கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 4,318 
 
 

அன்று திங்கட் கிழமை,பரமசிவம் தன் குடையுடன்,வள்ளி என்று குரல் கொடுத்தார்,சமையல் அறையில் இருந்து எட்டி பார்த்தவளிடம்,நான் வயலுக்கு போகிறேன்,நேற்று யாரும் வேலைக்கு வரவில்லை,இன்னைக்கு வருவார்கள் நான் போனால் தான்,கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள்,இல்லையென்றால் கதைத்தே நேரத்தை ஓட்டிவிடுவார்கள்,பகல் சாப்பாட்டை நீ கொண்டு வா என்றவரிடம்,கொஞ்சம் பொறுங்கள்,நானும் வருகிறேன் எல்லா வேலையும் முடிந்துவிட்டது என்று குரல் கொடுத்த வள்ளி,அவசரமாகப் ஒரு பையில் அனைவருக்கும் பகல் உணவையும்,தண்ணியையும் போட்டு எடுத்து வைத்து விட்டு,அவளும் அவசரமாக மாற்றுத் துணியை மாற்றிக் கொண்டு,கதவைப் பூட்டிவிட்டு,பையோடு பரமசிவத்தோடு கிளம்பிவிட்டாள் வள்ளி.

அவர்களின் வருமானமே,அந்த வயலை நம்பித்தான் இருக்கிறது.தங்களது இரண்டு பிள்ளைகளையும், விடுதியில் சேர்த்து படிக்கவைக்கும் செலவு முதற்கொண்டு,ஏனைய செலவுகளையும்,அதில் வரும் வருமானத்தையே நம்பி இருக்கின்றார்கள்.மகன் பிரகாஷ் இன்னும் சில மாதங்களில் காலேஜ் முடித்துவிடுவான்,மகள் அமுதாவும் இரண்டு ஆண்டுகளில் காலேஜ் முடித்துவிடுவாள்.பிறகு படிப்பு செலவுகள் குறைந்து விடும்,சேமிப்பில் ஓரளவிற்கு பணம் சேமித்து வைத்திருக்கார்கள்.அமுதாவின் திருமணம் என்று வரும் போது,அந்த பணம் உதவும் என்று எண்ணியிருந்தார் பரமசிவம்.

ஏன் அமைதியாக வருகிறாய் என்று மனைவியிடம் கேட்டார் பரமசிவம்,ஒன்றும் இல்லை என்றாள் வள்ளி,பொய் சொல்லாத,நீ இப்படி அமைதியாக வரமாட்டியே,சொல்லு உண்மையை என்றார்,அது வந்து… பிரகாஷ் மேற்படிப்புக்கு,வெளியூர் சென்று படிக்கனுமா.,அதற்கு! என்றார் அவர்,அவனுக்கு பணம் தேவையாம் அப்பாவிடம் கேட்டு தரும்படி,என்னிடம் போன் பன்னி சொன்னான் என்று மெதுவாக கூறினாள் வள்ளி,அது தானே பார்த்தேன்,இரண்டு நாட்களாகவே,நீ குட்டிப் போட்ட பூனை மாதிரி ஏன் திரிந்த என்று இப்ப தானே புரிகிறது என்றார் பரமசிவம்.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்றாள் வள்ளி,சரி அவனும் வேறு யாரிடம் தான் கேட்ப்பான்,படிப்புக்காக தான் கேட்க்கின்றான்,நம்மிடம் இருப்பது கொஞ்சம் பணம் அது உனக்கும் தெரியும்,அதையும் அவனிடம் கொடுத்து விட்டு,பிறகு எப்படி அமுதாவை கரை சேர்ப்பது என்றார் பரமசிவம்,மேற் படிப்பு படிக்கப் போனால்,பிறகு நன்றாக சம்பாதிப்பான் பிரகாஷ்,வேலைக்குப் போனப் பின் உங்களிடம் தானே பணத்தை தருவான்,பிறகு ஏன் தயக்கம் என்றாள் வள்ளி,இது சரியாக வருமா?என்றார் பரமசிவம்.

அதுவெல்லாம் சரிவரும்,மகனை நம்பி கூட பணம் கொடுக்க மாட்டிங்களா? என்றாள் வள்ளி,சேமிப்பில் கொஞ்சம்பணம்தான் இருக்கு,அதை எடுத்து விட்டு,பிறகு தடுமாறக் கூடாது தானே,அது தான் யோசனையாக இருக்கு என்றார் பரமசிவம்,உடனே வள்ளி ஏன் பிரகாஷ் மீது நம்பிக்கை இல்லையா என்றாள்,அப்படியில்லை கொடுக்ககூடாது என்பது எனது நோக்கம் இல்லை, அமுதாவிற்கு இன்னும் இரண்டு வருடத்தில் மாப்பிள்ளை பார்க்கனும்,அப்போது பணம் தேவைப் படும் என்றார் பரமசிவம்,அது எனக்கும் தெரியும்,அதற்கிடையில் பிரகாஷ் வேலைக்குப் போய்விடுவான்,அமுதா கல்யாணத்தின் போது,பிரகாஷ் பணம் கொடுத்து உதவிப் பன்னுவான் எந்த பிரச்சினை இல்லாமல்,அமுதாவின் திருமணம் நடக்கும் என்றாள் வள்ளி.

அடுத்த வாரம் பிரகாஷ் வீட்டுக்குப் வரும்போது இதைப்பற்றி கதைப்போம்,அது மட்டும் நீ பொறுமையாக இரு,அவனிடம் போனைப் போட்டு,அப்பா பணம் கொடுக்க ஒத்துக்கொண்டார் என்று,ஏதும் உளரிவைக்காதே என்றார் பரமசிவம்,சரியென்று தலையை ஆட்டினாள் வள்ளி. இருவரும் வயலை அடைந்தார்கள்,வேலையாட்கள் வேலை செய்துக்கொண்டிருந்தார்கள்,என்னையா கணகு இவ்வளவு மெதுவாக வேலை செய்தால்,எப்படி இன்னைக்கு வேலை முடியும்,கொஞ்சம் வேகமாக செய்து முடிக்கனும் என்று கூறிவிட்டு,இவர்களும் வயலில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார்கள்.

சாப்பிட்டு மிச்ச வேலையை பார்ப்போம் என்றார் பரமசிவம், அனைவரும் வாய்க்காலில் கை,கால் கழுவி மரத்தடியில் உட்கார்ந்தார்கள்,கையோடு கொண்டு வந்திருந்த உணவை,வள்ளி அனைவருக்கும் பரிமாரினாள்,வேலை செய்பவர்களுக்கு வயிறார உணவு கொடுக்க வேண்டும் என்பது இருவரினதும் கொள்கை,அனைவரும் சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு,மறப்படியும் வேலையை ஆரம்பித்தாரகள்.

பொழுது சாயும் முன்பு வேலையை முடித்துவிட்டார்கள், அவர்களுடைய தினக்கூலியை பரமசிவம் கொடுத்தார். கணகு நீ மட்டும் நாளைக்கு வா,மற்றவர்களை வேறு எங்காவது வேலைக்குப் போகச்சொல்லு,என்று கூறிவிட்டு வள்ளியோடு நடக்க ஆரம்பித்தார் பரமசிவம்.

வார விடுமுறையில் அமுதாவும்,பிரகாஷும் வீட்டுக்கு வந்தார்கள்,சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்த பரமசிவத்திடம்,அப்பா என்றான் மகன்,அம்மா ஏதும் சொன்னாங்களா உங்களிடம் என்று கேட்டான்,ஆமாம் சொன்னாள் அதை தான் யோசித்துக்கொண்டு இருக்கேன் என்றார் பரமசிவம்,இதில் என்னப்பா யோசிக்க வேண்டியிருக்கு,எப்படியும் சம்பாதித்து வீட்டுக்கு தானே பணத்தை கொடுக்கப்போகிறேன்,வெளியூரில் படித்து முடித்தால்,நல்ல வேலை கிடைக்கும்,அதற்கு தகுந்த சம்பளமும் கிடைக்கும்,பிறகு எந்த கஷ்டமும் இருக்காது அப்பா,அமுதாவிற்கு வேண்டியதை நான் செய்வேன் என்றான் பிரகாஷ்.

இதை கேட்டு கொண்டு வந்த வள்ளியும்,அமுதாவும் போய் படிக்கட்டும் என்று சொன்னார்கள்,இல்லையம்மா உனக்கு தேவைப்படுமே அது தான்..என்றார் பரமசிவம்,அதற்கு இன்னும் நாள் இருக்குதானே அப்பா,அதை அப்போது பார்ப்போம்,அண்ணா ஆசைப்படுகிறான் என்றாள் அமுதா, சரியென்று ஒத்துக்கொண்டார் பரமசிவம்

அவன் உடனடியாக வெளியூர் போக எல்லா ஏற்பாட்டையும் செய்துமுடித்துவிட்டான்.அவர்களின் முழு சேமிப்பு பணத்தையும் பரமசிவம் எடுத்துக் கொடுத்ததால்,எந்த பிரச்சினையும் இல்லாமல்,அவன் வெளியூர் போய் போன் எடுத்து தகவலும் கூறிவிட்டான்.சிறுவயதில் இருந்தே இருவரும் விடுதியில் படித்தவர்கள் தான்,அந்த பிரிவு அவ்வளவாகப் பாதிக்கவில்லை பரமசிவத்தையும், வள்ளியையும்,தற்போது பிரகாஷ் கடல் கடந்துப் போனது இருவருக்கும் வேதனையாக இருந்தது.அவர்கள் இருக்கும் ஊரில்,தரமான பாடசாலை இல்லாத ஒரே காரணத்திற்காக மட்டுமே,பிள்ளைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைத்தார்கள்.

ஒவ்வொரு கிழமையும்,போன் பன்னி நலம் விசாரிப்பான் பிரகாஷ்.தான் பகுதி நேரவேலை செய்துகொண்டே படிப்பதாக சொன்னான் அவன்,இரண்டு வருடத்தில் படிப்பை முடித்து,வேலையும் தேடிக்கொண்டான் பிரகாஷ்.முதல் மாதச் சம்பளத்தை பரமசிவத்துக்கு மணிஓடர் மூலம் அனுப்பிவைத்தான் பிரகாஷ்,அவர் நிம்மதி பெருமூச்சி விட்டார்.அது கூட நாட்களுக்கு நீடிக்கவில்லை,முதல் ஐந்து,ஆறு மாதம் பணம் அனுப்பியவன்,பிறகு தொடர்ப்பு கொள்வதையே குறைத்துக்கொண்டான்.

திடிரென்று ஒரு நாள் பிரகாஷ் போன் பன்னினான்,வள்ளி தான் போனை எடுத்தாள்,அம்மா நான் விரும்பிய பெண்னை திருமணம் செய்துக்கொண்டேன்,நான் வேலை செய்யும் கம்பனி உரிமையாளரின் மகள் என்றதும், வள்ளிக்கு தூக்கிவாரிப் போட்டது,என்னடா உளறுகிறாய்,பொய் சொல்லாதே என்றாள் வள்ளி.இதில் யாரு சரி விளையாடுவார்களா?என்றான் பிரகாஷ்,நாங்கள் எல்லாம் இல்லை என்று நினைத்தாயா?எப்படி மனம் வந்தது உனக்கு என்றாள் வள்ளி,எனக்கு யாரும் இல்லை என்று சொன்னதால் தான்,அவள் என்னை காதலிக்கவே செய்தாள்,என்பதை அம்மாவிடம் கூறமுடியுமா அமைதியாக இருந்தான் பிரகாஷ்.

வள்ளி அழுதப்படி போனை துண்டித்தாள்,தூங்கி எழுந்த பரமசிவம்,வள்ளி அழுவதைக்கண்டு பதறிப் போனார்,ஏன் என்று கேட்டவரிடம்,வாய்விட்டு ஓ வென்று கதறிவிட்டாள் அவள்.ஏன் என்ன நடந்தது! என்று பதறினார் அவரும், பிரகாஷ் விரும்பிய பெண்ணை கட்டிக்கிட்டானாம்,என்னடி சொல்ற! ஆமாங்க இப்ப தான் போன் பன்னினான், என்றதும் அவர் அப்படியே கட்டிலில் உட்கார்ந்து விட்டார்

இதற்காகவா இவனை படிக்க அனுப்பினோம்,இருவரும் அங்கலாய்த்துப் போனார்கள்.சனிகிழமை என்பதால், அமுதா மாலையில் வீட்டுக்கு வந்தாள்.அவளும் காலேஜ் முடித்துவிட்டு,வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டாள். அவளும்,அவளுடன் வேலை செய்யும் இரண்டு நண்பிகளுடன் ஒரு அறையில் வாடகைக்கு இருந்தாள் அமுதா,ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டுக்கு வரும் அமுதா,திங்கள் காலையில் வீட்டிலிருந்தே வேலைக்குப் போய்விடுவாள்.அன்று வீட்டுக்கு வந்த அமுதா, பெற்றோர்களின் நிலையை கண்டு கொஞ்சம் பயந்துப்போனாள்.காரணம் தெரிந்தப்பின்பு,அவளுக்கும் கவலையாக இருந்தது,அதை வெளிப்படுத்தவில்லை, கவலைப் படாதீங்கள்,என்று ஆறுதல் மட்டுமே கூறமுடிந்தது.நாட்கள் நகர்ந்தது,அமுதாவிற்கு வரன் வந்தது,ஆனால் அவர்கள் கேட்க்கும் வரதட்சணை, பரசிவத்திற்கு தலையை சுற்றியது,என்ன செய்வது என்று புரியவில்லை அவருக்கு.

ஒரு தடவை இவர்களாகவே பிரகாஷ்க்கு போன் பன்னினார்கள்,அவர்கள் நேரம்,பிரகாஷ் மனைவி டாலியா போனை எடுத்தாள்,அவள் பேசிய ஆங்கிலம்,இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை,போனை துண்டித்து விட்டார்கள். அன்று மாலையே பிரகாஷ் போன் பன்னினான்,இனி இங்கு போன்பன்னாதீங்கள்,டாலியா சொன்னாள்,யாரோ போன் பன்னியதாக,நான் நினைத்தேன்,நீங்களாகதான் இருக்கும் என்று,பட்டென்று போனை வைத்துவிட்டான் பிரகாஷ்.

சொந்த வயலை விற்பதற்கு முடிவு செய்தார் பரமசிவம், இதில் வள்ளிக்கு உடன் பாடில்லை,அதையும் வித்துவிட்டால்,நாங்கள் எப்படி கஞ்சி குடிப்பது,என்றாள் அவள்,காணிப்பத்திரத்தை வங்கியில் வைத்து பணம் வாங்குவோம்,பிறகு கட்டுவோம் என்றாள் வள்ளி,இப்ப யாரும் விவசாய்களுக்கு,கடன் கொடுப்பது இல்லை, அப்படியே கொடுத்தாலும்,மாதம் தோறும் வட்டி கட்டனுமே,அதற்கு நமக்கு வருமானம் இல்லையே என்றார் பரமசிவம்,முன்பு மாதிரி விளைச்சலும் இல்லை,அப்படியே விளைந்தாலும் மழை,வெள்ளம்,என்று அடிப்பட்டு போகுது,இல்லையென்றால் தண்ணி இல்லாமல் வரட்சியில் பயிர்கள் வீணாகிப் போகுது,பாடாய்பட்டு விவசாயம் செய்தும்,குறைந்த விலைக்கே கேட்கின்றார்கள் நம்முடைய கஷ்டம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது என்று பெருமூச்சி விட்டார் பரமசிவம்.

இவர்கள் காணியை விற்கவும்,அமுதாவிற்கு வரன் அமையவும் சரியாக இருந்தது,அவள் திருமணத்தை முடித்துவிட்டார்கள்.ஒரு சிறுத்தொகை மட்டும் கையில் எஞ்சியது,அதை வைத்து எதாவது செய்யலாம் என்று சோசிக்கும் போது,வள்ளிக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது,அந்தப்பணமும் அதில் கரைந்து விட்டது.

தற்போது பரமசிவத்திடம்,இருக்கும் ஒரே சொத்து வீடு மட்டும் தான்,அது அவரின் பூர்வீகசொத்து

தனது சைக்களில் வீடுவீடாக பத்திரிக்கை போட ஆரம்பித்தார் பரமசிவம்,அமுதா இடைக்கிடை போன் பன்னுவாள்,அப்பா நாங்கள் வண்டி வாங்கினோம்,புது சோபா வாங்கினோம்,என்று கூறும் அவள்,நீங்கள் பணத்திற்கு என்னப்பா செய்றீங்கள்,என்று ஒரு வார்த்தைக் கூட கேட்க்கமாட்டாள்.அதனால் பரமசிவம் எந்த கஷ்டத்தையும் மகளிடம் கூறவும் மாட்டார்.

வள்ளி உடல் தேறியப் பிறகு,மெதுவாக நடமாட தொடங்கினாள்,தான் கூலி வேலைக்குப் போவதாக,அவள் பரமசிவத்திடம் கூறினாள்,அவர் தடுத்துவிட்டார்,உனக்கு என்ன பைத்தியமா?இதே ஊரில் நாங்கள் கூலிக்கு வேலைக்குப் போகமுடியுமா? என்று அதட்டிவிட்டார்,அவள் வாயை மூடிக்கொண்டாள்.அவர் கூறுவதும் சரியே, வருமானத்திற்கு வழியில்லை என்றாலும்,கூலி வேலைக்கு போகமுடியாத சூல்நிலை,கடவுளே ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய் என்று சோர்ந்துப் போனாள் வள்ளி.

பக்கத்து ஊரில்,தீபெட்டி தொழிற்சாலைக்கு இருவரும் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள்.ஒரு நாள்,அமுதா தனது ஆறு வயது மகனை அழைத்துக் கொண்டு வந்து நின்றாள்,அம்மாஅவருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது,எனது வருமானத்தில் மட்டும் குடும்பத்தை நடத்துவது கஷ்டமாக இருக்கு,வண்டியை வித்துட்டோம், நிறைய கடன்,பணம் கொஞ்சம் பிரட்டி கொடுத்தால்,அவர் ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்குவார் என்று அழுதாள் அமுதா.

அப்பா இந்த வீட்டை அடமானம் வைத்து,பணம் தந்தால் நாங்கள் பிறகு திருப்பி தந்து விடுவோம் என்றாள் அமுதா, வீட்டை கொடுத்து விட்டு,நாங்கள் எங்கடி போவோம், என்றாள் வள்ளி,அமுதா மௌனமாக இருந்தாள், உங்களுக்கு எல்லாம் உங்கள் வாழ்க்கை தான் முக்கியம், நாங்கள் எக்கேடு கெட்டுப்போனால் உங்களுக்கு என்ன, அத்தனை நாள்,நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன்,ஒரு நாள் வந்து எட்டிப் பார்த்தியா? பிரகாஷ் என்னவென்றால் ஒரேதாக தலை மூழ்கிட்டு போய்டான்,நீ இருக்கும் வீட்டுக்கு உலை வைக்கிற,உங்களுக்கு எல்லாம் பணம் தான் முக்கியம்,பெத்தவங்கள் கிடையாது என்று வள்ளி ஆத்திரப்பட்டாள்,பரமசிவம் வாய் அடைத்துப் போனார் மனைவியின் கோபத்தைப் பார்த்து.

சரியம்மா நீ கவலைப் படாமல் போ,நான் ஏற்பாடு செய்கிறேன் என்று ஆறுதல் கூறி,அமுதாவை அனுப்பி வைத்தார் பரமசிவம்.பிறகு வள்ளியை சமாதானம் படுத்தி, அமுதா வேறு எங்கு தான் போவாள்,நாங்கள் மட்டும் தானே அவளுக்கு இருக்கோம்,வீட்டை வித்து பணத்தை கொடுப்போம்,என்றதும் வள்ளி பதறிப் போய்விட்டாள், விற்பதா? நீங்கள் முட்டாளா? இருக்கும் வீட்டையும் வித்துப்புட்டு நடு தெருவில் நாங்கள் நிற்பதா?என்றாள் வள்ளி.நாங்களும் இந்த ஊரை விட்டு போய்விடுவோம், என்றதும் ஆடிப் போனாள் அவள்,இந்த ஊரில் கௌரவமாக இருந்துவிட்டு,தற்போது இங்கு இருக்க எனக்கு பிடிக்கவில்லை,என்றதும் வள்ளி அமைதியானாள் பரமசிவத்தைப் பார்க்க,பாவமாக இருந்தது அவளுக்கு.

தனது வீட்டை விற்று அமுதாவிற்கு பணத்தை கொடுத்து விட்டார்கள்.மிகுதி பணத்தில் தீபெட்டி தொழிற்சாலைப் பக்கமாக,ஒரு வீட்டை வாடகைக்குப் பார்த்து குடியேறிவிட்டார்கள் இருவரும்,தொடர்ந்து வேலைக்குப் போய்வந்தார்கள்,வயதான காலத்திலும்,உழைத்து சாப்பிடும் நிலமை இருவருக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *