(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“கிரிச்..”
காப்பிக்கடைக் கம்பிச் கதவின் ஒலிதான் அது.
கடை ஐந்தடி மூலையில் மங்கம்மாள் கிழவி படுத்திருந்தாள். அவள் காதுகளில் கதவு திறக்கப்படும் ‘க்ரிச்’ ஒலி விழுந்ததும் விழித்தூக் கொண்டாள். காலை மணி ஐந்து என்று உணர்ந்தும் படுத்திருத்தபடியே சாலையை நோக்கினாள். பகலெல்லாம் பரபரப்பாக இருக்கும் அந்தச் சாலை அமைதியாக இருந்தது. சாலை விளக்குகள் பால்வண்ண ஒளியை உமிழ்ந்து நிலவோடு போட்டிபோட்டுக் கொண்டிருந்தன. வெண்பனிப் படலம் நிலமகளைப் போர்த்திக்கொண்டிருந்தது.
பழுத்துவிட்ட அவள் உடல் குளிரால் நடுங்கியது; உடம்பு வலி வேறு. பழைய கந்தல் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
மங்கம்மாளுக்கு மூருகக்கடவுளைத் தவிர யாருமே துணை இல்லை . வீடுகூட அத்த ஐந்தடி மூலைதான் . உடைமை என்று சொல்லிக்கொள்ள காப்பிக்கடைக்காரர் கொடுத்த இடுப்பளவு பழைய. அலமாரியும், இருபதாண்டுக்கு மூன் தான் வாங்கிய ஆட்டுக்கல்லும், நெளிந்த வாளிகளும், சில் விட்டிருந்த குவளைகளும், இருந்தன. முருகன் படமும் ஒன்று கண்ணாடி போட்டு வைத்திருத்தாள்.
கடமை என்று ஒன்று இருக்கிறதே என எண்ணியவள் குளிரையும், உடம்பு வலிவையும் பொருட்படுத்தவில்லை. மெள்ள எழுந்தாள் . தலையணைக்குக் கீழே வைத்ஓருத்த முருகன் படத்தை எடுத்து இரு கை குவித்து, ‘முருகா! ஏம்ப்பா என்னை இப்படிச் சோதிக்கிறாய்?’ என்று சொல்லிக் கும்பிட்டுவிட்டு படத்தை எடுத்து அலமாரி மேல் வைத்தாள்.
அழுக்கேதி இருந்த தலையணையையும், போர்வையையும் பீற்றலாக இருந்த கோரைப்பாயில் வைத்துச் சுற்றினாள் . அதைத் தூக்கி மூலையில் கிடந்த அலமாரிமேல் வைத்துவிட்டு அலமாரிக் கதவைத் திறந்து பானையை எடுத்தாள். உளுந்தம் பருப்பு ஊறிய அந்தப் பானையை ஓரமாக வைத்துவிட்டு, கடலைப் பருப்பு ஊறிய பானையை எடுத்தாள் . அதையடுத்து ‘ வாளி இருந்தது . அதை எடுத்துக்கொண்டு காப்பிக்கடையை நோக்கி. நடந்தாள் .
காப்பிக்கடைக்காரச் சீனர் நல்லவர் . அவருக்குக் கிழவியை ‘ ஜப்பான்காரன் காலத்திலிருத்து தெரியும் .
மெள்ள நடத்து காப்பிக்கடையை அடைந்ததும், “இன்றைக்கு என்ன இப்படிக் குளிராக இருக்கிறது ?” என்றாள் .
“ஆமாம் ஆச்சா! ரொம்பக் குளிராகத்தான் இருக்கிறது” என்று மலாய் மொழியிலேயே மறுமொழி பகன்றார் சீனக்கிழவர் .
மங்கம்மாள் நீர்க்குழாயைத் திறந்தாள். குழாய்நீர் சில்லென்றிருந்தது நரம்புகளும் நாளங்களும் புடைத்துக் கொண்டு வெளியே தெரியும் கைகள் நடுநடுங்க நீரைப்பிடித்து வாயைக் கொப்பளித்துவிட்டு , “தண்ணீர் சுட்டுவிட்டதா?” என வினவினாள்.
சீனக் கிழவர்க்குப் புரிந்துவிட்டது. அவள் கோப்பி குடிக்கத்தான் அப்படிக் கேட்கிறாள் என்று எண்ணியவாறு, “இப்போதுதானே அடுப்பை மூட்டி இருக்கிறேன்: அதற்குள் எப்படிக் கொதிக்கும்?” என்றார் .
மங்கம்மாள் வாளியில் நீரைப் பிடி த் து க் கொ ண் டு திரும்பினாள் . அவள் கொஞ்சம் கூனிய நிலையில் ஆடிஆடி நடக்கும்போது வாளியில் உள்ள நீரில் கிட்டத்தட்ட பாதி சிந்தி விட்டிருந்தது. வாய் அகன்றிருந்த ஆட்டுக்கல்லை நெருங்கியதும் மண்டிபோட்டுக்கொண்டு அமர்ந்தாள். கல்லைக் கழுவிவிட்டு. ஊதிய உளுந்தம் பருப்பைப் பாட்டு ஆட்டினாள் உடம்பிலுள்ள வலுவைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி விட்டிருந்த ஆட்டுக்கல் அவள் பலத்தை மேலும் வாங்கிக் கொண்டிருந்தது வாயில் பல் இல்லாவிட்டாலும் கையில் பலம் இருக்கிறது எனும் எண்ணத்தில் மாவை அரைத்தாள்.
மாவு அரைபட்டதும் அள்ளிவைத்தாள் . அப்போது “ஆச்சி” எனும் குரலும் அவள் காதுகளில் விழுந்தது . காப்பிக் கடைக்காரர் குரல்தான் அது.
மங்கம்மாள் நிமிர்ந்து பார்த்தாள். எதிரே காப்பியும் கையுமரக, நின்றிருந்தார் சீனக்கிழவர் ‘ரொம்ப நன்றி!” என்றவாறு காப்பியை வாங்கிக் கொண்டாள்.
காப்பியைக் குடித்துவிட்டு வெற்றிலைப் பாக்குப் பையை எடுத்தாள். பாக்கோடு கலந்துகிடந்த சில்லறையில் 30 காசு எடுத்து காப்பித் தட்டில் போட்டுவிட்டு காலை நீட்டிப் போட்டுக் கொண்டாள் . வாய் மலுமலுப்பாக இருத்ததால் வெற்றிலைப் பைக்குள் கிடந்த இரும்பு உரலை எடுத்தாள். அதில் வெற்றிலை, பாக்கு,- சுண்ணாம்பு மூன்றையும் அளவோடு சேர்த்துவைத்து இடித்தாள் . உரலில் இரும்புலக்கையால் இடித்துக் கொண்டிருக்கும்போது அவளுக்கு துப்பாக்கிக் குழாய் துரு எடுக்கும் நினைவு வந்துவிட்டது. மங்கம்மாள் துப்பாக்கி பிடித்துச் சுட்டவள்தான் . அதையடுத்து அடுக்கடுக்காகப் பழைய நினைவுகள் எழுந்தன. அவள் கண்ணில் நிர் திவலை கட்டியது. “சப்பான் காரன் காலத்துல கண்ட அந்தத் திருமுகத்தை இனி என்று காண்பேனோ ! அவர் எப்ப வருவாரோ ! இல்லை அவரை ப் பார்க்காமல்தான் இந்தப் பாவி கண்ணை மூடிவிடுவேனோ ! ஒரு முறையாகிலும் பார்த்துவிட்டுச் செத்தாத்தானே மோச்சம் கிடைக்கு!” என நினைக்கும்போது நெஞ்சம் கனத்தது ‘கடவுனே முருகா !’ என்று பாரத்தை மூருகன்மேல் போட்டாள். சுருங்கிவிட்ட பஞ்சுக் கன்னங்களில் உருண்டுவத்த கண்ணீர் மணிகள் விளக்கு வெளிச்சத்தில் வயிரத்தை நினைவுகூர்ந்தது. அவள் நெஞ்சமும் வயிரத்தான் !
கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். உரலில் போட்டு இடித்த வெற்றிலையை விரலால் கிண்டி உள்ளங்கையில் கொட்டினாள். நன்றாக இடிபட்டிருக்கிறதா என உற்றுப்பாத்து விட்டு வாயில் போட்டுக்கொண்டாள். இடித்து இடித்து அடிப் பாகம் நசுங்கிவிட்டிர்ருத்த உரலையும், உலக்கையையும் பைக்குள் போட்டுக்கொண்டு ஆட்டுக்கல் பக்கம் திரும்பினாள்: கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக ஆட்டிஆட்டி வாயகன்று விட்டிருத்த ஆட்டுக்கல்லில், ஊறிய கடலைப் பருப்பை அள்ளிக் கொட்டினாள் குளிரும் கொஞ்சம் குறைந்துவிட் டிருந்தது. தேய்ந்துபோய் இருத்த குழவியைப் பிடித்துக்கொண்டு ‘ குட க் குடக்’ என்று வேகமாக ஆட்டினாள்?
செம்பரிதி கீழைக்கடலைக் கிழித்துக்கொண்டு எழுந்தது. அதன் செவ்வொளிக் கீற்றுக் கட் டிடக்காட்டிற்குள் ஊடுருவிய வண்ணம் இருந்தது . மங்கம்மாள் அடுப்பை மூட்டினாள்.
வடை சுட்டு மூடிந்ததும் ஒரு கூடையில் வடையை காண்டு சுற்று வட்டாரத்தில் உள்ள கடைகளுக்குச் சென்றாள்.
கடைகளுக்குப் போட்டுக்கொண்டு வரும்போது, ஒரு கடையில் முதல் நாள் போட்ட வடை விற்காமல் கிடந்தது அதை எடுத்துக்கொண்டு விற்றவடைக்கு மட்டும் காசு கணக் கிட்டு கடைக்காரரிடம் வாங்கிக்கொண்டாள் _ விற்காமல் கிடந்த பழையவடையை எடுத்து வழக்கம்போல் அங்கிருந்த பன்றித் தொட்டியில் போட்டாள். அதைப் பார்த்துக் கொண்டு இருந்த அத்தக் கடைக்காரர், ‘ ‘இப்படிப் போட்டால் பன்றிக்குக் கஞ்சி எடுத்துப்போற சீனனுக்குத்தான் மிச்சம் _ நேத்துப் போட் ட வடைதானே ! கள்ளுக்கடைப் பக்கம் போற நீங்க எடுத்துக்கிட்டுப் போனா காசாக்கிடலாம் ! குடிக்கிறவங் களுக்குப் பழசுப்புதுசுன்னா தெரியப்போகுது. நானும் உங்கக் கிட்ட எத்தனையோ தடவை சொல்லிப்புட்டேன். தீங்க விட மாட்டேங்கிறீங்களே” என்றார்.
“எனக்கு என்னவோ அப்படிச் செய்யுறதுக்கு மனம் வர மாட்டேங்குதுப்பா..!”
“அதான் தீங்க இன்னும் இப்படியே இருக்கிறீங்க கல்லை யும், மண்ணையும் கலந்து காசாக்கிற இந்தக் காலத்தில், நீங்க நேத்துச் சுட்ட வடையை விற்கிறுதுக்கு இப்படிச் சொல்லுறீங்களே!” என்றார்.
“கல்லையும், மண்ணையும் காசாக்கிறவங்களைக் கடவுள் பாத்துக்க்ட்டுத் தான் இருக்கிறாரு . நமக்கு அத்த அகடம் பகடம் செய்து வயிறு வனர்க்கவேண்டாம்ப்பா !அதுக்குப் பட்டினியாக்கிடந்து சாகுறுது எவ்வளவோ நல்லது” என்றாள்.
“ஊகூம்… என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க” என்றார் கடைக்காரர்.
கிழவியின் குழிவிழுத்த கண்கள் கடைக்காரரைக் கூர்ந்து நோக்கின . பொக்கை வாய் திறந்து சிரித்துக்கொண்டே வடைக்கூடையை எடுத்தாள்: அடுத்த கடையை நோக்கிக் கால்கள் நடந்தன.
சுற்றுவட்டரத்தில் உள்ள காப்பிக்கடைகளுக்கு வடை போட்டு முடிய மணி பத்தரையாகி விட்டது.
கடைசியாக வடை போட்ட கடையில் பசியாறிவிட்டுக் கள்ளுக்கடைக்கு விரைந்தாள்.
கள்ளுக்கடையைச் சுற்தி கம்பி வேலி போடப்பட்டிருந்தது கள்ளுக்கடைக்கு ஏன்தான் வேலிபோட்டார்களோ தெரிய வில்லை! யாரும் அத்துமீதி உள்ளே போகக்கூடாது என நினைத்து வேலி போட்டிரூக்க வழியில்லை . ஏனெனில், உள்ளே உள்ளவர்கள் அந்த நிலையில் இருத்தனர்.
மங்கம்மாள் வாசலை ஒட்டி வேலி ஓரமாகப் போய் அமர்ந்தாள்.
“பேய் வடைக்கார கிழவியைக் காணோம்னு கேட்டியே! இதோ! வந்துட்டாங்கடா” என்றார் கள்ளுக்குவளையும் கையுமாக நடனமாடியவர் .
விழிகள் பிதுங்க நிலைதடுமாதியிருத்த மற்றொருவர், “இப்பத்தான் வந்திருக்காங்களா? இந்தப் பாட்டி எப்போதுமே இப்படித்தான் ! நே ரத்தோட வரமாட்டேங்குறாங்களே!” என்றவாறு கையிலிருந்த நண்டுக்காலைக் கடித்தார். அடுத்த நொடியே துப்பிவிட்டு “இந்த நண்டுக்கடைக்காரன் எப்போதும் மொளகாய்தான் அள்ளிக் கொட்டியிருப்பான், ஏன்யா மொளகாயைக் கொட்டியிருக்கேனு கேட்டா சுள்ளுனு இருக்கத் தான் என்பான். இன்னிக்கு என்னனா உப்பை அள்ளிக் கொட்டியிருக்கான் ! கேட்டா என்ன சொல்லுவானோ தெரியலேயே !” என்றார் . கையில் இருந்த கள் குவளையும் ஆடியது . கள்ளும் சிந்தியது.
“பழசா இருக்கும் அதான் உப்பை அள்ளிக் கொட்டியிருக்கான்”
“ஆமாடா! எனக்குத் தெரியாமப் போச்சே!”
“அது போகட்டும் அதைத் தூக்கிப் போட்டுட்டு பத்துக் காசு இருந்தா கொடு வடை வாங்கிக்கிட்டு வறேன்”
“நீ என்ன என்கிட்விடயே காதுகுத்தப்பாக்குறீயா?”
“ம்….. பத்துக்காசுலதான் நீ மாடி வீடு கட்டப்போறி யாக்கும், கொடேன்”
“என்கிட்டே காசு இல்லே”
“நல்லா இருக்குதே!”
“காசு இல்லாம கள்ளு வங்கிப்புட்டே! இப்ப வடைக்கும் அடிப்போடுறீயா! போடா போடா! இந்த நண்டு பழசா இருத்தாலும் அதுல உப்பும் மிளகாயும் ரொம்ப இருந்தாலும் நான் தின்பேன்! எனக்கு வடை வேண்டாம்” என்றவர் மீண்டும் நண்டுக்காலைக் ‘கடுக்’ என்று கடித்தார்.
“காசு கேட்டா பெருசா பேசுறீயே! இந்தாப்பாரு என் கிட்டேக் காசு இல்லேனா தினெச்சே !” என்றவாறு அரைக் கால் சட்டைப் பைக்குள் இருந்த காசை எடுத்துக் காண் பித்துவிட்டு நடத்தார். கால்கள் முன்னே செல்ல உடம்பு பின்னுக்கு இழுத்தது. சிலர் கீழே வைத்திருந்தகள் குவளை களையும் தாண்டிக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்தார். அவர் கையில் கள் குவளையும் இருந்தது.
“ஏம்ப்பா காசக்கொடுத்து கள்ளை வாங்கி இப்படிக் கீழே சிந்திக்கிட்டு வர்றே!” என்றாள் மங்கம்மாள்.
“கீழே ஊத்தலே பாட்டி! நிறைய இருக்கிற கள்ளுதான் சிந்துது! அதுமட்டும் இல்லே அந்தப் பயல் என்னை இளக் காரமாப் பேசிப்பிட்டான். பத்துக்காசு அவனுக்குப் பெருசாப் போச்சு. அதான் கள்ளையும் கையோட எடுத்துக் கிட்டு வந்துட் டேன். இல்லேனா அந்தப் பயல் தொப்பை வயித்துல ஊத்திக் கிட்டுப் போயிடுவான் ! எனக்குக் கள் கிடைக்காமப் போயிடும் நீங்க வடை கொடுங்க பாட்டி” என்றார் மங்கம்மாள் வடை யும், கடித்துக்கொள்ள பச்சை மிளகாயும் எடுத்துக் கொடுத்தபடி சிரித்தாள். அவர் வாங்கிக்கொண்டு திரும்பவும் பரதநாட்டியம் பயின்றார். அவர் நடப்பது அப்படித்தான் இருந்தது.
அடுத்தடுத்துப் பலர் வடை வாங்கினர். சற்று நேரத் திற்குள் வடையும் விற்றுவிட்டது. மங்கம்மாள் வடைக் கூடையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டும்தம விற்ற காசை எண்னிப் பார்த்துக்கொண்டும் வீட்டை நோக்க் நடத்தாள்.
அவள் சென்றுவிட் டாலும் அவளைப் பற்றிய பேச்சு கள்ளுக் கடையில் அடிப்படத்தான் செய்தது.
“இந்தக் கிழவி வடையினா, வடைதாண்டா! இவ்வளவு வயசாகியும் இப்படி வாய்க்குச் சுவையாச் சுடுறாங்களே!” என்றார் வடை தின்றுகொண்டிருந்தவர்.
“நீ இந்த மங்கம்மாக் கிழவியைப் பத்தி என்னடா தினைக்கிறே! அவங்க யஊர் தெரியுமா? பேருக்கு ஏத்தாப்போல அவங்க மங்கம்மாவேதான்! நேதாசி இருக்கிறாரே நேதாசி! அவர் சப்பான்காரன் காலத்துல இங்கே வத்து படைக்கு ஆள் தீரட்டினாரே அது உனக்குத் தெரியும்டா? உனக்கு எங்கே தெரியப் போகுது. தீ எத்தக்காட்டுல திரிஞ்சியோ! சொல்லுறேங்கேளு, அத்தப் படையிலே பொம்பளைப் பிரிவுனு இருந்துச்சுல அதுல இவங்க இருந்தாங்க பருமா வரைக்கும் பாய்ச் சண்டை கொடுத்தவங்க தெரியுமா?” என்றார்
அருகில் இருந்தவர். “அப்படினா ரொம்பக் கெட்டிக் காரவங்கனு சொல்லு!” என்றார்.
“அவங்க கெட்டிக்காரவங்கதான் ஆனா ஒன்னு தெய்வந் தான் அவங்களைச் சேரநிக்குது “ என்று சொல்லிவிட்டுக் கள்ளைக் குடித்தார் கள் நெடியில் கண்களை முடித்திறந்தார்; வடையையும் கடித்துக்கொண்டார்.
ஒரு மூலையில் காலைக் கட்டிப்பிடித்துக்கொண்டு , முழங் காலில் தலைவைத்திருந்த மரணிக்கத்திற்கு குடி மயக்கம். அப்படி யிருந்தும் புத்துணர்ச்சியோடு திமிர்ந்து மங்கம்மாளைப் பற்றி கேட்க எண்ணினார். தலை சுற்றியதால் அவரால் முடியவில்லை. “அவ…. “ என்றார். அடுத்த சொல் வெளிவரவில்லை. சொல்ல தினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய் குழறியபடி மீண்டும் முழங்காலில் தலையை வைத்துக் கொண்டார்.
“எதுக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேனோ. அது பக்கத்துலதான் இருத்திருக்கு! யாரை மறக்க கள்ளைக் குடிக்கக் கத்துக்கிட்டேனோ அதுவே இப்பக் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாமல் செய்துடுச்சு ரொம்பக் குடிச்சுப்புட்டேன். அவ ரெண்டு மூனு மாதமாக கிட்டத்திலதரன் இருந்திருக்க !” என நினைக்கும்போது அவர் கண்களில் நீர் பெருக்கெடுத்தது.
நேரம் ஓடிக்கொண்டிருத்தது கள் குடித்துக்கொண்டிருந்த வர்கள் ஊர்க் கதையிலிருந்து , ஊரார் கதைவரை பேசிமுடித்து விட்டுச் சென்றுவிட்டனர். மாணிக்கம் மட்டும் இருந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவில்லை வானத்தில் பறப்பதைப்போன்ற நிலையில் இருந்த அவர் மனக்கண்முன் கடந்தகால நிகழ்ச்சி திரைப்படம்போல் தெரித்தது.
கடல்போல் மக்கள் திரள்!
அக்கடல் ஆடவில்லை: அசையவில்லை ! மெய்மறந்திருந்தது. மக்கள் கடல்முன் மாவீரர் நேதாஜியின் வீர உரை!
“நம் நாடு; தாய் நாடு அடிமைப்பட்டுக்கிடக்கிறது. அதை மீட்க நாம் அரிமாக்களென ஆர்த்தெழ வேண்டும். நீங்கள் வீதிட்டு எழுத்துவிட்டால் பறங்கியரை இன்றே இப்போதே தாய் நிலத்திலிருந்து வெளியேற்றிவிடலாம். நம் நாட்டின் வளத்தை எல்லாம் கொள்ளையிடும் வெள்ளையர்களின் இரும்புப் பிடியிலிருந்து இந்திய மண் விடுதலை பெற்றுவிடும். மறவர்குலத்து மாணிக்கங்களே! இந்த மாணிக்கங்களைப் பெற்றெடுத்த தாய்மார்களே! நம்மைப்பெற்ற தாயான தாய் நாட்டைத் தலைபோனாலும் பிறர் ஆள இடங்கொடுக்க போர்முனைக்குச் செல்ல பொங்கி எழுங்கள்! அடிமையாகப் பல ஆண்டு வாழ்வதைவிட உரிமையோடு ஒரே ஒரு நொடிப் பெரழுது வாழ்த்தால்பாதும் என்று உரிமைக்குரல் எழுப்புங்கள்! போர் முனைக்குச் சென்று எதிரிகளைப் புறமுதுக்காட்டச் செய்யுங்கள் ! தாய்நாட்டின் மணிக்கொடியை ஏற்றுங்கள்“ என்று உரையாற்றினார். மக்கள் கடல் வெகுண்டெ ழுந்தது. பானை பிடிக்கும் கைகள் துப்பாக்கிகளை ஏத்தின. ஆடவர் அணி அலைகடலென திரண்டது. நாட்டை மீட்க படைப்புயல் போர்க்களம் நோக்கிச் சென்றது.
பெண்கள் அணியில் மங்கமாளும், ஆடவர் அணி யி ல் மானிக்கமும் இருத்தனர் படை பர்மா நோக்கிச் சென்நது: கடடுக்கடங்காத காட்டாற்று வெள்ளம் போல்!
“போர்! போர்! விடுதலைப் போர்! குண்டுகளும் , பீரங்கி களும் விண்ணை அதிரச் செய்தன. துப்பாக்கிகள் முழங்கின எங்கும் தீப்பிழம்பு! புழுதிப்புயல்! செங்குருதிச் சாக்காடு!’ என்று கண்டோர் வர்னித்தனர்.
நேதாஜியின்படை வெற்திக்கு மேல் வெற்தி பெற்றது!
ஆனால், அது நிலைக்கவில்லை. பிடித்த இடங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரியத் தொடங்கின. வெற்றியால் துள்ளிய விடுதலை உள்ளங்கள் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்தன . வெள்ளையர்ப்படை முன்னேறியது.
போர்முனைக்குச் சென்றிருந்தவர், மறத்தலைவர் நேதாஜி என்ன சொல்லப்போகிறார் என அறிய ஆவலாக இருத்தனர்.
‘நேதாஜி அரசியல் காரணமாக ஜப்பானுக்குச் சென்று விட்டார் ‘ எனும் செய்தி அவர்களுக்கு எட்டியது காடு மேடு களையும், மலை மடுக்களையும் கடந்து சென்ற மறவர் படை திருயுவதைத் தவிர வேறு வழியில்லை. போருக்குச் செல்லும் போது இருந்த ஊக்கத்தை இழந்து, சேரர்வோடு திரும்பியது.
வழியில், உண்ண உணவு கிடைக் கவி ல் லை. பசிப் பினியாடு, தொற்று நேரய் களும் பிடித்துக்கொண்டன. போர்க்களத்தில் உயிர் தப்பியவர்களை நோய் தன் பசிக்கு இரையரக்கிக்கொண்டது.
ஆடுமாடுகளைப்போல் இலை தழைகளைத் தின்று, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு எஞ்சியோர் திரும்பினர் . அந்த அணியில் மாணிக்கமும் இருந்தார்.
வீடு நோக்கி ஓடினார் , வீடு தரைமட்டமாகக் கிடந்தது . அடுத்து மங்கம்மாள் வீட்டிற்கு விரைந்தார். அங்கும் அதே நிலை குண்டு வீச்சுக்கு அவர்கள் வீடு தப்பவில்லை. ‘மங்கம்மாள் வந்தானோ வரவில்லையோ தெரியவில்லை சண்டையில் செத்துத் தான் விட்டாளா ?’ என நினைக்கும்போது மாணிக்கம் புழுவாகத் துடித்தார். கண்ணீர் அருவியை நினைவுகூர்ந்தது. அது முழங்கால் வழிந்து சில்லிட்டது.
தன்னை மறந்த நிலையில் கள்ளுக்கடையில் இருந்த மாணிக்கத்தின் குடி மயக்கம் சற்று தணிந்திருத்தது, மெள்ள , தலை நிமிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தார். கள்ளுக்கடை வெறிச்சோடிக் கிடந்தது.
“என் இன்னும் மயக்கம் தெளியலையா ? எழுந்து போயா?3 என்றார் கள்ளுக்கடைக் காவற்காரர்.
மாணிக்கம் எழுந்து தள்ளாடித்தள்ளாடி நடந்த்தர். வீட்டிற்குச் சென்றும் அவர் மனம் அமைதியடைய வில்லை. “அளவோடு குடிச்சிருந்தா மங்கம்மாள் இருக்கும் இடத்தைத் தெரிஞ்சுக்கிட்டுப்போய் பார்த்திருக்கலாமே !”என எண்னித் துடித்தார்.
அன்று மாலை மீண்டும் கள்ளுக்கடைக்குச் சென்றார். அந்திக்கள் கு டி க் க க் கூட் டம் கூடி விட் டிருத்தது. ஆ னால் மங்கம்மாள் மட்டும் வடைவிற்க வரவில்லை,
வந்திருந்தவர்களுள் காலையில் மங்கம்மாளைப் பற்றிப் பேசிக் கொண்டவரும் ஒருவர் இ ரு த் த ர் . அவரிடம் அணு கி, ‘ மங் கம்மாள் எங்கேங்க இருக்கிறா ?” என வினவினார்.
குவளையும் கையுமா க இருந்தவர் “என்ன பெரியவரே கள்ளுக்கடைக்கு வத்ததும் கிழவிமேல் காதலா ? பரவாயில்ளை வயசுக்கு ஏத்த ஆள்தான்“ என்று கிண்டலாகக் கேட்டார்.
“உங்களுக்கு அவங்கமேல காதல் வரும்னு தெரிஞ்சா இருக்கிற இடத்தைக் கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டிருப்பேன் எதுக்கும் பொறுமையா இருங்க கா லையில அவங்களைப் பத்சி சொன்னானே அவன் வந்தாலும் வருவான்!”
“எப்போ வரு வருவாரு?“
“நல்ல ஆளையா நீ ! அது எப்படிச் சொல்லமுடியும் ? அவன் நினெச்சா வர்வான். இல்லேனா இல்லே” என்றார்.
மாணிக்கம் காந்திருத்தார். மங்கம்மாள் வரவில்னை காலையில் மங்கம்மாளைப் பற்றிப் பெருமையாகச் சொன்னவரையுக் காணோம் இருத்து பரர்த்துவிட்டு ஏமாற்றத்தோ டு வீடு திரும்பினார்.
மறுநாள்.
கள்ளுக்டைக்கு முதல் ஆளாகச் சென்று காத்திருத்தார். அமைதியாக் இருந்த கள்ளுக்கடையில் ஈ ஆட்சி புரித்தது. அவ்வளவு மணம் அந்தக் கள்ளுக்கடையில்! ஆனால், மாணிக்கம்: முகத்தில் ஈ ஆடவில்லை. கள்ளுக்கடை திறத்ததும் உள்ளே சென்று மூலையில் அமர்த்தார். அவர் பார்வை வாசலிலேயே இருத்தது.
கவலையாக இருத்த அவர் மூகத்தில் புன்னகை தவழ்த்தது. எழுந்தார் . ‘அண்ணே! அண்னே!‘ என்றபடி வாசலை நொக்கி ஒடினார்.
வந்தவர் வேறு யாருமில்லை. நேற்று மங்கம்மாளைப் பற்றி சொன்னவர்தான்!
அவரிடம் தான் யார் என்று சொல்லிவிட்டு “மங்கம்மாள் எங்கே இருக்கிறாள்? அவளைப் பார்க்கவேண்டும்?” என்று வினவினான்.
வத்தவர் விவரத்தைச் சொல்லியதும் மானிக்கம் அங்கு நிற்கவில்லை. மங்கம்மாள் வீட்டுக்குக் கிளம்பினார் . போகும் போது தானும் மங்கம்மாளும் இனம் பருவத்தில் உரையாடிக் கொண்டது நினைவுக்கு வத்தது;
“மங்கம்மா இந்தச் சண்டை மட்டும் வரலேனா அடுத்த தையிலேயே நம்ம திருமணம் தடந்துடும்“
“ம்….என்ன செய்யுறது ! நமக்காக இந்த உலகச் சண்டை நிக்கவா போகுது“
“நான் சண்டைபோடும்போதுகூட உன்னை நினைச்சுக் கிட்டுதான் சண்டை போடுவேன்”
“ஊகூ ம் அப்படியெல்லாம் செய்யக்கூட து. ஏன்னு கேட்டா எதிரிங்க….”
“உ ன்னை நினைச்சுக்கிட்டுச் சண்டைப்போடும்போது எதிரிங்க எள்னை என்ன செய்யமுடியும். நான் அவங்களைக் கதிகலங்க வைப்பேன்! “இப்படி உரையாடிக்கொண்டது நினைவுக்கு வந்ததும், அவர் உள்ளம் பூரித்தது.
மங்கம்மாள் நாணத்தால் தலை குனிந்ததையும், அருகில் சென்று அரவணைக்க முயன்றபோது, “திருமணம் ஆகுமுன் கன்னிப்பெண்ணைத் தொடக்கூடாது” என்று சொல்விவிட்டுத் தள்ளிச் சென்றதையும் நினைக்கும்போது மாணிக்கம் கட்டிளங் காளையாகவே மாறிவிட்டார்.
“போருக்குச் செல்லும் நாம் திரும்பி வருவோமா என்பது கடவுளுக்குத்தரன் தெரியும் , அதனால்தான்… “ என்றதற்க்கு, “நம்மை முருகன் கைவிடமாட்டார். சண்டை முடிந்ததும் திருமணம் நடக்கும். ஆசை பாசம் எல்லாம் நாட்டு விடுதலைக்குப்பின்தான் என்று, நேதாசி சொன்னதை மறந்திடா தீங்க” என்று மங்கம்மாள் கூதியதையும் நினைத்துப் பார்த்தார். அவர் நெஞ்சத்தில் தேன் சொட்டியது.
இவ்வளவு நாள் சென்று சந்திக்கப் போகிறோம் என இனிய நினைவில் சென்றவர் பேருந்து நிறுத்தத்தையும் கடத்து சென்று விட்டா ர். உணர்வுபெற்றதும் திரும்பி வத்து நிறுத்தத்தில் நின்றார். பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டார்.
பேருந்தும் குதிப்பிட்ட இடத்தை அடைந்தது மாணிக்கத் தின் உள்ளமும் துள்ளியது போர்ப் பயிற்சி பெற்ற அவர் நடையில், பீடு தென்பட்டது.
காப்பிக கடையை நெருங்கியதும் ஐந்தடி மூலையை நோக்கினார். அடுத்த நொடியே அவர் நெஞ்சில் தீத் துண்டமே விழுத்துவிட்டது.
கடைகரரச் சீனரிடம் சென்று மங்கம்மாளைப் பற்றிக் கேட்டார் , சீனக் கிழவர் நடத்ததைச் சொல்லியதும், நி “இப்படி யும் என் காதில் விழ வேண்டும் என்று இருத்திருக்கிறதே” என எண்ணி, சிறு பிள்ளையைப்போல அழுதேவிட்டார்.
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் ஐந்தடியைப் பார்த்தார். மங்கம்மாள் புழங்கிய அழுக்குப்படித்த பழைய அலமாரி, தேய்த்த ஆட்டுக்கல், நெளிந்திருத்த வாளிகன், குவளைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடத்தன மங்கம்மாள் நிலையைக் கண்டு அக்கம் பக்கத்தில் உள்ள பெரியோர் மூதல் சிறுவர் ஈறாக கண்ணீர் விட்டதைப்போல் அவை கண்ணீர்விடவில்லை என்றாலும், களையிழத்து காணப் பட்டன. அவை அப்படிகிடக்கவே காரணம் தான்தான் என அடுப்பு சொல்லாமல் சொல்லிவிட்டு அவரை பார்க்துச் சிரித்தது;
அடுப்பில் எண்ணெய் தடுமாறிக்கொட்டியதால்தானே மங்கம்மாள், கயிலியில் தீ பற்தியது!
மாணிக்கம் மருத்துவ மனைக்கு விரைத்தார்.
மங்கம்மாள் படுக்கையில் கிடக்கும் நிலையைப் போகும் போதே பார்த்துவிட்டார்! கால்களிலும், கைகளிலும் தீப்புண் பட்டிருத்தது . புண்களுக்கு மருத்து போடப்பட்டிருத்தது.
அருகில் சென்று அரை தூக்கத்திலிருத்த மங்கம்மாவின் முகத்தைப் பார்த்தார். நெஞ்சம் வெடித்துவிடும்போல் இருத்தது. உதடுகள் படபடக்க பொங்கிவத்த அழுகையை அடக்கிக் கொண்டார். ஆனால், உணர்ச்சியை அடக்க மூடிய வில்லை. ‘‘மங்கம்மா” என்றார்.
அவள் காதில் தேன் துளி பரவியது. அவள் நெஞ்சம் செந்தாமரையைப்போல் மலர்த்தது. அல்லிவிழிகள் மலர்த்தன.
எதிரே கள்ளுக்கடையில் வடை வாங்கியவர்தாம் நிற்கிறார் என தெரித்து கொண்டாள். ஆனால், பெயர் சொல்லி அழைக் கிறாரே என எண்ணியவாறு, நீங்க” என்று இழுத்தாள்.
“என்னைத் தெரியவில்லையா மங்கம்மா! நான் தான் மாணிக்கம்” என்றார்.
மங்கம்மாள் தீப்புண் வலியையும் தாங்கிக்கொண்டு உற்றுப் பார்த்தாள். தொள்ளைக்காது எளிதில் காட்டிக்கொடுத்தது. அவளுக்கு இருத்த வலி எல்லாம் பஞ்சாய்ப் பறத்துவிட்டது” நெஞ்சில் பன்னீர் சிந்தியது. “’நீங்களா! இப்படி ஆளே உரு மாறிப் போய்விட்டீங்களே! என்னை உங்களால் எப்படி அடையாளம் கண்டுபிடிக்க மூடித்தது. என்னைப் பற்றி யாரும் சொன்னாங்களா?” என்றவாறு நிமிர மூயன்றாள். நிமிரும்போது புண் வலித்ததால் நிமிர முடியவில்லை. “நிக்குறீங்களே!” என்றாள்.
அத்த நிலையிலும் அவள் காட்டிய பனிவன்பு மாணிக்கத் ஓன் நெஞ்சை உருக்கியது. தம் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “நேத்துத்தான் நீ யார் என்று தெரியும்! பாக்க ஓடி வந்தேன்! நீ இத்த நிலையில் கிடக்கிறே “ என்று .சொல்கி முடிப்பதற்குள் அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது.
“இனி எனக்கு ஒன்னும் செய்யாது. நீங்க கவலைப் படாதிங்க” என்றாள். அவள் கண்களிலும் கண்ணீர். ஆனால் அது இன்பக் கண்ணீர்.
சில நொடிப் பொழுது அமைதி.
இந்த நிலையிலாகிலும் பார்க்கக் கொடுத்து வைத்ததே என்று நினைக்கும்போது மாணிக்கத்திற்கு மனச்சுமை குறைத்தது. “சண்டை முடித்து உன்னைப் பார்க்க ஓடோடி வத்தேன். குண்டு வீச்சால் வீடெல்லாம் தரைமட்டமாகக் கிடத்துச்சு. அக்கம் பக்கத்தில் உள்ளவங்களைக் கேட்டேன். யாரும் சரியானபடி விவரம் சொல்லல்லே. சண்டை நம்மை நிலையாகப் பிரித்துவிட்டதுனு நினெச்சுப் புருணைக்குப் போயிட்டேன். அங்கேயே உழைச்சுக் காலத்தைத் தள்ளிட்டு வயதான காலத்திலே இங்கே வத்தேன். இங்கு வத்து இரண்டுமூனு மாதந்தான் ஆகுது” என்கிறார் மாணிக்கம்.
“எல்லாம் நம் தலை விதிதாங்க ! அதான் நம்மை இல்வளவு காலமா பிரிச்சு வச்சிருக்கு ! சண்டை மூடிஞ்சு திரும்பியதும் நானும் பெண்கள் அணித்தலைவியும் வீட்டுக்கு வத்தோம். வீடு வாசல் இருத்த இடமே தெரியலே. விசாரித்துப் பார்த்ததில் யாரும் சரியாச் சொல்லலே நீங்க நினெச்சதைப்போல சண்டைதான் நிலையாப் பிரிச்சிடுச்சு, இனி அடுத்த பிறவினு ஒன்று இருத்தா அதில்தான் உங்களைச் சத்திக்க முடியும்னு தான் தலைவி வீட்டுக்குப் போயிட்டேன். அங்கே கொஞ்ச நாள் இருந்தேன். எவ்வளவு நாளைக்குத்தான் அங்கே இருப்பது ? சொ த்தமா தோசை அப்பம் சுட்டு வித்தேன்; ஏதோ வயிற்றைக் கழுவிக்கொண்டேன் கடைசி காலத்தில் எனக்கு அஞ்சடிதான் கிடைச்சது. கடைசி காலத்தில் இன்னும் ஓரடி மண் சேத்துக் கிடைக்கும்னு அத்த அஞ்சடியில் காலத்தை ஓட்டினேன் !” என்றவாறு மாணிக்கத்தைக் கணிவோடு நோக்கினாள்.
“ஏங்க பிள்ளை குட்டி இருக்குதா ? கூட்டிக்கிட்டு வந்து எங்கண்ணுல காட்டிடுங்க” என்றாள்
இதைச் செவிமடுத்ததும் மானிக்கம் அவளை வெதிக்கப் பார்த்தார்;
“ஏங்க அப்படிப் பாக்குறீங்க”
“மங்கம்மா தீ இந்த நிலையில் இருந்து கேட்கிறதுனாலே தான் பேசாமல் இருக்கிறேன். நீ என்னைப் பத்தி இப்படி நினைப்பேனு தெரிஞ்சிருத்தா நான் வந்திருக்கவே மாட்டேன்” என்றார்..
“நான் ஒன்னும் தப்பா நினைச்சுக் கேட்கலேங்க. உங்களுக் காகிலும் திருமணம் ஆகி, அந்தப் பெண் வயித்துல பிறத்த பிள்ளையாகிலும் என்னை அம்மானு கூப்பிடாதாங்கிற ஆசையில கேட்டேங்க. தப்புன்னா மன்னிச்சிடுங்க. ஆண்டவன் அந்தப் பாக்கியத்தை எனக்கு கொடுத்து வைக்கலேங்க, நீங்க தனிக் கட்டையாக எப்படித்தான் காலத்தை ஓட்டினீங்களோ! என்ன பாடுபட்டீங்களோ ! என்றாள். மாணிக்கத்தின் நெஞ்சத்தில் தாம் ஒருத்திக்கு மட்டுத்தான் இடம் இருக்கிறது என்பதை நினைக்கும்போது அவள் நெஞ்சம் இனிக்கத்தான் செய்தது.
கன்ணீரைத் துடைத்துக்கொண்டு, “அதில வெத்திலப் பாக்குப் பை இருக்கு எடுங்க” என்று மருத்துவமனையில், தம் படுக்கை யோடு ஒட்டிக் கிடத்த சிறு அலமாரிப்பெட்டியைச் சுட்டிக் காட்டினாள் .
மாணிக்கம் எடுத்ததும், ‘இதுவா?” என்றார்.
“ஆமா, அதுக்குள்ளே ஒரு பொட்டலம் இருக்கு !, அதுல மஞ்சளும் நூலும் இருக்கு எடுங்க” என்றாள்.
“இதெல்லாம் எதுக்கு?” என்று மாணிக்கம் புரியாததைப் போல் வினவினார்.
“‘நான் ஒருநாள் கனவுகண்டேன். அதுல இருத்து மூருகன் படத்துக்கு மூன்னாலே இருத்த இந்த மஞ்சளும், அன்னிக்குக் கடையில் வாங்கிய இந்த நூலும் வெத்திலபாக்குப் பையில தாங்க இருக்கு. அந்த முருகன் கனவுல வத்து சொன்னதைப் போல நீங்களும் வத்துட்டீங்க. நூலில் மஞ்சளைக் கட்டி
மூருகனை நினெச்சுக்கிட்டு என் கழுத்துல கட்டிடுங்க” என்று ஆசையோடு மெல்லிய குரலில் சொன்னாள்.
மாணிக்கத்திற்கு இது, பத்தாம்பசலித்தனமாகத் தெரித்தது. இருத்தாலும், அத்த நிலையில் அவள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்போல் இருந்தது. மருத்துவமனை என்பதைக்கூட மறத்து விட்டு அவள் கழுத்தில் மஞ்சளைக் கட்டினார். மங்கம்மாள் நெஞ்சில் தேனாறு ஓடியது. மூகம் மலர ‘அத்தான்!’ என்று வாய் நிறைய அழைத்தாள். அடுத்த சொல் அவள் வாயிலிருத்து வெளிவரவில்லை.
மாணிக்கத்தின் நெஞ்சில் இடி விழுத்தது “மங்கம்மா…! என்னை விட் டு விட்டுப் போய்விட்டாயா மங்கம்மா…?” மருத்துவமனைக் கட்டிடமே அதிர்ந்தது. அவர் சரிந்து விழுந்தார், தாதியர் ஓடி வத்தனர். சற்று நேரத்தில் அவர் உடலும் குளிர்த்தது. இருவர் உயிரும் காற்றோடு காற்றாக ஒன்று கலந்தது.
– கோடுகள் ஓவியங்கள் ஆகின்றன(சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்டு 1978, தை நூலகம், நாச்சியார்கோவில், தமிழ்நாடு