கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2024
பார்வையிட்டோர்: 515 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

சிங்கையில் ‘சுங்கை வாங்கி’ எனும் கிராமம் பிரபல மான இடம். பஞ்சநாதர் சுங்கை வாங்கியில் கொஞ்சம் பசை’யுள்ள மனிதர். அவரது ‘தொந்தியும் தொப்பை யுமே’ அந்த உண்மையைச் சொல்லும். தடிப்பானவர் என்று சொல்லாமல் ஒரு சிறு சதைமலை என்றே கூற லாம். மிகைப்படுத்திக் கூறிவிட்டதாக எண்ணாதீர் கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் முந்நூறு பவுண்டுதான் வரும்.

உடலைப் போலவே அவரது உள்ளமும் கனத்து இருந்தது. ஈகையுள்ளம் அவருக்கு இல்லவே இல்லை. அவரது கொடைப் பண்பை ஒர் உதாரணத்தால் சொல்லிவிடலாம் என்றெண்ணுகிறேன். ‘சோறு சாப் பிடும்போது ஈ காக்காயைக்கூட விரட்ட மாட்டார். என்று சொல்வார்களே…! அந்த வள்ளல்களின் பட்டி யலிலே இந்தப் புண்ணியவானையும் சேர்த்து விடலாம்.

பஞ்சநாதர் பிறந்து நாற்பது நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியிருக்கும். பார்த்தால் அப்படித் தோற் றாது. அவரைப் பொறுத்தவரை அதில் பாதிதான் கணக்கு வைத்துக்கொள்வார். மணற்பாங்கான தரை யில் ஒரு புல் பத்தையை வைத்ததுபோல… பின்புறம், ‘அங்கொண்ணு, இங்கொண்ணு’ ‘கொஞ்ச நஞ்சம்’ என்று இல்லாமல் ஓர் அரைவட்டம் மாதிரி முடி இருந்தது. தலையில் முன்புறம் அகப்பையின் முகப்பை நினை படுத்தும். ‘மீசை’யைத் தூசைத் துடைப்பதுபோல் தினம் எடுத்துவிடுவார். இல்லாவிட்டால் ‘தும்பைமலர், கள் பூத்துவிடுமே . !

பட்டுவேட்டி கட்டி, கட்டான அவரது உடல் எடுப் பாகத் தெரியும்படி மெல்லிய ‘ஜிப்பா’ அணிந்து, தங்கச் சங்கிலி ‘தகதகக்க’ வைரமோதிரம் ‘டால்’ அடிக்க’ சந்தனப் பொட்டு ‘கம கமக்க’ தன்னை ஒருவாறு மினுக்கிக் கொண்டுதான் எப்போதும் வெளியே போவார். இப்படித்தான் ஒருநாள் அந்தத் தெரு வோரம் போகும்போது…!

‘சடக்..! சடக்…!’ அவரின் செருப்பொலியோடு’ ‘படக்…! படக்…1’ என்று அவரது நெஞ்சத் துடிப்பு போட்டி போட்டது. உடலெல்லாம் நடுங்கிற்று. வியர்த்துக் கொட்டியது. அவர் போட்டிருந்த மெல்லிய ஜிப்பா ‘தொப்பையாக’ நனைந்தன. அவரது தொப்பை யோடு ஒட்டிக்கொண்டது. கால்கள் எட்டிப் போட்டன. பஞ்ச நாதரின் பஞ்ச பூதங்களும் அடங்கி ஒடுங்கின. “டாக்ஸி…!’ தொண்டை கிழியக் கத்தினார்.

‘சர்ர்…!’ மோட்டார் வந்து நின்றது.

‘டிர்…’ கதவைச் சாத்திக்கொண்டார். ‘வேகமாய் விடப்பா’, அவரது குரல் படபடத்தது. கார் தார்ப் பாதையில் ஓடிக் கொண்டிருந்தது. மனப் பாதையில் சிந்தனை’ ஓடிக்கொண்டிருந்தது.

2

‘என்ன மச்சான் அப்படிப் பாக்குறீங்க….

‘காடு வயலைப் படைச்சி கலப்பைய ஏம் படைச் சான்…ஏங்கண்ணையும் படைச்சி இந்தக் கன்னியையும் ஏம்படைச்சான்…’ காம்போதி ராகத்திலே இசை கூட்டினான்.

‘போங்க மச்சான்…’ அவள் முகம், கண், தலை, உடல் எல்லாமே சிணுங்கின.

‘மச்சானுக்கு அச்சாரமின்னு “இச் கொடேன்.’- கண்கள் ஓரமாக ஒதுங்கிக்கொண்டு ஏக்கத்தை எதி ரொலித்தன. குரல் தாழ்ந்தது.

‘மார்கழியே பீடைமாசம்னு சொல்லுவாங்க…தை. பொறக்கட்டும். அப்புறந்தான்…’ அவள் இன்னும் முடிக்கவில்லை.

வழி பொறக்குமுண்ணு சொல்றியா? ஏங் கண்ணு புத்திசாலிப் பொண்ணு…’ புகழ்ந்தான் அவன். புகழ்ச்சி யுரையில் அவள் வானில் மிதந்தாள். ஆடாமல் அசை யாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். மகிழ்ச் சியின் இன்பத்தின் பிரதிபலிப்பு அது.

‘ஏங்கண்ணு அப்பிடிப் பாக்குறீயே…’ அனுபல்லவியை அவனும் பாடிக் காட்டினான்.

‘நேரமாயிட்டுது மச்சான்…போறேன்… கையை ஆட்டிக் கொண்டே சிட்டாகப் பறந்தாள் கண்ணம் மாள். பொன்னன் பொம்மையானான்.

இப்படியாக வசதி கிடைக்கும்போதெல்லாம் சந்தித்து வற்றாத பாசம் வளர்த்து வந்த அந்த இளம் காதலர்களுக்கு வில்லனாக இருந்தார் கஞ்சப் பிரபு பஞ்சநாதா. கண்ணம்மாவின் மேல் அவருக்கு எப்போ துமே ஒரு கண் இருந்தது. அவளை இதய ராணியாக்கிக் கொள்ளும் எண்ணம் அவருக்கு இருந்ததாகத் தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள். ஒரு நாள் ராணியாகத் தான் ஊர்ப் பிரமுகர்க்குத் தேவையானாள். அவரு டைய கரம்பட்டுக் ‘கசங்கிய மலர்கள்’ கணக்கிலடங்கா. அவருடைய இதழ்பட்டு எச்சிலான கனிகள் ஏராளம்; ஏராளம் – இப்படித்தான் விளக்கம் சொல்ல வேண்டும். அவருடைய பணத் திமிர் ‘லீலை’களுக்கு.

கண்ணாம்மாவிடம் பலமுறை பக்குவமாகத் தன் விருப்பத்தைச் சொல்லியிருக்கிறார். அன்றும் அப்படித் தான் தன் கருத்தை வெளியிட்டார். ‘ஓம் பணமும் சரி.. என்று கொஞ்சம் ‘காரமாகவே சொல்லிவிட்டாள். ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுதான் பேசுவாய்யா அந்தக் குட்டி…என்றுதான் கண்ணம்மாவின் ‘சூட்டி கைக்கு’ விமர்சனம் சொல்லுவார்கள், ‘சீட்டியடுக்கும் சில வாட்டசாட்டங்கள் பணமென்றவுடன் பல்லிளித்துத் தஞ்சமடைவான் என்றெண்ணிய பஞ்சநாதர் ஏமாந் தார். ஏமாற்றம் கோபமாக மாறியது. ‘உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்… சூளுரைத்து விட்டுத் திரும்பினார்.

3

கண்ணம்மாள்-பொன்னன் காதல் பற்றி அவள் தகப்பனாரின் காதைக் கடித்தார் திருவாளர் பஞ்சம். ‘சின்னஞ்சிறுசுக… ஏதோ பேசிக்கிட்டிருந்துட்டுப் போவுதுக . ! அந்தப் பய பொன்னன் என் தங்கை மவன் தானுங்க…! வேற யாருமில்லீங்க . ! அவனுக்கே ‘முடிச் சிடலாமின்னு’தான் இருக்கேனுங்க… பெரியவங்கநம்ம… அதெல்லாம் கவனிக்கப்படாதுங்க ..!’ மூக்கன் இப்படி அடிக்கோர் ‘இங்க’ போட்டு எண்ணத்தைச் சொன்னான்.

இங்கும் ஏமாற்றம் கண்ட நமது பிரபு அவர்கள் ‘நான் எதுக்குச் சொல்ல வாரேன்னா, நாலு பேரு நாலு விதமாப் பேசுவாங்க… நமக்கு அது நல்லால்ல பாரு!’ என்று நாசுக்காக எதையோ உளறினார்.

மூக்கன் தனது மண்டை, மூக்கை இலேசாகத்தடவிக் கொண்டான். கோபத்தைப் பொறுத்துக் கொண்ட தற்கு அறிகுறி அது! ‘நான் கவனிச்சுக்கிரேனுங்க… நாழியாவுது… புறப்படுறீங்களா…’ அவரை வழியனுப்ப எழுந்து கொண்டே சொன்னான் மூக்கன். புறப்பட்டு விட்டார் புண்ணியவான்.

அவருக்கு இப்போது தூக்கம் குறைந்தது. துக்கம் நிறைந்தது. அடியாள்களுக்கு ‘அஞ்சு பத்து’ என்று அள்ளி வீசினார். பொன்னனைத் தொலைச்சுட்டா ‘பொண்ணு தானா வழிக்கு வந்துடுவா…’ என்று கனவு கண்டார். துண்டுப் பீடிகளுக்கு நல்ல வேட்டை கிடைத்தது.

பொன்னன் வைத்திய மனையில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு, மூக்கன் துடித்துப் போனான். கண்ணம் மாள் கதறினாள். அஞ்சலை கஞ்சிகூடக் குடிக்காமல் அலறினாள். ஆம்; அஞ்சலை பொன்னனின் தாய். ‘அண்ணா, பொன்னனை அடிச்சுட்டானுவளே ‘ ஒப் பாரி ஓலம் மூக்கனை மூக்குச் சிந்தச் செய்தது. ‘அலறி-கதறி – துடித்து என்ன செய்வது? அடிபட்டது பட்டாச்சு வாங்க போய் விசாரிப்போம்’ என்று அங்கிருந்து அரை குறை நரையொன்று அனுதாபம் சொல்லி அழைத்தது.

பொன்னன் முழு விபரமும் சொன்னான். பொங்கி எழுந்தார்கள். ஆனால், கண்ணம்மாள் தடுத்து விட் டாள். ‘கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கப்பா…” காரணமறிந்து கொண்ட கண்ணம்மா, வெட்கத்தை விட்டுச் சொல்லி விட்டாள். அதுகேட்ட பொன்னனுக்கு அப்போதே குணமாகிவிட்டது. “அடி ஒண்ணும் பல மில்லை மாமா… மயக்கமா இருந்திச்சு.. அவ்வளவு தான்…!’ என்று சொல்லி எழுந்து உட்கார்ந்தான். அங் கிருந்தவர்கள் ‘கொல்’ எனச் சிரித்தனர். காதற் சிட்டுகள் தலைகுனிந்து சிரித்துக் கொண்டன.

அடுத்த வாரமே தை பொறந்தது. ‘கண்ணு! தை பொறந்தாச்சு. ‘இச்’ பொறக்கலியே ..’ என்று நினைவு படுத்தினான். ‘அமிர்தயோகம் வெள்ளிக்கிழமை கேண் ணாளா…’ வானொலி இசை காற்றில் மிதந்து வந்தது

‘பாட்டைக் கேளுங்க மச்சான்…’ என்று விடை கொடுத்தாள் வேல் விழியாள்.

‘இன்னும் மூணு நாளு இருக்குதே’ அங்கலாய்த்துக் கொண்டான். மூணு நாளு… அப்புறம் மூணு முடிச்சு… அப்புறம் முத் ..!’ பேச விடாமல் வாயைப் பொத்தி விட் டாள். அப்படியே அந்தக் கைகளைப் பிடித்துக் கொண் டான் அவன்! வளையல் ‘கலகல’த்தது. அவர்கள் சிரிப் பொலி போட்டி போட்டது.

கண்ணம்மாள் ‘கட்டுக்கழுத்தி’ வரிசையில் ஒருத்தி யாகி விட்டாள். பொன்னன் புதுமாப்பிள்ளை ஆனான். கண்ணம்மாளும் பொன்னனும் வெளியுலகை மறந்தே விட்டனர்.

‘அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்தாச்சி… நீ வாம்மா நம்ம ஊரைப் பார்க்கப் போவோம் ..’ என்று கூறி மூக்கன் அஞ்சலையுடன் தமிழகம் சென்றுவிட்டார். மணமக்கள் மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். கண்ணம் மாள் தன் கன்னங்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற் காகவோ என்னவோ ‘சிசு’ ஒன்றைத் தாங்கினாள். ஆமாம்! கண்ணம்மாள் தாயாகிக் கொண்டு வந்தாள்.

4

பஞ்சநாதருக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலி ருந்தது. அவர்களின் இன்ப வாழ்வு கண்டு எரிந்து கொண்டிருந்தார். கண்ணம்மாள் அவர் கண்ணிலிருந்து மறையவே இல்லை. பஞ்சநாதரின் நெஞ்சம் மீண்டும் நஞ்சுக் கருத்துக்களை எண்ணிப் பார்த்தது. ‘கொஞ் சத்தை’ விட்டுக் காண்பித்தார். பணம் பத்தும் செய்யும் என்பார்களே…! அந்தக் ‘கொஞ்சம்’ வேலை செய்தது. ‘பொன்னன் கடன்தர மறுத்த பஞ்சநாதரைக் கொல்ல முயன்ற குற்றத்திற்காகப் பத்து வருடச் சிறைத் தண் டனை அளிக்கப் படுகிறது…’ என்று தண்டனைப் பத்தி ரிகை வாசித்தது நீதிமன்றம்.

பொன்னன் சிரித்தான். பஞ்சநாதரும் சிரித்தார். அதில் வெறிச் சிரிப்பு-வெற்றிச் சிரிப்பு என்ற பேதமிருந் தது. கண்ணம்மாளிள் ‘கதி’ கலங்கியது.

பஞ்சநாதர் கொஞ்சநாள் ஆறப்போட்டார். அதற் குக் காரணமும் இருந்தது. ‘இதுதான் மாசமா?’ என்ற பல பெண்களின் கேள்விக்கு ‘ஆமாம்’ போடவேண்டிய நிலையிலிருந்தாள் கண்ணம்மாள். காலம் கடந்தது. கரு உருவாகிக் கண்ணம்மாள் மடியில் கிடந்தது. இரண்டு மாதத்தை எண்ணிக்கொண்டு வந்த பஞ்சநாதர் திரண்டு கிடந்த தீவிர வேட்கையைத் தணித்துக் கொள்ளக் கண் ணம்மாள் வீட்டுக்கு வந்தார். இரவில் கனவு கண்டு புரண்டு படுத்த கண்ணம்மாள் மிரண்டெழுந்தாள். முரட்டுக் கரங்களின் குரங்குப் பிடியில் கண்ணம்மாள் சிக் கினாள். அதிக நேரமாகத் தப்பிக்கொண்டு வந்த பூச்சி யொன்றைக் குதித்துக் குதப்பி விழுங்கியது, மேல் முகட் டில் ஊர்ந்து கொண்டிருந்த பல்லியொன்று! ஊர் அடங்கிய நேரத்தில் பஞ்சநாதர் தெருவோரம் ஒய்யார மாகப் போய்க் கொண்டிருந்தார்.

இருள் விலகியது உலகில். இருள் படர்ந்தது கண் ணம்மாளின் உள்ளத்தில். இரண்டு மாதக் குழந்தையை இடுக்கிக் கொண்டு நடைப்பிணம்போல் எங்கோ போய்க் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் பஞ்சநாதர் நன் றாக உறங்கினார். இடையில் இரண்டாண்டுகள் ஓடி மறைந்தன.

5

பஞ்சநாதரின் திருமணம் கோலாகலமாக நடை பெற்றது. குடியும் குடித்தனமுமாக வாழ ஆரம்பித்து விட்டார். பழைய பஞ்சநாதர் புதியதொரு வாழ்க்கைப் பாதையில் நடைபோடத் தொடங்கினார், என்றாலும் பழைய நிழலாட்டம் கொஞ்சம் இருக்கத்தான் செய் தது. மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்தாள் அவர் மனைவி பத்மா. இப்படியிருக்கும் ஒருநாள்தான் வட்டிப் பணம் வாங்கச் சென்றார்.

‘சாங்கி’யில் வேலை செய்யும் தொழிலாளர் ஒருவர் வீட்டுக்குத்தான் போனார். ‘பஸ்’ஸை விட்டிறங்கி நடந் தார். சாங்கியிலுள்ள ‘ஜெயிலில்’ தான் பொன்னனை அடைத்து வைத்திருந்தார்கள். சிறைக்கூடத்தைப் பார்த்தவுடன் அவருடைய மனச்சாட்சி வேலை செய் தது. மனநிழல் அவரைத் துரத்தியது. வியர்த்து ‘விறுவிறுத்த’ நிலையில் ‘காரில் ஏறினார். ‘சடன் பிரேக். போட்டதனால் கார் குலுங்கியது. நிமிர்ந்து பார்த்தார்’ விளக்குக் கம்பம் ‘சிவப்பு’ ஒளியை உமிழ்ந்துகொண்டிருந் தது. அபாய அறிகுறியை அபசகுனமாகக் கருதினார். விடுவிடென்று வீட்டின் அறைக்குள் சென்று கட்டிலில் தொப்பென்று விழுந்தார். பக்கத்து அறையில் பத்மா பிரசவ வேலையிலிருந்தாள். மனநிம்மதியில்லாமல் அங்குமிங்கும் உழன்று கொண்டிருந்தார்.

சிங்கையின் எங்கோ ஒரு மூலைக்குப் போய்விட்ட கண்ணம்மாளும் ஏதோ ஓர் உணர்வால் வாழ்ந்து கொண்டிருந்தாள். இளம்பிள்ளை வாத நோய்க்கு இரையாக்கிவிட்டாள், தன் குலக்கொழுந்தை! பொன் னனைக் காணவேண்டும் என்ற ஆசையை அவள் மறந்து நீண்ட நாட்களாகிவிட்டது. அதற்கு, தான் அருகதை யற்றவள் என்ற எண்ணம் அவளுக்கு! பிள்ளையும் இல்லை – புருஷனும் இல்லை; ஏன்? தானுமில்லை என்ற உணர்வில் உலகில் எந்தவிதமான உறவுமற்ற நிலையில் உருக்குலைந்த உடலோடு உலவிக் கொண்டிருந்தாள். அப்படியானால் அவளை உயிர் வாழச் செய்கின்ற அந்த ஒன்றுதான் என்ன…? என்னவோ…!

கண்ணம்மாள் இப்போது பஞ்சாதர் வீட்டுத்தெருப் பக்கம் உலவிக் கொண்டிருந்தாள். ‘இந்தா இந்தா’வென இரண்டு மாதத்தை நெருக்கிப் பிடித்துத் தள்ளினாள். ஆம்; ஆச்சு அறுபதாம் நாள்…!

எங்கேயோ போய்விட்டுவந்த பஞ்சநாதர் கையில் சில விளையாட்டு பொருட்களுடன்… வீட்டுக்கு வந்தார் அங்கே… ‘பிள்ளையைக் காணோம்..’ என்று தலையில் அடித்துக் கொண்டு அலறினாள் பத்மா. படீர்…! அவர் கையில் வைத்திருந்த காற்றடைத்த பலூன் உடைந்தது. திட்டினார் – தேடினார்-ஓடினார்… அவருடைய வீடு அமர்க்களப்பட்டது. போலீஸில் ஓடிப்போய் புகார் செய்தார்…அதேசமயத்தில்…!

‘பிள்ளையோ பிள்ளை…! பிள்ளையோ பிள்ளை!’ என்று கூவி பிள்ளை வியாபாரம் செய்து கொண்டிருந் தது ஒரு பரட்டைத் தலை! ஐயோ பாவம்! பைத்தியம் புடிச்சிருக்கு என்று அங்கலாய்த்துக்கொண்டே சென் றார்கள் தெருவில் போனவர்கள். அதில் ஒரு நல்லவர் போலீசுக்கு போன் செய்தார்.

‘அது ஒரு சமயம் என்னுடைய பிள்ளையாகக்கூட இருக்கலாம். வாருங்கள் போய்ப் பார்க்கலாம்’ என்று போலீஸ்காரர்களை அழைத்துக்கொண்டு பிள்ளைச் சந்தைக்கு வந்தார். அங்கே.!

‘பிள்ளையோ பிள்ளை…! பிள்ளையோ பிள்ளை.. !’ என்ற சத்தம் கேட்டது. அதோ பாருங்கள்… அது என் பிள்ளைதான்…தன்னை மறந்து கத்தினார் பஞ்சநாதர்! கூச்சல் கேட்டுத் திரும்பிப் பார்த்த பரட்டைத் தலை- பஞ்சடைந்த கண்கள் – கந்தல் துணி-வெறி பிடித்த கண்ணம்மாள் சிறிதும் தாமதிக்காமல் கையிலிருந்த பிள்ளையைப் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தரையி லடித்தாள்…! வீல்…! ஐயோ…! பச்சிளங் குழந்தையின் மண்டை உடைந்தது…! எலும்பு முறிந்தது…! உடல் நசுங்கி தரையில் ஒட்டிக்கொண்டது. தலைதெறிக்க ஓடிவந்த பஞ்சநாதர், தடுக்கி ‘ஐயோ…! விழுந்து விட்டார். விழுந்தாள் தரையில்… அந்தப் பச்சை இரத் தத்தை உறிஞ்சினாள் கண்ணம்மாள்! கண்ணம்மாளின் வாயில் இரத்தம் வடிந்தது. பஞ்சநாதரின் தலையில் இரத்தம் கசிந்தது. இருவருமே சிரித்தனர். அந்தச் சிரிப்பில் வித்தியாசமில்லை. ஆம்…! இருவருமே பைத்தியத்தால் பயங்கரமாகச் சிரித்தார்கள்…!

இந்தப் பழிக்குப்பழி உணர்வுதான் அவளை வாழச் செய்தது. இந்தப் பயங்கர முடிவுக்காகத்தான் அவள் குழந்தையைத் தூக்கி வந்தாள். அவன் செய்த அட்டகாசத்துக்கு இந்தச் சிசு என்ன செய்யும்? ஆனால் அவன் துடித்துத் துடித்துச் சாக வேண்டும்…ஆகவே. பிள்ளையை விற்றுவிடுவோம்…’ என்று ஒரு கணம் தலை நிமிர்ந்து சிந்தித்தாள். அதன் விளைவுதான் ‘பிள்ளையோ பிள்ளை…!’ கூச்சல். கையும் மெய்யுமாகப் பிடிபடப் போகிறோம் என்றறிந்ததும் அவள் எதற்காக வாழ்ந் தாளோ… அந்த ‘ஆசை’யைத் தீர்த்துக்கொண்டாள்.

பைத்தியங்களைப் போலீசார் இழுத்துச் சென்றனர். ‘நாடகமே உலகம்… நாளை நடப்பதை யாரறிவார் தங்கமே’… என்று ஏதோ உளறிக்கொட்டியது அந்த ‘பஸ் ஸ்டாப்பில் இருக்கும் ஒரு ‘தாடிவாலா’—’பொத்தல் பனியன்’-‘கிழிசல் வேட்டி’-‘அரைப் பைத்தியம் …!’ அது வேறு யாருமல்ல…! பொன்னன்தான்!

– தமிழ் முரசு, 6-3-1960.

– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *