அன்று காலை சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது அவளுக்கு. நேற்று ஞாயிற்றுக்கிழமையானதால் அலுவலகமில்லாதது நிம்மதியாக இருந்தது. இன்று திங்கட் கிழமை போயாகவேண்டும். ஒன்பதரை மணிக்கெல்லாம் ரிஜிஸ்டரில் கையெழுத்து போட்டாக வேண்டம். அதன் பின் உள்ளே நுழைந்து மேனேஜிங் டைரக்டர் எம்.சிவக்குமார் எனப் பெயர் பலகையிட்ட அறைக்குள் நுழைய வேணடும். அதை நினைத்த÷ பாதே அடிவயிறு சுருண்டது. உள்ளே அமிலம் சுரக்க ஆரம்பித்தது. அவளைக் கண்ட உடனே அவனது முகம் இறுகும். கண்களில் கோபம் எட்டி பப்க்கும். பேச்சு சுறுசுறுவென்று காந்த தொடங்கும்.
ஏன் லேட்டு?
என்ன கரெக்டா வந்திருக்க? கடிகாரத்தப்பாரு… பத்து நிமிஷம் லேட்.
உங்க கடிகாரம் பத்து நிமிஷம் பாஸ்ட்டு சார்….
என் ரூம் கடிகாரத்தைபத்தி எனக்கே சொல்றியா…? என்று ஆரம்பித்து அரை மணி நேரம் நிற்க வைத்து டியூஷன் எடுப்பான். பின் குறிப்பிட்ட ஒரு பைலை கொண்டு வர சொல்வான். அதில் ஆயிரம் தப்பு கண்டுபிடித்து முகத்தில் தூக்கி எறியாத குறையாக மேஜை மீது வீசுவான். அல்லது தரையில் விட்டெறிவான். சிதறிப் பறக்கும் காகிதங்களை பொறுக்கி எடுத்துக்கொண்டு அவுள் வெளியே வர வேண்டும். பின் மெதுலவாக அத்தனை காகிதங்களையும் அடுக்கி மீண்டும் பைல் பண்ணவேண்டும்.பைல்கள் தான் மாறுமே தவிர நிகழ்ச்சிகள் மாறுவதில்லை. நாள் தவறாமல் இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
அவள் வேலையில் சேர்ந்து ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாதத்தில் முதல் பதினைந்துநாட்கள் நல்லபடியாகத்தான் போயிற்று. மகா மகா என்று வாய் நிறைய கூப்பிட்டான். சிரித்தவாறே வேலை வாங்கினான். தப்பு செய்தான் மெதுவாக சுட்டிக்காட்டினான்.
பார்த்துக்க மகா… அடுத்த முறை இந்த தப்பு நடக்கக்கூடாது.
நடக்காது சார்… பார்த்துக்கறேன்.
தட்ஸ் குட்…எல்லாத்தையும் ரொம்ப சீக்கிரம் புரிஞ்சுக்குற மகா…தட்டிக்கொடுக்காத குறையாக சிரித்தான்.
கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் இது போல் நிம்மதியாக தானே போயிற்று…. அதன் பின் என்னவாயிற்று? என் இவ்வாறு சிடுசிடுக்கிறான்? என்ன தப்பு செய்தோம். நினைத்து நினைத்து பார்த்தாள். ஒன்றும் பிடிபட வில்லை. யாரிடம் இதை பற்றி பேசுவது என்றும் தெரியவில்லை.
அலுவலகத்தில் பத்து ஆண்களுக்கிடை9யே மூன்றே பெண்கள் தான் இருந்தனர். நான்காவதாக தான் இவள் போய் சேர்ந்தாள். இவளுக்கு அவனின் காரியதரிசி வேலை ஜானகி டெலிபோன் ஆபரேட்டர். கிட்டத்தட்ட இவள் வயதிருக்கும் குழந்தை யாக இருந;“த போது போலியோ வந்து வலது கால் சூம்பி போய் இழுத்து இழுத்து நடந்தாள். விஜயலட்சுமிக்கு கம்ப்யூட்டரில் வேஙைல. நல்ல கறுப்பு. ஆனால் கலையான முகம். திறமைசலி எனப் பேசி கொண்டார்கள். மூன்றாவது டெய்சி. உயரமும், வாளிப்புமாக ஜாதிக்குதிரை மாதிரி ஆபீஸை வலம் வருவாள்.
டெய்ஸி மேடம், டெய்ஸி மேடம் என்று எல்லோரும் அவளைச்சுற்றுவார்கள். எம்டி. யிடம் எத தேவை என்றாலும் சிபாரிசுக்கு டெய்ஸியிடம் தான் போவார்கள். என்ன மாயமோ? அவளிடம் கேட்டால் நடந்து விடுவதை இவளும் கவனித்திருக்கிறாள். இந்த மூன்று பேரிடமோ அல்லது அவுர்களில் ஒருவரிடமோ இது பற்றி பேசி விடுவது என்கிற முடிவுடன் தான் அன்று அவள் அலுவலகம் சென்றாள்.
அன்றும் அவனிடம் பைலடி முகத்தடி எல்லாம் வாங்கி கொண்டு பகல் சாப்பாட்டு நேரம் வரை காத்திருந்தாள். வழக்கமாக தன் மேஜைலேயே லஞ்ச் சாப்பிட்டு முடிப்பவள். டிபன் பாக்ஸூடன் அவர்கள் மூவரையும் தொடர்ந்து சாப்பாட்டு அறைக்க போனாள். அவள்களுடன் அமர்ந்துதன் சாப்பாட்டு டப்பாவை திறந்தாள்.
என்ன மகா… இன்னிக்கு எங்களோடு சாப்பிட வந்திருக்க?
ஜானகி தான் முதலில் ஆரம்பித்தாள்.
இல்ல.. உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும் என்று தயங்கினாள்.
நீ என்ன கேக்கப்போறேன்னு எங்களுக்கு தெரியும். நீயா கேட்கணும்னு தான் இத்தனைநாள் நாங்களும் பேசாமலிருந்தோம். விஜயலட்சுமி சொன்னாள்.
நான் கேட்கப்போறது உங்களுக்கு எப்படி தெரியும்?
அட அதையெல்லாம் நாங்களும் அனுபவிச்சவங்கதானே இது டெய்ஸி.
அப்படின்னா எம்.டி. உங்களை சிடுசிடுத்தாரா?
சிடுசிடுக்கிறது. பைல தூக்கி எறியுறது எல்லாம் எங்களுக்கும் தான் நடந்திச்சு.
ஆனா இப்போ.. உங்க யார்கிட்டேயும் கோவம் காட்டலையே.
நாங்க ஆறின கஞ்சி பழங்கஞ்சி. நீ தானே இப்ப பால்பயாசம்.
புரியலைப்பா..க்ஷ
அவருக்கு தர வேண்டியத நீ இன்னும் தரல. அதான் சிடுசிடுக்குறாரு. தந்தா சரியா போயிடுவாரு.
அவருக்கு தர என்கிட்ட என்ன இருக்கு?
ஜானகி? என்று அதிர்ந்தாள் அவள்.
கால்நொண்டியான என்னைகூட விடல. கால்தானே நொண்டி. ஆனா உடம்பு நல்லாத்தானே இருக்குன்னு கேட்டாரு. எந்த குறையுமில்லாம வேக வச்சு தோலுரிச்ச சேப்பங்கிழங்கு மாதிரி வெளை வெளேர்னு லட்சணமான இருக்குற நீ அவரை கண்டுக்காம இருந்தியானா விட்டுறுவாரா?
அவுள் மனது பதறிற்று. உள்ளுக்குள் துடித்தது.
அப்படியானால் அத்தனை கோபமும் அதற்காக? அதற்கு தானா…?
பின்ன வேற எதுக்கு? பார்க்க நல்லா இருக்கான். பணக்காரன் ஆபீசுக்கு சொந்தக்காரன். அப்படிப்பட்டவனை அவன்கிட்ட வேலை செய்யுற நீ கண்டுக்கலேன்னா தாங்குவானா? ஈகோ விட்டுறுமா?
ஆபீஸ் வேலை செய்யத்தானே வந்தேன்?
ஆபீஸ் வேலையில் இதுவும் அடக்கம்.
அப்படின்னா… நீங்கள்ளாம்?
மருட்சியோடு முகம் வெளிற குரல் கரகரகக்க கேட்டவளுக்கு டெய்ஸி பதில் சொன்னாள்.
இதப்பாரு மகா… நாங்க மூணு பேருமே வித்தான் வித் அவுட் இல்ல. இந்த சிவகுமார் மட்டுமில்ல மகா. ஆபீஸுக்கு ஆபீஸ் மகளிர் மட்டும் நாஸர்கள் இருப்பாங்க. ஆனா நாம ரேவதியோ, ஊர்வசியோ, ரோகிணியோ கிடையாது. அது படம். அவுங்களோடது நடிப்பு. ஆனா நம்முடையாது நிஜம். எப்போதும் கச்க்கும். சுடும். என்ற செய்சியின் குரல் இறங்கி தறுதறுத்ததைஉணர்ந்தாள் அவள்.
என்ன செய்யிறது மகா. வேலை அவசியம் தேவைன்னு தானே வர்றோம். வரும்போதே வீட்டு நிலைமையை கேட்டு தெரிஞ்க்கறாங்கல்ல… நம்ம தேவையும், இயலாமையும் புரியும்÷õபது அதை உபயோகிக்கப்படுத்திக்கறாங்க. வழி இல்லேன்னா விட்டு கொடுக்கணும். வழி இருந்திசுன்னா எட்டி உதைச்சிட்டு போகலாம்.
விட்டு ö காடுக்க போறியா அல்லது எட்டி உதைக்கபோறியான்றது உன்னை பொறுத்த விஷயம் மகா…
அன்று இரவு முழுதும் தூங்காமல் தவித்தாள். அவள் எப்படியாவது வேலையில் இருக்க வேண்டுமாஉ என்று தோன்றியது. ஏற்கனவே ஒரு வருடம் வீட்டில் இருந்தாயிற்று. படிப்பிற்கு சம்பந்தமற்ற நிழை வேலைகள் செய்தாயிற்று. விற்பனைபெண் வேலையெல்லாம் கூடபார்த்தாயிற்று. அங்கெல்லாம் கூட சின்னச் சின்னதா இது போன்ற தொந்தரவுகள் இருக்கதான் செய்தன. அவனர்கள் யாரும் முதலாளிகள் இல்லாத காரணத்தினால் முறைப்பிலும் அதட்டலிலும் அடக்க முடிந்தது. ஆனால் இங்கு முதலாளியே இப்படி செய்கிறபோது?
அவனுக்கு இணங்கி வேலையில் இருக்கதான் வேணடுமா?
அம்மாவிடம் சொன்னால் அரண்டு போவாள். ஏற்கனவே பத்து மாத வீட்டு வாடகை பாக்கி. சாமான்களை எடுத்து வெளியில் வைக்கிற நிலைமையில் கிடைத்த வேலை. உடனடியாக வேலையை காரணம் காட்டி வீட்டை தக்க வைத்து கொண்டாயிற்று. இப்போது வேலை இல்லை என்றால்? வீட்டின் சொந்தக்காரர் வாரி வெளியில் வீசத் தயங்க மாட்டார். ஜானகியும், விஜயலட்சுமியும், டெய்ஸியும் கூட இது போன்ற கங்கடங்களுக்காக்கதான்பெரிதான சங்கடத்தை சகித்து கொண்டிருக்கிறார்களோ? புது டெல்லியில் ஓடும் பஸ்ஸில் அந்த பெண்ணை சிதைத்ததற்கு இது போன்ற சிவகுமார்கள் வெளியில் தெரிய வராமல் ஏசி அறைக்குள் சிதைப்பதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? விழிகளின் ஓரம் நனைந்து தலையணையில் வழிந்தபோது பக்கத்து போர்ஷன் கடிகாரத்தில் மணி மூன்றடிப்பது கேட்டது.
மறு காலை முடிவு செய்ய இயலாத குழப்பத்துடனே அலுவலகம் கிளம்பினாள். டிபன் பாக்ஸை புடவைத் தலைப்பால் துடைத்து அவுளிடம் நீட்டிய அம்மா அவள் ளுமுகத்தை பர்த்து கொண்டே சொன்னாள்.
ரேஷன் அரிசி தீர்ந்துபோச்சு மகா. வீட்ல அஞ்சு பேர் சாப்பிடறோம். ஒன்னாம் தேதிக்கு மேலதான் மறுபடியும் ரேஷன் அரிசி கிடைக்கும். ஆபீஸ் போற போது நாடார் கடைல பத்து கிலோ அரிசிக்கு சொல்லிட்டு போ. சம்பளம் வாங்கினதும் பணம் தர்றதா சொல்லு.
அம்மாவை ஏறிட்டாள்.
என்ன மகா… பார்க்கற…?
ஒண்ணுமில்லம்மா. கதவை போட்டுக்க. மளிகை கடைல சொல்லிட்டு போறேன். என்று கூறியபோது போராட்டம் நின்று ஒரு முடிவிற்கு வந்தவளாக படியிறங்கி மெல்ல தெருவில் நடக்க ஆரம்பித்தாள் அவள்.
– ஆகஸ்ட் 2013