தீர்ப்பு உங்கள் கையில்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2019
பார்வையிட்டோர்: 5,382 
 
 

அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 | அத்தியாயம்-11

உடனே காயத்திரி “ரொம்ப சாரி மாமா.என் சமையல் வேலை போனதும்,என் புத்தி ரொம்பவே மழுக்கிப் போயிடுத்து.நான் என் செல் போனுக்கு காசு தீந்ததும் மறுபடியும் போட மறந்துட்டு இருக் கேன்.நான் பொய் சொல்லலே.நீங்களே என் ‘செல் போனை’ப் பாருங்கோ.நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கு புரியும்.எனக்கு மறுபடியும் அந்த ‘மெஸ்’லே வேலை கிடைக்கலே மாமா.அந்த ‘மெஸ்ஸை’ அவா நிரந்தரமா மூடிட்டா” என்று சொல்லும் போது காயத்திரி அழவே ஆரம்பித்து விட் டாள்.மாமி அழுவதைப் பார்த்த குருக்கள் காயத்திரி குடுத்த ‘செல் போனை’ வாங்கிப் பார்த்தாள். அந்த மாமி சொன்னது உண்மை என்று குருக்களுக்கு தெரிந்தது.”சாரி மாமி,நான் தான் உங்களே தப் பா புரிஞ்சுண்டு இருக்கேன்.சித்தே இருங்கோ.நான் என் அண்ணா கிட்டே கேட்டு அந்த வேலை இன்னும் இருக்கான்னு கேட்டு சொல்றேன்” என்று சொல்லி தன் அண்ணாவுக்கு ‘செல் போன்’லெ பேசினார். “அண்ணா,நான் தான் ரவி பேசறேன்.நான் சொல்லி இருந்தேனே அந்த மாமிக்கு வேலை எங்கேயும் கிடைச்சு போகலே,பாவம் அவா வேலை பண்ணீ வந்த ‘மெஸ்ஸை’ நிரந்தரமா மூடிட்டா ளாம்.அந்த மாமியும் அவா பொண்ணும் இப்போ கோவிலுக்கு வந்து இருக்கா.நீங்க சமையலுக்கு சொன்ன ஆத்லே யாராவது வேலைக்கு வந்துட்டாளா,இல்லை காலியா இருக்கா”என்று கேட்டார்.

”இல்லே ரவி அவா ஆத்து சமையல் வேலைக்கு இன்னும் யாரும் கிடைக்கலையாம்.நான் அவாத்து ‘அடரஸ்ஸை’,உனக்கு ’வாட்ச் அப்லே’அனுப்பிடறேன்.அந்த மாமியே நாளைக்கு காத்தா லே அந்த ‘அட்ரஸ்லே’ போய் பாக்க சொல்லு”என்று சொன்னதும்”சரிண்ணா,நீங்க ‘வாட்ஸ் அப்லே’ அனுப்பற ‘அடரஸ்ஸை’அந்த மாமி கிட்டே சொல்லி, நாளைக்கு காத்தாலே அவா ஆத்துக்கு போய் பாக்க சொல்றேன்” என்று சொல்லி தன் ‘செல் போனை’ ஆப் பண்ணீனார் குருக்கள்.பிறகு அங்கே இருந்த காகிதத்லே அண்ணா ‘வாட்ஸ் அப்லே’ அனுப்பின ‘அடரஸ்ஸை’ எழுதிக் குடுத்து “நீங்க இந்த ‘அடரஸ்லே’ இருக்கிற ஆத்துக்குப் போய் ‘உங்க ஆத்துக்கு வர கணபாடிகள் என்னை சமையல் வேலைக்கு கேக்கச் சொன்னா”ன்னு சொல்லுங்கோ.உங்களே அவாளுக்கு பிடிச்சு இருந்து,அவாகளு க்கு நீங்க பண்ற சமையல் பிடிச்சு இருந்தா,நீங்க அந்த ஆத்லே சமையல் வேலை பண்ணீ வாங்கோ. இருங்கோ.நான் சுவாமியே வேண்டிண்டு, அவருக்கு தீபம் காட்டி விட்டு குங்குமம் விபூதி பிரசாதம் தறேன்” என்று சொல்லி விட்டு பகவானுக்கு தீபத்தை காட்டி விட்டு,குங்குமம்,விபூதி பிரசாததை காயத்திரிக்கும் லதாவுக்கும் கொடுத்தார்.காயத்திரியும்,லதாவும் குருக்கள் கொடுத்த பிரசாததை வாங்கிக் கொண்டாள்.

”ரொம்ப தாங்ஸ் மாமா.அந்த வேலை மட்டும் நீங்க வேண்டிண்டா மாதிரி அந்த பகவான் எனக்கு தந்தார்ன்னு நான் என் மூச்சு இருக்கிற வரைக்கும்,நான் உங்களே மறக்காம இருந்து வரு வேன்” என்று கண்களில் கண்ணிர் தளும்ப சொல்லி விட்டு,அவர் குடுத்த குங்குமம், விபூதி பிரசாததை வாங்கிக் கொண்டு,தன் நெத்தியில் விபூதி பிரசாதத்தை இட்டுக் கொண்டாள்.பிறகு சுவாமியை மூனு பிரதக்ஷணம் பண்ணீ நமஸ்காரத்தை பண்ணி விட்டு லதாவை அழைத்துக் கொண்டு தன் போர் ஷனுக்கு வந்தாள் காயத்திரி.

போர்ஷனுக்கு வந்த காயத்திரி அவர் கணவர் படத்துக்கு முன்னால் நின்றுக் கொண்டு “நீங்க தான் தெய்வமா இருந்து எனக்கு அந்த ஆத்து வமையல் வேலையை வாங்கித் தரணும்”என்று தன் கண்களில் கண்ணீர் மல்க வேண்டிக் கொண்டாள்.கொஞ்ச நேரம் ஆனதும் லதா நிதானமா”எனக்கு என்னவோ அந்த ஆத்து சமையல் வேலை கிடைச்சுடும்ன்னு தோன்றதும்மா.நான் கோவல்¢லே சுவா மியே வேண்டிண்டு இருக்கும் போது விநாயகர் தலையிலே வச்சு இருந்த ரோஜாப் பூ அவர் கால்லே விழுந்ததும்மா.எனக்கு இனிமே நம்ப கஷ்டம் எல்லாம் தீந்து நாம சௌக்கியமா வாழ்ந்துண்டு வரு வோன்னு தோன்றது.அப்படி அவ ஆத்து சமையல் வேலைக் கிடைச்சுட்டா,அவா கிட்டே நாம என் ‘உடம்பை’ பத்தி சொல்லியே ஆகணும்.அது ஒரு பிராமணா வீடு.அங்கே இருக்கிற மாமி நிச்சியமா என்னைப் பத்தி கேப்பா.நான் ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணினேன்.எனக்கு இந்த வழி தான் நல்லதுன்னு பட்டது.நாம ‘ஒரு பொய்’ சொல்லியே ஆகணும்மா.நீ பேசாம ‘எங்க பொண்ணுக்கு கல்யா ணம் ஆயிடுத்து.கல்யாணம் ஆயி ரெண்டு மாசம் கூட ஆகி இருக்காது,எங்க மாப்பிள்ளை போயிண்டு இருந்த ஸ்கூட்டர் ‘அக்ஸிடெண்ட்’ ஆயி,அவர் ‘தவறி’ப் போயிட்டார்.அவா ஆத்லே என் பொண்ணை என் ஆத்துக்கு அனுப்பிட்டா.இப்போ அவ என்னோடு இருந்து வறான்னு சொல்லிடு” என்று சொன் னதும் காயத்திரிக்கு ‘ஷாக்கா’ இருந்தது.

உடனே அவள் ”என்னடி என்னமோ பேத்தறே.நீ சொல்றது ஒரு பொய் லதா.எப்படிடீ நான் உனக்கு கல்யாணமே பண்ணாம,பண்ணேன்னு ரு பொய் சொல்றது.மாப்பிள்ளை ‘தவறி’ப் போயிட்டா ர்ன்னு ரெண்டாவது பொய் சொல்றது.அந்த ஆத்லே என் பொண்ணை வச்சுக்காம,என் ஆத்துக்கு அனுப்பி ட்டான்னு மூனாவது பொய்யும் சொல்றது.நீ நாம எந்த பொய்யும்,தப்பும் பண்ணக்கூடாது எனக்கு புத்தி சொன்னவ”என்று கோவமாக கேட்டாள்.லதா நிதானமா “நீயே நன்னா யோஜனை பண்ணும்மா.எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலேன்னும் சொல்ல முடியாது.நாங்க இதுக்கு முன்னாடி சமையல் வேலை செஞ்சு வந்த ஆத்லே ஒரு ‘நயவஞ்ச பையன்’ இந்த மாதிரி பண்ணிட்டான்’னும் சொல்ல முடியாது.அப்படி சொன்னா,அவா நீங்க உடனே ஏன் போலீஸ் ‘கம்ப்லெயிண்ட்’தறலேன்னு கேப்பா.அதுக்கும் நம்மாலே பதில் சொல்லவும் முடியாது.அவ எதிரே முழிச்சுண்டு நிக்கறதே விட நான் சொன்னா மாதிரி சொன்னா,அவ சும்மா இருந்துண்டு நம்ப மேலே அனுதாப்படுவா.பேசாம நான் சொன்னா மாதிரியே சொல்லிட்டு,அவ சமையல் வேலையை குடுத்தா பண்ணீண்டு வரலாம். கூடவே உன் பள்ளித் தோழி வசத்தி மாமி குடுத்து இருக்கிற ஆத்தை காலி பண்ணிட்டு,வேறே எங் காவது ஒரு சின்ன இடத்தை வாடகைக்கு பாத்துண்டு வந்து,இனிமேதெரிஞ்சவா யார் கண்லேயும் படாம இருந்து வரலாம்மா.அப்புறமா நாம யார் கிட்டேயும் ஒரு பொய் கூட சொல்லாம,இந்த குழந்தை யை நான் பெத்துண்டு வந்து,அவனை நன்னா படிக்க வச்சு,அவனைஆளாக்கி வரலாம்.நாம ரெண்டு பேரும் ஒன்னா இருந்துண்டு வரலாம்மா.நீ தயவு செஞ்சி எனக்காக நான் சொன்னா மாதிரி மூனு பொய்யையும் சொல்லும்மா”என்று அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள்.

லதா சொன்னதை ரொம்ப நேரம் யோஜனைப் பண்ணினாள் காயத்திரி.அவளுக்கு வேறே எந்த வழியும் தெரியலே.எப்படி சொன்னாலும் ஒன்னு போட்டு,ஒன்னு சொல்லி வந்து கடைசியாக அந்த ‘உண்மையை’ சொல்ல வேண்டி இருக்கும் என்று முடிவு பண்ணினாள்.சா¢, நாம லதா சொன்னது போலவே சொல்லி விடலான்னு என்று முடிவு பண்ணி “சா¢ லதா,நீ சொல்றது தான் எனக்கும் சா¢ன்னு படறது.நான் அப்படியே சொல் றேன்.நீ அழாதே.நீ அழுதா,என்னால் பாத்துண்டு சும்மா இருக்க முடியாது.உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்”என்று சொல்லி லதாவின் கண்களைத் துடைத்து விட்டாள்.ரெண்டு பேரும் சுவாமியை வேண்டிக் கொண்டு சாபிட்டு விட்டு படுத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் காலையிலே காயத்திரியும் லதாவும்,எழுந்து, பல்லை தேய்த்துக் கொண்டு குளித்து விட்டு,காபியை குடித்தார்கள்.காயத்திரி பகவான் படத்துக்கும்,அவர் கணவர் படத்துக்கும், நமஸ்காரம் பண்ணி வேண்டிக் கொண்டாள்.லதாவும் அம்மா கூட நின்றுக் கொண்டு ரெண்டு படத் துக்கும் நமஸ்காரம் பண்ணீனாள்.ஆத்தை நன்றாக பூட்டிக் கொண்டு குருக்கள் எழுதி கொடுத்த ‘அட்ரஸ்ஸ¤க்குப் போனார்கள்.அந்த வீடு வசந்தி வீடு போலவே மேலும் கீழுமாய் இருந்தது.அந்த வீட்டின் வாசலில் இரும்பு கேட் போட்டு இருந்தது.காயத்திரி வாசல் கதவை மெதுவாக திறந்துக் கொ ண்டு,தன் கணவரையும்,பகவானை வேண்டிக் கொண்டு.வாசல்லே நின்றுக் கொண்டு “மாமி, மாமி” என்று குரல் கொடுத்தாள்.ஒரு அறுபத்தி ஐஞ்சு வயசான ஒரு பொ¢யவர் வாசலுக்கு வந்து காயத்திரி யையும் லதாவையும் ஏற இறங்கப் பார்த்தார்.கொஞ்ச நேரம் ஆனதும் அவர் “நீங்க யாரு.உங்களுக்கு யாரைப் பாக்கணும்”என்று கேட்டார்.காயத்திரி பயந்துக் கொண்டே ”உங்க ஆத்து கணபடிகள் தான் எனக்கு இந்த ஆத்து ‘அடரஸ்ஸை’க் குடுத்து சமையல் வேலைக்கு கேக்கச் சொன்னாரு”என்று கேட்டதும் “ஓ அப்படியா,உள்ளே வாங்கோ” என்று சொல்லி விட்டு ஆத்துக்கு உள்ளே போனார்.

உள்ளே போய் அவர் உட்கார்ந்துக் கொண்டு இருந்த காலியா இருந்த ஒரு ஒத்தை ‘சோபா சீட்லே’ உட்கார்ந்துக் கொண்டார்.எதிர் ‘சோபா சீட்லே’அவர் மணைவி உட்கார்ந்துக் கொண்டு இருந்தாள்.ரெண்டு பேர் உட்காரும் ‘சோபா சீட்லே’ஒரு பையனும்,பொண்ணும் அன்றைய இங்கிலீ ஷ் பேப்பரைப் படித்துக் கொண்டு இருந்தார்கள்.அந்த மாமி “எங்க ஆத்து வாத்தியார் உங்களே அனுப் பினாரா.உங்களுக்கு நன்னா சமைக்க வருமா”என்று கேட்டதும் காயத்திரி “எனக்கு நன்னா சமைக்க வரும்” என்று சொல்லி விட்டு நின்று கொண்டு இருந்தாள்.”இந்த பொண்ணு யாரு” என்று கேட்டதும் காயத்திரி லதா தன்னிடம் சொன்னது போலவே சொன்னாள்.உடனே அந்த மாமி “அப்படியும் பண் ணுவாளா ஒருத்தர் ஆத்லே,கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு.என்ன மனுஷாளோ” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அந்த பையனும் அந்த பொண்ணும் காயத்திரியையும் லதாவையும் ஏற இறங்கப் பார்த்தார்கள்.

கொஞ்ச நேரம் ஆனதும் அந்த மாமி “நீங்க எத்தனை வருஷமா சமையல் வேலை பண்ணிண்டு வறேள்” என்று கேட்டதும் உடனே காயத்திரி நான் ஆறு வருஷமா சமையல் வேலை பண்ணிண்டு வறேன்.கடைசியா நான் ஒரு இருபது நாள் வரைக்கும் என் ஆத்துக்காரர் ‘ப்ரண்ட்’ நடத்தி வந்த ‘சீனு மெஸ்லே’ சமையல் வேலை செஞ்சு வந்தேன்.’மெஸ்’ மாமாவுக்கு திடீர்ன்னு ‘ஹார்ட் அட்டாக்’ வந்து அவா அந்த ‘மெஸ்ஸையே’ மூடிட்டா.நான் பண்ணிண்டு வந்த சமையல் வேலை போயிடுத்தே ன்னு,நான் கோவிலுக்கு போனப்ப அங்கே இருந்த குருக்கள் கிட்டே சொன்னேன்.அவர் தான் அவர் அண்ணாவுக்கு போண் பண்ணீ எனக்கு உங்க ஆத்து ‘அட்ரஸ்ஸை’ தந்து,சமையல் வேலை கேக்க சொன்னார்.குருக்களோட கனபாடிகள் அண்ணா உங்க ஆத்து வாத்தியாராம்”என்று தன் முழு கதை யையும் சொல்லி விட்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.உடனே அந்த பையன் பேப்பர் வாசிப்பதை நிறுத்தி விட்டு “நீங்க சீனு ‘மெஸ்லே’ சமையல் வேலை பண்ணிண்டு வந்தேளா.அங்கே சாப்பாடு, ‘டிபன்’ எல்லாம் ‘சூப்பரா’ இருக்கும்.நான் அங்கே சாப்பிட்டு இருக்கேன்” என்று சொன்னான்.அந்த மாமி விடாம,“உங்க ஆத்துக்காரர் என்ன பண்ணீண்டு இருந்தார்”என்று கேட்டதும் அவர் ஒரு ‘ஸ்வீட் மாஸ்டரா’ இருந்தார்” என்று பதில் சொல்லி விட்டு ‘இத்தனை கேள்விகளை இந்த மாமி கேக்கறா, நமக்கு சமையல் வேலை தறப் போறாளா இல்லையா’ன்னு கவலைப் பட்டுக் கொண்டு இருந்தாள் காயத்திரி.

“நான் இத்தனை வருஷமா இந்தாத்லே சமைச்சுண்டு இருந்தேன்.என் வலது கை இப்ப ரொம்ப வலிக்கறது.அதான் எங்களுக்கு ஒரு சமையல் கார மாமி வேண்டி இருக்கு.எங்காத்லே நாங்க நாலு பேர் தான்.இவன் என் பையன் குமார்.அது என் மாட்டுப் பொண்ணு அவ பேர் மாலா.நீங்க காத்தாலே ஆறு மணிக்கு எல்லாம் எல்லோருக்கும் சூடா காபி போட்டுக் குடுக்கணும்.அப்புறமா எல்லாருக்கும் ‘டிபன்’ பண்ணித் தரணும்.மத்தியானம் பதினோறு மணிக்கு எங்க ரெண்டு பேருக்கும் சூடா சமைய ல் பண்ணனும்.அப்புறமா மத்தியானம் நாலு மணிக்கு சூடா காபி போட்டுட்டுத் தரணும்.ராத்திரி ஏழு மணிக்கு டிபன் பண்ணனும்.உங்களால் முடியுமா” என்று அந்த மாமி கேட்டாள்.உடனே காயத் திரி “என்னால் நீங்க சொன்ன சமையல் பண்ண முடியும்” என்று சொன்னதும் அந்த மாமி “நீங்க எங்கே இருக்கேளோ எனக்குத் தெரியாது.நீங்க அந்த இடத்தே காலி பண்ணிட்டு எங்க ஆத்து ‘சைட் லே’ இருக்கிற போர்ஷனுக்கு வந்து தங்கினாத் தான்,இந்த நாலு வேளையும் நான் சொன்ன ‘டயத்துக் கு’ எல்லா சமையல் பண்ண முடியும்.நான் மாசா மாசம் உங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் சமபளம் தரு வேன்.உங்களுக்கு சம்மதமா” என்று கேட்டதும் காயத்திரி “எனக்கு சம்மதம் மாமி.நீங்க சொன்ன சமையலை நான் பண்றேன்.இப்போ நான் போய் நான் இருக்கிற ஆத்தை காலி பண்ணிட்டு உங்க ஆத்து ‘சைட் போர்ஷன்லே வந்து தங்கறேன்.இப்போ நான் இருந்து வர ஜாகை என் பள்ளிகூட தோழி எனக்கு ‘ப்ரீயா’ தான் தந்து இருக்கா.நான் அவ கிட்டே எல்லா சமாசாரத்தையும் சொல்லிட்டு, கொஞ்ச சாமான்களை எல்லாம் எடுத்துண்டு இன்னைக்கு சாயங்காலத்துக்கு உள்ளே வந்து உங்க ஆத்து போர்ஷனில் தங்கிக்கறேன்.நாளைக்கு காத்தாலே நான்ஆறு மணிக்கு எல்லாம் இங்கே வந்து நீங்க சொன்னா மாதிரி சமையல் பண்றேன்” என்று சொன்னாள்.

“சா¢,நல்லாதா போச்சு.நீங்க அப் படியே பண்ணுங்கோ”என்று சொல்லி விட்டு “குமார் அந்த ‘சைட் போர்ஷன்’ சாவியே எடுத்துண்டு போய் கதவை தொறந்து விட்டு அந்த போர்ஷனை மாமிக்குக் காட்டு”என்று சொன்னதும் குமார் சாவியை எடுத்துக் கொண்டு காயத்திரியோடு வந்து ‘சைட் போர்ஷ னை’ திறந்து காட்டினான்.பின்னால் ஒரு சின்ன கிச்சனும்,முன்னால் ஒரு சின்ன ஹாலும் இருந்தது. “உங்க ரெண்டு பேருக்கும் இந்த போர்ஷன் பிடிச்சு இருக்கா” என்று குமார் கேட்டதும் காயத்திரி சந்தோஷத்லே ”ரெண்டு பேருக்கு இந்த இடம் வெள்ளம்” என்று சொன்னாள்.

காயத்திரியையும்,லதாவையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சாவியை மாட்டப் போனான் குமார்.உடனே அந்த மாமி “குமார் சாவியே மாட்டாதே” என்று சொல்லி தன் கையிலே வாங்கிக் கொண்டு “இந்த சாவியே நீங்களே வச்சுக்குங்கோ.நீங்க உங்க சாமான்களை கொண்டு வரும் போது, நீங்களே அந்த ‘போர்ஷனை’ தொறந்து வக்க சௌகரியமா இருக்கும்“ என்று சொல்லி சாவி யை காயத்திரி கிட்டே கொடுத்தாள்.உடனே காயத்திரியும்,லதாவும் அந்த மாமிக்கும் மாமாவுக்கும் நமஸ்காரம் சொல்லி விட்டு தங்கள் போர்ஷனுக்கு வந்தார்கள்.அவர்கள் போனதும் “பாவம் அந்த சமையல் கார மாமி.’வாழாத’ ஒரு பொண்ணை வச்சுண்டு,சமையல் வேலைக்கு போய் கஷ்டப் பட்டு வந்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து நான் உங்களே எல்லாம் கேக்காமலே சமையல் வேலையை அந்த மாமிக்கு குடுத்துட்டேன்.பாக்க கிளீயாட்டும் இருக்கா அந்த மாமியோட பொண்னு.அவளோட குடுத்தனம் பண்ண குடுத்து வக்கலே கல்யாணம் பண்ணிண்ட பையனுக்கு” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள் அந்த மாமி.உடனே குமார் “சீனு ‘மெஸ்லே’ சமையல் வேலை செஞ்சுண்டு வந்து இருந்தா,நிச்சியமா ரொம்ப நன்னா சமையல் வேலை பண்ணுவான்னு எனக்குத் தோன்றது” என்று சொன்னான்.

”நீ அந்த மாமிக்கு சமையல் வேலை குடுத்ததுக்கு எனக்கு ஒரு ‘அப்ஜெக்ஷனும்’ இல்லே.பாவம் நம்ம ஆத்து கனபாடிகள் வாத்தியார் சொன்னான்னு,நம்ம ஆத்துக்கு வந்து சமையல் வேலை கேட்டு இருக்கா மீனு.நீ அந்த மாமிக்கு இன்னும் ஒரு ஆயிரம் ரூபா சேத்துக் குடுத்து இருக்கலாம்ன்னு தோன்றது” என்று சொல்லி முடிக்கவில்லை “ஆமாம் அப்பா சொல்றது ரொ ம்ப கரெக்ட்”என்று சொல்லி மாமனார் சொன்னதை ஆமோதித்தாள் மாலா.உடனே அந்த மாமி “சா¢, அந்த மாமி, நம்மா த்துக்கு வந்து சமையல் பண்ணட்டும்.சமையல் நன்னா இருந்தா அடுத்த மாசம் நாம சம்பளத்தே ஒரு ஆயிரம் ரூபாய் ஒசத்தலாம்” என்று சொல்லி எழுந்து பாத் ரூமுக்குப் போனாள்.

காயத்திரி லதாவை அழைத்துக் கொண்டு தன் ‘போர்ஷன்’ கதவை திறந்து,புது வீட்டு போர் ஷன் சாவியை,தன் கணவர் படத்துக்கும் சுவாமி படத்துக்கும் முன்னாலே வைத்து விட்டு “எனக்கு அவா ஆத்லே சமையல் வேலை கிடைச்சு இருக்கு.நான் அந்த ஆத்லே நிரந்தரமா சமையல் வேலை பண்ணி வரணும்.லதாவுக்கு சுகப் பிரசவம் ஆகணும்.எங்க ரெண்டு பேருக்கும் ஆசீர்வாதம் பண்ணுங் கோ”என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினாள்.லதாவையும் ரெண்டு படத்துக்கும் நமஸ்காரம் பண் ணச் சொன்னாள்.பிறகு லதா சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.காயத்திரி “லதா,நீ சமையலைப் பண்ணு.நான் வசந்தி கிட்டே ’எல்லாத்தையும் சொல்ல ட்டு சாயங்காலமா சில முக்கிய மான சாமான்களை எடுத்துக் கொண்டு அந்த வீட்டு ‘போர்ஷனு’க்கு போய் வைத்து விட்டு,மீதி சாமான்களை நேரம் கிடைக்கும் போது எடுத்துக் கொண்டு போன பிறகு அவ ‘போர்ஷன்’ சாவியை தந்துட்டுப் போறேன்’ன்னு சொல்லி விட்டு வறேன்”என்று சொல்லி விட்டு வசந்தி வீட்டுக்குப் போனாள்.வசந்தியிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டு,அவளை ரொம்ப ‘தாங்க்’பண்ணி விட்டு வந்தாள்.இருவரும் சமையல் ஆனதும் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் ரெஸ் ட் எடுத்துக் கொண்டார்கள்.மூனு மணிக்கு எல்லாம் காயத்திரி எழுந்து முக்கியமான சாமான்களை எடுத்து ரெ ண்டு கோணிப் பையிலே வைத்துக் கொண்டாள்.லதா போட்ட ‘டீயை’க் குடித்து விட்டு இருவரும் ஒரு ஐஞ்சு மணிக்கு கோவிலுக்குப் போனார்கள்.

காயத்திரி அந்த குருக்களைப் பார்த்து “மாமா ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் உங்களுக்கு.நான் நீங்க குடுத்த ‘அட்ரஸ்லே போய் கேட்டேன். அவ என்னை சமையல் வேலைக்கு வச்சுக்கறேன்னு சொல்லி ட்டா.நீங்க மட்டும் இந்த உதவியே பண்ணாம இருந்தா,நான் வேலை எல்லாம திண்டாடிண்டு வந்து இருப்பேன்” என்று தன் கைகளை கூப்பி கண்களில் கண்ணிர் தளும்ப சொன்னாள்.உடனே அந்த குருக்கள் “என்னை தாங்க் பண்ணாதீங்கோ.எங்க அண்ணா தான் உங்களுக்கு இந்த ‘அட்ரஸே’ குடுத்தார்.அவருக்கு தான் நீங்க தாங்க்ஸ் சொல்லணும்”என்று சொன்னதும் காயத்திரி “மாமா, நான் நாளையிலே இருந்தே,அவ ஆத்லே சமையல் பண்ண வறேன்னு சொல்லி இருக்கேன்.அந்த ஆத்து மாமி என்னை காத்தாலே ஆறு மணீக்கு எல்லாம் காபி போட வறச் சொல்லி இருக்கா.தயவு செஞ்சி நீங்க எனக்காக அவருக்கு என் ‘தாங்க்ஸை’ சொலிடுங்கோ”என்று சொல்லி விட்டு அவர் சுவாமிக்கு தீபம் காட்டி விபூதி பிரசாதம் கொடுத்தவுடன்,அவர் தட்டிலே ஒரு பத்து ரூபாய் நோட்டைப் போட்டு, லதாவையும் அழைத்துக் கொண்டு சுவாமியை மூனு தடவை பிரதக்ஷணம் பண்ணி விட்டு தன் ‘போர் ஷனு’க்கு வந்தாள்.

புது போர்ஷன் சாவி,அவள் கட்டி வைத்து இருந்த ரெண்டு கோணி மூட்டை,கணவர் படம், சுவாமி படம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ரெண்டு ஆட்டோவிலே ஏற்றக் கொண்டு தன் புது வீட்டு ‘போர்ஷனு’க்கு வந்து,அதை திறந்தாள்.அவள் கணவர் படத்தையும், சுவாமி படத்தையும் சுவற்றீல் இருந்த ஆணியிலே மாட்டி விட்டு ரெண்டு படத்துக்கும் நமஸ்காரம் பண்ணீனாள்.பிறகு காயத்திரி முன் பக்கமாக போய் அந்த வீட்டு மாமியிடம் “மாமி,நான் முக்கியமான சாமான்களை அந்த ஆத்லே இருந்து எடுத்துண்டு வந்து,நீங்க குடுத்து இருக்கிற ‘போர்ஷன்’லே வச்சு இருக்கேன்.நான் நாளைக்கு காத்தாலே குளிச்சுட்டு ஆறு மணீக்கு எல்லாம் இங்கே வந்து உங்களுக்கு காபி போட்டுத் தறேன்”என்று சொன்னதும்” பரவாயில்லையே,ரொம்ப ‘பாஸ்ட்டா’, உன் முக்கியமான சாமான்களை எல்லாம் எடுத்துண்டு வந்து இருக்கே.நீ சொன்னபடியே காத்தாலே குளிச்சுட்டு வா”என்று சொன் னாள்.அந்த மாமிக்கும்,அவர் கணவருக்கும் காயத்திரி இத்தனை சீக்கிரமாக வருவாள் என்று எதிர் பார்க்க வில்லை.அவர்கள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள்

அடுத்த நாள் காயத்திரியும்,லதாவும் குளித்து விட்டு,மாமி வீட்டுக்குப் போனார்கள்.காயத்திரி வாசல் ‘கால் பெல்லை’ அடித்தாள்.அந்த மாமி கதவைத் திறந்து விட்டு காயத்திரிக்கு சமையல் ரூம், ஸ்டோர் ரூம்,’பிரிட்ஜ்’ எல்லாத்தையும் காட்டிக் கொடுத்து விட்டு,எல்லாருக்கும் காபி போட்டு கொடுத்த பிறகு அன்னைக்கு பண்ண வேண்டிய ‘டிபனை’ சொன்னாள்.அந்த மாமி சொன்னது போல காயத்திரி எல்லோருக்கும் முதல்லே காபிப் போட்டு கொடுத்தாள்.அந்த காபியைக் குடித்த அந்த ஆத்து மாமா “காபி பேஷா இருக்கே.எனக்கு இதே மாதிரி இன்னும் கொஞ்சம் காபி குடுங் கோ”என்று சொன்னதும் அந்த மாமாவுக்கு முதல்லெ போட்டது போல இன்னும் கொஞ்சம் காபி யைப் போட்டு கொடுத்தாள் காயத்திர். உடனே அந்த மாமி “மாமி நீங்களும் காபி குடியுங்கோ, உங்க பொண்ணுக்கும் காப்¢ குடுங்கோ.அப்புறமா ஒரு மணி நேரம் கழிச்சு டிபனைப் பண்ணுங்கோ” என்று சொன்னாள்.ரெண்டு பேரும் காபி குடித்தார்கள்.லதா டிபனுக்கு வேண்டிய காய்களை எல் லாம் ‘ப்ரிட்ஜில்’ இருந்து எடுத்து நறுக்கிக் கொடுத்தாள்.ஒரு மணி நேரம் ஆனதும்,காயத்திரி மாமி சொன்ன ‘டிபனை’ ப் பண்ணீ ‘ஹாட்பேக்கில்’ வைத்து ‘டைனிங்க் டேபிள்’ மேலே வைத்து விட்டு வந்தாள்.நாலு பேரும் காயத்திரி செய்த டிபனை ரசித்து சாபிட்டார்கள்.பிறகு அந்த பையனும் மாட்டுப் பொண்ணும் ‘டிரஸ் பண்ணிக் கொண்டு காரில் ஒன்றாக வேளைக்குக் கிளம்பிப் போனார்கள் அந்த மாமி காயத்திரியைக் கூப்பிட்டு “மாமி ‘ஹாட் பேக்கில்’ மீந்து இருக்கும் டிபனை, நீங்களும் உங்க பொண்ணும் சாப்பிட்டு விட்டு தேய்க்கப் போட்டு விடுங்கோ.வேலைக்காரி வந்து தேய்ச்சு வச்சிடுவா”என்று சொல்லி விட்டு மத்தியானம் அவளுக்கும் அவள் கணவருக்கும் பண்ண வேண்டி ய சமையலை சொல்லி விட்டு குளிக்கப் போனாள்.

ஒரு பதினோறு மணிக்கு அந்த மாமி சொன்ன சமையலை காயத்திரி பண்ணி ‘ஹாட் பேக்கில்’ வைத்து ‘டைனிங்க் டேபிள்’ மேலே வைத்து விட்டு வந்தாள்.பன்னிரண்டு மணிக்கு மாமியும் மாமா வும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு “சமையல் ரொம்ப நன்னா பண்ணீ இருக்கேள் மாமி” என்று சொல்லி புகழ்ந்தார்கள்.காயத்திரிக்கும் லதாவுக்கும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சாயங்காலம் நாலு மணிக்கு காயத்திரி மாமிக்கும் மாமாவுக்கும் காலையிலே போட்டது போல காபி போட்டுக் கொடுத்தாள்.கொஞ்ச நேரம் லதாவை அழைத்துக் கொண்டு தன் போர்ஷனுக்குப் போய் ‘ரெஸ்ட்’ எடுத்துக் கொண்டாள் காயத்திரி.சாயங்காலம் ஏழு மணிக்கு மாமி வீட்டுக்கு வந்து, அந்த மாமி சொன்ன ‘டிபனை’ பண்ணி ‘ஹாட் பேக்கிகில்’ வைத்து,‘டைனிங்க் டேபிள்’ மேலே வைத்து விட்டு வந்தாள்.எட்டரை மணிக்கு அவர்கள் நாலு பேரும் சாப்பிட்ட பிறகு மீதி இருந்த ‘டிபனை’ இருவரும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை எல்லாம் தேய்க்கப் போட்டு விட்டு,அவர்கள் ‘போர்ஷனு’க்கு வந்து படுத்து கொண்டார்கள்.அடுத்த வாராமே காயத்திரி தன் பழைய ‘போர்ஷனு’க்குப் போய் மீதி சாமான் களை எல்லாம் எடுத்துக் கொண்டு,வசந்தியை ரொம்ப ‘தாங்க்’ பண்ணி விட்டு,’போர்ஷன்’ சாவியை அவளிடம் கொடுத்து விட்டு,ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு புது ‘போர்ஷனு’க்கு வந்து அவை களை வைத்தாள்.

ரெண்டு மாசம் ஆனதும் காயத்திரி ஒரு ஐஞ்சு மணிக்கா லதாவை அழைத்துக் கொண்டு டாக் டா¢டம் ‘செக் அப்புக்கு போனாள்.டாக்டர் லதாவை ‘செக்அப்’ பண்ணி விட்டு எல்லாம் சா¢யா இருக்கு, என்று சொல்லி விட்டு, சில மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார்.காயத்திரி அந்த மாத்திரைகளை ஒரு ‘மெடிக்கல் ஷாப்பில்’ வாங்கிக் கொண்டு ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினாள்.வாசலில் நின்றுக் கொண்டு இருந்த மாமி ”எங்கே மாமி,உங்க பொண்ணே இந்த நேரத்லே அழைச்சுண்டு போய் வறேள்” என்று கேட்டதும்,காயத்திரி உண்மையை அந்த மாமி கிட்டே சொல்றது நல்லது என்று நினைத்து “நான் லதாவை டாக்டர் கிட்டே ‘செக் அப்புக்கு’ அழைச்சு போய் இருந்தேன்” என்று சொன்னதும் அந் த மாமி உடனே “உங்க பொண்ணு ‘பாமிலி வேயில்’ இருக்காளா” என்று ஆச்சா¢யத்துடன் கேட்டதும், காயத்திரி தன் கண்களில் கண்ணிர் தளும்ப “ஆமாம் மாமி,அந்த பகவான் இந்த கஷ்டத்தையும் எனக்குக் குடுத்து இருக்கார்.இது பேருக்கு அஞ்சாவது மாசம்” என்று சொல்லி தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.உடனே அந்த மாமி “அடப் பாவமே,என்ன சோதனை இது.உங்க பொண்ணு க்கு ‘செக் அப்’வைத்திய செலவு வேறே நீங்க பண்ணி வர வேண்டி இருக்கே.என் கடைசி தம்பி ஒரு ‘நர்ஸிங்க்’ ஹோம் வச்சு இருக்கான்.அங்கே ரெண்டு லேடி டாகடர் இருக்கா.நீங்க அடுத்த தடவை அங்கே ‘செக் அப்புக்கு’அழைச்சுண்டு போங்க.நான் அவனுக்கு போன் பண்ணீ உங்க பொண்ணு ‘செக் அப்புக்கு’ம் பிரசவ செலவுக்கும் பணம் வாங்கிக்காம ‘ப்ரீயா’ பண்ண சொல்றேன்”என்று சொல்லி விட்டு,காயத்திரியையும் லதாவையும் தன் வீட்டுக்குள்ளே அழைத்து கொண்டு போனாள்.

தன் தம்பியை செல் போனில் கூப்பிட்டு “சேகர்,நான் தான் மீனு அக்கா பேசறேன்.ரெண்டு மாசமா எங்காத்லே ஒரு புதுசா ஒரு மாமி சமையல் வேலை பண்ணீண்டு வறா.அந்த மாமிக்கு ஒரு பொண்ணு.அவ பேர் லதா.லதா இப்போ ‘பேமிலி வேயில்’ இருக்கா.பேருக்கு அவளுக்கு இது ஐஞ்சா வது மாசமாம்.நான் அந்த மாமியையும் அவா பொண்ணையும் உன்னை வந்து பாக்க சொல்றேன்.நீ எனக்காக அந்த பொண்ணு ‘செக் அப்புக்கும்’, பிரசவ செலவுக்கும் பணம் வாங்கிக்காம ‘ப்ரீயா’ பண்ணு.அவாளைப் பத்தின மத்த ‘டிடேல்ஸ்’ எல்லாம் நான் உனக்கு அப்புறமா சொல்றேன்” என்று சொன்னதும் சேகர் “நான் அப்படியே பண்றேன் அக்கா” என்று சொல்லி ‘செல் போனை’ ‘கட்’ பண்ணி னான்.சொல்லி விட்டு அந்த மாமி அவள் கணவர் பக்கத்திலே சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். காயத்திரி இருவர் காலையும் தொட போனாள்.அந்த மாமி “எங்க காலை எல்லாம் நீங்க தொடாதீங்க. நாங்க பகவான் இல்லே.என்னால் முடிஞ்ச ‘ஹெல்பை’த் தான் நான் பண்ணி இருக்கேன்”என்று சொல்லி விட்டு “உங்க பொண்ணை அடுத்த ‘செக் அப்புக்கு’ இந்த ‘விஸிடிங்க் கார்ட்டை’ எடுத்துண் டு அந்த ‘நர்ஸிங்க் ஹோமுக்கு’ப் போய் என் தம்பி சேகரைப் பாருங்கோ.மத்ததை அவன் கவனிச்சு க்குவான்”என்று சொன்னான்.உடனே லதாயும் காயத்திரியும் ஒரே சமயத்லே “ரொம்ப தாங்க்ஸ் மாமி” என்று கையை கூப்பி சொன்னார்கள்.காயத்திரி அந்த மாமி கொடுத்த ‘விசிடிங்க் கார்ட்டை’ வாங்கிக் கொண்டு,லதாவையும் அழைத்துக் கொண்டு தன் ‘போர்ஷனு’க்குப் வந்தாள்.
தன் ‘போர்ஷனு’க்கு வந்ததும் வராததுமாய் காயத்திரி தன் கணவர் படத்துக்கும்,சுவாமி படத்து க்கும் நமஸ்காரத்தை பண்ணினாள்.”லதா இந்த ஆத்து மாமி இவ்வளவு நல்ல மாதிரி இருக்காளே. உனக்கு இனிமே எல்லாம் ‘ப்ரீயா’ பண்ண ஏற்பாடு பண்ணி இருக்காளே.நீ சொன்னது போல நமக்கு ஒரு விடிவு காலம் வந்து இருக்கு போல இருக்கே” என்று சொல்லி சந்தோஷப் பட்டாள்.“உங்க ரெண்டு பேர் ஆசீர்வாதத்தாலே தான் அம்மாவுக்கு இந்த ஆத்லே சமையல் வேலைக்கு கிடைச்சு இருக்கு.அந்த மாமி தயவாலே இனிமே என் பிரசவம் வரைக்கும் எல்லாம் ‘ப்ரீயா’ பண்ண,தன் தம்பிக்கு போன் பண்ணி சொன்னதும்,அதுக்கு அவர் ஒத்துக் கொண்டு இருக்காரே.நிச்சியமா எங்க ளுக்கு ஒரு விடிவு காலம் வந்து இருக்கு” என்று சொல்லி தன் அப்பா படத்துக்கும் சுவாமி படத்துக்கு ம் நமஸ்காரம் பண்ணீ சந்தோஷப் பட்டாள் லதா.லதா இப்படி சொல்லி நமஸ்காரம் பண்ணினதைப் பார்த்து காயத்த்ரி சந்தோஷப் பட்டாள்.

அடுத்த மாசம் சாயங்காலம் தன் ‘போர்ஷனு’க்கு வந்த காயத்திரி லதாவை கூட்டிக் கொண்டு அந்த மாமி குடுத்த ‘விசிடிங்க் கார்ட்டில் இருந்த விலாசத்துக்கு வந்து டாகடர் சேகரைப் பார்த்தாள். உடனே சேகர் மாயத்திரி மாமியையும் லதாவையும் பார்த்து “அக்கா,உங்க ரெண்டு பேருடைய எல்லா விஷயங்களையும் என் கிட்டே சொல்லி இருக்கா.நீங்க ரெண்டு பேரும்,இந்த ‘நர்ஸிங்க் ஹோமை’ உங்க ‘நர்ஸிங்க் ஹோம்’ மாதிரி நினைச்சுண்டு கவலைப் படாம இருந்து வாங்கோ.லதாவுக்கு மாசாந் திர ‘செக் அப்பும்’,அப்புறமா அவ பிரசவம் வரை நல்ல படி கவனிச்சு பண்ண,‘லேடி’ டாகடர் நிர்மலா கிட்டே நான் சொல்லி இருக்கேன்.இங்கே இருந்து மூனாவது ‘கேபின்லே’ அந்த டாகடர் இருப்பா. நான் அனுப்பினேன்னு சொல்லுங்கோ.மத்ததை எல்லாம் அவ கவனிச்சுப்பா.ரெண்டு பேரும் இனிமே சந்தோஷமா இருந்து வரணும் என்ன” என்று சொன்னார் ‘நர்சிங்க் ஹோம்’ ஓனர் சேகர்.காயத்திரியும் லதாவும் அவரை ‘தாங்க்’ பண்ணி விட்டு டாகடர் நிர்ம்லாவைப் போய் பார்த்தார்கள்.உடனே டாக்டர் நிர்மலா ரெண்டு பேரையும் பார்த்து “டாகடர் சேகர் என் கிட்டே எல்லா சொல்லி இருக்கார்” என்று சொல்லி விட்டு லதாவை நன்றாக ‘செக்’ அப் பண்ணி விட்டு “லதா,உனக்கு இப்போ ஆறாவது மாசம் ஆரம்பிச்சுடுத்து.உன் ரெண்டு கால்லேயும் கொஞ்சம் வீக்கமும் இருக்கு.அதனால் நீ தினமும் குறை ஞ்ச பக்ஷம் அரை மணி நேரமாவது நடந்துண்டு வரணும்.ஆத்லேயே சும்மா உக்காந்துண்டு இருக்கக் கூடாது லதா.உன் உடம்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கணும் லதா”என்று சொல்லி மருந்து மாத்திரைகள் ‘டானிக்’ எல்லாம் கொடுத்து” இந்த மருந்து,மாத்திரைகள்,’டானிக் எல்லாமே வாசல்லே இருக்கிற எங் க கடையிலே ‘ப்ரீயா’ வாங்கிகோங்கோ.நான் அவருக்கு போன் பண்ணீ சொல்றேன்” என்று சொல்லி ரெண்டு பேரையும் வெளியே அனுப்பினாள்.ரெண்டு பேரும் அந்த லேடி டாக்டருக்கு “ரொம்ப ‘தாங்க்ஸ்’ டாக்டர்”என்று சொல்லி விட்டு,அந்த ‘நர்ஸிங்க் ஹோமிலே’ இருந்த மருந்து கடைக்குப் போய்,அந்த லேடி டாகடர் எழுதிக் கொடுத்த மருந்து,மாத்திரைகள்,’டானிக் எல்லாம் ‘ப்ரீயா’ வாங்கி க் கொண்டு தங்கள் ‘போர்ஷனு’க்கு வந்தார்கள்.

மணி ஆறே முக்கால் ஆகி விடவே,லதாவை போர்ஷனுக்குப் போக சொல்லி விட்டு ராத்திரி ‘டிபன்’ வேலையை கவனிக்க அந்த வீட்டுக்கு போனாள் காயத்திரி.சோபாவிலே உட்கார்ந்துக் கொண்டு இருந்த மாமியையும் அவள் கணவரையும் பார்த்து ‘நர்ஸீங்க் ஹோமில்’ நடந்த எல்லா சமா சாரத்தையும் சொல்லி விட்டு “உங்களுக்கு நாங்க ரெண்டு பேரும் எப்படி எங்க நன்றியே சொல்றதுன் னே தெரியாம இருக்கோம்.அந்த பகவான் மாதிரி நீங்க இந்த பொ¢ய உதவியே பண்ணி இருக்கேள். மணி ஆயிடுத்தேன்னு நான் லதாவை ‘போர்ஷனு’க்கு போக சொல்லி விட்டு ‘டிபன்’ வேலையை கவனிக்க வந்துட்டேன்” என்று கண்காளீல் கண்ணீர் மல்க,தன் ரெண்டு கைகளையும் கூப்பி சொன் னாள் காயத்திரி.உடனே அந்த பொ¢யவர் ”நீங்க உங்க கையை எல்லாம் கூப்பி எனக்கு நன்றி எல்லாம் சொல்ல வேணாம்.இனிமே சந்தோஷமா சமையல் வேலையை கனைச்சுண்டு வாங்கோ” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

லேடி டாக்டர் சொன்னபடியே லதா அதிக நேரம் உட்காந்துக் கொண்டு இல்லாமல் ஆத்லேயே இங்கும் அங்கும் தனியாக நடந்து வந்துக் கொண்டு இருந்தாள்.மாத்தரை, மருந்து, டானிக் எல்லாம் தவறாம சாப்பிட்டு வந்துக் கொண்டு இருந்தாள்.’இந்தக் குழந்தைக்கு ஒரு ஆறு வயசு ஆனதும்,நாம பக்கத்லே இருக்கும் ஒரு ஸ்கூல்லே ஒண்ணாம் ‘க்ளாஸ்’கோ ரெண்டாம் ‘க்ளாஸ்’கோ ஒரு வாத்தியார் வேலைலே சேந்து,அந்த குழந்தைகளோட நாம இணைஞ்சு,நம் வாழ்க்கையை நடத்திண்டு வரணும். நாம வேலை செஞ்சு வந்து,குழந்தையையும்,அம்மாவையும் சந்தோஷமா வச்சுண்டு வரணும்’ என்று அவள் மனம் யோஜனை பண்ணிக் கொண்டு இருந்தது.அப்போது சுவற்றின் மேல் இருந்த ஒரு கவுளி ‘சத்தம்’ இட்டது.லதாவுக்கு சந்தோஷமாய் இருந்தது.’நாம பண்ண யோஜனை நிச்சியமா பலிக்கும் போல இருக்கு’என்று தன் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் லதா.

அன்று ராத்திரி காயத்திரி மீந்த ‘டிபனை’ எடுத்துக் கொண்டு போர்ஷனுக்கு கிளம்பும் போது மாமி ”காயத்திரி மாமி,நாங்க நாலு பேரும் ஒரு நாலு நாளைக்கு ஊட்டிக்கு போய் வரப் போறேம்.நாங்க திரும்பி வந்ததும்,உங்களுக்கு சொல்றேன்.அது வரைக்கும்,உங்க ‘போர்ஷன்லே’ சமைச்சு சாபிட்டுண் டு வாங்கோ”என்று சொன்னதும் காயத்திரி “சா¢ மாமி”என்று சொல்லி விட்டு தன் ‘போர்ஷனு’க்கு வந் தாள்.அடுத்த நாள் காயத்திரியும் லதாவும் மத்தியானம் ‘டீயை’ போட்டுக் குடித்தார்கள்.மணி அஞ்சு அடித்ததும் காயத்திரி லதாவைப் பார்த்து “லதா,நமக்கு அந்த பகவான் இவ்வளவு நல்லதே பண்ணீ இருக்கார்.நாம கபாலீஸ்வரர் கோவிலுக்கு போய் சுவாமியையும்,அம்மனையும்,தா¢சனம் பண்ணிட்டு, வெளி பிரகாரத்தை ஒரு மூனு சுத்து சுத்திட்டு வரலாம்.நீ கொஞ்சம் நடந்தாப் போலவும் இருக்கும்” என்று சொன்னதும் ”சா¢ம்மா,நாம போய் வரலாம்”என்று சொல்லிவிட்டு,தன் புடவையை மாற்றிக் கொ ண்டு அம்மாவோடு கோவிலுக்குக் கிளம்பினாள்.இருவரும் கபாலீஸ்வரர கோவிலில் ஒரு சுத்து தான் சுத்தி இருப்பார்கள்.ரெண்டாவது சுத்து ஆரம்பிக்கும் போது சற்று தூரத்தில் லலிதாவும்,அவர் கணவ ரும்,சுரேஷூம்,வந்துக் கொண்டு இருந்ததை கவனித்தாள் காயத்திரி.பாம்பைத் தீண்டியது போல இருந்தது.காயத்திரிக்கும் லதாவுக்கும்.ஒரு நிமிஷம் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.’யார் கண்லே மறுபடியும் நாம படவே கூடாதுன்னு நினைச்சோமோ,அவாளே இப்போ நம் எதிர்லே வரா ளேன்னு’ என்று ஆடிப் போய் விட்டார்கள் இருவரும்.தன் காதலி லதாவை பார்த்த சுரேஷூக்கு ஆச்ச ரியமாய் இருந்தது.’இப்ப இவ நம்ம கண் முன்னாடி நிக்கறாளே.இத்தனை மாசமா இவ எங்கே போனா என்ன பண்ணிண்டு இருந்தா.இவளைப் பாத்தா இவளுக்கு கல்யாணம் ஆயிடுத்து போல இருக்கே’ போன்ற பல கேள்விகள் அவன் மனதில் அலை அலையாய் வந்து மோதி கொண்டு இருந்தது.

– தொடரும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *