பாலுவிற்குக் குழப்பமாக இருந்தது. எப்படி யோசித்தும் விடை கிடைக்கவில்லை.
இதற்கு மேலும் சிந்தித்தால் மூளை சிதறிவிடும். சம்பந்தப்பட்ட ஆளையேக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.! தீர்மானித்து நண்பன் வீட்டுப் படியேறினான்.
”வாடா.” வரவேற்றான். ”என்ன ?” விசாரித்தான்.
”கையில உள்ள பணத்தை வைச்சி ஏழை மக்களுக்கு வட்டிக்கு விட்டு நீயே போய் வசூலிச்சு சம்பாதிக்கிறே…சரி. ஆனா…அதுல குதர்க்கமாய் வீட்டுல வயசுக்கு வந்த ஆம்பளைப் பசங்க இருக்கிற இடமாய்ப் பார்த்து எதுக்குக் குடுக்கிறே ?”
அவன் மௌனமாய் இருந்தான். இவனை ஆழமாகப் பார்த்தான்.
”அப்புறம் ?” கேட்டான்.
”வயசு பொண்ணுங்க இருக்கிற இடமாய்ப் பார்த்துக் கொடுத்தாலும் பணம் வரலைன்னா அதை வேற ஒரு கணக்காய் முடிக்கலாம். ஆனா….பையன்…..?” இழுத்தான்.
”…………………”
”உனக்கு வீட்டு வேலைக்கும் ஆள் வேணாம். வசூலுக்கும் தேவை இல்லே. அப்படியே தொழில் விரிவு ஆள் தேவைன்னாலும் கொடுக்காதவனையெல்லாம் வைச்சி கூட்டம் போட முடியாது.” நிறுத்தினான்.
”உன் மனசுல உள்ளதையெல்லாம் கொட்டிட்டியா இன்னும் இருக்கா ?”
”இல்லே சொல்லு ?”
”எந்த தொழிலையும் பொண்ணுங்களைக் குறிவைச்சு கொடுத்தா பல பிரச்சனைகள் அடுத்து குடும்பம், தொழில் குட்டிச்சுவர். அது தப்பு.”
”சரி”
”ஆம்பளைப் புள்ளைங்க விவகாரம்… பணம் வரலைன்னு வீட்டு வாசல்ல நாலு தடவை கடுமையாய்ப் பேசினால் அம்மா அப்பா கஷ்டத்தைப் பார்த்து உழைச்சு சம்பாதிச்சு கொடுப்பான். இல்லே ரோசப்பட்டாதுவது திருப்புவான். அதிகமாய் நின்னாலும், கொடுத்தாலும் வரதட்சணையில திருப்பு சொல்லலாம் திருப்பிக்கலாம். தாமதமானால் நாமே ஒரு பொண்ணைப் பார்த்து முடிச்சு கலியாணத்துல வசூல் செய்துக்கலாம். புதுப் பொண்டாட்டிக்காரன் ரோசப்பட்டு பொண்டாட்டி நகைகளை வித்தாவது கொடுப்பான். இப்புடி அதுல நிறைய நுணுக்கம் இருக்கு. சொல்லனுமா ?” சொன்னான்.
”தேவை இல்லே !” பாலு திருப்தியாய்த் தலையாட்டினான்.
தொடர்புடைய சிறுகதைகள்
'இதைச் சொல்லக்கூட தனக்கு உரிமை இல்லையா...?' - என்று மனம் கேட்க அப்படியே இடிந்து போய் தன் அறையில் அமர்ந்தாள் செண்பகம்.
சிவா தன்னுடையத் துணிகளை சோப்புப் போட்டு கொல்லைக் கிணற்றடியில் மாங்கு மாங்கென்று துவைத்துக்கொண்டிருந்தான்.
'தன் துணி துவைக்கக்கூடாது, இஸ்திரி செய்யக்கூடாது, இரு ...
மேலும் கதையை படிக்க...
எதிர்பாராதது.!
இப்படி நடக்குமென்று நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.
சில விநாடிகளுக்கு முன்தான் அழகேசன் கைபேசியில் தொடர்பு கொண்டான்.
இவன் என் நண்பன். பால்ய காலம் முதல் பழக்கம்.
கைபேசியை எடுத்துக் காதில் வைத்து, '' என்ன ? '' என்றேன்.
'' உன் பேச்சை நம்பி என் ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி 11.00.
'ஆம்பளை அஞ்சு மடங்கு வீராப்புன்னா பொம்பளை பத்து மடங்குங்குறதுதான் நடைமுறை வழக்கம், கேள்வி. இவர் மாறாய் இருக்கார். சண்டை.... ரெண்டு நாள்ல சரணாகதி அடைவார்ன்னு நெனைச்சா... ஆள் பத்து நாட்களாகியும் திரும்பாம இருக்கார்.! அஞ்சு நாட்கள்தான் புருசன்கிட்ட முகம் ...
மேலும் கதையை படிக்க...
துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி.
'எப்படி...எப்படி... இப்படி ..? ' ஒரு விநாடிக்குள் எனக்குள் ஓயாத கேள்விகள்.
மைதிலி என் தாய்மாமன் மகள். என் அம்மாவிற்கு மூன்று அக்காள்கள், ஒரு அண்ணன், ஒரு தங்கை. ...
மேலும் கதையை படிக்க...
இரவு மணி 10.10.
"என்னங்க..! நம்ப பொண்ணு இப்படி இருக்காளே....! அவளுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா...?"கேட்டு கட்டிலில் தன் அருகில் படுத்திருக்கும் கணவன் பக்கம் ஒருக்களித்துப் படுத்தாள் அம்புஜவள்ளி.
"என்ன செய்யிறது அம்புஜம்..? அது அவளோட விதின்னு விட்டுட வேண்டியதுதான். !"சாம்பசிவத்திற்குச் சொல்லும்போதே துக்கம் ...
மேலும் கதையை படிக்க...
இருட்டு எனக்கு இருட்டாய்த் தெரியவில்லை. பளீரென்று வெளிச்சமடிக்கும் பகலாய் இருந்தது. மனதில் அத்தனை மகிழ்ச்சி. ஆசைப்பட்டது நடக்குது அதுக்கு மேலேயும் அது தானாய் நடக்குதுன்னா.... மனசுல மகிழ்ச்சியும், புத்தியில பூரிப்பும் வராம என்ன செய்யும் ?
விசயத்துக்கு வர்றேன்.
எனக்கு ஆத்மார்த்தமான நண்பன் ஒருத்தன். ...
மேலும் கதையை படிக்க...
ஆள் கம்பெனியில் உயர் பதவி. நல்ல சம்பளம். அப்புறம் ஏன் சைடு பிசினஸ். ஐந்து பத்து லட்சம் போட்டு வியாபாரம் ?
பணம் சம்பாதித்து என்ன செய்ய போகிறான் ?
சம்பாதிப்புக்கு வேலை. இருக்க ஒரு வீடு. திடீர் செலவிற்குக் கொஞ்சம் சேமிப்பு. மனைவி ...
மேலும் கதையை படிக்க...
கோபம் தணியவில்லை. சண்டையும் முடியவில்லை. காரம் சாரம் குறையாமல் அலமேலு முகம் சிவந்து ' புசு புசு ' வென்று மூச்சிரைக்க வந்து சோபாவில் அமரவும், அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
எழுந்து போய் கதவைத் திறந்தவளுக்குச் சின்ன அதிர்ச்சி , ...
மேலும் கதையை படிக்க...
அறையைத் திறந்து கட்டிலைப் பார்த்ததும் நடேசுக்குச் சொர்க்கம் கிடைத்த மகிழ்ச்சி, மனசுக்குள் குதூகலம். அவ்வளவு பயணக்களைப்பு.
காலையில் பேருந்து ஏறி.... இரவு எட்டு மணிக்கு மதுரையில் இறங்குவதென்றால் சமானியப்பட்ட விசயமில்லை. உட்கார்ந்து பயணத்ததில் முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி. 28 ...
மேலும் கதையை படிக்க...
'பதினெட்டு வயசுப் பையனைப் பையனாய் நெனைக்காம பாலகனாய் நெனைக்கிறீயேய்யா பாவி.! புள்ளையைச் செல்லமா வளர்க்க வேண்டியதுதான் அதுக்காக இப்படியா ?!' - இடியாய் எனக்குள் இப்படி ஏகப்பட்ட கடுப்பு, கொதிப்பு. ஆனாலும் என்ன செய்ய ? வகையாய் வந்து மாட்டிக்கொண்டேன்.
எல்லாம் காலத்தின் ...
மேலும் கதையை படிக்க...
வித்தியாசமான விகிதாச்சாரங்கள்….!