கார்த்திகா தனது மூன்று வயது மகன் மித்திரனை, கட்டிலில் படுக்கவைத்து விட்டு அருகில் இருந்து அவன் தலையை தடவி விட்டாள்.அவனுக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல்,தற்போது ஓரளவிற்கு குணம் அடைந்துவிட்டான்.கணவன் திலிப்பும்,மகள் மிருதலாவும் வெளியில் போய்விட்டார்கள்.தனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என்று அடம் பிடித்த ஐந்து வயது மகளை,அழைத்துக் கொண்டு போய்விட்டான் அவன்.
கார்த்திகா கட்டிலில் சாய்ந்துக்கொண்டு,போனை கையில் எடுத்தாள்,அவளின் தோழி ரம்யா,குறுந்தகவல் அனுப்பியிருந்தாள்,நாளை மறுதினம் சாந்தன் திருமணம்,நான் போகிறேன்,எனக்கு திருமண அழைப்பிதழ் அனுப்பியிருக்கான்.உனக்கு தெரியப் படுத்தக்கூடாது என்று முதலில் நினைத்தேன்,நீ செய்த காரியத்திற்கு,பிறகு யோசித்தேன்,உன் மீது எந்த பிழையும் இல்லை,உன் குடும்பம் செய்த தவறு என்று.
நடந்தவற்றை நீ சாந்தனிடம் கூறியிருக்களாம்,நீ பிடிவாதமாக மறுத்துவிட்டாய்,என்னையும் தடுத்துவிட்டாய்,தற்போது சரி,அவனிடம் உண்மையை கூறிவிடு,இது என் வேண்டுகோல்.இதை படித்த கார்த்திகா ஆடிப் போனாள்,தன் முன்னால் காதலனுக்கு திருமணம்,கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கின்றாய் என்று கண்கலங்கினாள்,சற்று நேரத்தில் அமைதியானாள்.தற்போது நான் திலிப் மனைவி,இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா,என் மீது பிழையில்லை,என் குடும்பத்தார் செய்த சதி,மனதை திடப்படுத்திக் கொண்டாள் கார்த்திகா.
ரம்யா அவள் உயிர் தோழி,பதினாறு வயதில் துள்ளி திறிந்த இருவரும்,எப்போதும் சிரிப்பு,அரட்டை என்று,பள்ளி வலாகத்தையே சுற்றிவந்தார்கள்.அதே பாடசாலையில் படித்தவன் தான் சாந்தன்,உயர்தரம் இரண்டாம் ஆண்டில் அவனும்,ரம்யாவும்,கார்த்திகாவும் முதலாம் ஆண்டிலும் படித்தார்கள்.சாந்தன் எப்போதும் கணக்கு நன்றாக போடுவான்,யாருக்கும் எதுவும் தெரியாவிட்டால்,அவனிடம் போய் நிற்பார்கள்,அவனும் பொறுமையாக புரியவைப்பான்.கணித ஆசிரியர்க்கு எப்போதும் சாந்தனைப்பிடிக்கும்,மற்ற மாணவர்களிடம் அவனை தான் உதாரணமாக கூறுவார்.
ரம்யாவும் அடிக்கடி தன் சந்தேகங்களை அவனிடம் கேட்டு படித்துக்கொள்வாள்.கார்த்திகா ஓரளவு கணக்கு போடுவதால் அவனிடம் போய் கேட்ப்பது இல்லை,ஒரு நாள் ஓர் கணக்கில் அவளுக்கு சந்தேகம்,கணித ஆசிரியர் அன்று பாடசாலைக்கு வரவில்லை,ரம்யாவிடம் அவளின் நோட்டு புத்தகத்தை கொடுத்து,சாந்தனிடம் கணக்கை போட்டு கொண்டுத்தரும்படி கேட்டாள் கார்த்திகா.
சரியென்று கார்ததிகாவின் நோட்டு புத்தகத்துடன்,சாந்தனிடம் சென்ற ரம்யா,நோட்டு புத்தகத்தை கொடுத்து,கணக்கை போட்டு தரும்படி கேட்டாள் அவள்.அந்த புத்தகத்தில் கார்த்திகா என்று பெயர் இருந்தது,அதை கவனித்த சாந்தன்,இது உன் புத்தகம் இல்லையே!என்றான்,ஆமாம் கார்த்திகாவுடையது என்றாள்,மற்றைய பாடங்கள் மாதிரியில்லை கணக்கு,போட்டுக் கொடுத்தால் புரியாது,தெரியாதவர்கள் வந்தால் மட்டுமே விளங்கப்படுத்த முடியும்,விருப்பம் என்றால் அவளை வரச்சொல் என்று ரம்யாவை அனுப்பிவைத்தான் சாந்தன்.
ரம்யா போய்கார்த்திகாவிடம் கூறினாள்,சரியென்று இருவரும் சேர்ந்துப்போனார்கள்.ரம்யா கார்த்திகாவை சாந்தனின் வகுப்பறையில் விட்டுவிட்டு,உன் சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துக் கொண்டு வா,நான் போகிறேன் என்று அவள் சென்று விட்டாள்.கார்த்திகா போய் சாந்தன் முன்னாடி தயக்கத்துடன் நின்றாள்,அவன் நிமிர்ந்துப்பார்த்தான்.இருவரினது கணகளும் சந்தித்துக் கொண்டன,அவள் கொஞ்சம் தடுமாறி கண்களை தாழ்த்திக் கொண்டாள், எந்தக்கணக்கு சந்தேகம் என்று அவன் கேட்டு,அதை விளங்கப்படுத்தி விட்டான்,அவளுக்கு நன்றாகவே புரிந்தது.அவள் தேங்ஸ் கூறிவிட்டு,தன் வகுப்பறைக்கு வந்தவள்,ரம்யாவிடம் அவன் நன்றாக கற்று தந்தான்,ஆசிரியர் புரியவைப்பதை விட, அவனிடம் நன்றாகப்புரிந்தது என்றாள்.
சாந்தனிடம் அடிக்கடி சந்தேகங்கள் கேட்க்க ஆரம்பித்த கார்த்திகா,தன்னையறியாமல் அவன் மீது காதல் கொண்டாள்.இதை ரம்யாவிடம் கூறினாள் கார்த்திகா,ரம்யா இதை சாந்தனிடம் சொன்னப் போது,அவன் தயங்கினான்,இல்லை ரம்யா இது சரிவராது,நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். அவள் அப்படியில்லை,வசதியான குடும்பம்,அவளின் அப்பா அந்த ஊரில் பெரிய மனுஷன் வேறு,என்று அவன் மறுத்தான்.
இதை அறிந்த கார்த்திகா கலங்கிப்போனாள். சாந்தனிடம் அவளே போய் நின்றாள்,அவளைப் பார்த்தப் பிறகு,அவனுக்கு மறுப்பு கூறமுடியவில்லை, அவளை முதல் முதலாக கண்டப் போது அவள் மீது அவனும் காதல் கொண்டான்.ஆனால் வெளிப்படுத்தவில்லை,தற்போது அவளே வந்து தன் காதலை கூறும் போது,மறுக்கவில்லை இருவரும் காதல் என்ற வலையில் சிக்கிகொண்டனர்.இதற்கு தூதாக அமைந்தவள் ரம்யா.மூவரும் சேர்ந்து வெளியில் சுற்றுவதால் யாருக்கும் சந்தேகம் வராது என்று இவர்கள் நினைத்தார்கள்.
சாந்தன் தேர்வு எழுதிமுடித்தான்.கார்த்திகா,ரம்யா உயர்தரம் இரண்டாம் ஆண்டில் படிப்பை தொடர்ந்தார்கள்.சாந்தனின் தேர்வு முடிவுகள் வெளியாகி காலேஜ் போக ஆரம்பித்தான்.
சாந்தன்,கார்த்திகா இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்துக்கொண்டனர்.சிலசமயம் ரம்யாவை தவிர்த்துவிடுவார்கள்.ரம்யா அடிக்கடி கார்த்திகாவிடம் கூறுவது,வீட்டில் தற்போதே மாட்டிக்கொள்ளாதே!சாந்தன் படிப்பு முடிந்து,வேலை கிடைக்கும் மட்டும்,பிறகு பிரச்சினை வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்பாள்.ரம்யா,கார்த்திகா தேர்வு எழுதி அவர்களின் முடிவுக்காக காத்திருந்த சமயம்,ரம்யா வீட்டுக்குப் போவதாக கூறிவிட்டு கார்த்திகா சாந்தனை சந்திக்கப்போவாள்.
அவர்களின் தேர்வு வெளியாகிய அன்று கார்த்திகாவை பாடசாலையில் காணவில்லை.இருவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தார்கள்.ரம்யா கார்த்திகாவுக்கு போன் பன்னினாள்,அவளின் போன் துண்டிக்கப்பட்டிருந்தது,உடனே சாந்தனுக்கு போன் பன்னி விஷயத்தை சொன்னாள்,இன்று கார்த்திகா பாடசாலைக்கு வரவில்லை,போன் வேலை செய்யவில்லை,என்று ரம்யா கூறியதும் அவன் பதறினான்,இரண்டு மூன்று நாட்களுக்குப் முன்பு தான்,நான் அவளை பார்த்தேன்!எதுவும் கூறவில்லை,நல்லாதான் இருந்தாள்.சரி நீ வா,நாங்கள் அவள் வீடுமட்டும் போய்பார்த்துவிட்டு வந்துவிடுவோம் என்றான்.
ரம்யா உடனே வந்துவிட்டாள்.இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள்,போகும் வழியில் ரம்யாவிடம் சாந்தன் கூறினான்,நான் ஆட்டோவில் இருக்கிறேன்,நீ மட்டும் போய் பார்த்துவிட்டு வா என்றான்.சரி என்று அவளும் தலையை ஆட்டினாள். ரம்யா பதட்டமாக அவள் வீட்டின் கேட் அருகே சென்றப்போது,முன்பே இவளை தெரிந்த கூர்கா, என்னம்மா இந்தப்பக்கம்!கார்த்திகாம்மா இல்லை குடும்பமாக வெளியூர் போய்விட்டார்கள் என்றார், எப்போது என்று கேட்டாள்,இரண்டு நாட்கள் ஆகிவிட்டது,திரும்ப எப்ப வருவார்கள் என்று தெரியாது அம்மா என்றார் அவர்.
அவள் வந்தவுடன் எனக்கு போன் பன்ன சொல்லுங்கள் அங்கிள்,என்று ரம்யா போய் மறுப்படியும் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்.சாந்தனைப் பார்க்கப் பாவமாக இருந்தது,அழாதகுறையாக உட்கார்ந்து இருந்தான். வீட்டில் இல்லை சாந்தன்,அவர்கள் வெளியூர் சென்று விட்டார்களாம் என்றதும்,அவன் பதறிப்போனான்.என்ன ரம்யா இது,எதுவும் சொல்லாமல்,ஏதும் பிரச்சினையாக இருக்குமோ! என்னறப்போது,அவன் கண்கலங்கியது, கவலைப் படாதே,வந்துவிடுவாள் என்று ஆறுதல் கூறினாள் ரம்யா.
ஒரு வாரம் ஆகியும்,கார்த்திகாவிடம் இருந்து எந்த தகவல்களும் இல்லை,சாந்தன் துடித்துப் போனான், ரம்யாவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாட்கள் நகர்ந்துக் கொண்டே இருந்தது. சாந்தனைப்பார்க்க சகிக்கவில்லை ரம்யாவிற்கு, பித்துப் பிடித்தவன் போல் திரிந்தான்.மூன்று மாதம் இருக்கும்,ஒரு நாள் கார்த்திகா,ரம்யாவிற்கு போன் பன்னினாள்,என்னடி புது நம்பரில் இருந்து போன் எடுக்கிற! எங்கடி போய் தொலைந்த என்று ரம்யா கோபமாகவே கேட்டாள்.
மறுமுனையில் அழுகை சத்தம்,ஏன் தற்போது அழுகிறாய் ஏதும் பிரச்சினையா! என்றாள் ரம்யா,ஆமாடி என் வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்றதும்,இவள் பதறிப்போனாள்,அப்படி என்ன தான் நடந்தது என்றாள் பதட்டமாக,எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்றதும்,இவளுக்கு தலை சுற்றிவிட்டது,என்னடி சொல்றாய் எப்படி சம்மதித்த, உனக்கு அறிவு இல்லையா? ஒருத்தனை உயிரோடு கொன்றுபுதைத்து விட்டியே,சாந்தன் என்னடி பாவம் செய்தான்,முடியாது என்றவனை வற்புருத்தி காதலித்து இப்படி பன்னிட்டியே என்று வசைமாரி பொழிந்தாள் ரம்யா.
மேலும் உன் வார்த்தைகளால் என்னை கொல்லாதே ரம்யா,சாகும் தைரியம் எனக்கில்லை,அப்படி இருந்திருந்தால் அன்றே செத்துப் போயிருப்பேன், என்ற வார்த்தைகளை கேட்டதும்,ரம்யா அமைதியானாள்,மெதுவாக என்னத்தான் நடந்தது என்றாள்.கார்த்திகா நடந்தவற்றை கூறினாள், என்னுடைய காதல் நம் வீட்டுக்கு தெரிந்துவிட்டது, உனக்கு தான் என் அப்பாவை தெரியுமே,என் மானம் மரியாதையெல்லாம் போய்விட்டது,என்று கத்திய அப்பா,என் சொந்தத்தில் ஒரு பையன் இருக்கான்,நீ அவனை கட்டிக்கனும்,இல்லை என்றால் நானும் அம்மாவும் மருந்துகுடித்து செத்துப்போய்விடுவோம்,என்று கையில் மருந்து போத்தலுடன் நின்றவரை,முடிந்தவரை நானும் போராடிப் பார்த்தேன்,தோற்றுப்போனது தான் மிச்சம் என்று அழுதாள் அவள்.
உடனே என்னையும் அழைத்துக்கொண்டு அப்பாவின் சொந்த ஊருக்குப்போய்விட்டார்கள்.என்னுடைய போனை எடுத்துக்கொண்டார்கள்,எனக்கு ஒன்னும் செய்யமுடியாமல் போய்விட்டது.படம் என்றால்,காதாநாயகன் உடனே காப்பாற்ற வந்துவிடுவான்.இது நிஜ வாழ்க்கையே,அப்பாவின் ஊர் என்பதால்,அவர்கள் நினைத்ததை என்னை மிரட்டி சாதித்து கொண்டார்கள் என்றதும்,சாந்தன் இதை எப்படி தாங்கிகொள்வான்! தற்போதே அவனைப்பார்க்க பைத்தியக்காரன் போல் அல்லவா இருக்கான், தற்போது என்னடி செய்வது என்றாள் ரம்யா.
நீ எதுவும் சாந்தனிடம் கூறாதே என்றாள் கார்த்திகா, ஏன் அவன் முழு பைத்தியக்காரனாகி திறியனுமா? என்றாள் ரம்யா.என்னை வற்புருத்தி மிரட்டி திருமணம் செய்துவைத்து விட்டார்கள் என்று அவனுக்கு தெரிந்தால்,ஒரு நாளும் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மாட்டான்.
தற்போது அவள் ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என்பது மட்டுமே அவன் மனதில் இருக்கும்,அதுவே என்னை வெறுக்க வைக்கும்,தயவு செய்து அவனிடம் உண்மையை கூறிவிடாதே என்று கெஞ்சினாள் கார்த்திகா.
சாந்தன் பட்ட வேதனைகளை நன்கு அறிந்த ரம்யா கார்த்திகாவிடம் என்ன சொல்வது என்று ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தாள் அவள்,இதை அறிந்த சாந்தன் மறுப்படியும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவருவதற்கு நீண்ட நாட்கள் சென்றது.ரம்யாவிற்கு திருமணம் நிச்சியமானது,கார்த்திகா குடும்பத்தோடு வந்திருந்தாள்,சாந்தனும் வந்திருந்தான்,அவன் கார்த்திகாவிடம் கதைப்பதற்கு முயற்சி செய்தப்போது,இதை நன்கு அறிந்த அவள்,வேண்டும் என்றே ஒதுங்கி கொண்டாள்,மறுப்படியும் அவள் மீது அவனுக்கு அனுதாபம் வந்துவிடக்கூடாது என்பதற்காக,இதை அறியாத அவன்,அவளை வெறுத்தான்.
சாந்தனின் அப்பா அம்மாவிற்கு,அவனின் காதல் தோல்வி தெரிய வந்ததில் இருந்து அவர்களுக்கும் கவலையாக இருந்தது,சாந்தனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு முடிந்தளவு முயற்சி செய்துப் பார்த்தார்கள்,ஆனால் அவன் எதற்கும் பிடிகொடுக்கவில்லை,ஏதாவது காரணம் கூறி தட்டிகழித்துக் கொண்டே இருந்தான் இது நாள் மட்டும்,என்று ரம்யாவின் திருமணத்தின் போது கார்த்திகாவை கண்டானோ,அன்றோடு மனம் மாறியவன் தற்போது திருமணத்திற்கு ஒத்துக் கொண்டான்,உடனே மாமா மகள் கிருபாஷினியை பேசி முடித்து விட்டார்கள்,ரம்யாவிற்கு திருமண அழைப்பிதழ் அனுப்பிய அவன்,கார்திகாவுக்கு அனுப்பவில்லை.
திலிப்பும்,மிருதலாவும் திரும்பி வந்து கதவை தட்டினார்கள்,கதவை திறந்தாள் கார்த்திகா.அவளின் முகத்தை பார்த்த திலிப்,ஏன் முகம் சிவந்து இருக்கு, உனக்கும் உடம்புக்கு முடியவில்லையா!காப்பி போட்டு தரவா என்ற அவனின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு இதமாக இருந்தது,வேண்டாம் என்றாள் கார்த்திகா,பருவத்தில் ஏற்பட்ட காதலால்,மனதில் ஏதோ ஒரு மூலையில் இருந்த சாந்தனின் நினைவுகள்,படிபடியாக அழிந்துக் கொண்டிருந்தது காலத்தின் மாற்றத்தால்.