பிராயச்சித்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 1,149 
 
 

நகரின் மத்தியில் பிரம்மாண்டமானதொரு கல்யாண மண்டபம். பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். காமாட்சி-சுந்தரேசன் & சரவணன்-மீனாட்சி family welcomes you all என்ற போர்டு முகப்பில் வைத்திருந்தனர். ராகுல் weds ப்ரீத்தி என்ற போர்டும் இருந்தது. 

சரவணன் மீனாட்சியின் மகன் ராகுல். காமாட்சி சுந்தரேசனின் மூத்த மகள் ப்ரீத்தி. காதல் திருமணம். 

திருமணம் இனிதே முடிய அவரவர் புறப்படத் தயாராயினர். ப்ரீத்தி மிகவும் ஆனந்தமாக அங்குமிங்கும் ஆடி ஓடிக் கொண்டிருந்தாள். குடும்பத்தை பிரிந்து வேறொரு இடத்தில் வாழ்க்கைப் படப் போகிறோம் என்ற கலக்கம் துளியுமின்றி. 

காலில் விழுந்து வணங்கிய மணமக்களை ராகுலின் பெற்றோர் வாழ்த்தினர். மகராசியா இரும்மா என்று உச்சி முகர்ந்தாள் மீனாட்சி..

மாப்பிள்ளை எழுந்திரிங்க. என் பொண்ணு சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். 

இரண்டு வேன்கள் படகு போன்ற கார்கள் தயாராக இருந்தன. சம்மந்தி.. நீங்க மற்றும் உங்க வீட்டு ஆளுங்க  எல்லாரும் அந்த வேன்ல ஏறிக்கோங்க என்றார் ப்ரீத்தியின் அப்பா சுந்தரேசன்.  ராகுலும் ப்ரீத்தியும் ஒரு காரில் ஏற, காமாட்சி சுந்தரேசன் காரை பின் தொடர்ந்து ப்ரீத்தியின் வீட்டுக்கு சென்றன அனைத்து வாகனங்களும். ப்ரீத்தியின் வீட்டுக்கா என்று தானே யோசிக்கிரீர்கள்? வீட்டோட மாப்பிள்ளை என்றால் அதுதானே யதார்த்தம். 

ஒரு வாரம் முன்பு..

ராகுல் தம்பி உட்காருங்க என்றார் சுந்தரேசன். நான் சொல்றத கவனமா கேளுங்க. ப்ரீத்தி நீ சொல்லிட்டியாம்மா..

இல்லப்பா. நீங்களே சொல்லிடுங்க. 

ம்ம்.. நான் காதல் திருமணத்துக்கு எதிரானவன் இல்ல.  நானும் இவளோட அம்மாவுமே காதலிச்சித் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என் மாமனார் போட்ட ஒரே கன்டிஷன் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கணும்ங்கிறது தான். உங்களுக்கு மாமனாரா வரப்போகிற நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா.  PhD முடிச்சிருக்கிங்களாம். நம்ம காலேஜ்லேயே டிரஸ்ட்டியா பொறுப்பேத்துக்கலாமே. என்ன சொல்ரீங்க. 

அக்கா.. அக்கா.. ப்ளீஸ்..ப்ளீஸ் ஒத்துக்கச் சொல்லுக்கா. எனக்கும் PhD பண்ணனும்ங்கிறது  கனவு. மாமா கிட்டயே கோச்சிங் எடுத்துக்கிறேன்.

நீண்ட யோசனைக்கு பிறது யோசித்து சொல்றேன் என்று கிறம்பினான் ராகுல்.

மிகவும் சந்தோஷமாக ஓடியது ராகுல் ப்ரீத்தி வாழ்க்கை. அழகிய ஆண் குழந்தை 2 வயதில். மைத்துனி ஸ்வப்னா மாமா ராகுலிடம் PhDக்கான thesis அனுபவங்களை கற்றுக் கொண்டாள். காமாட்சி சுந்தரேசன் இருவரும் ராகுலை மரியாதையாகத் தான் நடத்தி வந்தனர் தன் மகள் ப்ரீத்தி இருந்த வரை..!!!?

ஆம், ப்ரீத்தி ஒரு முறை காரை தானே டிரைவிங் செய்து கொண்டு தனியாக வரும் சமயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அவளது உயிரை பறித்தது. 

நாட்கள் நகர்ந்தன. எதுக்குங்க இவன இங்க வெச்சிட்டு குப்ப கொட்டணும். என் பொண்ணே போய் சேர்ந்துட்டா. குளவி போல் கொட்டினாள் காமாட்சி. பல்வேறு வகையில் அவமானங்கள் தொடர்ந்தன ராகுலுக்கு. அவனது ட்ரஸ்ட்டி பதவியை பறித்தனர். ஸ்டாஃப் எதிரில் அடிக்கடி அவமானப் படுத்தப் பட்டான். 

மாமாவுக்கு ஆதரவாக ஸ்வப்னா எவ்வளவு சொல்லியும் பெற்றவர்களிடம் இவளது பேச்சு எடுபடவில்லை.

மாமா..அத்தை.. நேரடியாவே சொல்லிடுங்க. நான் இங்க இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலேன்னா. நான் போயிடறேன். 

ஓஹோ சிம்பாலிக்கா தினமும் சொல்றோமே புரியலையா உன் மர மண்டைக்கு. நீ எல்லாம் என்ன PhD முடிச்சியோ. கொழந்தைய குடுத்துட்டு கெளம்பு.

அது எப்படி மாமா. என் குழந்தை என் கூடத்தான் இருக்கும்.  நான் கெளம்பறேன் உங்களால முடிஞ்சதை பாத்துக்கோங்க என்று தனது அப்பா அம்மாவுடன் வந்து செட்டில் ஆனான்..

குழந்தையை தன் வசமாக்க.. நிதி தந்து நீதி பெற முயன்ற சுந்தரேசனின் முயற்சிகள் தோல்வி அடைந்தன. தந்தையிடமே குழந்தை வளறணும் என்ற தீர்ப்பு வந்தது. 

ஸ்வப்னாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம். வந்த வரன்கள் யாரும் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க சம்மதம் தெரிவிக்க வில்லை. அந்த கன்டிஷனில் ஸ்வப்னாவுக்கும் உடன்பாடில்லை.

ஒரு வழியாக வரன் ஒன்று அமைய…

Excuse me நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று கேட்ட ஸ்வப்னாவிடம்.. ஓக்கே என்று பால்கனிக்கு வந்தான் புது மாப்பிள்ளை கார்த்திக்..

ஒரே வாரத்தில் கல்யாணம் என்று நிச்சயித்து கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. ஸ்வப்னா தன் பெற்றோருடன் நகைக்கடை, புடவைக்கடை என்ற பம்பரமாக சுழன்றாள். 

ப்ரீத்திக்கு நடந்த அதே ப்ரம்மாண்டமான திருமண மண்டபம். முகூர்த்தத்தன்று காலை..

ஸ்வப்னா..ஸ்வப்னா என்று ஒப்பனை அறையில் இருந்தவளை கூப்பிட.. உள்ளே இருந்தால்தானே வருவாள்.. ஒரே களேபரம்..

செக்யூரிட்டி ஏம்ப்பா..ஸ்வப்னா..பாத்தியா.. கல்யாணப்பொண்ணு..நேற்று ரிசப்ஷன்ல பாத்திருப்பியே.. இதோ இவங்க தான்..

அய்யா..பாத்தேன்..கேட்டேன்.. என்னம்மா இவ்வளவு வேகமாக கார் எடுத்துட்டு எங்க  போரீங்கன்னு. ஏதோ wedding ring மாத்தணும்னு சொன்னாங்க அய்யா. செம ஸ்பீடா ஓட்டிட்டு போனாங்க காரை. மொபைல போன் போட்டு கேளுங்கய்யா.

காமாட்சி wedding ring எல்லாம் கரெக்டா தானே வந்திருக்கு..  போய் பாரு. Jwelleryக்கு போன் போட்டார் சுந்தரேசன்.

சார் இப்போ வரைக்கும் வர்ல. முகூர்த்தம் இன்னிக்கி தானே என்று கேட்டவருக்கு பதில் தராமல் போனை கட் செய்தார் சுந்தரேசன்.

காமாட்சிக்கு பீதி தொற்றிக் கொண்டது. ப்ரீத்தி கார் விபத்தில் மரணமடைந்த நாள் மின்னலடித்தது. என்னங்க எனக்கு பயமா இருக்குங்க. சீக்கிரம் போய் தேடுங்க. 

அவளுக்கு போன் அடித்தால் கட் செய்து கொண்டே இருந்தாள். போலீஸ் டிபார்ட்மென்டில் இவருக்கு தெரிந்தவர்களிடம் ஸ்வப்னாவின் நம்பரை கொடுத்து எங்கு டிராவல் ஆகிறது என்று கேட்டதில்.. ஒரு உண்மை தெரிந்தது. ராகுல் வீடு இருக்கும் திசை தான் அது. 

காமாட்சி கவலை படாத.  கண்டு பிடிச்சிட்டேன். அவ, அவன பாக்கப் போயிருக்கா.

யாருங்க? அவன்னா யாரு. 

அதான்டி உன் முதல் மாப்பிள்ளை.. 

அங்க எதுக்குங்க அவ போகணும். அதுவும் இந்த நேரத்துல. 

யாருக்குத் தெரியும். வா..போய் பார்க்கலாம்..

ராகுல் வீட்டில் ஸ்வப்னா.. 

மாமா எனக்கும் வீட்டோட மாப்பிள்ளையா பாத்துட்டாங்க. இன்னிக்கி தான் கல்யாணம். ஆனா நான் வேற முடிவு எடுத்துட்டேன். 

என்ன முடிவு? ஸ்வப்னா நீ பேசறது எல்லாமே தப்பு. சொல்லு என்ன முடிவு எடுத்திருக்க. யாரையாவது லவ் பண்றியா. அப்பா கிட்ட சொல்ல பயமா..

நான் பேசட்டுமா அவர்கிட்ட. மாமா ரொம்ப நல்லவரு ஸ்வப்னா. உங்க ரெண்டு பேர் மேலேயும் அவ்வளவு பாசம். அதனால் தான் வீட்டோட மாப்பிள்ளையாவே பார்க்கிறார். புரிஞ்சிக்கோ. 

அதெல்லாம் சரி மாமா. என் முடிவு என்னன்னு கேட்டீங்க இல்ல.. அக்கா போனதும் உங்கள எங்க வீட்ல எவ்வளோ அவமான படுத்தினாங்க. எல்லாத்தையும் தாங்கிட்டு இப்போ வரைக்கும் அவர் நல்லவருன்னு எப்படி உங்களால சொல்ல முடியுது. பாவம் கைக் குழந்தைய வெச்சிகிட்டு கஷ்டப்படரீங்க.

சித்தி.. சித்தி.. என்று ஓடி வந்து கட்டிக் கொண்டான் விஷ்ணு. 

என் கண்ணை தாண்டி என்னிக்காவது பேசி இருக்கீங்களா. உங்க சுண்டு விரல் கூட என் மேல பட்டதில்ல. You are a true gentleman மாமா.  சரி அத விடுங்க.

ஒரு வேளை எனக்கும் என் அக்கா நிலைமை ஏற்பட்டா? கண்டிப்பா உங்க நிலைமை தான் எனக்கு புருஷனா வரப்போரவருக்கும். எனக்கு பிறந்த குழந்தையும் தாயில்லாமல் வளரணுமா.. அந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணிண்சிங்க. அதனால.. அதனால..

அதனால என்ன? 

உங்களுக்கு மனைவியா என் அக்காவோட குழந்தைக்கு ஒரு தாயா நீங்களே என்ன கல்யாணம் பண்ணிக்கோங்க மாமா.. இது நான் உங்குக்கும் குழந்தைக்கும் செய்யிற பிராயசித்தம். ப்ளீஸ் மாமா புரிஞ்சிக்கோங்க.

சரியா சொன்ன ஸ்வப்னா என்று மீனாட்சி ஆமோதித்தாள்.  நானும் இந்தக் குழந்தைக்காக வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டுட்டே இருக்கேன். பிடி குடுத்து பேச மாட்டேங்கிறான். மகராசி உங்க அக்காதான் தெய்வமா இருந்து உன்ன இந்த முடிவு எடுக்க சொல்லிருக்கா.. சம்மந்தி வீட்டுக்காரங்க நல்லவங்கதான்டா நீ சொன்ன மாதிரி. பாவம் பொண்ண பறி குடுத்த சோகம். இப்படி நடந்துகிட்டாங்க. உன்னோட நிலைமை தெரிஞ்சி வேற எந்த பொண்ணாவது உன்ன கட்டிப்பாளாங்கிறது சந்தேகம். இதவிட நல்ல சந்தர்ப்பம் உனக்கு அமையாது ராகுல். அம்மா சொல்றத கேளு. ஸ்வப்னா சொல்றது தான் கரெக்ட்..

அம்மா நீ சும்மா இரு. அவள ஏத்தி விடாத. எமோஷனலா ஏதோ முடிவு எடுக்கிறா அவ.

சரி நீங்க சொல்வது எல்லாமே கரெக்ட்டுன்னே வெச்சிப்போம். மண்டபத்திலேந்து ஓடி வந்திருக்கா. பெத்தவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும். புதுசா வந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கிட்ட எவ்வளோ அவமானம்..

இதையெல்லாம் வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த காமாட்சியும் சுந்தரேசனும்..சபாஷ் மாப்பிள்ள. ஸ்வப்னா சொன்னா மாதிரி you are a true gentleman தான். எங்கள மன்னிச்சிடுங்க. இப்போ அவங்களுக்கு என்ன சமாதானம் சொல்றதுன்னே தெரியல என்று சொல்லிக் கொண்டிரும்போதே…

அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம் என்று கார்த்திக் உள்ளே நுழைந்தான். அன்னிக்கி பொண்ணு பாக்க வரும்போது ஸ்வப்னா எங்கிட்ட தனியா பேசணும்னு சொன்னாளே எதுக்கு தெரியுமா. அவளோட இந்த முடிவை சொல்றதுக்குத் தான்.. But I miss swapna.  இவ்வளோ நல்ல பொண்ணு எனக்கு மனைவியா அமையலேன்னு ஒரு சின்ன வருத்தம். But இவர்களை சேர்த்து வைக்க நான்  காரணமா இருந்ததனால் வருத்தம் போய் சந்தோஷமே மிஞ்சி இருக்கு..

அந்த நேரம் பார்த்து jewellery shop லிருந்து சுந்தரேசனுக்கு மொபைலில் அழைப்பு வர.. அய்யா உங்க பொண்ணு வந்தாங்க. புதுசா இரண்டு மோதிரம் வாங்கி வேற பேர் engrave பண்ணிட்டு போனாங்கய்யா. மாப்பிள்ளைய மாத்திட்டீங்களா. 

இல்லப்பா. நான் மாறிட்டேன். நீ phone வை..மாப்பிள்ளை நானே முன்னிருந்து உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன். But one condition..

அய்யோ மாமா.. மறுபடியும் வீட்டோடு மாப்பிள்ளையா..

ச்ச்சீச்சி.. இந்த முறை எல்லாமே என் சம்மந்தி விருப்பப்படி நடக்கணும். அதான் எங்க ஆசை. என்ன காமாட்சி சொல்ற.

சரவணனும் மீனாட்சியும் ரொம்ப சந்தோஷம் சம்மந்தி என்று சொல்ல.. ஸ்வப்னா  கையில் வைத்திருந்த மோதிரங்கள் கைமாறின. அதில் swapna weds ragul.. என்று engrave ஆகி இருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *