தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 17,107 
 

எனக்கு எப்பம்மா மீசை முளைக்கும்? அப்பா மாதிரி நான் எப்போ ஷேவிங் பண்ணிப்பேன் என்று அப்பாவியாய் கேட்கும் 12 வயது மகனிடம் நான் ஏடாகூடமாக ரியாக்டக செய்துவிடுவேன் என்று கலவரத்துடன் பார்த்தார் சுதாகர்.

“இன்னும் இரண்டு வருஷத்தில் சூப்பரா உனக்கு மீசை முளைக்கும், அழகா எப்படி ஷேவிங் பண்றதுன்னு அப்பா உனக்க கத்தத் தரேன், ஓ.கே.’ என்றதும் முகம் மலர்ந்தான் விஷ்வா.

தெரியணும்கிறது தெரியாம இருக்கக்கூடாது

சுதாகர் அதுபோல் நினைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு. போன வாரம் நாங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்த்த சினிமாவில் 8 வயது பெண்குழந்தை “நான் எப்பம்மா வயசுக்கு வருவேன்’ என்று கேட்கிறது, அம்மா பாய்ந்து பாய்ந்து அடிப்பதைப் பார்த்ததும் நானே வெலவெலத்துப் போய் விட்டேன்.
சீக்கிரமே பெண் குழந்தைகள் பூப்பெய்திவிடும் இந்தக் காலத்தில் இதைப்பற்றி அந்தப் பெண் கேட்காமலேயே சொல்லிக் கொடுத்திருக்க வேண்டியது அந்தத் தாயின் கடமை. சரி, அந்தக் குழந்தையே கேட்கும் போது சொல்லிக் கொடுத்தால், திடீரென்று அந்த குழந்தைக்கு அந்த பருவமடைதல் நிகழும் போது மனரீதியாக, உடல்ரீதியாக எந்த பயமுமில்லாமல் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும். அது ஏன் அந்தத் தாய்க்கு தெரியவில்லை என்று எனக்குள்ளே ஆயிரம் கேள்விகள்.
“பெண் குழந்தைகளுக்கு மட்டுமில்லை சுவர்ணா, ஆண்குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தல் ஆபத்து இருக்கு. பெண் குழந்தைகளாவது அழுது தனக்கு தப்பான விஷயம் நடந்துருக்குன்னு சொல்லிடும். ஆனா பசங்களுக்கு தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிற விஷயமே தெரியாது, பாவம் வெளியில் சொல்லாமல் எத்தனை பேர் மனசுக்குள்ளே அழுகிறார்கள் என உனக்கு தெரியாது’ என்று சுதாகர் சொன்னதும், எனக்கு மனசுக்குள் அலாரம் அடித்தது.
“பாம்பே, டெல்லி மாதிரி காஸ்மோ பாலிட்டன் சிட்டியிலெல்லாம் ஆண்களுக்கே பாதுகாப்பு இல்லம்மா. பார்க், பீச், எலக்ட்ரிக் ட்ரெயின் மற்ற பொது இடங்கள் எல்லா இடத்திலயும் ஹோமோக்கள் சுத்திக்கிட்டே இருப்பாங்க. சின்ன வயசுப்பசங்க தனியா ஹோட்டல்களில் தங்கக் கூட முடியாது. என் ஃப்ரெண்டோட தம்பி பி.ஹெச்.டி. முடிக்கறதுக்காக ஆர்ட்டிகிள் சப்மிட் பண்ண பாம்பே போயிருந்தப்போ அவனை ஹோட்டல்ல வேலை செய்யிற ரூம்பாயே ரேப் பண்ண ட்ரø பண்ணியிருக்கான். இந்தக் காலகட்டத்தில பெண் குழந்தைகளை மாதிரியே ஆண் குழந்தைகளையும் கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும்’ என்று கொஞ்சம் பயத்தைக் கூட்டினார் சுதாகர்.
இந்த நகர வாழ்வில் “குழந்தை வளர்ப்பு’ என்பது சவாலாகத்தான் இருக்கிறது. பள்ளி செல்லும் வயதிலேயே எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இந்தக் கால குழந்தைகளுக்கு.
பெரியவர்கள் கேட்டால் “அதிகப்பிரசங்கித்தனம்’ என்று அதட்டி உருட்டிவதை விட்டு “உள்ளதை உள்ளபடி’ அறிவியல் பூர்வமாக குழந்தைகளுக்கு உணர்த்துவதால் நமக்கும் ஸ்ட்ரெஸ் குறைகிறதுன்னு நினைக்கிறேன். ஏன்னா நம் குழந்தைகளுக்கெல்லாம் மாமாவோ, சித்தியோ, பெரியப்பாவோ அருகிலில்லையோ! அனைவரும் தனித்தனி தீவாக அல்லவா இருக்கிறோம். இருந்தால் கூட யார் சம்பிரதாயப்படி கற்றுத்தருகிறார்கள்? படிச்சிருக்கான் அவனுக்குத் தெரியாதா? என்ற ஒதுங்கிக் கொள்கிறார்கள், விளைவு?
போன மாதம் கல்யாணம் முடித்த சித்ரா சித்தியின் பெண் தேவி சாந்தி முகூர்த்தத்திற்கு உள்ளே அனுப்பிய அரை மணி நேரத்தில் பதட்டமாக வெளியில் ஓடி வந்தது இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.
விஷ்வா விவகாரமாக கேட்கும் கேள்விகளுக்கு விவேகமாக பதில் சொல்லவும், நடந்து கொள்ளவும், சுதாகர் எனக்கு பழக்கியிருந்தார்.
டீன்ஏஜ் குழந்தைகளை வளர்ப்பதில் சகிப்புத்தன்மை அதிகம் வேண்டுமென்பதை தோழி கவிதாவும் எனக்கு கற்றுக் கொடுத்திருந்தாள்.
10வது படிக்கும் அவளது பெண் பாய்கட் ஹேர்ஸ்டைல் செய்து கொண்டவதையோ 7000 ரூபாய்க்கு குறைவாக ஜீன்ஸ் போடாத அந்தப் பெண்ணின் பிடிவாதத்தையோ கூட பொறுத்துக் கொண்டாள்.
என் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி நானும் பாய்ஃப்ரண்ட் வச்சுக்கிட்டா என்ன தப்பு என்று கேட்டதும் இடி விழுந்தாற்போல் தான் இருந்தது அவளுக்கு?
பிறகு அந்தப் பெண்ணை பள்ளிக்குச் சென்று விடுவது, கூட்டி வருவது, டியூஷனுக்கு அழைத்துச் செல்வது தினசரி வேலையானது. தோழிகளுடன் ஷாப்பிங் மால்கள், சினிமாவுக்குச் சென்றால் தானும் சென்றாள், தன் மகளுக்குத் தோழியாக. அவள் சிரித்தால் சிரித்து மற்றவர்களை கமெண்ட் அடித்தால் தானும் அடித்து, மகளைப் போலவே ஜீன்ஸ் அணிந்து, பொதுத் தேர்வுக்குத் தயாராகும் தன் மகள் காலை 4 மணிக்கு எழுந்தால் தானும் கூடவே எழுந்து டீ போட்டுக் கொடுத்து அருகிலே இருந்து கவனித்து, கேள்வி கேட்டு… பதில் சொல்ல வைத்து… எழுத வைத்து… என்று அவளுக்காகவே தன் சுயத்தை இழந்தாள். பொழுதுபோக்கை இழந்தாள். தன் உடல் நலத்தை இழந்தாள். விளைவு. பத்து – பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் ஏ கிரேடு பெற்று தேர்வு பெற்றாள். டீன் ஏஜை அம்மாவின் வழிகாட்டுதலில் நல்ல முறையில் கடந்த அந்த பெண் இன்று பெயர் பெற்ற பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளும் சராசரியான அம்மாபோல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அந்த பெண்ணினை அடக்கி வெளியில் போகாமல், ஃப்ரெண்ட்ஸ்கூட பேசாமல் பழகாமல் செய்து தன்னை தாய் என்ற தன் அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தால் எல்லாமே பாழாகியிருக்கும்.
“ஏன் கேர்ள்ஸ்க்கு மட்டும் பிரெஸ்ட் இருக்கு. எனக்க ஏன் இல்லை?’ என்ற என் மகன் விஷ்வாவின் கேள்விக்கு, என் சைக்கிளோபீடியாவுடன் உட்கார்ந்தேன் விளக்கம் சொல்ல!

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *