தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 4,651 
 

அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30

அந்த வாத்தியார் “நீங்க பாவம் இந்த ஒரு காலை வச்சுண்டு,அக்குள் கட்டையையும் வச்சுண்டு,ரொம்ப சிரமப்பட்டு ரொம்ப சிரத்தை யா எல்லா ‘ஸ்ராதத’ காரியங்களையும் செஞ்சு முடிச்சேள்.உங்க சிரத்தையை நான் ரொம்ப பாராட்டறேன்”என்று சந்தோஷமாக சொன்னார்.

உடனே ரமேஷ் அந்த வாத்தியாரைப் பார்த்து ‘வாத்தியார்,நான் காசிலே இறந்துப் போகும் ‘அனாதை பிணங்களுக்கு’ ‘ஸ்மஸ்காரம்’ பண்ண பணம் கட்டணும்ன்னு ரொம்ப ஆசைப் படறேன், அதுக்கு நான் என்ன பண்ணணும்”என்று கேட்டான்.உடனே அந்த வாத்தியார் “சார்,சங்கர மடத்லே அதுக்கு ஒரு ‘ஆபீஸ்’ இருக்கு.நீங்க அங்கே போய் விசாரிச்சா,அவா உங்களுக்கு உதவி பண்ணு வா”என்று சொன்னார்.ரமேஷ் அந்த ஆபீஸ்க்குப் போய் அங்கே இருந்த அதிகாரியிடம் “சார்,நான் காசிலே இறந்துப் போகும் ‘அனாதைப் பிணங்களை’எல்லாம் ‘சம்ஸ்காரம்’ பண்ண ஆசைப்படறேன். அதுக்கு நீங்க எனக்கு உதவி பண்ணுவேளா”என்று கேட்டான்.உடனே அந்த ஆபீசர் “சார்,அந்த மாதிரி பண்ணத் தான் நாங்க இந்த ஆபீஸைத் திறந்து இருக்கோம்”என்று சொன்னார்.ரமேஷ் ரொ ம்ப சந்தோஷப் பட்டு அவரை பார்த்து “ரொம்ப தாங்ஸ் சார். ஒரு ‘அனாதை பிணத்தை’ ‘சம்ஸ்காரம்’ பண்ண என்ன செலவு ஆகும்”என்று கேட்டான்.அவர் “ஒரு ‘ஆனாதை பிணத்தை’ சரியாக ‘சம்ஸ்கார ம்’ பண்ண இருபதாயிரம் ரூபாய் ஆகும்”என்று சொன்னார்.அந்த ஆபீசர் அப்படி சொன்னவுடனே ரமேஷ் ”நான் அந்த மாதிரி நூறு ‘அனாதை பிணங்களை’ ‘சம்ஸ்காரம்’ பண்ண ஆசைப் படறேன் இந்தாங்கோ அதுக்கு ரெண்டு கோடி ரூபாய்க்கு ‘செக்’ ”என்று சொல்லி ரெண்டு கோடி ரூபாய்க்கு ஒரு செக்கை எழுதி அவா¢டம் கொடுத்து அதுக்கு உண்டான ரசீதையும் வாங்கிக் கொண்டான்.

மடத்தில் சாயங்காலத்தில் வேத பாராயணம் பண்ணிக் கொண்டு இருப்பதை கேட்க ரமேஷ் தினமும் போக ஆரம்பித்தான்.அவனுக்கு மனசு ரொம்ப நிம்மதியாக இருந்தது.ஒரு நாள் மடத்தில் ரமேஷ் வேத பாராயணம் கேட்டு வந்துக் கொண்டு இருந்த போது அங்கே ஒரு வயாசான கிழவர் படுத்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ரமேஷ் அங்கே இருந்த ஒரு சிப்பந்தியை பார்த்து “யார் இந்த கிழவர்”என்று விசாரித்தான்.அதற்கு அந்த சிப்பந்தி ரமேஷிடம் ”இவர் மடத்லே ரொம்ப வருஷமா ‘ஸ்வீட் மாஸ்டரா’ வேலை பண்ணிண்டு இருந்தார்.இப்போ வயசு ரொம்ப ஆயிவிடவே,அவராலே ஒரு காரியமும் பண்ண முடியறதில்லே.அவருக்கு வயசு இந்த தீபாவளீ வந்தா சரியா நூத்தி மூனு ஆறது. அவர் ரொம்ப முடியாம படுத்துண்டு இருக்கார்”என்று சொன்னான்.‘இந்த கிழவருக்கு இந்த தீபாவளி வந்தா நூத்தி மூனு வயசு ஆகப் போறதா.இன்னும் தீபாவளி வர மூனு நாள் தானே பாக்கி இருக்கு. இவர் நிச்சியமாக அது வரைக்கும் உயிரோடு இருந்து வருவார்” என்று நினைதான் ரமேஷ்.வேத பா ராயணத்தைக் கேட்டுக் கொண்டே ரமேஷ் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.‘நம்ம மாமியார் அவருடைய அப்பா காசிக்குப் போய் சங்கர மடத்லே ஒரு ‘ஸ்வீட் மாஸ்டரா’ வேலைக்கு சேந்துட்டார்’ என்று சொன்னது ஞாபகம் வந்தது.ரமேஷ் அந்தப் பெரியவா¢டம் போய் பக்கத்தில் ஒரு சேரில் உட்கார்ந்துக் கொண்டான்.

பிறகு நிதானமாக அவரைப் பார்த்து “நமஸ்காரம் மாமா,என் பேர் ரமேஷ்.நான் சென்னைலே ரொம்ப வருஷம் பணக்கார வாழ்க்கையை வாழ்ந்துட்டு இப்போ என் கடைசி காலத்தே காசிலே கழிக் கலாம்ன்னு நினைச்சு காசிக்கு வந்து இருக்கேன்.உங்களுக்கு ‘விசு’ன்னு ஒரு ‘ஸ்வீட் மாஸ்டரை’ தெரியுமா.ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அவர் காசிக்கு வந்து சங்கர மடத்லே ‘ஸ்வீட் மாஸ்டரா’ வேலைப் பண்ணிண்டு இருந்தாராம்”என்று சொன்னவுடன்,அந்த பெரியவர் மெல்ல ஈசி சேரில் இரு ந்து எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்துக் கொண்டார்.அவர் தன் சுருங்கிய கண்களை அகல விரித்து ரமே ஷைப் பார்த்து “நீ அந்த ‘ஸ்வீட் மாஸ்டர்’ பேர் என்னன்னு சொன்னே”என்று கேட்டார்.ரமேஷ் உடனே “அவர் பேர் ‘விசு’ன்னு தான் என் மாமியார் சொன்னதா ஞாபகம்”என்று சொன்னான்.ரமேஷ் அப்படி சொன்னதும் அந்த பெரியவர் விடாம “உங்க மாமியார் பேர் என்ன”என்று கேட்டார்.உடனே ரமேஷ் “என் மாமியார் பேர் காயத்திரி”என்று சொன்னதும்,அவர் இன்னும் நேரே எழுந்து உட்கார்ந்துக் கொண் டார்.

அவர் தன் கண்களை அகல விரித்து “சென்னைலே எந்த காயத்திரி.அவ ஆத்துக்காரர் பேர் கணேசனா” என்று கேட்டதும் ரமேஷ்க்கு ஆச்சரியமாய் இருந்தது.சந்தோஷத்தில் உடனே ரமேஷ் “ஆமாம் மாமா,அவர் பேர் கணேசன் தான்”என்று சொன்னான்.அவர் உடனே ”அப்படியா.நான் தான் அந்த விசு ’ஸ்வீட் மாஸ்டர்’.காயத்திரியின் அப்பா.காயத்திரி இப்போ எப்படி இருக்கா.அவ ஆத்துக்கா ரர் எப்படி இருக்கார்.அவா பொண்ணு லதாவை நீ தான் கல்யாணம் பண்ணீண்டயா.லதா இப்போ எப்படி இருக்கா.உங்களுக்கு எத்தனை குழைந்தங்க” என்று மெல்ல மெல்ல திணறி மூச்சு விடாமல் கேட்டார். ரமேஷூக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.’இவர் தான் லதாவின் தாத்தாவா.என் மாமியாரின் அப்பாவா.இவரை நாம் காசிலே பாப்போம்ன்னு நாம கனவிலும் நினைக்கலையே’ என்று நினைத்து மிகவும் சந்தோஷப் பட்டான்.ரமேஷ் யோஜனைப் பண்ணிக் கொண்டு இருந்தான்.அவன் பதில் ஒன்னும் சொல்லாமல் இருக்கவே விசு“என்னப்பா, நான் கேட்டுண்டு இருக்கேன்.நீ பதில் ஒன்னும் சொல்லாம இருக்கயே.என் காயத்திரி எப்படி இருக்கா.லதா எப்படி இருக்கா,உனக்கு எத்தனை குழந்தைங்க சொல்லுப்பா ”என்று கொஞ்சம் கத்திக் கேட்டார்.அப்போது தான் ரமேஷ் தன் யோஜனையில் இருந்து வெளியே வந்தான்.

’லதா கிட்டேயும் காயத்திரி மாமி கிட்டேயும் ஒரு நாம ஒரு பொய்யை சொல்லி தான் அவாளை நம்ப வச்சோம்.நாம உண்மையை சொல்லி இருந்தா அவா நம்மை கிட்டவே சேத்து இருக்க மாட்டா. நாம இந்த பெரியவர் கிட்டேயும் அதே பொய்யை சொல்லி இவர் ஆசைபட்டது போல இவர் காலமான தும் இவருக்கு ‘நெய் பந்தம்’ பிடிச்சு அவர் ஆசையை பூர்த்தி பண்ணலாம்.அப்படி பண்ணி லதாவுக் கும்,அவ அம்மாவுக்கும் சந்தோஷத்தே தரலாமே’என்று முடிவு பண்ணினான்.
உடனே ரமேஷ் “மாமா,என் அப்பா,அம்மா ரொம்ப பெரிய கோடீஸ்வவரா.என் பேர் சுரேஷ். நானும் ரமேஷூம் அவாளுக்கு பொறந்த ரெட்டை குழந்தைகள்.பாக்க ஒன்னா இருப்போம்.எனக்கு ரொம்ப சுவாமி பக்தி இருந்து வந்தது.ஆனா ரமேஷோ எனக்கு நேர் எதிரா வாழ்ந்து வந்தான்.என் அப்பாவுக்கு சென்னையிலெ ரெண்டு ‘ப்லாஸ்டிக் பாக்டரி’ இருந்தது.காயத்திரி ஆத்துக்காரர் ‘கான்சர்’ வியாதி வந்து,அந்த வியாதிக்கு வைத்தியம் பண்ணிக்க கைலே பணம் இல்லாம,அவர் காயத் திரியையும்,லதாவையும் தனியா தவிக்க விட்டுட்டுப் போயிட்டார்”என்று சொல்லும் போது ரமேஷ் அழுது விட்டான்.உடனே அந்தப் பெரியவரும்” ஐயோ பாவமே,அப்படியா ஆயிடுத்து” என்று கேட்கும் போதே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.பிறகு ரமேஷ் தன் கண் களைத் துடைத்துக் கொண்டு கதையை தொடர்ந்தான்.

“ஆத்துக்காரர் தவறி போன பிறகு காயத்திரி மாமி,எங்க ஆத்லே சமையல் வேலைக்கு வந்து சேந்தா.காயத்திரி மாமி சமையல் வே¨லைக்கு வரும் போது லதாவையும் கூடவே அழைச்சுண்டு வந்துண்டு இருந்தா.ரெண்டு வருஷம் ஆயிடுத்து.லதா வேலை செஞ்சு வரும் போது என் மேலே ரொம்ப ஆசைப் பட்டா.நானும் லதா மேலே ஆசைப் பட்டேன்.நான் என் அப்பா அம்மா கிட்டே ‘நான் லதாவைக் கல்யாணம் பண்ணிக்கக ஆசைப்படறேன்”ன்னு சொல்லி கேட்டேன்.அவா பிடிவாதமா ‘ஒரு சமையல் கார மாமியின் பொண்ணு இந்த ஆத்துக்கு மாட்டுப் பொண்ணா வரக் கூடாது.அந்தப் பொண்ணு நம்ம குடும்ப ‘ஸ்டேடஸ்ஸூக்கு’ சரி இல்லே’ன்னு சொல்லி எங்க கல்யாணத்துக்கு சம்மதிக் கலே.லதா மனசு ஒடிஞ்சு போயிட்டா.நானும் ரொம்ப மனசு ஒடிஞ்சுப் போனேன்.ஆனா லதாவை எப்படியாவது நாம் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு இருந்து வந்தேன்”என்று சொல்லி நிறுத்தினான்.

பிறகு அங்கு இருந்த ஒரு சிப்பந்தியிடம் கொஞ்சம் ஜலத்தை வாங்கிக் குடித்து விட்டு காலி டம்பளரை அந்த சிப்பந்தியிடம் கொடுத்து விட்டு,ரமேஷ் தன் மீதி கதையை சொல்ல ஆரம்பித்தான். ”மாமா,என் அப்பா,அம்மா, நான் மூனு பேரும் திருப்பதி கிளம்பிப் போனோம்.ரமேஷ் எங்க கூட வற லே.நாலு நாள் ஆனதும் நாங்க திருப்பதியிலே திரும்பி வந்தோம். அடுத்த நாள் காத்தாலே காயத்திரி மாமி சமையல் வேலைக்கு வறலே.என் அம்மா விசாரிச்சப்போ,காயத்திரி மாமி வேறே இடத்துக்கு சமையல் வேலைக்கு சேர்ந்துட்டான்னு தெரிய வந்தது.ஆறு மாசம் கழிச்சு ஒரு நாள் என் அம்மா, அப்பா,நான் மூனு பேரும் மயிலாப்பூர் கோவில் போய் இருந்தப்பா காயத்திரி மாமியையும் லதாவையும் பாத்தோம்.என் அம்மா காயத்திரி மாமியைப் பாத்து ’ஏன் எங்க ஆத்து வேலையே விட்டேள்’ன்னு, கேட்டு முடியலே காயத்திரி மாமி கோவத்தோட ‘உங்க ஆத்லே இப்படி ‘வெறி நாய்’ இருக்கும்ன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தா,நான் உங்க ஆத்து சமையல் வேலைக்கே வந்து இருக்க மாட் டேன்.என் பொண்ணை பாருங்கோ.அவ ‘இப்படி ஆயி’ இருக்கறதுக்கு உங்க ‘வெறி நாய் பையன்’ தான் காரணம்.உங்க குடும்பம் நாசமா போயிடும்ன்னு சாபம் குடுத்தா….”என்று சொல்லி முடிக்க வில்லை அந்த பெரியவர் “அட ‘காமுகா’.உன் தம்பி அப்படிபட்டவனா.என் பேத்தி லதாவை ‘கெடுத் து’ட்டானா”என்று சொல்லி ‘ஈஸி சேரில்’ கண்களை மூடிக் கொண்டு படுத்து விட்டார்.அவர் கண்க ளில் கண்ணீர் வழிந்துக் கொண்டு இருந்தது.ரமேஷூம் கொஞ்ச நேரம் அழுதான்.

பத்து நிமிஷம் ஆனதும் ரமேஷ் அந்த பெரியவா¢டம் “காயத்திரி மாமி குடுத்த சாபம் வீண் போ கலே.நாங்க நாலு பேரும் பெங்களுருக்கு காரில் போயிண்டு இருந்தப்ப,ஒரு பெரிய ‘ஆக்சிடெண்ட்’ ஆயி,என்,அப்பா,அம்மா,என் கூடப் பிறந்தவன் மூனு பேரும் அந்த ‘ஆக்சிடெண்ட்லே செத்துப் போ யிட்டா.நான் மட்டும் இந்த ஒரு காலோடு பிழைச்சு எழுந்தேன்”என்று சொல்லி நிறுத்தினான்.அந்த பெரியவர் மெல்ல தன் கண்களை திறந்து எழுந்து உட்கார்ந்துக் கொண்டு ரமேஷ் சொல்லப் போவதை கேட்க ஆரம்பித்தார்.

ரமேஷ் தொடர்ந்தான்.“ஒரு நாள் நான் கார்லே போயிண்டு இருந்தப்ப, ஏதேச்சையா லதா ஒரு நாலு வயசு பையனை கார்ப்பரேஷன் ஸ்கூல்லே விட்டுட்டு போறதே பாத்தேன்.நான் மெல்ல லதா பின்னாடியே அவா ஆத்துக்குப் போய் பாத்தேன்.மயிலாப்பூர்லே லதாவும்,காயத்திரி மாமியும் ஒரு சின்ன போர்ஷன்லே குடி இருந்து வந்தா.மாமி மயிலாப்பூர்லே ஒரு‘மெஸ்லே’ சமையல் வேலை பண் ணிண்டு இருந்தா.நான் போன அன்னைக்கு மாமிக்கு ஜுரம்.மாமி ஆத்லே தான் இருந்தா.அவாளை ப் பார்த்ததும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.நான் என்னை அறிமுகம் பண்ணீண்டேன்.மாமி என்னைப் பார்த்ததும் எங்க பங்களாவிலே “நடந்ததை எல்லாம்” சொல்லி எங்க குடும்பத்துக்கு குடுத்த சாபத்தே சொன்னா.நான் கொஞ்ச நேரம் சும்மா இருந்து ட்டு,எங்க குடும்பத்துக்கு நடந்த ‘ஆக்ஸிடெ ண்டை’ சொல்லி என் காலையும் காட்டினேன்.மாமி மனசும்,லதா மனசும்,கொஞ்சம் இளகித்து.அது க்கு அப்புறமா நான் லதா பையன் ஆனந்தனை முப்பதாயிரம் ரூபாய் ‘டொனேஷன்’ குடுத்து ‘பத்மா சேஷாத்ரி’ ஸ்கூல்லே சேத்தேன்.கூடவே லதாவுக்கும்,மாமிக்கும் பத்மா சேஷாத்ரி ஸ்கூலுக்குப் பக்க த்லே மூனு கோடி ரூபாய்க்கு ஒரு மூனு பெட் ரூம் ‘ப்லாட்’ வாங்கிக் குடுத்து,இன்னும் ஒரு எண்பது லக்ஷ ரூபாய் குடுத்து ‘ப்லாட்டில்’ கோடீஸ்வரா பங்களா மாதிரி எல்லா வசதிகளையும் பண்ணிக் குடுத்து,அந்த ‘ப்லாட்டை’ லதா பேர்லேயே ‘ரெஜிஸ்தர்’ பண்ணிக் குடுத்தேன்”என்று சொல்லி விட்டு கொஞ்சம் மூச்சு வாங்கிக் கொண்டான்.அந்தப் பெரியவர் ரமேஷ் சொல்வதை கண் கொட்டா மல் கேட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டு இருந்தார்.ரமேஷ் சொன்னது அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் தொடர்ந்தான்.”நான் எங்க ஆத்து வாத்தியாரை வரச் சொல்லி அந்த ‘ப்லாட்டுக்கு’ ‘கிருஹப்பிரவேசம்’ பண்ணேன்.அன்னைக்கு சாயங்காலம் லதா என்னைப் பாத்து ‘நான் உங்களே கல்யாணம் பண்ணிக் கொள்ள ரொம்ப ஆசைப் படறேன்,நீங்களும் என்னை கல்யாணம் பண்ணிக்க ரொம்ப ஆசைப் பட்டேள்.ஆனா உங்க அம்மா அப்பா வேணாம்ன்னு சொன் னதாலே அப்போ நீ என்னை அப்போ கல்யாணம் பண்ணிக்கலே.இப்போ என்னை கல்யாணம் பண் ணிக்கோங்கோ’ என்று சொல்லி ரொம்ப அழுதா.பிடிவாதம் பிடிச்சா.அவளை நான் கல்யாணம் பண் ணிக்காட்டா தற்கொலை பண்ணிக்குவேன்னு சொல்லி ஒரு ‘பெட் ரூமுக்கு’ப் போய் கதவை சாத்தி ண்டுட்டா.காயத்திரி மாமியும் என்னை ரொம்ப கெஞ்சினா.எனக்கு பயமா போயிடுத்து.எனக்கு வேறே எந்த வழியும் தெரியலே.நான் லதாவை கல்யாணம் பண்ணிண்டேன்.அன்னைலே இருந்து காயத்திரி மாமி என்னோடவே இருந்து வந்தா.ரெண்டு பேரும்,சமையல்கார மாமா,வேலைக்காரன், ரெண்டு கார் டிரைவர், ஆம் பூரா ‘ஏ.ஸி’,எல்லா வசதிகளோட ‘மஹா ராணிகள்’ போல என்னொடு வாழ்ந்து வந்தா” என்று சொல்லி நிறுத்தினான்.

உடனே அந்தப் பெரியவர் “அப்படியா,நீ என் பேத்தியின்ஆத்துக்காரனா.லதாவும் காயத்திரியும் ‘மஹா ராணிகள்’ போல அந்த ‘ப்லாட்லே’ வாழ்ந்து வந்தாளா.இப்ப அவா ரெண்டு பெரும் சென்னை யிலே என்ன பண்ணிண்டு இருக்கா.உங்களுக்கு எத்தனை குழந்தைங்க. அவாளை எல்லாம் விட்டுட்டு, நீ மட்டும் ஏன் காசிக்கு தனியா வந்து இருக்கே”என்று கேட்டதும் ரமேஷ் தன் கண்களில் துளித்த கண்ணீரை அடக்கிக் கொண்டான்.பெரியவர் ‘என்னடா நம கேட்டதுக்கு,இந்த பிள்ளயாண்டான் கண்லே தண்ணி விடறான்.அவ ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சோ,பகவானே’ என்று சொல்லிக் கொண்டு,ரமேஷ் என்ன சொல்ல போறான்னு அவன் வாயையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

ரமேஷ் சொல்ல ஆரம்பித்தான் “மாமா,எனக்கும் லதாவுக்கும் ‘சந்தோஷ்’ன்னு ஒரு பையன் பொறந்தான்.நானும் லதாவும் ஆனந்த்,சந்தோஷ் ரெண்டு பேரையும் நன்னா படிக்க வச்சி,அமொ¢க்கா அனுப்பி படிக்க வச்சோம்.அவா ரெண்டு பேரும் படிச்சுட்டு திரும்பி வந்ததும்,அவா ரெண்டு பேருக் கும் ரெண்டு பணக்கார பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சோம்.அவா ரெண்டு பேருக்கும் ரெண்டு பெரிய ‘ப்லாட்டை’ வாங்கிக் கொடுத்து,ஆளுக்கு ஒரு ‘ப்லாஸ்டிக் பாக்டரியையும்’ குடுத்து அவாளைத் தனி குடித்தனம் வச்சிட்டோம்.அவா ரெண்டு பேருக்கும் ஒரு ஆண் குழந்தைப் பொறந்து இருக்கு.அவா ரெண்டு பேரும் சௌக்கியமா வாழ்ந்துண்டு வறா.நானும்,லதாவும்,என் மாமியாரும் ‘ப்லாட்’லே தனியா இருந்து வந்தோம்.பன்னண்டு வருஷம் ஆனதும் லதாவுக்கு ‘கான்சர்’ வியாதி வந்துடுத்து.அவளுக்கு ரெண்டு மார்லேயும் ‘ஆபரேஷன்’ பண்ணிட்டு,நிறைய தடவை ‘கெமியோ தெராபியும்’ பண்ணா.அந்த வியாதியோட லதா ரொம்ப கஷ்டப் பட்டு வந்தா.லதா பட்டு வர கஷ்டத் தே தாங்கிக்க முடியாம,என் மாமியார் ஒரு நாள் மாரடைப்பாலே செத்துப் போயிட்டா.அவ செத்துப் போய் நாலு மாசம் ஆனதும் லதா ‘கான்சர்’ வியாதி ரொம்ப முத்திப் போய்,செத்துப் போயிட்டா” என்று சொல்லி விக்கி விக்கி அழுதுக் கொண்டு இருந்தான் ரமேஷ்.உடனே அந்த பெரியவர் “என் பொண் ணும்,பேத்தியும் நாலு மாச வித்தியாசத்லே செத்துப் போயிட்டாளா.இந்த ரெண்டு துக்க சமாசாரத்தே கேக்கவா என்னே நீ இன்னும் உசிரோட வச்சு இருக்கியா கிருஷ்ணா” என்று சொல்லி அழுதார்.

பெரியவர் அழுது ஓய்ந்ததும் ரமேஷ் நிதானமா அவர் கிட்டே”மாமா,நான் என் மாமியார் செத்துப் போன அந்த மாசமே மூனு கோடி குடுத்து ‘காயத்திரி அன்னதான ட்ரஸ்ட்’என்கிற ஒரு நிறுவனத்தை ஆரம்பிச்சு, நிறைய ஏழைகளுக்கு தினமும் அன்னதானம் பண்ணி வர ஏற்பாடு பண்ணி இருக்கேன். லதா செத்துப் போன மாசமே மூனு கோடி ரூபாய் குடுத்து ‘லதா கான்ஸர் பவுண்டேஷன்” என்கிற நிறுனவத்தை ஆரம்பிச்சு நிறைய ‘கான்ஸர் பேஷண்டு’களுக்கு இலவசமா வைத்தியம் பண்ண ஏற்பாடு பண்ணி இருக்கேன்.அவா ரெண்டு பேரும் என்னை விட்டுப் போன பிறகு நான் தனி மரமா ஆயிட் டேன்.எனக்கு அவா ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்து வந்த ‘ப்லாட்லே’ இருந்து வர பிடிக்கலே. .நான் ‘ப்லாட்டை’ வித்துட்டு,எல்லா பணத்தையும் எடுத்துண்டு காசிக்கு வந்துட்டேன்.நான் இன் னைக்கு தான் மடத்லே ‘அனாதை பிணங்களுக்கு’ ‘சம்ஸ்காரம்’ பண்ண ரெண்டு கோடி ரூபாய் கட்டி இருக்கேன்.இதோ பாருங்கோ அதுக்கு ரசீது.இங்கே பல நல்ல காரியங்களை எல்லாம் பண்ணிட்டு, என் கண்ணை மூடலாம்ன்னு இருக்கேன்” என்று சொல்லி அழுதுக் கொண்டு இருந்தான்.

உடனே அந்த பெரியவர் ரொம்ப சந்தோஷ பட்டு “அழாதேப்பா.நீ ரொம்ப நல்ல காரியங்க எல் லாம் பண்ணி இருக்கே.என் பொண்ணு பேரை சொல்லி நிறைய ஏழைகள் வயிறார சாப்பிடுவா.அதே மாதிரி என் பேத்தி பேரைச் சொல்லி நிறைய ‘கான்ஸர்’ வியாதிக்காரா இலவசமா வைத்தியம் பண்ணிப் பா.நீ குடுத்த ரசீதை என்னாலே படிக்க முடியாது.என் ரெண்டு கண் பார்வையும் சரி இல்லே”என்று ரமேஷ் கையைப் பிடித்து சொன்னார்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் அந்தப் பெரியவரைப் பார்த்து ”மாமா,உங்களுக்கு என்ன வயசு ஆறது” என்று கேட்டதும் அந்தப் பெரியவர் ”இந்த தீபாவளி வந்தா எனக்கு நூத்தி மூனு வயசாகப் போறது” என்று சொன்னார்.ரமேஷ் உடனே”மாமா,தீபாவளிக்கு இன் னும் மூனு நாள் தான் பாக்கி இருக்கு.இந்த தீபாவளி அன்னைக்கு வர உங்க பொறந்த நாளை நாம எல்லாரும் சந்தோஷமா கொண்டாடலாம்” என்று அவர் கையைப் பிடித்து சொன்னான்.அந்தப் பெரி யவர் “கொண்டாடுப்பா.இத்தனை வருஷமா நான் தனியா என் பொறந்த நாளை கழிச்சு வறேன்.இந்த வருஷ பொறந்த நாளை நான் என் பேத்தி ஆம்படையானோட கொண்டாடணும்ன்னுன்றது,அந்த பகவான் ஆசை போல இருக்கு.நீ சந்தோஷமா என் போறந்த நாளைக் கொண்டாடு”என்று சந்தோ ஷமாக சொன்னார்.

ரமேஷ் “ரொம்ப சந்தோஷம் தாத்தா.லதாவுக்கு நீங்க தாத்தான்னா,எனக்கும் நீங்க தாத்தா தானே.நான் இந்த நிமிஷத்லே இருந்து உங்களைத் தாத்தான்னு தான் கூப்பிடப் போறேன்”என்று சொன்னதும் அந்த பெரியவர் “கூப்பிடேன்.நான் உனக்கு நிச்சியமா தாத்தா தான்“என்று ரமேஷ் கையை பிடித்துக் கொண்டு சொன்னார்.ரமேஷ் சங்கர மடத்து மானேஜரைக் கூப்பிட்டான்.மானேஜர் வந்தவுடன் ரமேஷ் அவரைப் பார்த்து “சார்,உங்களோடு சேத்து இந்த மடத்திலே எத்தனைப் பேர் வேலை செஞ்சு வறா”என்று கேட்டான்.அவர் உடனே “என்னோடு சேத்து மொத்தம் பதினெட்டு பேர் இங்கே வேலை செஞ்சு வறா”என்று சொன்னார்.ரமேஷ் மானேஜரைப் பார்த்து “நீங்க தாத்தாவுக்கு ரெண்டு வேஷ்டி,ரெண்டு ஷர்ட்,ரெண்டு மேல் துண்டும்,மத்தவா அத்தனை பேருக்கும் ஒரு நல்ல வேஷ்டி ஷர்ட்,அவா சம்சாரத்திற்கு ஒரு ஆறு கஜம் புடையோ,ஒன்பது கஜம் புடவையோ,எல்லாம் பக் கத்திலே இருக்கிற துணிக் கடைலே ஆர்டர் பண்ணி இங்கே கொண்டு வந்து தரச் சொல்லுங்கோ. கூடவே பத்து கிலோ ஸ்வீட்டும் ஆர்டர் பண்ணிடுங்கோ.நிறைய பட்டாஸூம் வாங்கி வாங்கிடுங்கோ. நான் எல்லாத்துக்கும் ஆற பில்லை ‘பே’ பண்ணிடறேன்.எல்லாம் வந்ததும் தீபாவளி அன்னைக்கு என் தாத்தா தன் புது ஜவுளியைப் போட்டுண்டு,மத்த ஜவுளிகளை எல்லோருக்கும் குடுத்து ஸ்வீட் டையும் குடுப்பார்.எல்லா சிப்பந்திகளும் வந்து இருக்கும் பட்டாஸைக் கொளுத்தட்டும்”என்று சொன்னான்.

உடனே அந்த மானேஜர் “நான் இப்பவே ஆர்டர் பண்ணி விடறேன்”என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த துணிகடையில் ரமேஷ் சொன்ன எல்லா ஜவுளிகளையும்,ஸ்வீட் கடையில் பத்து கிலோ ஸ்வீட்டும்,பட்டாஸ் கடையில் இருந்து நிறைய பட்டாஸூம் ஆர்டர் பண்ணினார்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “நான் இப்போ போயி¢ட்டு,தீபாவளி அன்னைக்கு காத்தாலே இங்கே வந்துடறேன். நான் வந்ததும் நீங்க உங்க கையாலே எல்லோருக்கும் ஜவுளியை கொடுத்து விட்டு,ஸ்வீட்டும் குடு ங்க.எல்லோரும் நிறைய பட்டாஸூம் கொளுத்தட்டும் தாத்தா”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்துக் கொண்டான்.உடனே அந்தப் பெரியவர் “ஜாக்கிரதையா போப்பா.தீபாவளி அன்னைக்கு காத்தாலே மறக்காமஇங்கே வந்துடு”என்று சொன்னார்.”நான் நிச்சியமா வருவேன் தாத்தா.எனக்கும் உங்க பொ றந்த நாளை கொண்டாடணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்தா ன் ரமேஷ்.ரமேஷ் கிளம்பிப் போனதும் தாத்தாவும் மானேஜரும்,மற்ற எல்லோரும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.

பெரியவர் ‘காயத்திரியும்,பேத்தி லதாவும்,இந்த லோகத்தே விட்டுப் போயிட்டா.ஆரம்ப நாள்லே அவ கஷ்டப் பட்டுண்டு வந்தாலும்,அப்புறமா இந்த பிள்ளையாண்டான் தயவிலே,அவா ரெண்டு பேரும் ‘மஹா ராணி’போல வாழ்ந்து வந்து இருக்கா.இப்போ எனக்கு அந்தி காலத்லே என் பேத்தி யோட கோடீஸ்வர ஆம்படையான் கிடைச்சு இருக்கான்.அவன் பணத்தே கோடி கோடியா செலவழிச்சு வறானே.இது எல்லாம் உன் லீலையா கிருஷ்ணா’என்று தன் மனதில் சொல்லிக் கொண்டார்.ரமேஷ் தன் கார் ஏறி ஹோட்டலுக்கு வரும் வழியில் தனக்கு ஒரு புது ஷர்ட்டும் வேஷ்டியும் வாங்கிக் கொண் டு வந்தான்.ஹோட்டலுக்கு வந்து ரமேஷ் சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டு விட்டு படுத்துக் கொ ண்டான்.பெட்டில் படுத்துக் கொண்டே ரமேஷ் “லதா,நான் உங்க தாத்தாவை இன்னைக்குக் கண்டு பிடிச்சுட்டேன்.நான் அவருடன் கூட இருந்து அவரது பொறந்த நாளையும்,இந்த வருஷ தீபாவளிப் பண்டிகையையும் நாம கொண்டாடி வரப் போறேன். உனக்கு சந்தோஷம் தானே”என்று லதாவின் படத்தைப் பார்த்து கேட்டான்.போட்டோவில் லதா சிரித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்த ரமேஷ் ’லதா சந்தோஷப் படறா.அதனாலே தான் அவ சிரிக்கிறா’என்று ஒரு குழந்தை நினைப்பது போல நினைத்து சந்தோஷப் பட்டான்.

ரமேஷ் தீபாவளி அன்று ரமேஷ் காத்தாலே நாலு மணிக்கு எல்லாம் எழுந்து குளித்தான். அவ ன் வாங்கி இருந்த புது ஷர்ட்டை போட்டுக் கொண்டு,வேஷ்டியையும் கட்டிக் கொண்டு ரூமை விட்டு வெளெயே வந்து,கார் ஏறி,விஸ்வநாதர் கோவிலுக்குப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு காசி விசாலாக்ஷ¢ தேவியையும் தா¢சனம் பண்ணி விட்டு,ரெண்டு ரோஜாப் பூ மாலையை வாங்கிக் கொண் டு ஹோட்டலுக்கு வந்து முதலில் ஒரு பூமாலையை சுவாமிக்குப் போட்டு விட்டு,இன்னொரு பூமா லையை லதா படத்திற்கு போட்டு விட்டு காபி டிபன் சாப்பிட்டான்.

மணி ஏழடித்ததும் ரமேஷ் சங்கர மடத்திற்குக் கிளம்பிப் போனான். காரை விட்டு மெல்ல ரமே ஷ் கீழே இறங்கி சங்கர மடத்துக்குள் வந்தான்.பெரியவர் குளித்து விட்டு ரெடியாக இருந்தார். ரமேஷ் முதலில் தன் கையால் தன் தாத்தாவுக்கு புது ஷர்ட்,புது வேஷ்டி,புது துண்டு எல்லாம் எடுத்துக் கொ டுத்துப் போட்டுக் கொள்ளச் சொன்னான் அவர் அதை எல்லாம் மெல்ல போட்டுக் கொண்டவுடன் ரமேஷ் ஒரு ஸ்வீடை எடுத்து அவர் வாயில் திணித்தான்.எல்லோரும் தங்கள் கையைத் தட்டி ஆரவா ரம் பண்ணினார்கள்.பெரியவருக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.பெரியவர் ரமேஷ் கொடுத்த ஸ்வீட்டை சாப்பிட்டு விட்டு,தன் பேத்தி ஆம்படையான் வாயில் ஒரு ஸ்வீட்டை திணித்தார். ரமேஷ் அந்த ஸ்வீட்டை சாப்பிட்டான்.பிறகு பெரியவர் சங்கர மடத்தில் இருக்கும் எல்லோருக்கும் புது துணி கள் எல்லாம் கொடுத்து,கூடவே ஸ்வீட்டையும் கொடுத்தார்.எல்லோரும் சந்தோஷமாய் வாங்கிக் கொ ண்டார்கள்.எல்லோரும் புது துணிகள் அணிந்துக் கொண்டு நிறைய பட்டாஸை வெடித்தார்கள்.

தன் பொறந்த நாளை இவ்வளவு கோலாகலமாக கொண்டாடின ரமேஷைப் பார்த்து ”எனக்கு இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.நான் பொறந்ததில் இருந்து,இன்னை வரைக்கும் இந்த மாதிரி எல்லோருக்கும் துணி மணிகள் வாங்கிக் குடுத்து,ஸ்வீட்டும் குடுத்து,இத்தனை பட்டாஸூம் வெடிச்சு,தீபாவளியை கொண்டாடினதே இல்லே” என்று சொல்லி தன் கண்ணீர் விட்டார்.உடனே ரமேஷ் அவரை பார்த்து தாத்தா இன்னைக்கு நீங்க அழவே கூடாது.இன்னைக்கு உங்களுக்கு ‘பொற ந்த நாள்’.நீங்க சிரிச்சுண்டே இருக்கணும்”என்று சொல்லி பெரியவரின் கண்களை துடைத்தான்.பிறகு ரமேஷ் அவரைப் பார்த்து “தாத்தா,நான் உங்க பேத்தி அம்படையான்.உங்க குடும்பத்தே பத்தி என் மாமியார் கொஞ்சம் சொன்னா.நீங்க உங்க வாழ்க்கையைப் பத்தி எனக்கு கொஞ்சம் சொல்லுங்கோ” என்று கேட்டான்.’என் வாழ்க்கையைப் பத்தி கேக்கறானே’ என்று ஆச்சரியப் பட்டார் அந்த பெரியவர்.

”என் பேத்தி ஆம்படையான் கேட்டா,நான் சொல்லா இருப்பேனா.நிச்சியமா சொல்றேன்” என் று சொல்லி விட்டு கொஞ்சம் ஜலம் வாங்கிக் குடித்தார்.அவர் மனம் பின்னோக்கி ஓடியது.தன் தொண்டையை கனைத்துக் கொண்டு “நான் ஒரு சாதாரண ‘ஸ்வீட் மாஸ்டரா’ தான் வேலை செஞ்சு ண்டு வந்தேன்.எனக்கு சம்பளமே மூவாயிரம் ரூபாய் தான்.இந்த சம்பளத்லே தான் நானும் காயத்திரி யும் குடித்தனம் பண்ணீ வந்தோம்.என்னால் பாவம் காயத்திரிக்கு ஒரு பட்டு புடவை கூட வாங்க முடியாது. தீபாவளிக்கு நான் காயத்திரிக்கு ஒரு சாதாரண சில்க் புடவை வாங்கிண்டு,எனக்கு ஒரு கதர் வேஷ்டியும்,ஒரு கதர் துண்டும் வாங்கீண்டு,சாஸ்திரத்துக்கு ரெண்டு பட்டாஸ¥ம்,வாங்கிண்டு வந்து, நான் வேலை பண்ணீண்டு வந்த கடையிலே நாலு ‘ஸ்வீட்டும்’ எடுத்துண்டு ஆத்துக்கு வந்து தீபாவ ளி பண்டிகையை கொண்டாடி வந்தோம்”என்று சொன்னதும் ரமேஷ் பெரியவரை பார்த்து “தாத்தா, உங்க கூட காயத்திரி அம்மா இல்லையா”என்று கேட்டான்.

பெரியவர் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.ரமேஷ் பயந்து போய் விட்டான்.கொஞ்ச நேரம் ஆனதும் பெரியவர் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு “காயத்திரி பத்தாவது படிச்சுண்டு இருந்த ப்ப,திடீர்ன்னு கமலாவுக்கு விஷ ஜுரம் வந்து,ஒரு ஐஞ்சு நாள் வைத்தியத்துக்கு அப்புறமா,பலன் இல்லாம,அவ நிம்மத்தியா கண்ணே மூடிட்டா.அப்போ காயத்திரிக்கு அரை ஆண்டு லீவு.அதுக்கு அப்புறமா அவ பள்ளிகூடமே போகலே.வெறுமனே ஆத்லே சமையலைப் பண்ணீண்டு வந்தா.கமலா வும்,நானும் ஒரு ஆண் குழந்தை பெத்துக்கணும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டோம்.கமலா தவறிப் போன பிற்பாடு எனக்கு அந்த பாக்கியம் இல்லேன்னு ஆயிடுத்து.எனக்கு ஒரு பேரனாவது பொறப்பான்னு ஆசையா இருந்தேன்.ஆனா காயத்திரியும் கணேசனும் லதா பொறந்த பிற்பாடு,இன்னொரு குழந்தே பெத்துக்க வேணாம்ன்னு முடிவு பண்ணிட்டா.ஒரு ‘ஜீவன் உசிரு’போனா,அவனுக்கு அவன் பிள்ளை கொள்ளி போடணும்.அப்படி அவனுக்கு பிள்ளை இல்லாம இருந்தா,அவனுக்கு ஒரு பேரன் பொறந்து, அவன் ‘நெய் பந்தம்’ பிடிக்கணும்.அப்ப தான் அந்த ‘ஜீவனுக்கு’ முக்தி கிடைக்கும்.இந்த ரெண்டும் இல்லாட்டா,அந்த ‘ஜீவன்’ காசிக்குப் போய் பிராணனை விட்டா,நிச்சியமா ‘முக்தி’ கிடைக்கும் என் கிற நல்ல விஷயத்தே,நான் சின்ன வயசா இருந்தப்ப,ஒரு நாள் அனந்தராம தீக்ஷ¢தர் காலக்ஷபத்லே கேட்டு இருக்கேன்.அதை மனசிலே வச்சுண்டு தான்,நான் அவளை எல்லாம் வீட்டுட்டு,காசிக்கு வந்து ‘பிராணனை’விட்டுடலாம்ன்னு இருக்கேன்.ஆனா என் ‘பிராணன்’ இன்னும் போகலேயே” என் று சொல்லி அழுதார்.கொஞ்ச நேரம் ஆனதும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

உடனே “தாத்தா,இந்த சமாசாரத்தே என் மாமியார் ஒரு நாள் என் கிட்டே சொன்னா” என்று சொன்னதும் பெரியவர் “இதை காயத்திரி உங்க கீட்டே சொல்லி இருக்காளா” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.ரமேஷ் கொஞ்ச நேரம் ஆனதும் “தாத்தா,நீங்க உங்களுக்கு’ நெய் பந்தம்’ பிடிக்க ஒரு பேரன் இல்லைன்னு கவலைப்பட்டு சென்னையே விட்டு,காசிக்கு வந்துட்டேள்.இப்ப நான்,உங்க பேத்தி ஆம் படையான்,காசிக்கு வந்து இருக்கேன்.நீங்க காலமானா நான் உங்களுக்கு ‘ஸ்மஸானம்’ வரைக்கும் ‘நெய் பந்தம்’ பிடிச்சு வந்து,உங்க ‘பதிமூனு நாள் காரியத்தையும்’ ரொம்ப சிரத்தையா பண்ணுவேன். நீங்க இப்போ நிம்மதியா இருந்து வாங்கோ.இந்த நல்ல நாள்லே,நீங்க அதை எல்லாம் நினச்சுக்காம சந்தோஷமா இருந்து வரணும்.நீங்க இன்னும் ரொம்ப வருஷம் சந்தோஷமா இருந்து வரணும்”என்று தாத்தாவின் கைகளைப் பிடித்துச் சொன்னான்.

பெரியவருக்கு ரொம்ப சந்தோஷம்.அவர் உடனே “நான் தினமும் வேண்டி வர அந்த கிருஷ்ண பகவான் தான் உன் மனசிலே பூந்து,உன்னை காசிக்கு வரவழைச்சு என் ‘காரியத்தை’ பண்ண வச்சு இருக்கார் போல் இருக்கு” என்று சொல்லி தன் கண்களை மூடிக் கொண்டு பகாவானுக்கு நன்றி சொ ல்லிக் கொண்டு இருந்தார்.பிறகு ரமேஷ் அந்தப் பெரியவர் கிட்டேயும்,மற்றவர்கள் கிட்டேயும் சொல் லிக் கொண்டு ஹோட்டலுக்கு வந்தான்.

அடுத்த நாள் முதல் ரமேஷ் முன்னம் செஞ்சு வந்தா மாதிரி ரூம்லெ குளிச்சுட்டு,காசி விஸ்வ நாரையும்,விசாலாக்ஷ¢ அம்மனையும் தா¢சனம் பண்ணி விட்டு,கங்கையில் ஆரத்தி காட்டி விட்டு வந் துக் கொண்டு இருந்தான்.ரெண்டு நாள் ஆனதும் ரமேஷ் ‘ரூம்’லே இருந்த டீ.வியை பார்க்க பிடிக்காம ல் ‘சங்கர மடத்துக்கு வந்து வேத பாராயணத்தை கேட்டு விட்டு,தாத்தாவையும் பார்த்து விட்டு வரலா ம்’ என்று நினைத்து சங்கர மடத்துக்கு கிள்ம்பினான்.சங்கர மடத்துக்கு வந்து தாத்தா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு வேத பாராயணத்தை கேட்டுக் கொண்டு இருந்தான்.கொஞ்ச நேரம் ஆனதும் மடத்தின் மானேஜர் ரமேஷ் பக்கத்தில் வந்து நின்றுக் கொண்டு “சார்,தினமும் இந்த மடத்லே இருபது வாத்தியார்கள் வேத பாராயணம் பண்றா.இதை தவிர ரெண்டு வேத பாடசாலையும் நடத்திண்டு வறோம்.‘வேத சம்ரக்ஷண நிதி’ன்னு ஒரு ஸ்தாபனம் இருக்கு.முடிஞ்சா,நீங்க அதுக்கு ஏதாவது பணம் தர முடியுமா”என்று பவ்யமாக கேட்டார்.

உடனே ரமேஷ்”அப்படியா.எனக்கு தெரியவே தெரியாது.கேக்கவே ரொம்ப சந்தோஷமா இரு க்கு.நான் இப்பவே அந்த ‘ஸ்தாபனத்துக்கு’ ரெண்டு கோடி ரூபாய்க்கு ஒரு ‘செக்’தறேன்” என்று சொ ல்லி விட்டு தன் ‘ப்¡£ப் கேஸை’ திறந்து ரெண்டு கோடி ரூபாய்க்கு ஒரு ‘செக்’எழுதி தாத்தா கையிலே கொடுத்து “தாத்தா,இந்தாங்கோ.இந்த் ‘செக்கை’ உங்க கையாலே மானேஜர் கிட்டே குடுங்கோ” என்று சொல்லி ‘செக்கை’ அவர் கையிலே கொடுத்தான்.தாத்தாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அவர் ‘செக் கை’ ரமேஷ் கையிலே இருந்து வாங்கி மானேஜர் கிட்டேகொடுத்தார்.ரமேஷ் “சார்,இந்த ‘டொனேஷ னை’ தாத்தா குடுத்தாப் போட்டு அவர் பேர்லே ஒரு ரசீது குடுங்க”என்று சொன்னதும் அந்த மானே ஜர் அந்த செக்கை வாங்கிக் கொண்டு விசு பேர்லே ஒரு ரசீதை ரமேஷிடம் கொடுத்தார்.

பெரியவர் ஆச்சரியப் பட்டுக் கொண்டு “நான் அந்த ரெண்டு கோடி ரூபாய் குடுத்ததா, என் பேர்லே ரசீது போடச் சொல்லி இருகயேப்பா. இருக்கே.நான் என் வாழ் நாள்ளே,இருபதாயிரம் ரூபாய் க்கு மேலே ஒரு சல்லி காசு கூட பாத்ததே இல்லே.நான் ரெண்டு கோடி ‘டொனேஷன்’…..” என்று சொல்லி தன் கண்களில் வழிந்த கண்ணீரை தோள் மேலே போட்டுக் கொண்டு இருந்த துண்டினால் துடைத்து கொண்டார்.அவருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.ரமேஷ் கையைப் பிடித்துக் கொண்டு “உண்மையிலே நீ ஒரு கோடீஸ்வரன் தான்.நானும்,என் பொண்ணு காயத்திரியும்,என் பேத்தி லதா வும் போன ஜென்ம்த்லெ ரொம்ப புண்ணீயம் பண்ணி இருக்கோம்ன்னு நினைக்கிறேன்”என்று சொ ல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் அந்த மானேஜரைப் பார்த்து “இந்த மடத்லே வேறே என்ன என்ன நல்ல காரியங்கள் நடத்திண்டு வறேள்”என்று கேட்டான்.அவர் உடனே ”நாங்க பால் கறக்கும் பசுக்கள் பால் கறக்க நிறுத்தி விட்ட பிறகு,அவைகளை கடைசி காலம் வரை பாதுகாத்து வந்து,அந்த பசு இறந்த பிறகு ‘கிரம்மா’ மந்திரங்கள் எல்லாம் சொல்லி அந்த பசுவை அடக்கம் பண்றோம்.மத்த பசுக்களை எல்லாம் நல்ல தீவனம் போட்டு வளத்து வரோம்.இதுக்கு நாங்க “கோ சம்ரக்ஷண நிதி”ன்னு ஒரு ‘ஸ்தாபனம்’ நடத்திண்டு வறோம்”என்று சொன்னவுடன், ரமேஷ்”இதுவும் ஒரு நல்ல ‘ஸ்தாபனம்’ தான்,நான் அந்த ‘ஸ்தாபனத்துக்கு’என் பேர்லே ஒரு ரெண்டு கோடி ரூபாய் ‘டொனேஷன்’ தறேன்” என்று சொல்லி விட்டு அந்த ‘ஸ்தாபனத்துக்கு’ ரெண்டு கோடி ரூபாய்க்கு ஒரு ‘செக்’ கொடுத்தான். உடனே மடத்து மானேஜர் ரமேஷ் பேரைப் போட்டு ஒரு ரசீதை ரமேஷ் கையில் கொடுத்தார்.வேத பாராயணம் நடந்து முடிந்தவுடன் ரமேஷ் தத்தாவிடமும் மானேஜர் இடமும் சொல்லிக் கொண்டு ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான்.இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு படுக்கப் போனான்.படுத்து க் கொண்டேசுவாமி படத்தை பார்த்து ‘என் பணத்தை இன்னைக்கு இன்னும் ரெண்டு நல்ல காரியத்து க்கு குடுக்க வச்சதுக்கு ரொம்ப நன்றி’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *