பட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 3, 2020
பார்வையிட்டோர்: 3,429 
 
 

காளி பள்ளி கூடமே போனது இல்லை.அவன் தன் அப்பாவுடன் கூட போய் அவர்களுக்கு சொந்தமாக இருந்த அரை காணி நிலத்தில் கிராமத்தில் வெறும் ஏரி வாய்க்கால் பாய்ச்சலில் வரும் தண்ணீரை உபயோகப் படுத்தி விவசாயம் பண்ணி வந்தான்.அவன் அப்பாவும், அம்மாவும், தவறிப் போன பிறகு தன் மாமன் மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.அந்த அரை காணி நிலத்திலே விவசாயம் பண்ணி வந்து குடும்பத்தை நடத்தி வந்தான் காளி.

கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆனதும் காளிக்கு ஒரு பையன் பிறந்தான்.அந்த குழந்தைக்கு ‘ராஜ்’ என்று பெயர் வைத்தார்கள் காளியும் அவன் மனைவியும்.ராஜ்ஜுக்கு ஐந்து வயது ஆனதும் அந்த ஊர் கோடியிலே இருந்த ஒரு சின்ன பள்ளிகூடத்திலே சேர்த்து படிக்க வைத்தான்.ஒரு நாள் ராஜ் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்துக் கொண்டு இருந்தபோது பாம்பு கடித்து இறந்து விட்டான்.

ரெண்டு வருஷங்கள் கழித்து காளி தன் மனைவியை பிரசவத்திற்க்காக ஆறு கிலோ மீட்டர் தூர தள்ளி இருந்த ஒரு கார்பரேஷன் மருத்துவ மணையில் சேர்த்தான்.அங்கு இருந்த டாகடர் அந்த பிரசவத்தை சா¢யாக பண்ணாதால் காளியின் மனைவியும் குழந்தையும் இறந்து விட்டார்கள்.

விஷயம் கேள்விப் பட்ட காளி கதறி அழுதான்.

தன்னிடம் இருந்த கொஞ்ச பணத்தில் அவர்கள் இருவரையும் அடக்கம் பண்ணி விட்டு வீட்டுக்கு வந்தான்.தனக்கு வந்து கொண்டு இருந்த சொற்ப விவசாய பணத்தில் இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ள விருப்பம் இல்லை காளிக்கு.

தனியாகவே வாழ்ந்து வந்தான்.

அந்த கிராமத்தில் நாலு வருஷமா மழையே பெய்ய வில்லை.காளியிடம் இருந்த பணம் எல்லாம் செலவு ஆகி விட்டது.தன்னிடம் இருந்த காணி நிலத்தை விற்று விட்டு அதில் வந்த பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். அந்த பணமும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வந்துக் கொண்டு இருந்தது.

’இனிமே இந்த கிராமத்தில் இருந்து வருவதிலே ஒரு புண்ணியமும் இல்லே, நாம பட்டிணத்து க்குப் போய் ஏதாவது வேலை செஞ்சு பிழைச்சு வரலாம்’என்று முடிவு பண்ணி, தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து கொண்டு ‘பஸ்’ ஏறி முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த மதுரைக்கு வந்தான் காளி.

’பஸ் ஸ்டாண்டில்’ இருந்த ஒரு ‘டீ’க் கடையில் பதினைந்து ரூபாய்க்கு ரெண்டு ‘பன்னை’ சாப் பிட்டு விட்டு ‘டீ’யைக் குடித்தான்.

ஒவ்வொரு தெருவாகப் போய் வேலைக் கேட்டு வந்தான்.அவனுக்கு எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஏப்ரல் மாச வெய்யில் என்று கூட பார்க்காமல் தெரு தெருவாக அலைந்து கொண்டு இருந்தான்.

காலையிலே ஆறு மணிக்கு சாப்பிட்ட ரெண்டு பண்ணும் ஜீரணம் ஆகி அவனுக்கு பசி வந்தது காளிக்கு.மாலை மணி ஐந்து இருக்கும்.காளிக்கு சோர்வு அதிகம் ஆனதால் அவன் மயக்கம் வந்து,ரோடின் ஓரத்தில் இருந்த ஒரு படியில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.

அந்த தெருவில் போய் வந்துக் கொண்டு இருந்த ஒவ்வொருத்தரும் காளியைப் பார்த்து கையை கூப்பி வணக்கம் சொல்லி விட்டு போய்க் கொண்டு இருந்தார்கள்.
காளியும் பதிலுக்கு முடியாமல் பதில் வணக்கம் சொல்லி வந்தான்.பதில் வணக்கம் சொல்லி காளியின் கை வலிக்க ஆரம்பித்து விட்டது.

காளி தன் மனதில் ‘நம்மே நம்ப ஊர் ஜனங்க திரும்பி கூட பாக்க மாட்டாவ.ஆனா இந்த பட்டினத்துகாரவ ஒத்தர் தவறாம எனக்கு கையை கூப்பி வணக்கம் சொல்றாவளே.பட்டினத்துகாரவ, இம்புட்டு நல்ல சனமா..’ என்று சந்தோஷப் பட்டான்.

எழுந்தரிக்க முடியாமல் காளி மெல்ல தள்ளாடி எழுந்து அவன் படுத்து இருந்த படியின் வாச லைப் பார்த்தான்.

அது ஒரு வினாயகர் கோவில்!.

அங்கு இருந்த குருக்கள் வினாயகருக்கு தீபம் காட்டிக் கொண்டு இருந்தார்!!.

‘எல்லாரும் புள்ளையாருக்கு கையை கூப்பி வணக்கம் சொல்லி இருக்காக போல இருக்கே. இதே நாம தப்பா பு¡¢ஞ்சுக்கிட்டு நமக்கு சொல்றாங்வன்னு நினைச்சு சந்தோஷப் பட்டோமே’ என்று வெட்கப் பட்டுக் கொண்டே நின்றுக் கொண்டு இருந்தான் காளி.

அந்த நேரம் பார்த்து அந்த வினாயகர் கோவில் குருக்கள் ஒரு பக்கெட்டில் இருந்து சுண்டல் பிரசாதத்தை காளிக்குக் கொடுத்தார்.அந்த சுண்டலை காளி வாங்கி ரசித்து சாப்பீட்டு விட்டு,எதிரே இருந்த தண்ணீர் பந்தலில் தண்ணிர் குடித்தான்.

அவன் மயக்கம் கொஞ்சம் தெளிந்து!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *