பாசம் – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 2,549 
 

இப்படி ஒரு கணவன் கிடைக்க என்ன தவம் செய்தோமோ என்று எண்ணிப் புரித்தாள் வளர்மதி …..

அவளுக்கும் ராஜாராமன்னுக்கும் திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன . தனிக்குடித்தன தம்பதிகளான அவர்களை பார்க்க பக்கத்துக்கு ஊரிலிருந்து வளர்மதியின் பெற்றோர் அடிக்கடி வருவார்கள் ….

அவர்களிடம் ராஜாராமன் காட்டும் பாசமும் பிரியம்மும் சொல்லி மாளாது … அவனே மார்கெட் போய் அவர்களுக்கு பிடித்த காய்கறிகளை வாங்கி வந்து சமைத்து போட சொல்லுவான் மகிழ்வான் … மரியாதையுடன் வழியனுப்பியும் வைப்பான்….

இதை நினைத்துதான் வளர்மதிக்கு பூரிப்பு…..

ஆனால், பக்கத்து வீட்டில் குடியிருந்த ராஜாராமனின் அலுவலக நண்பனுக்கு சந்தேகம் ….

“மாமனார் மாமியார் வந்தா நீ ஓவர் ஆக்டிங் பண்ணுறியே …பெருசா எதாச்சும் சொத்தை பிராக்கெட் போடுறிய? என்றான் ….

ராஜாராமன் சிரித்தபடி சொன்னான் …..

“இப்போ என் மாமியார், மாமனார் பக்கத்து ஊரில் இருக்காங்க .. அதனால் அடிக்கடி வர்றாங்க …. இன்னும் ஆறு மாசத்துல எனக்கு மாற்றல் கிடைசி எங்க அம்மா , அப்பா இருக்கிற ஊரு பக்கம் போய்டுவோம் … அப்போ அவங்க எங்களை பார்க்க அடிக்கடி வருவாங்க …. அவங்களை நல்லபடியா கவனிக்க என் மனைவி சுணங்கக் கூடாதுல்ல …..அதான் நானும் இப்படி பாசம் காட்டுறேன் !….

Print Friendly, PDF & Email

நெகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *