பாவத்துக்கு ஒரு பரிகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2021
பார்வையிட்டோர்: 7,795 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

kalki1980-09-21_0020-picஅலட்சியமாகப் பத்து ரூபாய் நோட்டைச் சரளா நீட்டியபோது, ”முப்பது பைசாவா இருந்தால் கொடும்மா – இல்லாட்டி இறங்கிடு!” என்று கறாராகச் சொன்னான் கண்டக்டர். அவன் எழுப்பிய விசில் ஒலியில் பஸ்ஸின் வேகம் குறையலாயிற்று.

சரளா தன் அடிவயிற்றில் ஒருவிதக் கலக்கம் தோன்றி நொடியில் உடல் முழுவதும் பரவுவதாக உணர்ந்தாள். இததனை பேர் பார்க்கும் போது. பஸ்ஸிலிருந்து இறங்குவது எத்தனை அவமானம் என்னும் உணர்வு அவளைப் பிய்த்தெடுத்த நேரத்தில் ஓர் இனிய குரல் உதவிக்கு வந்தது.

“இஃப் யூ டோன்ட் மைன்ட் உங்களுக்கும் சேர்த்து நான் டிக்கட் வாங்கிவிடட்டுமா?”

-முறுவலித்தபடியே சில்லறையை நீட்டினால் ஒருத்தி. கண்டக்டரின் மறு விசில் ஒலியில் பஸ், வேகமெடுத்து ஓடத் தொடங்கியது. “அப்பாடா’!’ சரளாவுக்கு அந்த நொடியில் ஒரு பெருச்சு; ஆசுவாசம், உதவிக்கரம் நீட்டிய பெண்ணைப் பார்த்த போது அதிர்ந்து நின்றாள்.

‘மாயா அல்லவா இவள்?’

மாயா எளிமையான உடையிலும் பளிசென்று காட்சியளித்தாள். களங்கமில்லாத சிரிப்பு மேலும் அவளுக்கு அழகூட்டியது. .

“ஆச்சரியமாக இருக்கிறதல்லவா மிஸ் சரளா? வழக்கமாக வேறு பஸ்ஸில் செல்வேன். இன்று நான் சற்றுத் தாமதமாகக் கிளம்பியதில் இந்த பஸ்… அதுவும் நல்ல தாயிற்று – உங்களைச் சந்திக்க முடித்ததே”

“நீங்க எந்த ஆபீசில் இருக்கீங்க?”

மாயா சரளாலைப் பார்த்து மெல்லச் சிரித்துவிட்டு, “நான் இப்போது ஒரு நர்ஸரிப் பள்ளியில் டீச்சர். நாம் ஐந்து ஐந்து மாதங்களுக்கு முன்பு சந்தித்தோமே. அதற்கப்புறம் எனக்கு எங்கிருந்தும் இண்டர்வியூ வரவில்லை ” என்றாள்.

“நர்ஸரிப் பள்ளியிலா? சம்பளம் என்ன கொடுக்கிறார்கள்?”

மாயா பதில் கூறவில்லை. சிரிப்புத்தான் பதிலோ என்னும்படி நகை காட்டினாள்.

“மிஸ் மாயா, நாம் பேட்டிக்குப் போயிருந்தோம் அல்லவா, ‘பாரத் எக்ஸ்போர்ட்ஸ்’ அந்த ஆபீசிலேயே எனக்கு வேலை கிடைச்சுடுத்து. அக்கவுண்ட்ஸ் ஆபீஸராக கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம். நிறையப் பொறுப்புக்கள்!” என்று பெருமிதமாக, ஆனால் அலுப்படைபவள் போலச் சொன்னாள் சரளா. “உங்களுக்குப் பரவாயில்லை. மிஸ் மாயா, சின்னக் குழந்தைகளோடு அவர்களின் மழலைகளோடு,.. வாழ்க்கை உற்சாகமாக இருக்குமே..?”

விரக்தியாக சிரித்தாள் மாயா. பேச்சைத் திசை திருப்பி, ”ஒரு நாள் என் வீட்டுக்கோ அல்லது எங்களது நர்ஸரி பள்ளிக்கோ வாருங்களேன்” என்றாள்.

“ஓ எஸ்!”

விலாசத்தைக் கேட்டறிந்து விடைபெற்று பஸ்களிலிருந்து கீழிறங்கியபோதுதான் மாயா அதிர்ந்து குலுங்கும்படியான அந்த விபத்து சற்றும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்தது.

படிக்கட்டில் ஒரு கால் வைத்து மறுகாலைப் பூமியை நோக்கி நீட்டி சரளா இறங்குவதற்குள் பஸ் நகர, தட்டுத் தடுமாறி அவள் தரையில் விழுந்தாள், சாலையோரம் எதற்கோ பதித்திருந்து வெளியில் உயரமாக நீட்டிக் கொண்டிருந்த பாருங்கல்லில் சரியாக அவள் தலை மோதி இரத்தம் வேகமாகப் பீறிடத் தொடங்கியது.

‘ஓ’வென்ற அலறலுடன் பஸ்ளை நிறுத்தி, பாய்ந்தோடி வந்த மாயா சரளாவின் தலையைத் தாங்கி மடியில் வைத்துக்கொள்ள நொடியில் கூட்டம் சூழ்ந்து “என்னது?… என்னது” என்று கேள்வி கேட்க ஆரம்பித்தது.

***

‘பாரத் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் நேர்முகப் பேட்டிக்கு அழைக்கப்பட்டு வந்திருந்தவர்கள் ரெண்டே பேர்; விண்ணப்பங்கள், புகைப்படங்கள் யாவும் பரிசீலிக்கப்பட்டு பிரதித் தேர்வில் சரளாவும் மாயாவும் அழைக்கப்பட்டிருந்தனர்.

kalki1980-09-21_0019-picதொள்ளாயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்த எடுப்பிலேயே சம்பளம் கிடைக்கக்கூடிய நல்ல வேலை. எப்படியும் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை இருவர் மனத்திலும் இருப்பினும் கவலையும் கூடவே இருந்தது. இருப்பதோ ஒரேயொரு பதவி. யாருக்குக் கிடைக்கும்?

நிர்வாகத்துக்கே குழப்பமாக இருந்தது. படிப்பில் இருவருமே ஏறக்குறைய சமமான மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். தோற்றம் அழகு, கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்த விதம் எல்லாவற்றிலும் கிட்டத் தட்ட சமமாக இருந்த இருவரில் யாரை வேலைக்கு நியமிக்கலாம். ஒரு வாரத்தில் முடிவினைத் தபால் மூலமாகத் தெரிவிப்பதாகச் சொல்லி யனுப்பினார்கள்.

சரளாவும் மாயாவும் அன்றைக்கு அறிமுகம் ஆனவர்கள்தாம். ஒருவரை யொருவர் ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று வாழ்த்தியபடி பிரிந்தனர்.

மறுதினம் அஞ்சலில் ‘பாரத் எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் அவர் தலைவலியை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிவிட்டதென்றே கூறலாம்.

“மதிப்புக்குரிய ஐயா,
இன்று தேர்முகத் தேர்வுக்கு வத்திருந்த மாயா எழுதுகிறேன். வேலை செய்து சம்பாதித்துத்தான் ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எதுவும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். ஏதோ படித்துவிட்டு வீட்டில் சும்மா பொழுது போக்க வேண்டாமே என்று உங்கள் கம்பெனி விளம்பரத்தைப் பார்த்ததும் வின்ணப்பம் போட்டு வைத்தேன், ஒருகால் எனக்கு நீங்கள் வேலை கொடுத்தாலும் கூட விரைவில் நடைபெறவிருக்கும் எனது திருமணத்துக்குப் பின் நான் வேலையை ராஜினாமாச் செய்ய விரும்புகிறேன்.

என்னோடு இன்று பேட்டிக்கு வந்திருந்த சரளா பாவம் ஏழைப் பெண்! முத்தவளான அவளது கையை நம்பித்தான் அவளது பெரிய குடும்பம் இருப்பதாகத் தெரிகிறது. அந்த ஏழைப் பெண்ணுக்குத் தங்கள்
அலுவலகத்தில் பதவி அளிப்பீர்களானால் மகிழ்வேன்.

–மாயா

எம். டி. குழம்பினர். மாயாவுக்குப் பதவி தரப்பட்டால் திருமணத்துக்குப் பின் அவள் ராஜினாமாச் செய்துவிடலாம். இன்னொரு இன்டர்வி நடத்த வேண்டும். அந்தப் பதவிக்குத் தருந்தபடி – தோற்றம் – அறிவு எல்லாம் உள்ள பெண்ணாகத் தேட வேண்டும். கடிதப்படி அந்த ஏழைப் பெண் சரளாவுக்கே வேலை தந்து விடலாமா? இந்தக் கடிதம் கூறுவது உண்மையாக இருக்குமா? பல குழப்பங்கள்.

ஒரு வாரம் சென்றது. சரளாவுக்குப் பணி நியமன உத்தரவு அனுப்பப்பட்டது.

***

மேலே மின்விசிறி சுழல்வது மங்கலாகத் தெரிந்தது. ‘நான் எங்கே இருக்கிறேன்?’ சரளா முனகிப் புரண்டாள்.

வெள்ளை உடை நர்ஸ் ஒருத்தி சரளாவில் அருகில் வேகமாக வந்தாள். “தலையை அசைக்காதீங்க. ஸூச்சர் போட்டிருக்கு. பலமான ஹெட் இன்ஜரி’ என்று கூறியபடி மணிக்கட்டில் நாடித்துடிப்பைப் பார்த்தாள். தெர்மா மீட்டரை வாயில் செருகினாள்.

டாக்டர் வந்தார். பரிசோதித்துவிட்டுக் கூறினார்: ”அபாய நிலைமை தாண்டியாகி விட்டது. நிறைய ரத்தம் சேதமாகியிருப்பதால் உடம்பு பலவீனமாகியிருக்கு. அவ்வளவுதான். ஓய்வு எடுத்து, புஷ்டியான ஆகாரம் சாப்பிட்டால் சரியாகிவிடும்…”

சரளா சாதாரன நிலைக்குச் சில தினங்களிலேயே திரும்பினாள். மண்டையில் போடப்பட்ட தையலைப் பிரித்தார்கள். இரண்டொரு தினங்களில் ‘டிஸ்சார்ஜ்’ செய்வதாக டாக்டர் கூறிவிட்டார்.

ஒரு மாகப் பொழுது.

“ஹலோ, எப்படி இருக்கீங்க மிஸ் சரளா?”

இனிமையான குரல், தமிர்த்து பார்த்தாள்.

மாயா நெஞ்சில் ஒரு பந்து உருண்டையாய் அடைத்துக் கொண்டது. அருகில் வந்த மாயாவின் கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு அழத் தொடங்கினாள் சரளா.

“மாயா! நீங்க என்னைக் கொண்டு வந்து அட்மிட் செய்தீங்க, அவசரத்துக்கு உங்க ரத்தத்தையும் கொடுத்து உதவியிருக்கிங்க, என் அலுவலகத்துக்குப் போன் செய்து விட்டு விலாசம் கண்டுபிடித்து விவரம் தெரிவித்து… அப்பப்பா! நான் இன்னிக்கு உயிரோடு இருக்கிறேன் என்றும் நீங்கதான் இதற்குக் காரணம்… நீங்க ரொம்ப உயர்ந்தவர் மிஸ் மாயா!”.

“காம் டொன் மிஸ் சரளா! உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ சொல்றீங்க. ஆபத்துச் சமயத்தில் யாராக இருந்தாலும் செய்கிற சாதாரணக் கடமைகளைத்தான் நான் செய்தேன், அவற்றைப் பெரிசு படுத்தறது தப்பு!”

“பெரிசு படுத்துகிறேனா?.. இல்லை மாயா! நான் உள்ளதைத்தான் சொல்கிறேன், நீங்க என் உயிரையே மீட்டுக் கொடுத்திருக்கீங்க… ஆனால் நான் உங்களுக்கு என்ன செய்தேன் தெரியுமா – பச்சைத் துரோகம்! இப்போது நான் பார்க்கும் உத்தியோகம் இருக்கே. அது நியாயமாக நீங்க பார்க்க வேண்டியது. நாமிருவரும் இண்டர்வியூ வுக்குப் போய்விட்டு வந்தோமே அன்று பிற்பகல் நீங்க எழுதின மாதிரி நான் ஒரு கடிதம் எழுதி ‘பாரத் எக்ஸ்போர்ட்ஸ்’ எம்.டி.க்கு அனுப்பினேன், அந்தக் கடிதத்தில்…”

மாயா நிதானமாகக் குறுக்கிட்டுச் சொன்னாள், “நான் பணக்காரப் பெண், திருமணமானதும் வேலையை ராஜினாமா செய்துவிட இருக்கிறேன், ஏழைப் பெண் சரளாவுக்கு அந்த வேலையைக் கொடுத்தால் அவளின் பெரிய குடும்பத்துக்குப் பேருதவியாக இருக்கும்… இந்த மாதிரி சரளாவாகிய நீங்கள் மாயா என்ற நான் எழுதுவது போல் கடிதம் எழுதினீர்கள் – அதன்படி உங்களுக்கு வேலை கிடைத்தது. சரிதானே?”

தூக்கி வாரிப் போட்டது சரளாவுக்கு.

“அது.. அது…உங்களுக்கு …”

“எப்படித் தெரிந்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன். இண்டர்வியூ நடந்த நாலாவது தினம் என்னை நேரில் வரச் சொல்லி ஒரு கடிதம் அந்தக் கம்பெனியிலிருந்து வரவே நான் சென்றேன். உங்கள் கடிதத்தை என்னிடம் கொடுத்து நான் எழுதியது தானா என்று கேட்டார்கள். படித்த பொழுது உங்கள் குயுக்தியான கருத்து புரிய வந்தது. அதை நான் எழுதவில்லை என்று கூறியிருந்தால் எனக்கு அந்த வேலை கிட்டி யிருக்கலாம். ஆனால் யோசித்தேன், குடும்பக் கஷ்டம் எனக்குப் பழக்கமானது தான். உங்கருக்கு என்ன கஷ்டமோ. பாவம், வேலை கிடைப்பதற்காக இந்த மாதிரி ஒரு முறையைக் கையாண்டிருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டேன். அந்தக் கடித்ததை நான் தான் எழுதியதாகவும், வேலையை உங்களுக்கே தருமாறும் சிபாரிசு செய்துவிட்டுத் திரும்பிவிட்டேன்.”

பேச வாய் வராமல் கண்களில் நீர் பெருகி வழிய அமர்த்திருந்தாள் சரளா. திடுமென ஆவேசம் வந்தவள் போன்று பேசினாள்:

“என் சதிச் செயல்கள் தெரிந்த பிறகுமா காட்டிக் கொடுக்காமல் எனக்கே வேலை கிடைக்கச் செய்துவிட்டுத் திரும்பினீர்கள்? பஸ்ஸில் சில்லறை கொடுத்து உதவினீர்கள்? மண்டை உடைபட்டுக் கிடந்தவளைத் தூக்கி வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தீர்கள்? இரத்தம் கொடுத்துக் காப்பாற்றினீர்கள்? மாயா! உங்கள் முன்னே நிற்கவே அருகதை யற்ற புமுதி தான், எனக்கு மன்னிப்பே கிடையாது. இப்போதே எங்கள் எம்.டி. யிடம் உண்மையைச் சொல்லப் போகிறேன். காலில் விழுந்தாவது அந்த வேலையை உங்களுக்கு வாங்கித் தந்தால் தான் என் பாவங்களுக்கு நிவர்த்தி கிட்டும்!” – புலம்பினாள்

மாயா எழுத்தாள். “மிஸ் சரளா! பாவங்களுக்கான பரிகாரமும், நான் செய்த உதவிகளும் பரஸ்பரம் ஒரு பண்டமாற்று வியாபாரமாகிப் போவதை நான் விரும்ப வில்லை. லெட் காட் ப்ளெஸ் யூ!”

மெல்ல நடந்து அறையினின்று வெளியேறும் மாயாவை ஒரு சிலை போல் அமாந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சரளா.

– 21-09-1980

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *