கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 1,409 
 
 

(1902ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

10. புன்னையில் தீனதயாளுவின் உத்தியோகம்

“மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல்லவர்.” 

வெகு பிரயத்தனத்தின்மேல் தீனதயாளு பகாசுரசிரியை விட்டு புன்னைமாநகர் வந்ததை நாம் முன்ன மேயே சொன்னோமே. அப்படி வந்தது அநேக காரியங்களுக்கு அநுகூலமாக விருந்தது. புன்னை மாநகரில் கிருக்குங்கச்சேரி என்றொரு கச்சேரி உண்டு. அதில் ஒரு துரை பெரிய உத்தியோ கத்திலிருந்தார். அவர் ஒருகாலத்தில் பகாசுர கிரிமலை போயிருந்தபொழுது அங்கு தீனதயாளுவைக் கண்டு அவன் சுறுசுறுப்புக்கும் கம்பீர குணத்துக்கும் வித்தைக்கும் அவளை மெச்சி அவனுக்குப் பெரும் வேலை கொடுப்பதாகச் சொல்லி அப்படி யே 25-ரூபாவுக்குப் பதிலாக 50-ரூபா கொடுத்து புன்னைக்கு அழைத்துவந்தார். அதைப்பற்றி நாம் முன்னமேயே சொல்லி யிருக்கின்றோம். தீனதயாளுவின் அதிர்ஷ்டம் அவன் புன்னைவந்த கொஞ்ச காலத்திற் கெல்லாம் அத்துரை பெரும்வேலை பெற்று தவளகிரி போய்விட்டார். அதுதான் தீனதயாளுவுக்கு முதல் முதல் புன்னையில் தான் அமர்ந்த வேலையில் சங்கடம் வந்ததற்குக் காரணம். அந்தத் துரை புன்னையை விட்டுப் போன பிறகு தீன தயாளுவின் க்ஷேமத்தைப்பற்றிக் கவனிப்பார்கள் அங்கு ஒருவருமில்லை. அதனுடன் தீனதயாளு வித்துவானாகையால் அவனைச் சிலர் இரண்டொரு முறை சில மதவிஷயமாக அபிப்பிராயங் கேட் டிருந்தார்கள். அக்கேள்விகளில் சாத்தானி ஜாதியர்களுக்கு தலை யில் குடுமியில்லாமல் யிருப்பானேன் என்பதொன்று. அதற்கு தீன தயாளு சாத்தானி ஜாதியார்கள் முதல் முதல் ஜெயின பிராமணர் களா விருந்து அப்புறம் ஹிந்து மதத்துக்கு வந்ததாகத் தோன்று கின்றதென்று தனது அறிவுக்குத் தக்கபடி சில காரணங்களை எடுத்துக் காட்டிச் சொல்லி யிருந்தான். எப்பொழுதோ ஒரு சந்தர்ப் பத்தி லவனிப்படிச் சொல்லியிருந்தது அவனுடைய உத்தியோக முறைமையில் புன்னைமாநகரில் அவனுக்கு சங்கடமாக வந்து விளைந் தது. ஏனெனில் அவனைப் புன்னைக்குக் கொண்டுவந்த துரை தவளகிரி சென்றபிறகு ஒரு சாத்தானி பிரபு அக்கிருக்குங் கச்சேரி யில் அத்துரையின் பதவிக்கு வந்து சேர்ந்தார். அந்த பிரபுவுக்கு விவேகம் கிடையாது. அவருக்கு மதம், தெய்வம் இவைகள் இரண்டும் கிடையா. வயிறு வெடிக்கத் தின்பதும் உறங்குவதுந் தான் அவருடைய மதமும் தெய்வமுமாம். ஆனால் தனத்தில் பிறந்து தனத்தில் வளர்ந்தவராகையால் வெகு செல்வாக்குள்ளவ ராக விருந்தார். அவ்வளவு அதிகமாகப் படித்தவரல்லர். அவர் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தபொழுது ஒவ்வொரு வகுப்புகளி லேயும் கடைசியிலிருந்தவர். மூடசிகாமணி யென்று வகுப்புகள் தோறும் தவறாமல் பட்டம் பெற்றவர். ஒருவரி சரியாக எழுதவா வது ஒரு பதம் சரியாகப் பேசவாவது அவருக்குத் தெரியாது. எப்படி யிருந்தாலென்ன; செல்வமும் செல்வாக்குமிருந்தால் அக்கா லத்தில் யாவரும் உயர்ந்த உத்தியோகத்துக்கு வந்து விடலாம். இக்காலம்போல் பி.ஏ. முதலிய பெரிய பரீக்ஷைகளில் தேறி 10 ரூபா உத்தியோகம் கிடைக்குமா என்று ஏங்கி நிற்கவேண்டியதில்லை. அந்தச் சாத்தானி பிரபுவின் பெயர் ஏணிவாளன். சற்றேறக் குறைய 3-அடி உயரந்தானிருப்பார். அவரை வாமனாவதாரம் என்றே சொல்லலாம். ஆனால் பார்ப்பதற்கு வெகு அழகாகவிருப் பார். உடை தனது கௌரமான அந்தஸ்துக்குத் தக்கபடி தரிப் பார். அதிகமாகவும் எழுதமாட்டார். சிறு வயதிலேயே அவ ருக்கு கை நடுக்கம் வந்திருந்தது. அக் காரணத்தால் ஒருவரி எழுத ஒருமணி செல்லும்; அவ்வரியும் முதல் வகுப்பில் படிக்கும் பையன்கள் எழுதும் எழுத்துப் போலிருக்கும். இவ்விதத்திலும் இவ்வளவு குறைவு தனக்கிருப்பினும் அவர் தம்மனத்துள் தாம் ஒருவரே எல்லாவிதத்திலும் சமர்த்தர் என்றும் மற்றவர்கள் அறி வில்லாத மூடர்கள் என்றும் எண்ணுகிற எண்ணம் அதிகமாக விருந்தது. பெரும்பாலும் மடமையின் மதம் இதுவே. புன்னை மாநகரில் பெரிய உத்தியோகம் பண்ணினவர்களுக்குள் ஏணிவாளன் வெகு பாக்கியசாலி என்று எல்லாரும் கொண்டாட வேறொரு காரண முண்டு. 

சரஸ்வதியே அவதாரமானாற்போல் அவருக்கு ஒரு மாணிக்கமுண்டு. அவ்வம்மணி எல்லாக் கலைகளையும் கற்ற பெரும் கல்விக்களஞ்சியம். கலாசாலைகளில் படித்து பரீக்ஷைகள் கொடுத் தவளல்லள் என்றாலும் அவ்வுத்தமி எல்லாப் புருஷர்களையும் விட அதிகமாகக் கற்றவள். அவள் பெயர் மாணிக்கம். மகாபாரதத் தின் கதாநாயகியான திரௌபதை யுதிஷ்டிரருடன் சார்பாக சம்வா தம் பண்ணினதும், சத்தியபாமைக்குப் புத்தி புகட்டினதும் எல்லா ருக்கும் தெரிந்த விஷயம். அந்த சந்தர்ப்பங்களில் திரௌபதை புத்தியை நாம் எவ்வாறு புகழ்ந்து பேசுவோமோ அதற்கு மேலாக மாணிக்கத்துடன் ஒரு நிமிஷம்மட்டில் நாம் பேசி யிருப்போமேயா னால் அவளறிவை அதிகமாகப் புகழுவோம். இம்மாணிக்கம் தனது தந்தை, தாய், மாமியார், மாமனார், கணவன், ஊரார், நண்பர்கள், இவர்களெல்லாரும் உத்தம சீலி என்று கொண்டாடும் விலையற்ற மாணிக்கம். படிப்பு வெகு அதிகமாகையால் எந்த வித்வான் தன்னை காணவந்தபோதிலும் அவனுக்கு கொஞ்சமேனும் பின்வாங்காமல் அவனுடன் வாதாடி அவனை அவ்வுத்தமி முற்றிலும் வென்று விடு வாள். அவள் உத்தமிகளுக்கெல்லாம் உத்தமியாகையால் யார் வந்து எந்தச் சமயத்தில் தன்னைப் பார்த்தபோதிலும் அவர்களுடன் தைரியமாக வாதாடி அவர்கள் வெட்கித் தலை குனிந்தோடும்படி செய்வாள். அவளுக்குப் படிப்பு வெகு அதிகமாகையால் வெட்க மென்பது கொஞ்சமேனுமில்லை. 

இவ்வளவு அதிகமாகக் கல்விகற்ற மாணிக்கம் ஒரு பிள்ளைக் குழந்தையாகப் பிறந்திருக்கலாகாதா என்று ஏணிவாளர் எப்பொழு தாவது ஏங்கினால்,என்னையே ஒரு புருஷக்குழந்தையாக பாவித் துக் கொள்ளுங்கள் என்று மாணிக்கம் தனது தந்தைக்குத் தைரி யம் சொல்லுவாள். அவருக்கு இவ்வம்மணியைத் தவிர வேறு குழந்தைகளே யில்லை யாகையால் அவள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் அப்படியே தான் அவரும் எண்ணிக்கொள்ள வேண் டியதாக விருந்தது. அதுமட்டுமன்று. அவ்வளவு கலைகளைப் புகட்டி அவளவு செல்வமாய் ஏணிவாளர் மாணிக்கத்தை வளர்த்த ஆசையால் அவர் தான்போகு மிடங்களுக் கெல்லாம் மாணிக்கத்தை இட்டுக்கொண்டு போவார். சில சமயங்களில் கிருக்குங் கச்சேரிக் கும் அழைத்து வருவார்; தனக்கு லௌகிக காரியங்களில் சந்தேக மிருந்தால் அவ்வுத்தமியைக் கேட்பார். அவளிவர் பிசகை ஒரு நிமிஷத்தில் எடுத்துக்காட்டுவாள். ஒரு பெண்பாலுக்கு இவ்வளவு டங்கொடுக்கலாமா என்று யாராவது கேட்டால், மாணிக்கம் என் ஆண் குழந்தையன்றோ என்று புன்னகையுடன் ஏணிவாளர் சொல் லுவார். ஏதாவது ஒரு சமயத்தில் பிரசங்கங்கள் கேட்க அல்லது வினோதங்கள் பார்க்க ஏணிவாளர் போகும்படி நேரிட்டால் முதல் முதல் மாணிக்கத்துக்கு இடமுண்டா என்று விசாரித்தறிந்து கொண்டு தான் போவார். அச்சபையில் அக்கிராசனம் மாணிக்க மாது சிரோமணிக்குத்தா னிருக்கும். அக்கல்விக் களஞ்சியம் அங்கு வரப்போகின்ற தென்பதை யறிந்தவுடன் பதின்காத வழிக்குள் ளிருக்கும் சிறு பருவமுள்ள வித்வான்களும் வேகமாகக் கூட்டங் கூட்டமாக வந்து புதியதாய் மலர்ந்த மலரை வண்டுகள் மொய்ப் பனபோல அவ்வுத்தமியைச் சூழ்ந்து கொண்டு உட்காருவார்கள். தனது அருமைக் குழந்தையின உயர்ந்த அறிவை நினைத்து நினைத்து மனமகிழ்ந்து மயங்கி யிருக்கும் ஏணிவாளருக்கு அவ்வாறு பல புருஷர்கள் தனது சிறுபெண்ணைச் சூழ்ந்துகொண்டு பரிகாச மாகப் பேசுவது மற்றவர்களுக்கு அருவருப்பாக விருந்தபோதிலும், ஆனந்தமாகவே யிருக்கும். அச்சபையில் ஏதாவது ஒரு கேள்வி அல்லது சந்தேகமுண்டானால் அதற்குப் பதில் முதல் முதல் தைரி யமாக எழுந்து அளிப்பது மாணிக்கந்தான். எல்லா வித்வான்களும் வெட்கிப் போகும்படி அப்பேதை பிரசங்கிப்பாள், சிரிப்பாள்,பரி காசம் பண்ணுவாள், கைதட்டுவாள், கூத்தாடுவாள், கண்ணிமைப் பாள், காதைக்கடித்துப் பேசுவாள்,இளைஞர்கள் தாம்பூலம் மடித் துக் கொடுக்க அதை ஆநந்தமாய்ப் போட்டுக்கொள்ளுவாள். அவர் கள் அவள் ஆடையைப்பற்றி யிழுக்க அவர்களருகில் கலகல வென்று சிரித்துக்கொண்டு வந்துட்காருவாள். வித்தையின் மகத் துவ மிருக்கும் வரையில் ஏனிவ்வண்ணம் நாம் செய்யக்கூடாது என்று மாணிக்கம் எப்பொழுதும் இறுமாப்புட னிருப்பாள். இதன் நுட்பத்தை யறியாத சில பெண்கள் இவளும் ஒருபெண்ணா! இவள் தாசியம்மா! எல்லா புருஷர்களையும் தொட்டுப் பேசுகிறாள்! வெட்கமில்லையா! என்று தங்களுக்குள்ளேயே சொல்லிக்கொள்ளு வார்கள். இது ஒரு சமயத்தில் ஏணிவாளர் காதுகளிலும் விழும். யார் என்ன சொன்னாற்றானென்ன. நாம் 1000 ஆண்பிள்ளைகளுக் கொப்பாகவல்லவோ இந்த ஒரு மாணிக்கத்தைப் பாவித்திருக்கின் றோம் என்று தனது சந்தோஷத்துக்கு ஒருவிதக் குறைவுமின்றி எப்பொழுதும் அவர் தனது பெண்ணை நினைத்து ஆநந்தக் கடலி லேயே மூழ்கியிருப்பார். மாணிக்கத்தைச் சிறு வித்வான்கள் எப் துரைகளும் பெரிய போதும் சூழ்ந்துகொண்டே யிருப்பார்கள். உத்தியோகஸ்தர்களும் மாணிக்கத்துடன் கைகொடுத்துப் பேசுவார்கள். அவளைத் தங்கள் வண்டிகளில் ஒரு பொற்பதுமையைத் தூக்கிவைப்பதுபோல் தூக்கிவைத்துக் கொண்டு தங்களுக்கிஷ்டமான விடங்களுக்கு அழைத்துப் போய்விடுவார்கள். பலநாள் வைத்திருந்து அவளுடன் வித்யா விஷயமாய் வாதாடிவிட்டுத் திருப்பி அனுப்புவார்கள். அவ்வாறு பேசக்கண்டாலும் போகக் கண்டாலும் ஏணிவாளர் மெய்மறந்து ஆநந்தபரவசராய் நிற்பார். 

எணிவாளர் உத்தியோக முறைமையில் புகழ்பெற்றதற்கு இன்னுமொரு காரணமுண்டு. அவருக்கு ஆண் குழந்தையில்லை என்று முன்னமேயே சொன்னோமே. தனது பெண் குழந்தை யிடம் ஆண் குழந்தை அபிமானம் வைத்து அவளை ஆண்குழந்தை யாகவே நடத்திவந்த போதிலும் சர்க்காரில் பெண் குழந்தைக்கு உத்தியோகம் கொடுக்கமாட்டார்களாகையால் அவ்வாசையை ஒரு வாறு நிறைவேற்றிக்கொள்ள ஏணிவாளர் அபிமான புத்திர னொரு வனை எடுத்து வளாத்தார். அவன் பெயர் இருத்தைவாயன். ஏணி வாளா 3-அடி உயரமென்றால் அவன் அதற்கும் குறைவாக 22அடி உயரந்தானிருப்பான். அதனாலேயே அவன் உத்தியோகத்துக்கு சரியானவனல்ல வென்று ராஜாங்க வைத்தியர்கள் அவனுக்கு வேலை கொடுக்கக்கூடாதென்று அகற்றிவிட்டார்கள். ஆனால் துணிவாளர் தான் எடுத்துக்கொண்ட காரியத்தை எளிதில் விடப் பட்டவரல்லர். வெகு சிரமப்பட்டு பெரிய அதிகாரிகளுக் கெல் லாம எழுதி இருத்தைவாயனை வேலையில் தன்னிடம் நியமித்துக் கொண்டார். தனது அபிமான புத்திரனுக்கு வேலை பண்ணி வைத்தது மட்டும் போதாது. தனக்குக் கீழ் எவ்வளவு உன்னத பதவியில் அவனை வைக்கவேண்டுமோ அவ்வளவில் அவனை அதிக சீக்கிரத்தில் வைக்கக்கருதி அவனைப்போல் இனி வித்வானே கிடையாதென்று பலவிதமாகப் பெரிய அதிகாரிகளுக்கு சிபார்சு செய்து அவனுக்கு வேலையான 2-3 வருஷங்களுக்குள் அவனுக்கு தன்னுடைய சம்பளத்தில் பாதி சம்பளம் கிடைக்கும்படியான பெரிய வேலைக்குத் தனக்குள்ளேயே முதல் குமாஸ்தாவாக வைத் துக் கொண்டார். 

இருத்தைவாயனோ வெகு சாதாரண மனிதனாகவிருந்த போதிலும் பெருங்கபடியாக விருந்தான். எப்பொழுதும் சிரித்த முகமாயிருப்பான். தாழ்ந்த குரலில் பேசுவான். ஒரு வரையாவது கடிந்து பேசவே மாட்டான். ஆனால் எல்லாரும் நாசமாய்ப் போய் அவர்கள் சம்பளங்கள் அவ்வளவும் நமக்குச் சேராதா என்று எப்பொழுதும் நினைத்துக் கொண்டே யிருப்பான். எவனாவது ஒருவன் தனக்கு கெடுதல் செய்துவிட்டால் அவனைச் சிரித்துக் கொண்டே உத்தியோகத்தை விட்டு நீக்கிவிட வழி தேடு வான். உள்ளுக்குள் இவ்வளவு கெட்ட எண்ணங்களிருந்த போதி லும் ஒவ்வொருவனுடைய யோக க்ஷேமத்தை ஒவ்வொரு நாளு மிரண்டு முறை புன்னகையுடன் விசாரிப்பான். அவனை முதல் முதல் பார்ப்பவர்கள் அவனைவிட சாது இவ்வுலகத்திலிருக்கவே மாட்டார்கள் என்று நினைப்பார்கள். ஆனால் ஏணிவாளருக்கோ இரு த்தைவாயனைவிடப் பரமசாது இவ்வுலகத்தில் ஒருவருமில்லை யென் பது ஒரே நிச்சயம். அவர் ஒருவரைத் தவிர அக்கிருக்குங் கச் சேரியில் மற்றவர்களுக்கெல்லாம் நல்ல பாம்பை நம்பினாலும் நம்ப லாம், இருத்தைவாயனை மட்டும் நம்பலாகாது என்பது அபிப்பிரா யம். அதுதான் உண்மை. 

இவ்விருத்தைவாயனுக்கு ஜனகதாதை ஒருவருண்டு. அவர் காலையும் மாலையும் ஏணிவாளரைக் கண்டு “இவ்வுலகத்தைப் பரி பாலிக்கும் விஷ்ணுவின் அவதாரம் தாங்கள். ஏதோ என் குழந்தை இருத்தைவாயனைத் தாங்கள் குழந்தையாகவே எண்ணி அவனை இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டுவந்து விட்டீர்கள்.இன் னும் அவனுடைய க்ஷேமம் தங்களைச் சேர்ந்தது” என்று சொல்லு வார். ஊறுகாய்ப் போடுவதில் இருத்தைவாயன் தந்தை வெகு சமர்த்தர். ஏனெனிலவர் தனது சிறுவயதில் பரிசாரகத் தொழி லில் பழகினவர். மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சங்காய்,இவ் வூறுகாய்கள் அழகாகப் போட்டு ஏணிவாளருக்கு அவர் அடிக்கடி கொடுப்பார். அவர் செய்யும் தோத்திரங்களாலும் அவர் கொடுக்கும் ஊறுகாய்களாலும் ஏணிவாளர் மனம் குளிர்ந்து மெய் பூரித்து சதா இருத்தைவாயன் நினைவாகவே யிருப்பார். இக்காரணங்களாலும் தான் இருத்தைவாயனிடம் வைத்திருந்த புத்திர வாஞ்சையாலும் எல்லாவிதத்திலும் இருத்தைவாயனைத் தனக்கு அடுத்த பதவிக்கு எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்று முயன்று அவ்வாறே ஏணிவாளர் நிறைவேற்றிக் கொண்டார். 

ஆனால் இருத்தைவாயன் வேலைக்காரனில்லையா என்ற சந்தே கம் வரலாம். அவன் சாதாரணமான மனிதன் என்று நாம் முன் னமேயே சொல்லி யிருக்கிறோமே. தனது பேனா, மைக்கூண்டு, மேஜை இவைகளையெல்லாம் வெகு சுத்தமாகப் பலமுறை துடைத்து வைத்துக் கொள்வான். அந்தக் கடிதங்கள் புஸ்தகங்கள் அவை களுக்கு ஏற்பட்ட விடத்திலிருக்கும்படி சரியாகப் பார்த்து வைத் துக் கொள்ளுவான். ஒரு புது உத்தரவு எழுதவேண்டி யிருந்தால் அதற்குச் சரியாகப் பழய உத்தரவு ஒன்றை ஒரு கடிதத்தின் கீழ் பதுக்கி வைத்துக் கொண்டு அதின் நடைப்பிரகாரம் அதைப் பார்த் துப் பார்த்து புது உத்தரவு வெகு அழகாகத்தானே யுக்தியாக எழு துவதுபோல் எழுதுவான். அச்சமயத்தில் யாராவது தன்னிடம் வருவதைக் கண்டால் தன்னெழுத்தை அவனுக்காக நிறு த்துவதுபோல் சிரிப்பு முகத்துடன் நிறுத்தி பழைய உத்தரவு அவன் கண்ணுக்குத தெரியாதபடி பதுக்கிவைத்து ஆவலுடன் சிரித்துப் பேசி அவனை அனுப்புவான். ஆனால் இரவும் பகலும் உழைத்து எல்லாரிடமும் வேலை வாங்குவான். 

ஏணிவாளர் இயல்பாக வெகு நல்லவர். ஆனால் உத்தியோக முறைமையில் கையெழுத்து வைப்பதைவிட மற்றவித கௌரவமான வேலை அவருக் கொன்றும் இல்லை யாகையால் ஒழிந்த வேளை களில் யாராவது கோட் சொன்னால் அதைப் பிரியமாகக் கேட்பார். கனிவர்க்கங்கள், தாது புஷ்டி லேகியங்கள் இவைகளை எப்பொழு தும் புசித்துக் கொண்டு சுகமாகக் காலங் கழிப்பார். எப்பொழுதும் இவருக்குத் தூக்கம் முகமே ஒழிய விழித்த முகமும் கிடையாது. சொற்பம் ஸ்தோத்திரப் பிரியர். யாராவது தன்னைப் புகழ்ந்தாலும் தன்னை அடிக்கடி வந்து பார்த்தாலும் அவர்களை ஏணிவாளர் நல்ல ஸ்திதிக்குக் கொண்டுவருவார். வெகு தனிகராகையால் உத்தி யோகஸ்தர்கள் செலவுக்குப் பணமில்லை என்று தனது கஷ்டத்தை வாய்விட்டு சொல்லிக் கொண்டால் ஏணிவாளர் அவர்களுக்கு 500,1000 கொடுப்பார். கொடுத்த பணத்தை திரும்பிக் கேட்க மாட்டார். ஒரு கலியாணம், கார்த்திகை என்று யாராவது உத் தியோகஸ்தர்கள் உத்தரவு கேட்டால் சலியாமற் கொடுப்பார். ஒரு வனை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மனம் வைத்து விட்டால் அவனைப் பற்றி ஆயிரம் பொய் சொல்லியாவது அவனைப் போல் சாமர்த்தியசாலி யில்லை யென்று மேலதிகாரிகளுக்குக் காண் பித்து பெரிய உத்தியோகங்கள் பண்ணி வைப்பார். இவர்கள் அவ் வித நன்கு மதிப்புக்கு ஒவ்வாத வண்ணம் ஏதாவது உத்தியோக முறைமையில் பிழைகள் செய்து விட்டாலும் அதை மேலதிகாரி களுக்குக் காட்டாமல் தானாகவே மறைத்து விடுவார். 

தீனதயாளுவைப்போல் அவருக்கு வேண்டாதவர்கள் ஒரு சிறு பிழையைத் தெரியாமலே பண்ணி விட்டால் அதை எவ்வளவு பெரி யதாகக் காட்டவேண்டுமோ அவ்வளவு பெரிதாகக் காட்டி எல்லா அதிகாரிகளுக்கும் தெரியும்படியாகச் செய்வார். தீனதயாளுவை சில வேளைகளில் கூப்பிட்டுப் பழித்து பரிகாசம்பண்ணி “ஆம், ஓய்? நாம் பெரிய வேலை கொடுக்கவில்லை என்று மட்டும் எப்பொழுதும் நம்மேல் குற்றஞ் சாற்றுகின்றீர், இவ்வாறு பிழைசெய்தால் உமக்கு எப்படி வேலை உயரும்?” என்று கண்டிப்பார். ஏதாவது அதிகச் சம்பளமாக வேண்டிய சந்தர்ப்பம் பார்த்து, அவ்வதிக சம்பளம் கொடுக்காமலிருப்பதற்குக் காரணமாக இக்குற்றங்களை அவர்வெளிக் கொண்டுவருவார், இவன் என்ன செய்யக்கூடும்! என்னைவிட அதிகப் பிழை செய்தவனை மன்னித்ததுபோல என்னை ஏன் மன்னிக் கக்கூடாது என்று கேட்கலாமா! ஏணிவாளர் இத்துடன் தீன தயாளுவை விடமாட்டார். தீனதயாளு வெகு வித்வானாகையால் பல பெரிய மனிதர்களுக்குத் செரிந்தவன். அவர்களை ஏணி வாளர் கண்டால் தானாகவே முன்னிட்டுக் கொண்டு “என்ன! நான் ஏதோ தீனதயாளுவிடம் கருணையாக நடக்கவில்லை என்று சொல்லு கின்றீர்கள். நேற்றையத் தினம் அவன் ஒரு உத்தரவு அனுப்புவ தற்குப் பதிலாக தனது சொந்த பிரஸங்கம் ஒன்றை மேலதிகாரிக் கனுப்பினான். என்மூலமாக எல்லாக் கடிதங்களும் போகவேண்டு மாகையால் நான் அதைப்பார்த்து உடனே அதை நிறுத்தி அவனைக் கூப்பிட்டு அவன் பிழையை அவனுக்குக் காட்டிச் சரியாகச் செய் தேன்” என்று சொல்லுவார். இவர் சொல்லுவதைத்தான் ஜனங்கள் நம்புவார்கள். ஏழைபேச்சு அம்பலமேறுமா! இவ்வாறு ஒரு சமயத் தில் தீனதயாளு சாத்தானிகள், ஜெயின பிராமணர்கள் என்றெழுதிய காரணத்தாலோ, அல்லது தன்னைச் சேர்ந்தவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற நோன்பாலோ ஒரு பாவமும் அறி யாத தீனதயாளுவிடம் ஏணிவாளர் கருணையாக இருக்கவில்லை. எல்லாருக்கும் நல்லவனான தீனதயாளு ஏதோ தனது போதாத காலத்தால் ஏணிவாளரும் இயல்பாகவே நல்லவர் என்ற பெயர் பெற்றிருந்தும் தீனதயாளுவிடம் கடுகடுத்தமுகமாகவே யிருந்தார். தன்னுடைய பந்துக்கள் பல பெயர்களைக் கிருக்குங்கச்சேரியில் ஏணிவாளர் உத்தியோகஸ்தர்களாக நியமித்திருந்தார். பெரிய துரை கள் யாராவது “இக்கச்சேரியில் சாத்தானிகள் அதிகமாக விருக் கிறார்களே, இவர்கள் உமது பந்துக்களா?” என்று கேட்டால், “இல்லை. நாங்கள் வெள்ளை மலர்கட்டும் சாத்தானிவர்க்கம், இவர் கள் சிவப்பு மலர்கட்டும் வர்க்கம்; இனம் ஒன்றென்றாலும் எங்களுக் குள் கொள்வினை கொடுப்புவினை ஒன்றுங் கிடையாது, நாங்கள் பந்துக்களல்ல” என்பார். சுருக்கிச்சொல்லின் இவரால் உபகாரம் பெற்றவர்களில் பலர் பந்துக்கள் மட்டுமல்ல; சமீப பந்துக்களாக விருப்பார்கள். உபகாரகுணமே இவரிடம் மேலிட்டிருந்தபடியால் இவர் சொல்லுவதை ஒருவரும் ஆக்ஷேபிக்க மாட்டார்கள். ஏணி வாளர் கம்பீர நடையாலும் பார்வையாலும் ஒவ்வொரு துரைகளையும் மயக்கி, தன் கீழிருப்பவர்களிடம் வெகு சாமர்த்தியமாய் வேலை வாங்கிப் பேனாவைத் தன் கையிற்பற்றி சிறு உத்தரவு ஒன்றுகூட எழுதாமலே எல்லா உத்தரவுகளுக்கும் தன் கையொப்பம்மட்டும் வைத்து மேலான அதிகாரிகளுக்கனுப்பி அவர்களிடம் கீர்த்தி பெற்றுத் தன்னைவிட சமர்த்தன் ஒருவனாவது கிடையாது என்று பெயர் வாங்கிவந்தார். இதில் இவருக்கு முக்கிய சகாயம் இருத் தைவாயன். கையெழுத்துப் போடத்தெரியாமல் சிலர் பழைய ராஜாங்கத்தில் தாசில் பண்ணினார்கள் என்று கதை சொல்லுகிறார் களே அதைக் காட்டிலும் கையெழுத்து ஒருவாறு போட்டாவது உத்தியோகம் பண்ணுவது எவ்வளவு மேன்மை! 

ஏணிவாளர் தீனதயாளுவை எவ்வளவோ கெடுத்து வந்த போதிலும் தீனதயாளுவுக்கு தனது யஜமானனிடம் ஈசுவரபக்தி. நிர்க்கதியாக விருக்கும் நமக்கு அன்னம் அளிக்கப்பட்டவர் இவரே என்று காலையும் மாலையும் ஏணிவாளரைத் துதிப்பான். அவரைப் பற்றியாவது அவரது பெண்டு பிள்ளைகளைப் பற்றியாவது யாரா வது ஏதாவது சொல்லத் தீனதயாளு கேட்டால், தானங்கிருந்தால் அப்பேச்சுகளைச் செவிகொடுத்துக் கேட்பதினால் தனக்குப் பாவம் சம்பவிக்கும் என்று மெய் நடுங்கி ஒதுங்கிவிடுவான். வ்வண்ணம் தீனதயாளு புன்னையில் உத்தியோகம் பண்ணிவந்தான். அங்கு அவன் பிழைப்பு அவ்வளவு நன்றாக விருந்ததாகச் சொல்ல முடியாது. 

11. காந்தி புன்னைக்கு வந்தது

“அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு.”

தீனதயாளுவின் உத்தியோகந்தான் இப்படியாயிற்றே. அவன் குடும்ப ஸ்திதியோவென்றால், அதுவும் பலவிதத்தில் அவனுக்குத் துயரத்தையே உண் டாக்கிக் கொண்டிருந்தது. அவன் மலைநாட்டில் உத்தியோகம் பண்ணினபொழுதும் புன்னைமாநகர் வந்தபொழுதும் காந்தி அவனிடமிருந்து பற்றிய ரூபாவை நாம் முன்னமேயே சொல்லியிருக்கின்றோம். வெகு மானியான தீன தயாளு எல்லாவற்றிற்கும் உட்பட்டிருந்தான். இவ்வளவும் போதா தென்று காந்தி அவன் புன்னைக்கு வந்த இரண்டாம் வருஷம் தனது பெண், பிள்ளை இவர்களுடன் சணற்காலை விட்டுப் புறப்பட் டுப்புன்னை வந்து சேர்ந்தாள். தான் வருவதாக முன்னமேயே தெரிவிக்காமல் வந்தாளாகையால் தீனதயாளு அவளை வெகு அன் பாக உபசரித்து “இதுதான் தாய் என்ற பந்துவின் லக்ஷணம். நானாகவே நியாயமாய் இவ்விதம் வந்து என்னிடம் இரண்டு மாத மாவது செளக்கியமாக விருக்கக்கூடாதா என்று எழுதியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது என் பிசகு. ஆனால் ஏதோ பற்பல தொந்தரையால் நானப்படி எழுதாமலிருந்து விட்டேன். தாங்கள் என்னை மன்னித்து இவ்வளவாவது தயை செய்தீர்களே; அதே என் பாக்கியம்” என்றான். அதற்குக் காந்தி “ஆம் அப்பா, ஆசை வெட்கமறியாது”, என்பது பழமொழி. நீ என்னதான் என்னை ஒதுக்கி வைத்தாலும் நான் ஒட்டிக்கொள்ளத்தான் வேண்டு மென்று இங்கு நீ அழைக்காமலிருக்கும் பொழுதே வந்திருக்கின்ற னன்” என்று சொல்லி விசனப்பட்டாள். தீனதயாளு தனது சிறிய தாய் விசனப்பட்டதைக்கண்டு தானும் அழுதுவிட்டான். அவள் சொல்லுவதெல்லாம் அன்புடன் சொல்லுவதாக எண்ணி, தீன தயாளு தன்னைத் தானே நொந்தவனாய் தன்னை மன்னிக்கவேண்டு மென்று கேட்டுக்கொண்டு, எப்படியாவது தன்னை நாடித் தனது சிறுதாய் வந்ததற்காகச் சந்தோஷமடைந்தான். அன்று முதல் தான் கச்சேரியிலிருந்து திரும்பி வரும்பொழுதெல்லாம் ஏதாவது புதிய கனிவர்க்கங்கள் வாங்கி வந்து தனது தாயாருக்கு அன்புடன் கொடுப்பான். எவ்வளவோ ஆதரவாக இவர்கள் எல்லாரையும் நடத்தி வரலானான். சங்குவுக்கு அதிகப் படிப்பில்லை யாகையால் அவனுக்குத் தக்கபடி ஏதாவது ஒரு வர்த்தகனிடம் குமாஸ்தா வேலை போட்டுக்கொடுக்க முயற்சி செய்து வந்தான். மாந்திக்கு விவாகத்துக்குத் தகுந்த பருவம் வந்துவிட்டபடியால் எல்லாரும் சேர்ந்திருக்கும்பொழுதே புன்னையில் பள்ளிக்கூடத்தில் படித்து வரும் பையன்களில் புத்திமானாய் ஒருவனைத் தெரிந்தெடுத்து அக்குழந்தைக்குக் கலியாணத்தை நடத்திவிடவேண்டும் என்ற கருத்துக் கொண்டான். அவனிவ்வளவு நல்ல மனமுடனிருந் தானே. காந்தி வந்த காரணம் என்ன வென்பதை நாம் சற்று விசாரிப்போம். 

காந்தியின் தங்கை பூந்தி என்றொருவளிருந்தாள். அவளும் இளையாளாக ஒரு வறிய அந்தணனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள். அவனும் ஜம்புநாதபுரத்தான். அவன் பெயர் கையாந்தகரை. கழு த்தில் தாவடம் மனதில் அவகடம் என்றால் அவனிடம் அப் பழமொழி உண்மை. பேசும்பொழுது அவனைவிட யோக்கியன் வேறொருவன் இருப்பானோ என்று சந்தேகிக்க வேண்டியதாக விருக்கும். ஆனால் அவன் சொல்லும் சொற்களவ்வளவும் ஏதோ பின்னால் ஒரு பெரும் மோசத்தையே பற்றியிருக்கும். தனது மோசக்கருத்தை அறியும் புத்தியுள்ளவர்களைக் கண்டால் விலங்கு கள் வெளிச்சத்துக்கு அஞ்சிப் பதுங்குவது போல் அவர்கள் சமீ பத்தில் அணுகவே மாட்டான். மோசக்காரர்கள் இயல்பாகவே அதி புத்திமான்களாக விருக்கவேண்டுமல்லவா. அவ்வாறு கை யாந்தகரையும் வெகு புத்திமான். அவன் பல சிறு தொழில்களி லிருந்து தனது வஞ்சகக் குணத்தால் அவைகளை எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாக இழந்திருந்தான். கடைசியாய்த் தான் பிழைக்க வழி தெரியாமல் காந்தியை ஒருவிதமாக மோசம்பண்ணிப் பிழைக்க வேண்டும் என்று தீர்மானித்தான். தரித்திரத்துக்கே பசி அதிகம். கையாந்தகரை மூன்று ஆள் உணவு உட்கொள்ளுவான். எப்பொழு தும் விபூதி, ருத்திராக்ஷம் தரித்துக்கொண்டிருப்பான். அவன் சிவநாமம் உச்சரியாத நிமிஷம் கிடையாது. இந்த கையாந்தகரை என்பவன் ஒருநாள் சணற்காலுக்கு வந்து காந்தியைக்கண்டு அவளி டம் பின்வருமாறு சொல்லலானான்:-“காந்தி, உன்னைப்போல் பைத்தியக்காரி நான் கண்டதில்லை. மூத்த பிள்ளை புன்னையில் உத்தியோகம் பண்ணுகிறான். நீ சணற்காலில் சாணி தட்டிக்கொண் டிருக்கிறாய்! நீ உன் குழந்தைகள் சகிதம் புறப்பட்டு புன்னை போனால், என் வந்தாய் என்று அவன் உன்னைக் கழுத்தைப் பிடித் துத் தள்ளமாட்டான். அவன் குடித்தனததோடு உன் குடித்தன மும் ஒன்றாய்விடும். அதிகச் செலவிருக்கமாட்டாது. இங்கு நிலங் களை ஏதோ ஒரு கலம் ஏற்றக்குறைச்சலாய் ஸ்வாமி போகத்துக்கு அடைத்துவிட்டு, அதில் வரும் மாசூலை நான் விற்றுப் பணமாக்கி வட்டிக்கு விட்டு உனக்குக் கணக்கு ஒப்புவிக்கிறேன்.புன்னையில் நீ இவ்விடம் தனிக்குடித்தனம் பண்ணுவதற்காக உனக்கு வரும் பணத்தை ஏதோ இரண்டொன்று குறைத்துக்கொண்டு அவனிட மிருந்து வாங்கி என் பெயருக்கு அனுப்பினால் அதையும் நான் பெற்றுக்கொண்டு வட்டிக்கு கணக்கு ஒப்பிவிக்கின்றேன். கணக்கு கணக்காகவே யிருக்குமே யல்லாது அதில் ஒரு தூசுகூட பிசகாது. நீ வேறு உன் தங்கை வேறே. அடுத்த தெரு வக்கிரமணியனை இந்த வீட்டில் வந்து குடியிருக்கச் சொன்னால் அவன் வீட்டைப் பார்த்துக்கொள்ளுவான். நானும் மாதமிரண்டு தடவை ஜம்புநாத புரத்திலிருந்து இவ்விடம் வந்து போகிறேன். அப்படி செய்தால் நீ உன் குஞ்சு சு குழந்தைகளுக்கு ஒருவிதக் குறைவின்றி ஏதோ நீ ரகசியமாக கையில் சேர்த்து வைத்துக்கொள்ளலாம். கையில் காசில்லாத கைம்பெண்ணை இக்காலத்தில் யார் லக்ஷியம் பண்ணுவார்கள்” என்றான். 

கையாந்தகரை இவ்வாறு சொன்னதைத் தனது நன்மையை நாடிச் சொன்னதாகவே காந்தி நினைத்து விட்டாள். தனது தங்கை புருஷன் தன்னை மோசம பண்ணும் கருத்துள்ளவனாகவிருப்பான் என்று அவள் எண்ணவிடமேயில்லை. ஆனால் கையாந்தகரையோ எள்ளளவேனும் நல்ல எண்ணத்துட னிவளிடம் இப்படிப் போதித்த வனல்லன். சிறுகச்சிறுக நெல்லாகவும் பணமாகவும் காந்தியிட மிருந்து பற்றலாம் என்ற கருத்துடன் சொன்னதேயன்றி வேறன்று. அவன் பேச்சை அவள் கேட்டதாகத் தெரிந்துகொ ண்டதும் கையாந்தகரை 10 ரூபா கடன் வாங்கி வந்து காந்திக்கும் அவள் குழந்தைகளுக்கும் கைச்செலவுக்குக் கொடுத்து புன்னைக் குப் பிரயாணம் பண்ணி அனுப்பினான். ஆகவே காந்தி இவ்வித போதனையால் வந்தவள். 

அவர்கள் தன்னிடம் வந்ததில் தீனதயாளுவுக்கு அந்தரங்க மாகவிருந்த ஆனந்தத்தைக் காந்தி கண்டறிந்து கொண்டாள். இன்னும் அவன் மனத்தை முற்றிலும் கவர அவனுக்குப் பிடிக்கும் என்று தான் அறிந்திருந்த சில சமையல்களைச் செய்துபோட்டாள். சில பக்ஷணங்களைச் செய்து கொடுத்தாள். தீனதயாளுவோ வேப் பம் எண்ணெயைக் கலத்தில் போட்டால் நெய்யென்று நினைத்து புசிக்கப்பட்டவன். ஏனெனில் எல்லாவிதத்திலும் அதிக தொந்த ரைப் பட்டவனாகையால் ஒன்றையாவது ருசி பார்த்து புசிக்கப்பட்ட வனல்லன். தான் வந்தவுடனே தனது காரியத்தைத் தெரிவிக்கக் கூடாதென்று காந்தி சமயம் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் முதல் தேதியில் தீனதயாளு சம் பளம் 50 ரூபா வீடுகொண்டு வந்தான். 

அன்றிரவு போசனம் கழிந்து தீனதயாளு தாம்பூலம் போட் டுக்கொண்டிருக்கும் சமயம் பார்த்து அவனுடைய கடைசிக் குழந் தையாகிய பாலசந்திரனை அவள் தனது இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு அவன் சமீபத்தில் வந்து “குழந்தாய், இவன் வெகு துஷ்டன். வெகு புத்திசாலி. எல்லா பேச்சுக்களும் இவனுக்கு ஒரு வயதிற்குள்ளேயே வந்துவிட்டன. பொழுது புகுந்து ஜாம மாயிற்றே. குழந்தையானால் இன்னும் தூங்காதா” என்று கொஞ்ச லானாள். அவள் சொல்லுவதை அவ்வளவு அதிகமாகக் கவனிக் காமல் தீனதயாளு வெகு சந்தோஷமாகத் தனது குழந்தையைச் சிரித்துக்கொண்டு பார்த்தான். அது காந்தியின் இடுப்பைவிட்டு ஒரு முறிப்பாய் முறித்துக்கொண்டு தன் தந்தையின்மேல் தாவிற்று. தீனதயாளுவும் வெகு ஆவலுடன் பாலசந்திரனை வாங்கி தன் மார்பின்மேல் போட்டணைத்துக்கொண்டான். ஆயிரம் துக்கம் தீனதயாளுவுக் கிருந்தபோதிலும் அவன் தன் இளங்குழந்தை களைக் கண்டால் அவ்வளவையும் மறப்பான். குழந்தைகளைக் கண் டால் அவனுக்கு வெகு ஆனந்தம். அவனுக்கு நான்கு, ஐந்து குழந்தைகள் என்றாலும் ஒவ்வொரு குழந்தையினிடமும் அவன் குறைவில்லாத அன்புள்ளவன். அக்குழந்தைகளும் வீங்கலும் தூங்கலுமாக விருக்காமல் பார்ப்பதற்கு வெகு லக்ஷணமாகவே யிருக்கும். இதுவும் ஒரு நற்சமயந்தான். இவன் சொற்ப நாழிகை தனது குழந்தையிடம் கொஞ்சட்டும். அப்புறம் நமது சங்கதியை ஆரம்பிப்போம் என்று, காந்தி தானும் பாலசந்திரனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். இப்படி இவர்களிருந்தபொழுது மூன்றாவது மனிதன் ஒருவன் பார்த்திருந்தால் தீனதயாளுவின் கபடமற்ற குண மும் காந்தி ஏதோ கபடமான எண்ணத்துடன் அங்கு வந்திருக் கிறாள் என்றும் அவனுக்கு எளிதில் விளங்கும். குழந்தையிடம் விளையாட்டின் மும்முரம் ஓய்ந்ததும் காந்தி “அப்பா குழந்தாய்! இன்று முதல் தேதியாயிற்றே, சம்பளம் வந்ததா?” என்றாள். “ஆம் அம்மா ! வந்தது. நியாயமாய் அதை நான் தங்கள் கையில் கொண்டுவந்து கொடுக்கவேண்டும். ஏதோ அவசரத்தில் மறந்து விட்டேன். அதோ மேசையின் அறையில் வைத்திருக்கின்றேன். என்ன சம்பளம்! என்ன உத்தியோகம்! பெரிய நகரங்களில் வாழ ஒன்று வெகு பணக்காரனாக விருக்கவேண்டும்; இல்லை யெனில் வெகு தரித்திரனாக விருக்கவேண்டும். இவ்விருவர்களுக்குந்தான் நகரவாசம் வெகு சிலாக்கியம். நடு நிலைமை யிலிருக்கப்பட்டவனுக்கு வெகு கஷ்டம்.இன்று வெள்ளிக்கிழமை. பெட்டியைவிட்டு பணத்தை எடுக்கக் கூடாதென்றிருக்கின்றேன். வேறு  கிழமை யாக மட்டுமிருந்தால் இதற்குள் சம்பளம் செலவாயிருக்கும். நகர த்தில் நடு நிலைமையிலுள்ள உத்தியோகஸ்தர்கள் சம்பாதிப்பதெல் லாம் பாற்காரன், தயிர்க்காரி, அரிசிக்காரன், வண்ணான், அம்பட் டன், வீட்டு வாடகைக்காரன், இவர்களுக்கேயல்லாது வேறல்ல. குப்பைக்காரனுக்கு 2 -ரூபா மாதச்சம்பளம் கொடுத்து இந்நகரத்தில் பிழைக்கவேண்டும் என்றால் ஒருவன் முன்னுக்கு வருவதெப்படி?” 

காந்தி:- நல்லது நான் சணற்காலிலிருந்தால் எனக்கு நீ 25-ரூபா அனுப்புவாயல்லவா? 

தீனதயாளு :- ஆம் ! என்ன ஆக்ஷேபம். 

காந்தி:- இப்பொழுது நானிவ்விடத்திலேயே யிருந்தபோதி லும் சணற்காலிலேயே இருப்பதாக எண்ணி 25-ரூபா என்னிடம் கொடு. நான் அந்தப்பணத்தை வாங்கித் தனியாக மிகுத்து வரு கின்றேன். கடைசியாய் அப்பணம் எங்கு போகும். ஒரு ஆபத்து சம்பத்து என்றால் எல்லாம் உனக்குத்தான் உதவும், என்றாள். 

தீனதயாளு தவளை தன் வாயால் தான் கெடுவது போல் “ஆம் என்ன ஆக்ஷேபம்” என்று சொல்லி சிக்கிக்கொண்டான். அதிகச் செலவு என்பான். 4, 5 ரூபா அதிகச் செலவாக விருக்கட்டும். அதுபோக 20-ரூபா கொடு என்று காந்தி கேட்பாள். பலவிதமாக முகாந்திரங்கள் சொல்லிப் பார்த்தான். அவன் க்ஷேமத்தையே கருதி பணம் மிகுக்கவந்தவள் போல காந்தி மாயப்பொடி தூவிவிட் டாள். தான் வந்த உத்தேசப்படியே அந்த மாதம் ரூபா 20.பறி த்துக்கொண்டாள். கையாந்தகரை போட்டமுடி சரியாய் நிறை வேறிற்று. அவ்வஞ்சகனின் குடும்பம் பிழைக்க வழியுமாயிற்று. 

தீனதயாளுவிடம் ஈசன் தானிரங்க வேண்டும். பால சமுசாரி; வெகுமானி, உத்தியோக முறையிலோ எணிவாளனுடைய கடா க்ஷக்குறைவினால் அவனுக்குச் சந்தோஷமேயில்லை. பல பெயர்கள் செய்யும் வேலைகளை அவன் ஒருவனே செய்யும்படி சில சமயத்தில் உத்தரவாகும். முடியாதென்று நியாயத்தை எடுத்துச்சொன்னால் வேலை செய்ய அவனால் முடியவில்லை என்று எங்கு யஜமானனுக் குத் தோன்றிவிடுமோ என்று அவன் இரவும் பகலும் உத்தியோகத் தொழிலிலேயே தனது காலத்தைக் கழிப்பான். கவலையாலும் விசாரத்தாலும் அதிக உழைப்பாலும் அவன் தேகம் மெலிந்து வாடியிருந்தது. இந்த கஷ்டம் போதாதென்று காந்தி அவன் பாடுபட்டுத் தேடிவரும் பணத்தைப் பங்கிட்டுக்கொள்ள வந்து சேர்ந்தாள். சங்குவோ புதுசம்பந்தி வீட்டில் மாப்பிள்ளையிருப்ப தாகத் தன் மனத்தில் எண்ணி நடந்து வந்தானேயல்லாது, இது நமது குடும்பம், நமது அண்ணன், என்ற அன்புடனும் ஒற்றுமை யுடனும் நடக்கவேயில்லை. எது கொடுத்தாலும் குற்றமும் குறை யும் சொல்லி வந்தானேயன்றி சந்தோஷமும் திருப்தியும் காட்டிக் கொள்ளவேயில்லை. மாந்தி வெகு நல்ல பெண். குழந்தையென்றா லும் தனது தமையன் தீனதயாளு படும் சிரமங்களை ஒருவாறு உணர்ந்தவளாகவே காட்டிக் கொண்டாள். இவ்வண்ணம் வெகு சிரமத்தின்பேரில் இரண்டொரு வருஷகாலமும் சென்றது. 

நாளுக்கு நாள் தீனதயாளுவுக்குச் சங்கடங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. அவன் தலையால் வணங்கி தனது சிறு தாயா ரையும் அவள் குழந்தைகளையும் அன்பும் ஆதரவுமாகத் தாங்கி வந்தாலும் அவ்வம்மணி அவன்படும் கஷ்டத்துக்கு ஒரு நாள்கூடப் பரிதாபமில்லாமல் தனது பாகம் என்று பணம் பற்றுவதில் எப் பொழுதும் கண்ணாகவே யிருந்தாள். சங்கு நெறி நீங்கிய தத்தாரி என்று பெயர் எடுத்து வந்தானேயல்லாது தனது தந்தை மகா தேவர் அல்லது தனது தமையன் தீனதயாளு இவர்களில் யாராவது ஒருவர் வழியில் நடக்கப்பட்டவனாகக் காணப்படவில்லை. மாந்தி மட்டும், ஏதோ தான் பிறந்த குலத்தை அனுசரித்தவளாய்ச் சிறிது அன்பும் பற்றுமாகவிருந்தாள். தீனதயாளுவுக்கு அக்குழந் விட தையை ஒரு நல்லவிடத்தில் விவாகம் செய்து கொடுத்து வேண்டுமென்பது கருத்து. இதை வெளியிடாமல் வெகு காலமாக ஒருவனைப் பார்த்திருந்து தன் மனத்துள் ஏதோ சில ஏற்பாடுகள் செய்து வந்தான். காந்தியின் எண்ணங்கள் எவ்வளவு நாளிவனுக் குத் தெரியாமலிருக்கும். சொற்ப நாளைக்கெல்லாம் புலப்பட்டு விட் டன. ஒரே குடும்பமாக விருக்கும் பொழுது மாந்தியின் விவாகத் தைச் சிறப்பிற்றாற்றான் கெளரவம்; அக்குழந்தைக்கு நல்லவர னும் வரும்; என்று அவன் கருதி அது நிரம்பும் வரையில் நாம் வாயைத் திறவாமலிருந்து அப்புறம் குடும்ப விஷயமாக ஒருவித ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசித்தான். தீன தயாளுவுக்கு வருஷந்தோறும் ஒரு குழந்தை உண்டாய்க் கொண்டிருந்தது. வருஷம் வருஷம் அடுப்பில் பெரிய பானை ஏற்றி சமையல் செய் யும்படியாயிற்று. சமுசாரம் விருத்தியாவதற்குத் தகுந்தபடி அவன் சம்பளம் உயரவில்லை. அதுபோனால் போகட்டும் என்றால் காந்தி சம்பரமமாக வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு கிராமத்தில் வரும் மாசூலை தீனதயாளுவுக்குக் காட்டாமல் அவனிடமிருந்து ரூபா கைப்பற்றி வந்தாள். இந்த அநியாயம் எத்தனை நாள்தான் நிலைக்கும். சுமார் 2-வருஷ காலமாக விருந்து விட்டு காந்தி தான் மட்டும் நெல் முதலியன என்னவாயிற்று பார்த்து வரலாம் என்றும் மட்டும் தானனுப்பிய பணங்களை பூந்தியின் கணவன் எவ்வளவு விருத்தி பண்ணி வைத்திருக்கின்றான் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டும் சணற்கால் போய் 10,15-நாளில் திரும்பி வருவதாகச் சொல்லிப் புறப்பட்டாள். அவள் புறப்பட்ட காலம் சித்திரை மாதமாக விருந்தது. அதுதான் சமயம் என்று பார்த்து தீன தயாளு நற்குலத்தில் பிறந்த ஒருவாலிபனுக்கு மாந்தியை விவாகம் செய்து கொடுத்தான். நல்லவரன் நேர்ந்தபடியாலும், தாமதித் தால் அவ்வரன் தப்பிவிடும் என்று தோன்றியபடியாலும் காந்தி வரவை எதிர் பார்க்காமலே தானே அவ்விவாகத்தைச் செய்து முடித்ததாகத் தனது சிறு தாயாருக்குக் கடிதமும் அனுப்பினான். வரன் சிலாக்கியவரனாக இருந்தபடியால் ஒருவரும் ஒருவித ஆக்ஷே பம் சொல்ல இடமேயில்லாமலிருந்தது. தீனதயாளுவும் இனி நமது கடமை நிறைவேறிற்று. மாந்தி இன்னும் 7, 8 மாத காலத் தில் தன் கணவன் வீடு போய் விடுவாள். நாம் கவனிக்க வேண் டிய தெல்லாம் அக்குழந்தையைப்பற்றி, நமது தந்தை மாந்தியை வெகு செல்வமாக வளர்த்து வந்தார். அவர் ஆத்துமா குளிரும் படி அவளை நல்ல இடத்தில் கொடுத்து விட்டோம் என்று தீன தயாளு மனம் களித்தான். 

நிற்க சணற்கால் சென்ற காந்தி பூந்தியின் புருஷனைக் கண்டு அவனிடம் இரண்டு வருஷத்துக் கணக்கு கேட்டாள். அவன் ஒரு தூசுகூட விடாமல் அழகாகக் கணக்கு எழுதி வைத்திருந் தான். நெல்லுக் கணக்கு, பணக்கணக்கு எல்லாம் சரியாகக் காட் டினான். நெல்லினத்தில் 200-250 ரூபா வரவும், பணமாக காந்தி யனுப்பியதில் ரூபா 500-க்கு மேல் வரவும் ஏற்பட்டது. நாம் நமது குமாரனிடம் ஒரே குடித்தனம் பண்ணின யுக்தியாலல்லவோ இவ்வளவு முதல் நமக்குண்டாயிற்றென்று காந்தி களித்தாள். தனக்கு இவ்வழி உபதேசித்ததற்காக கையாந்தகரையைப் புகழ்ந்தாள். அவள் சந்தோஷம் அற்ப சந்தோஷம் என்பது இன்னும் அரை நாழிகைக்குள் அவளுக்கு விளங்கும். எப்படி என்பதை நாம் உடனே விசாரிப்போம். 

அவ்வளவு சரியாய்க் கணக்கெழுதி யிருந்த கையாந்தகரை யை நாம் முதலில் ஏன் கபடமுள்ளவன் என்று தெரிவித்தோம்; அதன் காரணத்தையும் நாம் விசாரிப்போம். இவ்வண்ணம் முதல் முதல் காந்தியின் சந்தோஷத்தை வரவு கணக்கைக் காட்டி அந்த துஷ்டாத்துமா பெருக்கி, அதன் பிறகு அவன் செலவு கணக்கை எடுத்தான். அக்கணக்கோ வரவு கணக்கைவிடப் பதின் மடங்கு பெரிய புஸ்தகமாக விருந்தது. மாச மிரண்டு முறை ஜம்புநாத புரத் திலிருந்துதான் சணற்காலுக்கு வந்து போனது கால் நடையாக விருந்தபோதிலும் வண்டி வாடகை போகவர 4-ரூபா போட்டுக் கொண்டான். அவன் சாப்பிட்டது சத்திரம் சாவடியாக விருப்பினும் தனக்கு 4-நாளைக்குப் படிச்சிலவு நாலரை இரண்டு ரூபா யாக கணக்கில் குறித்தான். அதன் பிறகு பாக்கு வெற்றிலைச் செலவு, இளைநீர் செலவு, என்று பல செலவுகள் எழுதியிருந்தான். சணற்கால் வீட்டில் அவன் கை வைத்ததேயில்லை. அவ்வீட்டிற்குச் சுண்ணாம்பு அடித்த செலவு, கூறைமாற்றிய செலவு, என்று வருஷத்துக்கு 40-ரூபா வரையில் காட்டியிருந்தான். தானவ்வாறு அந்தக் குடும்பத்தைப்பார்த்ததற்காகத் தனக்கு நான்கு கலம் மாதச் சம்பளமென்றும் சணற்கால் நெல்லவ்வளவையும் தான் ஜம்புனாத புரத்துக்கனுப்பி யிருந்தான். இந்தச் செலவுகளெல்லாம் போக இரண்டு வருஷங்களிலும் மிகுந்தது 200-ரூபா, மாதம் மாதம் வெகு சரியாக கணக்கு எழுதப்பட்டிருந்தது. கையாந்தகரை தன்னை ஏமாற்றிய சங்கதி காந்திக்கப்பொழுது தான் புலப்பட்டது. தான் தீனதயாளுவின் அவஸ்தையைக் கவனிக்காமல் அவனிடம் அபகரித்த பணமெல்லாம் இவ்வாறாயிற்றே என்று அவள் மனம் பதைத்தாள். மிகுந்த பணம் 200-ரூபா எங்கே என்று அவள் கேட்டால் அதற்குக் கையாந்தகரை, திடீர் என்று பணம் கிடைக்குமா? அந்தத் தொகையை மாதம் 100-க்கு 3-ரூபா வட்டி யாக நான் விட்டிருக்கின்றேன்; இந்த ஊர்களில் அதிக வட்டிகிடைக் காதாகையால் பட்டிக்காட்டில் போட்டிருக்கின்றேன்; இன்னும் 2, 3-வாரத்துக்குள் பெயர்த்துக் கொடுக்கின்றேன், என்றான். பாம்பினடி பாம்பறியும் என்னும் பழமொழிபோல் காந்திக்கு இப் பணமும் தனக்கு கிடைக்கமாட்டாது, வட்டிக்கு விடப்பட்டிருந்தா லல்லவா கிடைக்கும், கையாந்தகரை தனக்கே எடுத்துக் கொண்டு விட்டான் என்று உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கி விட்டது. 

இந்த அவஸ்தையில் அவள் சணற்காலிலிருந்த பொழுது தான், மாந்தியின் விவாகம் நடக்கப்போவதாக தீனதயாளு காந்திக் கெழுதியதும், “அடா! பாவி! இவ்வளவு மோசம் நீ செய்வாய் என்றிருந்தால் நான் உனக்கு ஒரு காசுகூட அனுப்பி யிருக்கமாட் டேன், என் குழந்தைக்கு விவாகம், இந்த சமயத்துக்கு என்றாவது 100-ரூபா கொடு,” என்று கெஞ்சினாள். அவள் என்ன கெஞ்சினாற் றான் என்ன! போன பணம் திரும்பிவருமா!! கைம்பெண் கைக் காசு அதிகமாக விருத்தியுமாமா!!!தீனதயாளுவின் பெருந்தன்மை யும், அவனுக்கு ஆயிரம் பணச் செலவிருந்தும் அவன் அலக்ஷிய மாகப் பணம் கொடுத்து வந்ததும், அதை வாங்கித் தான் கரியாக் கியதும், அவன் அப்பொழுது தனது மாந்திக்கு நல்வரன் தேடிக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்திருந்ததும், அதே சமயத்தில் கையாந்தகரை தன்னை வஞ்சித்ததும், காந்திக்கு நன்றாக விளங்கிற்று. அத்தருணத்தில் அவளுக்கு கொஞ்சம் நற்புத்தி வந்ததாக வும் சொல்லலாம். அப்புத்தி அப்படியே நிலைத்திருந்தால் எவ்வ ளவு நன்மை. அதுதானிருக்கின்றதில்லை. பெரும்பாலும் கைம் பெண்களை அவர்களுடைய நெருங்கின பந்துக்கள் கபடவார்த்தை களால் ஒரு நிமிஷத்தில் மாற்றவிடக் கூடும். தான் செய்த சூது ஒருவிதமாக காந்திக்குத் தெரிந்து விட்டது, இனி தனக்கு வரும் வருமானம் ஒருகால் குறைந்துவிடும் என்று கையாந்தகரை எண்ணி ஜம்புநாதபுரத்துக்குச் சொல்லி யனுப்பி தனது மனைவியாகிய பூந்தியை வரவழைத்தான். 

சமயம் நேரிடும் பொழுதெல்லாம் மூத்தாள் குமாரனாகிய தீன னதயாளு என்றென்றைக்கும் காந்தியையும் அவள் குழந்தைகளை யும் காப்பாற்றமாட்டான் என்றும் எப்பொழுதும் அவளைக் காப் பாற்றப்பட்டவர்கள் பூந்தியும் தானுந்தான் என்றும், காந்தி தனது குடும்பத்துக்கும் பூந்தி குடும்பத்திற்கும் வித்தியாஸம் பண்ணக் கூடாதென்றும் சொல்லிக்கொண்டே வந்தான். அவன் சொல்லி ஒழிந்த சமயங்களில் அதே பாடத்தை அவன் ஏவுதலின்படி பூந்தி ஒ ப்பிப்பாள். காந்தி ஸ்நானம் பண்ணுவதற்கு முந்தியே அவள் ஈரப்புடவையைப் பூந்தி துவைத்துணர்த்துவாள். காந்தி புன்னையிலிருந்து வந்தவளாகையால் பட்டணங்களில் 10 – நாழிகைக் கெல்லாம் சாப்பிடுவது வழக்கம் என்று கருதி 10 – நாழிகைக்குள் பூந்தி காந்திக்கு வேண்டிய உணவை ருசியாகவும் அழகாகவும் செய்து வைப்பாள். இவ்வாறு புருஷன் பெண்சாதி யிருவர்களும் காந்திக்கு மாயப்பொடி தூவி வந்தார்கள். இன்னும் சொற்பநாளி வளை சணற்காலில் நிறுத்தி இவளை நல்ல வார்த்தையாலும் உபசார த்தாலும் நம்மை நம்பச் செய்ய வேண்டும், இல்லாவிடில் நமக்கு பணம் வரமாட்டாதென்று கையாந்தகரை அஞ்சி, புற்புலத்துப் பஞ்சு உடையானுக்கு சொல்லியனுப்பியிருக்கிறேன்; அவன் ஒரு சமயம் என்றால் இல்லை என்று சொல்லாமல் பணங்கொடுப்பான்; நாளை அவன் நூறு ரூபா கொண்டு வருவான்; அதையாவது நீ கையிற்கொண்டுபோனால் எனக்குத் திருப்தியாகவிருக்கும். என்று ஆசைவார்த்தை காட்டி நிறுத்திவைத்தான். பணம் வரப்போகிற தில்லை என்பது கையாந்தகரைக்கு நன்றாகத் தெரியும். ஒரு கால் கிடைத்தால் மாந்திக்கு இச்சமயத்தில் நாம் ஏதாவது சீர் செய்யலாமே என்பது காந்தியின் ஆசை. இன்று 10 – நாழிகைக்கு வரும், ஏதோ இன்று அசந்தர்ப்பம்,பஞ்சுடையான் பருத்திக்காட்டுக்குப் போய் அங்கிருந்தபடியே ஸப்த ஸ்தானத்துக்குச் சென்று விட்டா னாம், நாளை அகத்தியம் பணம் வரும். அவன் ஒரு நாளும் மோசம் பண்ணப்பட்டவனில்லை. அவன் வீட்டிலேயே கலியாணமாம், கைப் பணமெல்லாம் வெளியில் செலவாய்விட்டதாம், இன்னும் இரண்டு நாளைக்குள் தனது தலையை அடகு வைத்தாவது பணம் அனுப்பு கிறேன் என்று எழுதியிருக்கிறான். ஓகோ இது கிஸ்து காலம், ஆகையாற்றான் பணம் கிளம்புவது இவ்வளவு வருத்தமாகவிருக்கின் றது. என்று இவ்விதமாகப் பலவித சாக்கு போக்குகள் சொல்லி சணற்காலில் காந்தியை 20,30-நாள் கையாந்தகரை நிறுத்திவிட் டான். அதற்குள் புன்னையில் மாந்தியின் விவாகம் நிறைவேறி 10-நாளுமாய்விட்டது. தன்னை யிப்படி அவன் மோசம் பண்ணி விட்டான் என்று காந்தி கொஞ்சம் வருத்த மடைந்தவளாகவே யிருந்தாள். பூந்தி பணிவிடையும் அவள் புருஷன் புன்னகையும் காந்தியின் கோபத்தைச் சிறிது மாற்றிற்றென்றாலும் அது முற் றிலும் மாறுபடவில்லை. இப்படி நீ மோசம்பண்ணுவாய் என்று நான் ஒரு நாளும் எண்ணவே யில்லை என்று காந்தி ஒரு நாள் பூந்தி யும் அவள் புருஷனும் மட்டும் தனதருகாமையிலிருந்தபொழுது சொன்னாள். 

கையாந்தகரை–இதுதான் பெண்கள் பைத்தியக்காரிகள் என்பது. பூந்திக்கு நீ என்ன உறவு! தமக்கையல்லவா! உன்னை மோசமே பண்ணினேன், என்றிருக்கட்டும். அந்த சொத்தை நான் தெருவில் வாரிவிடவில்லையே. நானும் பூந்தியுந்தானே சாப் பிட்டோம். உன் வயிறு வேறு, அவள் வயிறு வேறா. நான் ஏழை என்று தானே இவ்வளவு சந்தேகம் உனக்கு வந்தது என் றான். ஏழைதானே என்றும் நீ என்னை சந்தேகித்தாயே என்றும் அவன் சொன்னதும் காந்தி மனம் இளகிற்று. போனால் போகட் டும். நமது தங்கைதானே சாப்பிட்டாள். நமக்கு இவ்வளவு பணி விடை யார் பண்ணப்போகிறார்கள் என்ற சந்தேகமும் அவள் மன தில் சொற்பம் உதித்துவிட்டது. முகக்குறியாலவள் நம்மிடம் சிறிது நம்பிக்கை வைத்தவளாகக் காணப்படுகின்றாள் என்று கையாந்தகரை கண்டு கொண்டான். இரும்பைச் சூட்டின் பதத் திலேயே அடித்து நீட்டவேண்டும் என்றபடி மறுபடியும் பின் வரு மாறு சொல்லலுற்றான்:- 

“காந்தி! பஞ்சு உடையான் உடையான் பணத்தைக் கொடுக்காமலிருந் தது நமக்கு லாபம் என்று நீ நினை. அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு போய் நி புன்னையில் செலவிட்டிருந்தால் அது மறுபடி உனக்குக் கிடைக்க எத்தனை நாள் செல்லும். யோசித்துப் பார், நல்லது இந்த 100-ரூபா போய்ச் சேராமல் எந்த சங்கதி குறைவா யிற்று. கலியாணம் நின்றுபோகவில்லையே. உத்தியோகத்திலிருக் கப்பட்டவனுக்கு பணத்துக்கு என்ன குறைவு. அவன் கையில் ஒரு காசு இல்லாவிட்டாலும் அவனுடைய சினேகிதர்களான மற்ற உத்தியோகஸ்தர்கள் 1000,500 அரை நிமிஷத்தில் கொண்டுவந்து கொட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணத்தின் கஷ்டமே கிடையாது. மாதம் 30-நாள் நழிந்ததும் முதல் தேதி சுளைகளை யாய் அவர்கள் ரூபாவை எண்ணுகின்றார்கள். குடித்தனக்கார னுக்குப் பணமேது. வட்டிப் பணம் சம்பாதிப்பதில் நமக்கு எவ் வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டம் உத்தியோகத்திலில்லையே. ஆகையாற்றான் வட்டிப்பணத்தைச் செலவிட நாம் பின்வாங்குவது போல உத்தியோகத்தி லிருக்கப்பட்டவர் தங்கள் சம்பாத்தியத் தைச் செலவிடக் கூசுகின்றதில்லை. நமக்கு வேண்டியதெல்லாம் நமது குழந்தை க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பது. அப் படியே கலியாணம் நிறைவேறினதாகக் கடிதம் வந்துவிட்டது. இதனுடன் முடிந்ததா. இன்னும் ஆறாம் மாதமிருக்கின்றது. தீபாவளிச்சீர் சங்கராந்திச்சீர் இவைகளெல்லா மிருக்கின்றன. அவைகளி லொன்றுக்கு உன் பணமாக 100 – ரூபா நீ கொண்டு போக லாம். இப்பொழுது குடித்தனக்காரன் பணத்துக்கு வருந்தும் காலம். அப்பொழுதோ கார் அறுப்பாயிருக்கும். காசு கையில் நிரம்ப விருக்கும். நீ என்னைப்பற்றி வித்தியாஸமாக எண்ணாதே. நானிப்பொழுது சொல்லுவதில் பிரயோசனமில்லை. நான் போகப் போகத் தெரியும்” என்றான். 

புத்தியீனர்கள் மனம் இழுத்தபடி யெல்லாம் திருப்பும். காந்தியும் இவ்வண்ணம் கையாந்தகரை சொன்னது சரியாகவிருக் கின்றதென்று எண்ணலானாள்.பூந்தி தனது சிசுரூஷையைப் பதின்மடங்கு அதிகமாகப் பண்ணலானாள்! புன்னைக்கு திரும்பிப் போகவேண்டும் என்று காந்தி தெரிவிக்கவே கையாந்தகரை “நல் லது நீ போகவேண்டியது அவசியந்தான். எத்தனை நாளிங்கிருந் தாலும் எங்களுக்கு ஒரு பெரிய உபகாரந்தான். ஆனால் சங்குவும் மாந்தியு மவ்விட ழிருக்கின்றார்கள். நீ அவர்களுடைய நிமித்த மவ்விட மிருக்கவேண்டும். சீக்கிரம் போகவேண்டியதுதான். ஏதோ வெகு கஷ்டப்பட்டு உனக்கு 20-ரூபா மாதம் மாதம் தீனதயாளு கொடுப்பதாக நீ எண்ணாதே. அவன் உனக்குக் கொடுக்கும் பணம் ஏதோ உபகாரத்துக்கு என்று நீ நம்பாதே. அவன் வெகு வஞ்சகன். அப்பொழுது மகாதேவர் பட்ட கடனுக்கு நீ மட்டும் கையெழுத்துப் போடாவிட்டால் அவன் நமது நிலங்களில் ஒரு குழியையாவது விற்று அக்கடனை தீர்த்திருப்பானா. அக்கடன் மட் டும் தீராமலிருந்தால் அவனிதற்குள் ஜெயிலிலிருக்கவேண்டும். நீ பைத்தியக்காரி யாகையால் அக்காலத்தில் அவன் கோறினபடி கை யெழுத்துப் போட்டு மாட்டிக்கொண்டாய்; ஒரு நிமிஷத்தில் எல்லா நிலங்களையும் ஒன்றுக்குப் பாதியாக விற்று கடனை அடைத்து விட்டு அவன் பகாசுரகிரி சென்றான். அவன் விற்ற நிலங்கள் இப் பொழுது என்ன விலை, உனக்குத் தெரியுமா! என் வயிறும் குட லும் மண்டுகின்றன. படுகையோரம் நமக்கு நேத்திரமாக ஒரு நாற்றங்கால் மகாதேவர் சமயம் பார்த்து 300-ருபாவுக்கு வாங்கி யிருந்தார். தீனதயாளு அதை 400-ருபாவுக்கு விற்றான். அதின் விலை இப்பொழுது 4,000. இவ்வண்ணம் சங்கு மைனர் என்று அவனை மோசம் பண்ணி அவனுக்கு கார்டியனாகிய உன்னை வஞ்சித் துக் கையெழுத்து வாங்கி இக்குடித்தனத்தை தீனதயாளு பாழா க்கிவிட்டான். அப்பொழுது நான் சமீபத்திலில்லை. உனக்கு புத்தி சொல்லுகின்றவர்கள் ஒருவரும் இல்லாமல் போனார்கள்.நீ முழுகிப்போனாய். மகாதேவர் பலநாள் சேர்த்த சொத்து ஒரு நாழிகையில் போய்விட்டது, இல்லாவிடில் தீனதயாளு உத்தி யோகம் பறந்துபோயிருக்கும். இன்னும் நான் சொல்லுவதைக் கேள். தீனதயாளு புன்னையில் 50- ரூபா சம்பாதித்து அதில் 20-ரூபா உனக்குக் கொடுத்துவிட்டு 30- ரூபாவில் குடித்தனம் பண்ணி 10, 12-பெயர்களைக் காப்பாற்றுகின்றான் என்று நீ நினைக் கிறாயா என்ன? அரிசி மூட்டைக்குமட்டும் காணும அவன் 30 ரூபா! காணாதே! இன்னுமவனுக்கு பலவிதமாக எவ்வளவோ வருமானம் வருகின்றது. அவைகளெல்லாம் உனக்கு என்ன தெரி யும்! புன்னை பாங்கியில் அவன் 10,000 ரூபா வட்டிக்குப் போட்டி ருக்கிறான். அது எனக்கல்லவோ தெரியும், எனக்கும் புன்னையில் சிநேகிதர்களிருக்கின்றார்கள். அவர்கள் மூலமாய் நான் எல் லாம் விசாரித்திருக்கின்றேன், என்றான். 

காந்தி இதைக் கேட்டதும் ஒரு பெருமூச்சுவிட்டு “அடா! நான் ஒரு பெரும் பைத்தியக்காரக் கைம்பெண்! மோசம்போனேனே. நீ சொல்லுவது அவ்வளவும் உண்மை என்று இப்பொழுது தான் விளங்குகின்றது. தீனதயாளு வெகு செலவாளி, எல்லாக் குழ ந்தைகளுக்கும் வேண்டியவைகளில் ஒருவித குறைவில்லாமல் செய்து வருகின்றான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிறு மெத்தை, ஒரு சிறு பெட்டி, தினந்தோறும் கச்சேரியிலிருந்து வரும்பொழுது ருபாவுக்குக் குறையாமல் கனிகள் வாங்கி வரு வான். இவ்வளவு செலவு என்னமாய் நடக்கின்றதென்று நானுந் தான் ஆச்சரியப்படுவேன். நீ சொல்லுகின்றபடி யில்லாவிடில் இவ்வளவு செலவுகளுக்கு அவனுக்கு பணமேது. பாங்கியில் பணம் வைத்திருக்கின்றான் என்பதற்கு ஐயமேயில்லை. நல்லது இருக் கட்டும், இனி தெரிந்தது, நான் விழித்துக்கொண்டேன்” என்றாள். 

கையாந்தகரை இச்சூட்டிலேயே அவள் புன்னை போய்ச் சேர வேண்டும் என்று கருதி, சாண்பட்டுக்கரைபோட்ட கலியாணகூடம் ரவிக்கைத் துண்டு ஒன்று மாந்திக்கும், 100-ம் நம்பர் நூலில் சாயம் போட்ட இரண்டு மதுரைச் சாயவேஷ்டி சங்குவுக்கும் அவளிடம் எடுத்துக்கொடுத்து குழந்தைகளைச் சாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள் என்று உபதேசம் பண்ணி அவளை ஊருக்கனுப்பினான். 

ஐயோ! இவ்வுலகமிப்படி யிருக்கின்றதே. இவ்வுலகத்தின் உண்மையை அறிந்தவர்கள் யார். பேச்சாலும் பாசாங்காலும் எத் தனை பெயர்கள் ஜீவிக்கின்றார்கள். உடுப்பாலும் சிபார்சாலும் எத் தனை பெயர்கள் உத்தியோகம் பண்ணுகிறார்கள். ஒரு பாவமும் அறியாத யோக்கியனான தீனதயாளு உத்தியோக முறையிலும் தனது குடும்பத்திலு மிவ்வளவு அவஸ்தைப்பட வேண்டுமா! தெய் வத்திற்கு கண்ணில்லையா! இல்லை என்று ஒருபொழுதும் சொல் லக்கூடாது. எப்பொழுது ஈசன் தீனதயாளுவினுடைய கஷ்டங் களை நீக்குவாரோ தெரியாது. 

12. குடும்ப விபாகம்

“பல நாளும் பக்கத்தாராயினும் நெஞ்சிற் 
சில நாளும் ஒட்டாரோ டொட்டார்.” 

நாம் முன்னமே தீனதயாளு தனது தங்கை மாந்தியின் விவாகத்தைச் செய்து முடித்தானென்று சொன்னாமே. அவ்விடத்தி லதை அவ்வளவு சுருக்கமாகச் சொன்னோம். அதில் அவன் பட்ட அவஸ்தை ஈசனுக்குத்தான் தெரியும். 40-காணி ஆஸ்தியுள்ள ஒரு மிராசுதாருடைய ஒரே மகன் சபாபதிசர்மா வென்பவன் புன்னைக்குப் பெரிய பரீ ைக்குப் படிக்கவந்தான். அவன் குலங்கோத்திரங்களை விசாரித்து மாந்திக் குச் சரியான புருஷன் அவனென்று தீனதயாளு தீர்மானித்து தன் னுடன் சம்பந்தம் பண்ண மனமிருக்குமா வென்று அவனுடைய பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதினான். அவர்களும் தீனதயாளு வின் குலங்கோத்திரங்களை அறிந்தவர்களாகையால் அவன் கருத் துக் கிசைந்ததுமன்றி சொற்ப நாள் கழித்து நடத்தினால் பலவித அசந்தர்ப்பமாகையால் கூடிய சீக்கிரத்தில் செய்யும்படி கேட்டுக் கொண்டார்கள். அவ்விதம் சீக்கிரம் நடத்துவதிலேயே தீனதயா ளுவுக்கும் எண்ணம். ஆனால் நடத்துவது எப்படி. என்ன குறைத் துச் செய்தாலும் விவாகம் என்றால் 700 800,- ரூபாவுக்குக் குறை வில்லாமல் வேண்டுமல்லவா. அவ்வளவு பணத்துக்கு தீனதயாளு எங்கே போவான். அவனுக்கு சமீப பந்துக்களான சிறிய தகப்ப னார்கள், மாமன், மைத்துனன், முதலியவர்கள் வெகு பணக்காரர் களாக இருந்தார்கள். அன்றியுமவர்கள் மகாதேவர் உயிருடனி ருந்த காலத்தில் அவர் கேட்ட தொகை ஒரு நாழிகைக்குள் பைபை யாகக் கொண்டுவந்து அவிழ்த்தவர்கள். தீனதயாளு அவர்களில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கடிதம் எழுதி எப்படியாவது அந்தச் சமயம் உபகாரம் பண்ணி தன்னை ஆளாக்கிவிட வேண்டும். அச்சமயத்தில் தனக்கு கொடுக்கப்படும் பொருளை எப்படியாவது தான் இரண்டொரு வருஷங்களுக்குள் தீர்த்து விடுவதாகக் கெஞ் சிக்கொள்ளும் வண்ணம் எழுதினான். ஒருவனாவது, பதிலெழுத வில்லை. சிலர் 15 நாளைக்கு முன் கேட்டிருந்தால் அகத்தியம் 700 அல்ல 1000-கொடுத்திருப்போம் என்றும், அப்பொழுது கேட்பா ரில்லாமல் பணம் கட்டிக்கிடந்ததென்றும், வாய்தாப் பணம் வசூல் ஆரம்பிக்கவே எல்லாப் பணமும் கரைந்து விட்டதென்றும், எழுதி னார்கள். இக்காரணங்கள் அவ்வளவும் பொய். தீனதயாளுமட்டும் ஒரு ஒட்டை வீட்டையாவது இரண்டு பொட்டல்காணி நிலத்தை யாவது ஈடுவைக்கிறேன் என்று எழுதி யிருப்பானாகில், நான், நீ, என்று ஒவ்வொருவனும் வேண்டிய பணம் கொடுத்திருப்பான். இனிப் பணங்கொடுக்கும் விஷயத்தில் மிராசுதார்களைப் போல் பெரும் கணக்காளிகள் கிடையாது. என்ன பந்து வானாலும் நிலம் அல்லது வீடு ஒத்தியின்றி ஒரு காசுகூட வட்டிக்கிடார்கள். சமயம் என்று என்ன தான் கதறினாலும் பணமில்லையென்று ஒரே பொய் சொல்லிவிடுவார்கள். அவ்வண்ணம் பொய் சொல்லுவதால் பாப மில்லை என்பது அவர்கள் பணம் என்ற குரு அவர்களுக்குபதேசித்த மூலமந்திரம். 

என்ன செய்வான் தீனதயாளு! அவன் அருமையாகப் பலநாள் சேகரித்து வைத்திருந்த கோசங்களையும் புஸ்தகங்களையும் பஞ்சத் துக்குப் பிள்ளை விற்பதுபோல் விற்று 400-ரூபா செலவுக்கு ஏற் படுத்திக் கொண்டான். புன்னையில் தான் பழகின இரண்டொரு கனவான்களின் காலில் விழுந்து தனக்குச் சொற்பம் பொருளுதவி செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். அவன் ஒரு பொழுதும் கேட்காதவனாகையால் அத்தனவான்களாகிய நண்பர்கள் அவன் கேட்ட தொகையை ஒரு சீட்டுகூட வாங்கிக்கொள்ளாமல் கொடுத்தார்கள். இதுதான் நகரத்திலுள்ள நண்பர்களுக்கும் நாட் டுப்புரத்திலுள்ள பந்துக்களுக்கும் வித்தியாஸம். இவ்வாறு தான் சேகரித்த பொருளைக்கொண்டு மாந்தியின் விவாக முகூர்த்தத்தைத் தீனதயாளு சிறப்பித்துத் தான் தனது தந்தைக்குப் பட்டிருந்த கடனை தீர்த்துக்கொண்டதாகக் களிப்படைந்தான். 

இவ்வளவெல்லாம் செய்துமுடித்து கையில் காசுகூட நிற்காம லவனிருந்த பொழுதுதான் காந்தி கலியாணகூடம் ரவிக்கையுடன் சணற்காலிலிருந்து திரும்பிவந்தனள். கையாந்தகரை அவளுக்குச் செய்திருந்த உபதேசத்தால் அவள் தீனதயாளுவிடம் வெகு கோப மாக வந்தாள், அவள் மனம் வேறுபட்டிருப்பதை யறியாத தீனம் அவளை வெகு சந்தோஷமாக உபசரித்து மாந்தியின் முகூர்த்தம் நடந்ததைச் சொன்னான். ஏதோ களிப்பதுபோல் காந்தி களித் தாள். சங்குவின் விவாகம் எப்பொழுது: அவனுக்கும் காலத்தில் நடத்திவிட வேண்டாமா, என்று வேண்டிக் கொள்ளுவதுபோல் கேட்டாள். அதற்கு தீனம் பிள்ளையின் விவாகத்தைப் பற்றிக் கவலைப்படுவது வெகு பிசகு. இப்பொழுதோ எங்கு பார்க்கினும் பெண்கள் அதிகம். பெண்ணை வளர்த்து வைத்துக்கொண்டிருப் பவன் நம்மை நாடி ஓடிவருவான். அன்றியும் சங்குவுக்கு வயது 20 ஆகப்போகிறதென்றாலும் இன்னும் ஸ்திரமாக ஒரு வேலையிலமரவில்லை. ஏதாவது மாதம் 10 – ரூபாவாவது அவன் தலையெடுத்துச் சம்பாதிக்க ஆரம்பித்தா லப்பொழுது அவன் விவாகத்தை முடிக்க லாம் என்று எண்ணியிருக்கிறேன், என்றான். அதற்குக் காந்தி அப்படித்தான் உன் விவாகம் நடந்ததோ என்று கேட்க, 

தீனதயாளு – இல்லை. ஆனாலக்காலம் வேறாக விருந்தது, இக்காலமிப்பொழுது வேறு. நல்லது நமக்குப் பணமிருந்தால் ஏதோ இருக்கின்றதை வைத்துக்கொண்டு பிழைத்துப்போகிறான், என்று ஒரு கால்கட்டு கட்டி விடலாம். அதுவுமில்லையே. நல்லது எனக்காவது அதிகச சம்பளம் ஆனால் எப்படியாவது இக்குடும்பம் முன்னுக்கு வந்துவிடும் என்று பார்த்தால் அதற்கும் ஒருவிதஹேஷ் யங்களுமில்லை. நமது காலம் இப்படியே போகுமா, எப்பொழுதா வது விடியாதா, இன்னும் இரண்டொரு வருஷத்திற்குள் நல்ல தசைவந்தால் சங்குவின் விவாகத்தைச் சிறப்பாக நடத்துவோம், அப்பொழுது நல்லவிடத்துப் பெண்களும் நமக்கு நாம் தேடாமலே கிடைக்கலாம். இப்பொழுதுதான் மாந்தியின் விவாகத்தைச் சிறப் பித்தேன். அதில் நான் பட்ட கடனைத் தீர்க்க இன்னுமிரண்டு வருஷகாலஞ் செல்லும். எங்கிருந்து கொடுப்பேனோ எப்படி அடைப்பேனோ ஈசனுக்குத்தான் தெரியும்! எப்படியாவது இன்னும் இரண்டு வருஷம் பொருத்துக்கொள்ளுங்கள் என்றான். 

அதற்குக் காந்தி வெகு விசனப்படுபவள் போல் காட் டிக்கொண்டு அவன் தந்தைமட்டு முயிருடனிருந்தால் அவ்வளவு வயதாய் அவனை விவாதமின்றி நிறுத்தி வைத்திருப் பாரா வென்று கேட்டாள். இப்படி அவள் கேட்டது தீனதயாளு வின் மனத்தை வருத்திற்று. வெகு கம்பீர குணமுள்ளவனாகை யால் அப்படிக் காந்தி கேட்டதை அவன் குற்றமாக எண்ணாமல் “ஐயோ! நமது தேசத்துப் பெண்களின் இயல்பு இப்படியிருந்தால் எக்காலம் நமது தேசத்துக்கு க்ஷேமம் உண்டாகப் போகிறது, ஒரு வனிவ்வுலகத்தில் ஜனித்து விட்டால் அவனுக்குப் பொருளிருக்கின் றதோ இல்லையோ,விவாகம் அவனுடைய 20-வது வயதுக்குள் நடந் தேறவேண்டுமென்று நமது நாட்டுப் பெண்கள் எண்ணிவிடுவார்கள். விவாகமாய் இரண்டு மூன்று வருஷங்களுக்குள் அவனுக்கு குழந்தை களும் உண்டாய்விட்டால் அவன் எவ்வாறு ஜீவனம் பண்ணப்போ கின்றான் என்ற கவலை அவர்களுக்கு ஏன் உண்டாகாமல் போகிறது. ஏதோ பணக்காரர்கள் தங்கள் பொருளின் நம்பிக்கையால் அவ்வாறு இறங்குவதில் அதிகப் பிசகில்லை என்று சொன்னாலும் ஒருகால் சொல்லலாம். ஏழைகளும் அப்படியே எண்ணினால் அப்புறம் குடும்பம் கடைத்தேறும் வழி எப்படி” என்று இவ்வண்ணமாக யோசித்தான். தனது சிறுதாயைப்பற்றிக் கெடுதலாக எண்ணவே யில்லை. அன்றைப்பொழுது அப்படிப்போயிற்று. காந்தியும் தான் வந்தவுடனே சண்டையிடக் கூடாதென்று வெகு வருத்தத்துடன் தனது கோபத்தை ஒருவாறு அடக்கியிருந்தாள். 

வள் ஊர்போய் திரும்பிவந்ததற்குள் தீனதயாளு ஒரு மாதச் சம்பளம் வாங்கியிருந்தான். அதில் தனக்குக் கிடைக்கவேண்டிய ரூபா வேண்டுமென்று காந்தி கேட்கவே தீனதயாளு வெகு மரியா தையாக “அம்மா, நான் முன்போல் பணங்கொடுக்க முடியாதுபோ லும் தோற்றுகின்றது. மாந்தியின் விவாகம் முடித்து வைத்ததில் ரூபா 800-வரையில் கடன் பட்டிருக்கின்றேன். மாதம் 20-ரூபா வாகக் கொடுத்தால் வட்டி என்பதில்லாமல் இக்கடனைத் தீர்க்க எனக்கு 40 மாதகாலம் செல்லும்; இக்கடனுக்கும் கொடுத்து உங்க ளுக்கும் நான் கொடுப்பதாக விருந்தால் அதன்பின்பு வீட்டுச் செல வுக்கு ஒன்றும் மிகுந்து நிற்கவில்லையே. என் ஸ்திதியை நீங்களே யோசித்துப் பாருங்கள். நானிதுவரையில் 2-வருஷகாலமாகக் கொடுத்ததைத் தாங்கள் என்ன செய்தீர்கள்; அந்தத் தொகை 500 ரூபாவரையில் மிகுந்து இருக்கவேண்டுமே, அதல்லாமல் இரண்டு வருஷ காலமாக நாம் இவ்விடம் ஏககுடும்பமாக விருக்கின்றபடியால் ஸ்வாமி போக வரும்படி அப்படியே முதலாக விருக்கவேண்டுமே. அதில் குறைந்தபக்ஷம் 300-ரூபா யிருக்கலாம். அதின் கணக் கென்ன? அவ்விரண்டு தொகையும் நமது சுவாதீனத்தி லிப்பொழு திருந்தால் ஒருவன் தயவையும் எதிர்பார்க்காமல் அப்பணத்தைக் கொண்டு இக்கடனைத் தீர்த்துவிட்டு நாம் ஸ்வேச்சையாக விருக்க லாமே” என்றான். 

அவன் சொன்னதில் ஒருவித வித்தியாஸமு மில்லை. தான் வேறு காந்தி வேறு என்ற எண்ணமே இல்லாமல் ஏக குடும்பமா கையால் ஊர் வருமானமென்ன. நீங்கள் சேர்த்துவைத்த முத லென்ன, அவ்விரு பொருள்களையும் கணக்கிட்டால் நமது கடனுக் குச் சரியாகின்றபடியால் அதைக் கொடுத்து விடலாமே என்று தீன தயாளு தனது சிறு தாயைக் கேட்டானேயல்லாமல் வேறல்ல. அவன் கெட்டுத் தான் வாழவேண்டுமென்று கெட்ட எண்ணங்கொண் டிருந்த காந்தி மனத்தில் அவ்வண்ணம் படவேயில்லை. அவள் மூன்றுநாள் இரையெடாமலிருக்குஞ் சருப்பம் சீறுவதுபோலச் சீறி “அடா ! தீனதயாளு, நீ இவ்வளவு மோசக்காரன் என்று நானிது வரையில் எண்ணவேயில்லை! அன்றையத்தினம் நான் எப்பொழுது கையெழுத்துப் போட்டேனோ அப்பொழுதே மோசம் போனேன்! ஒன்றும் தெரியாத கைம்பெண்ணை, உன்னை நான் கைவிடாமல் காப் பாற்றுகின்றேன் என்று ஆசை வார்த்தை சொல்லிவிட்டு நீ என்னை இவ்வண்ணம் நடுத்தெருவில் விடுவாயென்று நான் எண்ணவே யில்லை. உன் செலவு ஆயிரமிருக்கலாம். எனக்கென்ன. எனக்கு நீ வழக்கம்போல் கொடுக்க வேண்டிய ரூபாயைக் கொடுத்து விட வேண்டாமா? உனக்குச் சம்பளம் 20-ரூபா குறைச்சல் என்று நீ நினைத்துக்கொள்ள வேண்டாமா? நல்லது உன் சொந்தத் தாய் கேட்டிருந்தால் நீ மாட்டேன் என்பாயா? மாந்திக்குக் கலியாணம் உன்னை யார் பண்ணச் சொன்னாள்? என் குழந்தையின் அழகைக் கண்டு எவனாவது ஒருவன் 1000, 2000 கொடுத்துக் கலியாணம் செய்துகொண்டு போகானா? என் பணம் ரூபா 20 எனக்கு வந்தா லொழிய நான் ஜலங்கூட பானம் பண்ணேன்” என்றாள். 

தீனதயாளுவோ வெகு மானி. தன்னைப் பார்த்துத் தனது சிறு தாயார் மனமிரங்க வேண்டியிருக்க, தான் மாந்திக்கு நல்லவிடத் தில் விவாகம் பண்ணிவைத்ததைப் பற்றி மெச்சவேண்டி யிருக்க, காந்தி யிவ்வாறு தன்னைக் கடிந்து பேசினதைப் பற்றியும் தனக்குச் செல்லவேண்டிய ரூபா 20 கிடைத்தாலொழிய ஜலபானம் பண்ணு கின்றதில்லை என்று வீம்பாடுவதைப்பற்றியும் தீனதயாளு வெகு விசனமடைந்தான். ஈசா!சாதுக்கள் மனத்தை தாமரை இலையில் விழுந்த நீர்த்துளியை ஆட்டிவைப்பதுபோல் நீ ஆட்டிவைப்பது நியாயமா என்று பதைத்தான். “அம்மா, நானே சொந்தத்தாயின் பாக்கியத்தின் பெருமையற்ற அனாதை. தாயின் இயல்பென்று சொல்லப்படும் குணத்தைப் புஸ்தகங்களில் சொல்லி யிருப்பதை படித்ததாலும், எனது நண்பர்கள் வீட்டில் அவர்கள் தாயார்கள் அவர்களுக்கு நடந்துகொள்ளும் நீதிகளாலும் அறிந்தவன். எனது தாய் கேட்டால் நான் கொடுக்காமலிருப்பேனா என்றீர்களே. நான் தங்களை என் தாயைவிட வேறாக ஒரு நிமிஷமாவது பாவித்தவனே யல்லன். தாங்கள் என்னை இன்றையத்தினம் கடிந்து பேசினது போல் என் தாயாக விருந்தால் தாங்கள் ஒரு பொழுதும் பேசி யிருக்கவே மாட்டீர்கள். நானறிந்த மட்டில் மாந்திக்கு இப் பொழுது கிடைத்த புருஷன்போல் என்னதான் நாம் சிரமப்பட்டா லும் கிடைக்காது. 

“கடனுக்கு ரூபா 20, தங்களுக்கு ரூபா 20, ஆக ரூபா 40-நான் மாதம் மாதம் கொடுத்துவிட்டால் அப்புறம் 10- ரூபாயில் 12 பெயர் கள் இவ்வூரில் எவ்விதமாகப் பிழைக்கமுடியும் ?. நான் சம்பளம் வாங்கித் தங்கள் கையில் அப்படியே கொண்டுவந்து கொடுக் கிறேன். உங்கள் கையாலேயே நீங்கள் செலவிட்டு மிகுந்ததை எடுத்துக்கொள்ளுங்கள்!” என்றான். 

சணற்கால் ஸ்வாமிபோகத்தை மறுபடி எடுத்துப் பேசினால் காந்தி ஒருகால் இன்னுமதிகமாகக் கோபிப்பாள் என்று அப்பேச்சை விட்டுவிட்டான். காந்தியோ கையாந்தகரையின் உபதேசம் பெற்று வந்தவள். தீனதயாளு என்ன நயந்து சொல்லியும் அவள் காது களில் ஒன்றுமேறவேயில்லை. வழக்கம்போல் தனக்குக் கிடைக்க வேண்டிய 20-ரூபா கிடைத்தே தீரவேண்டுமென்று பிடிவாதம் பிடித்தாள். சிறிது இணங்குவதுபோல் அன்றையத்தினம் விட் டுக் கொடுத்தாள். மாந்திக்குக் கலியாண காலத்தில் செய்யப்பட்ட நகைகளைப் பார்த்து, இது குறைவு, அது தாழ்வு, என்று குற்றங் கண்டுபிடிக்கலானாள். எல்லா விஷயத்திலும் தீனதயாளு தன்னை வஞ்சிப்பதாக வெளியிட்டுச் சொல்லத் தொடங்கினாள். உள்ளுக் குள் என்ன விருந்தபோதிலும் அதுவரையில் வெளிக்கு ஏககுடும்ப மாக விளங்கிய அக்குடும்பம் காந்தி சணற்கால் போய் திரும்பி வந் தது முதல் சண்டையும் சச்சரவுமாக பார்ப்பவர்கள் பரிதாபப் படும் படியாயிற்று. புன்னை பாங்கில் பணம் பதுக்கி வைத்துக்கொண்டு தீனதயாளு சங்குவை வஞ்சிப்பதாகவும் ஏற்கனவே சங்கு கார்டிய னாகத் தன்னைப் பண்ணிக் கபடமாகக் கையெழுத்து வாங்கி நிலங் களை ஒன்றுக்குப் பாதியாய் தீனதயாளு விற்றதாகவும் காந்தி பல பந்துக்களிடம் சொல்ல ஆரம்பித்தாள். உத்தியோக முறைமை யில் பொழுது புகுந்து 5-நாழிகை வரையில் ஏணிவாளனிடம் படாதபாடு பட்டுத் தீனதயாளு வீடுவந்தால் வீட்டிலுமவனுக்கு அவஸ்தை ஸகிக்க முடியவில்லை. சண்டை சச்சரவில்லாத இரவே யில்லை. நமது வீடு சாதாரண ஜனங்கள் வீடுபோலாயிற்றே என்று தீனதயாளு வருந்துவான். சங்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒரு புதுச் சட்டை ஒரு புதுவஸ்திரம் எடுத்துக்கொண்டு வந்து அது தனக்கு வேண்டும், வாங்கிக்கொடு என்பான். இப்பொழுது கையில் பண மில்லை நாளைக்குப் பார்த்துக்கொள்ளுவோம் என்றால் அவனுக்குக் கோபம் வந்து விடும். தன் குடும்பம் மூழ்கிப் போகலாகாது என்ற நல்ல எண்ணத்தால் தான் நிலத்தை விற்றுக் கடனை யடைத்ததைக் காந்தி கைம்பெண்ணை வஞ்சித்துக் கையொப்பம் வாங்கினதாகக் கரு தினாளே என்று தீனதயாளு நினைத்து நினைத்துவருந்தினான். எவ்வள வுக் கெவ்வளவு ஒற்றுமையாக விருந்து குடித்தனத்தை அழகாகக் கொண்டுபோகவேண்டும் என்று அவன் நினைத்தானோ, அவ்வள வுக் கவ்வளவு அவன் கோழை மனத்தைக் கண்டு காந்தி அவனிடம் பற்றிக்கொள்ள வேண்டியதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று ஏற்படுத்திக்கொண்டாள். இவ்வித பந்துத்துவம் எத்தனை நாள் நிற்கும். தீனதயாளுவின் ஜனனமே காந்தியையும் அவளுடைய குழந்தைகளையும் காப்பாற்றுவதற்கென்று அவள் நினைத்துவந்தாளே யன்றி அந்தத் தீனதயாளுவுக்குக் குஞ்சு குழந்தைகளிருப்பதைப் பற்றி அவள் சிறிதேனும் கவலையே படவில்லை. தீனதயாளு உத்தி யோக முறைமையி லிருக்கப்பட்டவனாயிற்றே, அவன் மானியே என்று மவள் சிறிதேனும் உத்தேசிக்கவேயில்லை. 

இவ்வாறு இக்குடும்பம் சொற்பம் கலைந்து நிற்கும் சமயத்தில் இக்குடும்ப சச்சரவை விருத்தி பண்ணிவைக்கவே கையாந்தகரை புன்னைவந்து சேர்ந்தான். அவன் வெகு கலகக்காரன். பார்வை க்கு வெகு ஆசாரசீலனென்றும் ருத்திராக்ஷம் அணிவதில் கொஞ்ச மேனும் தப்புகிறதில்லை என்றும் நாம் முன்னமே சொல்லியிருக்கின் றோம். அவன் இரண்டு வருஷமாய்க் காந்தி அனுப்பிய பணத்தை யும் ஸ்வாமி போகத்தையும் ஜரித்துக் கொண்டவனாகையால் ஒரு கால் தனது உண்மையான குணத்தை அறிந்து கொண்டு காந்தி எங்கு அனுப்பும் தொகையை நிறுத்தி விடுகின்றாளோ என்று பய ந்துவிட்டான். தீனதயாளு ஒருகால் கணக்கு கேட்டு எங்கு தான் மோசக்காரன் என்பதை காந்திக்குக் காட்டிவிடுவானோ என்றும் சொற்பம் அஞ்சலானான். இக்காரணங்களை உத்தேசித்து தான் சமீபத்திலிருந்து காந்திக்கு உபதேசம் பண்ணினா லொழிய தனது ஜீவனம் போய்விடும் என்றபயம் அவன் மனத்தில் உதித்தது. அன் றியும் அவன் காந்தியின் நன்மையையே நாடிவந்தவன் போல் தான் சங்குவுக்கு நல்லவிடத்தில் ஒருபெண் திட்டம் செய்து வந்ததாகவும் சொன்னான். தனது மகனுக்கு நல்லவிடம் பார்த்து விவாகமுகூர்த் தம் வைத்துவந்ததாக கையாந்தகரை சொல்லவே காந்திக்கு வெகு ஆனந்தம் உண்டாயிற்று. அந்த விஷயமாய் தீனதயாளு ஒருவிதக் கவலையுமில்லாம லிருந்ததையும், கையாந்தகரை வெகுவித முயற்சி கள் செய்து பெண்தேடி வந்ததையும் நினைத்து நினைத்து தனது தங்கை புருஷனே தனக்கு வெகு அனுகூலமான பந்து என்று தனது மனத்துள் நிச்சயித்தாள். இப்பெண் யார் என்று விசாரிக்க லாம். இக்கையாந்த கரைக்கு வாணாந்தகரை என்றொரு தம்பி அவனும் கையாந்தகரை போலவே பிழைக்க வழியற்றவன். அவனுக்கு ஒருபெண் அழகாகவே யிருக்கும். ஆனால் அவள் தாயாருக்குக் குறளியென்று பெயராகையால் பெண் ஒரு முழம் உயரந்தா னிருக்கும். இப்பெண்ணை சங்குவுக்குக் கையாந்தகரை தீர்மானித்ததின் கருத்து தனது தம்பி வாணாந்தகரையையும் தன் டன் சேர்த்து வைத்துக்கொள்ளும் பொருட்டு, இவ்வளவு செலவுக்கும் சணற்கால் நிலம் போதாதே. தீனதாளுவிடம் இன் னும் 5,10-அதிகமாக வாங்கிக்கொள்ள காந்தியை ஏவினால் அவள் அப்படியே செய்வாள். அவனும் கொடுப்பான் என்று அவனுக்குத் தோன்றிற்று. எப்பொழுது இந்த எண்ணங்கள் வந்தனவோ அப்பொழுதே அவன் புறப்பட்டு புன்னை வந்து சேர்ந்தான். 

தனது சிறுதாயார் காந்தியின் சமீப பந்துவென்ற காரணத் தால் தீனதயாளு அவனை வெகு அன்புடன் உபசரித்தான். அதிக ஆசாரக்காரனாகையால் அவன் புன்னைமா நகரத்திலுள்ள பெயர் களைப் பற்றியும் அவ்விடததிய ஆசாரத்தைப் பற்றியும் தூஷித்துப் பேசலானான். 

சையாந்தகரை – என்ன! இந்த ஊரில் என்ன அக்கிரமம். பையன்கள் ஒருவரும் சந்தியாவந்தனமே பண்ணுகின்றதில்லை. நம்மூர் பையன் சுப்பராயன அடுத்த தெருவில் சுக்கிராச்சாரி ஓட லில் சாப்பிடுகிறான். அவனைப் பார்க்கப்போனேன். போட்ட சட்டை கழற்றாமல் இலையில் வந்து எல்லாப் பையன்களுடனும் உட்காருகின்றான். நெற்றியில் விபூதி என்பதே டையாது. என்ன அக்கிரமம்! என்ன அநியாயம்!! 

தீனதயாளு – பெரிய பட்டணங்களில் அப்படித்தான்.அதனால் பிசகாக நீங்கள் எண்ணவேண்டாம். எல்லாரும் சிறுபையன்கள். இப்பொழுது அப்படியிருந்து விட்டுக் கடைசியாக தாங்கள் வேலை களில் செல்லும் காலத்தில் வெகு ஆசார சீலர்களாய் விடுவார்கள். 

சையாந்தகரை – ஒவ்வொருவனுக்கும் மூலகச்சம் ஒருமுழம் பின்தொங்குகின்றதே. அல்லது குடுமி என்ன பாவம் பண்ணிற்று. பாதிப்பையன்கள் குடுமியைக் கத்தரித்து விட்டுக்கொண்டிருக்கிறார் கள். பாதிப்பையன்கள் நேராக்குடுமி வைத்திருக்கின்றார்கள். 

தீனதயாளு-ஐயா! குடுமியிலும் வேஷ்டியிலும் என்னவிருக் கின்றது. ஏதோ சிறு பையன்கள்! வென் புத்திக்கு எது அழ கென்று தோன்றுகின்றதோ அதைச் செய்து கொள்ளுகிறான். இமமாதிரி வெளித்தோற்றத்தால் என்ன கெடுதி. ஏதோ இரண் டொரு வருஷம் அப்பையன்களிவ்வாறு இருந்து விட்டு அப்புறம் ஒருவித ஸ்தைரியநதுக்கு வந்து விடுவார்கள். இது ஒரு பிரமாதமன்று. 

சையாந்தகரை – என்ன ஐயா! எல்லாரும் அர்த்த க்ஷெளரமா? ஒருவனாவது கழுத்துக்குக்கீழ் பண்ணிக் கொள்ளவில்லையே. 

தீனதயாளு – அதனால் என்ன பிசகு. குழந்தைகள் தானே. அவர்கள் இன்னும் சொற்பகாலம் போனால் சரியாய் நடப்பார்கள். பட்டணத்திலிருக்கும் நன்மை வெளியில் கிடையாது. இவ்விடத்தில் அடுத்த வீட்டுக்காரன் இன்னாரென்று நமக்குத் தெரியாது. அவன் வன், அவனவன் வேலையைப் பார்த்துக்கொண்டு போவான். ஒவ் வொருவனும் ஒரு தொழிலில் சுறுசுறுப்பாகத் தனது காலத்தைக் கழிப்பான். பிறர் வீட்டுச் சமாசாரம் பட்டணத்துக்காரனுக்குத் தெரியவே தெரியாது. கிராமத்தில் சிலர் கழுததில் போட்டிருப் பது கௌரீசங்கர ருத்திராக்ஷந்தான், ஆனாலவர்களில் சிலர் எத் மோசம் தனை பெயர்களுடைய பணத்தை எடுத்துக்கொண்டு பண்ணியிருக்கிறார்கள். மதகடி கருணத்துக்கும் அவருடைய நாட் டுப் பெண்ணுக்கும் இருக்கும் உறவின் முறை எல்லாருமறிந்த விஷயம். பிரசித்தமாகச் சொல்லிக்கொள்ளுகிறார்கள். கிராமங் களில் மேல் ஆசாரம் அதிகம் வம்பில் ஊரில் பெரியமிராசுதார் தட்டுக்கூடை ஐயரிருக்கின்றார். பகல் காலத்திலேயும் அவர் அவ்வூர் பாகவதருடைய இளைய ஸம்ஸாரத்திடம் உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். வெகு தர்மிஷ்டர்தான். போன வருஷம் அவர் வாஜபேயம் என்ற யாகத்தை வெகு அழகாக நடத்தினார். வந்தவர்களுக்கு 1.ரூ பூரி தக்ஷணை கொடுத்தார். ரூபா 10,000- செலவிட்டார். அதனால் பாகவதருடைய ஸம்ஸாரத்தினிடம் அவ ரிருக்கும் பாவம் தொலையுமா? கிராமத்தையும் நகரத்தையும் சீர் தூக்கிப்பார்க்கின் இப்பொழு து கிராமவாஸம் கெட்டிருப்பதுபோல் பட்டணவாஸம் கெடவில்லை.ஏதோ பள்ளிக்கூடத்துப் பையன் கள் மூலைகச்சம் கட்டுகிறதாலும்,அர்த்த க்ஷௌரம் பண்ணிக் கொள்ளுவதாலும் என்ன முழுகிப்போயிற்று என்றார். 

கையாந்தகரைக்கு பதில் பேச வழியில்லை. ஏனெனில் தீனதயாளு எடுத்த உபமானங்கள் ஒவ்வொன்றும் இல்லை யென்று சொல்லக்கூடாத உபமானங்கள். அன்றியும் அவன் சில கிராமத் தாரைப்பற்றிச் சொன்னதை “நீங்களும் கழுத்தில் ருத்திராக்ஷ மணிந்திருக்கின்றீர்களே, காந்தி யனுப்பிய பொருளை மோசமின்றி அவளிடம் கொடுத்தீர்களா” என்று தீனதயாளு தன்னைக் குறித் துக்கேட்பது போல் கருதினான். இரண்டொரு நாள் சென்றன. தீனதயாளுவின் நவின் உண்மையான ஸ்திதியை கையாந்தகரை கண்டு கொண்டான். வாஸ்தவம் தனது உள்ளத்தில் விளங்கியபோதிலும் அதைக் காந்தியிடஞ் சொல்லாமல் புன்னை பாங்கியில் 10,000-ரூபா தீனதயாளு போட்டிருப்பதாகவே அவள் காதில் ஓதிவந்தான். அன்றியும் கையாந்தகரை மனதில் பெரும் பயம் ஒன்று தோன்றி விட்டது. தீனதயாளுவினுடைய செலவு அவன் வருமானத்துக்கு மேலாகவிருந்தது. அதை அடக்கமுடியாமல் அடிக்கடி சிறு கடன் கள் அவன் வாங்கியிருப்பதை கையாந்தகரை தெரிந்து கொண் டான். அக வ்வாறு கடனை வளரவிட்டால் கடைசியாக குடும்ப சொத்தை அக்கடன் தொடும், நாம் பிழைக்கும் வழியும் போய் விடும் என்று கையாந்தகரை அஞ்சி எப்டியாவது சணற்காலில் மிகுந்திருக்கும் சொத்துடன் காந்தி தனிமையில் சங்குவுக் கென்று பாகம் பிரித்துக்கொண்டு போக வேண்டிய வழியை அவளுக்கு உபதேசிக்கலானான். தனது பிள்ளைக்குப் பெண் பார்த்து வந்த அப்பாதகன் சொன்ன பேச்சுகள் எல்லாம் அவளுக்கு வெகு பத்திய மாக அப்பொழுது விளங்கிற்று. அவன் ஏற்கனவே செய்த மோசம் அவள் மனதில் ஏறவேயில்லை. 

இப்படி யிருக்கையில் ஒரு நாள் காந்தி தீனதயாளு கச்சேரிக் குப்போகாமலிருக்கப்பார்த்து அவனிடம் வந்து “நீயோ உன் குழந் தைகளிடம் விசுவாஸமாயும் உன் குழந்கைகளுக்கு உயர்ந்த நகை கள் பண்ணுவதும், சிற்றாடை, வேஷ்டி முதலியவைகள் வாங்கு வதுமாக இருக்கின்றாய். ஏதோ உலகம் நிந்திக்குமே என்று மாந் திக்கு ஒரு விவாகம் பண்ணிவைத்தாய்! சங்குவுக்கு என் கலி யாணம் பண்ணவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், என்று சாக்குப்போக்குச் சொல்லுகிறாய். இப்படியே நான் எத்தனை நாளிருக்கிறது. என் குழந்தைகளுக்கு இனி வழி என்ன? நீதான் கதி என்று நானிதுவரையில் நம்பியிருந்தேன். இப்பொழுது மாதம் 20-ரூபா கொடுப்பகையும் நிறுத்திவிட்டாய். நாளை உனது பெண்சாதி சோறுபோடுவதையும் நிறுத்தி விடுவாள். எப்பொழு தும் நீ மோசம் பண்ணிக்கொண்டே யிருக்கின்றாய். இனி நான் விழித்துக் கொண்டேன். இனி என்னால் உன்னிட மிருக்க முடியாது. என்ன ஏற்பாடுண்டோ அதைச் செய்து என்னை நல்வழி யாய் ஒதுக்கி விட்டால் அதே பெரும் புண்ணியம்” என்றாள். 

இப்படிக் காந்தி சொன்னது தீனதயாளுவின் மனத்தை ராம பாணம் பிளப்பதுபோல் பிளந்தது. இம்மாதிரி வரப்போகிறதென் பதை அவன் எதிர்பாராதவன் என்பவனல்லன். ஏனெனில் அக் காலத்தில் அவர்கள் செய்த அக்கிரமங்கள் அக்குடும்பம் அப்படியே வெகு நாள் நடக்கும் என்று எண்ணவிடமில்லாமல் இருந்தது. தனது தந்தை தேகவியோகமாய் விட்ட நாலைந்து வருஷகாலம் எவ்வளவோ தன்னால் இயன்றமட்டும் வெகு அன்பும் ஆதரவுமாக தீனதயாளு அக்குடும்பத்தைத் தாங்கி வந்தான். அவன் என்ன செய்தாலும் செய்யவில்லை யென்ற சொல்லும் அவன் என்ன கொடுத்தாலும் கொடுக்கவில்லையென்ற சொல்லும் மேலிட்டு நின்றன. காந்தியின் குணம் அவன் குணத்துக்குச் சிறிதேனும் ஒவ்வாததாக விருந்தது. தனக்கு நன்மை நினைப்பவர்கள் இன்னாரென்ற பகுத்தறிவற்றவளாய் அவளிருந்தாள். கையாந்தகரை தான் தனக்கு வேண்டிய பந்து என்று அவள் கருதி விட்டாள். தனக்கு ஒரு நாட்டுப் பெண்ணை அமர்த்தி வந்தவனை பெரும்பாலும் பெண்கள் அவ்வாறு தான் நினைப்பார்கள். தீனதயாளுவுக்கும் தனது வருமானத்திற்குமேல் செலவாக விருந்துகொண்டு கடன் ஆயிரத்துக்கு மேலேறினபடியால் இனி ஏதாவது செய்துதான் முடிக்கவேண்டுமென்ற எண்ணம் தோன்றிவிட்டது. 

வியவகாரம் என்று வந்துவிடவே கையாந்தகரையைத் தீனதயாளு கணக்குக் கொடுக்கும்படி கேட்டான். அவன் ஒருவிதத்தி லாவது சரியாகக் கணக்குக் கொடுக்கவில்லை. அவன் அது வரையில் பாசாங்கு கு செய்து வந்த தெல்லாம் பொய்யாய் முடிந்தது. அப் பொழுதாவது அவன் குணம் காந்திக்கு வெளியாகவில்லை. பெண் அமர்த்திய பெருமையொன்றே மேல் நோக்கி நின்றது. உலக வழக் கப்படி ஆளுக்கு சமபாகம் என்றும் சணற்காலிலுள்ள வீட்டிலும் நிலத்திலும் தனக்கு பாதி யென்றும் தான் தனது தந்தை போன பிறகு பட்டகடன் குடும்பக்கடனாக விருந்த போதிலும் அதைத் தான்மட்டும் ஒப்புக் கொள்ளுவதாகவும் தீனதயாளு சொன்னான். அப்பொழுது அநியாயமாய் என் தலையில் கற்போட்டு கையெழுத்து வாங்கினாயே! அம்மாதிரி இந்த சமயத்திலும் என்னை ஏமாற்ற முடி யாது” என்று காந்தி சொல்லி, மிழ்ந்திருந்த வீட்டிலும் நிலத்திலும் தீனதயாளுவுக்கு ஒரு தூசு கிடைக்காது. அதுவரையில் நடந்த மோசம் நடந்து விட்டது. மிகுந்திருந்ததை அப்படியே மனோராஜி யில் தனக்கு ஒப்பித்துவிட்டு தீனதயாளு ஒதுங்கவேண்டும். இல் லாவிடில் தான் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு பிராணனை விடுவேன், என்று காந்தி நீலியினாட்டமாடினாள். சங்குவும் தான் மைனர் வயது நீங்கி மேஜராய் விட்டபடியால் தனது தாயினிடம் நின்று கொண்டு அவ்வாறுதான் செய்யவேண்டு மென்று ஒங்கிச் சொன்னான். கையாந்தகரை இவ்விருகட்சிகளுக்கும் நியாயமெடுத்துப் பேசுகிறவண் ணம் தீனதயாளுவைப் பார்த்து ‘இவ்விருவர்கள் பேசுவது நியாயத்தை ஒத்திருக்கின்றது என்று ஒருவரும் செல்லமாட்டார்கள். ஒரு மனிதனுக்கு இரண்டுபுத்திரர்கள் என்றால் அவனுடைய ஆஸ்தி முத லியவைகளுக்கு அவ்விருவரும் பாத்தியமுள்ளவர்களாகின்றார்கள். ஒருசாண் நிலமாயிருந்தாலும் ஆளுக்கு அரைசாண் தான்வரும். ஒரு ஓட்டை வீடாயிருந்தாலும் ஆளுக்கு அரை ஓட்டை தான் உண்டு. ஆகையாலிவர்கள் சொல்லுவது ஒரு பொழுதும் நியாயமில்லை. ஆனால் இந்த விஷயத்தில் தாங்கள் ஒரு சங்கதி யோசித்துப் பார்க்க வேண் டும். பெரியவர்களிருந்த காலத்தில் காந்தி, சங்கு, மாந்தி யிவர்களி ருந்த பெருமை தங்களுக்குத் தெரியும். அப்படியே இதுவரை யில் தாங்களும் ஏதோ உலகத்தார் எல்லாரும் தங்களைப் புகழும்படி யாகவே நடத்தி விட்டீர்கள். தாங்களோ இப்பொழுது 4- காசு சம் தித்துப் புசிக்கும் பதவியிலிருக்கிறீர்கள். இவர்கள் இன்றைக் கெல்லாம் சணற்கால் நிலத்திலுண்டாகும் மாசூலைக் கொண்டு தானே ஜீவிக்க வேண்டும். சங்குவோ இக்காலத்திய பிள்ளைகளைப்போல் படிப்பால் சம்பாதிப்பவனாகக் காணப்படவில்லை. இவைகளை யெல் லாம் யோசித்து நல்ல ஏற்பாடு ஒன்றை தாங்கள் செய்தாற்றான் அழகாகவிருக்கும்” என்றான். 

தீனதயாளுவுக்கு வந்த கோபம் கணக்கில்லை. விசேஷமாக அதிகக் கோபம் வராதவர்களுக்குக் கோபம் வந்து விட்டாலதை யடக்குவது வெகு கஷ்டம். என்ன பண்ணுவான்! கையந்தகரை நியாயமானவன் என்று பெயரும் புகழும் பெற்றிருப்பானேயானா லவனிடம் தீனதயாளு கோபிக்கவே மாட்டான். ஒருவித நற்குண முமில்லாத போக்கிலி தனக்கு தர்மோபதேசம் பண்ணத் துணிந்த தானது தீனதயாளுவுக்குப் பொறுக்கவில்லை. “ஐயா, கையாந்தகரை, உமக்கும் நமக்கும் ஒருவித பாத்தியமுமில்லை. நீர் நியாயங்களைக் கற்றறிந்தவருமல்லர். கற்று அறியாமலே சில நியாயப்படி நடக்க லாம். நீர் கொடுத்த கணக்கால் நியாயப்படி நடக்கப்பட்டவருமல்லர் என்றும் ஏற்பட்டிருக்கின்றது. நீர் உமது வாயை மூடலாம். உம்மை நான் புத்தி கேட்டால் அப்பொழுது சொல்லலாம்” என்றான். அவன் முகத்திலப்பொழுது இருந்த கோபக்குறியும் அவன் பார்த்த நோக்கமும் அவன் மனத்தில் சொல்லவேண்டுமென்று இருந்த பல சங்கதிகளை அவன் வெளிவிட்டுச் சொல்லாமல் மறைத்துக் கொண் டான் என்பதை வெளியிட்டன. 

என் தங்கைப்புருஷனிவர் என்று தெரிந்தும் உமக்கும் நமக் கும் என்ன பாத்தியம் என்று தீனதயாளு கேட்டானே! இப்படித் தான் எல்லாரையும் விலக்குகின்றான்! என்று காந்தி குறைந்து கொண்டாளே யல்லாமல் கையாந்தகரை தன்னைச் செய்த மோச த்தை அவள் அறிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய நோக்கத் தைத் தீனதயாளு அறிந்துகொண்டான். இனிதான் பல வார்த் தைகள் பேசி மனமிழப்பதால் ஆகும் பயன் ஒன்றுமில்லை என்பதும் அவனுக்கு நன்றாகத் தோன்றிற்று. அவன் பைத்தியக்காரன் என்று அவனுடைய சிறிய தாயார் எண்ணி யிருந்த போதிலும், அக் காரணத்தைக் கொண்டே மாதம் மாதம் அவனிடம் பொருள் கைப் பற்றி யிருந்த போதிலும், அவன் பைத்தியக்காரனல்லன். வெகு கம்பீர குணமுள்ளவன். தனது சிறிய தாயாருக்கு தான் கொடுக்கப் பாத்தியப்பட்டவன். அவளப் பொருளை தனது கையில் வைத்துக் கொண்டு தனது குழந்தைகளுக்கு உபயோகிப்பாள் என்று எண் ணங்கொண்டு கொடுத்தவனே யல்லாது வேறல்ல. பாகவிஷயத் தில் அவனது தாற்பறிய மெல்லாம் தனது தந்தை அவ்வளவு சிர மப்பட்டுக் கட்டிய வீட்டில் தனக்கொரு பாகம் கிடைத்தால் அதை அவர் நினைப்பாக வைத்துக் கொள்ளலாம், என்று கருதினான். காந் தியும் சங்குவும் பிடிவாதம் பிடிக்கவே தீனதயாளு எல்லாவற்றையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மனோராசியாக விட்டு அந் தப்படி சீட்டுப்பண்ணிக் கொடுத்து சர்க்கார் கச்சேரியில் பதிவு செய்தும் அளித்தான். நாமும் குடும்பிகளாயிற்றே! நமக்கும் அதி கக் குழந்தைகளிருக்கின்றனவே! என்று தீனதயாளுவின் மனைவி கொஞ்சம் உருத்தப்பட்டுப் பார்த்தாள். எல்லாவற்றிற்கும் நம்மைப் படைத்த ஈசனொருவ னிருக்கின்றான். தர்மத்துக்கு ஒரு நாளும் குறைவு வராது, நமது காலம் இப்படியே யிராது, என்று அக்காலத் துக்குத் தக்கபடி ஏதோ ஒரு விதமாகத் தைரியம் சொல்லி அவளைத் தீனதயாளு சம்மதிக்கச் செய்தான். 

தன்னிடம் தனது தகப்பனாருடைய தமக்கைகளான இரண்டு மூன்று கிழங்களி ருந்தனவே; அவர்களிலிரண்டு பெயர்கள் அதிக வயது சென்றவர்களாக விருந்தார்கள். அவர்களுக்கு அந்திய காலத்தில் புன்னையில் வசிக்க அபிப்பிராயமில்லா மலிருந்தது. தேக வியோகமாகும்முன் நதிக்கரையி லிருந்து கொண்டு ஸ்நானங்கள் செய்து ஸ்வாமி தர்சனம் பண்ணிவிட் டுப் பிராணனை விட்டால் பெரும்பலன் என்று அவர்கள் கருத்துக் கொண்டிருந்தார்கள். அதைத தான் கெடுப்பானேன் என்று தீனத யாளு சணற்காலில் சங்குவுக்குத் தான் கொடுத்த வீட்டில் ஒரு என்று அறைமட்டும் அக்கிழங்கள் வசிக்கக் கொடுக்கவேண்டும் தனது சிறுதாயாரிடமும் தம்பியிடமும் கேட்டுக்கொண்டான் அவர்கள் தங்கள் கோரிக்கைப்படி எல்லாம் நடந்தபடியால் அதற்கு என்ன ஆக்ஷேபம் என்று வெகு சந்தோஷமாகச் சொன்னார்கள் வீட்டில் ஒரு அறையில் மட்டில் வசிக்க அவர்கள் இடங்கொடுத்தார். களேயன்றி அவ்விரு கிழங்களுடைய போஷணைக்குத் தீனதயாளு தானே பணமனுப்புவதாக ஒப்புக்கொண்டான். இவ்விதமாக இவ்விருகிழங்கள் சணறகாலில் போய் மறுபடியும் வசிப்பது தீனதயாளு வுக்கு மனமேயில்லை. ஆனாலிவர்கள் அந்தியகாலத்தில் வேண்டிக் கொண்டதைத் தடுக்கவும் அவனுக்கு மனமில்லை. எப்படியும் காந் தியின் கைக்கீழ் புசிக்காமல் அவர்கள் தனிக்குடித்தன மிருப்பார். களாகையால் ஒருவிதக் கெடுதலு மிராதென்று ஒரு சமயத்தில் எண்ணினான். ஒரு சமயத்தில் என்ன விருந்தாலும் மறுபடி அவர்கள் சணற்கால்போவது உசிதமில்லை என்று நினைத்தான், கடைசியாய் அந்தியகாலத்தில் அவர்கள் வேண்டுகோளைத் தடுக்க மனமில்லாமல் அவர்களை சணற்காலுக்கனுப்பினான். கையாந்தகரை தனது கருத்து முற்றிலும் நியைவேறிய செருக்குடன் புன்னையை விட்டுப் புறப்பட்டான். காந்தியிடம் அவள் தனது புத்தியால் பிழைக்கவேண்டும் என்று சொல்லியும் சங்குவிடம் அவன் தனது தந்தையின் பெயருக்குக் குறைவு வராமல் நடக்கவேண்டும் என்று உபதேசித்தும் தீனதயாளு அவர்களை ஊருக்கனுப்பினான். மாந்தி மட்டும் இதனுடன் நாங்கள் மரியாதையாக வாழுங்காலம் முடிந்த தென்று சொல்லிக்கொண்டு வண்டி ஏறினாள்.

– தொடரும்…

– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.

– தீனதயாளு (நாவல்), முதற் பதிப்பு: 1902, ஐந்தாம் பதிப்பு: 1922, சுதேசமித்திரன் ஆபீஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *