நாணயம்

 

காலையில் எழுந்து பம்பரமாக சுழன்றதில் ஏற்பட்ட அலுப்புத்தீர, வெந்நீரில் குளித்தால்தான் களைப்பு நீங்கும் என்ற எண்ணத்தில் கெய்சறைபோட்டால், அதற்குள் வெளிகேட்டை யாரோ திறக்கும் சப்தம் கேட்க —ஜன்னல் வழியே நோக்கினாள் தாமினி…

கேட்டுக்கு வெளியே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நான்கு வயது சிறுவனோடு நின்றாள். கதவை திறந்த தாமினி – “யாரும்மா நீ? என்னவேண்டும்? ” கேட்டாள்.

“வக்கீல் வீட்டு அம்மா சொன்னாங்க, உங்களுக்கு வேலைக்கு ஆள் கேட்டதா ,,,அதான் வந்தேன் ”

”அப்படியா,வா உள்ளே ,அது யாரு கூட..உன் பையனா?”

“ஆமாம்மா …..” என்று சொன்னபடியே கையிலுள்ள கடிதத்தை கொடுத்தாள்.

அதை வாங்கி படித்துப்பார்த்தாள், வக்கீல் வீட்டு வனஜாதான் எழுதிருந்தாள். தனக்குத் தெரிந்தவள் என்றும், நன்றாக வேலை செய்வாள் என்றும்.

“உன் பேரு என்ன?”

“முனியம்மாங்க”

“இதோ பாரு முனியம்மா, வேலைக்கு வந்தபிறகு அந்த வேலை செய்யமாட்டேன் இந்த வேலை செய்யமாட்டேன்னு சொல்லக்கூடாது. சமயத்தில் கடைக்கும், ரேஷனுக்கும் ஏன் மில்லுக்கும் கூட போகவேண்டியிருக்கும். வீட்ல நாங்க இரண்டு பேர்தான். காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடனும். வெள்ளி செவ்வாய் வீடு துடைக்கணும். கண்டிப்பாய், உன் மகனை வேலைக்கு வரும்போது இங்கே அழைச்சுகிட்டு வரக்கூடாது. இதுதான் என் கண்டிஷன். இதற்கெல்லாம் சம்மதம்னா சொல்லு பார்ப்போம்.பொய், திருட்டு கூடவேகூடாது”

“நீங்க உங்க கண்டிஷனை சொல்லிட்டீங்க, நான் என் கண்டிஷனை சொல்லிடறேன், நான், நாணயமானவள், என் நாணயத்துக்கு பங்கம் வந்தா அன்னைக்கே வீட்டை விட்டு போய்டுவேன், இரண்டு வேலை காபி கொடுத்திடனும், ஒரு வேலையாவது சாப்பாடு கொடுத்துடணும் அது காலையோ மதியமோ அது உங்களிஷ்டம், சம்பளம் அறநூறு ருபாய் கொடுத்திடனும். கைநீட்டி சம்பளம் வாங்கிட்டா எந்த வேலையையும் செய்யாம போகமாட்டேன், உடல் நிலை சரி இல்லாமல் போனாலொழிய –அவசிய லீவுன்னா முன்னாடியே சொல்லிடுவேன். இதுக்கெல்லாம் சரின்னா எனக்கும் சம்மதம்தான்”

“அடேடே இத்தனை கறாராகத்தான் பேசுற, நாளையிலருந்து வேலைக்கு வந்துடு ஒன்னாம் தேதியாயிருக்கு கணக்கு வைக்க சரியாயிருக்கும்.”

“சரிம்மா ,காலையிலே வரேன் ”

முனியம்மா எந்த வேலையையும் சுத்தமாகவும் ,விரைவாகவும் செய்தாள்.முகம் சுளிக்காமல். எந்த வேலை சொன்னாலும் அவள் செய்தது தாமினிக்கு திருப்தியாக இருந்தது’..
இரண்டு மாதம் சீராக ஓடியது .ஒரு காலை நேரம் –

“முனியம்மா, அய்யாவோட டிபன் பாக்ஸ் சை எங்கே கழுவி வைச்சே?”

“எல்லா சாமானையும் அந்த மேடையிலேதான் கவிழ்த்துவிட்டு போறேன்”

“அங்கே டிபன் பாக்ஸ் சை காணோமே , ஞாயிறு லீவாச்சே? டிபன் பாக்ஸ்சுக்கு வேலை இல்லையே, அங்கே வச்சிருந்தால் எங்கே போகும் ?” மறுபடி தாமினி கேடடாள்.

முனியம்மா போய் பார்த்து விட்டு, “இங்கே இல்லையே, உள்ளே எங்காவது கை தவறி வச்சிருக்கீங்களா பாருங்கம்மா” என்றால் முனியம்மா அமைதியாக.

அதற்குள் “இதைப்பாரு தாமினி எனக்கு இன்னைக்கு டிபன் வேண்டாம் நான் வெளிலே போறேன் அங்கேயே சாப்பிட்டுக்குறேன், நீ நிதானமா வீட்டில தேடிப்பாரு உனக்கு ஞாபகமறதி அதிகம்” என்ற கணவனை முறைத்து பின் -

“என்னை எல்லோரும் பைத்தியம்னு சொல்லிடுவீங்க போலிருக்கே, வீட்டில நாம மூணு பேருதான், வேற திருடனா வந்து எடுத்துட்டு போயிருப்பான்? அப்படியே இருந்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு டிபன் பாக்ஸ் சை மட்டுமா திருடுவான் அதிசயம்தான், முனியம்மா நீயும் உன்வீட்டில தேடிப்பாரு எதனாச்சும் எடுத்திட்டு போறேல்ல”

“நீங்க இப்படி சொல்லிடக்கூடாதுன்னுதானே நான் என் வீட்டிளிருந்து பாத்திரம் கொண்டு வரேன்”

“வீட்டையே அலசிட்டேன் வேணும்னா மறுபடியும் தேடிப்பார்க்கிறேன் எதுக்கும் உன் வீட்லயும் தேடிபாரேன், கை தவறுதலா எடுத்துட்டுப்போயிருக்கலாம்ல”

முனியம்மா வியப்போடு பார்த்துவிட்டு வெளியேறினாள் .மாலை ……

முனியம்மா பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள் ..அலுவலகம் விட்டு வந்த பாஸ்கரன்,

“தாமினி உனக்கு இருந்தாலும் இத்தனை ஞாபகமரதி கூடாது ஞாயிறு உன் அக்காள் இங்கு வந்த பொது நீதானே ஸ்வீட் வைத்து இந்த டிபன் பாக்ஸ்சை கொடுத்தாயாம் அதை மறந்துவிட்டு முனியம்மாவை சந்தேகப்பட்டாயே நியாயமா? உன் அக்காள் அலுவலகம் விட்டு வருகையில் என்னை கூப்பிட்டு கொடுத்தாள்”

“சரிசரி சப்தம் போட்டு பேசாதீங்க, டிபன் பாக்ஸ் கிடைத்துவிட்டது என்று முனியம்மாவிற்கு தெரிந்தால் நாளைக்கு ஏதாவது சாமானை எடுத்துகொண்டால் கூட, நீங்கதான் ஞாபக மறதியா எங்காவது வைச்சுட்டு என்னை கேட்கிறீகள் என்று சொல்லிடப்போரால் இந்த பாக்ஸ்
காணாமல் போனது மாதிரியே இருக்கட்டும், எதையாவ உளறி வைக்காம போங்க ”என்று கணவனை மடக்கினால் தாமினி

மாலை வேலையெல்லாம் முடிந்ததும் முனியம்மா தாமினிடம் வந்தால்.

“அம்மா என் கணக்கை பார்த்து சம்பளத்தை தரீங்களா ?”

“என்ன முனியம்மா, மாசமே முடியலே ,அதற்குள்ளே ,,சம்பளம் கேட்கிறே?” புரியாமல் கேட்டாள் தாமினி

“அது அப்படித்தான் அம்மா, நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் உங்ககிட்டே என் நாணயத்துக்கு பங்கம் வந்தா அன்னைக்கே வேலையை விட்டு போயிடுவேன் என்று டப்பாவை நீங்களே உங்க அக்கா வீட்டுக்கு கொடுத்துவிட்டு காணோம்னு சொன்னீங்க, அய்யா கொண்டு வந்து கொடுத்த பிறகாவது தப்பா கிடைச்சுட்டுதுன்னும், நாதான் மறந்துட்டேன்னு சொல்லியிருந்தாகூட என் மனசு ஆறியிருக்கும் ,ஆனால் நீங்க …. நான் ஏழைதாம்மா எங்ககிட்டே இருக்கிறதே இந்த நாணயம் ஒண்ணுதான் அதையும் உங்ககிட்ட இழக்கத்தயாராயிள்ளே ,,நீங்க வசதியானவங்க ,காணாமல்; போனது இன்னும் பெரிய பொருளா இருந்தா என்னை போலீசிலே பிடிச்சுகொடுக்கக்கூட தயங்க மாட்டீங்க, வேண்டாம்மா இந்த வேலை, என் கணக்கை நேர் பண்ணிடுங்க ‘

தாமினி கணவனை முறைத்து பேச்சற்று நின்றாள்

- 5-2-95 

தொடர்புடைய சிறுகதைகள்
'வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க "ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே வந்தான் . மாதவா ,வெள்ளிக்கிழமை லீவு போட்டுட்டு போகலாமாடா "என்றதும் "போலாம்பா' என்று உற்சாக குரல் உடனே வந்தது ராமசாமி போன்போட எதிர் ...
மேலும் கதையை படிக்க...
“மஞ்சு, சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு இன்னைக்கு மாம்பலத்துக்காரர்கள் உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். புறப்படும் பொழுது அம்மா ஞாபகமூட்டினாள். மஞ்சுவுக்கு வேதனைக்குள்ளும் சிரிப்பு ஊடுருவியது. அம்மாவுக்குத்தான் எத்தனை விடா முயற்சி. அவளுக்கு நம்பிக்கையில்லை எத்தனையோ வரன்கள் வந்து பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுப் போய் லெட்டர் ...
மேலும் கதையை படிக்க...
வேலப்பன் சாவடி மிக அழகிய கிராமம். மா, பலா, தென்னை மரங்கள் செழிப்பாக வளர்ந்து இருந்தது ஊரும் ஊரில் உள்ள மக்களும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். வேலப்பன் சாவடியில் குமரன் என்பவன் காய்கறிக் கடை வைத்திருந்தான். சாதாரணமாக இருந்த குமரன் ...
மேலும் கதையை படிக்க...
பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்த மாக ஒரு எஸ் .டி .டி பூத்தும் ,ஜெராக்ஸ் மிஷினும் வாங்கிகொடுத்தார் அப்பா .நானும் ,நல்ல பிள்ளையாகத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன் யார் கண் பட்டதோ தெரியவில்லை . கடந்த ...
மேலும் கதையை படிக்க...
கண்ணாடி முன் நின்ற மாலதி ஒரு தடவைக்கு இரு தடவையாக முகத்துக்குப் பவுடரை ஒற்றிக் கொண்டாள். நெற்றியில் உள்ள ஸ்டிக்கர் பொட்டை சரி செய்து கொண்டாள். புடவை ப்ளீட்ஸை ஒழுங்குபடுத்தி, மேலே அடுக்கிப் பின் பண்ணிக் கொண்டாள். கண்ணாடியில் தன்னைப் பார்த்துத் திருப்திப் ...
மேலும் கதையை படிக்க...
வினோத் லேசில் பையைத் திறந்து காசை வெளியில் எடுத்துவிட மாட்டான். பஸ்ஸுக்குச் செலவழிக்க மனமின்றி, இரண்டு மைல் துhரம் கால் கடுக்க நடந்து செல்ல அஞ்ச மாட்டான். சினிமா, டிராமா சட்டென்று துணிந்து போய் விடமாட்டான். ‘ஓசி’ டிக்கட் கிடைத்தால் தொலையட்டும் ...
மேலும் கதையை படிக்க...
நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே கலர் ரவிக்கை. ஒற்றை முத்து தோடுகள். முத்து வளை. கழுத்தில் மூன்று முத்துக்கள். வெள்ளை கைப்பை வெள்ளை குதிகால உயர்ந்த ஷூ. வில்லாக ...
மேலும் கதையை படிக்க...
ரஞ்சிதாவா . . .? இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய் காணாத தலை. . . இவளா ரஞ்சிதா சே! சே! இருக்காது. ராதா தடுமாறினாள். அந்த வளையம் சூழ்ந்த கண்கள் ராதாவை மீண்டும் ...
மேலும் கதையை படிக்க...
தீர்த்தா புடவைக்கு இஸ்திரிப் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மா, தெரு வாயிற்படியிலிருந்து கத்தினாள். “தீர்த்தா, சீக்கிரம் இங்கு வந்து பார், யார் வந்திருக்கிறார்கள் என்று!” தீர்த்தா அவசரமாக வெளியில் வந்து பார்த்தபோது சுஜா நின்றிருந்தாள், தலை நிறையப் பூவும் வாய் நிறையச் சிரிப்புமாய்! நமக்குத் தெரிஞ்சு, கவுன் ...
மேலும் கதையை படிக்க...
'யெய்யா....அன்பு என்னாப்பு இப்படியாயிட்டு ...புழச்சு வந்தியே "என்று கதறிய கதறலில் உறவினர் கூட்டமே கலங்கி போய்விட்டது . "அப்பத்தா ,சும்மா புலம்பாதே ,,பாவம் அன்பு அவனே மனசொடிஞ்சு வந்திருக்கான் ..அவனை இன்னும் கஷ்டப்படுத்தணுமா .ஆறுதலா பேசுவியா ,புலம்பிகிட்டு "அதட்டினான் அன்புவின் நண்பன் அசோக் கிராமத்து ...
மேலும் கதையை படிக்க...
ரொம்ப தேங்க்ஸ்
வாழ்க்கை மரம்
மனம் மாறியது
காதல் வளர்த்தேன்
மனவேலிகள்
சில உரிமைகள், உரியவருக்கே!
நல்ல இடத்து சம்மந்தம்
ரஞ்சிதாவா…..?
மெழுகுவர்த்திகள்
நண்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)