கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 6,804 
 

விடியக் காலமை கோச்சியிலே அண்ணன் ஊருக்கு வந்திருந்தான். போன மாசம்தான் வந்தவன்.. நேற்றுப் போலிருக்கு! திரும்பவும் வந்துவிட்டான். இந்தப் பக்கம் சீனவெடிச் சத்தம் கேட்டாலே அங்கெல்லாம் கலகம் வெடிக்கிறதாம்!

‘என்னடா தம்பி சொல்லாமல் பறையாமல் வந்து நிக்கிறாய்.. அங்காலை ஏதாவது வில்லங்கமோ?”

‘சும்மாதான் வந்தனான்!” – சும்மா என்று சொன்னாலும் சின்னச் சின்ன வி~யங்களுக்கெல்லாம் உயிரைக் கையிலே பிடித்துக்கொண்டு ஓடி வரவேண்டிய சங்கதியை அம்மாவுக்கு விளக்கமாகச் சொல்லவேண்டியதில்லை.

எது எப்படியோ.. அண்ணன் வருகிறான் என்றாலே சந்தோ~ம்தான். தம்பிக்கு நிறையப் பொருட்கள் வாங்கி வருவான். தம்பி வீட்டிலே கடைக்குட்டி. மூத்தவன் அண்ணன். கொழும்பிலே உத்தியோகம் பார்க்கிறவன். லீவில் வரும்பொழுது தம்பியை மறக்கமாட்டான். விளையாட்டுப் பொருட்கள்… தின்பண்டங்கள்… இப்படி.. இப்படி, அன்றைக்குக் குட்டித்தம்பியைப் பிடிக்கவே ஏலாது. பக்கத்து வீட்டுப் பாலகருக்கெல்லாம்… அவன்தான் மன்னன்!

ஷஷஇஞ்சற்றா… அண்ணன் வந்திருக்கிறான்!” – மகனைக் கண்ட சந்தோ~ம் தாளாமல் குட்டித்தம்பியை எழுப்பினாள் அம்மா.

காலையில் தம்பியை எழுப்புவது ரொம்பக் க~;டம். பள்ளிக்கூட நாட்களென்றால் அம்மா படாதபாடு பட்டுவிடுவாள். சனி ஞாயிறுகளில் ஷகிடந்து எழும்பட்டும்| என்று விட்டுவிடலாம். (ஆனால் அந்த நாட்களில் அவன் எல்லோருக்கும் முதலே உற்சாகமாக எழுந்துவிடுவான்).

வழக்கமான சிணுக்கத்துடன் எழுந்த குட்;;;;;;டியன் அண்ணனைக் கண்டதும் இன்னும் கொஞ்சம் கூடவே செல்லம் கொட்டினான். ஆனாலும் அவனுக்கு மனதுக்குள்ளே இரட்டிப்புச் சந்தோ~ம்… சனிக்கிழமை… பள்ளிக்கூடமும் இல்லை. அண்ணனும் வந்திருக்கிறான்.. கொண்டாட்டம்தான்!

அண்ணா ஊருக்கு வந்திருப்பதால் கோழிக்கறி சமைப்பதென்று தீர்மானமாயிற்று…

அண்ணா வயக்கெட்டுப்போய் இருக்கிறானாம்… ஷஷகொழும்பிலை கடையிலை சாப்பிடுறது… பாவம்! வந்து நிற்கிற நாட்களிலையெண்டாலும் வாய்க்கு ருசியாய்ச் சாப்பிடவேண்டாமே? எலும்பும் தோலுமாய்ப் போனான்” என்று சொன்னாள் அம்மா. அதனால் அப்பா சொன்னார்… ஷஷஅந்த வெள்ளைச் சாவலைப் பிடியுங்கோ..!” என்று. நல்ல கறி என்றால் வீட்டிலே நிற்கிற சாவலைப் பிடிப்பதைத் தவிர வேறு வழியில்லை அப்பாவுக்கு! எந்நேரமும் கையிலே காசு இருக்காது. அதனால் ஒவ்வொரு முறையும் அண்ணா ஊருக்கு வருகிறபொழுது ஒரு கோழிக்குப் பிழை(யில்லை).

ஷஷஅப்ப இண்டைக்குத் தொங்கல்தான்!” என்றான் குட்டித்தம்பி.

தூரத்திலே வெள்ளைச் சேவல் ஒரு பாவமும் அறியாமல் இரண்டு பேடுகளுடன் தீன் பொறுக்கிக்கொண்டு நின்றது.. ஷஷமச்சான் இண்டைக்குத் துலைஞ்சார்!” என நினைத்தான் குட்டித்தம்பி. இந்த சேவலைத் துலைக்கத்தான்வேணும். பெரிய ராசா மாதிரி! மற்றக் கோழிகளை ஒழுங்காகத் தீன் பொறுக்கவும் விடாது. எந்த நேரமும் கலைச்சுக் கலைச்சு கொத்தும்… எத்தனையோ முறை அதன் சேட்டைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கல்லால் எறிந்து கலைத்திருக்கிறான் குட்டியன்.

சேவல் செட்டையை இரண்டுமுறை அடித்தது. பிறகு கூவியது. அதற்குப் பிறகு பெரிய ஆளைப்போல அங்குமிங்கும் பார்த்து நிமிர்ந்து நடைபோட்டது. இப்படித்தான் இந்தச் சேவலுக்கு எப்போதுமே பெரிய எண்ணம்… தானேதான் தலைவன் என்று! இங்கு எல்லாக் கோழிகளையும் தான்தான் மேய்க்கிறது மாதிரி… வேறு சேவல்கள் வந்தாலும் கொண்டையை விரித்துக்கொண்டு சண்டைக்குப் போய்விடும். பக்கத்து வீட்டு ஆச்சியின் காப்பிலிச் சேவல் பெரிய சண்டியனைப் போல வந்து நல்லா வாங்கிக் கட்டிக்கொண்டு போனது. அப்பொழுது தம்பிக்குப் பெருமை பிடிபடவில்லை. ‘எங்கடை ஆளை அசைக்கேலாது” என்று. ஆனால் கொஞ்ச நேரத்தில் பக்கத்து வீட்டு ஆச்சியே கொண்டையை விரித்துக்கொண்டு வந்தாள், சண்டைக்கு! அம்மா பாவம்.. அப்பிராணி, வாய் திறக்கவில்லை. ஆச்சியிடம் வேண்டிக்கட்டினாள். ஆச்சி போன பிறகு சொன்னாள்.. ‘உந்தச் சாவலைத் துலைச்சு விடுங்கோடா…. அப்பதான் எனக்கு நிம்மதி!” என்று. (அம்மா குறிப்பிட்டது வெள்ளைச் சாவலைத்தான்.) அம்மா அப்படி முன்னர் சில சந்தர்ப்பங்களிலும் சொல்வதற்குக் காரணம் இருந்தது. சதா இந்தச் சேவல் முற்றத்திலும், முன் விறாந்தையிலும் சுற்றிச் சுற்றி வந்து அசிங்கம் பண்ணி வைப்பது அம்மாவுக்கு வேலைக்கு மேல் வேலை.

அம்மா! இதோ உனது சத்துராதி இன்றைக்;;;;;;;;;குத் துலையப் போகிறார்…

‘பெடியள்!…ஆரெண்டாலும் அந்தச் சாவலைப் புடியுங்கோடா…” என்றாள் அம்மா.. “பிள்ளை எங்காலும் வெளிக்கிடமுந்தி நேரத்தோடை சமைச்சுப்போடவேணும்.” குட்டித்தம்பி துள்ளிக்கொண்டு எழுந்தான்.. ‘எங்கயடா சாவல்…? எப்படிப் பிடிக்கலாம்?’ அரிசியைத் தூவிக்கொண்டே ‘பா…பா…பா” என்று கூப்பிடலாம். கிட்ட வந்ததுமே பாய்ந்து அமத்தலாம்.

‘குட்டியா! கொஞ்சம் அரிசி எடுத்துக்கொண்டு வா!” என்றான் அண்ணன். இந்த அண்ணன் கொழும்பிலிருந்து வந்த மூத்த அண்ணனல்ல, இரண்டாவது. குட்டியனுக்கு கொட்டாவி வந்தது.. இவன் ஏன்தானோ இதுக்குள்ளே நுளைகிறான்? இனி யார் இந்தச் சேவலைப் பிடித்தாலும் பெயரெடுக்கப்போகிறவன் அவன்தானே? ஷபரவாயில்லை, அவனோடு சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்| என நினைத்தவாறு உள்ளங்கை நிறைய அரிசியை எடுத்துக்கொண்டு அண்ணனிடம் வந்தான் குட்டியன். பிறகு ஒரு நைப்பாசையில் கேட்டான் ‘அண்ணை… நான் சாவலைப் பிடிக்கிறன்… நீ போய் வேறை அலுவல் இருந்தால் பாரன்!”

‘இஞ்சை கொண்டுவாடா! நீ பெரிய ஆள் மாதிரி! இதுக்குள்ளை வராமல் போ!”

அடே! கோழி பிடிப்பதற்குக்கூட பெரிய ஆள்தான் தேவைப்படுகிறது! கடைக்குட்டியாகப் பிறப்பதில் உள்ள சங்கடம் இதுதான்.. வீட்டிலே எந்த வேலைக்கு, எவராயினும் அவனை ஒரு மனிசனாகக் கணிக்கத் தயாராயில்லை. ‘சரி இவர் எப்படிப் பிடிக்கிறாரெண்டு பாப்பம்!”

அண்ணன் எல்லோரையும் அழைத்துக் கோழி பிடிப்பது பற்றிய தனது திட்டத்தை விபரித்தான். (தாய் தந்தையரும், பெரிய அண்ணனும், குட்டித் தம்பியும் இதில் சேர்மதி இல்லை.) இவர்களை விட இன்னும் இரண்டு அண்ணனும் இரண்டு அக்காமாருமாக நாலுபேர் இருந்தார்கள். எனவே ஷகோழி பிடிப்பது| போன்ற அலுவல்களுக்கு வேறு ஆள் தேடிப் போகவேண்டிய அவசியம் இந்த வீட்டில் இருக்கவில்லை.

திட்டம் இதுதான். ஷசாவலைத் தந்திரமாகத்தான் பிடிக்கவேண்டும்.| என முன்னெச்சரிக்கை செய்தான் அண்ணன். அவன் முற்றத்திலே அரிசியைத் தூவி, கோழிகளை அழைப்பானாம்.. மற்றவர்கள் ஒரு பக்கத்தில் சாதுவாக நிற்கவேண்டிது.. சேவல் தீன் பொறுக்க வரும்போது அவர்கள் மெதுவாகச் சுற்றி வளைத்து வந்து… பிறகு அப்படியே வட்டத்தைச் சுருக்கிக்கொண்டு நெருங்கிவந்து உள்ளே நிற்கும் சாவலை அண்மையில் நிற்கும் ஒருவர் பிடித்துவிடவேண்டுமாம்.

திட்டம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதிலே தானும் சேர்ந்துகொள்ளாததுதான் குட்டியனுக்கு மனக்குறை.

‘பா… பா… பா.. பா…!”

அண்ணன் அரிசியைத் தூவிக்கொண்டே கத்தத் தொடங்கினான். கோழிகளெல்லாம் ஓடிவந்தன.. குடுகுடுவென ஓடிவந்தன. சேலை உடுத்திய பெண்கள் தடுக்கி விழாமல் இரு கைகளாலும் சேலையைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஓடிவருவது போல… தங்கள் இறக்கைகளைச் சற்று உயர்த்திப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தன..

‘பா…பா…பா..”

மூலை முடுக்குக்களிலிருந்தெல்லாம் கோழிகள் ஓடிவந்தன. பக்கத்து வீட்டுக்கோழிகஞம்… தங்கள் சின்னக் கால்களை அவசர அவசரமாக எடுத்துவைத்து ஓடிவந்தன.

அவை ஓடிவரும் அழகைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

‘பா.. பா.. பா..” என்றால் என்ன? ஷபா… பா…| என்பது கோழிகளின் பாi~யா? அல்லது நாங்கள் கதைப்பது எல்லாமே கோழிகளுக்கு விளங்குமோ என்னவோ! ஷபா… பா…| என அழைக்கிற நேரத்தில் சாப்பாடும் போடுவதால்… அந்தச் சாப்பாட்டை நினைத்துக்கொண்டு ஓடி வருகின்றன போலும். ஷபா.. பா…|வுக்கும் சாப்பாட்டுக்குமிடையில் அவை எதையோ புரிந்து வைத்திருக்கின்றன..! ஆ! இந்தக் கோழிகளையெல்லாம் எவ்வளவு அழகாகப் பழக்கி எடுத்து நாங்கள் சொன்னபடி ஆட வைக்கலாம். அவைகளுக்குப் புரிகிற வி~யங்களும் இருக்கின்றன. இந்தச் சனங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அவற்றின் முட்டையை எடுத்து விழுங்குவதோடு சரி. கோழியை முட்டைக்கும், இறைச்சிக்கும்தான் பயன்படுத்துகிறார்கள். அதை ஓர் அழகான பிராணியாக, புத்தியுள்ள சென்மமாக ஒருவருமே கருதுவது இல்லை. ஷசேவல் காலையில் கூவும்| ஷகோழி முட்டை இடும்| என்றுதான் பாடப்புத்தகத்திலும் சொல்லியிருகிறார்கள். இதைவிட வேறு எதையுமே இவர்கள் இந்தக் கோழிகளில் கண்டுபிடிக்கவில்லை.

‘பா… பா… பா…”

இப்பொழுதுதான் எங்கிருந்தோ சேவல் வந்து சேர்ந்து தூரத்தில் நின்றவாறு பார்த்தது.

‘வர்ராற்றா… ஆள் வர்ராற்றா!|| இது குட்டியன்.

‘சூய்!… சூய்!…|| – கோழிகளை முந்திக்கொண்டு காகங்கள் பறந்துவர, காகங்களைக் கலைக்க கோழிகளும் மிரண்டு போயின. (குட்டியனுக்குச் சிரிப்பாயிருந்தது.)

‘பா… பா… பா…” என அண்ணன் வாய் கிழியக் கத்திக்கொண்டு நின்றான். ஷஒராள் காகங்களை வரவிடாமல் கலையுங்கோ..| எனச் சினந்து விழுந்தான்.

வெள்ளைச் சேவலும் ஓடி வந்தது. பிறகு ஒரு ஷசடின் பிறேக்| போட்டது. நின்றுகொண்டே ஒரு விதமாகப் பார்த்தது. எல்லோருமே தன்னைப் பார்த்துக்கொண்டு நிற்பதைக் கவனித்துவிட்டதோ? போன மாதம் பெரிய அண்ணன் லீவில் வந்து நின்றபொழுது, சிவப்பு வரியன் சேவலுக்கு நடந்த கதிதான் தனக்கும் என்று நினைத்துவிட்டதோ? இல்லாவிட்டால், எந்த நேரமும் முற்றத்தில் கிடக்கிற சேவலுக்கு இப்பமட்டும் என்ன வந்தது?

‘டேய்!…. அதுக்கு விளங்குயிட்டுது…. அதுதான் வருகுதில்லை..|| எனக் கத்தினான் குட்டியன்.

அண்ணனுக்குக் கொதி ஏறியது. ஷஷநீ இரடா வாயைப் பொத்திக்கொண்டு!.. ஆரெண்டாலும் இன்னும் கொஞ்சம் அரிசி எடுத்துக்கொண்டு ஓடி வாருங்கோ!” இந்தமுறை குட்டியன் பேசாமல் இருந்தான். ஷஆரெண்டாலும் சேவலைப் பிடிக்கிறவையள் போய் எடுக்கட்டும்!|

வெள்ளைச் சேவல் யோசித்துக்கொண்டு நின்றது. பிறகு மெல்ல மெல்ல அண்மித்துக்கொண்டு வந்தது. மற்றக் கோழிகளெல்லாம் வலு குசாலாக அரிசி பொறுக்கும் அவசரத்தைக் காண அதற்கு மனம் கேட்கவில்லை போலும். ஏதோ நினைத்துக்கொண்டதுபோல ஷவீர்ர்|ரென ஓடிவந்தது. வந்த வீச்சில் பக்கத்து வீட்டு இளம்பருவக் குஞ்சு ஒன்றுக்கு ஒரு கொத்து (குட்டு) போட்டது. பிறகு தானும் ஷடக்கு டக்கென| தீன் பொறுக்கத் தொடங்கியது.

‘இன்னும் கொஞ்ச அரிசி கொண்டு வாங்கோ…|| அண்ணன் உற்சாகமடைந்துவிட்டான். அரிசியைத் தூவிக்கொண்டே சொன்னான்.. ‘இப்ப எல்லாரும் மெல்ல மெல்லக் கிட்ட வாருங்கோ!” அக்காமாரும், அண்ணன்மாரும் கைகளை அகட்டி விரித்துக்கொண்டு கிட்டப்போக, குட்டியனுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

‘டேய்!… நானும் வரட்டேடா?”

அவனை யாரும் கவனிக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியெனக் கருதிக்கொண்டு குட்டியனும் களத்தில் இறங்கினான். இன்னும் ஆட்கள் கிட்டப் போகப்போக கோழிகள் மிரட்சியடைந்தன. வெள்ளைச் சேவல் சுளியன். இமைக்கும் நேரத்தில் கண்களை உருட்டி நாலு பக்கமும் பார்த்தது. இதைக் குட்டியன் கவனித்துவிட்டான்.

‘டேய்!… பறக்கப் போறார்றா… பிடியுங்கோ! பிடியுங்கோ!”

சொன்னது போலவே சேவலும் ஜம்மெனப் பறக்க… அண்ணன் பாய்ந்து பிடிக்க… ஓர் இறகு மட்டும் கையில் அகப்பட்டது. சேவல் நூறு மைல் வேகத்தில் ஓடியது. அண்ணன் மண்ணிலே குப்புற விழுந்தான். என்றாலும் மீசையிலே மண் படவில்லை. கையில்தான் சிறிது காயம்.. கல்லு கீறிவிட்டது. அதைப் பார்த்துவிட்டு குட்டியனுக்குத்தான் உதைக்கலாம் என்று பாய்ந்தான் அண்ணன்…

‘இவன் கொஞ்ச நேரம் வாயை வைச்சுக்கொண்டு நிக்கமாட்டான்…. சும்மா சும்மா கத்திக்கொண்டு நிண்டால் எப்படிப் பிடிக்கிறது?”

‘உனக்குப் பிடிக்கத் தெரியாவிட்டால், ஏன் என்னோடை பாயிறாய்?” ஆள் குட்டியன் என்றாலும் வாய் பெரிசு. ஷஅம்மா குடுத்த செல்லம்.’ அண்ணன் இதற்கு மேலும் தாங்கிக்கொள்ள முடியாமல் கையை ஓங்கிக்கொண்டு வந்தான். ஆனால் குட்டியனோ சேவலைவிட வேகமாகப் பறந்தான்.

‘இன்னும் கொஞ்ச அரிசி கொண்டுவாங்கோ” – தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமனைப் போல மீண்டும் காரியத்தில் இறங்கினான் அண்ணன்.

‘பா… பா… பா..”

‘இனி இந்த வித்தை பலிக்காது. வெள்ளைச் சேவலை என்ன முட்டாள் கோழி என நினைத்துவிட்டார்களா? அது இனி வராது’ – குட்டியன் பார்த்துக்கொண்டிருந்தான். உண்மையில் கோழிகளுக்கும் ஏதோ புரியத்தான் செய்கிறது. இவ்வளவு கூத்துக்குப் பிறகும் மற்றக் கோழிகள் வந்து சாதாரணமாகத் தீன் பொறுக்க, சேவல் மட்டும் வேலியோரமாக நின்று கொண்டிருக்கிறதே வர மனமில்லாமல்!

அண்ணனுக்கு அலுப்புத் தட்டியது.

‘கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்ப்பம்” என்றவாறு திண்ணையில் அமர்ந்தான். ஷஇனி என்னடா செய்யலாம்| என்பதுபோல மற்றவர்களும் அமர்ந்தார்கள்.

ஆட்களெல்லாம் போன பிறகு சேவல் மீண்டும் மெல்ல மெல்ல முற்றத்திற்கு வந்து மற்றக் கோழிகளோடு தீன் பொறுக்கத் தொடங்கியது.

இந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என முடிவெடுத்துக்கொண்டு தனது படைப்பலத்தைக் கூட்டினான் அண்ணன். முன்போலவே சுற்றி வளைத்து… ஆனால் மீண்டும் மண் கவ்வ வேண்டியதாயிற்று.

இனி அது வரவே வராது.

‘அதைக் கலைச்சு… கல்லாலை எறிஞ்சு விழுத்தித்தான் பிடிக்கவேணும்” எனத் தனது அடுத்த திட்டத்தை வெளியிட்டான் அண்ணன். அக்காமாரும், மற்றைய அண்ணன்மாரும், கற்களையும், தடிகளையும் கைகளிலே எடுத்துக்கொண்டு வீரமாக எழுந்தனர். மனிதன் மிருகங்களை வேட்டையாடுவதற்கு கற்களையும், கூரிய ஆயுதங்களையும் பாவித்த ஓர் காலம் இருந்தது என்றும், அது கற்காலம் என்றும் பெரிய படங்களுடன் பாடப் புத்தகத்தில் படித்த ஞாபகம் வந்தது குட்டியனுக்கு! அப்படியானால் இந்தக் காலத்தை எப்படிக் குறிப்பிடுவது?

‘ஓடு! ஓடு!…”

‘கல்லாலை எறி..!”

‘விடாதை… பிடி!”

சேவலுக்குக் கலக்கத் தொடங்கிவிட்டது! கல்லுகளோடும், பொல்லுகளோடும் துரத்திக் கொண்டிருக்கும் இவ்வளவு பேரையும் எப்படிச் சமாளிப்பது? இயன்றவரையும் சேவல் ஓடியது. வேலிக்குக் கீழாக மறு வளவுக்கு ஓட, இவர்கள் வேலி பாய்ந்து ஓட, அது திருப்பி ஓடிவர… இவர்கள் இந்தப் பக்கத்திற்கு எறிவிழ… பிறகு மற்றப் பக்கத்திலிருந்து எறி… சாய்…. “ஒரு கல்லாவது இலக்காகப் பிடிக்காமல் போய்விட்டதே!”

இதைப் பார்த்துக்கொண்டிருந்த பெரிய அண்ணன், தனக்கு ஒரு கதை நினைவுக்கு வருவதாகச் சொன்னான் அம்மாவுக்கு. ‘அது என்னடா கதை?” என்பதுபோல, அண்ணனைப் பார்த்தான் குட்டித் தம்பி.

‘கலவர நேரத்திலை… சிங்களவங்கஞம் உப்பிடித்தானே தமிழங்களை… கலைச்சுக் கலைச்சு அடிச்சவங்கள்….!”

‘மெய்யோடா தம்பி… அப்பிடி ஒரு ஈவிரக்கமில்லாத சனமோடா?”

‘பத்துப் பதினைஞ்சு காடையங்களாக சேர்ந்துகொண்டு கல்லுகள், பொல்லுகளோடை கலைச்சுத் திரிஞ்சவங்கள்…”

இதைக் கேட்டுக்கொண்டிருந்த குட்டியனுக்கு கற்காலத்திற்கும் இக்காலத்திற்கும் கொஞ்சம் வித்தியாசம் தெரிவதுபோலிருந்தது. அப்பொழுது மிருகங்களை மட்டும்தானே வேட்டையாடினார்கள்…!

‘எங்கேயோ ஒளிச்சுட்டுதடா… காணயில்லை…” என்று கத்தினான் சிறிய அண்ணன்.

‘எல்லா இடமும் தேடிப் பாருங்கோ!”

சேவல் எங்கேயோ ஒளித்துவிட்டதாம்.

மணித்தியாலக் கணக்காக எப்படியெல்லாம் ஓட்டம் காட்டிக்கொண்டிருந்தது! ஓடித்திரிந்த களைப்பு அக்காவுக்கு – ‘அதை என்னாலை பிடிக்கேலாது… நீங்கள் என்னவாலும் செய்யுங்கோ” எனப் பின்வாங்கித் திண்ணையில் அமர்ந்தாள்.

‘நீ பெட்டை எண்ட குணத்தைக் காட்டிப் போட்டாய்” என்று சீறினான் கோழி பிடிக்கிற அண்ணன்.

‘நீங்கள் பெடியள்!… பெரிய கெட்டிக்காரரெண்டால் பிடியுங்கோ பாப்பம்!” எனச் ஷசவால்| விட்டாள் அக்கா. இந்த வாக்குவாதத்துக்குப் பிறகு பெண்கள் பக்கம் தனது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக மற்ற அக்காவும் வந்து பெரிய அக்காவோடு அமர்ந்துகொண்டாள்.

அண்ணன் செய்வதறியாது மற்றய தம்பிமாரை விரட்டினான். ‘எங்கையாவது தேடிப் பாருங்கோ… எங்கை போயிருக்கும்…? இங்கைதான் எங்கையாவது நிற்கும்…”

‘எங்கையாவது ஓடித் துலைஞசிட்டுதோ தெரியாது.”

‘எங்கையெண்டாலும் தேடிப் பாருங்கோ… எனக்கு ஒரு கதையும் சொல்லவேண்டாம்”- தன்னை ஷஅம்போ| என்று இவர்களும் கைவிட்டுவிடுவார்களோ என்று பயம் அண்ணனுக்கு.

இனி மேற்கொண்டும் கதைத்தால் அவன் கையைக் காலை மாறினாலும் மாறிவிடுவானோ என்று பயம் தொட்டது தமபிமார்களுக்கு. வேலை வெட்டி இல்லாத காரணத்தால் அவன் ஷகராட்டிக் கிளாசுக்கு|ம் போய் வருபவன். (இடையிடையே வீட்டில் அந்த ஷஅக்சன்|களைப் போட்டும் காட்டியிருக்கிறான்.) நரம்பு வலி வந்தவன் மாதிரி அவன் சத்தம் போடுவதற்குள் வெள்ளைச் சேவலைத் தேடிச்செல்வதே மேல் என இவர்கள் அக்கம் பக்கமுள்ள வீடுகளுக்குச் சென்றனர்.

அப்பாடா!

மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது.

கொஞ்சநேரம் எவ்வளவு அமர்க்களமாக இருந்தது. சேவலை இவர்கள் கலைக்க… நாய்க்குட்டியும் அவர்களோடு சேர்ந்து குரைக்க… இப்ப நாயும் ஓய்ந்துபோய் முற்றத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டது

குட்டியனுக்கு ஷஒண்ணுக்கு|ப் போக வேண்டியிருந்தது. இவ்வளவு நேரமாக அடக்கிக்கொண்டு அண்ணன்மாரின் கூத்துக்களைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ஷஇனி இவங்கள் எங்கை பிடிக்கப்போறாங்கள்?| என்ற நினைவோடு கோடிப் பக்கமாகப் போனான்.

ஒண்ணுக்கு இருக்கத் தொடங்கியதும் பக்கத்தில் அடுக்கியிருந்த ஓலைக் கிடுகுகளுள் ஏதோ சரசரப்புக் கேட்டது. ஒண்ணுக்கிருப்பதை இடையில் நிறுத்திவிட்டு ஒரு சந்தேகத்தில் இரண்டு கிடுகுகளை விலக்கிப் பார்த்தான்.

‘அண்ணோய்!… இஞ்சற்றா இருக்கிறார் மச்சான்!”

குட்டியன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான். அப்படியே அமத்திப் பிடித்து நெஞ்சோடு அணைத்துத் தூக்கினான்.

வெள்ளைச் சேவல் அழுவாரைப் போல் அவனைப் பார்த்தது.

பட்டன் கழட்டிய கழிசானை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் சேவலை இறுக்கமாகப் பிடித்தவாறு ஓடிவந்தான் குட்டியன்.

சேவல் இறுதி முயற்சியாகத் திமிறிப் பார்த்தது. தப்ப முடியாது என்பதை உணர்ந்தது. நாலு வீட்டுக்குக் கேட்குமாப் போலக் கத்தியது…

சேவல் கத்திய சத்தத்தில் அண்ணன்மார் ஓடி வந்தனர்.

‘எப்படியடா பிடிச்சனீ?” என்றாள் அக்கா. அவளுக்குப் புதினமாக இருந்தது. எல்லோருக்கும் நடுவில் ஷராசா| மாதிரி நின்றான் குட்டியன்.

‘…கிடுகுக்குள்ளை ஏதோ சத்தம் கேட்டது… விலக்கிப் பார்த்தால்… மச்சான் பதுங்கிக் கொண்டிருக்கிறார்.”

‘நான் அப்பவே சொன்னேன்தானே… அது ஒரு இடமும் போய் இராது… இஞ்சதான் எங்கையாவது இருக்கும் எண்டு.” – எனச் சொல்லித் தனது தோல்வியை மறைக்க முயன்றான் கராட்டி அண்ணன்.

‘குட்டியன் ஆள் வீரன்தான்!” என்றாள் அம்மா.

‘இஞ்சை கொண்டு வா… அது திமிறிச்சுதெண்டால் கையை விட்டுடுவாய்..!” எனக் கையை நீட்டினான் சின்ன அண்ணன்.

‘நீ விடடா!…. அது எனக்குத் தெரியும்!” – இனிக் குட்டியனைப் பிடிக்கேலாது.

அக்கா கயிறு எடுத்துவந்து சேவலின் கால்களைக் கட்டி ஒரு பெட்டியில் அடைத்து வைத்தாள்.

ஒரு ரூபா கூலியில் கோழி வெட்டுவதற்காக ஒருவனைத் தேடிக்கொண்டு வந்தான் அண்ணன். ‘கொலை செய்வது பாவம். அதிலும் படிக்கிற பிள்ளைகள் கொலை செய்தால் பாடமே வராது!” என்பாள் அம்மா.

கோழி வெட்டுபவன் கத்தியை இன்னொருமுறை நன்றாகத் தீட்டினான். கூர்மையைச் சரி பார்த்துக்கொண்டான். கோழியைக் காலிற் பிடித்துத் தூக்கிக்கொண்டு கோடிப் பக்கமாகப் போனான்.

குட்டியனுக்கு மனம் கேட்கவில்லை. கோழியைப் பிடித்த நேரம் முதலே அவனுக்குக் கொஞ்சம் பெரிய மனித தோரணையும் வந்துவிட்டது. எப்படித்தான் அந்தச் சேவலை வெட்டிக் கொலை செய்கிறான் என்பதைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. ஆனால் அம்மாவுக்கோ, அண்ணன், அக்காமாருக்கோ தெரிந்தால் பார்க்க விடமாட்டார்கள்.

அவர்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மறு பக்கமாகக் கோடிக்கு வந்து சேர்ந்தான் குட்டியன்.

‘தம்பி அங்காலை போ… இதெல்லாம் பாக்கக்கூடாது” என்றான் கோழி வெட்டுபவன். குட்டியன் போக மறுத்தான்.

‘நான் போகமாட்டன்….”

‘பார்த்தால்… படிப்பு வராது!.. போ தம்பி!”

‘அப்ப உனக்கு படிப்பு வர்ரதில்லையா?”

‘நான் படிக்கவில்லை!”

‘ஏன் கோழி வெட்டுறதுக்காகவா?

அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை. இவனோடு கதைத்து மினைக்கெடவும் முடியாது… நாலு இடத்தில் போய் உழைப்பைப் பார்க்க வேண்டும்;.

சேவலின் கால்கள் இரண்டையும் சேர்த்து தனது கால்களுக்குள் அளுத்தியவாறு அமர்ந்தான். ஒரு கையால் சேவலின் கழுத்தை உருவி இழுத்து.. தலையிலே இறுகப் பிடித்தான். சேவல் இறகுகளை அடித்து எத்தனித்தும் முடியாமலிருந்தது.. நல்ல பிடி.

கத்தியை எடுத்து சேவலின் கழுத்தை அரிந்தான். சேவலின் ஷகொக்| என்றொரு சத்தம்… இரத்தம் பீறிட்டுச் சீறியது. வெள்ளை இறகுகளிலெல்லாம் இரத்தம் சீறியது. சேவலை மண்ணிலே போட்டுவிட்டு எழுந்தான். வெட்டப்பட்ட கழுத்துடன் சேவல் நிலத்தில் நில நிமிடங்கள் துடிதுடித்தது.

குட்டியன் சற்றுநேரம் மூச்சுவிட மறந்தவன்போல் நின்று.. பிறகு பெரிதாக மூச்சை இழுத்து வெளிவிட்டான்.

வெள்ளைச் சேவலின் கதை முடிந்தது

பெரிய ஆட்டமெல்லாம் ஆடித்திரிந்த சேவல்… வீட்டுக் கோழிகளுக்கெல்லாம் ராசா… சண்டியன்… இரத்தத்தை மண்ணோடு கலந்து செத்துப்போய்க் கிடந்தது.

கோழி வெட்டுபவன் சேவலின் கழுத்திலே ஒரு கயிற்றைக் கட்டினான்;. பின்னர் கையெட்டும் உயரத்திலுள்ள மரக்கிளையொன்றில் தொங்கவிட்டான்.

சேவல் கயிற்றிலே தொங்கிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முதல் அண்ணன்மாரை எவ்வளவு ஆட்டம் ஆட்டியது. இனி அவர்கள் வந்து இதை என்னவும் செய்யலாம்.

கோழி வெட்டுபவன் தனது காரியத்தைச் செய்து கொண்டிருந்தான். முன்னே நின்று கொண்டு அதன் இறகுகளைக் கழுத்துப் பகுதியிலிருந்து கீழ்ப்பக்கமாக வாழைப்பழத்தோலை உரிப்பதுபோல இழுத்தான்.

இறகுகள் எல்லாம் உரிக்கப்பட்ட பின்னர் சேவல் போலியோ நோய் வந்த கு¬¬¬ழந்தைப்பிள்ளை போல் கைளையும், கால்களையும் குறண்டிக்கொண்டு கிடந்தது.

அட! எவ்வளவு பூப்போல… பஞ்சுபோல… சிங்கம் போல… இருந்த சேவலா இது?

பாவம்! அவனைப் பார்த்து அழுததே! ஓலைக் கிடுகுகளை விலக்கிய பொழுது… ஒன்றுமே செய்யமுடியாமல்.. ‘என்னை விட்டுவிடு!’ என்பதுபோல ஈனமாக முனகியதே! பேசாமல் விட்டிருக்கலாம். அதைத் தப்பவிட்டு ஒன்றுமே தெரியாததுபோல போன விசயத்தை முடித்துக்கொண்டு வந்திருக்கலாம். தனது உயிரைப் பிடித்துக்கொண்டு எப்படியெல்லாம் ஓடித்திரிநத்து.. இயலாத கட்டத்தில்தானே அப்படிப் போய் பதுங்கி ஒழிந்து கிடந்தது.

போகட்டும்! இனி என்ன செய்வது? எல்லாமே முடிந்துவிட்டது. சட்டியிலே இருக்கும் எலும்பையும் சதையையும் எடுத்துப் பொருத்தி இறக்கைகளையும் ஒட்;டி அதைப் பழைய சேவலாக.. ஷகொக்கரக்கோ| என்கிற கம்பீரமான வெள்ளைச் சேவலாகப் பறக்கவிட முடியுமா?

குட்டியனுக்கு என்னவோ செய்தது. தொண்டைக்குள் நின்று என்னவோ வருத்தியது…. உள்ளே போகாமலும்…. வெளியே வரமாட்டாமலும்.. ஒரு தொங்கல்.. மனவேதனை.. அழலாமா?

இது அழுதால் தீரக்கூடிய நோவா? கோழி செத்ததுக்கு யாராவது அழுவார்களா? இந்தச் சேவலுக்காகவா மனது வேதனைப்படுகிறது? இல்லையென்றால் எதற்கு?

அறையினுட் சென்று கட்டிலில் குப்புற விழுந்தான் குட்டியன். அழவில்லை… அழமுடியாது.. உள்ளே தொங்கிக் கொண்டிருக்கும் நோவின் காரணம் புரியும்வரை அழுகை வெளிப்படாது.

கண்கள் அயர்ந்து உறக்கமேற்பட்டது. நீண்ட நேரமாக அப்படிப் படுத்துக் கிடந்தானோ என்னவோ..? நித்திரைக்கும் விழிப்புக்குமிடையில் சில கனவுகளும் கலந்து வந்து மனதைக் கலக்கின. அவனுக்குப் பயமாக இருப்பதுபோலவும் இருந்தது. விழிப்பிலும் உறக்கத்திலும் அந்தக் கனவு தொடர்ந்துகொண்டே இருந்தது.

எல்லோருமாகச் சேர்ந்து… சின்ன அண்ணன், மற்ற அண்ணன், அக்கா, அம்மா எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு கற்களையும் பொற்களையும் ஏந்திக்கொண்டு பெரிய அண்ணனைத் துரத்துகிறார்கள் பெரிய அண்ணன் குடல் தெறிக்க ஓடுகிறான்…

திடுக்கிட்டு விழித்தால்… ஷஅப்பாடா! இது கனவு!| என்றொரு நிம்மதி.. அந்தக் கணத்திலேயே இன்னொரு நினைவு தோன்றி மனதைக் கலக்குகிறது. கண்கள் அயர்ந்துபோனால் அந்தக் கனவின் தொடர்ச்சியின் பயம்!

அம்மா வந்து குட்டியை எழுப்பினாள்.

‘உன்னை எங்கையெல்லாம் தேடுறது?.. எழும்பு! சாப்பிட வேணுமெல்லே?..” படுக்கையை விட்டு எழுந்தவன், அம்மாவைப் புதினமாகப் பார்த்தான். அதிர்ச்சியடைந்தவனைப் போல எதுவுமே கதைக்க முடியாமலிருந்தான்.

‘வா…. ராசா… வா! பிள்ளைதானே சாவலைப் பிடிச்சது..” கோழிக் கறியை நினைவுபடுத்திக் குட்டியனை உற்சாகப்படுத்த நினைத்தாள் அம்மா…

அடக்கி வைத்திருந்த வேதனை… அவனது உணர்வுகளையும் மீறி அழுகையாக வெடித்தது.. மூச்சடக்கி.. பெரிதாக அழுதான்.. விக்கலெடுத்து அழுதான்.

அம்மா புரியாதவளாய்… ‘ஏன் ராசா…. ஏன் அழுகிறாய்..? ஏதாவது கனவு கண்டனியோ?” என்றாள். அவன் மேலும் விம்மி விம்மி அழுதான். அழுது தீர்த்துவிட்டவன போல் நிமிர்ந்து அம்மாவைப் பார்த்துச் சொன்னான்.

‘அண்ணையை இனிக் கொழும்புக்குப் போக வேண்டாமெண்டு சொல்லுங்கோ!”

– சிரித்திரன் சஞ்சிகையிற் பிரசுரமானது. 1983

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *