கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 3,646 
 
 

புரிஞ்சுக்க சுஜா, உன் செல்போன்ல சாஃப்ட்வேர் ப்ராப்ளம், சரி பண்ண முடியாதுன்னு குப்பையில போட்டாச்சு… வேற வாங்கியாச்சு… திரும்ப புலம்பி, எரிச்சலை கிளப்பாதே என்று கணவன் சாரதி கத்த, அந்த செல்போன்லதானே என் உயிர் சிநேகிதி வசுமதி செல்நம்பர் இருக்கு. வேற யார்கிட்டையும் அவளை பத்தின விவரங்கள் கிடையாது. இருபது வருஷம் கழிச்சு கோவில்ல அதிசயமா பாத்தப்ப பேச நேரமில்ல. செல்நம்பர் வாங்கிட்டு பிரிஞ்சிட்டோம். இப்ப எங்க ப்ரெண்ட்ஷிப் தொடர வழி இல்லாமப்போச்சே என்று கலங்கினாள் சுஜா. உன் ப்ரெண்டே கூப்பிடறங்களா பாப்போம் என்று சாரதி சமாதானம் சொல்லியும், தலையில் அடித்துக்கொண்டாள் சுஜா.

இங்கே வசுமதி டென்ஷனில் இருந்தாள். கோயில்ல என் செல்போன் தொலைஞ்சது கூட கஷ்டமாயில்ல. ஆனா என் உயிர் தோழி சுஜாவை கான்டாக்ட் பண்ண முடியாதேன்னு வருத்தமா இருக்குங்க என்று கணவன் சிவாவிடம் புலம்பினாள். அவ பேஸ்புக், டிவிட்டர்ல கூட இல்லை. செல்நம்பரையும் ட்ரேஸ் பண்ண முடியலை இத்தனை வருஷம் முடிஞ்சு சென்னைக்கு வந்து ஒரு மாசம் கூட ஆகலை. மறுபடியும் இன்னொரு ட்ரான்ஸ்பர் இங்க விட்டுப்போறேன். இனி வாழ்நாள்ல அவளை பார்க்க வாய்ப்பு அமையுமான்னு தெரியலையே என்று கவலையுடன் பேசினாள் வசுமதி.

சரி கீழே வண்டி வந்தாச்சு. வீட்டுச்சாமனையெல்லம் இறக்க வேண்டியதுதான் என்று சிவா வேலையை ஆரம்பித்தார். ஏற்கனவே தலைவலி இதுல இந்த மேல் ப்ளாட்டில சத்தம் தாங்கலை அடுத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும்னு யோசிக்க மாட்டங்க போலிருக்கு, நான்சென்ஸ்… என்று எரிச்சலுடன் வாசற்கதவை அறைந்து சுஜா மூடிய அதே நேரம், வீட்டை காலி செய்த வசுமதி சோகமாக சுஜாவின் வாசலை கடந்துக்கொண்டிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *