை மன்னித்து விடுங்கள்…”
தந்தையின் மனம் புண்படாமல் பேச வேண்டுமென்று தொடங்கி இறுதியில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டான்.
மனோகரன் தம் மகனின் கூற்றில் இருக்கும் உண்மை யைத் தெளிவாக உணர்ந்தார். குற்றம் சாட்ட வந்தவர் குற்றவாளியாகிப் போனார்.
மறுநாள் அவர் தம்நண்பருடன் உல்லாசமாக ”விஸ்கி’ அருந்தி கொண்டிருந்தபோது தம் மகனின் குறை கூறல்களை நண்பரிடம் கூறினார். அதைக் கேட்ட அவர் நண்பர், “நீங்கள் விரைவாக இல்லம் திரும்பலாமே? …” என்று அவருக்கு வழி கூறினார்.
“அது அவ்வளவு எளிதல்ல. நான் தினந்தோறும் குடிக்க வேண்டும். நிறைவு ஏற்படுகிற வரை மெதுவாக மது அருந்திப் பழகிவிட்டேன். அதை இனி விட முடியாது. என் மகன் கூறியது சரி தான். ஆனால் அவனுக்காக வருத்தப் படுகிறேன். நான் என் மகிழ்ச்சிகளை அவன் பொருட்டுத் தியாகம் செய்ய இயலவில்லையே என்று வருந்துகிறேன்….” என்று சொல்லும் போது உண்மையாகவே தம் மகனுக்காக வருந்தவும் செய்தார்.
“அப்படி என்றால் இதுபற்றி உங்கள்மனைவியிடம் பேசிப் பாருங்கள். அவர் ஏதாவது நல்ல வழிகள் கூற இயலும்…” என்று நண்பர் கூறினார்.
அன்றிரவு தம் இல்லாளிடம் மனோகரன் அதுபற்றிப் பேசினார். தம்கணவர் பேசி முடிக்கும் வரை அமைதியாகக் காத்திருந்த அவர் மனைவி பரிமளம், “இந்தா பாருங்க, நீங்க சொல்றது எனக்கு நல்லா புரியுது. அதுக்கு நான் என்ன செய்யிறது?…” என்று கேட்டாள்.
“நீ வேலையை விட்டுவிடலாமே, நமக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. என் வருமானமே போதும்..” என்றார் தயக்கமாக.
“நல்லா இருக்கு. நான் வேலை செய்வது பணம் சம்பாதிக்க மட்டும்தான் என்று நீங்கள் நினைத்துத் கொண் டிருக்கிறீர்கள் என்று தெரியுது. அது தவறு. என் மகிழ்ச் சிக்காகவும் நிறைவுக்காகவும் வேலை செய்கிறேன். அதை எப்படி விட முடியம்?…” பரிமளம் காட்டமாகக் கேட்டாள்.
“நம் பிள்ளையின் மகிழ்ச்சியும் முக்கியந்தானே?அதை யும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய கடமை இருக் கிறது?…” மனோகரனும் காட்டமாகவே சொன்னார்.
“அவனுக்கு என்ன குறைச்சல்? கடல் மாதிரி வீடு. கேட்கும் போதெல்லாம் பணம், வேறு என்ன வேண்டும்?…”
“இவ்வளவு இருந்தும் என்ன பயன்? வீட்டில் தனிமையில் அல்லவா இருக்கிறான்? அதுவும் ஒரு சங்கடம் தானே?…”
“அதற்கு என்ன செய்ய முடியும்? அவன் மட்டுமா, நம் நாட்டிலே எத்தனையோ ஆயிரக்கணக்கான பிள்ளைகள் அப்படித்தான் இருக்கிறாங்க. உங்களுக்குத் தாங்க முடியலைன்னா நீங்க வீட்டில இருங்களேன்…”
“நீ என்ன பேசுறே? ஏதாவது சிந்தித்துத்தான் பேசறியா?…” மனேகரனுக்குக் கோபம் வந்துவிட்டது. “ஏன் உங்களுக்கு ஒரு நீதி, எனக்கு ஒரு நீதியா?…” பரிமளம் தன் கணவனுக்கு உறைக்க வேண்டுமென்பதற்காகத்தான் அப்படிக் கேட்டாள். அவள் யாருக்காகவும் தன் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராய் இல்லை. கணவர் மேற்கொண்டு எதுவும் பேசாமல் மெளனி யாகவே, தொடர்ந்து அவனே பேசினாள்.
“அவன் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை நாம் செய்கிறோம். அது நம்ப கடமை. அதைச் சரியாகப் பயன் படுத்திக் கொள்வதும் கொள்வதும் அவன் பொறுப்பு. ஒருத்தருக்காக இன்னொருத்தர் சுகங்களைத் தானம் செய்யும் காலமல்ல இது. அதை நானே நாளைக்கு அவனிடம் சொல்றேன்…”
மனைவியின் பதில் அவரின் வாயை அடைத்துவிட்டது. அதற்கு மேல் அவரும் ஒன்றும் பேசவில்லை.
பத்மா பள்ளி முடிந்து இல்லம் திரும்பினான். அடுக்குமாடி வீடாக இருந்தாலும் அதை ஒரு மாளிகையைப் போல் அழகுபடுத்தியிருந்தார் மனோகரன். ஆனால் இன்று அந்த அலங்லாரமெல்லாம் பத்மாவைக் கவரவில்லை. திரு விழா முடிந்து வெறிச்சோடிக் கிடந்த கோயிலைப் போல் அவ்வீடு வெறுமை பூண்டு கிடந்தது. அமைதி-அரவ மின்மை.
சன்னல்களைத் திறந்துவிட்டுக் கீழே பார்த்தான். சாலை யில் வாகனங்கள் எறும்புக் கூட்டங்களாய் ஊர்ந்தன. சிங்கப் பூரில் வாகனங்களுக்கா பஞ்சம்!
வானொலியை இயக்கினான். ‘பெண்ணுலகம்” நிகழ்ச்சி யில், சமையல் குறிப்பை யாரோ ஓர் அம்மையார் அறுத்துக் கொண்டிருந்தார். பொட்டென்று அம்மையாரின் தலையில் ஒரு குட்டுவைப்பது போன்று வானொலியை நிறுத்தினான்.
தொலைபேசி ஒலித்தது. அவன் தோழி ரகிமாதான் பேசினாள். “பத்மா வாயேன் வெளியில் செல்வோம். “சட்டர்டே நைட் ஃபீவர்” பார்க்கப் போகலாமா? ஜோன் டிரவோல்டாவின் டிஸ்கோ பிரமாதம் ! இது எனக்குப் பத்தாவது தடவை… ”
அவனுக்கும் வீட்டிலிருப்பது எரிச்சலாய் இருந்தது. “சரி” என்று இணக்கம் தெரிவித்துவிட்டு உடனே கிளம்பி விட்டான்.
முன்பெல்லாம் நன்றாகப் படித்துப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்பதில் பத்மா குறியாக இருந்தான். இப்போது பல்கலைக் கழகம் அவனை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருந்தது.
-1981, புதிய அலைகள், முதற் பதிப்பு: மார்ச் 1984, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.