தியாகத் தாயின் ஹஜ் பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 11,326 
 
 

அதிகாலை 5.00 மணியைத்தாண்ட, என்னங்க சுபஹுத் தொழுகைக்கும் பாங்கு கேட்டு முடிஞ்சிதிங்கோ, எழும்புங்கோ என்றவாறு தன் கணவன் அசனாரை படுக்கையில் இருந்து எழுப்பினார் பரீதா. இந்த நேரத்திற்குப் போனால்தான் 8 கி.மீற்றர் தூரத்திற்கு அப்பாலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று வெயில் ஏறுமுன்னர் ஒரு வண்டிலுக்கான விறகுக் கட்டைகளை எடுக்க முடியும்.

அசனார் பரம ஏழை. அவரிடமுள்ள சொத்துக்கள் என்றால் மாட்டு வண்டியொன்றும், ஒரு சோடி மாடுகளும்தான்.

வழமையாக மேலும் 4 வண்டிக்காரர்களுடன் சோர்ந்துதான் அசனார் இத்தொழிலுக்குச் செல்வார். பொதுவாக ஒரு கிழமையில் 3 தினங்கள் மட்டுமே இவ்வாறு செல்வார்கள். 3 ஆம் தரம் வரையும்தான் அசனார் பாடசாலையில் இருந்தார்.

அதன் பின்னர் தன் தந்தையுடன் சேர்ந்து காட்டுத் தொழிலையே செய்து வந்தார். காலங்கள் சில இவ்வாறு செல்ல அசனாரின் தந்தையும் காலமானார்.

அவரின் தொழில் நாடியாக இருந்த அந்த மாட்டு வண்டிலும் மாடுகளும் அசனாரின் கைக்கு மாறின. காட்டுத் தொழிலில் நல்ல அனுபவமுடையவனாக இருந்த அசானாரை சிறிய கடைக்காரனான கலந்தர் தன் மகள் பரீதாவுக்கு அவ்வூர் சாகிதாக திருமணம் செய்து வைத்தார்.

வறுமைதான் இல்லற வாழ்க்கைக்கு என்ன செய்யும். ஆண், பெண் என்று 2 வயது வித்தியாசத்தில் பிள்ளைகளாகக் கிடைத்தார்கள் அசனார் – பரீதா தம்பதிகளுக்கு.

நாங்கள்தான் கற்கவில்லை, எங்கள் பிள்ளைகளாவது கற்று தங்கள் தலையெழுத்தை நன்றாக அமைத்துக்கொள்ளட்டும் என்ற நல்மனதோடு பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் பிள்ளைகள் இருவரும் கல்வியில் ஆர்வமும், விருப்பமுமுடையவர்களாகக் காணப்பட்டார்கள்.

இவ்வாறு கல்வியில் காட்டும் ஆர்வத்தைக்கண்ட அன்சார் தம்பதிகள் மிகவும் மகிழ்வடைந்தார்கள். அந்த வேளையில்தான் காட்டுத் தொழில் செய்பவர்களை காடுகளுக்கு உள்ளே செல்லாவண்ணம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. அத்தியாவசியத் தேவைகளுக்குச் செல்வதாக இருந்தால் உரிய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும்.

இவ்வாறு அனுமதி பெறுவதில் விபரங்கள் தெரியாமல் இருக்கும் வண்டில் காரர்களுக்குப் பெரும் சங்கடமாகவே இருந்தது. இதனால் காடுகளுக்குள் வெகுதூரம் செல்லாமல், அன்சாருடன் மேலும் நால்வரும் அண்மையில் சென்றுதான் விறகுகள் எடுத்து வந்து விற்று வாழ்க்கையைப் போக்கிக் கொண்டிருந்தார்கள்.

அனேகமானோருக்கு விறகுகள் தேவைப்பட்டதால் வழமையாக அன்சாருடன் செல்லும் மேலும் நால்வரும் காட்டுப் பகுதிக்கு அண்மையை நாடிச் சென்றனர்.

ஏதோ ஒரு தெம்பு ஏற்படவே சற்று காட்டுக்கு உள்ளே சென்றார்கள். சென்ற சில நிமிடங்களில் துப்பாக்கிகளின் உறுமல்களுடன் இராணுவத்தினரின் பயங்கர தொனிகளும் கேட்டன.

விறகு எடுத்துக்கொண்டிருந்த வண்டிக்காரர்கள் ஐவரும் செய்வதறியாது திகைத்த வண்ணம் வண்டில் மாடுகளையெல்லாம் மறந்து உயிர் தப்பினால் போதும் என்று திசைகள் தெரியாமல் ஓடினார்கள். அப்போது அன்சார் மரக்குற்றியொன்றில் கால் தடுக்கப்பட்டு முகம் குப்புற விழுத்தார்.

அவரால் எழுந்திருக்க முயன்றும் முடியாமல் போயிற்று. அப்போரு எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அன்சாரின் தலையில் விழ யாஅல்லாஹ் என்ற வார்த்தைதான் அவரின் வாயிலிருந்து வந்த இறுதி வார்த்தைகளாகும்.

ஏனைய நால்வரும் வண்டில் மாடுகளை மட்டுமே இழந்து தங்களின் இருப்பிடங்களுக்கு ஓட்டமும், நடையுமாக வந்தடைந்தார்கள்.

ஆனால் வண்டில் மாடுகளுடன், கணவனையும் சேர்ந்து இழந்ததினால் மனைவி பரீதா அழுது துடித்தாள், துவண்டாள். போன உயிர் திரும்புமா! உயிரற்ற சடலத்தையாவது காணக்கிடைக்க வில்லையே என்று மனம் விம்மிக் கொண்டிருந்தாள் பரீதா.

ஏதோ ஒரு நிறுவனம் சிறு தொகைப் பணத்தைக் கொடுத்தது. அப்போது மகன் இல்காம் 9 ஆம் தரத்திலும், மகள் சியாமா 7 ஆம் தரத்திலும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இல்காமின் படிப்பு தானாகவே நின்றுவிட்டது. தங்கையாவது படிக்கட்டும் என்று இல்காம் சிறு சிறு கூலித் தொழில்களில் இறங்கினான்.

கடைசியாக பரீதாவின் தம்பியொருவர் இல்காமை நகரப் பகுதியில் பெரிய ஜவுளிக்கடையொன்றில் சேர்த்து விட்டார். பரீதாவும் இரண்டொரு வசதியானவர்களின் வீடுகளில் கூலிவேலைகள் செய்து அன்றாடம் வாழ்க்கையைப் போக்கிக் கொண்டிருந்தார்.

கெட்டிக்காரியான மகள் சியாமா க.பொ.த சாதாரண தர வகுப்பில் இருந்தாள். இவ்வருடம் பொதுப் பரீட்சை எழுதவுள்ளாள். அப்போது கண்டி மடவளையைச் சேர்ந்து மஸாகிர் கணிதப் பாடம் படிப்பித்துக் கெண்டிருந்தார். கெட்டிக்காரியும், அழகியுமாகத் திகழ்ந்த சியாமா மஸாகிரின் உள்ளத்தில் ஆழமாகப்பதிந்து விட்டாள்.

சியாமா இதைப்பற்றிச் சிந்திக்கவுமில்லை. அறிந்திருக்கவுமில்லை. சாதாரண தரப் பொதுப் பரீட்சை முடிவடைந்ததும், பரீதாவிடம் போய் தன் உள்ளத்தில் பதிந்திருந்த சியாமாவைத் திருமணம் செய்து தன் சொந்த இடத்திற்கே கொண்டு போகப்போவதாகச் சொல்லவே, தாய் பரீதாவும் தன் மகளின் நல்வாழ்வுக்காக சம்மதம் தெரிவித்தாள்.

எளிமையாகத் திருமணம் நடைபெற்று அன்றைய தினமே தன் சொந்த ஊருக்குக் கொண்டு சென்றான் சியமாவை மஸாகிர்.

பரீதா இடியப்பம் சுட்டு தன் வாழ்க்கையைப் போக்கிக் கொண்டிருந்தார். இல்காமும் இடைக்கிடை வந்து தாய் பரீதாவைப் பார்த்து பணமும் கொடுத்துச் சென்று கொண்டிருந்தான். தனிமைதான் அவளை வாட்டியது. இரு வருடங்கள் எப்படியோ ஓடி மறைந்தன. 3 தடவைகள் மகள் சியாவையும் பார்த்துவிட்டு வந்தாள் பரீதா.

ஒருநாள் இல்காம் வேலை செய்த கடையிலிருந்து வந்த அவன் வயதையொத்த ஒரு பையன் வந்து சொன்ன அந்தச் செய்தியைக் கேட்டுத் திகைத்துப் போனாள் பரீதா. இல்காமை ஐந்து தினங்களாகக் காணவில்லையாம். தாய் பரீதா அவள்தான் எங்கு போய்த் தேடுவாள். என்றாவது ஒரு நாள் வருவான் என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

இரண்டு நாட்கள் சென்றதும், விஷயமறிந்த மகள் சியாமாவும், மஸாகிரும் வந்து தாய் பரீதாவை தேற்றி விட்டுத் தங்கள் வீட்டில் வந்து இருக்குமாறு கேட்டும் பரீதா மறுத்து விட்டாள். நான் இங்கேயே ஒங்க வாப்பா வாழ்ந்த இடத்திலேயே இருந்து, வாப்பா போன இடத்திற்குத் தாம்மா போக விரும்புகிறேன் என்று சொல்லியனுப்பினாள் பரீதா.

இப்போது காலையும், மாலையும் ஓயாதவேலை பரீதாவுக்கு காலை நேரத்தில் 3 கடைகளுக்கு காலை உணவுக்காகவும், இரவு உணவுக்காக சில வாடிக்கையாளர்களுக்கும் இடியப்பம் கொடுக்க வேண்டும். இதனால் உதவிக்கு அடுத்த வீட்டு கைம்பெண்ணான சுபைதாவை வைத்துக் கொண்டார் பரீதா. அந்தப் பெண்ணுக்கும் ஏதோ பரீதாவினால் ?}(தி பயக்கத்தான் செய்தது.

சொல்லிக் கொள்ளாமல் 6 வருடங்கள் உருண்டோடின. அப்போது ஒருநாள் மாலை 4.00 மணியைத்தாண்டும் வேளையில் ஒரு வேன் பரீதாவின் வீட்டுக்கு முன்னால் வந்து நின்றது.

அதில் நாகரிகமான உடைகள் அணிந்த 2, 3 பெண் பிள்ளைகள் உட்பட மேலும் 4, 5 வாலிபர்களும் இருந்தார்கள். அதிலிருந்து ஒருவன் கீழே இறங்கியவனாக எல்லாம் 3 பிரயாண வேக்குகள் என்றதும், அவைகளை எடுத்துக் கொடுத்த பின்னர் அந்த வேன் சிட்டாய்ப் பறந்து சென்றது.

பரீதா வந்தவனையே பார்த்துக் கொண்டிருக்க அவன் தான் என்ன உம்மா அப்படிப் பார்க்கிaங்க! நான்தான் ஒங்க மகன் இல்காம் என்றான்.

இல்காமா! இந்தத் தாயை தனியா விட்டுட்டு இத்தனை வருஷமா ஏங்கவெச்சி எங்கடா மகனே போனாய்! இந்தப் பெத்தமனம் என்ன பாடுபட்டிச்சின்னு உனக்கெங்கடா தெரியப் போவுது, என்று வந்தவனைக் கட்டியணைத்து ஒரு வாட்டி கண்ணீர் சிந்தினாள் பரீதா. நான்தான் வந்திட்டேனே உம்மா அப்போ ஏன் அழுaங்க.

எங்கே உம்மா தங்கச்சி சியாமா! அந்தப் பிள்ளையாவது நல்லா வாழட்டும் என்று கண்டிபக்கமுள்ள ஒரு மாஸ்டர் தம்பிக்கு கல்யாணம் செஞ்சி குடுத்திட்டேன். ஏம்மா அவ்வளவு தூரத்திலே குடித்தீங்க. எல்லாம் நன்மைக்குத்தாண்டா இல்காம், நீ ஏன் கவலப்படுறே, அந்தப் புள்ளே நல்ல சந்தோஷமாய் இருக்கு.

உள்ளே வா என்று உட்காரவைத்து சுடச்சுடத் தேநீர் கொடுத்தவாறே, ஏன்டா மகனே பெத்த தாயிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் இவ்வளவு காலமா நீ எங்கேடா போய் இருந்தே.

மக்காவிலே, ஹஜ்ஜி செய்யப் போகிறவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டதாகவும், இலவசமாகவும் அனுப்புவதாகச் சொல்லவே நான்கைந்து பொடியன்மார்களுடன் சேர்ந்து நானும் போயிட்டேம்மா!

எங்கள் வேலையெல்லாம் முடிஞ்சபொறவு, அங்கிருந்து வேறு இடத்திற்கு பாஞ்சிபோய் பெரிய ஆட்டுப் பண்ணை ஒன்றிலே வேலை செஞ்சோம். ஹஜ்ஜி செய்யும் காலத்திலே ஹாஜிகளுக்கு குர்பான் கொடுக்க ஆடுகள் இந்தப் பண்ணையில் இருந்தும் லட்சக்கணக்காகக் குடுப்பார்கள் உம்மா. அந்தப் பண்ணைக்காரனும் பாத்தும் பாக்காமலும் பணத்தை அள்ளித்தந்தான்.

விஸா இல்லாமல் இருந்த எங்களை திடீரென்று பொலிஸ் காரர்கள் பாஞ்சி புடிச்சி அனுப்பிட்டாங்கம்மா. இல்லாட்டி நீங்க எங்கேம்மா என்னைப் பாக்கப்போaங்க, அப்படிச் செஞ்சது என்னமோ நல்லதாப் போச்சிடா மகனே, இல்லாட்டி நீ எங்கே என்னை வந்து பார்க்கப்போற. மகன் அழகாகவும் நல்ல வாட்டசாட்டமாகவும் தான் இருந்தான்.

பெண் பிள்ளைகளை வைத்திருந்த தகப்பன்மார்கள் பரீதாவின் வீட்டுக்கு வந்து வந்து போனார்கள். ஆண் பிள்ளையாக இருந்தாலும் காலாகாலத்தில் திருமணம் செய்துவிக்க வேண்டியது தனது கடமையென்பதையுணர்ந்த பரீதா அவ்வூரிலுள்ள விவசாயி பாறூக் என்பவரின் மகளான நZமாவைத் திருமணம் செய்து வைத்தார். பரீதாவின் வீட்டியேலே இல்காம் குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தான்.

ஆறு மாதங்களாக இல்வாழ்க்கை பிரச்சினைகள் இல்லாமல் சென்றன. இப்போது நZமாவுக்கு அந்த இடம் ஏனோ தெரியவில்லை வெறுப்பாகவே இருந்தது. வசதி குறைந்த வீடு, தன் மாமியார் இடியப்பம் சுட்டு விற்பனை செய்வது இதெல்லாம் நZமாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கவேயில்லை.

இப்போதெல்லாம் பரீதா காலைவேளையில் கடைகளுக்கு இடியப்பம் வழங்குவதை நிறுத்திக் கொண்டார். இல்காமும் நீங்க ஏம்மா இப்படி இடியப்பம் சுட்டுக் கஷ்டப்படுaங்க, நான்தான் வந்திட்டேனே என்றதும்,

அதுதானேப்பா இவ்வளவு காலமும் எனது வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தது. நீ வந்த பின்னர் கடைகளுக்கு அதனை குடுப்பதை நிறுத்தியும் விட்டேன். இரவு நேரத்தில்தானே செஞ்சி கொண்டிருக்கிறேன். நமக்கும் தேவைதானப்பா என்றாள் பரீதா.

இல்லேம்மா ஊர் அதையும். இதையும், எல்லாமே கதைக்குமே உம்மா, ஒங்க மருமகள், என்ட பெண்சாதிகூட இப்படி நீங்க செஞ்சி கொண்டிருப்பது தனக்கு அவமானமா இருக்குது இடியப்பம் சுட்டு விப்பதை விட்டிடச் சொல்லுங்க என்று சொல்லிக் கொண்டிருக்காம்மா!

இப்போ எல்லாம் புரிஞ்சிட்டேன் இல்காம், உன்னை இப்படி எல்லாம் பேச வைக்கிறது யாரென்று. இப்போதானே புதிசா வந்த வசதி உன்னையும் உன் பெண்சாதியையும் ஆட்டம் போட ஆரம்பிச்சிருக்கு.

எப்படித்தான் இருந்தாலும் மகன், நாங்க முன்னர் இருந்த நிலையை மறக்கவே கூடாது. பணம் இன்று இருக்கும் நாளை இருக்காது. ஆடம்பரம் ஆணவம் இவை இரண்டும் உள்ளவர்கள் உருப்படவே மாட்டாங்க என்று பரீதா சொன்னதும்.

நZமாவின் கண்கள் சிவந்து உதடுகள் துடித்தன. பாத்தீங்களா ஒங்க உம்மா யாரை குத்திக்குத்திப் பேசுறாங்க என்று, நீங்க பேசாம வாய்மூடி மெளனியாக இருக்கீங்க, எனக்கு இனி இங்கே சரிப்பட்டு வராதிங்க, ஒங்க உம்மாவோடு நீங்க இருக்க விரும்பினால் இருங்க நான் போறேன் எங்க ஊட்டுக்கு என்றாள் தனல் பறக்க.

நல்லது கெட்டது தெரிந்த பரீதாவிடம் நZமாவின் வீராப்பு எடுபடவில்லை. அதனால் மாமி மருமகளுக்கிடையில் ஓயாத சண்டையும் சச்சரவும் கடைசியில் இல்காமை தன் கைக்குள் போட்டுக் கொண்டாள் நZமா.

இவளின் வார்த்தைகளையெல்லாம் தெய்வ வாக்காக எண்ணியாவனாய் அவளுக்கு அடிபணிந்தான். இதன் முடிவு மகராசி நZமா இல்காமை அவள் வீட்டுக்கு எப்படியோ கொண்டு செல்ல அவன் மனதை கல்மனசாக மாற்றியே விட்டாள்.

உம்மா ஒங்களுக்கும், அவக்கும் இங்கே சரிவர மாட்டேங்குது, அவ அவட உம்மா, வாப்பாட ஊட்டிலேயே இருந்திடட்டும். வேண்டுமானால் ஒங்களுக்கு நான் வாழ்க்கைச் செலவுக்கு வேறாக பணம் தந்திடுறேன் உம்மா என்ற இல்காமிடம்.

என்ன சொன்னே, உன் பொண்டாட்டியின் சொல்லைக் கேட்டு இந்த வீட்டிலே இருக்க ஏலாத ஒன்ட பணம் எனக்கு எதுக்கிடா! நீ என்னை விட்டுப்போன இவ்வளவு காலமும் பணம் அனுப்பித்தானா நான் சாப்பிட்டுக் கெண்டு இருந்தேன். போடா போ, நான் தனியாள்டா. எப்படியும் என் வயிற்றைக் கழுவிக்கொள்வேன் என்றாள் உணர்ச்சி பொங்க.

ச்சே… இவனை நம்பி நான் என் இடியப்பத் தொழிலையே விடப்பார்த்தேனே. இதுவும் இல்லாட்டி என்கதி என்ன ஆகியிருக்கும். என்றவாறு காலை வேளைகளுக்கும் இப்போது இடியப்பம் செய்து 4 கடைகளுக்கும் விநியோகம் செய்யத் தொடங்கினாள்.

வருமானம் அதிகரிக்கத் தொடங்கியதும் பரீதாவுக்கு புனித ஹஜ்ஜிக் கடமையை முடிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் வேரூண்றியது. அதற்கான சேமிப்பொன்றை வேறாக மேற்கொண்டு வந்தாள் பரீதா.

காலங்கள்தான் என்ன செய்யும், 3 வருடங்கள் எப்படியோ ஓடி மறைந்தன. இந்தக் காலப் பகுதியில் இல்காம் எப்படி உம்மா இருக்கிறாள் என்று ஒரு நாளாவது வந்து பார்க்கவில்லையென்று அந்தத் தாயுள்ளம் மிகவும் வருந்தியது.

அந்த அளவுக்கு மருமகள் நZமா மகன் இல்காமை தன் கைக்குள் வசப்படுத்தி வைத்துக் கொண்டிருக்காளே என்று அங்கலாய்த்துக் கொள்கின்றாள் பரீதா.

ஆனால் பக்கத்து வீட்டுக்காரி பர்வின் பரீதாவிடம் இல்காம் வீட்டாரின் தற்போதைய நிலைமைகளை அடிக்கடி வந்து சொல்லிய வண்ணமிருந்தாள்.

மகன் இல்காம் கொண்டுவந்த ரொக்கப் பணமொல்லாம் மெல்ல மெல்ல கரைந்து விட்டதாகவும், வாழ்க்கைச் செலவுக்கு மிகக் கஷ்டப்படுதவாகவும் என்று.

பின்னே என்னதான் செய்யும், எந்தத் தொழிலும் செய்யாமல் இருந் தால் பணம் எங்கிருந்துதான் வரும். ஏதாவது ஒரு வருமா னம் இருந்தால்தானே இந்தக்காலத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியும் பர்வின்.

நீங்க சொல்றது சரிதான் பரீதா ராத்தா. ஏதோ சொஞ்ச நஞ்சம் இருந்த நகை நட்டுக்களையும் விற்றுத்தான் குடும்பம் போய்க் கெண்டிருப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டிச்சி, இல்காமுக்கு ஒரு மகனும் வேறு இருக்கலாம். இவைகளைக்கேட்ட பரீதாவின் பெற்ற மனம் பதைபதைக்கத்தான் செய்தது.

இரண்டு மாதங்கள் சென்ற பின்னர் பர்வின் வந்து சொன்ன அந்தச் செய்தியால். பரீதா மனம் நிலைகொள்ளாமல் தவியாய்த் தவித்தாள். லிபியாவில் அதிக சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு கிடைத்திருக்காம். ஆனால் அதற்காக 2 இலட்சம் ரூபா ஏஜெண்டுக்குக் கொடுக்கணுமாம்.

நZமாவின் சொந்த பந்தங்களிடமிருந்தும் புரட்டப் பார்த்தார்களாம். 10 ஆயிரம் ரூபா கூட புரட்ட முடியாமல் போய்விட்டதாம் என்று நZமா சொல்லி ஒப்பாரி வெச்சத்தை எனக்கும் பொறுக்க முடியாமல் போய்விட்டது பரீதா ராத்தா என்றாள் பர்வின்.

அன்று இரவு பரீதாவுக்குத் தூக்கமேயில்லை. சாப்பிட முயன்றும் சாப்பாடு இறங்கவில்லை. மனம் எதிலும் நிலைத்து நிற்க மறுக்கிறது. விடிந்ததும் இடியப்பம் சுட எத்தனித்தும் ழுமுக்கவனத்தையும் செலத்த முடியாமல் எப்படியோ செய்து முடித்தார்.

கடைகளுக்குக் கொடுக்க வேண்டியதெல்லாம் கொடுத்து முடிந்ததும் அவசர அவசரமாக மகன் இல்காமின் வீட்டை நோக்கி நடந்தார் பரீதா.

வீட்டை அடைந்ததும், தாயைக் கண்ட இல்காம் வாங்க உம்மா! என்றானே தவிர முகத்தில் எந்த மகிழ்ச்சியும் இல்லை.

மருமகள் நZமா வந்து பரீதாவைக் கண்டதும் முகத்தில் தனல்தெறிக்க ஒரு வெட்டுவெட்டிக் கொண்டு குசினிப் பக்கம் போனாள். ஒரே அமைதி யாருமே பேசவில்லை. தாயார் பரீதாதான் பேச்சை ஆரம்பித்தாள்.

என்ன இல்காம்! என்ன முடிவு செய்திருக்கிறாய்! எப்போ வெளிநாட்டுப் பயணத்தை வெச்சிருக்க, எங்கேயோ பார்த்த வண்ணம் எதை வெச்சு பயணம் செய்றதாம், 2 இலட்சம் ரூபா கேட்கிறான் ஏஜெண்ட்காரன் எனக்கு எந்த நாதி வந்து உதவப்போவுது.

என்ன கதைடா கதைக்கிறாய் பாவி மகனே, உங்க வாப்பா போன இடம் தெரியாமல் ஜனாசாவையும் (சடலம்) காணக்கிடைக்காமல் இருந்து உன்னை எந்த நேரத்திலாவது தவிக்க விட்டேனாடா! அப்போ எந்த நாதிடா வந்து உனக்கு உதவி செஞ்சிச்சி. உசிரோடு என்னை வச்சிக் கொண்டு இந்தக் கதை கதைக்க உனக்கு எப்படியடா மனம் வந்திச்சி.

இந்தாடா! 2 இலட்சம்தானே உன் வெளிநாட்டு பயணத்துக்கு கட்டு, உன் பொண்டாட்டி புள்ளைக்கு ஒழைச்சி ஒழைச்சிப் போட்டுக்கோ என தன் மடியில் வைத்திருந்த 2 இலட்சம் ரூபாவையும் அவன் முன் வைத்தாள் பரீதா. இதனைக் கண்ட இல்காம் திக்கித்துப் போய் பிரமை பிடித்தவன் போல் ஆனான்.

உங்கிட்ட ஏதும்மா இவ்வளவு பணம்! அதைப் பத்தி நீ ஏன்டா கேக்கிற, எனக்கொரு ஆசை இருந்திச்சி ஹஜ்ஜிக் கடமையை முடிச்சிரணுமுன்னு, அத்தோடு உங்க வாப்பாவுக்காகவும் உம்றா செய்யணும், அந்தப் புண்ணியமான எடங்களையெல்லாம் கண்குளிரப் பாக்கணும் அதுக்குத்தான் நெருப்பைத்தின்று சம்பாதிச்ச பணம் தான்டா இது.

பக்கத்து வீட்டு மாமா தாக்கீரும் அவர் பொஞ்சாதியும் ஹஜ்ஜிக்குப் புறப்படுறாங்களாம் அவங்களோடு சேர்ந்துதான் போகலாமுணு இருந்தேன்.

நீ வெளிநாட்டுக்குப் போக ஏற்பாடாகி பணம் இல்லாம கஷ்டப்படுறதாக உன் அடுத்த வீட்டு பர்வின் மாமி வந்து சொல்லிச்சி. நீ தான் உன் பொஞ்சாதியின் சொல்லைக் கேட்டு என்னை தூக்கி எறிஞ்சிட்டு வந்திட்ட. ஆனா இந்த பெத்த மனம் கேக்குதில்லையடா நீ இப்படி தவிக்கும் போது நான் எப்படி மகன் நிம்மதியாய் ஹஜ்ஜிச் செய்வது.

அதுக்கும் ஒரு கொடுப்பிணை வேணும் மகன். அந்த அல்லாஹ் நாடினால் எப்போ சரி என்னை ஹஜ்ஜி செய்ய அனுப்பட்டும்.

அல்லாஹ் கூறியிருக்கிறான் புனித ஹஜ்ஜிப் பயணத்திற்கு நான் நாடியவர்களை மாத்திம்தான் அங்கு போக வைப்பேன் என்று. அப்படி என்னையும் அங்கு போக நாடியிருந்தால் நானும் போவேன் என்றவாறு நின்ற நிலையிலேயே பேசிவிட்டு நடந்தாள் பரீதா.

கண்கள் கலங்க, உம்மாவின் பாச உணர்ச்சியை நினைத்து பிரமித்து சிலையாக நின்றான் இல்காம். தாய் பரீதாவும் தன் மகன் உட்காருங்க உம்மா என்று கூடச் சொல்லவில்லையே என்று வேதனைப்பட்டாலும் நான் பெற்றெடுத்த பிள்ளை மனம் பேதலித்துப் போயிருந்திருக்கிறான் என்று எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டாள் பரீதா.

அடுப்பங்கரைக்குள் இருந்த இல்காம் மனைவி நZமா, மாமியாரின் வார்த்தைகளைக் கேட்டு தலையைத் தொங்கப்போட்ட வண்ணம் விம்மியவாறு இப்படிப்பட்ட மாமியாரையா வெறுத்து சண்டையிட்டு வந்தேன் என கண்ணீர் விட்டாள்.

இவை நடந்து 2 கிழமைகள் கடந்தன. அடுத்த வீட்டு தாகீரின் வீடு இரண்டொரு தினங்களாக ஆட்கள் வருவதும் போவதுமாகக் கலகலப்பாக இருந்தது. புனித ஹஜ்ஜிக் கடமையை முடிக்கச் செல்ல இன்னும் நான்கைந்து நாட்களே உள்ளன. அதனால் இனபந்துகள் தெரிந்தவர்கள் என்று வந்து வந்து பிரயாணம் நல்லபடியாக அமைந்து புனித கடமை இனிது நிறைவேற பிரார்த்தனை புரிந்து சென்றார்கள். இதுதான் கலகலப்புக்குக் காரணம்.

பரீதாவுக்கும் தாகீரின் வீட்டைப் பார்க்கும் போது மனதில் சிறிது கவலைபோல் ஏற்பட்டாலும் மகனை நினைத்ததும் அந்தக் கவலைகள் மாயமாய் மறைந்து விடுகின்றன.

மகனும் அவன் குடும்பமும் தவிக்கும் போது என்னிடம் நீ ஏன் ஹஜ்ஜிக்குச் செல்லவில்லை என்றா அல்லாஹ் கேட்கப் போகிறான் என்று நினைத்தவாறு அமைதியாகிடுவாள் பரீதா.

மறுநாள் காலை 10.00 மணியை நெருங்கும் வேளையில் தன் மகள் சியாமாவும், மருமகன் மஸாகிரும் பரீதாவின் வீட்டுக்கு வந்தார்கள். திருமணமாகி சில வடங்களாகியும் அல்லாஹ் இன்னும் பிள்ளைப் பாக்கியத்தை கொடுக்கவில்லை அவர்களுக்கு. வந்தவர்களை அன்போடு வரவேற்றாள் பரீதா.

யாமாதான் தன் தாயிடம், உம்மா நாங்க ரெண்டு பேரும் இந்தத்தடவை ஹஜ்ஜிக்கடமையை முடிக்கலாம் என்றிருக்கோம்மா! ஏம்மா என்ன அவரசம் கொறைஞ்ச வயசுதானேம்மா, கொஞ்சம் பிந்தியும் போகலாமில்லையா.

இல்லேம்மா இந்த வயசிலே போனாத்தான் எல்லாக் கடமைகளையும் லேசாகவும், திருப்தியாகவும் செய்யலாமாம். இன்னுமொன்று பிள்ளைப்பாக்கியம் கெடைக்கிறதிற்கும், அந்தப் புண்ணியமான அறபா மைதானத்திலே அந்த நாயன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவும் போகிறோம் உம்மா என்றாள் சியாமா.

அடுத்த வாரம் கே.பி.பி. புஸ்பராசா எழுதும்

நீங்களும் ஹஜ்ஜிக்குச் செல்ல இருந்த பணத்தை அப்படியே தூக்கி நானாவுக்கு வெளிநாட்டுக்குப்போக குடுத்திட்டீங்களாம். இப்படியொரு மனசு இந்தக் காலத்திலே எந்தத் தாய்க்கும்மா வரும்.

இல்காம் நானா எல்லாத்தையும் எங்க வீட்டுக்கு வந்து சொல்லிச்சும்மா. நான் உம்மாவுடன் கோபித்துக் கொண்டு 3 வருசத்திற்கு மேலே போய்ப்பாக்கவும் இல்ல தங்கச்சி.

ஆனா உம்மா என்னை மறக்கல்ல, மறக்கவே இல்லை என்று சொல்லிச் சொல்லி அழுதிச்சிம்மா!

நான் என்னம்மா செய்யிறது. அவனும் அவன் பெஞ்சாதி பிள்ளையும் கஷ்டப்படுறதைப் பாத்து நான் எப்படிம்மா நிம்மதியாய் ஹஜ்ஜி செய்வது.

அந்த மூன்று பேரினதும் வாடி வதங்கிப் போன முகங்கள் தாம்மா என் கண்முன்னே வந்து நிக்குது.

அதுதான் மகளே, இந்தக் கட மையைச் செய்ய அல்லாஹ் எப்போ நாடுகிறானோ, அந்த நேரத்திலே உசிரோடு இருந்தா செஞ்சிட்டு போறேன். அது தான் அந்தப் பணத்தைச் சந் தோஷமாகக் கொடுத்திட்டு வந் தேன் என்றாள் மலர்ந்த முகத் துடன் பரீதா.

அந்த வல்லநாயகன் அல் லாஹ் ஒங்கள ஹஜ்ஜிக் கட மையை நிறைவேற்ற நாடிட் டான் உம்மா! என்னம்மா சொல்றே நீ! ஆமாம் உம்மா, நீங்க பெத்த மகன் கஷ்டப் படுறான் என்று ஹஜ்ஜி செய் யப்போக வெச்சிருந்த பணத்தை அப்படியே தூக்கிக் கொடுத்திட்ட தியாகி உம்மா நீங்க.

அப்படிப்பட்ட என்னைப் பெத்த தாய்க்கு நாங்க உதவ புண்ணியம் செஞ்சிருக்கணு ம்மா.

நாங்க இருவரும் ஹஜ்ஜிப் பயணம் செல்ல இருக்கும் போது நீங்க ஏம்மா வேறு ஆட்களின் துணையோடு போகணும். இதுவரையும் எது வும் பேசாமல் இருந்த மரு மகன் மஸாகிரும், ஆமாம் மாமி, எல்லா ஏற்பாடுகளும் செஞ்சாச்சி.

இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு கிழமையால் புனித ஹஜ்ஜிப் பயணம் போறோம் மாமி, நீங்க ஆயத் தமாக இருங்க என்றார் மஸாகிர்.

உடனே தனது இரண்டு கைகளையும் ஏந்தியவாறு இறைவா, உனக்காக புனித ஹஜ்ஜிக் கடமையை நிறை வேற்ற படாத பாடுபட்டு உழைத்த பணத்தை மகனின் கஷ்டம் நீங்க தியாகம் செய்யச் செய்தாய்! மகளைக் கொண்டு புனித பயணத்தை மேற்கொள்ளச் செய்தாயே புகழ் அனைத்தும் உனக்கே யா அல்லாஹ்! என்று ஆனந் தக் கண்ணீர் வடிய தனது முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்கின்றார் ஹாஜி யானியாகப் போகும் பரீதா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *