கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2021
பார்வையிட்டோர்: 4,300 
 

மணி பத்தைத் தாண்டிவிட்டது. ஆனால் இருவரும் அவரவர் இடத்தை விட்டு நகரவில்லை. சமையல் எப்பவோ ஆறிப்போயிருக்கும். ஆனால் சாப்பிட இருவருக்குமே தோன்றவில்லை. வாழ்க்கையில் ஒரு இடைவெளிக்குப் பின் பசி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பழக்கத் துக்குப் படிந்ததாய்ப் போய் விடுகிறது. சாப்பிடற வேளையா, சரி, சாப்பிட்டுத் தொலை, காரியத்தை முடி.

பேச்சுக்கூட, கொஞ்ச நேரமாக அவர்களிடையே அடங்கிவிட்டது. சண்டை பூசல் கிடையாது. வாக்குவாதம் அவர்களிடையே அதிகம் நேர்வதுமில்லை.

யோசனை? அதற்கென்ன, முடிவே இல்லை என்கிறோம். அதுகூட தொடர்ந்த கோடியை அடைந்த வுடன், அதை மறித்து, வெறித்த மதிலில் முட்டிக்கொண்டு நின்று விடுகிறது. சற்று நேரம்தான் அப்படி; என்றாலும் யுகக் கணக்கில் அங்கேயே சிக்கிக் கொண்டாற் போன்ற சலிப்பு.

சுவர்க்கடியாரத்தில் வினாடிகள் நொடித்தபடி.

“டொக் டொக்.” -?

“பொக் பொக்.”

இப்போது சந்தேகமேயில்லை. ஆனால் யார் எழுந்திருப்பது?

எழுந்து போய் வாசற்கதவைத் திறந்தாள்.

வாசலுக்கெதிரே கம்ப விளக்கு வழக்கம் போல் ‘அவுட்’. நிழலினிருட்டில் உருவக்கோடு பலவீனமாய்த் தெரிந்தது.

“ஸ்வேதாரண்யம் வீடு இதுதானா?” பலஹீனம். ஆனால் மெருகிட்ட உச்சரிப்பு.

“ஆமாம். நீங்கள் யார் என்று சொல்ல?”

“நான் நான் – ஸ்வேதா இருக்கானா?”

“இருக்கார். உள்ளே வாங்கோ.”

ஆள் உள் வெளிச்சத்துக்கு வந்து விட்டான். சற்று உயரமாய், மெலிந்த உருவம். க்ஷவரம் செய்யாமல், மயிர் முட்கள் முகத்தில் ஒழுங்கிலாது படர்ந்திருந்தன. என்ன அகலம் நெற்றி! அவள் வியக்கும் வண்ணம், அதன் வரைகோடு பெருந்தன்மையில் உயர்ந்து மேலே அடர்ந்த சுருள் காட்டுக்கு வரை கட்டிற்று. பல நாள் சீவாது சிக்குப் பிடித்த சிகை. ஆடையும் அழுக்காய், கசங்கி அசிரத்தை காட்டிற்று. குளிச்சு எத்தனை நாளாச்சோ , ஸ்வேதாவின் பேரைச் சொல்லிக் கொண்டு கௌரவப் பிச்சையோ? இதற்குள் ஸ்வேதா வந்து விட்டான். வந்தவனைப் பார்த்துச் சற்றுநேரம் திகைத்து நின்றான்.

“யாரு?”

வந்தவன் பேசவில்லை . அந்த விழிகளில் மங்கிய தணல் கங்கிற்று. ஸ்வேதாவின் உள்ளே பாம்பின் வால் சுழல்வது போல் கிளர்ந்தது.

“நீங்கள் – நீங்கள் – நீ -நீ வ்யாஸ் இல்லையோ? யெஸ், மை காட், வ்யாஸ் என்னடா?” வந்தவனை அப்படியே இறுகக் கட்டிக் கொண்டான்.

“வஸு, வ்யாஸைத் தெரியல்லியா? ஓ, இல்லை, உனக்குத் தெரிய நியாயமில்லை . நமக்குக் கலியாணமாகும் முன்னரே இவனும் நானும் பிரிஞ்சுட்டோமே! வா, வா வ்யாஸ், என்ன இப்படி ஆயிட்டே?”

கையைப் பற்றி இழுக்கையில், வ்யாஸ் அவன் மேல் கனமாய்ச் சாய்ந்தான்.

“அடேடே! என்ன ஆச்சு?”

“சாப்பிட்டு மூணு நாள்” வந்தவனின் பேச்சு மூச்சாய் ஒடுங்கிப் போனது.

“மை காட்!” ஸ்வேதா, நண்பனைத் தாங்கிக் கொண்டு போய் ஸோபாவில் கிடத்தினான்.

“வஸு! ஏதேனும் ட்ரிங்க் கொண்டு வா!”

“லைமா? நல்லது. லேசாய் உப்புப் போடு. அதான் தென்பு தரும். வ்யாஸ் குடி – மெல்ல மெல்ல. மெதுவா – ஸிப், பரவாயில்லே .”

வ்யாஸின் கண்களில் ஒளி ஊறுவது தெரிந்தது. எழுந்திருக்க முயன்றான்.

“அவசரமேயில்லை. படுத்துக்கோ. வஸு, மோருஞ் சாதம், ரெண்டு தம்ளர் கணக்கில் மையாக் கரைச்சு, திப்பி யைப் பிழிஞ்சு எரிஞ்சுட்டுக் கொண்டு வாயேன். பட்டினி கிடந்த உடம்புக்குக் கரைச்ச மோருஞ்சாதத்துக்கு மிஞ்சின ஒளஷதமில்லை , அமிர்தமுமில்லை .”

அதைக் குடித்த சற்று நேரத்துக்கெல்லாம் விருந்தாளி யின் விழிகள் செருகின. அவனுடைய அயர்ந்த தூக்கத்தை இருவரும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

“வஸு, வ்யாஸ் எப்படிப்பட்டவன் தெரியுமா? சொக்கரப்பொன், ஏன் இப்படி ஆனான், தெரியல்லியே! சரி நாளைக்குப் பார்த்துக்கலாம். வா , சாப்பிடப் போவோம்.”

வஸுதாவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டாள். தூக்க மாத்திரை போட்டுக்க வேண்டியதுதான். ஆனால் இப்பவே மணி ஒண்ணுக்கு மேலாச்சு. இனிமேல் போட்டு, எப்போ மாத்திரை பிடிச்சு எப்போ தூக்கம் வரது? அப்படியே வந்தாலும் காலையில் அடிச்சுப் போட்ட மாதிரி ஆயிடும்.

ஏதோ உந்தலில் சட்டென எழுந்து ஹாலுக்கு வந்தாள். விருந்தாளி எப்படியிருக்கான்?

ஸோபாவில் மல்லாந்து கட்டையாய்க் கிடந்தான். பக்கத்தில் போய்ப் பார்த்தாள். பகீரென்றது.

“ஸ்வேதா !” இல்லை – அடக்கிக் கொண்டாள். இன்னும் கிட்ட வந்து நோக்கினாள். நைட் பல்பின் நீலத்தில் மார்பின் லேசான மிதப்பல் – மூச்சுத் தானே? தூக்கத்தில் ஏதோ குழந்தைத்தனம் – அபலை நிலை; எடுத்து அடைத்துக் கொள்ளணும் போல் – கூடவே அவனைப் பார்க்க அச்சமா யிருந்தது. இது விலங்குத் தூக்கம்; இந்த அயர்வுக்கடியில் ஒரு விழிப்பு காவல் காப்பதுபோல்…….

அரைக் கண்மீது ரப்பைகள் சுருண்டன. ஏதோ முனகிக் கொண்டு புரண்டான். அதற்கு மேல் அவளுக்கு பயமாயிருந்தது. மீண்டாள்.

பக்கத்தில் உறங்கும் ஸ்வேதாவைச் சிந்தித்தாள். ஸ்வேதா பக்கத்தில் படுத்திருப்பதே ஒரு கேலிக்கூத்து! ரியலி ஹேண்ட்ஸ ம் மேன். ஆம், வந்திருக்கும் விருந்தாளியை விட ஸ்வேதாவும் தூக்க மாத்திரைக்காரன்தான். ஒருவருக்கொருவர் தெரியாதென்று ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருக்கும் நெடுநாளைய பழக்கம்.

அவளுடைய முழங்கை வளைவில் நெற்றிப் பொட்டு கொதித்தது. தூக்கம் போல் ஏமாற்றும் கண் எரிச்சலின் மயக்கத்தில் இரண்டு பிஞ்சுக் கைகள் கழுத்தைக் கட்டிக் கொண்டு காதோரம் “ஆன்ட்டி!” என்று கேட்டது. “பாப்பூ!” எதிர்க்குரல் வாய்விட்டே வந்து விட்டது. இது நினைப்பின் ஏமாற்று – உடனேயே தெரிந்துவிட்டது. பாலைவனத்தில் தவிப்பவனுக்கு நீரோடையும் சோலையும் கானல் தெரிய மாமே!

எதிர் வீட்டார் குடித்தனம் பெயர்ந்த ஒரு வாரமாய் இது மாதிரி பிரமை சற்று அடிக்கடி நேர்ந்து கொண்டிருக் கிறது. கவனம் மாற, பதில் குடித்தனம் இன்னும் வரவில்லை . கவனம் மாறுமோ?

வந்து நான்கு மாதங்கள் தான் இருந்தார்கள். கணவன், மனைவி இருவருமே உத்யோகம். அவளுக்கு வங்கியில். சொந்த வீடு கட்டியாறது, வங்கிக் கடனில். “வீடு தயா ரானதும் போயிடுவோம்.” தயாராகி விட்டது. போய் விட்டார்கள், பழுக்கக் காய்ச்சிய குழந்தை நினைவை அவள் நெஞ்சில் உழுதுவிட்டு. ஓரொரு சமயம் இந்த புதுத்தனிமை பைத்தியமே பிடிச்சுடும் போலிருக்கு.

“வீட்டுக்கு வாங்கோ மாமி!” விலாசம் கொடுத்து, கிருஹப்ரவேசத்துக்கு அழைத்து விட்டுத்தான் போனார்கள். ஆனால் அவள் போகல்லே. பயம், பாப்பூவின் நினைப்புக்கு. இப்பவே தப்பிக்க வழியில்லை. போனால் அப்புறம் அடிமை தான். பாப்பூ போதைக்கு , இப்பவே நெஞ்சில் உதிரம் கொட்றது. போய் வளர்த்துக் கொண்டால் ஆறாத புண், புரை கண்டுவிடும். அவளுக்கு மறக்க முடியவில்லை .

ஆனால் அவர்கள் மறந்து விடுவார்கள். குழந்தையும் மறந்து விடுவாள். நாம் பரஸ்பரம் உபயோகப்படுத்தப்படத்தானே இருக்கோம்!

இருந்தாலும் பாப்பூ மாதிரி பாப்பா பார்ப்பது அரிது தான். அது குழந்தையாகப் படவில்லை . ஏதோ அவதாரம். வயதுக்கு மீறின அறிவு. அதே சமயம் வெம்பல் இல்லை . சொப்புப் போன்ற உருவம். ரெண்டு வயசுக்கு எப்படிக் கொழகொழன்னு இருக்கணும்! சிறு கூடாய், தந்த விக்ரஹத் தில் காணும் சிற்ப நுணுக்கங்கள் போன்ற முக, அங்க லக்ஷணங்கள். கட்டை மயிர் செழிப்பாய் வழிந்து, ஃப்ரேம்

போட்டாற் போன்ற முகம்.

குடிவந்த அடுத்தநாளே, காலையில் அப்பாவும் பெண்ணும் – அவர் கைவிரலை அவள் பிடித்துக்கொண்டு அவள் வீட்டைத் தாண்டி எங்கோ போய்க் கொண்டிருக்கை யில் காற்று வாக்கில் அவர்கள் பேச்சு மிதந்து வந்தது.

“இது என்ன செடி, பாடி?”

“ஓ, இது இங்கு இருக்கா? இதன் பேர் தொட்டால் சிணுங்கி. பாப்பூ இப்ப பார் ஒரு வேடிக்கை. இதைத் தொடு. உடனே மூஞ்சியைத் தொங்கிக்கும்.”

“கோவிச்சுண்டா?”

“சரி, அப்பிடித்தான் வெச்சுக்கோயேன்! அம்மாவோ நானோ கோவிச்சுண்டா, நீ வெச்சுக்கறையே, அதுமாதிரி! தொட்டுத்தான் பாரேன்!”

கையைத் தூக்கிவிட்ட குழந்தை சற்று யோசித்துவிட்டு “வேண்டாம்பா, அதை டிஸ்டப் பண்ண வேண்டாம், அது தூங்கட்டும்.”

அவர்கள் போய்விட்டார்கள், வஸு அசந்து போனாள்.

காலை ஒன்பது மணிவாக்கில் அப்பா, அம்மா, பாப்பா மூவரும் பைக்கில் ஏறிக்கொண்டு போவது ஜன்னல் வழி தெரிகிறது. எங்கே போகிறார்கள்? அவரவர் வேலை பார்க்கிற இடத்துக்குத்தான். குழந்தை? அதுக்குள்ளேயும் பள்ளிக்கூடமா ? இப்ப என்னதான் அக்ரமம் நடக்கல்லே? ரெண்டுபேரும் வேலைக்குப் போறவாளுக்கு சௌகர்யமா க்ரச்! இல்லை ‘க்ரீச்சா? – குழந்தைகளை ஒரு இடத்தில் அடைக்கப்போட்டுப் பார்த்துக் கொள்ளும் இடம் இருக்கே! காசைக் கொடுத்தால் இந்த நாள் என்னதான் கிடைக்கல்லே! ஆமா, நான் கூட ஒண்ணு அப்படி ஆரம்பிக்கலாமே! வஸுக்குத் திடீரென்று தோன்றிற்று. எனக்கு காசு வேண்டாம். கச்சிதமாய் ரெண்டு அல்லது மூணு குழந்தை கள், அதற்கு மேல் இந்த வீட்டில் இட வசதி கிடையாது.

– அது கூடாது. ஒரு குழந்தைதான் வேணும். என் பாசம் பத்து குழந்தைகளுக்குப் பங்காக முடியாது, கூடாது. ஒரு குழந்தை, அதன் மேல் குடமாக் கொட்டணும், அம்பாளுக் குப் பால் அபிஷேகம் பண்ற மாதிரி. அதுவும் பெண் குழந்தையாத்தான் இருக்கணும். அம்பாளே குழந்தையா, பாப்பூ மாதிரி. எனக்கும் அம்பாள் கிடைக்க மாட்டாளா? அவளுடைய தூய்மையில் எப்பவுமே அவள் கண்டெடுத்த குழந்தையாய்த்தான் இருக்க முடியும். ‘பொன்னிமயச் சாரலிலே பூத்தமலர் மேடையிலே மன்னு சங்கினுள்ளே’ கண்டெடுத்த குழந்தையாக ஒரு ஸ்தல புராணம் சொல்கிறது. அவளை ஒரு ரிஷி எடுத்து வளர்த்தாராம். எனக்குத்தான் கொடுத்து வெக்கல்லே. கிடைக்கவாவது மாட்டாளா? அம்மா தாங்க முடியல்லியே!

தலையணையில் முகம் புதைந்தது. அடக்க முயன்ற விக்கல்களும் தேம்பல்களும் அவளை உலுக்கின.

என் நிலைமைக்கு யாரும் ஒண்ணும் பண்ண முடியாது.

முகத்தில் அடித்த வெயில்தான் அவளை எழுப்பிற்று. ”அட, இவ்வளவு நாழி ஆயிடுத்தா என்ன? கீழே இறங்கிப் போனாள். ஃபில்டரிலே இறங்கி டிகாக்ஷனும் பாலும் பாதிக்குமேல் காலியாகியிருந்தன. தன் காபியைக் கலந்து கொண்டு, தம்ளருடன் ஹாலுக்கு வந்த போது ஸ்வேதா வும் விருந்தாளியும் பேசிக் கொண்டிருந்தனர். அவளைக் கண்டதும் ஸ்வேதா, “வ்யாஸ், மீட் மை ஒய்ஃப் வஸுதா.”

வ்யாஸ் எழுந்து நின்று கைகூப்பினான். முகக்ஷவரமும் ஸ்னானமும் உடைமாற்றமும் (ஸ்வேதாவுடையது) இத்தனை மாற்றம் தருமா என்ன? ஆனால் இந்த ஆளிடம் ஏதோ சரியில்லை. வரைந்த உருவக் கோடை எச்சிலைத் தொட்டு அழித்த மாதிரி, எப்படியோ கசங்கியிருந்தான். ஒருவிதமான அநிச்சயம், எந்த சாக்கில் கரைந்து காணாமலே போய் விடுவானோ? சோகம் அவனை மேகம் சூழ்ந்திருந்தது.

“வஸு, வ்யாஸும் நானும் காலேஜிலிருந்து நண்பர்கள். வ்யாஸ் இவனுக்கு இட்ட பேர் இல்லை.”- ஸ்வேதா சிரித்தான். “எங்கள் பால்யத்தில் நாராயண் ராவ் வ்யாஸ்னு ஒரு சங்கீத விதூஷக்; படா மவுஸ். அவனுடைய கிராம ஃபோன் ரிக்கார்டுகள் அந்த நாளில் ஹாட் கேக்ஸ். அருமை யான குரல். கொஞ்சம் பெண் கலந்திருக்கும். பிர்க்காவைக் கொட்டுவான் பாரு.” ஸ்வேதா சிலிர்த்துக் கொண்டான். “அடேயப்பா! அத்தனையும் மத்தாப்பு – விதவிதமாய்க் கலர் பூ, நக்ஷத்திரங்கள். இவன் தன் ஸ்வயப் பேரை ‘வ்யாஸ்’னு மாத்திண்டான்னா வ்யாஸ் சங்கீதத்தில் இவனுக்கு எவ்வளவு மோகம் இருக்கணும் பார்.”

புன்னகை புரிந்தாள்; “எனக்கு சங்கீதத்தில் உங்க ரெண்டு பேர் மாதிரி அத்தனை ஈடுபாடு கிடையாது. உங்களுக்கே தெரிஞ்ச விஷயம். கலியாணப் பாட்டோடு சரி. நீங்கள் பெண் பார்க்க வந்தபோது என் பாட்டில் உங்கள் ஏமாற்றம் உங்கள் முகத்திலேயே தெரிஞ்சு, இந்த வரன் கூடாமல் போயிடுமோன்னு என் வீட்டில் பயந்து போனா, பெருமாள் புண்ணியம், பெரியவாள் பேச்சைத் தட்டாமல் நம் கல்யாணம் நடந்துடுத்து. அதுக்கே தனியா கோவில்லே அங்க ப்ரதஷணம் பண்ணினேன்.”

“வஸு, வ்யாஸே ப்ரமாதமாய்ப் பாடுவான். குரல் கல்கண்டு. வ்யாஸ், நீ பாடிக் காண்பிக்கணும். எப்போ பாடினாலும் நாங்கள் ரெடி எப்படியும் நான் ரெடி. கேட்டு எத்தனை நாளாச்சு! இப்பவே ப்ளீஸ், ப்ளீஸ்.”

“பாட்டும் சிரிப்பும் என்னிடமிருந்து ஓடிப் போயாச்சு.”

ஸ்வேதாவின் உற்சாகம் உள்ளுக்கு வாங்கிற்று. “ஐ ஆம் ஸாரி, வ்யாஸ்.”

“என் பேரே எனக்கு இப்போ விஷமாயிருக்கு. நான் கருகிப் போயிட்டேன்.”

“ஆமாம் வ்யாஸ், உனக்கு என்னமோ நடந்திருக்கு , என்ன து அது?”

“ஜோதி”

இருவரும் காத்திருந்தனர். ஆனால் அதற்கு மேல் வரவில்லை.

ஸ்வேதா, சன்னமாய் “ஜோதி?” விருந்தாளியின் விழிகள் நிறைந்தன. “இறந்து போனாளா?” “இல்லை, விட்டுட்டுப் போயிட்டா.”

வஸு, ஸ்வேதா இருவரும் வாயடைத்துப் போயினர். என்ன பதில் சொல்ல முடியும்? எதைச் சொன்னாலும் அனுதாபம் ஆகாது சரியாயிருக்காது. அவள் செத்துப் போயிருந்தாலே தேவலை. ஓடிப் போனவளானால் என்றுமே ஆறாத புண்தான். அதுவும் சமீபமாயிருந்தால் பச்சைப்புண்தான்.

ஆனால் ஜோதி யார்? காதலியா? கூட வாழ்ந்தவளா? இந்த உறவுப் பாகுபாடுகள், அவற்றின் நெஞ்சுறுத்தல்கள், ஸ்வேதாவுக்குத் தெரிந்தவரை அவன் நண்பனுக்குக் கிடையாது. அவன் தனிக்காட்டு ராஜா. பெற்றோர், பெரியோர், உற்றோர், சுற்றம் என்று அவனுக்கு அந்த நாளிலேயே கிடையாது. ஏகப்பட்ட சொத்துக்காரன். ஆனால் எது எப்படியிருந்தாலும், தன் உறவுகளில் நாணயமா யிருப்பான் என்று ஸ்வேதாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஸ்வேதாவுக்கு சங்கீதத்தில் இருந்த லயிப்பே அந்தக் கலை, ஞானத்துடன் சேர்ந்த ஆன்மீகமே, சுயக்கட்டுப் பாட்டையும் தற்காப்பையும் தந்தன என்று ஸ்வேதாவுக்கு நிச்சயம்.

“வ்யாஸ், நான் இந்த சமயத்தில், ‘ஸாரி’ சொல்வதைப் போல அபத்தம் வேறில்லை. நாம் ஒருவரையொருவர் பார்த்துப் பதினஞ்சு வருடங்களுக்கு மேல் ஆறது. கடிதத் தொடர்பும் இல்லை. விவரங்களைச் சொல்லி நீதான் எங்களைக் காலக்ரமத்துக்குக் கொண்டு வரணும். ஆனால் அதற்கு அவசரமேயில்லை. நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. எனக்கு நேரமாறது, கிளம்பறேன். ராத்ரி நேரமாத்தான் வருவேன். எனக்காகக் காத்திருக்காதே. வஸு உன்னை கவனித்துக் கொள்வாள்.”

அவனைத் தோளைத் தட்டிவிட்டு வஸுவுக்குத் தலை யசைத்துவிட்டு ஸ்வேதா கிளம்பிவிட்டான். அவன் போன பின்னர், இருவரும் ஒரு நேரம் மௌனமாயிருந்தனர். அவன் பெருமூச்சுடன் எழுந்தான்.

“பிரெக்ஃபாஸ்ட் இன்னும் பதினஞ்சு நிமிஷத்தில் ரெடி ஆயிடும். பூரிபாஜி. நீங்கள் கீழே வரேளா? நான் மேலே கொண்டு வரவா?”

“சிரமப்படாதீர்கள். காலை உணவு பழக்கமில்லே. நேரே மதியம் சாப்பாடு போதும்.”

விரர்’ரென்று மாடிக்குப் போய்விட்டான்.

அவள் உட்கார்ந்து கொண்டேயிருந்தாள். அப்படி யானால் எதற்குமே அவசரமில்லை.

இந்த ஆளின் நிலைமையைச் சிந்தித்து ஆக வேண்டியது எனக்கென்ன? அது அவா ரெண்டு பேர் பாடு. அவனைப் பற்றி நினைக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை. அவனை விட இஷ்டமான சப்ஜெக்ட் எனக்கு இருக்கு.

பாப்பூ சீக்கிரமே ஸ்னேகமாயிட்டாள்.

எதிர் வீட்டுக்குக் குடிவந்த ஒரு வாரத்துள் ஒரு மாலை, அவள் அம்மை அவளுக்குச் சாதம் ஊட்டிக் கொண் டிருக்கையில் வஸுவே அவர்களிடம் சென்றாள்.

“குழந்தையை ரொம்ப அழகாப் பெத்திருக்கேள் மாமி. இன்று வியாழன். சுத்திப் போடுங்கோ. என் கண்ணே பட்டுடப் போறது. அத்தோடு படுசுட்டியாயிருக்கும் போல இருக்கு. பேச்சைக் கவனிச்சேன்.”

“நீங்கள்தான் மெச்சிக்கணும். இந்த சோத்தைத் தின்ன என்ன லூட்டி அடிக்கறது பாருங்கோ. ஒவ்வொரு வேளை யும் யுத்தம்தான்.”

“நான் ஊட்டட்டுமா? பாப்பா எங்காத்துக்கு வரயா?”

“உங்காத்துலே பாப்பா இருக்கா?”

“ஏன் நான் இருக்கேனே, உனக்கு மனுஷியாப் படல்லியா?”

“இல்லே ஆன்ட்டீ, அந்தாத்துலே ஜான், ஜோ, லில்லி இருக்கா. நாய்க்குட்டி வேறே இருக்கு?”

“எந்த ஆத்துலே?”

“அதோ அந்தாத்துலே.”

சாதாரணமாகவே குழந்தைகள் சுட்டிக் காட்டும் விதத்தில், அது அடுத்த வீடாயிருக்கலாம், அராபிக்கடல் தாண்டியுமிருக்கலாம்.

அவள் அம்மை குறுக்கிட்டு “நாங்கள் ஆபீசுக்குப் போற வழியில் ஒரு தெரிஞ்சவாகிட்ட இவளை விட்டுட்டுப் போறோம்.”

“மாமி நான் பாத்துக்கறேனே, ஆசையாயிருக்கு. தனியா யிருக்கேன். பொழுதே போகல்லே (அவள் குரல் லேசா நடுங்கிற்றோ ?).” ஆசையின் திணறலில் முற்றுப் புள்ளி யில்லாமல் பேசினாள். “பாப்பா , உனக்கு என்ன வேணு மானாலும் தரேன். சாக்லேட், பிஸ்கட், ஆப்பிள், பொம்மை கீச்கீச்சுன்னு கத்தும். கண் சிமிட்டும்.”

“வடுமாங்காயிருக்கா ? இவா ஊறுகாய் வாங்கி வெச்சுண்டு தின்கறா. எனக்கு மாட்டாளாம். நான் குழந்தையாம்.”

வஸுவுக்குப் ‘பக்’ கெனச் சிரிப்பு வந்துவிட்டது. அவள் தாயிடமிருந்து குழந்தையைப் பிடுங்கி இறுக அணைத்துக் கொண்டாள்.

வடுமாங்காய் கடிச்ச மாதிரியே சுருக் சுருக்’. பேச்சில் மழலையே இல்லை.

கன்னத்தோடு கன்னம் அழுந்துகையில், அம்மா என்ன சுகம்டீ !

ரொம்ப சுத்தமான குழந்தை, சுபாவத்திலேயே. காரணம் இல்லாத ஈரம் அவளுக்கு ஆகவேயில்லை. உடனே கையைத் துடைக்காவிடில் ரகளைதான். முதல் சிணுங்கலிலேயே முகம் ஜ்வாலைத்திட்டு. மற்ற சமயங்களில் செக்கச் செவேல் அல்லது பளிங்கு?

இந்த வயசில் குழந்தை எப்படிக் கொழகொழன்னு இருக்கணும், ஏதோ பொம்மை வரைந்தாற்போல் நுட்பமாய், மெல்லியதாய் பெரிய வரையலின் சின்ன ஸ்கேல் போல், அங்கங்களும் அவயவங்களும் தந்தச் செதுக்கலில், பெரிய பொம்பளை மாதிரி.

இவள் நிறம்கூடத் தனி ரகம், ஓவியம் அசையறதா வெச்சுக்குவோம். ஒவ்வொரு அசைவுக்கும் அங்கங்கே ஊட்டியிருக்கும் வண்ண நயங்கள் “பால்” வீசும் போல், அவளிடம் அவள் அறியாமலே ஏதோ ‘ட்ரிக்’ பேசிற்று. இவளால் நான் கவியாகி விடுவேன் போலிருக்கு. வஸு சிரித்தும் கொண்டாள். சில சமயங்களில் தன்னோடு பேசிக் கொண்டே விளையாடுவதைப் பார்க்க அலுக்கவேயில்லை.

ஆனால் சாப்பிட ரொம்பத்தான் படுத்தினாள். காக்கா’ காட்டி, ‘குருவி’ காட்டி அவளை மசிக்க முடியவில்லை . அடம் பிடித்து முன் பிடிக்குப் பின் பிடி துணையாக அவசரமாக ஊட்ட முயன்றால் உடனே குமட்டிற்று.

அவளே சொல்கிறாள் : “ஜான் நல்லா சாப்பிடுவான். ஊட்டாமலே சாப்பிடுவான். ஜோ நல்லா சாப்பிடுவான். லில்லி நன்னா சாப்பிடும். சாப்பிட அலையும். அவள் மம்மி E டபுள் G கொடுப்பாள்.”

“உனக்கு?” “ஐஸே எனக்குப் பிடிக்காது. உவ்வே.”

ஆனால் ஊறுகாய், வத்தல் குழம்பு, ரஸவண்டல், கத்திரிக்காய் வதக்கலில், அடி தங்கின மசாலாப் பொடி லவுட்டினாள். இவற்றின் துணையில்தான் அவளுக்கு அவள் அம்மை விதித்திருக்கும் பருப்புஞ்சாதம், தெளிவு ரஸம் சாதம், மோருஞ்சாதத்தை உள்ளே தள்ள முடிந்தது. அவள் அம்மைக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ? ‘சொல் லாதே’ன்னு அவளாவே சொல்லி விடுவாளா? அதுவும் தெரியாது. ஆனால் திருட்டுத்தனத்துக்கு உடந்தையா யிருக்கேன். மாமிக்குச் சொல்லணும், சத்தே விட்டுப் பிடிக்கணும்னு. கல், மண், புளி, காரம் எல்லாம் சேர்ந்துதான் குழந்தை பெரிசாகணும்.

முழுக்க முழுக்கப் பால், மோர், தெளிவு ரஸம், ஃபாரெக்ஸ் மட்டும்னா இவள் மாதிரி வளர்த்தியில்லாமல் தேஞ்சுண்டே போக வேண்டியதுதான். எல்லாம் ஒரு

குழந்தை, ஒரே குழந்தை கல்ச்சரின் விளைவு.

“பாப்பா .”

“இல்லை, நான் பாப்பூ”

“சரி பாப்பூ, உன் பேர் என்ன? பாப்பூ தானா?”

“என் பேர் சிவஜனனி.”

“உம்-புது மாதிரியாயிருக்கே!”

“என் தாத்தா ‘ஜனனி’ன்னு கதை எழுதியிருக்கா. நான் சிவராத்திரிலே பொறந்தேன். ரெண்டையும் சேர்த்து சிவ

ஜனனின்னு டாடி பேர் வெச்சிருக்கா.”

“ஓ, அப்படிப் போறதா கதை!”

“இன்னும் பத்து நாளுலே அப்பாவும் நானும் மெட்றாஸ் போப் போறோமே!”

“தாத்தா மெட்றாஸிலே இருக்காளா?” தலையைப் பலமா ஆட்டினாள். “தாத்தா பாட்டி

94

லா. ச. ராமாமிர்தம்

ஸிரிகாந்த், ஷேகர் சித்தப்பா வேறே இருக்கா. அப்புறம் சின்னி அக்கா-ஸிரிகாந்த் யமஹா பைக் வெச்சிருக்கான்.

அப்பா பஜாஜ் ஸ்கூட்டர்!”

பாப்பாவை இழுத்து அணைத்துக் கொண்டாள். ‘வண்டி எல்லாம் கோர்வையா சொல்லத் தெரியறது. குழந்தையேயில்லை, பாட்டிதான்!”

பாப்பூ இருந்தாற் போல் இருந்து, அவள் கன்னத்தில் தன் முகத்தைப் பதித்த மூர்க்கத்தில் பாப்பூ மூக்கு சப்பை ஆயிற்று.

“இது கட்டி முத்தா. மெட்றாஸ் போனதும் தாத்தா வுக்கும் ஸிரிகாந்துக்கும் கொடுப்பேன்.”

வஸு மூர்ச்சையானாள்.

குழம்பைக் கிளறிக் கொண்டிருந்த கை சட்டென தடைப்பட்டு நின்றது. மேலிருந்து அடிமேல் அடிவைத்துக் கள்ளன் போல் வரும் ஓசை . “ஹம்”மிங். அபாரமான குரல். கையைப் பற்றி இழுப்பது போன்று அடுப்பை மறந்து, மாடிப்படியண்டை வந்து நின்றாள்.

‘ஹம்’மிங். நகரும் மேகம் சிதறிக்கிடக்கும் சின்ன மேகச் சிதர்களை விழுங்குவது போல அது அவளை விழுங்கியது. ஓடிப் போனவளைப் பாடுகிறான். ஜோதி. சட்டென ஒரு ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்குப் பாட்டுக் கற்றுக் கொள்ளும் அந்த நாளில் பாட்டு வாத்தியார் ஒரு கீர்த்தனை சொல்லிக் கொடுத்தார். பாட்டு எப்பவோ அடியோடு மறந்து போயாச்சு . ஆனால் ராகத்தின் பெயர் மட்டும் நினைவில் சிக்கிக் கொண்டது. ஜோதிஸ்வரூபிணி. அவள் பெயர் அதுவாயிருக்குமா? தன் பெயரை மாற்றிக்கொண் டாற் போல அவள் பேரையும் மாற்றினானா, இல்லை இது என் குதர்க்க புத்தியா? அசலாக அவளுக்கும் சங்கீதத்துக்கும்

பாப்பூ *

95

எவ்வளவு தூரமோ? இல்லை அவள் ஜோதிஸ்வரூபிணியே தானோ? ராகதேவதை அவள் பாராத பெண்ணுக்கு ராகத் தின் பெயரைச் சூட்டிப் பார்க்கையில் வஸுவுக்கு மெய் சிலிர்த்தது. லேசாகப் பயங்கூடக் கண்டது. எனக்குப் புரியாத பரதேசத்தில் காலை வைக்கிறேன். அபசாரம் நடக்கிறதோ?

கீழேயிருந்தபடியே அவனைச் சாப்பிட அழைத்து அவன் இறங்கி வருகையில் காலையினும் அவன் திடீ ரென்று மூதாகிவிட்டாற் போல் தோன்றியது. ப்ரமைதான். முகம் அப்படிச் சுண்டிப் போயிருந்தது.

லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், துஷ்யந்தன் சகுந்தலை – இந்தக் காதல் ஜோடிகள் அமர காவியங் களுக்குக் காரணமாயிருக்கலாம். ஆனால் யதார்த்தமே அற்ற விட்டில் பூச்சிகள். அவர்கள் மேல் அவளுக்குச் சினம் மூண்டது. இவனும் தன்னை ஒரு தேவதாஸாகப் பாவித்துக் கொண்டு, தன் சோகத்தை அதையே ஒரு ரஹஸ்ய சுகமாய் அனுபவிக்கிறானோ ? உலகம் எப்படியெல்லாம் பாழாய்ப் போய்க் கொண்டிருக்கிறது! எரிச்சலாய் வந்தது. அதுபற்றி அவனிடம் பேச எடுத்த வாயை அடக்கிக் கொண்டாள். அவளுள் ஏதோ எச்சரிக்கை செய்தது.

அவன் அவளுடன் பேசவில்லை . சரியாய்ச் சாப்பிடக் கூட இல்லை. ஏதோ கொறித்துவிட்டு மேலே போய் விட்டாள். இதுவரை ஜாக்கிரதையாய் நினைவில் ஒதுக்கி வைத்திருந்த ஜோதி மேல் அவள் கவனம் பின்ன ஆரம்பித்தது.

‘விட்டுட்டுப் போயிட்டா” என்றால் என்ன அர்த்தம்? சகஜமாய் ஆண்களுடன் கொட்டமடித்துக் கொண்டு மேலே இடிச்சுப் பேசி சிரிச்சுண்டு, ஆனால் உண்மையில் கல்மிஷ மில்லாமல் இந்த நாளில் இந்த மாதிரி ரகத்தில் அவளும் ஒருத்தியா? நான் கொஞ்சம் கட்டுப்பாடில் வளர்ந்தவள்.

96 * லா. ச. ராமாமிர்தம்

இவர்களைப் புரிஞ்சுக்க என்னால் முடியவில்லை. வேண்ட வும் வேண்டாம்.

பேரழகியோ? அவள் கூந்தல், நெற்றிப் புருவங்கள், கண்கள், கன்னங்கள், மோவாய், கழுத்து, தோள்கள் இன்னும் கீழ் என்று உருவத்தை கற்பனையில் வெய்வது ஒரு அர்த்தமில்லாத ஆனால் ஸ்வாரஸ்யமான வெட்டி வேலை.

அழகுக்கு இலக்கணம் வகுப்பது சரியல்ல. அவனவ னுக்கு எவள் ரம்பையாகப் படுகிறாளோ அழகு அத்தோடு சரி. அதற்குமேல் அலசுவதில் அர்த்தமில்லை . ஸ்வேதா அடிக்கடி சொல்வான். பத்து நாட்களுக்கு முன்னால் கூட.

”வஸு, ஆரோக்யம்தான் அழகு. தினம் ஆண், பெண் என்று எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறேன், தொட்டுப் பார்க்கிறேன். ஒவ்வொரு சோதனைக்குப் பின் வாஷ்பேஸி

னில் கை கழுவுகிறேன். என்ன அழகாயிருந்தால் என்ன, எல்லாம் கரையான் புற்றுக்கள் என்கிற எண்ணம் பற்றிக் கொண்டபின் அதை அலம்பவே முடியல்லியே. ஆரோக்யம் தான் அழகு. இதில் எனக்கு உன்னால் எந்த தொந்தரவும் இல்லை. அதுவே பெரும் அதிர்ஷ்டம். உன்னைப் பெண் பார்க்க வந்த போது முதலில் எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? என்ன ‘ஹெல்த்தி ‘. அணைக்க கைநிறைஞ்சு இருக்கா. நாட்டுக்கட்டை.”

அதை நினைக்கையில் வஸுவுக்கு அரும்பிய புன்னகை அடுத்த நொடியே மாறி முகம் உறைந்து போயிற்று. என்ன ப்ரயோஜனம் !

தோசைக்கல்லில் சப்பாத்தி புடைத்துக்கொண்டு விம்முவதைக் கண்டு, வஸுவுக்கு ஏதோ ஞாபகம் வர, ரத்தக் குழுமலில் கன்னங்கள் குறுகுறுத்தன. இந்தத் தடவை

பாப்பூ *

97

கயை

மாவு நல்ல மாவா, இல்லை பிசைந்த வாகா ? ரெண்டு சப்பாத்தி, கொஞ்சம் மோருஞ்சாதம். இதுக்கு மிஞ்சின ராச்சாப்பாடு கிடையாது. ராஜ சாப்பாடும் கிடையாது.

இருகைகளிலும் தட்டுக்களை ஏந்திக்கொண்டு, மாடி யேறி அறைக் கதவை முழங்காலால் இடித்துத் தள்ளித் திறந்து உள்ளே நுழைகையில் ஸ்வேதா நின்றபடி தன்

ஸ்னேகிதனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“ஸோ தட் வாஸ் தட். ஒவ்வொருத்தனுக்கும் சுமக்க அவன் சிலுவை இருக்கிறது – வஸு வாவா, நீயும் இருக்க வேண்டியதுதான். வ்யாஸிடம் நம்மைப் பற்றி சொல்லிக்

கொண்டிருந்தேன்.”

வஸுவுக்கு வெதுப்பில் தாடைகள் இறுகின. வந்தவ னிடம் என்ன நம்மைப் பற்றி ? அவள் கோபத்தை உணர்ந்து ஸ்வேதா “சரி, என்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருக் கிறேன்.” அவளுக்கு கோபம் அதிகரித்தது.

”ஏன், நம் அவமானத்தை இவனிடம் அலம்பி யாகணுமா?” வாய்விட்டே வந்து விட்டது.

”வஸு, எங்கள் நட்பு உனக்குத் தெரியாது. தொடர்பில் லாததால் நட்பு இல்லை என்ற அர்த்தமில்லை. தன் கதையை இப்பத்தான் சொல்லி முடித்தான். பதிலுக்கு அவனுக்குச் சமாதானமாகவாவது என்னைப் பற்றிச் சொல்லும்படி ஆகி விட்டது. வாழ்க்கையே உண்மையில் எதற்காக இருக்கிறது? கண்ணீர் தனித்தனி ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் துடைத்துக் கொள்ளத்தானே இருக்கிறோம். ஸோ , வ்யாஸ் எனக்கு நேர்ந்த விபத்து ரொம்ப அபத்தம். ஏன் வஸு சொன்ன மாதிரி அவமானம் கூட. சுவரில் பெருமாள் படத்தை மாட்ட ஸ்டூல் மேல் ஏறி, இசைகேடாய் பாலன்ஸ் பிசகி, ஸ்டூல் பிரண்டு, நானும் விழுந்தேன். கீழே கண்டான் முண்டான் பெட்டியில் வாயைப் பிளந்தபடி குத்திட்டு நின்ற கத்திரிக்கோல் உள்ளே கழுவேறிவிட்டது. என்னவோ

98

* லா. ச. ராமாமிர்தம்

எக்கச்சக்கமாகி சிகிச்சையில் கோளாறோ, அஜாக்ரதையோ செப்டிக் ஆகி கணிசமாய் எடுத்துவிடும்படி ஆகிவிட்டது. இத்தனைக்கும் நான் டாக்டர், கைநிறைய -இல்லை கை வழியச் சம்பாதிக்கறேன். என்ன பிரயோஜனம். தாது இருந்தும் நபும்சகன். வேடிக்கை? எப்படி?”

ஸ்வேதா சிரித்தான். ஆனால் முயன்ற சிரிப்பு, அதன் உருட்டுகள் ஏறும் தாறுமாய், செயற்கையாய், கட்டியும் முட்டியுமாய் உதிர்ந்தன. ஸ்வேதாவுக்கு வேர்த்துக் கொட்டி யிருந்தது.

“வயாஸ், வஸுவுக்கு குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். எட்டு சோதரி சோதரர்களிடையே பிறந்தவள். ஸர்வரக்ஷகத்தின் சிரிப்புணர்வு வினோதமாயில்லை? ஆச்சு , இது நடந்து பத்து வருஷமாறது. வஸுவுக்கு அந்த விஷயத்தில் ரொம்பப் பெருந்தன்மை. வ்யாஸ், நம் பெண்டிர், கோவிலில் வைத்துக் கும்பிட வேண்டியவர்கள். அதனால் தான் அவர்களை, அம்பாள், ஜகன்மாதாவின் ஸ்வரூபம் என்கிறோம். வஸுவின் ஆதரவும் ஆதாரமும் இல்லாவிட்டால் எப்பவோ அதோகதியாகியிருப்பேன். என் சிலுவையையும் சேர்த்து அவள் தாங்குகிறாள்.”

“சரி, தத்து ஒண்ணு ரெண்டு எடுத்துக்கலாமா? எண்ணம் தோணாமல் இல்லை. உறவிலும் கிடைக்கும், அனாதைக் குழந்தை இல்லங்களும் இருக்கின்றன. ஆனால் இருக்கிற வலி போதாமல், திருகுவலியை விலைக்கு வாங்கிண்ட மாதிரி ஆனால்? மனம் ஏனோ கூசறது. எதிலுமே ரிஸ்க் ஃபேக்டர் இருக்கு. ஆனாலும் தத்து குழந்தை பெத்த குழந்தையாகுமா? இடையே தொப்புள் கொடியைத் துண்டித்துத்தானே தாயையும் சேயையுமே பிரித்தாகிறது. இயற்கையின் நியதியே அப்படி.

நாங்கள் நடத்தும் வாழ்க்கை -இது நார்மலா? உஷ் வஸு, சும்மாயிரு. நான் சொல்வதைச் சொல்லியே

பாப்பூ *

99

ஆகணும். உடல் இச்சையை ஆத்ம ப்ரேமையாக உன்னத மாக்கு என்று நீதி நூல்கள், வேதவாக்குகள் போதிக்கின்றன. அது என்ன அவ்வளவு சுலபமா? அது அது அதனதன் வேளையில் தானாகவே கனிவதுதான் நார்மல். நான் டாக்டர். நான் எடுத்துக் கொண்டிருக்கும் ப்ரமாணம், என் தொழில் கடைசி மூச்சுவரை தேக தர்மத்தைக் காப்பாற்று வதுதான். தேக தர்மம் என்பது என்ன? நார்மாலிட்டி. தெய்வீக நிலை-அதை சன்யாசிகள் அப்யஸிக்கட்டும்.”

ஸ்வேதா அடங்கினான். அவனுக்கு லேசாய் மூச்சு இரைத்தது. வஸு அவனை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த ஆவேசத்தில் அவனைப் பார்த்த ஞாபகம் இல்லை. திடீரென்று அவர்களைச் சூழ்ந்து கொண்ட மோனம் விறுவிறுத்தது!

தட்டுக்களில் பண்டங்கள் ஆறிப் போய், சிலிர்ப்பு கண்டுவிட்டன.

திடீரென்று காற்று கிளம்பி ஜன்னல் கதவுகள் படபட வென அடித்துக் கொண்டன. புழுதியை வாரி முகத்தில் இரைத்துக் கண்கள் உறுத்தின. இன்று காலையிலிருந்தே புழுக்கம்தான். ருசியான மண்வாசனை அறையுள் புகுந்தது.

திடீரென மூளையுள் ஒரு வெறிச்சை உணர்ந்தான். மூளையுள் எண்ணங்களை உற்பத்தி செய்து கொண் டிருக்கும் இயந்திரம் திடீரெனத் தோற்றுவிட்டாற் போல், பெருக்கித் துடைத்துவிட்டாற் போல் மூளையுள் விசால மான கூடம். மண்டை கிரர்’- பயங் கண்டது. எழுந்து நின்றால் விழுந்து விடுவேன். மூளைக்கு பிராணவாயு பாய வில்லை . இது முடிவு என்பதா ? மூளையின் சாவு.

கட்டிலில் படுத்தபடி பார்வை கூரையை வெறித்தது. “ஜோதி” வா வா, உன் கை கொடு. இந்தப் பிலத்திலிருந்து

100 *

லா. ச. ராமாமிர்தம்

காப்பாற்று. நோ. அவளைப் பற்றி எண்ணம் தொடர மறுத்தது.

தான் தனியாயில்லே; இருளோடு இருளாய் ஒரு பிரஸன்னம் அறையுள். கதவு மூடுகிற சப்தம். உடல் வெலவெலத்தது. அது ஓடிவந்து அவன் மேல் விழுந்தது. தோள்களை இறுகப் பற்றியது. வளையல்கள் கிலு கிலு.

“ஜோதி!” அரை நினைவில், மீதி அரை பயத்தில் பிதற்றினான்.

“நான் ஜோதியில்லை.” காதோரம் வார்த்தைகள் மூச்சாய்ப் பாய்ந்தன. “அவளைப் பற்றி எனக்கு அக்கறை யில்லை. நான் பாப்பூவுக்கு வந்திருக்கேன்.”

“பாப்பூ?”

“ஆமாம் பாப்பூ. உனக்குப் புரியாது- புரியத் தேவையு மில்லை.” திடீரென மழை அறைமேல் இறங்கிற்று. பெரும் தூறல்கள் சாரல்களாய் முகத்தில் சாட்டை பீறின. நிமிஷ மாய் அறையின் தரை நனைந்துவிட்டது. கூரை ஒழுகி தடதடவென மண்டை , படுக்கை நனைந்தன.

கோடை மழை. பூமி எத்தனை நாள் தாபத்தில் தவித்துக் கொண்டிருந்ததோ? வேகமாய் உறிஞ்சிக் கொண்டது. திகட்டித் தெறித்து எஞ்சிய மழை வெள்ளத்தில் பூமி குளிர்ந்தது. பூமியின் மண்ணும் மணலும் ஆங்காங்கேயிருந்த கந்தத்துக்கேற்ப, கலங்கலாயும் செவந்தும், ஸ்படிகமாயும் சிற்றருவிகள் ஓடின. பூமிக்கு ஜுரம் விட்டு, வானின்று இறங்கிய ஆசீர்வாதத்தில் குளிர்ந்தது.

வெளியே மழை. ஆனால் அவர்களுள் நிகழ்ந்தது ப்ரளயம். நாமம் இழந்து நேமம் இழந்து

பாப்பூ * 101

கயாலைகார

தன்தன் திக்கிழந்து யான் எனும் உணர்விழந்து உருவிழந்து ப்ரளயம் அவரவர் தனித்தனியை

அழித்துத் தன்னோடு அடித்துச் செல்கையில்

ஒரு சின்ன நீர்க்குமிழி அதனுள் குட்டிப் பாப்பூ பிறந்த மேனியில் கைகாலை ஆட்டிய வண்ணம் கக்கடகட சிரித்துக் கொண்டே எதிர்நோக்கி வந்து வந்து –

வந்து வந்து – அதற்கு மேல் ஏதும் நினைவில்லை . நினைவு மீண்டபோது மழை முற்றிலும் விட்டிருந்தது. நிலா காய்ந்து கொண்டிருந்தது பின்நிலா . முக்கால் நிலா.

”வா, வா, வ்யாஸ் உனக்காகத்தான் காத்துக் கொண் டிருக்கிறேன். காபி ஆறிடப் போறது.”

”நான் வரேன் ஸ்வேதா.” ”சரி, இல்லை . அதுவே சரி, வ்யாஸ்.”

வ்யாஸின் பார்வை அவனைத் தாண்டித் தேடுவதை ஸ்வேதா கண்டுகொண்டு,

” அவள் வரமாட்டாள் வ்யாஸ். ஷி இஸ் ரெஸ்டிங். அவளுக்கும் சேர்த்து உனக்குச் செலவு கொடுக்கிறேன்.”

வ்யாஸ் கதவண்டை போய் விட்டான். “வ்யாஸ்!” வ்யாஸ் திரும்பினான். “தாங்க யூ.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *