பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய இளமதியன் ஊரிலிருந்து வந்திருந்த தனது தாத்தாவைப் பார்த்ததும் சந்தோத்தில் திக்குமுக்காடிப்போனான்.
”தாத்தா எப்போ வந்தீங்க..? ” கேட்டுக்கொண்டே அவர் மடியில் அமர்ந்தான்.
”காலையிலேதான் வந்தேன், நல்லா படிக்கிறியா ராசா…’!’
ம்…தாத்தா, போனவாட்டி மாதிரி எனக்கு கதை சொல்லிகுடுங்க….!
”உன் அப்பாவோட கதையே பெரிய கதை. இப்போ நீயும் உன் அப்பா அம்மாவும் வசதியா இருக்குற மாதிரி, நானும் உன் அப்பாவாவும் இல்ல. அந்தக் காலத்துல கரண்ட் கிடையாது. அரிக்கேன் விளக்குலதான் படிச்சான். போட்டுக்க நல்ல சட்டை கிடையாது. சாப்பாட்டுக்கே கஷ்டம். அந்தக் கஷ்டத்துல உன் அப்பா எஸ்.எஸ்.எல்.சி.யிலயும் பிளஸ் டூவிலயும் தோத்துத்துட்டு அப்புறமா எழுதி பாஸ் ஆகி டிகிரி வாங்கிட்டான்….!
”அப்பா…எதுக்கு தேவையில்லாம பழசையெல்லாம் அவன்கிட்டே சொல்றீங்க…? நான் ஃபெயில் ஆன விஷயம் ரொம்ப முக்கியமா…? தனது தந்தை மீது கோப்ப்பட்டான் இளமதியனின் தந்தை.
இல்லடா…இன்னைக்கு படிக்குற புள்ளைங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கு, கஷ்டம்னா என்ன்னன்னு தெரியல, தோல்வியக்கூட தாங்கிக்கத் தெரியல, குழந்தைகளுக்கு அத சொல்லித்தரணும், கஷ்டத்த சகிச்சுக்கிட்டும் தோல்விய தாங்கிக்கிட்டும் பழக கத்துக்கிட்டாங்கன்னா எதிர்காலத்துல உன்ன மாதிரி தன்னம்பிக்கையோட வருவாங்ங…!
அவர் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்து மௌனமாக வெளியேறினான் இளமதினின் தந்தை.
– 19-9-12