தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,964 
 
 

அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5

டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா ‘ரிசல்ட்டுகளை’ டாக்டா¢டம் கொடுத்தாள். டாக்டர் எல்லா ‘ரிசல்ட்டுக¨ளையும்’ வாங்கிப் பார்த்தார்.’ரிசல்ட்டுக¨ளை’ப் பார்க்கும் போது அவர் தன் நெற்றியை சுருக்கினார்.பிறகு டாக்டர் கணேசனை படுக்கச் சொல்லி விட்டு, ‘ஸ்டெத்’ வச்சு உடம்பு பூராவையும் ‘செக் அப்’ பண்ணி பார் த்தார்.அவருக்கு சந்தேகம் வலுத்தது.கொஞ்ச நேரம் யோஜனை பண்ணி விட்டு,பிறகு கணேசனை வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தார்.பிறகு கணேச னை எழுந்து போய் உட்காரச் சொல்லி விட்டு தன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டார்.கனேசனைப் பார்த்து ”உங்களுக்கு சிகரெட் குடிக்க்கிற பழக்கம் உண்டா”என்று கேட்டார் டாக்டர்.“எனக்கு அந்த பழக்கம் கிடையாது டாக்டர்”என்று பதில் சொன்னா ன் கணேசன்.”உங்க பல் எல்லாம் ரொம்ப கறை படிஞ்சு இருக்கு.உங்களுக்கு வெத்திலைப் பாக்குடன் புகையிலை போடும் பழக்கம் உண்டா”என்று கேட்டார் டாகடர்.

“எனக்கு வெத்திலைப் பாக்குடன் புகையிலைப் போடற பழக்கம் உண்டு டாக்டர்” என்றான் கணேசன்.“வெறும் வாயிலே புகையிலை போடும் பழக்கம் உண்டா”என்று டாக்டர் கேட்டதும் கணே சன் தன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு இருந்தான்.”அந்த பழக்கம் உண்டாங்க”என்று டாகடர் மறுபடியும் கோபமாகக் கேட்டார்.கொஞ்ச நேரம் கழித்து கணேசன் ”சில நேரங்களே கைலே வெத்திலைப் பாக்கு இல்லாம இருந்தா,நான் வெறும் வாயிலே புகையிலைப் போடுவேன் டாக்டர். அப்போ கொஞ்சம் சக்தி வந்தா மாதிரி இருக்கும்”என்று ஒத்துக் கொண்டான்.காயத்திரிக்கு கணேசன் சொன்னதை கேட்டவுடன் தூக்கி வாரிப் போட்டது.

டாக்டர் காயத்திரியைப் பார்த்து “அம்மா இவருக்கு வாயிலும்,தொண்டையிலும்,உணவுக் குழா யிலும் புத்து நோய் வந்து,அந்த புத்து நோய் ரொம்ப முத்திப் போய் இருக்கு.இவருக்கு உடனே ஆப ரேஷன் பண்ண வேண்டி இருக்கும்”என்று சொன்னதும் காயத்திரிக்கு உகலமே இருண்டு விட் டது போல இருந்ததது.’என்னடா இது,இந்த மாதிரி உடம்பு இவருக்கு வந்து இருக்கே.நாம என்னப் பண் ணப் போறோம்,இந்த உடம்பு வந்தா மனுஷாப் பிழைக்கறதே ரொம்ப கஷ்டம் ஆச்சே’ என்று நினைக் கும் போது அவளுக்கு அதள பாதாளத்தில் விழுவது போல இருந்தது.கனேசன் டாக்டர் சொன்னதை நம்பாமல் மறுபடியும் டாக்டரைப் பார்த்து “என்ன டாக்டர் எனக்குப் புத்து வியாதியா வந்து இருக்கு” என்று கலரவத்துடன் கேட்டான்.அதற்கு டாக்டர் “ஆமாம்,உங்களுக்கு புத்து வியாதி தான் வந்து இரு க்கு.இந்த வியாதி உங்களுக்கு வந்து கிட்டத் தட்ட பத்து வருஷத்துக்கு மேலேயே ஆகி இருக்கும் போல இருக்கு.இந்த வியாதி இப்போ ரொம்ப முத்திப் போய் இருக்கு.இந்த உடம்புக்கு உடனே ‘ஆபரேஷன்’ பண்ணாத் தான் குணம் ஆக வாய்ப்பு இருக்கு”என்று டாக்டர் சொன்னதைக் கேட்ட கணேச னுக்கு தேள் கொட்டியது போல இருந்தது.தன்னை சமாளித்துக் கொண்டு அந்த டாக்டரைப் பார்த்து “டாக்டர் இந்த உடம்புக்கு ஆபரேஷன் ஒன்னு தான் பண்ணா தேவலை ஆகுமா. மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தா உடம்பு குணம் ஆகாதா” என்று கேட்டாள் காயத்திரி.டாகடர் “அம்மா,இவர் உடம்பு ஆரம்ப காலத்து புத்து நோயா இருந்தா,நீங்க சொல்றா மாதிரி நான் இவருக்கு மருந்து மாத்திரைகள் எல்லாம் குடுத்து,இவரை குணப்படுத்தி இருப்பேன்.ஆனா இவருக்கு புத்து நோய் ரொம்ப முத்திப் போய் இருக்கு.இவர் மருந்து மாத்திரைகள் எல்லாம் சாப்பிட்டு வந்தா இவர் உடம்பு குணம் ஆக பல வருஷங்க ஆகலாம்.உடம்பு குணம் ஆகாமலும் போலாம்.நாம ‘ஆபரேஷ னுக்கு’ ‘டிலே’ பண்ணா, அதுக்குள்ளே இவர் உடம்பிலே இருக்கும் புத்து நோய் ரொம்ப முத்திப் போயிடிச்சின்னா இவர் உயிரு க்கே ஆபத்தா போயிடும். சீக்கிரமே இவருக்கு ஆபரேஷன் பண்ணா ரொம்ப நல்லது” என்று சொல்லி விட்டார்.காயத்திரிக்கும் கணேசனுக்கும் ஒன்னும் புரியாமல் டாகடரையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து காயத்திரி டாக்டரைப் பார்த்து “டாக்டர், நீங்க சொல்ற ஆபரேஷனுக்கு எவ்வளவு பணம் வேண்டி இருக்கும்”என்று கேட்டாள்.டாக்டர் அதற்கு “ரெண்டு லக்ஷம் ரூபாய் வேண்டி இருக்கும்ம்மா” என்று சொன்னார்.காயத்திரி டாக்டரைப் பார்த்து “டாக்டர்,நாங்க சமையல் வேலை பண்ணி பிழைச்சு வற குடும்பம்.எங்க கிட்டே நீங்க சொல்ற பணம் இப்போ இல்லே.நாங்க வெளியே போய் யோஜனைப் பண்ணட்டு உங்க கீட்டே வந்து சொல்றோம்” என்று சொல்லி விட்டு டாக்டர் ரூமை விட்டு கணேசனை வெளியே அழைத்து வந்தாள்.வெளியெ வந்த கணேசனும் காயத் திரியும் யோஜனைப் பண்ணினார்கள்.‘கடன் வாங்கி ஆபரேஷன் பண்ணுவது என்பது நம்மால் முடியா த காரியம்.வெறுமனே மருந்து மாத்திரைகள் மட்டும் வாங்கிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு வர வேண்டியது தான்’என்று முடிவு பண்ணினார்கள் இருவரும்.கொஞ்ச நேரம் ஆனதும் ரெண்டு பேரும் டாக்டர் ரூமுக்குள் போனார்கள். காயத்திரி டாக்டரைப் பார்த்து ”டாக்டர்,எங்க கிட்டே ஆபரேஷன் பண்ண ரெண்டு லக்ஷ ரூபாய் இப்போ இல்லே.நீங்க இவருக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் குடு ங்க.அவர் சாப்பிட்டு வரட்டும்.பணம் கிடைச்சதும் நாங்க ஆபரேஷன் பண்ணிக்க வரோம்” என்று சொ ன்னாள்.அந்த டாக்டர் “அம்மா,நான் நீங்க கேட்டா மாதிரி நான் மருந்து மாத்திரைகள் எழுதி தரேன். ஆனா இவைகளை மட்டும் இவர் சாப்பிட்டு வந்தா போதாது.அப்புறமா அவருக்கு ஏதாவது ‘ஏடாகூட மா’ ஆயிடிச்சின்னா என்னை ஒன்னும் சொல்லாதீங்க”என்று சொல்லி, டாக்டர் அவர் ‘லெட்டர் ஹெட் டில்’ நிறைய மருந்து மாத்திரைகளை எல்லாம் எழுதிக் கொடுத்து,தன் பீஸை வாங்கிக் கொண்டு காயத்திரியையும் கணேசனையும் வெளியே அனுப்பினார்.

டாக்டர் எழுதிக் கொடுத்த மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு,காயத்திரி கணேசனை அழைத்துக் கொண்டு,வீட்டுக்கு வரும் வழியில் டாகடர் எழுதி கொடுத்து இருந்த மாத்திரைகளை எல்லாம் வாங்கி கொண்டு வந்தாள்.வந்தது ம் வராததும் லதா அம்மாவை பார்த்து “டாக்டர் அப்பா வுக்கு என்ன உடம்புன்னு சொன்னார்”என்று கேட்டாள்.காயத்திரி கொஞ்ச நேரம் ஒன்னும் சொல்லா மல் இருந்தாள்.லதா அம்மாவை விடாமல் கேட்டு நச்சரித்துக் கொண்டு இருந்தாள்.

லதா நச்சரிப்பு தாங்காமல் காயத்திரி “அப்பாவுக்கு புத்து நோய் வந்து இருக்காம் லதா.அதுவும் ரொம்ப முத்தி இருக்காம்.அதுக்கு ஆபரேஷன் உடனே ஆபரேஷன் பண்ணி ஆகணுமாம்.அந்த ஆபரேஷனுக்கு ரெண்டு லக்ஷ ரூபாய் வேணும்ன்னு சொன்னார்.நான் அவரிடம் ‘எங்க கிட்டே அவ்வ ளவு பணம் இல்லே,நீங்க இவருக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் குடுங்க,நாங்க சாப்பிட்டு வரோம்’ ன்னு சொல்லி,அவர் எழுதி குடுத்த மாத்திரையை எல்லாம் வாங்கிண்டு வந்து இருகேன்” என்று சொல்லி விட்டு சமையல் ரூமுக்குப் போய் கணேசனுக்கு கொஞ்சம் காபி கலந்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.அப்பா வியாதியை கேட்டதும் அழுதுக் கொண்டு இருந்தாள் லதா.”அழாதே லதா,என்ன பண்றது.நிறைய பேர் வெத்திலை பாக்கோடபுகையிலை போடுவா.அதனால்லே நான் சும்மா இருந்து வந்தேன்.ஆனா அப்பாவுக்கு இந்த வெறும் வாயிலே புகையிலை போடற பழக்கம் இருக்குன்னு என க்குத் தொ¢யவே தொ¢யாதே”என்று சொல்லி வேதனைப் பட்டாள் காயத்திரி.லதா அப்பா கால்களை அமுக்கிக் கொண்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.

வாரத்தில் ரெண்டு நாளோ மூனு நாளோ காயத்திரிக்கு சமையல் பண்ணும் வேலை கிடைத்து வந்தது.அவள் அதை செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்துக் கொண்டு வந்துக் கொண்டு இருந்தாள். ஆத்தில் சும்மா இருந்த போது ‘சமையல் கலை’ புஸ்தகத்தை வாங்கி படித்து வந்தாள்.விலை உயர்ந்த புத்து நோய் மாத்திரைகளும்,குடும்ப செலவும்,காயத்திரியையும் கணேசனையும் அழுத்தி வந்தது.ஒரு நாள் போவதே ஒரு யுகமா இருந்தது.மிகவும் கஷ்டப்பட்டார்கள்.அதனால் கணேசன் மருந்து தீர்ந்தது ம்,மருந்து வாங்கி கொள்வதை நிறுத்தி விட்டான்.காயத்திரி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்.கணேசன் கேட்பதாய் இல்லை.கடைசியாக காயத்திரி “சரி,நீங்க மாத்திரை ஒன்னும் சாப்பிட வேணாம்.நீங்க இனிமே எங்கேயும் வேலைக்கும் போக வேணாம்.ஆத்தோடு இருந்து வாங்கோ.நான் வெளியே போய் சம்பாதிச்சுண்டு வரேன்.லதாவோடு ஆத்திலேயே இருங்கோ” என்று அழுது கொண்டே சொன்னாள்.

ரெண்டு வாரம் ஆகி இருக்கும்.காயத்திரி சமையல் வேலைக்குப் போகாமல் கணேசனை அழை த்துக் கொண்டு டாக்டா¢டம் காட்டப் போனாள்.டாக்டர் கணேசனை முழுக்க பா¢சோதனைப் பண்ணி னார்.பத்து நிமிஷம் பா¢சோதனைப் பண்ணீனவுடன் டாக்டர் “நான் குடுத்த ஒரு மாத்திரையும் இவர் உடம்பிலே வேலையே செய்யலெ.இவர் உடம்பு ரொம்ப மோசமா இருக்கு.நீங்க இவரை வீட்டுக்கு அழைச்சுகிட்டுப் போங்க”என்று சொல்லி விட்டார்.காயத்திரி வருத்ததுடன் கணேசனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.தினமும் பயந்துக் கொண்டே சமையல் வேலைக்குப் போய் வந்துக் கொண்டு இருந்தாள் காயத்திரி.அடுத்த நாள் காத்தாலே எழுந்த கணேசனுக்கு பல் தேய்க்க முடியவி ல்லை.அவனுக்கு மேல் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தது.பல் தேய்க்க ‘பிரஷ்ஷில்’ ‘பேஸ்ட்டை’ப் போட்ட கணேசன் மயக்கம் வரவே,அப்படி ‘தொப்’பென்று கீழே விழுந்து விட்டான்.கீழே விழுந்த கணேசன் தலையில் பலமாக அடிப்பட்டு நிறைய ரத்தம் போய்க் கொண்டு இருந்தது.கணேசன் கீழே விழுந்த சத்தம் கேட்டு ‘பாத்ரூமில்’ இருந்து ஓடி வந்தாள் காயத்திரி.

தரையில் ரத்த வெள்ளத்தில் கணேசன் கீழே விழுந்து கிடந்தான்.காயத்திரி உடனே லதாவைக் கூப்பிட்டு “லதா,அப்பா கீழே விழுந்து விட்டா.நீ உடனே ஒரு ஆட்டோவைக் கூப்பிட்டுண்டு வா” என்று கத்தினாள்.காயத்திரி தன் புடவையை கொஞ்சம் கிழித்து கணேசன் தலையில் அடிப்பட்ட இட த்தில் கட்டினாள்.ஆனால் ரத்தம் மட்டும் நிற்காமல் கசிந்துக் கொன்டே இருந்தது.காயத்திரி கணேச ன் தலையில் அடிப்பட்ட இடத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு இருந்தாள்.லதா வாசலுக்கு ஓடிப் போய் வாசலில் காலியாக போய்க் கொண்டு இருந்த ஆட்டோவை கூப்பிட்டாள்.ஆட்டோ வந்து நின்ற தும் காயத்திரி,லதா,ஆட்டோ டிரைவர்,மூனு பேரும் கணேசனை தூக்கி ஆட்டோவில் ஏற்றீ, ‘ஹாஸ்பி டலுக்கு’ ஓடினார்கள்.’ஹாஸ்பிடல்’ வாசலில் இருந்த ‘ஸ்ட்ரெச்சரில்’ கணேசனைப் படுக்க வைத்து உள்ளே கொண்டு போய் டாக்டா¢டம் காட்டினாள் காயத்திரி.டாக்டர் கணேசனை பா¢சோதனைப் பண்ணீ விட்டு “இவர் இறந்து போய் பத்து நிமிஷத்துக்கு மேலே ஆயிடுச்சி”என்று சொல்லி விட்டு ‘ஸ்டெத்தை’ தன் காதில் இருந்து கழட்டினார்.ஹாஸ்பிடல் என்று கூடப் பார்க்காமல் தலையில் அடித்துக் கொண்டு ‘ஓ’ என்று கதறி அழுதாள் காயத்திரி.

“என்னையும்,இந்த பதினெட்டு வயசு பொண்ணையும் இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போய் விட்டேளே.நான் என்ன பண்ணுவேன் பகவானே.நான் என்ன பண்ணுவேன் பகவானே”என்று கதறி னாள்.டாக்டர் காயத்திரி இடம் ‘பீஸ்’ ஒன்னும் வாங்கிக் கொள்ளாமல் கணேசன் இறந்து போனதற்கு ‘டெத் சர்டிபிகேட்’ கொடுத்து விட்டுப் போனார்.காயத்திரியும் லதாவும் போன ஆட்டோவிலேயே கணேசன் ‘பாடியை’ வீட்டுக்கு கொண்டு வந்தார்கள்.வழி நெடுக காயத்திரியும் லதாவும் வாய் விட்டு கதறி அழுதுக் கொண்டு வந்தார்கள்.இவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்த ஆட்டோ டிரைவர் கணேசன் ‘பாடியை’ மெல்ல பிடித்து வீட்டுக்குள் வைத்து விட்டு பணம் ஒன்னும் வாங்கிக் கொள்ளாமல் போய் விட்டான்.லதா அழுதுக் கொண்டே இருந்தாள்.தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் போட்டு ‘தன் கணவருக்கு எல்லாம் ‘காரியமும்’ பண்ணி முடித்தாள் காயத்திரி.

‘தன் பதினெட்டு வயது பெண்ணை எப்படி நாம வளத்து அவளுக்கு கல்யாணம் பண்ணப் போறோம்’என்று எண்ணி மனம் உடைந்துப் போனாள் காயத்திரி.’நிறைய கெட்டப் பேர்கள் நடமாடி வரும் இந்த உலகத்லெ நாம எப்படி இந்த கன்னிப் பொண்ணை வச்சு காப்பாத்தப் போறோம்’ என்ற கவலை காயத்திரியை அரித்து வந்தது.எங்கும் சமையல் வேலைக்குப் போகாமல் ஒரு வாரம் வெறும னே வீட்லே உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள் காயத்திரி.தன் அப்பாவுக்கு மொட்டையா ‘இப்போ இருக்கும் வீட்டுக்காரர் இந்த ஆத்தை காலி பண்ணச் சொன்னதாலே,தான் வேறே ஆத்துக்கு வாட கைக்கு போவதாயும்,அந்த ஆத்து விலாசத்தை அடுத்த கடிதத்தில் எழுதுவதாயும்’ எழுதிப் போட்டு விட்டு சும்மா இருந்து விட்டாள் காயத்திரி.கணேசன் இறந்து போன சமாசாரத்தை காயத்திரி தன் அப்பாவும் எழுதவே இல்லை.லதா அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி அவளை நார்மலுக்குக் கொண்டு வந்தாள்.

காயத்திரி தான் இருந்த வீட்டை காலி செய்து விட்டு,,குறைந்த வாடகைக்கு ஒரு சின்ன ‘போர்ஷனா’க வாடகைக்கு எடுத்துக் கொண்டு லதாவோடு இருந்து வந்தாள்.நாளாக நாளாக கையில் இருந்த பணம் செலவு ஆகிக் கொண்டு வந்தது.’இப்போ சாப்பாடுக்கு பணம் வேணுமே’ என்று தன் மனதைத் தேற்றிக் கொண்டு மறுபடியும் சமையல் வேலைக்குப் போக ஆரம்பித்தாள் காயத்திரி.எங்கே சமையலுக்கு காயத்திரி போனாலும் அந்த வீட்டுக்கு லதாவையும் கூடவே அழைத்துக் கொண்டு போனாள்.’தன் கூடவே லதாவை வைத்துக் கொண்டு வந்தால் பயம் இல்லை’ என்று அவள் எண்ணி னாள்.சமையல் வேலை கிடைக்காத மற்ற நாட்களில் அவள் லதாவோடு வீட்டில் சும்மா இருந்து வந் தாள்.’நாம ஒரு ‘சுமங்கலியா’ இருந்தா,யார் ஆத்து விஷேஷத்துக்கோ,இல்லை ஒரு பூஜைக்கோ போய் வரலாம்.அங்கே பாக்கிறவா கிட்டேலதாவுக்கு ஏற்றார் போல ஒரு பையன் கிடைப்பானா என்று கேட்க லாம்.ஆனா,அந்த பகவான் எனக்கு ‘இந்த கோலத்தை’க் குடுத்துட்டாரே.நான் யாரைப் போய் விசாரி க்க முடியும்.தவிர ஒரு கல்யாணம் பண்ண வேண்டுமானால் கையில் நிறைய பணம் வேணுமே’ என்று மன வேதனைப் பட்டுக் கொண்டு வந்தாள் காயத்திரி

காயத்திரி தன் வீட்டுக்கார மாமிடம் “எனக்கு சமையல் வேலை செஞ்சு ஏதாவது வீட்டு உங்களுக்குத் தொ¢யுமா.அப்படி தொ¢ஞ்சா கொஞ்சம் சொலுங்கோ”என்று கேட்டாள்.அந்த வீட்டுக் கார மாமியும் அவர் உறவுக்காரர்களைக் கேட்டு ஒரு இடம் தொ¢ந்ததும் காயத்திரியிடம் சொல்லி அந்த வீட்டு ‘அட்ரஸ்ஸையும்’ சொன்னாள்.காயத்திரி ,அந்த மாமியை ‘தாங்க்’ பண்ணி விட்டு லதாவை கூட்டிக் கொண்டு வீட்டுக்கார மாமி கொடுத்த ‘அடரஸ்ஸ¤க்கு’ப் போய் ‘காலிங்க் பெல்லை’ அழுத்தி னாள்.கதவைத் திறந்த ஒரு பெரியவர் “வாங்கோ.நீங்க தான் அந்த சமையல் கார மாமியா.உள்ளே வாங்கோ”என்று கூப்பிட்டு உள்லே வச் சொன்னார்.காயத்திரி லதாவை அழைத்துக் கொண்டு வீட் டுக்கு உள்ளெ போனாள்.ஒரு பெட்டில் உட்கார்ந்துக் கொண்டு இருந்த அந்த வீட்டுக்கார மாமி காய த்திரியைப் பார்த்து “உங்க கூடநிக்கற பொண்ணு யாரு”என்று கேட்டாள்.காயத்திரி “என் பொண்ணு தான்.என் கூட சமையல் வேலைக்கு வந்து இருக்கா”என்று சொன்னதும் உடனே அந்த வீட்டுக்கார மாமி “நன்னா இருக்கு.இந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கிற ஒரு வயசு பொண்ணை உங்க கூட அழைச்சுண்டு வந்து இருக்கேளே.எங்க ஆத்லே வயசு பசங்க இருக்கா.கல்யாணம் ஆகாத ஒரு மச்சி னர் வேறே இருக்கார்.நீங்க மட்டும் சமையல் வேலைக்கு வாங்கோ.இல்லாட்டா நீங்க வேணாம்”என்று சொன்னவுடன் காயத்திரி “நான் அவளை ஆத்லே தனியா விட்டுட்டு வர முடியாதே.அவ வயசு பொ ண்ணு இல்லையா”என்று அழமாட்டாத குலில் கேட்டாள்.”அப்போ நீங்க இந்த ஆத்லே சமையல் வேலைக்கு வேணாம்” என்று சொல்லி அனுப்பி விட்டாள் அந்த மாமி.வருத்தப் பட்டுக் கொண்டே காயத்திரி லதாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வந்தாள் கயத்திரி.

வீட்டுக்கு வந்த காயத்திரி லதாவைப் பார்த்து” லதா,நான் மட்டும் அந்த ஆத்துக்கு சமையல் வேலைக்குப் போனா,நீ இந்த ஆத்லே தனியா இருந்து வந்து,உனக்கு ‘ஏதாவது’ ஆயிடுத்துன்னா நான் என்ன பண்ணுவேன்.காலம் ரொம்ப கெட்டு இருக்கே”என்று அழ மாட்டாத குறையாக சொன்னாள்.லதா அம்மா படும் வேதனையைப் பார்த்து “அம்மா,எனக்கு புரியறது உன் தர்ம சங்கடம். என் னையும் கூட வச்சுக்க கூடிய ஒரு சமையல் பண்ற இடம் நமக்கு கிடைச்சா சரி.அப்படி கிடைக்காட் டா,நாம என்ன பண்ணப் போறோம்” என்று கேட்டாள்.காயத்திரி அதற்கு ஒன்னும் பதில் சொல்ல வில்லை.அவள் தன் மனதுக்குள் அவள் மாட்டி இருந்த அம்பாள் படத்தையும்,கணவர் படத்தையும் பார்த்து ‘நீங்க தான் ஒரு நல்ல வழி காட்டணும்’என்று சொல்லி வேண்டிக் கொண்டாள்.

மன வேதனையுடன் அன்று சாயங்காலம் காயத்திரி லதாவையும் அழைத்துக் கொண்டு அரு கில் இருந்த கோவிலுக்குப் போனாள்.கோவிலில் இருந்த பகவானை தா¢சனம் பண்ணி விட்டு ‘என க்கு எப்போ ஒரு விடிவு காலம் வரும் பகவானே.என் கஷ்டத்தை சீக்கிரமா போக்குப்பா.நான் ஒரு வயசுப் பொண்ணை வச்சுண்டு கஷடப் பட்டு வருவது உன் கண்ணுக்குத் தொ¢யலையா.இவளை நான் யார் கையிலாவது பிடிச்சு குடுக்க எனக்கு உதவி பண்ணு பகவானே.நான் இவளை தனியா ஆத் லெ விட்டுட்டு போக பயமா இருக்கே.அவளையும் கூட அழைச்சுண்டு போகிற ஒரு இடமா எனக்குக் காட்டு’என்று வேண்டிக் கொண்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி ‘நம்ம குடும்பக் கஷ்டத்தை இந்த கோவில் குருக்கள் கிட்ட சொல்லிட்டு,அவர் கிட்ட சமையல் வேலைக்கு யாராவது கூப்பிட்டா கொஞ்சம் சொல்ல முடியுமான்னு கேப்போம்’ என்று நினைத்து கோவில் குருக்களிடம் தன் கதையைச் சொல்லி “மாமா,உங்களே யாராவது முழு நாள் சமையல் வேலைக்கு கேட்டா எனக்கு சொல்லுங்க. நான் அவாத்திலே சமையல் வேலை செஞ்சு வரேன்”என்று சொல்லி விட்டு லதாவையும் அழைச்சு ண்டு கோவிலை பிரதக்ஷணம் பண்ண ஆரம்பித்தாள்.

அப்போது கோவில் வாசலில் படகுப் போல ஒரு காரில் இருந்து ஒரு நடுத்தர வயது தம்பதிகள் இறங்கி வந்தார்கள்.அவர் உடுத்தி இருந்த பட்டு வேஷ்டியும்,அந்த அம்மா கட்டி இருந்த விலை உயர் ந்த பட்டுப் புடவையும்,அவர்கள் பெரிய பணக்காரர்கள் என்பதை பறை சாற்றிக் கொண்டு இருந்தன. அவர்கள் இருவரும் பாதி தூரம் கூட கோவிலுக்குள் வந்து இருக்க மாட்டார்கள்.கோவில் குருக்கள் ஓடிப் போய் அவர்கள் இருவரையும் பெரிய நமஸ்காரம் போட்டு கோவிலுக்குள் அழைத்து வந்து அவர் கள் கொண்டு வந்து இருந்த மாலைகள்,ஒரு தாம்பாளம் நிறைய வெத்திலை,பாக்கு,தேங்காய்,எல்லா வற்றையும் மா¢யாதையாக வாங்கிக் கொண்டு,மாலைகளை சுவாமிக்கு சாத்தி விட்டு,பிறகு சுவாமிக்கு உரக்க மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்தார்.தேங்காயை உடைத்து,சுவாமிக்கு ‘நைவேத்யம்’ பண்ணீ னார்.மற்றவர்களுக்கு வெறுமனே எரிந்து கொண்டு இருக்கும் தீபத்தை காட்டி வரும் அந்த குருக்கள், ஒரு பெரிய கற்பூரக் கட்டியை ஏற்றி சுவாமிக்குக் காட்டி விட்டு,பிறகு அவர்களுக்குக் காட்டி,அவர்கள் கொண்டு வந்த தாம்பாளத்தில் உடைத்த தேங்காய்,நிறைய பூ,பிரசாதம் எல்லாம் எல்லாம் கொடுத்து விட்டு,பவ்யமாக நின்றுக் கொண்டு இருந்தார்.அவர்கள் அந்த பிரசாதத்தை எடுத்து கொண்டார்கள். அந்த பணகாரர தன் கனத்த பர்ஸைத் திறந்து ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து குருக்கள் தட்டி ல் போட்டார்.குருக்களும் பல் முப்பத்திரண்டும் வெளியே தெரிய,அந்த ஐநூறு ரூபாய் நோட்டை எடு த்து தன் இடுப்பில் மடித்து வைத்துக் கொண்டு மீண்டும் அவர்களுக்கு நமஸ்காரம் சொன்னார்.

குருக்கள் கொடுத்த விபூதி,குங்கும,பிரசாதத்தை நெத்தியில் இட்டுக் கொண்டு விட்டு அந்த பணக்கார மாமி “குருக்களே,எங்க ஆத்துலே சமையல் பண்ணிண்டு இருந்த மாமி,அவ பையனுக்கு ஒரு IT.கம்பனியில் நல்ல வேலை கிடைச்சு,அவனோடு திருவான்மியூர் போயிட்டா.உங்களுக்கு யாராவது ஒரு நல்ல சமையல்கார மாமியை தொ¢ஞ்சா எனக்கு சொல்லுங்க”என்று கேட்டாள்.உடனே குருக்கள் “நான் பேஷா சொல்றேன் மாமி.இப்ப தான் ஒரு மாமி என்னை முழு நேர சமையல் வேலை கேட்டுண்டு இருந்தா.சித்தே இருங்கோ.அவா இங்கே இருக்காளான்னு நான் பாத்துச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு கொஞ்சம் வெளியே வந்துப் பார்த்தார்.காயத்திரி அப்போது தான் ஒரு பிரதக்ஷ¢ ணம் பண்ணி விட்டு பிரகாரம் முன்னால் வந்துக் கொண்டு இருந்தாள்.உடனே குருக்கள் கையைத் தட்டி “மாமி,மாமி” என்று குரல் கொடுத்து காயத்திரியை கூப்பீட்டார்.காயத்திரியும் குருக்கள் கையை த் தட்டிக் கூப்பிடுவதைப் பார்த்து குருக்களிடம் வந்தாள்.உடனே அந்த குருக்கள் காயத்திரியை அந்த பணக்கார மாமிக்குக் காட்டி”இவா தான் ‘யாராவது முழு நேர சமையல் வேலைக்கு கேட்டா எனக்கு சொல்லுங்க’ன்னு என்னை சத்தே முன்னே தான் கேட்டா”என்று காயத்திரியை அந்த பணக்கார மாமிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

நெத்தியில் வெறும் விபூதி மட்டும் பூசி இருந்த காயத்திரியைப் பார்த்த அந்த பணக்காரா¢ன் மணைவி “நீங்க எங்க ஆத்லே முழு நேர சமையல் வேலைக்கு வர முடியுமா.இந்த பொண்ணு உங்க பொண்ணா.உங்க ஆம் எங்கே இருக்கு”என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.”நான் முழு நேர சமை யல் வேலைக்கு வர முடியும்.எங்க ஆம் இங்கே தான் பழைய மாம்பலத்தில் இருக்கு.இவ என் பொண் ணு தான்.இவ பேர் லதா”என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்து இருந்தாள் காயத்திரி.உடனே தன் விசிடிங்க் கார்ட்டைக் கொடுத்து,தன் விலாசத்தைக் காட்டி”நீங்க நாளைக்கு காத்தாலே ஒரு ஏழு மணி வாங்கோ.நான் எங்காத்து வேலை எல்லாம் சொல்லி சம்பளமும் சொல்றேன்”என்று சொல்லிவிட்டு விருட்டென்று தன் கணவரோடு போய் காரில் ஏறிப் போய் விட்டாள் அந்த பணக்கார அம்மா. காயத்திரிக்கு ரொம்ப சந்தோஷம்.’ஒரு நாள் வேலைக்கும்,ரெண்டு நாள் வேலைக்கும் போய் வந்து நம்ம வயத்தை கழுவி வந்த நமக்கு,இப்போ மாச சம்பளம் குடுக்கற வீடா கிடைச்சதே’ன்னு எண்ணி மகிழ்ந்துப் போனாள்.உடனே அந்த கோவில் குருக்களுக்கு தன் நன்றியை தொ¢வித்து விட்டு வந்த பணக்காராளை பத்தி விவரம் கேட்டாள் காயத்திரி.

“இவா ஆத்துக்கு என் பெரிய அண்ணா தான் ஆத்து வாத்தியார்.ரெண்டு ‘பிலாஸ்டிக் பாக்டா¢ கள்’ வச்சு இருக்கும் பணக்காரார். அவாளுக்கு ரெண்டு பையன்க இருக்கா.ரெண்டு பேரும் ரெட்டை க் குழந்தைகள்.மூத்தவன் பேர் சுரேஷ்.இளையவன் பேர் ரமேஷ்.இதில் ஆச்சரியம் என்னன்னா சுரேஷ் நல்ல தெய்யவ பக்தியோடும் நல்ல சுபாவம் உள்ளவன்.ஆனா ரமேஷ் அத்தனைக்கத்தனை பொல்லா தவன்.சதா அவன் ‘ப்ரண்ட்ஸ்களுடன்’ எப்போதும் ஊர் சுத்திண்டு இருப்பான்.அவனுக்கு எல்லா கெ ட்ட வழக்கமும் உண்டு.ரெண்டு பேரும் அமெரிக்காலே MS.இந்த வருஷம் தான் பாஸ் பண்ணி இருக் கா.அப்பா ‘பிஸினஸை’ப் பாத்துக்க இந்தியா திரும்பி வந்துட்டா.அந்த மாமாவும் அந்த மாமியும் ரொம்ப நல்லவா.உங்களுக்கு நிறை ய சம்பளம் தருவா.அவாளுக்கு மாம்பலத்லே பனகல் பார்க்குக்கு பக்கத்திலே பெரிய பங்களா இருக்கு. நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி தான்”என்று அந்த பணக்காரா¢ன் பூரா கதையும் சொல்லி விட்டு தன் பொக் கை வாயால் சிரித்தார் குருக்கள்.”ரொம்ப ‘தாங்க்ஸ்’ மாமா. நான் அவாத்துக்கு நாளை காத்தாலே போய் பாக்கறேன்”என்று சொல்லி விட்டு லதாவையும் அழைத் து கொண்டு கோவிலில் மீதி பிரதக்ஷணங்களை பண்ண ஆரம்பித்தாள் காயத்திரி. பிரதக்ஷணம் பண்ணிக் கொண்டே அவள் பகவானுக்கு தன் நன்றியைச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

வீட்டுக்கு வந்த காயத்திரி லதாவைப் பக்கத்தில் விட்டுக் கொண்டு படுத்தாள்.அவளுக்குத் தூக்கமே வரவில்லை.புரண்டு புரண்டுப் படுத்துக் கொண்டு இருந்தாள். ‘நமக்கு அந்த ஆத்லே வேலை கிடைக்குமா.லதாவை நான் என் கூட வச்சுக்க அந்த பணக்கார மாமி ஒத்துக்கணுமே.அவா ஆத்லேயும் ரெண்டு வயசு பசங்க இருக்கான்னு அந்த குருக்கள் சொன்னாரே.இல்லே முன்னே போன ஆத்லே சொன்னா மாதிரி ‘நீங்க மட்டும் சமையல் வேலைக்கு வாங்கோ.உங்க பொண்ணு வரவேணம்’ ன்னு சொல்லிடுவாளா.அந்த அம்மா.ரொம்ப பணக்காரா ஆச்சே.என் சமையல் அவாளுக்குப் பிடிச்சி இருக்குணுமே’ என்று என்னவெல்லாமோ எண்ணிக் கொண்டு இருந்தாள் காயத்திரிக்கு.லதா மட்டும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள்.’இந்த பொண்ணை நாம நல்ல ஒரு பையன் கையிலே பிடிச்சி தரணுமே.நமக்கு யார் நல்ல பையணாக பாத்து சொல்லப் போறா.நமக்கு உறவுகாரான்னு யாரும் இல் லையே’என்று நினைத்து மிகவும் வருத்தப் பட்டாள் அவள்.’இந்த மாதிரி தானே என் அப்பாவும் எனக்கு ஒரு நல்ல பையணா கிடைக்கணுமேன்னு அடிக்கடி சொல்லி வந்தார்.அவர் அதிர்ஷ்டம் நல்ல பையணா பகவான் ‘அவர்’ ரூபத்தில் நம்மாத்துக்கு அனுப்பி வச்சார்.அவர் வேலை சுலபமாக போயிட் டது.அவர் கஷ்டப் படலே.என்னைக் கல்யாணம் பண்ணிக் குடுத்துட்டு அவர் அக்கடான்னு காசிக்கு போயிட் டார்.ஆனால் ‘இவரோ’ ஒன்னும் பண்ணாம,என்னையும்,இந்த பதினெட்டு வயசு பொண் ணையும் இப்படி அனாதையா தவிக்க விட்டுட்டு பரலோகம் போய் சேர்ந்துட்டார்’ என்று கணேசனை நொந்துக் கொண்டு படுத்துக் கொண்டு இருந்தாள் காயத்திரி.

பக்கத்து வீட்லே வெங்கடேஸ்வர சுப்ரபாதம் பாட்டு சத்தம் கேக்கவே அலறி புடைத்துக் கொ ண்டு எழுந்தாள் காயத்திரி.எழுந்து மணியைப் பார்த்தாள்.அது ஐந்தரை காட்டியது.படுக்கையை விட்டு எழுந்து காயத்திரி தன் கைகளை உரசி தேய்த்து கொண்டு,தன் கைகளைப் பரப்பிப் பார்த்து ‘அம்மா தாயே, எல்லாம் நல்லபடி போய் எனக்கு அந்த பணக்காரா ஆத்லே சமையல் வேலை கிடைக்க அனுகிரஹம் பண்ணும்மா”என்று மனதில் வேண்டிக் கொண்டாள்.பல் தேய்த்து கொண்டு பாலைக் காய்ச்சி,நேற்று காபி குடித்து விட்டு, மீதி வைத்து இருந்த டிக்காக்ஷனில் தனக்கு ஒரு டம்லா¢ல் காபி போட்டு குடித்து விட்டு,குளிக்க போனாள் காயத்திரி.குளித்து விட்டு,தன் பழைய துணிகளை எல்லாம் துவைத்து எடுத்து கொண்டு வந்து கொடியில் போட்டு விட்டு,வேறே ஒரு புடவையை கட்டிக் கொண்டு ரெடி ஆனாள் காயத்திரி.”லதா,லதா,எழுந்திரு மணி ஆறடிச்சுட்டது.எழுந்து பல் தேச்சு காபி குடிச்சுட்டு,சீக்கிரமா குளிச்சுட்டு வா”என்று கத்தினாள் காயத்திரி.அம்மா கத்துவதைக் கேட்ட லதா வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.எழுந்து அம்மா போட்டுக் கொண்டு இருந்த பாய்,தன் பாய், இருவருடைய தலையணை,போர்வைகளை எல்லாம் எடுத்து வைத்து விட்டு,பல் தேய்த்து விட்டு வழக்கம் போல அவள் தனக்குக் காபி போட்டு குடித்து விட்டு,தன் துணிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு குளிக்கப் போனாள்.

குளித்து விட்டு, நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு “அம்மா நான் ரெடி” என்றும் குரல் கொடு த்தாள் லதா.ரெடியாக இருந்த காயத்திரி லதாவை தன் கூட நிற்க சொன்னாள்.தன் கணவர் படத்தி ன் முன்னாலே நின்றுக் கொண்டு ”நான் அந்த புது ஆத்துக்கு முழு நேர சமையல்காரி வேலை கேட்டு போயிண்டு இருக்கேன்.நீங்க தான் தெய்வமா இருந்து அந்த பணக்கார அம்மா மனசிலே பூந்து இந்த வேலை எனக்குக் கிடைக்கும் படி பண்ணனும்”என்று வேண்டி கொண்டாள்.அவள் கண்கள் குளமா யிற்று.தன் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.லதாவும் தன் புடவை தலைப்பால் தன் கண்களை துடைத்து கொண்டாள்.பிறகு இருவரும் கிளம்பி ‘பஸ் ஸ்டாப்புக்கு’ப் போய் பஸ் வந்ததும் ஏறிக் கொண்டு பனகல் பார்க் ‘பஸ் ஸ்டாப்புக்’கு டிக்கட் வாங்கிக் கொண்டார்கள்.பஸ்ஸை விட்டு கீழே இறங்கியதும் காயத்திரி அங்கே இருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் அந்த ‘விஸிடிங்க கார்டை’க் காட்டி“இந்த விலாசதுக்கு போப்பா” என்று சொன்னாள்.ஆட்டோ டிரைவர் அந்த பங்களா முன் போய் நிறுத்தினான்.பெரிய காம்பவுண்ட் சுவருக்கு உள் அந்த பங்களா இருந்தது.

தான் வந்த விஷயம் ஞாபகம் வரவே ‘விஸிடிங்க் கார்ட்டை’ வாசலில் நின்றுக் கொண்டு இருந்த கூர்க்காவிடம் காட்டி“நான் இந்த வீட்லே சமையல் வேலைக்கு வந்து இருக்கேன்.இந்த வீட்டு அம்மா தான் இந்த ‘விஸிடிங்க கார்ட்டை’க் குடுத்து என்னை இன்னிக்கு காலைலே வர சொல்லி இருக்காங்க. நான் உள்ளே போகட்டுமா”என்று கேட்டாள் காயத்திரி.கூர்க்கா காயத்திரி கையில் இருந்து அந்த ‘விஸிடிங்க் கார்ட்டை’ வாங்கிப் பார்த்து விட்டு “கொஞ்சம் இருங்க.நான் அவங்களை கேட்டு விட்டுச் சொல்றேன்” என்று சொல்லி விட்டு அவன் அங்கு இருந்த ‘போனை’ கையில் எடுத்து போன் பண்ணி னான்.அடுத்த பக்கத்தில் இருந்து அந்த வீட்டுக்கார அம்மா காயத்திரியை உள்ளே அனுப்பச் சொல்ல வே அந்த கூர்க்கா காயத்திரியையும் லதாவையும் உள்ளே போக அனுமத்தித்தான்.

பயந்துக்கொண்டே காயத்திரியும் லதாவும் பங்களாவுக்குள் போனார்கள்.அவர்கள் வாசல் கதவுக் கிட்டே போவதற்கும் அந்த பணக்கார அம்மா கதவை திறப்பதற்கும் சரியாக இருந்தது. “உள்ளே வாங்கோ” என்று சொல்லி விட்டு அந்த அம்மா உள்ளே போனாள்.உள்ளே போன காயத்திரி யும் லதாவும் அந்த ஹாலைப் பார்த்தார்கள்.அந்த பெரிய ஹால் சினிமாவில் வரும் ஹாலைப் போல் இந்த கோடிக்கும் அந்த கோடிக்கும் இருந்தது.ஹாலில் நாலு ஐந்து சோபாக்கள் போடப் பட்டு இருந் தது.தரை பூராவும் கனமான கம்பளங்கள் போடப் பட்டு இருந்தன.சுவற்றில் பெரிய புலி தலைகள், மான் தலைகள்,காட்டு எருமையின் தலைகள்,தொங்கிக் கொண்டு இருந்தன.பெரிய விளக்குகள் நாலைந்து எரிந்துக் கொண்டு இருந்தது. “உங்க பேர் என்ன”என்ற கம்பீரமான குரலைக் கேட்டவுடன் ஹாலைச் சுத்திப் பார்ப்பதை நிறுத்தி விட்டு “என் பேர் காயத்திரி,இவ என் பொண்ணு.பேர் லதா” என்று சொல்லி விட்டு புலியின் முன்னால் நிற்கும் ஆடு போல் நின்றுக் கொண்டு இருந்தாள் காயத் திரி.இருவரையும் மேலும் கீழும் பார்த்தாள் அந்த பணக்கார அம்மா லலிதா.”நான் உங்க ரெண்டு பே ரையும் வேலைக்கு வரச் சொல்லலையே.ரெண்டு பேரும் வந்து இருக்கேளே” என்றாள் லலிதா. காயத் திரிக்குபயம் வந்து விட்டது.’அந்த ஆத்லே கேட்டா மாதிரியே இந்த அம்மாவும் கேக்கறாளே’ என்கிற பயம் வந்தது.மெல்ல ¨தா¢யத்தை வர வழைத்துக் கொண்டு ”இல்லே,நான் தான் சமையல் வேலைக்கு வந்து இருக்கேன்.இவ என் கூடவந்து இருக்கா.எனக்குக் கூட மாட ஒத்தாசை பண்ணு வா.நீங்க எனக்கு மட்டும் சம்பளம் தந்தா போறும். இவளுக்கு நீங்க சம்பளம் ஒன்னும் தர வேணாம்” என்று பயந்துக் கொண்டே சொன்னாள் காயத்திரி.

கொஞ்ச நேரம் ஆனதும் “என் ஆத்துக்காரர் நாலு மாசத்துக்கு முன்னால் தான் உடம்பு வந்து திடீர்ன்னு காலமாகிட்டார்.அவர் தவறிப் போனதில் இருந்து,நான் என் இந்த வயசுப் பொண்ணை, ஆத்லே தனியா விட்டுட்டுப் போறதில்லே.எங்கே போனாலும் கூடவே அழைச்சுண்டு போறேன்.நான் போற இடத்திலே எனக்கு உதவி பண்ணுவா இவ.இவளை தனியா ஆத்லே விட்டுட்டு போக எனக்கு பயமா இருக்கு” என்று பயந்துக் கொண்டே சொன்னாள்.லதாவை மேலும் கீழுமாய் பார்த்தாள் லலிதா. தங்க விகரகம் போல அழகு பொம்மை போல் நின்றுக் கொண்டு இருந்தாள் லதா.‘இவ்வளவு அழகான பொண்ணா ஒரு ஏழை சமையல்கார மாமிக்கு’என்று எண்ணி அசந்து விட்டாள் லலிதா “ரொம்ப அழகா இருக்காளே. சீக்கிரமா இவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணிடு” என்று சொன்னாள் லலிதா.”சரி மாமி.நான் இவளுக்கு சீக்கிரமே ஒரு கல்யாணத்தை பண்ணிடறேன்” என்று சொன்னாள் காயத்திரி.

“நீ என்னை மாமின்னு எல்லாம் கூப்பிட வேணாம்.இனிமே நீ என்னை மேடம்ன்னு கூப்பிடு. இந்த ‘மாமி’,’சாமி’ எல்லாம் வேணாம் புரியறதா”என்றாள் கண்டிப்பான குரலில்.“சரி மேடம்” என்றாள் காயத்திரி.”எங்க ஆத்துக்கு நீ வேலைக்கு வறதுக்கு முன்னாடி,நீங்க ரெண்டு பேரும்,நன்னா குளிச்சு ட்டு,தோச்ச புடவை கட்டிண்டு வரணும்.குளிக்காம வரக் கூடாது.இது கண்டிஷன் ஒன்னு.ரெண்டா வது கண்டிஷன் எந்தப் பொருளையும் திருட கூடாது.மூனாவது கண்டிஷன் பொய் சொல்லகூடாது. இந்த மூனும் எனக்குப் பிடிக்காது புரியறதா காயத்திரி” என்றாள் லலிதா.“சரி மேடம்,நானும் என் பொ ண்ணும் இந்த மூனு கண்டிஷனுக்கும் ஒத்துக்கறோம்” என்று சொன்னாள் காயத்திரி.

“எங்க ஆத்லே நான் அவர்,ரெண்டு பையங்க நாலு பேர் தான் இருக்கோம்.எங்க ஆத்துக்கு வரு வோர் போவோர் ஜாஸ்தி.அவா வந்தா காபி,டிபன்,எல்லாம் பண்ணித் தரனும்.சமையல் வேலைக்கு சரியா ஏழு மணிக்கு எல்லாம் வரணும்.லேட்டா வரக் கூடாது.எங்களுக்கு காத்தாலே,நீ வந்தவுடன் காபிப் போட்டுக் குடுக்கனும்.நான் குடுக்கும் ‘மெணு’ படி காலைலே ‘டிபன்’ செய்யனும்.அப்போ எல்லோருக்கும் காபித் தரணும்.மத்தியானம் வித விதமான சாப்பாடு பண்ணனும்.சாயங்காலம் ‘டிபனும்’,டீயும்,பண்ணனும்.ராத்திரி சாப்பாடே கூடாது. சூப்,சாலட்,சப்பாத்தி,டால்,வெஜிடபில் ரைஸ்,தயிர் சாதம் பண்ணனும்.இவை எல்லாம் பண்ண தேவையான காய்கறக,மளிகை சாமான்க, எல்லாம் வாங்கி வர ஒரு ஆறுமுகம்ன்னு ஒரு ஆள் இங்கே எப்போவும் இருப்பான்.உனக்கு நான் பத் தாயிரம் ரூபாய் மாச சம்பளம் தரேன்.உன் பொண்ணுக்கு நான் ஒரு சமபளவும் தர மாட்டேன்.நான் சொன்ன எல்லா சமையலும் உனக்கு சமைக்க தெரியுமா” என்று கேட்டாள் லலிதா.அந்த மேடம் சொன்ன சமையலைக் கேட்டதும் காயத்திரி ஒரு நிமிஷம் அசந்து விட்டாள்.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *