தொங்கல் – ஒரு பக்க கதை

 

“வழக்கு மே மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது…” என்று சொன்ன மேஜிஸ்ட்ரேட் அடுத்த வழக்குக்கு ஆயத்தமானார்.

“சவ்வு மாதிரி இந்த இழு இழுக்கிறாங்களே எப்பதான் முடியப் போவுதோ…” அவிழ்ந்த தன் முண்டாசைக் கட்டியவாறு, தனக்குத்தானே புலம்பிக் கொண்டார் பக்கிரிசாமி.

“வக்கீல் சமூகம்… வருஷம் நாலு ஆகுது..இப்படியே ஒத்திவைத்துவிட்டுப் போனா எப்போதாம் தீர்ப்பு வரும்?” கவலையோடு கேட்டான் வெங்கடேச பண்ணையார்.

“சிவில் வழக்கு வருஷக் கணக்கில் இழுக்கும். வேற வழியில்லை பண்ணையார் ஐயா. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுறதே மேல்னு சும்மாவா சொன்னாங்க.” என்றார் வக்கீல் சிரித்துக்கொண்டே.

வாதி பிரதிவாதிகளான பக்கிரிசாமியும் வெங்கடேசப் பண்ணையாரும் பல வருடங்களாக நீதிமன்றத்தில் தொங்கலில் இருக்கும் சிவில் வழக்கு பற்றி புலம்பிக் கொண்டிருப்பதால் கைலப்பு ஏற்பட்டு விடுமோ என்ற கலக்கத்தில் அவர்கள் வக்கீல்கள் அச்சத்தில் இருக்கும் அதே நேரத்தில்…

முத்துவும் திருமலையும் ஜாலியாக கட்டை மாட்டு வண்டியின் பின்புறம் தொங்கியபடி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். 

தொடர்புடைய சிறுகதைகள்
சிவன் கோவில் ஸ்பீக்கரில் 'திருநீற்றுப்பதிக' சொற்பொழிவு ஒலித்துக் கொண்டிருந்தது. "திருநீற்றுப் பதிகம் என்பது கூன்பாண்டியனின் வெப்ப நோயைப் போக்க சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் ஆகும். இதனால் மன்னர் நோய் நீங்கி நலம் பெற்றார்" என்றார் ஆன்மீகப் பேச்சாளர். "அப்ப... ஐந்து வருஷம் ...
மேலும் கதையை படிக்க...
‘கதவே உடையற மாதிரி இப்படிக் காட்டுத் தனமா யாரு கதவிடிக்கறாங்க?’ என்று யோசித்தபடியே விரைந்து வந்து கதவுத் தாழ் நீக்கினார் சுந்தரபாண்டி. ஆசிரியர் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது செல்லதுரை தன் மகன் ராசப்பனோடு நின்றிருந்தார். ராசப்பனின் வலது கன்னம் வீங்கியிருக்க அவன் ...
மேலும் கதையை படிக்க...
நவம்பர் 1,2021 காத்தவராயன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் தம்பி ரகு ஆறாம் வகுப்பு.இருவரும் படிப்பது அரசுப் பள்ளியில். பள்ளித் திறப்பால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். நீண்ட நாட்கள் கழித்து நண்பர்கள் சந்தித்துக்கொண்டார்கள். தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் தீபாவளி டிரஸ் பற்றிய பேச்சே ...
மேலும் கதையை படிக்க...
பதினாலு வருடங்கள் என்பது ஒரு ஜெனரேஷன் என்று கணக்கு வைத்தால் சிவ முதலியார் ஐந்து ஜெனரேஷன்களைக் கடந்தவர். நல்லது கெட்டது எதுவாயிருந்தாலும் பத்திரிகையோ அழைப்போ வந்துவிட்டால் மட்டுமில்லை... தகவல் காதில் விழுந்துவிட்டால் கூடப் போதும், “பல வேலைகள்’ல நம்மை மறந்திருப்பாங்க …!” ...
மேலும் கதையை படிக்க...
தீபாவளி சீசன்..கடை கட்டவே நடு நிசி ஆகிவிட்டது வீட்டுக்குப் பார்த்திபன் வரும்போது மணி 1.00. சோர்வு போக குளித்து பின் படுக்கையில் சாய்ந்தபோது மணி 2.00. எட்டு மணிக்கெல்லாம் எழுந்து பல் துலக்கி,டிபன் சாப்பிட்டுவிட்டு வேலைக்குக் கிளம்பத் தயாராய் வந்தான் பூர்விகாவின் கணவன் ...
மேலும் கதையை படிக்க...
பிரமிளா, அவள் மகன், மகள் உட்படி பேருந்து நிலையத்தில் காத்திருந்த கல்லூரி மாணவர்கள் பலரும் கையில் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு மாணவன் மட்டும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவன் சட்டைப் பையில் ஆண்ட்ராய்டு கைப்பேசி இருந்தது. ஆச்சர்யத்தை அடக்க முடியவில்லை ...
மேலும் கதையை படிக்க...
தொழிலதிபர் சோப்ரா இந்த சமயத்தில் இப்படி ஒரு சிக்கலை எதிர்பார்க்கவில்லை. அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சாயத் தொழிற்சாலை தொடங்க ‘லொகேஷன்’ தேடிய சோப்ராவுக்கு அந்தக் கிராமம் மிகவும் பிடித்துப் போயிற்று. கிராம முக்கயஸ்தர்களை அணுகி நோக்கம் விளக்க நிலம் கேட்டபோது, ஊர் ...
மேலும் கதையை படிக்க...
"இதென்ன வீடா சினிமா தியேட்டரா..??" நந்தினியின் எதிர்பாராத தாக்குதலில் மூவரும் நடுங்கினார்கள். குற்ற உணர்வோடு தலை குனிந்து கொண்டார்கள். "என்னதான் மனசுல நெனச்சிக்கிட்டிருக்கீங்க.. நீங்க செய்யிறது உங்களுக்கே நல்லாருக்கா.." வால்யூமைக் குறைத்தார்கள். "எதிர்த்த வீட்டு கோபு சார் மாதிரி டிவியே கூடாதுன்னு கண்டிப்பா இருந்திருக்கணும். அவர் அப்பிடி ...
மேலும் கதையை படிக்க...
“ஹலோ...” “சொல்லுங்க.., நான் எழுத்தாளர் நவீனன் பேசுறேன்...” “கதிர்’ஸ் நிருபர் தேன்மொழி பேசுறேன். காதலர் தின ஸ்பெஷலுக்கு ஒரு பேட்டி எடுக்கணும்...” “ஓ... தாராளமா...!” “எப்ப கூப்பிடலாம்...?” “இப்பவே நான் ஃப்ரீ தான்... காரை ஓரம் கட்டி நிறுத்திக்கறேன். நீங்க கேள்விகளைக் கேளுங்க...” “காதலர் தினத்தைப் பற்றி உங்கள் கருத்து?” “காதல் ...
மேலும் கதையை படிக்க...
உரத்து ஒலிக்கும் பெண்ணியம் என்ற தலைப்பில் டாக்டர் பட்டம் வாங்கியவர் சாரதா. சாரதா திருமணமாகி தன் கணவரோட கிராமத்துக்கு வருகிறாள். கிராமத்தில் வீட்டு வாசலின் முன் கார் நிற்க இவர் முதலில் இறங்க கார் ஓட்டிய கணவர் அடுத்து இறங்கினார். அம்மா ஆரத்தித் தட்டு எடுக்க உள்ளே ...
மேலும் கதையை படிக்க...
விபூதிக்காப்பு – ஒரு பக்க கதை
தன்மை இழவேல்
தீபாவளி டிரஸ் – ஒரு பக்க கதை
முன்னதாகவே வந்திருந்து…
மடிப்பு – ஒரு பக்க கதை
கற்றல் – ஒரு பக்க கதை
பூமி இழந்திடேல்
அடிக்ட் – ஒரு பக்க கதை
காதல் கத்தரிக்காய் – ஒரு பக்க கதை
நுனிப்புல் – ஒரு பக்க கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)