தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 4,798 
 

அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் ”நான் கோவிலுக்கு வந்தேன்.ஆனந்த ஆத்லே இருப்பான்னு தெரியும்.அவன் கிட்டேநான் வாங்கி வந்த கேக்கையும்,சாக்லெட்டை யும் குடுத்துட்டு,உங்களேயும் பாத்துட்டுபோகலாம்ன்னு தான் வந்தேன்.என்ன மாமி,உங்களுக்கு உடம்பு சரியா இல்லையா. என்ன வோ போல இருக்கேளே”என்று விசாரித்தான்.உடனே லதா “நேத்து சாயங்காலம் ‘மெஸ்’லே இருந்து ஆத்துக்கு வரும் போது,ஸ்கூட்டர்லே போன ஒரு பையன் மோதி அம்மாவை கீழே தள்ளிட்டு போய் இருக்கான்.அம்மா வலது கால் வீங்கி இருக்கு.அம்மாவும் வென்னீர் ஒத்தடம் குடுத்து பார்த்தா.ஆனா விக்கமே குறையலே.கூட அம்மாவுக்கு காலில் வலியும் ஜாஸ்தியா இருக்கு”என்று சொன்னாள்.

உடனே ரமேஷ் “மாமி காலில் வீக்கம் இருந்து வலியும் இருந்து,அந்த வலி குறையாம இருந் தா அது நிச்சியம் எலும்பு முறிவாத் தான் இருக்கும்.வாங்க நாம ஹாஸ்பிடலுக்கு போய் காட்டி ‘எக்ஸ் ரே’ எடுத்து பார்த்துடலாம்”என்று சொன்னான்.காயத்திரி “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.எதுக்கு உனக்கு வீண் செலவு.ரெண்டு நாள் போனா எல்லாம் சரியா போயிடும்” என்று சொன்னாள்.ரமேஷ் “நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்கோ மாமி.கால்லே வீக்கம் இருந்தா சரியா போகாது.‘எக்ஸ்ரே’ எடுத்து பார்த்து காலில் எலும்பு முறிவு இருக்கான்னு நாம் அவசியம் பார்க்கணும்.’எக்ஸ்ரேயில்’ எலும்பு முறிவு இருந்தா அதுக்கு அவசியம மாவுக் கட்டுப் போட்டுக்கணும்”என்று சொன்னதும் லதா “ஆமாம். அவர் சொல்றது ரொம்ப சரிம்மா.உன் கால் வலி மறுபடியும் ராத்திரி அதிகம் ஆனா நான் என்ன பண் ணுவேன்.வாம்மா,நாம ஹாஸ்பிடலுக்கு போய் காட்டிண்டு வந்துடலாம்” என்று சொல்லி அம்மாவை அவசரப்படுத்தினாள்.காயத்திரியும் வேறு வழி இல்லாமல் “நாம போய் வரலாம்” என்று சொல்லி ஒத்து கொண்டாள்.ரமேஷ் உடனே ‘அப்போலோ ஹாஸ்பிலுக்கு’ போன் பண்ணி அவன் ‘பாமிலி’ டாக்ட ரை போனில் கூப்பீட்டான்.அவர் போனில் வந்ததும் ரமேஷ் “டாக்டர்,எனக்கு தெரிஞ்ச ஒரு மாமிக்கு கால்லே ஒரு ஸ்கூட்டர் மோதி அடி பட்டு இருக்கு.கால்லே நல்ல வீக்கமும் இருக்கு.நான் அந்த அம் மாவை அழைச்சு வந்து காட்டணும்.எனக்கு உடனே ஒரு ‘வீல் சேர்’ அனுப்ப முடியுமா”என்று கேட்டதும்,அவர் “நான் ‘அரேன்ஜ்’ பண்றேன்.’வீல் சேர்’ அனுப்ப வேண்டிய ‘அடரஸ்ஸை’ கொஞ்சம் சொல்லுங்க”என்று கேட்டார். ரமேஷ் “அந்த அம்மா இருக்கும் ‘அட்ரஸ்’ நியூ நம்பர் 15, ஓல்ட் நம்பர் 34,கேவன் பிள்ளை தெருவு மயிலாப்பூர்”என்று சொன்னதும்,அந்த டாக்டர் ரமேஷ் கொடுத்த ‘அட்ர ஸ்ஸை’ ’நோட்’ பண்ணிக் கொண்டு போனை ‘கட்’ பண்ணினார்.

பதினைந்து நிமிடங்களில் ஒரு ‘வீல் சேர்’ லதா வீட்டுக்கு வந்தது.ரமேஷ் தன் கார் டிரைவரை கூப்பிட்டு “இங்கே வா” என்று சொன்னான்.ரெண்டு நிமிஷத்து க்கு எல்லாம் டிரைவர் வீட்டுக்கு வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.லதா கதவைத் திறந்தாள்.டிரைவர் உள்ளே வந்தான்.டிரைவர் வந் ததும் ரமேஷ் “நீ வாசலில் ஆம்புலன்ஸில் வந்து இருக்கும் சிப்பந்தியுடன் அந்த அம்மாவை ‘வீல் சேரி ல்’ ஆம்புலன்ஸில் ஏத்தி விடு.அப்புறமா நாம அந்த ஆம்புலன்¨ஸை ‘பாலோ’ பண்ணி அப்போலோ ஹாஸ்பிடலுக்கு போகணும்”என்று சொன்னவுடன் டிரைவர் வாசலில் காத்துக் கொண்டு இருந்த ‘ஆம் புலன்ஸில்’ இருந்து ‘வீல் சேரையும்’ கூட வந்த ஹாஸ்பிடல் சிப்பந்தியையும் அழைத்து வந்தான். பிறகு ரெண்டு பேருமாக மெல்ல காயத்திரியை கைத் தாங்கலாக பிடித்து ‘வீல் சேரில்’ ஏற்றி ஆம்புல ன்ஸில் ஏற்றீனார்கள்.ரமேஷ் மெல்ல தன் அக்குள் கட் டையை வைத்து கொண்டு வந்து கார் கிட்டே வந்தான்.”லதா, நீ அம்மாகூட,ஆனந்தோடு,பின்னாலே உக்காந்துண்டு வா.நான் முன்னலே உக்கா ந்துண்டு வறேன்”என்று சொன்னதும் டிரைவர் கார் முன் கதவைத் திறந்தான்.ரமேஷ் அக்குள் கட் டையை உள்ளே வைத்து விட்டு மெல்ல காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.லதா ஆனந்தனை அழைத்து கொண்டு அம்மாவோடு உட்கார்ந்து கொண்டாள்.ரமேஷ் டிரைவரிடம் டிரைவர் “அப்போ லோ ஹாஸ்பிடலுக்கு போ”என்று சொன்னான்.கார் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு வந்ததும் டிரைவர் காரை நிறுத்தி விட்டு ஓடி வந்து ரமேஷ் உட்கார்ந்து கொண்டு இருந்த கதவை திறந்தான்.பிறகு பின் கதவை திறந்தான்.லதா மெல்ல தன் அம்மாவை கீழே இறக்கினான்.ரமேஷ் ‘காஷூவாலிட்டிக்கு’ போன் பண்ணி ‘வீல் சேரில்’ இருந்த காயத்திரியை ‘எமர்ஜென்சிக்கு’ அழைத்து போக சொன்னான். லதாவும்,ஆனந்தனும்,ரமேஷூம் ‘வீல் சேர்’ பின்னாலே காஷூவாலிட்டிக்கு போனார்கள்.ரமேஷ கா ஷூவாலிட்டியில் இருந்த டாக்டா¢டம் “இவங்க கால்லே யாரோ ஒருத்தன் ஸ்கூட்டரை மோதி விட்டு இருக்கான்.இவங்க கால்லே வீக்கமும்,‘பெயினும்’ இருக்கு” என்று சொன்னான்.

டாக்டர் உடனே “நான் இவங்களுக்கு வலி போக ஒரு ‘இஞ்செக்ஷன்’ குடுத்து விட்டு,’எக்ஸ்ரே’ எடுத்து பாக்கறேன்” என்று சொல்லி,அந்த டாக்டர் காயத்திரிக்கு ஒரு ‘இஞ்செக்ஷன்’ போட்டு விட்டு காயத்திரியை ‘எக்ஸ்ரே’ எடுக்கும் இடத்திற்கு ‘வீல் சேர்’ ஆளோடு அனுப்பினார்..ரமேஷூம், லதாவும், ஆனந்தும்,’எமர்ஜென்ஸி’க்கு’ எதிரில் போட்டு இருந்த சேர்களில் உட்கார்ந்து கொண்டு இருந்தார் கள்.லதா ரொம்ப கவலை படுவதை பார்த்த ரமேஷ் லதாவை பார்த்து ”கவலைபடாதே லதா.’எக்ஸ்ரே’ வந்தவுடன் டாக்டர் அதை பார்த்து விட்டு எலும்பு முறிவு இருந்தா,அதுக்கு வைத்தியம் பண்ணி நம்மை அனுப்பிடுவார்.கொஞ்ச நாள்ளே அம்மா கால் பழையபடி ஆயிடும்” என்று அவளுக்கு ஆறு தல் சொன்னான்.லதாவுக்கு ரமேஷ் சொன்னதை கேட்டதும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஒரு அரை மணி நேரத்திற்குள் அந்த ‘வீல் சேர்’ ஆள் காயத்திரியை அழைத்துக் கொண்டு வந்து ‘எக்ஸ்ரேயை’ டாக்டா¢டம் கொடுத்தான்.டாக்டர் ‘எக்ஸ்ரேயை’ பார்த்து விட்டு “சார், இவங்களுக் கு காலில் ரெண்டு இடத்லே ‘போன் ப்ராக்ச்சர்’ இருக்கு.நான் இவங்களை ஆபரேஷன் தியேட்டரு க்கு அனுப்பறேன்.அவங்க இந்த அம்மாவுக்கு மாவுக் கட்டு போட்டு விடுவாங்க” என்று சொன்னார். ஒரு மணி நேரம் கழித்து காயத்திரிக்கு வலது காலில் ஒரு பெரிய மாவுக் கட்டுப் போட்டு ஆபரேஷன் தியேட்டா¢ல் இருந்து ‘வீல்சேரில்’ வெளியே கொண்டு வந்து விட்டார் ஒரு டாக்டர்.அவர் “சார், இவங்க இந்த வலது காலை அதிகமா உபயோக படுத்தாம ஜாக்கிறதையா வச்சு வரணும்.இவங்க இந்த காலை ‘ரெஸ்டா’ வச்சுக் கிட்டு வந்தா,கால் எலும்பு சீக்கிரமா ஒன்னா சேர்ந்துவிடும்.நீங்க இவங்களை என் கிட்டே ஒரு மாசம் கழிச்சு அழைச்சுகிட்டு வந்து காட்டுங்க.நான் இவங்க உள்ளுக்கு சாப்பிட சில மாத்திரைகளையும் எழுதி தறேன்“என்று சொல்லி மாத்திரைகள் எழுதி கொடுத்தார்.ரமேஷ் டாக்ட ரை பார்த்து “ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்” என்று சொன்னான்.அவர் போனதும் “லதா,நீ அம்மா கூட கொஞ்ச நேரம் இங்கேயே இரு.நான் ஹாஸ்பிடல் ‘பீஸை’ கட்டிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு, மாத்திரை சீட்டை டிரைவரிடம் கொடுத்து “டிரைவர், இந்த சீட்டில் எழுதி இருக்கும் மாத்திரைகளை எல்லாம் வாங்கி வா” என்று சொல்லி டிரைவரிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்து அனுப்பி விட்டு, ‘ரிசப்ஷனுக்கு’ போய் ஹாஸ்பிடல் பீஸைக் கட்டி விட்டு வந்தான் ரமேஷ்.டிரைவர் மாத்திரைகளை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தவுடன் ரமேஷ் எல்லோரையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் போர்ட்டிகோவிற்கு வந்தான்.

டிரைவர் காரை எடுத்து வந்தவுடன் ‘வீல் சேர்’ ஆளும் டிரைவரும்,காயத்திரியை ‘ஆம்புலன்ஸி ல்’ ஏத்தினார்கள்.லதாவும் ஆனந்தும் காரில் பின்னால் ஏறி உட்கார்ந்துக் கொண் டார்கள்.அவர்கள் ரெண்டு பேரும் காரில் ஏறியதும் ரமேஷ் முன்னால் ஏறிக் கொண்டான்.ரமேஷ் ஏறிக் கொண்டதும் டிரைவர் காரை ஓட்டி கொண்டு ‘ஆம்புலன்ஸை ‘பாலோ’ பண்ணீ வந்து லதா வீட்டுக்கு வந்தான். ’வீல் சேர்’ ஆளும் டிரைவரும் மெல்ல இறங்கி காயத்திரியை பிடித்து கீழே இறக்கினார் கள்.காயத்திரி ஒரு காலை மட்டும் ஊனி வைத்து கொண்டு அவர்கள் கூட மெல்ல நடந்து வந்தாள். அவர்கள் கயத்திரியை வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள்.பின்னாலேயே வந்த லதா ஆத்தை திறந்து வந்து ஒரு சேரைப் போட்டாள்.காயத்திரி மெல்ல அந்த சேரில் உட்கார்ந்தாள்.ரமேஷூம் மெல்ல உள்ளே வந்து அவன் வழக்கமாக உட்காரும் சேரில் உட்கார்ந்துக் கொண்டான்.ரமேஷ் காயத் திரியின் ‘எக்ஸ்ரேயையும்’,மருந்து சீட்டையும்,ஹாஸ்பிடல் பில்லையும் போட்ட கவரை கவரை லதா கிட்டே கொடுத்து “இதை ஜாகிறதையா வச்சுக்கோ லதா” என்று சொன்னான்.லதா ரமேஷ் கொடுத்த கவரை வாங்கி அதை ஜாக்கிறதையா பீரோவில் வைத்தாள்.

“மாமி,நான் போயிட்டு வரேன்.நாளைக்கு சாயங்காலமா நான் வந்து பாக்கறேன்.உங்களுக்கு வலி தெரியாம் இருக்க டாக்டர் உங்களுக்கு ‘இஞ்செக்ஷன்’ போட்டு இருக்கார்..உங்களுக்கு நன்னா தூக்கம் வரும்”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்தான் ரமேஷ்.“உங்களுக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்” என்று லதா தன் கையை கூப்பி ரமேஷூக்கு நன்றி சொன்னாள்.காயத்திரியும் “நாங்க உனக்கு ரொம்ப நன்றி சொல்லணும்.சமயத்லே நீ வந்து என்னை ஹாஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போய் என் காலுக்கு ‘எக்ஸ்ரே’ எடுத்து பாத்து எலும்பு முறிவுக்கு கட்டு போட்டு அழைச்சுண்டு வந்து இருக்கே” என்று அவளும் தன் கையை கூப்பி நன்றி சொன்னாள்.உடனே ரமேஷ் “நீங்க வயசிலே ரொம்ப பெரி யவா.எனக்கு நீங்க கையை எல்லாம் கூப்பி நன்றி எல்லாம் சொல்லகூடாது” என்று சொன்னான.பிறகு அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வாசலுக்கு வந்தான் ரமேஷ்.லதா அவன் கூடவே கார் வரை வந்து அவனுக்கு மறுபடியும் ‘தாங்க்ஸ்’ சொன்னாள்.ரமேஷ் காரில் ஏறிக் கொண்டதும் அவனுக்கு ‘டா’’டா’ காட்டி விட்டு லதா போர்ஷனுக்கு வந்தாள்.

லதா ‘போர்ஷனு’க்கு வந்து கதவை சாத்தி தாழ்பாள் போட்டாள்.பீரோவில் இருந்த கவரை பிரி த்து பார்த்தாள்.ஹாஸ்பிடலுக்கு ரமேஷ் கொடுத்த பில்லை பார்த்தாள்.அவளுக்குத் தூக்கி வாரி போட்டது.மொத்த பில் பணம் நாப்பதாயிரம் ரூபாய் என்று இருந்தது.பில்லை பீரோவில் வைத்தாள் லதா.காயத்திரி “நல்ல வேளை லதா,அந்த பையன் சமயத்லே வந்து என்னை ஹாஸ்பிடலுக்கு அழை ச்சுண்டு போனான்.இல்லாட்டா நாம் என்ன பண்ணீ இருப்போம்” என்று காயத்திரி சொல்லும் போது அவளுக்கு அழுகையே வந்து விட்டது.அவள் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.”அழாதேம்மா.எல்லாம் போறாத வேளை.உனக்கு கால்லே அடி ப்பட்டு நீ கஷ்டப்படணும்ன்னு உன் தலைலே எழுதி இருக்கு.என்ன பண்ண முடியும் சொல்லு.அம்மா அந்த ஹாஸ்பிடலுக்கு அவர் எவ்வளவு பணம் கட்டினார்ன்னு உனக்கு தெரியுமாம்மா” என்று கேட் டாள் லதா.“நான் என்னத்தை கண்டேன்.நான் தான் என் கால் வலியாலே துடிச்சுண்டு இருந்தேனே. அந்த டாக்டர் எனக்கு ‘இஞ்செக்ஷன்’ போட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு தான் எனக்கு கொஞ்சம் வலி குறைஞ்சது” என்று சொன்னாள் காயத்திரி. “அவர் மொத்த வைத்திய செலவுன்னு அந்த ஹாஸ் பிட லுக்கு நாப்பதாயிரம் ரூபாய் பணம் கட்டி இருக்கார்ம்மா.அதைத் தவிர உனக்கு மாத்திரைகள் வேறே வாங்கிக் கொடுத்து இருக்கார்” என்று சொன்னாள் லதா.

காரில் போய்க் கொண்டு இருந்த ரமேஷ் மறுபடியும் பகவானை தனக்கு லதா குடும்பத்துக்கு உதவி பண்ண ஒரு வாய்ப்பு கொடுத்தறகு நன்றி சொன்னான்.அவன் மேலும் பகவானை ‘எனக்கு இந்த மாதிரி அவா குடும்பத்துக்கு மேலும் மேலும் நிறைய உதவிப் பண்ணி வர சந்தர்ப்பம் குடுப்பா’ என்று வேண்டிக் கொண்டான்.அடுத்த நாள் காத்தாலே எழுந்த அம்மாவை பார்த்து லதா “அம்மா நீ நன்னா தூங்கினாயா.இப்ப கால்லே வலி இருக்காம்மா”என்று கேட்டாள்.காயத்திரி “நான் நன்னா தூங்கினேன் லதா.இப்ப கால்லே வலி அதிகமா இல்லை” என்று சொல்லி விட்டு மெல்ல ஒரு காலை ஊனி வைத்து கொண்டு பல்லைத் தேய்த்து விட்டு வந்தாள்.லதா அம்மாவுக்குக் காபி¢க் கலந்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

காயத்திரி காபியை குடித்து விட்டு டம்ளரை கீழே வைத்து விட்டு “லதா,இன்னைக்கு தான் இந்த மாசம் பொறந்து ஐஞ்சு நாள் ஆறது.நான் இந்த மாசம் பூராவும் சமை யல் வேலைக்கு போக முடியாதே.ஒரு மாசம் கழிச்சு என் கால் எலும்பு எல்லாம் நன்னா சேந்து,என்னால் பழையபடி நன்னா நடக்க வந்தா தானே என்னால் ‘மெஸ்’ வேலைக்கு போய் வர முடியும்.ஒரு மாசம் கழிச்சு நான் ‘மெஸ்’ ஸ¤க்கு போய் ‘நான் சமையல் வேலைக்கு மறுபடியும் வந்து இருக்கேன்’ ன்னு நான் சொல்லிண்டு போய் நின்னா அந்த ‘மெஸ்’ மாமா என்னை பாத்து ‘இது என்ன கவர்மென்ட் வேலைன்னு நினைச் சுண்டு,நீங்க வேலைக்கு வந்து இருக்கேளா.இத்தனை நாள் நான் சமையல் வேலைக்கு வேறே ஆள் இல்லாம நான் ‘மெஸ்ஸை’ நடத்தி வர முடியுமா.நான் வேறே மாமியை சமையல் வேலைக்கு வச்சுண் டுட்டேன்.நீங்க வேறே எங்கேகயாவது வேலை தேடிக்கோங்கோ மாமி’ன்னு தானே சொல்லுவார்.அவ ர் அப்படி சொல்லிட்டா நான் வேறே எங்கே போய் சமையல் வேலை தேடிக்கிறது.இந்த மயிலாப்பூர்லே எனக்கு வேலை கிடைக்காட்டா,நான் வேறே எங்கேயாவது தானே நான் சமையல் வேலை தேடி வர ணும்.அப்படி நான் வேலை தேடி வேறே எங்கேயாவது வேலை கிடைச்சா அங்கே தானே நாம ஒரு ஆம் தேடிண்டு போகணும்.நான் அந்த வேலைக்கு ‘பஸ்லே’ தான் போய் வரணும்.அந்த புது ஆத்து க்கு வாடகை வெறே தரணும்.ஆனந்தன் ஸ்கூல் இங்கே இருக்கு.அவனுக்கு ‘பீஸ்’ வேறே கட்டணும். நாம எப்படி குடித்தனம் பண்ணீ வறப் போறோம்”என்று சொல்லி வருத்தப் பட்டாள்.அம்மா”எனக்கு என்னமோ நாம இனிமே கஷ்டப் படமாட்டோம்ன்னு தோன்றது.ஆனந்த என் வயித்லே வந்ததுலே இருந்து நமக்கு நல்ல காலம் பொறந்து இருக்குன்னு எனக்கு படறது.பாக்கலாம்”என்று சொல்லி விட் டு லதா சமையல் வேலேயை கவனிக்கப் போனாள்.

ரெண்டு மணி நேரம் காயத்திரி தூங்கி எழுந்ததும் லதா அம்மாவைப் பார்த்து “ஒரு ரெண்டு மணி நேரம் நீ தூங்கி இருக்கே.இப்ப உன் வலி கொஞ்சம் குரைஞ்சு இருக்கா” என்று கேட்டாள். காய த்திரி “இப்ப எனக்கு வலி இல்லே லதா”என்று சொன்னதும் லதா “பார்க்கலாம்மா.முதல்லே உனக்கு கால் சரியாக ஆகட்டும்.உன் கால் நன்னா தேவலை ஆனப்புறம் தானேம்மா நீ வேலைக்குப் போக முடியும்” என்று சொல்லி விட்டு மீதி சமையலைக் கவனிக்கப் போனாள் லதா.காயத்திரிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.அடுத்த நாள்.மணி நாலு இருக்கும் லதா வீட்டின் ‘காலிங்க் பெல்’ அடித்தது.லதா சுரேஷைப் பார்த்ததும் “வாங்கோ” என்று சொல்லி அவனை வரவேற்றாள்.மெல்ல கா லை வைத்து நடந்து ரமேஷ் உள்ளே வந்துஅக்குள் கட்டை ஒரு ஓரமாக வைத்து விட்டு,அவன் வழக்கமாக உட்காரும் சேரில் உட்கார்ந்தான்.அவன் கையிலே சாக்லெட்டும்,பிஸ்கெட்டும் இருந்தது.அவன் காயத்தா¢யைப் பார்த்து “மாமி,நேத்து நன்னா தூங்கினேளா.இப்ப காலில் வலி இருக்கா”என்று கேட் டான். உடனே காயத்திரி ”நான் நன்னா தூங்கினேன்.இப்ப கால்லே வலி அதிகமா இல்லே”என்று சொன்னாள்.”லதா அம்மாவுக்கு மாத்திரைகளை தவறாம குடுத்து வா.அம்மாவுக்கு எந்த வேலையும் தராம அம்மாவை நல்ல ‘ரெஸ்ட்’ எடுத்துண்டு வரச் சொல்”என்று சொன்னான்.காயத்திரி “என் கால் வைத்தியத்துக்கு நீ இவ்வளவு பெரிய ஹாஸ்பிடலுக்கு அழைச்சுன்டு போய் நாப்பதாயிரம் ரூபாய் செ லவு பண்ணனுமா.ஒரு சின்ன ஹாஸ்பிடலா என்னை அழைச்சுண்டு போய் சொற்பமா வைத்தியம் பண்ணக்கூடாதா”என்று கேட்டாள்.

உடனே ரமேஷ் “மாமி, சின்ன ஹாஸ்பிடலா போனா நீங்க சொன்னா மாதிரி சொற்ப செலவிலெ வைத்தியம் ஆகும்.ஆனா அவா உங்களுக்கு மாவு கட்டை சரியா போடாட்டா கா லத்துக்கும் உங்க கால் சரியாகாது..இந்த ஹாஸ்பிடல் தான் சென்னையிலேயே ‘பெஸ்ட்’ ஹாஸ்பிடல். இங்கே வைத்திய ம் பண்ணிண்டா நிச்சியமா உங்க காலு நன்னா ஆயிடும்.செலவைப் பத்தி நீங்க கவலைப் படாம இரு ந்து வாங்கோ மாமி” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.”என்னவோ.நீ செலவு பண்றதே பாத்தா எனக்கு பயமா இருக்கு”என்று சொன்னாள் காயத்திரி.ரமேஷ் வெறுமனே சிரித்துக் கொண்டு இருந்தா ன்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் “ஆனந்த் எங்கே” என்று கேட்டான். லதா “அவனுக்கு நீங்க இன் னைக்கு வருவேள்ன்னு தெரியாது.அதனால்லே அவன் பக்கத்து வீட்டு பையணோட விளையாடப் போய் இருக்ககான்” என்று சொன்னாள்.ரமேஷ் “அவன் விளையாடிட்டு வந்தப் புறம் இந்த் சாக்லெட் டையும் பிஸ்கெட்டையும் குடு லதா”என்று சொன்னான்.”நான் நிச்சியமா ஆனந்த் வந்தவுடன்,நான் நீங்க வாங்கிண்டு வந்து சாக்லெட்டையும்,பிஸ்கெட்டையும் அவனுக்குத் தறேன்”என்றாள் லதா.

கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் காயத்திரியை பார்த்து பார்த்து “மாமி.நீங்க இன்னும் ஒரு மாச த்துக்கு மேலேயே சமையல் வேலைக்கு போய் வர முடியாதே.அதனாலே நான் உங்க செலவுக்கு பத் தாயிரம் ரூபாய் தந்து விட்டு போறேன்.இதை வச்சுக்கோங்கோ” என்று சொல்லி தன் ‘ப்¡£ப்’ கேஸை’ திறந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்து காயத்திரியின் கையில் கொடுத்தான்.காயத்திரிக்கு ‘வேண்டாம்’ என்று சொல்லவும் முடியவில்லை.அதை வாங்கி கொள்ளவும் பிடிக்கவில்லை.ஒரு நிமிஷ நேரத்திற்கு அவள் தவித்தாள்.என்ன பண்ணுவதே என்று அவளுக்கு புரியவில்லை.லதாவுக்கோ,அம்மா, ‘அவர்’ குடுக்கும் பணத்தே மறுக்காம வாங்கிக்கினமே’ என்று ஆசைப் பட்டாள்.காயத்திரி பணத்தை வாங்க யோஜனை பண்ணி கொன்டு இருந்ததை கவனித்த ரமேஷ் மறுபடியும் ”மாமி இதை வாங்கிக்கோங் கோ.உங்க மாச செலவுக்கு வச்சுக்கோங்கோ”என்று விடாமல் சொல்லவே வேறு வழி இல்லாமல் அந்தப் பணத்தை வாங்கி கொண்டாள் காயத்திரி.காயத்திரி பணம் வாங்கிக் கொண்டதை நினைத்து சந் தோஷப்பட்டான் ரமேஷ்

’அப்பாடா,அம்மா ‘அவர்’ கொடுத்த பத்தாயிரம் ரூபாயை அம்மா வாங்கிண்டுட்டா.இந்த பண ணத்தே நாம இந்த மாசம் தாரளமா செலவு பண்ணீ வரலாம்’ என்று லதா மனம் குதுககூலித்தது. கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு ரமேஷ் “நான் போயிட்டு வறேன் மாமி” என்று சொல் லி விட்டு மெல்ல எழுந்து அக்குள் கட்டையை வைத்துக் கொண்டு நடந்து வாசலுக்கு வந்தான்.லதா அவன் கூடவே போய் அவன் காரி ஏறினவுடன் அவனைப் பார்த்து “நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப ‘தாங்க்ஸ்’”என்று சொன்னாள்.உடனே ரமேஷ் “லதா,நீ எனக்கு ‘தாங்க்ஸ்’ எல்லாம் சொல்லதே.நான் யாரோ இல்லே” என்று சொன்னான்.பிறகு லதா அவனுக்கு ‘டா’’டா’க் காட்டி அவனை வழி அனுப்பி விட்டு ‘போர்ஷனு’க்கு வந்தாள்.ரமேஷ் ‘நான் யாரோ இல்லே லதா’என்று சொன்ன வார்த்தைகள் லதா காதில் தேனை வார்த்தது.காரில் போய் கொண்டு இருந்த ரமேஷ் ‘நாம அவா குடும்பத்துக்கு இப்ப மாசாந்திர செலவுக்கு பணம் குடுத்து வந்து இருக்கோம்.இப்படியே மெல்ல அவா குடும்பத்துக்கு நிறைய உதவிகள் பண்ணீ அவா வாழ்க்கைத் தரத்தை நாம் உயர்த்தி வரணும்’என்று முடிவு பண்ணினான்.

லதா ஆத்துக்குள்ளே வந்ததும் காயத்திரி உள்ளே வந்ததும் காயத்திரி “ஏண்டீ,லதா அந்த பையன் இப்படி பத்தாயிரம் ரூபாயை குடுத்து உடனே வாங்கிக்கணும்ன்னு தொந்தரவு பண்ணானே. நான் என்ன பண்றது சொல்லு.வாங்கிண்டு இருக்கேன்.நான் பண்ணது சரியா தப்பா லதா” என்று ஒரு சின்ன குழந்தையை போல் வருத்ததுடன் கேட்டாள்.லதா “இருக்கட்டுமேம்மா.நீ பண்ணது ஒன் னும் தப்பு இல்லை.சரியா தான் பண்ணி இருக்கே.நீ இந்த மாசம் வேலைக்கு போகா முடியாம உன் கால் இப்படி ஆயிடுத்தேம்மா.நமக்கு இந்த மாச செலவுக்கு பணம் வேண்டி இருக்கே.அவர் குடுத்த பணத்தை நீ வாங்கிக்காம இருந்தா மாச செலவுக்கு நாம என்ன பண்ணுவோம்“என்று சொல்லி விட்டு தன் வேலையைக் கவனிக்கப் போனாள்.கொஞ்ச நேரம் ஆனதும் “அம்மா,அவர் எந்த விதமான கெ ட்ட எண்ணத்துடனும் நமக்கு செலவு பண்ணலேம்மா.அவர் தம்பி பண்ணத் தப்புக்கு அவர் பா¢காரம் தேடி வறார்ன்னு தான் எனக்கு படறது.அவரை பாரம்மா.பாவம் அந்த அக்குள் கட்டையுட னும்,ஒரு காலில் செயற்கை காலுடனும் அவர் நம்ம ஆத்துக்கு வந்து போவதை.அவருக்கு இருக்கும் பண பல த்திற்கு அவர் ராஜா மாதிரி இருந்துண்டு வரலாமே.ஆனா அவர் ஏன் வாரம் தவறாம ஆனந்துக்கு கேக்கும் சாக்லெட்டும் வாங்கி வந்துத் தரணும்மா.அவர் முகத்லே ஒரு சாந்தம் தெரியலையா உனக்கு” என்று கேட்டு தன் அம்மா முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள் லதா.ஆனால் காயத்திரி “என் னமோ,நீ தான் அவரை இவ்வளவு புகழறே.பாக்கலாம் நாம் அவசர பட கூடாது லதா” என்று சொல்லி விட்டு சுவாமி மந்திர புஸ்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிதாள் காயத்திரி.‘அது வரைக்கும் போகட்டும் பாக்கலாம்’ன்னு தானே சொல்லி இருக்கா நம்ம அம்மா.மெல்ல அவரை பத்தி நல்ல விதமா நாம சொ ல்லி வந்து,அம்மா மனசை மாத்திடலாம்’ என்று தனக்குள் சொல்லி கொண்டாள் லதா.

மறுபடியும் ரெண்டு நாள் கழித்து ரமேஷ் சாயங்காலமா காயத்திரி வீட்டுக்கு வந்து ‘காலிங்க் பெல்லை’ அழுத்தினான்.லதா அவனை உள்ளே வரவேற்று உட்கார சேரை போட்டாள்.ரமேஷ் மெல்ல தன் அக்குள் கட்டையை ஒரு ஓரமா வைத்து விட்டு உட்கார்ந்து கொண்டான்.அவன் வாங்கி கொண் டு வந்த கேக்கையும்,சாக்லெட்டையும் ஆனந்திடம் கொடுத்தான்.ஆனந்த் அவைகளை வாங்கிக் கொ ண்டு ரமேஷூக்கு ‘தாங்க்ஸ்’ சொல்லி விட்டு கேக்கை சாப்பிட ஆரம்பித்தான்.கொஞ்ச நேரம் ஆனதும் “மாமி,ஆனந்துக்கு எப்ப பிறந்த நாள் வருது“ என்று கேட்டான் ரமேஷ்.”ஆனந்துக்கு பிப்ரவரி மாசம் ஒண்ணாம் தேதி அவன் பிறந்த நாள் வருது” என்று சொன்னாள் காயத்திரி.“மாமி,எனக்கு அவன் பிறந்த நாளை நன்னா கொண்டாடனும்ன்னு ஆசை.அதுக்குள்ளே உங்க கால் கட்டும் பிரிச்சிடுவா. நாம ஆனந்த் பிறந்த நாளை கொண்டாடலாமா”என்று கேட்டான் ரமேஷ்.தன் ‘பர்த் டே’ பேச்சு வந்த தும் கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஆனந்த் ரமேஷிடம் ஓடி வந்து “அங்கிள்,எனக்கும் என் ‘பர்த் டே’ அன்னைக்கு ‘கேக் வெட்டி’ நன்னா கொண்டாட வேணும்ன்னு ரொம்ப ஆசை.போன வாரம் தான் என் ‘ப்ரெண்ட்’ வீட்டிலே,அவன் மெழுவர்த்திகளை அணைச்சு,கேக் வெட்டி,எல்லோரும் ஒன் னா நின்னுண்டு ‘ஹாப்பி பர்த் டே’ பாட்டு பாடினா.எனக்கும் அந்த மாதிரி ‘பர்த் டே’ பண்ணிக்கனும் ன்னு ஆசை அங்கிள்” என்று ரமேஷ் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தான்.உடனே ரமேஷ் ”சரி, ஆனந்த்,நாமும் அந்த மாதிரி உன் ‘பர்த் டேயே’ கொண்டாடலாம்”என்று ரமேஷ் சொன்னதும் “ரொம்ப தாங்க்ஸ்’ அங்கிள்” என்று சொல்லி விட்டு தூர வந்தான் ஆனந்த்.கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டு “நான் போயிட்டு வறேன் மாமி”என்று சொல்லி விட்டு மெல்ல எழுந்துக் கொண்டு அக்குள் கட்டையை எடுத்து வைத்துக் கொண்டு ரமேஷ் வாசலுக்கு வந்தான்.லதா அவன் கூடவே கார் வரைக்கும் போய், அவனுக்கு ‘டா’’டா’க் காட்டி விட்டு உள்ளே வந்தாள்.

லதா உள்ளே வந்ததும் காயத்திரி ஆனந்தை பார்த்து “உன்னை யாருடா அவர் கிட்டே ‘உனக்கு ‘பர்த்‘டே’ அன்னைக்கு கேக் வெட்டி நன்னா கொண்டாடணும்ன்னு ஆசையா இருக்குன்னு சொல்லச் சொன்னா.அவர் என்ன நமக்கு ‘உறவா’ ‘ஒட்டா’.நாம ஏதோ ரெண்டு வேளை வயிராற சாப்பிட்டு வந் தா போதாதாடா.’பர்த்டே’ எல்லாம் பணக்காரா தான் கொண்டாடுவான்னு உனக்கு தெரியதாடா. இத் தனை வருஷமா நாம என்ன உன் ‘பர்த்டே’வை கொண்டாடி வந்து இருக்கோமா என்ன.இந்த வருஷ ம் உனக்கு அந்தப் பையன் ‘பர்த்டே’ கொண்டாடி விடுவான்னு வச்சுக்கோ.”என் கால் சரியாப் போன பிறகு நான் சமையல் வேலை செஞ்சு வந்தா எனக்கு நாலாயிரம் ரூபாய் தான் சம்பளம் குடுப்பாடா. இந்த சம்பளத்லே நாம் குடித்தனம் பண்ணி வருவதே ரொம்ப கஷ்டமா இருக்கும்.’பர்த் டே’ எல்லாம் கொண்டாட முடியாதேடா”என்று சொல்லி கோபித்து கொண்டாள்.உடனே “இல்லே பாட்டி அந்த அங்கிள்’ வாரா வாரம் எனக்கு கேக்கும் சாக்லெட்டும் வாங்கி தாராறே.அதனாலே இதையும் அவர் கிட்டே சொன்னா அவர் எனக்கு ‘பர்த்‘டே’வை கொண்டாட ஏற்பாடு பண்ணுவாருன்னு நினைச்சு தான்.சொன்னேன் பாட்டி.இதிலெ என்ன தப்பு.ஏன் என்னை நீ வீணா கோவிச்சுக்கறே.சரி உன க்கு பிடிக்கலைன்னா நான் அவர் அடுத்த தடவை நம்மாத்துக்கு வரும் போது ‘எனக்கு ‘பர்த்டே கேக்’ எல்லாம் வேணாம்,’என் பாட்டி என்னை கோவிச்சுக்கிறா’ன்னு சொல்லிடறேன்.இப்ப சந்தோஷமா” என்று சொல்லி விட்டு ஒரு ஓரமாப் போய் முட்டி போட்டுக் கொண்டு உட்கார்ந்துக் கொண்டான் ஆன ந்த்.காயத்திரி அதற்கு மேலே இன்னும் சொல்லாம இருந்து விட்டாள்.காயத்திரி “லதா,இந்த வாரம் வெள்ளிகிழமை வந்தா எனக்கு கால் கட்டு போட்டு ஒரு மாசம் ஆக போறது. சனிக்கிழமை கட்டை பிரிச்சு பாத்து,உடைஞ்சு போன கால் எலும்புகள் ரெண்டும் ஒன்னு சேந்து இருக் கான்னு பாக்கணுமே என்று கவலையோடு கேட்டாள்.”நானும் நாளை எண்ணிண்டு தான் இருக்கேன். ஆனா அவர் வந்தா தானே அந்த ஹாஸ்பிடலுக்கு போய் உன் கால் கட்டையை பிரிச்சு ‘எக்ஸ்ரே’ பண்ணி பாத்தா தான் உன் முறிஞ்ச எலும்பு ஒன்னா சேந்து இருக்கான்னு தெரியும்.பாக்கலாம் அவர் வறாரான்னு.நாமா அந்த ஹாஸ்பிடலுக்குப் போய் காட்டிண்டு வர முடியாதே”என்று சொல்லி விட்டு தன் வேலைகளை கவனிக்க போனாள் லதா.

அன்று ரமேஷ் தன் ¨டா¢யை எடுத்து பார்த்தான்.’வர வெள்ளிக்கிழமையோடு காயத்திரி மாமி க்கு கால் கட்டு போட்டு ஒரு மாசம் சரியாக ஆறது.நாம சனிகிழமை அன்னைக்கு மாமியை ஹாஸ்ப ¢டலுக்கு அழைச்ச்சுண்டு போகணும்’ என்று எண்ணினான்.சனிக்கிழமை ‘பாக்டா¢யில்’ தன் வேலை களை எல்லாம் வேகமாக முடித்துக் கொண்டு விட்டு ரமேஷ் லதா வீட்டுக்கு மூனு மணிக்கு எல்லாம் வந்து காலிங்க் பெல்லை அழுத்தினான்.‘என்னடா இந்த நேரத்துக்கு யார் காலிங்க் பெல்லை அடிப்பா’ என்று யோஜனை பண்ணி கொண்டே வாசல் கதவைத் திறந்தாள் லதா.சுரேஷ் நின்றுக் கொண்டு இருந்தான்.லதாவுக்கு ரொம்ப ஆச்சரியமாய் இருந்தது.சந்தோஷத்தில் அவள் “வாங்கோ”என்று சொல் லி ரமேஷை வரவேற்றாள்.ரமேஷ் மெல்ல தன் காலை ஊனி வைத்து வீட்டுக்கு உள்ளே வந்து அக்கு ள் கட்டையை ஒரு ஓரமாக சாய்த்து வைத்து விட்டு அவன் வழக்கமாக உட்காரும் சேரில் மெல்ல உட்கார்ந்தான்.காயத்திரியும் “வாங்கோ” என்று சொன்னாள்.ரமேஷ்” மாமி,நேத்தோடு உங்க கால் மாவு கட்டு போட்டு ஒரு மாசம் முடிஞ்சது.நாம ஹாஸ்பிடல் போய் உங்க கால் கட்டை பிரிச்சு பாத்து உடைஞ்ச எலும்புகள் நன்னா சேந்து இருக்கான்னு ‘எக்ஸ்ரே’ எடுத்து பார்க்கணும்”என்று சொன்னான் லதாவுக்கும் காயத்திரிக்கும் ‘இந்த பையன் இவ்வளவு ஞாபகம் வச்சுண்டு இருக்கானே’ என்று ஆச்சரி யமாக இருந்தது.லதா காயத்திரியும் ஆனந்தையும் அழைத்து கொண்டு போர்ஷனுக்கு வெளியே வந் து வாசல் கதவை பூட்டிக் கொண்டு,மெல்ல அம்மாவை கை தாங்கலா பிடித்துக் கொண்டு கார் கிட் டே போனாள்.டிரைவர் கார் கதவை திறந்ததும் டிரைவரும் லதாவும் பிடித்து காயத்திரியை காரில் ஏற் றினார்கள்.பிறகு லதாவும் ஆனந்தும் காரில் ஏறி காயத்திரி பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார்கள். டிரைவர் முன் கதவைத் திறந்ததும் ரமேஷ் மெல்ல காரில் ஏறிக் கொண்டான்.டிரைவரைப் பார்த்து “அப்போலோ ஹாஸ்பிடலுக்கு போ” என்று சொன்னதும் அப்போலோ ஹாஸ்பிடலுக்கு காரை ஓட்டிப் போனான்.

கார் அப்போலோ ஹாஸ்பிடல் போர்ட்டிகோவில் வந்து நின்றதும் ரமேஷ் மெல்ல காரை விட்டு கீழே இறங்கி ‘எமர்ஜென்ஸிக்கு’ போன் பண்ணி ‘வீல் சேரை’ப் ‘போர்ட்டிகோவிற்கு’ கொண்டு வர சொன்னான்.‘வீல் சேர்’ வந்ததும் காயத்திரியை மெல்ல கீழே இறக்கி வீல் சேரில் உட்கார வைத்து டாக்டா¢டம் அழைத்துப் போனான் ரமேஷ்.டாக்டரைப் பார்த்ததும் ரமேஷ் “டாக்டர் இவங்களுக்கு கால் கட்டு போட்டு இன்னியோடு ஒரு மாசம் ஆறது.நான் அழைச்சுண்டு வந்து இருக்கேன்”என்று சொன் னதும் டாக்டர் “நான் இவங்களை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைச்சுப் போய் கால் கட்டைப் பிரித்து விட்டு ‘எக்ஸ்ரே’ எடுத்துப் பாக்கறேன்”என்று சொல்லி விட்டு ‘வீல் சேர்’ ஆளை “நீங்க இவங்களை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைச்சுக் கிட்டு போங்க,நான் பின்னாலேயே வரேன்“என்று சொல்லி விட்டு ரமேஷப் பார்த்து “நீங்க எல்லோரும் இங்கே ‘லாபியிலே’ உக்காந்து கிட்டு இருங்க”என்று சொ ல்லி விட்டு டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்குள் போனார்.ரமேஷூம்,லதாவும், ஆனந்தும் ‘லாபிலே’ இருந்த காலி சேர்களில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் ஆகி இருக்கும்.’வீல் சேர்’ ஆள் காயத்திரியை ஆபரேஷன் தியேட்டா¢ல் இருந்து வெளியெ கொண்டு வந்தான்.அவள் பின்னலேயே டாக்டரும் வந்தார்.டாக்டர் ரமேஷப் பார்த் து “சார்,இவங்க காலை நான் ‘எக்ஸ்ரே’ எடுத்து பாத்தேன்.ரெண்டு எலும்பு முறிவிலெ ஒன்னு நல்லா சேர்ந்திடுச்சி.ஒன்னு இன்னும் நல்லா சேரலே.சுமாரா சேர்ந்து இருக்கு.ஆனா அதுக்கு இப்ப ஒன்னும் பண்ண முடியாது.இவங்க நடக்க எல்லாம் முடியும்.ஆனா எல்லாத்தையும் விட முக்கியமானது என்ன ன்னா இவங்க உடம்பிலெ ‘கால்சியம்’ ரொம்ப கம்மியா இருக்கு.கால் எலும்பு எல்லாம் ரொம்ப வீக்கா இருக்கு.அதனால்லெ இவங்க மறுபடியும் கால்லே எந்த விதமான முறிவும் ஆவாம பார்த்து கிட்டு வர ணும்.இன்னொரு முறிவு ஏற்பட்டா அது மறுபடியும் ‘ஜாயின்’ ஆகவே ஆவாது.இவங்க படுத்த படுக் கைய தான் இருந்து வரணும்.அதனால்லே இவங்க வெறுமனே வீட்லே நடமாடி கிட்டு தான் இருக்க ணும்.நான் இவங்களுக்கு ‘கால்சியம் டாப்லெட்ஸ¤ம், ‘ஜெல்லும்’ எழுதித் தரேன்.இவங்க ஒரு நாளை க்கு ரெண்டு ‘டாப்லெட்ஸ்’ சாப்பிட்டு வரட்டும்.நான் கொடுத்த ‘ஜெல்லை’ கால்லே ஒரு நாளைக்கு ரெண்டு தடவை தடவி கொஞ்ச நேரம் உறின பிறகு காலுக்கு வென்னீர் விட்டு வரட்டும்.ஒரு ரெண்டு நாளைக்கு இவங்க காலை மெதுவா வச்சு நடந்து வரணும்.காலில் நல்ல ரத்த ஓட்டம் வர ஆரம்பிச்ச பிறகே இவங்க நார்மலா நடந்து வரலாம்” என்று சொல்லி ’கால்ஸியம் டாப்லெட்ஸ¤ம் ஜெல்லும்’ எழுதி கொடுத்தார்.உடனே ரமேஷ் அவரைப் பார்த்து “ரொம்ப ‘தாங்க்ஸ்’ டாக்டர்.நீங்க சொன்னதை நான் அவங்க கிட்ட சொல்லி ஜாக்கிரதையா இருந்து வரச் சொல்கிறேன்”என்று சொன்னான்.ரமேஷ் டிரை வரிடம் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து.மாத்திரைகளையும் ‘ஜெல்லையும்’ வாங்கி வர சொன் னான்..டிரைவர் அந்தப் பணத்தை வாங்கி கொண்டு போய் டாக்டர் எழுதி கொடுத்து இருந்த மாத்தி ரைகளையும் ‘ஜெல்லையும்’ வாங்கி வந்து ரமேஷிடம் கொடுத்தான்.பிறகு நிதானமாக டாக்டர் சொன் னதை எல்லாம் காயத்திரி மாமியிடம் விளக்கி சொன்னான் ரமேஷ்.உடனே காயத்திரி “என்ன இது அநியாயமா இருக்கு.கால் கட்டை அவுத்தவுடன், என் கால் எல்லாம் சரியா ஆயி,நான் ‘மெஸ்’ வேலைக்கு போய் வரலாம்ன்னு தானே காத்துண்டு இருந்தேன்.இந்த டாக்டர் என்னடான்னா என்னமோ பெ ரிய ‘லெக்சர் அடிக்கிறாரே” என்று கத்தினாள்.

ரமேஷ் மெதுவாக “மாமி,உங்களுக்கு உடம்பிலே ‘கால்சியம்’ கம்மியா இருக்கிறதாலே,உங்க எலும்பு எல்லாம் ரொம்ப வீக்கா இருக்கு.அதை தவிர உங்க கால் எலும்பு இன்னும் நன்னா சேரலை யாம்.நீங்க ஆத்லேயே நடந்து வந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு வந்து,அவர் எழுதிக் கொடுத்து இருக்கும் ‘ஜெல்லையும்’ தினம் ரெண்டு வேளையும் தடவி நன்னா ஊறின பிறகு வென்னீர் விட்டு ண்டு வாங்கோ.நீங்க மறுபடியும் வேலைக்கு எல்லாம் போய் வந்து,உங்க போறாத வேளை உங்களுக்கு மறுபடியும் எலும்பு முறிவு ஏற்பட்டா நீங்க படுத்த படுக்கையா ஆயிடுவேள்.அதனால் நீ ரொம்ப ஜாக் கிரதையா இருந்து வரணும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே லதா “அம்மா, இந்த விஷப் பரிக்ஷ எல்லாம் வேணவே வேணாம்.நீ மறுபடியும் சமையல் வேலைக்கு எல்லாம் போய் வரவே வே ணாம்” என்று சொல்லி அம்மாவை கையை பிடித்து கொண்டு அழுதாள் லதா.கொஞ்ச நேரம் ஆனதும் காயத்திரி “லதா.நீ என்னை போக வேனாம் ஆத்லேயே இருன்னு சொல்றே.நான் வேலைக்கு போய் வந்தா தானே நம்ம ஆத்துலே அடுப்பு எரியும்.போகாதேன்னா எப்படி முடியும்.மூளை இல்லாம பேச றயே” என்று சொல்லி லதாவைக் கடிந்து கொண்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் ரமேஷ் நிதானமாக “மாமி.நான் சொல்றதே நிதானமா கேளுங்கோ.நீங்க இந்த உடம்பை வச்சுண்டு சமையல் வேலைக்கு எல்லாம் போகவே வேணாம்.இத்தனை வருஷமா நீங்க அந்த நெருப்படியில் வெந்தது போதும்.லதா வயசு பொண்ணு.அவளும் எந்த வேலைக்கும் போக வேணாம்.நான் உங்களுக்கு இப்ப குடுத்துண்டு வரா மாதிரி மாசா மாசம் பத்தாயிரம் ரூபாய் குடுத்து வரேன்.எனக்கு இந்த பத்தாயிரம் ரூபாய் ஒன்னும் பெரிசே இல்லை.என் கிட்டே நிறைய பணம் இருக்கு.நான் யார் யாருக்கோ ஆயிரம் ஆயிரம் ருபாயா மாசா மாசம் செலவு பண்ணிண்டு வறேன்.நீங்களும் லதாவும் சந்தோஷமா இருந்து வந்தா போதும். உங்களுக்கு உதவ முடியாத பணம் எனக்கு எதுக்கு” என்று சொல்லும் போது அவன் கண்களில் கண் ணீர் வழிந்தது.தன் பாக்கெடில் இருந்து கைக் குட்டையை எடுத்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் ரமேஷ்.

காயத்திரி “நான் சொல்றேன்னு நீ தப்பா எடுத்தாதேப்பா.நீ இன்னைக்கு எங்களுக்கு பணம் தரேன்னு சொல்லி தருவே.கொஞ்ச மாசம் போன அப்புறமா நீ வந்து ‘மாமி என் ‘ப்லாஸ்டிக்’ வியாபா ரத்லே எனக்கு ரொம்ப நஷ்டம் வந்துட்டது.என்னால் உங்களுக்கு இனிமே பணம் தர முடியாதுன்னு சொன்னா,நாங்க அப்ப என்ன பண்ணுவோம் சொல்லு”என்று கேட்டு விட்டு ரமேஷ் முகத்தைப் பார் த்தாள்.அவன் ஒன்னும் சொல்லாமல் இருந்தான்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *