தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2019
பார்வையிட்டோர்: 5,403 
 
 

அத்தியாயம்-26 | அத்தியாயம்-27 | அத்தியாயம்-28

ஆனந்த வசந்தி நிச்சியதார்த்தம் Green Park ஹோட்டலில் மிக விமா¢சையாக நடந்தது. ரமேஷ் ‘பாக்டரி’யின் எல்லா ‘சீனியர் ஆபீஸ்ர்களும்’ மார்க்கபத்து கம்பனியின் எல்லா ‘சீனியர் ஆபீஸ்ர்களும்’மரகதம் ஆபீஸ் எல்லா ‘சீனியர் ஆபீஸ்ர்களும்’,ஆனந்த் ‘ப்ரெட்ண்ட்ஸூகளும்’ சந்தோஷ் ‘ப்ரெண்ட்ஸ்களும்’,வசந்தி ‘ப்ரெண்ட்ஸ்களும்’ கலந்துக் கொண்டு,ரமேஷ் ஏற்பாடு பண்ணி இருந்த ‘ஸ்பெஷல் டின்னரை’சாப்பிட்டுவிட்டு போனார்கள்.

ஒரு வாரம் போனதும் மார்க்கபந்து ஆனந்த் வசந்தி கல்யாண முஹுர்த்த நாளை சொன்னதும் இரு குடும்பத்தாரும் கல்யாணத்துக்கு வேண்டிய ‘டிரஸ்களையும்’ மற்ற எல்லா ஏர்பாடுகளையும் செ ய்து முடித்தார்கள்.அந்த முஹுர்த்த நாளில் மார்க்கபந்து தம்பதிகள் ஆனந்தி வசந்தி கல்யா ணத்தை ஹோ ட்டல் தாஜில் விமா¢சையாக செய்து முடித்தார்கள்.கல்யணத்திற்கு ரமேஷ் ‘பாக்டரி’ ‘சீனியர் ஆபீஸர்களும்’,மார்க்கபந்துவின் ‘சீனியர் ஆபீஸர்களும்’ மரகதம் ‘ஆபீஸ்’ எல்லா ‘சீனியர் ஆபீஸ ர்களும்’ஆனந்த் ‘ப்ரெண்ட்ஸூகளும்’ சந்தோஷ் ‘ப்ரெண்ட்ஸூகளும்’,வசந்தி ‘ப்ரெண்ட்ஸூகளும்’ வந்து இருந்து தம்பதிகளுக்கு நிறைய ‘கிப்ட்’களை கொடுத்து விட்டு,கல்யாண சாப்பாட்டை சாப் பிட்டு விட்டு,மணமக்களை ஆசீர்வாதம் பண்ணி விட்டுப் போனார்கள்.அன்று இரவே வாத்தியாரை வைத்துக் கொண்டு இரு குடும்பதாரும்,அந்த ஹோட்டலில் அவர்கள் ‘சாந்தி முஹுர்த்ததை’யும் செய்து முடித்தார்கள்.

ரமேஷ் அவர்கள்‘ஹனி மூனுக்கு’ ஸ்விட்சர்லாண்ட் போக ஏர் டிக்கட்டையும் ஹோட்டல் புக்கிங் கையும் பண்ணினான்.ரமேஷ் தம்பதிகளும்,மார்க்கபந்து தம்பதிகளும் ‘ஏர் போர்ட்டு’க்குப் போய் ஆனந்த் வசந்தியை ‘ப்லேன்’ஏற்றி விட்டு வந்தார்கள்.ரெண்டு வாரம் ஆனந்த் வசந்தியுடன் ‘ஹனி மூனை’ நன்றாக ‘எஞ்சாய்’ பண்ணி விட்டு சென்னைக்குத் திரும்பினார்கள்.அவர்கள் சென்னை திரு ம்பி வருவதற்குள் ‘ப்லாட்’ ரெடி ஆகி விடவே,அந்த ‘ப்லாட்டு’க்கு ரெண்டு குடும்பத்தாரும் ‘கிரு ஹப்பிரவேசத்தை’ முடித்து ஆனந்தையும் வசந்தியையும் தனிக் குடித்தனம் வைத்து சந்தோஷப் பட் டார்கள்.லதாவுக்கும்,காயத்திரிக்கும் ஆனந்த் தங்களை விட்டு விட்டு தனிக் குடித்தனம் போனது கொஞ்ச மன வருத்தத்தை கொடுத்தது.அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்.அவர்களுடன் சந்தோ ஷ் இருந்து வந்ததால் அவர்கள் அவனுடன் சந்தோஷமாய் இருந்து வந்தார்கள்.

நாலு வருஷம் ஆனதும் ஆனந்த வசந்திக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து.இரு குடும் பத்தாரும் ‘தொட்டில் போடும் விழா’’புண்யாவசனம்’,‘நாம கரணம்’ விழாவில் கலந்துக் கொண்டு ஆனந்த் வசந்தி குழந்தைக்கு ‘ப்ரகாஷ்’ என்று பேர் வைத்து சந்தோஷப் பட்டார்கள்.ஒரு வருஷம் ஆனதும் வசந்தின் ஆண்டு விழாவை இரு குடும்பதாரும் ‘கிராண்டாக’ ஒரு பெரிய ஹோட்ட்லில் கொண்டாடினார்கள்.

ஒரு நாள் ரமேஷ் சந்தோஷமாக இருந்த போது லதா அவனிடம் “நம்ம சந்தோஷ்க்கு வயசு ஆயிண்டு வருதே.அவனுக்கு ஒரு நல்ல பொண்ணைப் பாத்து நாம கல்யாணம் பண்ணி வச்சுட்டா, நாம் நிம்மதியா இருந்து வரலாம்”என்று சொன்னாள்.உடனே ரமேஷ் “ஆமாம் லதா நீ சொல்றது ரொ ம்ப சரி.நான் நாளைக்கே ‘ஹிண்டு பேப்பலே’ ‘மேட்ரிமோனியல்’ விளம்பரம் தறேன் லதா”என்று சொன்னான்.லதாவும்,காயத்திரியும் சந்தோஷப் பட்டார்கள்.ஒரு வாரம் ஓடி விட்டது.’சந்தோஷ்க்கு யாரும் ஒரு பதிலும் சொல்லவில்லையே’ என்று லதாவும் காயத்திரியும் கவலைப் பட்டார்கள்.மெல்ல ரமேஷப் பார்த்து லதா”ஒரு வாரம் ஓடிப் போயிடுத்தே.இது வரைக்கும் யாரும் சந்தோஷ்க்கு பொண்ணு கொடுப்பதைப் பத்தி பேசலையே” என்று கவலையுடன் கேட்டாள்,ரமேஷ் ‘கூலாக’“சந்தோஷ்க்கு ஒரு நல்ல பொண்ணு கிடைப்பா லதா.நீ கவலைப் படாம இருந்து வா.எது எது எப்ப நடக்கணும்னோ.அப்ப தான் நடக்கும் என்று வேதாந்தமாக சொன்னான்.
ரமேஷ் பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான்.அவனுக்கு போன் வந்தது.செல் போனை ஆன் பண்ணிப் பேசினான் ரமேஷ்”சுரேஷ் ஹியர்” என்று சொன்னான்.அடுத்த பக்கத்தில் இருந்து “குட் மார்னிங்க மிஸ்டர் சுரேஷ்.என் பேர் ராமமூர்த்தி.நான் ITC கம்பனியின் ‘வைஸ் ப்ரெஸிடெண்ட்டா’ இருக்கேன்.நீங்க ‘ஹிண்டு பேப்பர்லே’ உங்க சன்னுக்கு குடுத்த ‘மேட்ரிமோனியல் அடவர்ட்டை’ பாத்தேன்.உங்க ‘சன்’னுக்கு என் ‘டாட்டர்’ ரமாவை பாக்கலாம்ன்னு ஆசைப் படறேன்” என்று சொன் னார்.ரமேஷ் “உங்க பெண் ரமா என்ன படிச்சு இருக்கா” என்று கேட்டான்.ராமமூர்த்தி “என் பெண் ரமா CAலே ‘கோல்ட் மெடலிஸ்ட்’. பாஸ் பண்ணி ட்டு ‘ஸ்டேட்ஸ்’ போய் MBA ‘பைனான் ஸ்’பண்ணீட்டு இந்த வருஷம் திரும்பி வந்து இருக்கா.இப்போ என் கம்பனிலே ‘பைனான்ஸ்’ செக்ஷ ன்லே’வேலை பண்ணிண்டு வரா.எனக்கு ரமா ஒரே பொண்ணு.வயசு இருபத்தி ஐஞ்சு.நானும் என் ‘வைப்பும்’ உங்க ஆத்துக்கு ஜாதக பா¢வர்த்தணைக்கு ‘சண்டே’ காத்தாலே ஒரு ஒன்பது மணிக்கு வரலாமா” என்று கேட்டார்.உடனே ரமேஷ் “வாங்கோ மிஸ்டர் ராமமூர்த்தி”என்று சொன்னான்.

ரமேஷ் லதாவை கூப்பிட்டு “லதா,ராமமூர்த்தின்னு ஒருத்தர் பேசினார்.அவருக்கு ரமான்னு ஒரு பொண்ணாம்.அவ CA ‘கோல்ட் மெடலிஸ்ட்’.அமொ¢க்கா போய் MBA ‘பைனான்ஸ்’பண்ணீட்டு இந்த வருஷம் திரும்பி வந்து இருக்காளாம்.அவளுக்கு வயசு இருபத்தி ஐஞ்சாம்.அவர் ‘வைப்பை’ அழைச்சிண்டு அவர் பெண்ணுக்கு ஜாதகப் பா¢வர்த்தணைக்கு இந்த ‘சண்டே’காத்தாலே ஒன்பது மணிக்கு வரேன்னு சொன்னார்”என்று சொன்னான்.உடனே லதா ”இந்தப் பொண்ணும் அமொ¢க்கா போய் MBA படிச்சுட்டு வந்து இருக்காளா”என்று ஆச்சரியமாக கேட்டாள்.உடனே ரமேஷ் “ஆமாம் லதா இந்தக் காலத்லே எல்லா பையன்களும்,பொண்களும் அமொ¢க்கா போய் படிச்சுட்டு தான் வரா” அங்கே படிப்பு ரொம்ப நன்னா இருக்கும்”என்று சொன்னான்.

கொஞ்ச நேரம் போனதும் ரமேஷ் ஆனந்துக்கு ‘போன்’ பண்ணி “ஆனந்த், சந்தோஷ்க்கு ஒரு இடம் வந்து இருக்கு.அவர் ITC கம்பனிலே ‘வைஸ் ப்ரெஸிடெண்ட்டா இருந்து வராராம்.அவருக்கு ஒரே பொண்ணு.பேர் ரமா.CAலெ ‘கோல்ட் மெடலிஸ்ட்.‘ஸ்டேட்ஸ்’ போய் MBA பண்ணீட்டு இந்த வருஷம் திரும்பி வந்து இருக்காளாம்.ரமா அவர் கம்பனிலே ‘பைனாஸ் செக்ஷன்லே வேலை பண்ணி ண்டு வராளாம்.வயசு இருபத்தி ஐஞ்சு ஆறதாம்.அவர் இந்த ‘சண்டே’காத்தாலே நம்ம ஆத்துக்கு ஜா தகப் பரிவர்த்தணைக்கு வரேன்னு போன் பண்ணீச் சொன்னார்.நீயும்,வசந்தியும்,குழந்தையும் இங்கே காத்தாலேயே வந்துடுங்க.இங்கேயே ‘ப்ரேக் பாஸ்ட்டும்’ ‘லன்ச்சும்’ சாப்பிட்டு விட்டு சாயங்காலமா நீங்க ஆத்துக்குப் போகலாம்”என்று சொன்னான்.”நான் வசந்தியையும்,ப்ரகாஷையும்,நம்மாத்துக்கு ‘சண்டே’ காத்தாலே அழைச்சுண்டு வறேன்”என்று சொன்னான்.ஆனந்த் வசந்திக்கு இந்த ‘குட் நியூஸை’ சொன்னான்.

ஞாயித்துக் கிழமை ரமேஷ் காலையிலே எழுந்து குளித்து விட்டு கருமாரி அம்மன் கோவிலுக் குப் போய் சுவாமி தா¢சனம் பண்ணி விட்டு விபூதி குங்குமப் பிரசாததை வாங்கிக் கொண்டு ‘ப்லாட் டுக்கு’வந்தான்.ஆனந்தும், வசந்தியும்,ப்ரகாஷூம் ‘ப்லாட்டுக்கு’ வந்து இருந்தார்கள்.ரமேஷ் விபூதி யையும் குங்குமத்தையும் எல்லோருக்கும் கொடுத்தான்.அப்புறம் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்துக் கொண்டு சமையல்கார மாமா பண்ணி இருந்த ‘ஸ்பெஷல் ப்ரேக்பாஸ்ட்டை’ ரசித்து சாப்பபிட்டார் கள்.எல்லோரும் காபியைக் குடித்து விட்டு நன்றாக ‘டிரஸ்’ பண்ணிக் கொண்டு ராமமூர்த்தி தம்பதி கள் வரவுக்காக காத்துக் கொண்டு இருந்தர்கள்.லதா மணியை கடைக்கு அனுப்பி தேங்காய்,நிறைய புஷ்பம்,வெத்திலை,பாக்கு,எல்லாம் வாங்கி வரச் சொன்னாள்.

மணி ஒன்பதடித்தது.’காலிங்க் பெல்’ அடித்தது.லதா போய் வாசல் கதவை திறந்தாள் வாசலில் ராமமூர்த்தியும் அவர் ‘வைப்பும்’ நின்றுக் கொண்டு இருந்தார்கள்.லதா அவர்களைப் பார்த்து “வாங்கோ,வாங்கோ”என்று சொல்லி அவர்களை உள்ளே வரச் சொன்னாள்.உள்ளே வந்து “நமஸ்காரம் என் பேர் ராமமூர்த்தி,என் வைப் சுமதி” என்று அறிமுகம் பண்ணிக் கொண்டார்.ரமேஷ் எழுந்து நின்று “வாங்கோ,உக்காருங்கோ” என்று சொல்லி சோபாவைக் காட்டினான்.அவர்களும் உட்கார்ந்துக் கொண்டார்கள்.சுமதி தான் வாங்கி வந்த தேங்காய்,பழங்கள், பூ,ரவிக்கை துண்டு,வெத்திலை, பாக்கு எல்லாவற்றையும் லதாவிடம் கொடுத்தாள்.லதா அவைகளை வாங்கிக் கொண்டு போய் பூஜை ரூமில் வைத்து விட்டு வந்து சோபாவில் அவர்கள் எதிரில் உட்கார்ந்துக் கொண்டாள்.ரமேஷ் “இவ என் ‘வைப்’ லதா,இவா என் மாமியார்,இது என் பெரிய ‘சன்’ஆனந்த்.அவன் ‘வைப்’ வசந்தி.அவா குழந் தை ப்ரகாஷ்.இவன் தான் என் ‘செகண்ட் சன்’ சந்தோஷ்” என்று சொல்லி தன் குடும்பத்தை அறிமுக ப் படுத்தினான்.

”ரொம்ப சந்தோஷம்.உங்க ரெண்டாவது ‘சன்’னுக்கு என் பெண் ரமா ஜாதகத்தைக் குடுத்து ட்டு,உங்க ‘சன்’ ஜாதகத்தை வாங்கிண்டு போகலாம்ன்னு நாங்க வந்தோம்”என்று சொல்லி தன் ‘ப்¡£ ப் கேஸை’த் திறந்து தன் பென் ரமாவின் ஜாதகத்தை எடுத்தார்.உடனே சமையல்கார மாமா எல்லோ ருக்கும் சூடா ‘ஸ்டராங்கா’ காபியை கொண்டு வந்து வைத்தார்.எல்லோரும் அவர் கொண்டு வந்துக் கொடுத்த காபியைக் குடித்தார்கள்.ராமமூர்த்தி காபியைக் குடித்துக் கொண்டே “காப்பி பேஷா இருக்கு மாமா”என்று சொல்லி சமையல் கார மாமாவை புகழ்ந்தார். ராமமூர்த்தி எழுந்து நின்று கொண்டு தன் பெண் ரமாவின் ஜாதகத்தையும்,போட்டாவையும் ரமேஷின் கையில் கொடுத்தார்.ரமேஷ் எழுந் து நின்றுக் கொண்டு அவர் கொடுத்த ஜாதகத்தையும் போட்டாவையும் கையில் வாங்கிக் கொண்டு சந்தோஷ் ஜாதகத்தை அவர் கையில் கொடுத்தான்.சந்தோஷ் ஜாதகத்தை எழுந்து நின்று வாங்கிக் கொண்டார் ராமமூர்த்தி.

“என் பெரிய பையன் ஆனந்த்,சென்னை I.I.Tலே ‘கெமிக்கல் இஞ்சினியா¢ங்க்’ ‘பாஸ்’ பண்ணி ட்டு,அமொ¢க்கா போய் MS பண்ணிட்டு வந்து, பதி மூனு வருஷம் ஆறது.அவனுக்குக் கல்யாணம் ஆயி ஆறு வருஷம் ஆறது.அவன் கிண்டி ‘பாக்டரியை’ கவனிச்சுண்டு வறான்.என் ‘செகண்ட் சன்’ சந்தோஷூம் I I Tலே ‘கெமிக்கல் இஞ்சினியரிங்க்’ ‘பாஸ்’ பண்ணி ட்டு அமொ¢க்கா போய் MS பண் ணிட்டு,சென்னைக்கு வந்து ஏழு வருஷம் ஆறது.அவன்அம்பத்தூர் ‘பாக்டரியை’ கவனிச்சுண்டு வறான்”என்று சொல்லி தன்னுடைய ரெண்டு பையன்களைப் பற்றியும் சொன்னான்.ராமமூர்த்தியும், சுமதியும் ரமேஷ் காலை பற்றிக் கவலையுடன் கேட்டதற்கு ரமேஷ் தன் குடும்ப ‘ட்ராஜடியை’ சுருக்க மாக சொன்னான்.இருவரும் மிகவும் வருத்தப் பட்டார்கள்.

சந்தோஷ் ஜாதகத்தை தன் ‘ப்¡£ப் கேஸில்’ வைத்துக் கொண்டே ராமமூர்த்தி “நான் ரெண்டு பேர் ஜாதகத்தையும் ஜோஸ்யர் கிட்ட காட்டி ஜாதக பொருத்தம் பார்த்துட்டு உங்களுக்குப் போன் பண்றேன்”என்று சொன்னதும் ரமேஷ்”நானும் ஜாதகப் பொருத்தம் பாக்கறேன்” என்று சொன்னான். கொஞ்ச நேரம் ஆனதும் “அப்போ நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்”என்று சொல்லி ராமமூர்த்தி எழுந் துக் கொண்டார்.லதா சுமதிக்கு தேங்காய்,வெத்திலை,பாக்கு,ரவிக்கைத் துண்டு,ரெண்டு ஆப்பிள் எல்லாம் வைத்து வெத்திலை பாக்கு கொடுத்தாள்.சுதாவும் லதா கொடுத்த வெத்திலை பாக்கை வாங்கிக் கொண்டாள்.ராமமூர்த்தி தன் மணைவி சுதாவை அழைத்துக் கொண்டு ‘ப்லாட்டை’விட்டு வெ ளீயே வந்தார்.ரமேஷூம் லதாவும் அவர்கள் கூட கீழே போய் அவர்கள் கார் ஏறினதும் அவர்களுக்கு ‘டா’’டா’ காட்டி விட்டு ‘ப்லாட்டுக்குள்’ வந்தார்கள்.

உள்ளே வந்த ரமேஷ்”பொண்ணு போட்டோவப் பார்த்தேளா,எப்படி இருக்கா.முக்கியமா சந்தோ ஷ்க்குப் பிடிச்சு இருக்கா”என்று கேட்டுக் கொண்டே வந்து சோபாவில் உட்கார்ந்தான்.வசந்தி ரமா போட்டாவைப் பார்த்து விட்டு “பொண்ணு ரொம்ப நன்னா இருக்கா.சந்தோஷ்க்கு ரொம்ப நல்ல ஜோடி ப் பொருத்தம்”என்று சொன்னாள்.வசந்தி சொல்லிக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் ரமாவின் போட்டாவை வாங்கிப் பார்த்தான்.போட்டோவில் பார்க்க ரமா ரொம்ப நன்றாகவே இருந்தாள்.ரமேஷூ ம் லதாவும் ரமா போட்டோவைப் பார்த்தார்கள்.லதா ”பொண்ணு கொஞ்சம் ‘மார்டனா’ இருப்பா போல இருக்கு.ஆனா பாக்க லக்ஷணமா இருக்கா”என்று சொன்னதும் ரமேஷ்” எனக்குப் பிடிச்சி இருக்கு. சந்தோஷ் பொண்ணு பார்க்க ரொம்ப நன்னா இருக்கா.இந்தா போட்டோவை பார் “என்று சொல்லி போ ட்டோவை சந்தோஷ் கையில் கொடுத்தான் ரமேஷ்.சந்தோஷ் அப்பா கொடுத்த பொண்ணு போட் டோவைப் பார்த்தான்.சந்தோஷ் “போட்டோலே பொண்ணு ‘ஓ.கே’ ப்பா.மத்தது எல்லாம் நேரே பாத்து அவ கூடப் பேசின பிறகு தான் நான் சொல்ல முடியும்”என்று சொன்னான்.காயத்திரியும் போட்டோ வைப் பார்த்தாள்.ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.ரமேஷ்,லதா காயத்திரி மூனு பேரும் ஆனந்த் வசந்தி தனிக் குடித்தன அனுபவம் பத்திக் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

சமையல் கார மாமா எல்லோருக்கும் தட்டைப் போட்டு அவர் பண்ணி இருந்த ‘ஸ்பெஷல் சாப்பாட்டை’பறிமாறினார்.சாப்பிட்டு முடிந்ததும், ஆனந்தும், வசந்தியும்,எல்லோரிடமும் சொல்லி கொண்டு ப்ரகாஷை அழைத்துக் கொண்டு கிளம்பிப் போனான்.சந்தோஷூம் சாப்பிட்டு விட்டு வெளியே போ னான்.ரமேஷ் ஆத்து ஜோஸ்யரை ஆத்துக்கு வரச் சொல்லி சந்தோஷ் ரமா ஜாத்தகங்களை கொடுத்து பொருத்தம் பார்க்க சொன்னான்.அவர் ஒரு மணி நேரம் ரெண்டு ஜாதகங்களையும் பார்த்து விட்டு ரெண்டு ஜாதகமும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொல்லி விட்டு ரமேஷ் கொடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு போனார். ரமேஷ்,லதா,காயத்திரி மூவருக்கும் ரொம்ப சந்தோஷம். வெளியே போய் இருந்த சந்தோஷ் ‘ப்லாட்’டுக்கு வந்ததும் அவனிடம் “ரெண்டு பேருடைய ஜாதகங் களும்’ நன்னா பொருந்தி இருக்கும் சந்தோஷ செய்தியை ரமேஷூம் லதாவும் சொன்னார்கள்.

அடுத்த நாள் காலையில் ரமேஷ் எழுந்து,குளித்து விட்டு கோவிலுக்கு போய் விபூதி,குங்கும, பிரசாதம் வாங்கிக் கொண்டு ‘ப்லாட்’டுக்குள் நுழைந்தான்.அவன் ‘செல் போன்’ அடித்தது. ரமேஷ் போனை ஆன் பண்ணி பேச ஆரம்பித்தான்.அடுத்த பக்கத்தில் இருந்து ”நான் ராமமூர்த்தி பேசறேன். எங்க ஜோஸ்யர் ரெண்டு ஜாதகங்களும் ரொம்ப நன்னா பொருந்தி இருக்குன்னு சொல்லிட்டார்”என்று சொன்னதும் ரமேஷ் “எங்க ஆத்து ஜோஸ்யரும் ரெண்டு ஜாதங்ககளும் நன்னா பொருந்தி இருக்குன்னு சொன்னார்”என்று சொல்லி போனை ‘கட்’ பண்ண நினைத்துக் கொண்டு இருக்கும் போது ராம மூர்த்தி “இனிமே சந்தோஷ் ரமா ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தருக்கு பிடிக்கணும்” என்று சொன்னார்.ரமேஷூம் “ஆமாம்,நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்”என்று சொல்லி ஆமோதித்தான். ரமேஷ் லதாவிடமும் காயத்திரியிடமும் ராமமூர்த்தி சொன்னதை சொன்னான்.அவர்கள் இருவரும் “ஆமாம்,சந்தோஷ் ரமா ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருதருக்கு பிடிச்சு இருக்கறது தான் ரொம்ப முக்கியம்”என்று சொன்னார்கள்.

ஒரு அரை மணி நேரம் கழித்து ராமமூர்த்தி போன் பண்ணி “’அடையார் கேட்’ ஹோட்டல்லே வர ‘சண்டே’ அன்னைக்கு ரமா சந்தோஷ்க்கு ரெண்டு பேர் உக்காற ஒரு ‘சீட்டை’ ‘லன்சு’க்கு ’புக்’ பண்ணி இருக்கேன்.நீங்க தயவு செஞ்சு சந்தோஷை அங்கே அனுப்ப முடியுமா.இனிமே அவா ரெண் டு பேருடைய மனப் பொருத்தம் தானே ரொம்ப முக்கியம்”என்று சொன்னவுடன் ரமேஷ்” சூர், நான் சந்தோஷை அடுத்த ‘சண்டே’ ‘அடையார் கேட் ஹோட்டலுக்கு’ ‘லன்சு’க்கு அனுப்பறேன்” என்று சொல்லி போனை கட் பண்ணினான்.உடனே லதாவும்,காயத்திரியும் ”இப்போ இது தான் ‘பாஷன்’ போல இருக்கு.பையன் அவா ஆத்துக்குப் போய் பொண்ணு பாக்கற வழக்க்மே போயிடுத்து” என்று சொல்லி வருத்தப் பட்டார்கள்.உடனே ரமேஷ் “நீங்க சொல்றது எல்லாம் அந்த காலத்து வழக்கம். இப்போ எல்லாம் அந்த மாதிரி எல்லா பொண்ணேப் பெத்த எந்த அம்மாவும்,அப்பாவும்,பண்றதே இல்லே”என்று சொல்லி சிரித்தான்.ரமேஷ் சொன்னதற்கு காயத்திரியும்,லதாவும் ஒன்னும் சொல்ல வில்லை.சும்மா இருந்து விட்டார்கள்.

அடுத்த ‘சண்டே’ சந்தோஷ் ‘அடையார் கேட்’ ஹோட்டலுக்கு போய் ரமாவை ‘மீட்’ பண்ணி, இருவரும் ‘லன்ச்’ சாப்பிட் டுக் கொண்டே ரெண்டு மணி நேரம் பேசி ஒருவர் மனதை மற்றோருவர் புரிந்து கொண்டார்கள்.பிறகு சந்தோஷப் பட்டு பெற்றோர்களுக்கு போன் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாகள்.ரமேஷூம்,லதாவும்,காயத்திரியும் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்.அதே போல ராமமூர்த்தியும்,சுமதியும் சந்தோஷப் பட்டார்கள்.

அடுதத நாளே ரமேஷ் ஆத்து வாத்தாயருக்கு போன் பண்ணி சந்தோஷ் ரமா நிச்சியதார்தத்து க்கு ஒரு மூஹுர்த்த நாள் குறித்து விட்டு ரமேஷ் ஹோட்டல் ‘தாஜ்’ஜுக்கு ப் போன் பண்ணி ‘டேட்டையும் டயத்தையும்’ சொல்லி நிச்சியதார்த்தம் பண்ண இடத்தை ‘ரிசர்வ்’ பண்ணினான்.ராமமூர் த்திக்கு போன் பண்ணி ‘டேட்டையும் டயத்தையும்’ சொல்லி அவர்களை ஹோட்டல் ‘தாஜ்ஜுக்கு’ வந்து,சந்தோஷ் ரமா நிச்சியதார்தத்தை ‘அடெண்ட்’ பண்ணிட்டு,‘டின்னர்’ சாப்பிட வர சொன்னான். அவரும் ஒத்துக் கொண்டு வருவதாக சொன்னார்.ரமேஷ் ஆனந்த்,வசந்திக்கு போன் பண்ணி சந்தோ ஷ் ரமா நிச்சியதார்த்த சமாசாரத்தை சொல்லி அவர்களை அன்றைய தினம் ஹோட்டல் ‘தாஜ்’ஜுக்கு வரச் சொன்னான்.அவர்களும் வருவதாக சொன்னார்கள்.

அடுத்த நாள் ராமமூர்த்தி ரமேஷூக்கு போன் பண்ணீ ராமமூர்த்தி தயங்கிக் கொண்டே”எங்க கம்பனிலே என்னை போல ‘சதர்ன் சோனில்’இருக்கும் ஆறு ‘வைஸ் பிரசிடெண்டுகளுக்கு’ அபிராம புரத்லே,ஆறு ‘இண்டிபென்டண்டண்ட் லக்ஸரி ப்லாட்டை’ கட்டி தர முடிவு பண்ணி,அதை கட்டி ண்டு வறா.அந்த ‘லக்ஸரி ப்லாட்‘இப்போ முடியற ‘ஸ்டேஜ்’.நான் ’ரிடையர்’ஆன பிறகு,நானும் சுமதியும் என் ‘ப்ரெண்ட்ஸ்’ பண்ணது போல கம்பனி பங்களாவை காலி பண்ணிட்டு ‘க்ளாஸிக் ஹோம்’ ’ஓல்ட் ஏஜ்ஜுக்கு’ போய் சேந்துடலாம்ன்னு இருக்கோம்.கட்டி முடிக்கிற அந்த ‘லக்ஸரி ‘ப்லா ட்டை’ நாங்க உங்க ‘சன்’ பேர்லே ‘ரெஜிஸ்தர்’ பண்ண நீங்க சம்மதம் தரணும்”என்று கேட்டார்.உடனே ரமேஷ் “நீங்க ஒரு அரை மணி ‘டைம்’குடுங்கோ.நான் என் ‘பாமிலி மெம்பர்ஸ்’களை எல்லாம் கேட் டுட்டு சொல்றேன்”என்று சொல்லி போனை ‘கட்’ பண்ணினான்.

ரமேஷ் லதாவுக்கும்,காயத்திரிக்கும் ராமமூர்த்தி சொன்னதை சொன்னான்.லதாவும் காயத்தி ரியும் திடுக்கிட்டு “இவா ரெண்டு பேரும் கல்யாணம் ஆனப்புறம் தனிக் குடித்தனம் போகப் போறாளா என்ன”என்று கேட்டார்கள்.ரமேஷ் நிதானமா “இந்த காலத்லே எந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆனப் புறம் மாமியார்,மாமனார் கூட இருந்து வரப் பிடிக்கறது.அவா ‘ஹஸ்பெண்ட் வைப்’ தனியா இருந்து வருவதை தானே விரும்பறா.நாம ‘ப்லாட்’ வாங்கிக் குடுத்த அப்புறம் ஆனந்தும் வசந்தியும் ‘நாங்க தனி குடித்தனம் போக மாட்டோம்,உங்களோடு தான் இருந்து வருவோம்ன்னு பிடிவாதம் பிடிக்கலே பாத்தேளா.தனிக் குடித்தனம் பண்ணி வரத் தானே அவா ஆசைப் பட்டா” என்று சொன்னதும் லதாவு க்கும் காயத்தா¢க்கும் ‘சாட்டை அடி’ விழுந்தது போல் இருந்தது.ஒன்னும் பேசாமல் சும்மா இருந்து வந்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் லதா ரமேஷப் பார்த்து “எங்களுக்கும் அவா தனி குடித்தனம் பண்ணி வறதிலே பூரண சம்மதம்ன்னு,நீங்க சம்மந்தி மாமா கிட்டே சொல்லிடுங்கோ”என்று கோவத்திலே சொன்னாள்.காயத்திரி ஒன்னும் சொல்லாமல் சும்மா இருந்தாள் ரமேஷ் போன் பண்ணி “சந்தோஷூம் ரமாவும் தனி குடித்தனம் பண்ணீ வர எங்க எலோருக்கும் பூரண சம்மதம்.அந்த ‘இனிபெண்டண்ட் ‘லக்சரி ப்லாட்டை’சந்தோஷ் பேர்லெ ‘ரெஜிஸ்தர்’ பண்ண எங்களுக்கு ஒரு ஆ§க்ஷபனையும் கிடை யாது.நாங்க அந்த ப்லாட்டுக்கு முழுக்க ‘இன்டீரியர் டெகரேட்’ பண்ணிடறோம்”என்று சொன்னதும் ராமமூர்த்தி தம்பதிகள் ‘ரொம்ப சந்தோஷம்’ என்று சொன்னதும் போனை ‘கட்’ பண்ணினான்.ரமேஷ் அந்த வார கடைசியிலே எல்லோரையும் அழைத்துக் கொண்டு போய் சந்தோஷ் நிச்சியதார்தத் துக்கு எல்லோருக்கும் ‘காஸ்ட்லியான டிரஸ்களை’ வாங்கினான்.ராமமூர்த்தி தம்பதிகளும் ரமா நிச்சிய தார்த்தத்துக்கு அவர்கள் மூவருக்கும் ‘காஸ்ட்லியான’ ‘டிரஸ்களை’ வாங்கிக் கொண்டார்கள்.

சந்தோஷ் ரமா நிச்சியதார்த்தம் ‘தாஜ்’ ஹோட்டலில் மிக விமா¢சையாக நடந்தது.ரமேஷ் ‘பாக் டரி’யின் எல்லா‘சீனியர் ஆபீஸ்ர்களும்’ ராமமூர்த்தி கம்பனியின் எல்லா ‘சீனியர் ஆபீஸ்ர்களும்’ ஆனந்த்,வசந்தி ‘ப்ரெண்ட்ஸ்களும்’,சந்தோஷ் ‘ப்ரெண்ட்ஸ்களும்’,ரமா ‘ப்ரெண்ட்ஸ்களும்’, மார்க்கபந்துவும்,அவர் மணைவியும் கலந்துக் கொண்டு,ரமேஷ் ஏற்பாடு பண்ணி இருந்த ‘ஸ்பெஷல் டின்னரை’ சாப்பிட்டுவிட்டு போனார்கள்.

ஒரு வாரம் போனதும் ராமமூர்த்தி தம்பதிகள் சந்தோஷ் ரமா கல்யாண முஹுர்த்த நாளை சொல்லி,கல்யாணத்தை ITC Grand Hotelலில் நடந்த முடிவு பண்ணி இருக்கும் சந்தோஷ சமாசார த்தை ரமேஷ் தம்பதிகளிடம் சொன்னார்கள்.இரு குடும்பத்தாரும் கல்யாணத்துக்கு வேண்டிய ‘டிரஸ்க ளையும்’ மற்ற எல்லா ஏர்பாடுகளையும் செய்து முடித்தார்கள்.அந்த முஹுர்த்த நாளில் ராமமூர்த்தி தம்பதிகள் சந்தோஷ் ரமா கல்யாணத்தை ITC Grand Hotelலில் விமா¢சையாக செய்து முடித்தார்கள். கல்யணத்திற்கு ரமேஷ் ‘பாக்டரி ‘சீனியர் ஆபீஸர்களும்’, ராமமூர்த்தி ‘கம்பனி சீனியர் ‘ஆபீஸர்க ளும்’,ஆனந்த்,வசந்தி ‘ப்ரெண்ட்ஸ்களும்’,சந்தோஷ் ‘ப்ரெண்ட்ஸ்களும்’,ரமா ‘ப்ரெண்ட்ஸ்களும் மார்க்கபந்தும்,அவர் மணைவியும் வந்து இருந்து தம்பதிகளுக்கு நிறைய ‘கிப்ட்’ களை கொடுத்து விட்டு,கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு,மணமக்களை ஆசீர்வாதம் பண்ணி விட்டுப் போனார் கள்.

அன்று இரவே வாத்தியாரை வைத்துக் கொண்டு இரு குடும்பதாரும் அந்த ஹோட்டலில் அவர்க ள் ‘சாந்தி முஹுர்த்தததை’யும் செய்து முடித்தார்கள்.
ஆனந்துக்கு செய்த மாதிரியே ரமேஷ் சந்தோஷ் ரமா ‘ஹனி மூனுக்கு’ ஸ்விட்சர்லாண்ட் போக ‘ஏர் டிக்கட்டையும்’ ஹோட்டல் ‘புக்கிங்கையும்’ பண்ணினான்.ரமேஷ் தம்பதிகளும்,ராமமூர்த்தி தம்பதி களும் ‘ஏர் போர்ட்டு’க்குப் போய் சந்தோஷ் ரமாவை ‘ப்லேன்’ஏற்றி விட்டு வந்தார்கள்.ரெண்டு வாரம் சந்தோஷ் ரமா ‘ஹனி மூனை’ நன்றாக ‘எஞ்சாய்’ பண்ணி விட்டு சென்னைக்குத் திரும்பினார்கள். அவர்கள் சென்னை திரும்பி வருவதற்குள் ‘ப்லாட்’ ரெடி ஆகி விடவே,அந்த ‘ப்லாட்டு’க்கு ரெண் டு குடும்பத்தாரும் ‘கிருஹப்பிரவேசத்தை முடித்து சந்தோஷ் ரமாவை தனிக் குடித்தனம் வைத்து சந்தோஷப் பட்டார்கள்.

லதாவுக்கும்,காயத்திரிக்கும் சந்தோஷூம் தங்களை விட்டு விட்டு தனிக் குடித்தனம் போனது ரொம்பவே மன வருத்தத்தை கொடுத்தது.இருவரும் ரமேஷைப் பார்த்து “ஆனந்த் தனிக் குடித்தனம் போயிட்டான்.அதுவே எங்களுக்கு ரொம்ப வருத்தத்தே தந்தது.இந்த சந்தோஷாவது,நம்ப கூட இரு ந்து வருவான்னு நினைச்சோம்.அவனும் தனி குடித்தனம் போயிட்டானே.இப்ப ‘ப்லாட்’டே வெறிச் சோடி இருக்கே.உங்களுக்கு வருத்தமே இல்லையா”என்று கேட்டதற்கு ரமேஷ் சிரித்துக் கொண்டே ”இது தான் இன்றைய ‘ட்ரெண்ட்’.அந்தப் பழைய கால வழக்கம் எல்லாம் மலை ஏறிடுத்து.நீங்க ரெண் டு பேரும் இதை நன்னா புரிஞ்சக்கணும்”என்று சொன்னான்.ரமேஷ் சொன்னது காயத்திரிக்கும் லதா வுக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.மன வெறுப்புடன் சும்மா இருந்து வந்தார்கள்.

ஆனந்த் போலவே,சந்தோஷூக்கும், ரமாவுக்கும் நாலு வருஷம் ஆனதும் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து.இரு குடும்பத்தாரும் ‘தொட்டில் போடும் விழா’,’புண்யாவசனம்’,‘நாம கரணம்’ விழா வில் கலந்துக் கொண்டு சந்தோஷ் ரமா குழந்தைக்கு ‘வேதாந்த்’ என்று பேர் வைத்து சந்தோஷப்பட் டார்கள்.ஒரு வருஷம் ஆனதும் வேத்தந்தின் ஆண்டு விழாவை இரு குடும்பத்தாரும் ‘கிராண்டாக’ ஒரு பெரிய ஹோட்டலில் கொண்டாடினார்கள்.

ரெண்டு வருஷம் ஓடி விட்டது.“லதா,ஒரு ‘பாக்டரி’ லாபகரமா நடந்து வர முதலாவது நல்ல ‘டெக்னிகல் நாலெட்ஜ்’ இருக்கணும்.அந்த ‘டெக்னிகல் நாலெட்ஜ்’ ஆனந்த் கிட்டேயும்,சந்தோஷ் கிட் டேயும் நீறைய இருக்கு.நாம கவலைப் படவேணாம்.ரெண்டாவதா ‘பாக்டரி பைனான்ஸை’ நன்னா மானேஜ் பண்ணி வரணும்.இப்போ ஆனந்துக்கும்,சந்தோஷூக்கும் அவா ‘வைப்பே’ ‘பாக்டரி’ ‘பைனாஸை’ ‘மானேஜ்’ பண்ணிண்டு வறா.அதனாலே எனக்கு கவலையே இல்லை.ரெண்டு ‘பாக்டரி’லேயும் நல்ல லாபம் வந்துண்டு இருக்கு.இப்போ என் மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு” என்று சொன்னான் ரமேஷ்.லதா “ஆமா,ரெண்டு மாட்டு பொண்ணும் அமொ¢க்கா போய் MBA Finance பண்ணீ இருக்காளே.அமொ¢க்கா படிப்புன்னா ரொம்ப நல்ல படிப்பு இல்லையா”என்று கேட்டாள்.உடனே ரமேஷ் “ஆமாம் லதா,அமொ¢க்காவில் MBA Finance படிப்பு படிச்சு ‘பாஸ்’ பண் ணுவது ரொம்ப கஷ்டம்.இவா ரெண்டு பேரும் படிச்சு பாஸ் பண்ணீ இருக்கா.நிச்சியமா இவா ரெண்டு பேரும் ‘பைனான்ஸ்லே’ ரொம்ப திறமை உள்ளவாளா இருப்பா”என்று பெருமையாகச் சொன்னான். லதாவுக்கும்,காயத்திரிக்கும் ரொம்ப பெருமையாக இருந்தது.

ரமேஷ் லதாவையும்,காயத்திரியையும் ரெண்டு வாரம் அமொ¢க்கா அழைத்துப் போய், அவன் படித்த ‘யூனிவர்ஸிட்டி,நையாகரா நீ வீழ்ச்சி,’க்ரேட் கான்யான் பள்ளத் தாக்கு,’டிஸ்னி லாண்ட்’, கலிபோர்னியா கடற்கரை,’லாஸ் வேகாஸ்’ எல்லாம் காட்டி விட்டு சந்தோஷமாக ஒரு பெரிய ஹோட்டலில் தங்கி விட்டு சென்னைக்கு வந்தான்.

ரெண்டு வருஷம் ஆயிற்று.ரமேஷிடம் ”எனக்கு வயசு அறு பத்தி ஐஞ்சு ஆறது.எனக்கு இனி மே என்ன இருக்கு.நான் வாழக்கைலே எல்லா சந்தோஷத்தையும் பூரணமாஅனுபவிச்சுட்டேன். நானும் இனிமே உங்க மாதிரி ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வர ஆசை படறேன்.நானும் இனிமே உங்க கூட தினமும் காத்தாலே குளிச்சிட்டு கோவிலுக்கு வரேன்”என்று சொன்னாள்.உடனே ரமேஷ் “சரி, லதா,நான் உன்னையும் அழைச்சுண்டு கோவிலுக்குப் போறேன்”என்று சொல்லி லதாவையும் தன் கூட அவன் போய் வரும் கோவில்களுக்கு அழைத்துப் போய் வந்துக் கொண்டு இருந்தான்.

இரண்டு மாதம் ஆயிற்று.அன்று காலை லதா சமையல் கார மாமா கொடுத்த காப்¢யை குடித்து விட்டு ரமேஷோடு காரில் கோவிலுக்குக் கிளம்பினாள்.ரமேஷ்க்கு லதா அடிக்கடி மூச்சை இழுத்து, இழுத்து விடுவது போல தோன்றவே லதாவைப் பார்த்து ”ஏன் லதா,நீ அடிக்கடி மூச்சை இழுத்து, இழுத்து விடறே.உனக்கு மூச்சு விடுவது கஷ்டமா இருக்கா” என்று கவலையோடு கேட்டான்.அதுக்கு லதா”அப்படி ஒன்னும் இல்லே,எப்பவாவது அப்படி இருக்கு”என்று சொன்னாள்.கோவில் தா¢சனம் முடித்து விட்டு.லதாவை அழைத்துக் கொண்டு காரில் ‘பலாட்’டுக்கு கிளம்பினான்.

காரை விட்டு கீழே இறங்கியதும் வாசல் கூர்க்கா ரமேஷிடம் ஓடி வந்து “சார் ‘லிப்ட்’ ‘மோட் டார்’ எரிஞ்சுப் போச்சுன்னு சொல்லி ‘எலக்ட்¡£ஷியன்’ மோட்டார் கடைக்கு போய் இருக்காரு.நீங்க இப்போ ‘ப்லாட்டுக்கு’ படி ஏறித் தான் போகணும்”என்று கையைக் கட்டிக் கொண்டு சொன்னான். ரமேஷ் “சரி வா,லதா நாம படி ஏறி மெல்ல போகலாம்”என்று சொல்லி விட்டு மெல்ல படி ஏறிப் போய்க் கொண்டு இருந்தான். லதாவும் அவன் பின்னால் படி ஏறிப் போய்க் கொண்டு இருந்தாள்.‘ப்லாட்’ வந்ததும் ரமேஷ் ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.காயத்திரி வந்து கதவைத் திறந்தாள்.

ரமேஷ் ‘ப்லாட்டுக்கு’ உள்ளே மெல்ல வந்துக் கொண்டு இருந்தான்.ஆனால் லதா அவனை யும் தாண்டி வேகமாக வந்து சோபாவில் உட்கார்ந்துக் கொண்டு “அம்மா,எனக்கு கொஞ்ச ஜலம் கு டேன்.நெஞ்சை ரொம்ப அடைக்கறது” என்று சொல்லி சோபாவில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தாள்.ரமேஷ் பயந்துப் போய் லதா பக்கத்தில் உட்கார்ந்துக் கொ ண்டு “உனக்கு,ஏன் நெஞ்சை அடைக்கிறது”என்று சொல்லி அவள் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.லதா காயத்திரி கொண்டு வந்துக் கொடுத்த ஜலத்தை வாங்கிக் குடித்தாள்.கொஞ்ச நேரம் கழித்து “அது ஒன்னும் இல்லே.நான் மாடிப் படியே கொஞ்சம் வேகமாக ஏறினேன்.அதான் என் நெஞ் சு அடைக்கறா மாதிரி இருந்தது”என்று சொன்னாள்.உடனே ரமேஷ்”இல்லையே லதா.அது நிச்சிய மா ஒரு காரணமா இருக்கவே முடியாது.நீ என் பின்னாலே தானே ஏறி வந்தே.நீ எப்படி வேகமா படி ஏறினேன்னு சொல்றே”என்று சொல்லி விட்டு,தன் செல் போனை எடுத்து அப்போலோ ஹாஸ்பிடலில் இருக்கும் ‘பாமிலி’ டாகடருக்குப் போன் பண்ணி ”டாக்டர்,என் ‘வைப்புக்கு’ கொஞ்சம் உடம்பு சரி இல்லே.நான் இப்போ அழைச்சுண்டு வரட்டுமா”என்று கேட்டான்.’பாமிலி’ டாக்டர் “நீங்க அவங்க ளை அழைச்சு கிட்டு வாங்க”என்று சொன்னார்.

ரமேஷ் காயத்திரியையும் அழைத்துக் கொண்டு லதாவை மெல்ல மாடிப் படி இறக்கி காரில், அவளை காரில் ஏற்றீனான்.காயத்திரி லதா பக்கத்தில் உட்கார்ந்தவுடன் ரமேஷ் காரில் ஏறி, டிரைவ ரைப் பார்த்து “அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வேகமா போ” என்று பதட்டத்துடன் சொன்னான். வழி நெடுக லதா ”எனக்கு உடம்பு ஒண்ணும் இல்லே.நீங்க ரொம்ப கவலைப் படறேள்”என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.ரமேஷ் லதாவை அழைத்துக் கொண்டு அவனுடைய ‘பாமிலி’ டாக்டர் ரூமுக் குப் போய் அவா¢டம் லதாவை காட்டினான்.

அவர் உடனே ‘ஸ்டெத்’ ‘வைத்து லதாவை ரொம்ப நேரம் ‘செக் அப்’ ப்ண்ணீனார்.மறுபடியும் மறுபடியும் ‘செக் அப்’ பண்ணி விட்டு ”மிஸ்டர் சுரேஷ்,இவங்க உடம்பிலே ‘ப்ராப்லெம்’ நிச்ச்சியமா இருக்கு.இவங்க ‘பல்ஸ் ஸ்டெடியா’ இல்லே.நான் ‘நர்ஸ்ஸை’ இவங்க கூட அனுப்பி இவங்களுக்கு ‘ஸ்பெஷலா’ஒரு ‘மாஸ்டர் செக் அப்’ பண்றேன்.அந்த ‘ரிஸல்ட்ஸ்’ வந்ததும் நான் அவைகளைப் பார்த்து விட்டு சொல்றேன்”என்று சொன்னார்.ரமேஷூக்கும் காயத்திரிக்கும் ரொம்பா கவலையாய் இருந்தது.’மாஸ்டர் செக் அப்லே’ லதாவுக்கு BP,ECG,’டயாபெடிக்ஸ் டெஸ்ட்’,’தைராய்ட் டெஸ்ட்’, எல்லா ரத்த பா¢¨க்ஷகள், Xray, ‘மாமோகிராம்’ ‘டெஸ்ட்டுகளை’ எடுத்தார்கள்.

ஆறு மணீ நேரம் ஆனதும் நர்ஸ் எல்லா ‘ரிசல்ட்டுகளையும்’ டாக்டர் கிட்டே கொடுத்தாள். அந்த ‘டெஸ்ட்டுக¨ளை’ப் பார்த்த டாக்டர் ரமேஷை தனியாக கூப்பிட்டு “இவங்களுக்கு ‘மாமோகி ராம் டெஸ்ட்’ எடுத்து இருக்காங்க.அதிலே இவங்க ரெண்டு மார்பகங்களிலும் பெரிய ‘லம்ப்’ இருக்கு வலது மார்பகத்தில் இருக்கிற ‘லம்ப் ‘ரொம்ப பெரிசா இருக்கு.அதனாலே இவங்களுக்கு ஆபரேஷன் பண்ணீ அந்தக் கட்டியை ‘பயாப்ஸி’ பண்ணிப் பார்க்கணும்”என்று ஆங்கிலத்தலே சொன்னார்.டாக்டர் ஆங்கிலத்லே சொன்னதை கேட்ட ரமேஷூக்கு உலகமே இருண்டு விட்டது போல இருந்த்து.அவன் தொப்பென்று அங்கு இருந்த சேரில் உட்கர்ந்துக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு இருந்தா ன்.மாப்பிள்ளை இப்படி கண்ணை மூடி உட்கார்ந்துக் கொண்டு இருபதைப் பார்த்த காயத்திரிக்கு பய மாக இருந்தது.ஐஞ்சு நிமிஷம் ஆனதும் ரமேஷ் காயத்திரி இடம் டாக்டர் ஆங்கிலத்திலே சொன்னதை சொல்லி வருத்தப்பட்டான்.காயத்திரிக்கு மயக்கமே வரும் போல இருந்து.மெல்ல தன்னை சமாளித்து கொண்டு லதா பக்கத்திலே உட்கார்ந்துக் கொண்டு சுவாமியயை வேண்டி கொண்டு இருந்தாள்.

கவலையுன் ரமேஷ் “சரி டாக்டர் நீங்க ஆபரேஷன் பண்ணீ ‘பயாப்ஸி’ பண்ணிப் பாருங்க” என்று சொன்னான்.நான்கு மணி நேரம் ஆனதும் அந்த டாக்டர் லதாவுக்கு ஆபரேஷனை முடித்து விட்டு அவளை ‘ஸ்ட்ரெச்சரில்’ அழைத்து வந்து ஒரு ரூமில் விட்டார்.லதாவுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அவள் தன் கண்களை மூடி கொண்டு இருந்தாள்.காயத்திரி லதா தலை மாட்டிலேயே உட்கார்ந்துக் கொண்டு சுவாமி மந்திரங்களை சொல்லிக் கொண்டு இருந்தாள்.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *