தெய்வம் தீர்ப்பளிக்காது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 10, 2014
பார்வையிட்டோர்: 9,377 
 

அறைந்த உள்ளங்கை வலித்தது.

அதிசயமில்லை.

கன்னமும் வலித்தது. இது அறிவு வந்த சிறு வயதில் உணர்ந்த முதல் அதிசயம். காலப்போக்கில் அதிசயம் இயற்கையாகி விட்டது. அறைந்ததால் குற்ற உணர்வும் அறையப்பட்டதால் தன்னிரக்கமும் சேர்ந்த கலவை.

டெலிபோனை டயல் செய்தான்.

‘ கோபி ஹாயர். ‘

‘ ஸாாிடா கோபி…. ‘

‘ அடிச்சதுக்கா அடி வாங்கினதுக்கா ? ‘

‘என்னடா கோபி நீயே என்னப் புாிஞ்சுக்க மாட்டேன்கற….. ‘

‘ அலுத்துவிட்டது பாபு. எனக்கென்று ஒரு லைப்ஃ வேண்டாமா ? ‘

‘ அப்போ நீ அமொிக்கா போறதுன்னு முடிவு பண்ணிட்டயா கோபி ? ‘

‘ ஆமாம். ‘

‘ நீ இல்லாம நான் எப்படிடா ? ‘

‘பாபு. நான் சொல்றதை கேளு. கொஞ்ச நாள் நாம பிாிஞ்சு இருக்கறது இரண்டு பேருக்குமே நல்லது. ஒனக்குத்தான் அம்மா இருக்காளே ? நாளைக்கு நோிலே வந்து பேசறேன். இப்பொ கொஞ்சம் அவசரமா வெளியே போணம். ‘

க்ளிக்.

‘ அம்…..மா!…. ‘

‘ என்னடா பாபு….. ‘ அம்மா ஓடி வந்தாள்.

‘ கோபி என்ன விட்டுட்டு போறான்மா…. ‘

‘ பாபு! நீ எவ்வளவு நாள்தான் கோபியை உனக்குள்ள வெச்சுக்க முடியும் ? ‘

‘அன்னிக்கி டாவியில் பார்த்தேம்மா. இரட்டையர்களைப் பற்றிய ஷோ. ஒருத்தனுக்கு அடி பட்டா மத்தவனுக்கு வலிக்கிறது. இவனுக்கு பாட்டுன்னா உசிர்னா அவனும் உயிர விடரான். கோபி மட்டும் ஏம்மா இப்படி…. ?

அம்மா சிறிது நேரம் மெளனமாக பாபுவின் தலையைக் கோதிக் கொண்டிருந்தாள்.

‘அம்மா! என்னால் தனியாக இருக்க முடியாது. இதற்கு ஒரு வழி வேண்டும். நம்ம பாசு ஒரு ஸைக்காலஜாஸ்ட் பற்றிக் கூறினான். அர்ச்சனா என்று பெயர். அமொிக்காவிலிருந்து ஒரு கான்பிஃரன்ஸ ‘க்காக வந்திருக்கிறளாம். இங்கே சர்வோதயா மார்கில் அப்பா அம்மாவுடம் இருக்கிறாளாம். பாசு மிக உயர்வாகச் சொன்னான். என் மன வியாதிக்கு அவளிடம் உதவி கேட்கலாமா என்று பார்க்கிறேன். ‘

‘உனக்கு என்னடா வியாதி ? அப்புறம் நாலு பேர் நாலு மாதிாி பேசுவாடா ? ஸைக்காலஜாஸ்ட்டெல்லாம் நம்ம ஊருக்கு சாி வராதுப்பா. ‘

‘அம்மா, கவலைப் படாதே. இது வெளியே யாருக்கும் தொியாது. நான் என்ன ஆஸ்பத்திாிக்கா போறேன் சிகிச்சைக்கு ? சினேகித முறையில் உதவி பெறுகிறேன். அவ்வளவுதான். ‘

‘உன் இஷ்டம் போல் செய்யப்பா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா சாி. ‘

***********

சூாியனின் வெளிச்சமும் இதமான வெப்பமும் அவளை எழுப்பின. மணி பார்த்தாள். எட்டரை. இன்னுமா இருட்டவில்லை ? ஓ நோ! மறுநாள் காலை எட்டரை. நேற்று மாலை ஐந்து மணியிலிருந்து தூங்கியிருக்கிறேன். அம்மாவிற்கு எழுப்ப மனசிருந்திருக்காது. கீழே டேப்பில் எம் எல் வி யின் திருப்பாவை. புது தில்லி குளிாில் உக்கிரமான மார்கழி.

டெலிபோன் அடித்தது. எடுத்து ‘ஹலோ ‘ என்றாள். கீழேயிருந்து அம்மாவும் ஹலோ என்றாள்.

‘நான் பாபு பேசுகிறேன். பாசுவின் நண்பன்…. ‘

‘அம்மா, போன் எனக்கு. ஹலோ பாபு. நான்தான் அர்ச்சனா ‘

‘ஹலோ, பாசு என்னை உங்கள் வீட்டிற்குப் பத்து மணிக்கு வரச் சொன்னான். சாிதானே ? ‘

‘எஸ் ‘

‘அட் ரெஸ்ஸ ‘ம் வழியும் சொல்கிறீர்களா ? ‘

‘ B 137 அர்பிந்தோ மார்க், சர்வோதயா காலனி. பாிச்சயம் உண்டா ? ‘

‘ ஓ நன்றாகவே. ‘

‘பார்க் தாண்டியதும் மதர்ஸ் இன்டெர்னாஷனல் ஸ்கூலுக்கு முன்னால். வாசலில் அப்பா பெயர் இருக்கும்.

டாக்டர் என் சி ராய் ‘

‘வந்துவிடுகிறேன் ‘

********

கதவைத் திறந்தாள்.

‘ நான் பாபு. மிஸ் அர்ச்சனா ராய்… ‘

‘ நான் தான். உள்ளே வாருங்கள். சுலபமாக வழி தொிந்ததா ? ‘

‘ ஓ…. விடுமுறைக்கு அமொிக்காவிலிருந்து வந்த உங்களுக்கு சிரமம் கொடுக்கிறேன். என் நண்பன் பாசு உங்களைப்பற்றி மிக உயர்வாகச் சொன்னான். ‘

‘ஒரு சிரமமும் இல்லை. என்னால் முடிந்தவரை உதவுகிறேன். காபியா டாயா.. ‘

‘ நோ நோ. நன்றி. ஒன்றும் வேண்டாம். ‘

‘ அம்மா. இவர் நம்ம பாசுவின் நெருங்கிய நண்பர் பாபு. இதுதான் என் அம்மா கல்யாணி. அப்பா இப்பொழுது ஊாில் இல்லை. ‘

‘நீங்கள் தமிழென்று தொியாது. ‘

‘தாய்மொழி தமிழ். தந்தைமொழி பெங்காலி ‘ என்றாள் அர்ச்சனா புன்முறுவலுடன்.

சோபாவில் அமர்ந்திருந்த அம்மா எழுந்து கை கூப்பினாள்.

‘நாங்கள் மாடிக்கு போகிறோம் அம்மா ‘

படிகளில் அவளைத் தொடர்ந்தவன் அவள் கொட்டாவியை அடக்குவதை கவனித்தான். பயணக்களைப்பு இன்னும் தீரவில்லை போலும். மாடியை அடைந்ததும் எதிரே உள்ள ஓர் அறைக்குள் அவள் பின்னால் நுழைந்த அவன் அந்த அறை முழுதும் வியாபித்திருந்த அழகுணர்ச்சியில் மூழ்கினான்.

‘உட்காருங்கள் ‘ என்று அவனுக்கு ஒரு சோபாவைக் காட்டிவிட்டு எதிரே இருந்த சோபாவில் அவள் அம்ர்ந்தாள்.

சோபாவில் அமர்ந்தவன் வழக்க உந்தலில் செண்டெர் டேபிளில் இருந்த புத்தகங்களில் ஒன்றைக் கையில் எடுத்தான். ஆக்டொவியோ பாஸான் ‘ இன் லைட் ஆப் இண்டியா ‘

‘அருமையான புத்தகம் ‘ என்றான்.

‘ ஆம் ‘ என்ற அர்ச்சனா ‘உங்களூக்கு மிகுதியாக எந்த மாதிாி புக்ஸ் பிடிக்கும் ? ‘ என்று கேட்டாள். அவன் அறியாமல் அவள் தன் சைக்காலகிஸ்ட் தொப்பியை அணிந்து கொண்டாயிற்று. கதவைத் திறந்தவுடனே கவனித்த சுயேச்சையற்ற அடைக்கலம் தேடும் முகம். தயக்கம் நிறைந்த பேச்சு. தரையில் அழுந்தாத நடை. கை விரல்கள் அடிக்கடி சட்டை பித்தானைத் திருகிக்கொண்டு.

‘ எண்ணத்திலும் எழுத்திலும் கவித்துவம் நிறைந்த படைப்புகள் என்னை அதிகம் கவர்கின்றன. அதே போல் மியூசிக். இந்த உலகத்தை மறந்து என்னை இழந்துவிடுவேன். அந்த நிலையில் இருந்து மறுபடியும் வெளியே வருவதுதான் மிகக் கொடூரம். ‘ கேட்டதற்கு மேல் பேசுகிறான். கூண்டிலிருந்து விடுதலையும் வேண்டும், ஆனால் இன்னொரு பாதுகாப்பும் வேண்டும்.

‘உங்கள் நினைவில் முதன்முறை நீங்கள் கேட்டு உங்களை ஈர்த்த பாடல் ? ‘

‘காற்றினிலே வரும் கீதம். என் அம்மா மிக உருக்கமாகப் பாடுவாள். நான் கேட்டுக்கொண்டே அவள் மடியில் உறங்கிவிடுவேன். கோபி வேறு தினுசு…. ‘

‘கோபி யார் ? ‘

‘என் சகோதரன். நாங்கள் இரட்டையர். ஆனால் அவன் வேற டைப். எனக்கு அவன்னா உயிர். அவனுக்காக உயிரையே கொடுக்கத்தயார். ஆனா அவன்….. நான் எங்கிருந்து தொடங்கட்டும் ? ‘

அவன் குரல் லேசாக உடைந்தது. அர்ச்சனா எழுந்து அவனிடம் சென்றாள். கருணையுடன் அவள் அவன் தலை மயிரைக் கோதிய போது அவன் குழந்தையானான். அவள் கையைப் பிடித்துகொண்டு சத்தமின்றி அழுதான்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின் அவன் கிளம்பினான். வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தவளிடம் அம்மா ‘ என்னம்மா. ஒண்ணுமே சாப்டாம போறானே ‘ என்றாள்.

‘ இல்லம்மா. மாடியில் ப்ஃாிட்ஜாலிருந்து ஜூஸ் கொடுத்தேன். வேற ஒண்ணும் சாப்பிட வேண்டாமென்று சொல்லிவிட்டார். நான் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் ‘ என்ற அர்ச்சனா மாடியேறி தன் அறைக்குள் சென்றாள். டேபிள் ட்ராயாிலிருந்து ஒரு நோட்புக்கை எடுத்து சோபாவில் அமர்ந்து எழுத ஆரம்பித்தாள். பேஷண்டுடன் இருக்கும்போது அவள் நோட்ஸ் எடுப்பதில்லை.

ஜனவாி 5, 2000. புது தில்லி. வீட்டில்.

இரட்டையர். வெவ்வேறு வயது போட்டோக்கள் பார்த்தேன். பாபுவும் கோபியும் இரட்டையர் என்று சொன்னால் நம்பும்படியாக இருக்கிறது. சொல்லாவிட்டால் சகோதரர்கள் என்ற வரைதான் ஊகிக்கலாம். முகத்தைத் தவிர கண்களில், பாவத்தில், நிற்கும் விதத்தில் வித்தியாசங்கள். இந்த வித்தியாசங்களின் யதார்த்தத்தை பாபுவால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கோபியை தன்னுள் இணைக்க முயன்றிருக்கிறான் சிறு வயது முதல். அது இயலாதது என்ற நிலை பயஙகரத் தனிமையில் தள்ளுகிறது அவனை. சங்கீதத்திலோ புத்தகத்திலோ மறையும்போது கோபியும் தன்னுடன் இணைந்து மறைவது போன்ற மயக்கம்.

இவர்கள் பத்து வயசு இருக்கும் போது அப்பா விலகிப் போய்விட்டார். அமொிக்கா போய்விட்டாரென்று நினைக்கிறார்கள். பதினைந்து வருடங்கள் ஆகி விட்டன. தொடர்பு இல்லை. டிவோர்ஸ் ஆகவில்லை. அப்பாவின் போட்டொக்களைப் பார்க்க வேண்டும். கோபி நாளைக்கு வருகிறான். தனியாக. பிறகு அவர்கள் அம்மாவை சந்திக்க வேண்டும்.பாவம் அம்மா.

மேற்கொண்டு டெக்னிக்கலாக கொஞ்சம் கிறுக்கிவிட்டு தன் பெட்ரூமுக்குப் போனாள். கட்டிலில் படுத்த அவளை உடல் வாழ்த்தியது.

**********

மறுநாள்.

காலை பதினோரு மணிக்கு கீழே வாசல் மணி அடித்து அம்மா கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது. அர்ச்சனாஅறையை விட்டு வெளியே வந்து கீழிருந்து தொிகிற மாதிாி மேல் படிக்கருகில் நின்றுகொண்டாள்.

‘மேலே வாருங்கள். ‘

மேலே பர்த்த கோபியின் கண்களில் ஒரு மாற்றம். அர்ச்சனாவிற்கு பழகிப்போன மாற்றம். அவளைப் பாதிக்காத மாற்றம்.அவன் படியேறி மேலே வரும் வரை அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அலட்சிய நடை. அபலை அஞ்சுகங்களை நிமிடத்தில் கவரும் கண்கள்.

‘அமொிக்காவில் உங்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்குமே ? இங்கே வந்த இடத்திலும் எதற்கு ? ‘

‘ இதை நான் கேள்வியாக கருதவில்லை. இப்படி உட்காருங்கள். ‘

எதிர் சோபாவில் உட்கார்ந்து அவன் கண்களை நேராகப் பார்த்து ‘ பாபு என் உதவியை நாடுகிறான். எனக்கு உங்கள் உதவி தேவை ‘

சிாித்தான். ‘பீஸால் பங்கு உண்டா ? ‘

‘பீஸே கிடையாது. அதிருக்கட்டும். உதவி செய்யும் போது உங்களுக்கே ஒரு விதத்தில் உதவி கிடைக்கலாம். ‘

‘ எனக்கு எதற்கு உதவி ? எனக்கென்ன ப்ராப்ளம் ? ‘- குரலில் லேசான பிசிறல்.

‘பின் ஏன் இந்த முரட்டுப் போர்வை ? ‘

‘ அது என் சுபாவம் ‘

‘சுபாவம் என்பதே ஒரு வகை போர்வைதான். உள்ளே பாதுகாப்பின்மை (insecurity), பயம் எல்லாம் குளிர் காய்ந்து கொண்டிருக்கும். போர்வையை விலக்கி விட்டு வெளியே வாருங்கள். நான் முதலில் குழந்தை கோபியை சந்திக்க விரும்புகிறேன். ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வருகிறேன். ‘

‘வேண்டாம். தண்ணீர் போதும். ‘

ப்ாிட்ஜாலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.

‘அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது. அடிக்க மாட்டார். ஆனா வெறுப்புன்னா என்னன்னு தொியாத வயசிலேயே அதை உணர ஆரம்பித்தேன். பாபுவை மட்டும் எப்போதும் கொஞ்சுவார். அம்மா கூட அப்பா இல்லாத போது என்னைக் கொஞ்சுவா. அவர் இருக்கும் போது என்னை கவனிக்காத மாதிாி இருப்பா………

தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு அர்ச்சனாவிடம் கோபிக்கு உள்ளே இருந்த குழந்தை அடைக்கலம் அடைந்தது.

********

அர்ச்சனாவின் நோட் புக்:

ஜனவாி 6, 2000. புது தில்லி. வீட்டில்.

காலை பதினோறிலிருந்து மத்தியானம் ஒரு மணி வரை.

கோபி. நிறைவு பெறாத குழந்தைப் பருவம். இரட்டையருக்குள் அபூர்வமான எதிர் துருவத்தனம். சிந்திக்கும் விதம், ரசனைகள் – எவ்வளவு தூரம் பிறப்பில் ? எவ்வளவு வளர்ந்த சூழ்நிலையில் ?- கான்பிஃரன்ஸ் பேப்பர்-

இன்னும் என்னவெல்லாமோ கிறுக்கினாள். பொிதாக கொட்டாவி விட்டாள். இந்த ஜெட் லாக் ( jet lag) எப்பொழுதுதான் போகுமோ ? அறையில் சென்று கட்டிலில் விழுந்தாள். இன்னும் ஒரு வாரத்தில் கான்பிஃரன்ஸ். பேப்பரை நன்றாக ஒரு முறை படித்து திருத்தங்கள் செய்யவேண்டும். பாபு-கோபி கேஸைப் புகுத்தலாமா ?

எதிர் சுவற்றில் மாட்டியிருந்த ஓவியத்தை சொருகும் கண்கள் வழியே பார்த்தாள். அவளுடைய பேஃவாிட் ஆர்டிஸ்ட் ஆத்மா வரைந்தது. அதிலிருந்த இரு பறவைகள் அவளிடம் பறந்து வந்து மெல்ல மெல்ல அவள் இமைகளை மூடி அவளை விழிப்புலகில் இருந்து கனவுலகிற்கு அழைத்துச் சென்றன. பெண் பறவை ஒரே சமயத்தில் இரண்டு முட்டைகள் இடுகிறது. ஒவ்வொரு முட்டையிலிருந்தும் ஒரு குஞ்சு…….

**********

‘அர்ச்சனா! உனக்கு போஃன். மாடியில் எடுக்கிறாயா ? ‘

‘சாிம்மா. ‘

‘ அர்ச்சனா! ாிச்சர்ட் கோஹன். கான்பிஃரன்ஸ ‘க்கு ஒரு வாரம் முன்பே வந்துவிட்டேன். ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்றுதான். ‘

‘ஹலோ ஸர்! கூப்பிட்டதற்கு மிக்க நன்றி. ‘

‘ இன்னும் ஸர் என்று அழைப்பதை நிறுத்தமாட்டாயா ? ‘

‘நோ ஸர். குரு ப்ளஸ் வயது. சில விஷயங்களில் கலாச்சார பாதிப்பு விலகுவதில்லை…….எனக்கு கொஞ்சம் உதவி தேவை. என் பேப்பரை உங்களிடம் காட்ட வேண்டும். கொஞ்சம் பேசவும் வேண்டும். எங்கே தங்கியிருக்கிறீர்கள் ? ‘

‘ ாிங்க் ரோட் ஹையாட் ாீஜன்சி. கான்பிஃரன்ஸ் இங்கேயே என்பதால் செளகாியம். உங்கள் நாட்டு ஹோட்டல் சர்வீஸே தனிதான். காலையில் எழுந்து ரூம் ஸர்வீசில் ஆர்டர் செய்தால் சூடா தோசா. ஐ லவ் இட். நாளை காலையில் ப்ரேக்பாஃஸ்டிற்கு இங்கே வாயேன். ‘

‘ சாி வருகிறேன். ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் பேப்பரை இப்பொழுது உங்களுக்கு அனுப்பினால் இரவில் படிக்க முடியுமா ? ‘

‘ ஓ யா! எப்படி அனுப்புவாய் ? ‘

‘என் ட்ரைவாிடம் அனுப்புகிறேன். ‘

‘ட்ரைவரா ? ராயல் வாழ்வுதான். ஏழை அமொிக்காவில் நினைத்தே பார்க்க முடியாது. ‘ என்று சிாித்தார். ‘நாளை ஏழரை மணிக்கு லாபியில் சந்திக்கலாம் ‘

***********

‘பேப்பர் பிரமாதம் மிஸ் ராய். மன இயலை இதயத்திலிருந்து அணுகுவது உன்னுடைய சிறப்பு. அங்கங்கே என் கருத்துகளை ஓரத்தில் எழுதியிருக்கிறேன். அது சாி, ஏதோ கேட்கவேண்டும் என்றாயே ? ‘

‘ வந்த இடத்தில் சினேகித ாீதியில் ஒரு கேஸ். சொன்னால் நம்ப மாட்டார்கள். இரட்டையர் கேஸ். ஆனால் என் பேப்பர் வெவ்வேறு இட்த்தில், வெவ்வேறு சூழ்நிலையில் வளரும் இரட்டையரைப் பற்றி அல்லவா ? இந்த கேஸால் இருவரும் ஒரே இடத்தில் ஒரே சூழ்நிலையில் வளர்ந்து இருக்கிறார்கள். ஆனால் வெவ்வேறு பர்ஸனாலிடாஸ். ‘ தொடர்ந்து விவாித்தாள்.

‘அம்மாவை இன்னும் சந்திக்கவில்லையா ? ‘

‘இல்லை. இங்கிருந்து நேரே அவர்கள் வீட்டிற்குத்தான் போகிறேன். ‘

‘அப்பா போஃட்டோ பார்த்தாயா ? ‘

‘இன்னும் இல்லை. ‘

‘ நான் நினைப்பது போல் நீயும் நினைக்கிறாயா ? ‘

‘ Dizygotic twins பற்றி படித்திருக்கிறேன். அதிகம் பார்த்தது இல்லை. ஒரே சமயத்தில் ஒரே முட்டையிலுருந்து இரண்டு உயிர்கள் உருவாகுவது போல் இரண்டு முட்டைகளிலிருந்து இரண்டு உயிர்கள். ஒன்று அம்மா போல், மற்றது அப்பா போல். ஒரே சேர்க்கையிலோ அல்லது அருகருகே நிகழ்ந்த இரண்டு சேர்க்கைகளிலோ உருவாகலாம் அல்லவா ? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? ‘

‘எஸ். அதே போல்……… ‘

‘ என்ன ? ‘

‘ஒன்றுமில்லை. ‘

‘ஸர். நான் கிளம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி. ‘

‘ஓ யூ ஆர் வெல்கம். கான்பிஃரன்சில் பார்க்கலாம். இடையில் எதாவது வேண்டுமென்றால் கூப்பிடு. பை! ‘

‘பை ஸர். ‘

**********

பாபுதான் கதவைத் திறந்தான்.

‘வாருங்கள். வழி சுலபமாக இருந்ததா ? அம்மா! ‘

அம்மா வந்தாள் கை கூப்பியவாறு. சோக அனுபவங்கள் அவளது அழகை சிதைக்க முயன்று தோற்றிருந்தன. என்ன ஒரு தீர்க்கம்! அடைக்கலம் அளிக்கும் அம்மாத் தனம். பாபுவிற்கு தன் முகத்தை மட்டும் அளித்திருக்கிறாள். கோபி இவளைப் போல் இல்லவே இல்லை. ( இரண்டு முட்டைகளில் இருந்து ஒன்று அம்மா போல் மற்றது அப்பா போல் ?)

‘வாம்மா. இட்லி வார்த்திருக்கிறேன். கொஞ்சம் சாப்பிடு. ‘

‘இல்லை மாமி. இப்பொழுதுதான் டிபஃன் சாப்பிட்டேன். ‘

‘அப்பொழுது கொஞ்சம் காப்பியாவது கொண்டு வருகிறேன்.இப்படி உட்கார் ‘ என்றவள் பதிலை எதிர் பார்க்காமல் உள்ளே சென்றாள்.

சோபாஃவில் அமர்ந்த அர்ச்சனா பாபுவிடம் ‘நான் முதலில் அம்மாவிடம் தனியே பேச வேண்டும் ‘ என்றாள்.

‘ கோபி வீடு ஐந்து நிமிட தூரம் தான். நான் அங்கே போகிறேன். ‘ என்றவன் உள்ளே பார்த்து ‘அம்மா! நான் போய் கொஞ்ச நேரத்தில் கோபியுடன் வருகிறேன் ‘ என்று கூறிவிட்டு வெளியேறினான்.

காபியும் குசலமும் ஆன பிறகு அர்ச்சனா ‘உங்கள் சங்கீத அறையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். பார்க்கலாமா ? ‘ என்று கேட்டாள்.

‘வாயேன். ‘ அம்மா அருகிலிருந்த அறையை நோக்கி நடக்க அர்ச்சனா பின் தொடர்ந்தாள்.

உள்ளே நுழையும் போதே அந்த அறையின் தூய்மை நெஞ்சத்தை நிறைத்தது. மூலையில் ஒரு தம்பூரா, ஒரு சுருதிப் பெட்டி. சுவாில் தெய்வங்களுடன் சங்கீத மூர்த்திகள். ஊதுவத்தி மணம்.

‘ இங்கேயே உட்கார்ந்து பேசலாமா ? ‘ என்று கேட்டாள்.

‘ஓ ‘

இருவரும் ஜமக்காளத்தில் அமர்ந்தனர். நிசப்தமான கனமான சில கணங்கள்.

‘மாமி, ஒரு பாட்டு பாட முடியுமா ? ‘

‘நீ எதாவது பாட்டு சொல்லேன். தொிஞ்சா பாடரேன். ‘

‘காற்றினிலே வரும் கீதம். ‘ ஒரு கணத்திற்கு மாமியின் முகத்தில் ஓர் ஆச்சாியக் குறி. பிறகு தொண்டையைக் கனைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தாள்.

அர்ச்சனா காற்றில் மிதந்தாள்.

கண்களை மூடியவாறு பாடிக்கொண்டிருந்த மாமி ‘குழலூதி நின்றான் ‘ என்ற இடத்தில் நிறுத்திவிட்டாள். தொண்டை அடைத்தாற்போல் இருந்தது. ‘ஸாாிம்மா. பழைய ஞாபகம். இன்னொறு நாள் பாடுகிறேன் ‘ என்றாள்.

அர்ச்சனா ‘எனக்கு கேட்கும் போதே தொண்டை அடைத்துவிட்டது மாமி. பாபுவுக்கு மிகவும் பிடித்த பாட்டு போலிருக்கிறது. சொன்னார். ஆனால் கோபி என்னவோ சங்கீதத்தில் ஈடுபாடே இல்லாதது போல் பேசினார். இரட்டையருக்குள் அதிசயமான வித்யாசங்கள், இல்லையா மாமி ? ‘ என்றாள்.

‘ஆம் ‘ என்றாள் மாமி. கண்கள் குத்திட்டு இருந்தன. இலக்கற்ற பார்வை.

‘மாமி, நாம் இருவரும் கொஞ்சம் மனம் திறந்து பேசலாமா ? என்னை ஒரு ஸைக்காலஜாஸ்ட் போலல்லாமல் ஒரு சினேகிதியாக் பாவித்துப் பேசுங்கள். ‘ என்ற் அர்ச்சனா மாமியின் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

மாமியின் முகத்தில் இறுக்கம் குறைந்தது. ‘இதுவரை நான் யாாிடமுமே மனம் திறந்ததில்லை அர்ச்சனா. உன்னைப் பார்த்தால் தேவியே எதிாில் வந்தது போல் தோன்றுகிறது. உன்னிடம் எதையும் என்னால் மறைக்க முடியாது ‘ என்றாள்.

‘ மாமி, தயவு செய்து என்னைப் பீடத்தில் வைக்காதீர்கள். நான் ஆசாபாசங்கள் நிறைந்த ஒரு சராசாி சிறுமி. ‘

மாமி அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நெஞ்சைப் பிளந்து எல்லாவற்றையும் கொட்டிவிட்டாள்.

தொடர்ந்து வெகு நேரத்திற்கு கனமான நிசப்தம். பிறகு அர்ச்சனா கேட்டாள்.

‘ உங்கள் பிள்ளைகளுக்கு இது தொியுமா ? ‘

தொியாது என்பது போல் தலையசைத்தாள் மாமி. ‘இவ்வளவு வருஷங்களாக தெய்வத்திடம் தீர்ப்பு வேண்டிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. நான் என்ன செய்வது ? ‘

‘தெய்வம் எப்படி மாமி தீர்ப்பு அளிக்கும் ? எந்த அளவுகோலை வைத்து எடை போடும் ? நல்லது, கெட்டது, முறை, தவறு என்ற அளவுகோலெல்லாம் மனிதன் தனக்காக உருவாக்கியவை. உங்கள் புனிதம் அதையெல்லாம் கடந்தது. முன்பே இந்த உண்மையை அறிந்திருந்தால் பாபுவும் கோபியும் இருளில் அலைந்திருக்க மாட்டார்கள். ‘

மாமி மெளனமானாள். தான் அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று சந்தேகித்தாள் அர்ச்சனா.

‘அர்ச்சனா. இனி எனக்குத் தீர்ப்பு வேண்டாம். பாபு கோபி வந்தவுடன் அவர்களிடம் எல்லவற்றையும் சொல்லிவிடப் போகிறேன். என்ன சொல்கிறாய் ? ‘

‘மாமி. என் வேலையை சுலபமாக்கி விட்டார்கள். உங்கள் அன்பும் உண்மையும் சாதிக்காததை ஒரு ஸைக்காலஜாஸ்டால் சாதிக்க முடியாது. ‘

வாசல் மணி அடித்தது.

‘உங்கள் பிள்ளைகள் வந்திருப்பார்கள். இனி எனக்கு வேலை இல்லை. வருகிறேன் மாமி. ‘ என்றாள் அர்ச்சனா.

***********

கான்பிஃரன்ஸால் அர்ச்சனாவின் பேப்பருக்கு நல்ல வரவேற்பு. அது முடிந்து கேள்வி-பதில் நடந்து கொண்டிருந்தது .

‘ மிஸ் ராய். என் பெயர் ராம் குமார். ஸ்டூடெண்ட். நீங்கள் சொன்ன இரட்டையர்கள் கேஸ் வெளி நாட்டிலா இந்தியாவிலா…… ?

‘ மன்னிக்கவும். நான் அவர்களைப் பற்றி ஒன்றும் கூற முடியாது. அது பண்பு ( ethical) அல்ல ‘

‘ ஸாாி. எனக்குள்ள சந்தேகத்திற்கு கலாச்சார சம்பந்தம் இருப்பதால் கேட்டேன். அருகருகே நிகழ்ந்த சேர்க்கையில் உருவானதால் இரட்டையர்களில் ஒருவர் அம்மா மற்றவர் அப்பா போல் என்றீர்கள். அதில் ஒரு சேர்க்கை கணவருடனும் இன்னொன்று வேறு ஒருவருடனும் இருக்கலாம் அல்லவா ? இது மிக அபூர்வமானாலும் சாத்தியம் என்று கேட்டிருக்கிறேன் ‘

‘இது என் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட விஷயம். எல்லோருக்கும் நன்றி. ‘ என்று கூறிவிட்டு அர்ச்சனா கை தட்டலை புன்சிாிப்புடன் ஏற்றவாறு மேடையிலிருந்து இறங்கினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *