ஆற்றங்கரையின் படிக்கட்டில், தன் மனசு போலவே தண்ணிரும் கலங்கி ஒருவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் சரவணன்.
‘முதல் பரிசு வாங்கிவிடலாம் என்று எவ்வளவு ஆசையாகப் போட்டியில் சேர்ந்து கஷ்டப்பட்டு பயிற்சி செய்ததெல்லாம் வீணாயிற்றே’ என்று தோன்றிய எண்ணங்களை உதறிவிட்டு சட்டையக் கழற்றினான்.
அப்போது ‘ஐயையோ என் ராசாத்தியை யாராவது காப்பாற்றுங்களேன்’ என்ற குரல் காதில் விழுந்தது. மறுவிநாடி நீரில் பாய்ந்தான். ஆற்றுத் தண்ணீரில் முங்கி முங்கி வெளியே வந்து தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு வயது ராசாத்தியின் அருகில் சென்று லாகவமாகப் பிடித்து பத்திரமாகக் கரையில் கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
‘என் மகளைக் காப்பாத்திய தெயவம்பபா நீ’ என்று அந்தத் தாய் சரவணின் கைகளைக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அந்தத் தாயின் கண்ணீர் அவனைச் சிலிரக்க வைத்தது.
நீச்சல் போட்டியில் பரிசு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இப்பொழுது அவனிடம் இல்லை. அதை விட பெரிய பரிசு அல்லவா கிடைத்திருக்கிறது என்று நினைத்தபடி மகிழ்ச்சியோடு மீண்டும் நீந்த ஆரம்பித்தான்.
– டி.ஜானகி, கரூர் (ஏப்ரல் 2011)