ஏண்டா மச்சான் 4 மணி நேரம், 5 மணி நேரம்னு கரண்ட் கட் ஆறதால பெரிய தொல்லையா இருக்குடா …ச்சே!
ஏண்டா இப்படி அலுத்துக்கறே?
பின்ன என்னடா மாம்ஸ், புக்கு படிக்க முடில, டீ.வி பாரக்க முடியல, வேர்வைல மூழ்காது மெழுவர்த்திய கொளுத்தினு நிம்மதியா கூட தூங்க முடியலடா, சுத்த போர் மாமே’
ஆனா எனக்கு அப்படி தோணலடா..!
இன்னடா நீ கதையை மாத்தறே, ஏன் கரண்ட் கட் ஆறது உன்னைப் பாதிக்கலையா?
இல்லடா மச்சி, கரண்ட் கட் 5 மணிக்கு ஆறதாலா சூரிய உதயத்தைப் பார்க்க முடியுது. தினம் தினம் அர்ச்சனை பண்ணி அப்பா எழுப்பறதவிட, ஃபேன் நின்னவுடன் ஊசி போட்டு கொசு எழுப்பறது எவ்வளவோ மேல்டா’’
அடப்பாவி மக்கா’’
எப்பவுமே சீரியல பாத்துப் பாத்து அழதுகிட்டே இருக்குற அம்மா இப்ப சிரிச்சு பேசறாங்கடா. அம்மாக்கு இது நல்ல ப்ரேக். எல்லாத்துக்கும் மேல் என் ஃபிகர், அதாண்டா மாடி வீட்டு மாளவிகா மொட்டை மாடில வந்து படிக்கிறாடா..!
– எம்.சாந்தி (ஓகஸ்ட் 2014)