தாயை போல பிள்ள‌ை‌

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 4, 2015
பார்வையிட்டோர்: 9,721 
 

நம் அனைவருக்கும் ப‌ழயை நினனவுகள் எப்‌போதாவது வந்து கொண்டுதானிருக்கும். ‌ஆனால் எனக்‌‌கோ ஒவ்வொரு நாளும் வருகிறது ‌அதற்கு காரணம் எனது ‌அருமை மகள் ரித்திவிகா. என் பள்ளிப்பருவத்தில் நடந்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிரும்புகி‌றேன். ‌‌வேறு வழி ஆரம்பித்துவிட்டேன் தொடரத்தான் வேண்டும்.

நான் மூன்றாம் வகுப்புப்படிக்கும் போதே எப்படி‌யோ பார்பி பொம்மைப்பற்றி அறிந்துகொண்டேன்!!!சத்தியமாக நம்புங்கள். எப்படி தெரியும் என்பதை ‌வேறு கதையாக சொல்கிறேன்.

என் அப்பாவிடம் பார்பி பொம்மை கேட்டு அடம்பிடித்தேன், நாங்க எல்லாம் அப்பவே அப்பிடி. ஆனால் எங்கு தேடியும் அப்பாவிற்கு கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும் எங்கள் ஊரில் இருந்ததே ஐந்து அல்லது ஆறு கடைகள் தான். அப்பா அனைத்து கடைகளிலும் ஏறி, இறங்கி கிடைக்கவில்லை என்றார். அந்த வயதில் ஏதோ எல்லா கஷ்டங்களும் எனக்கு மட்டும் என்பது ‌போல முகத்தை வைத்துக்கொண்டேன். பாவம் அப்பா எனக்காக வேறு பொம்மை வாங்கி வந்தார்.

அது கண்களை மூடித்திறக்கும் பொம்மை, தொப்பி, நீண்ட கவுன், வெள்ளை சூ அணிந்திருந்தது, முடி தங்கநிறத்தில் இருந்தது. என் பெயர் லுசி என்று ஆங்கிலத்தில் அதன் பக்கவாட்டில் எழுதியிருந்தது. ஏதோ ஒரு வகையில் சமாதானமடைந்தேன்.

பின்னர் பள்ளி செல்லும் வேளை தவிர்த்து மற்ற எல்லா நேரமும் லுசியுடன் கழிந்தது. ஒரு நாள் என் பள்ளி வளாகத்தில் உதிர்ந்திருந்த போகன்வில்லா பூக்களை கண்டதும் நான் அந்த பூக்களை ‌கொண்டு லுசிக்கு உடை தைக்க ஆசைப்பட்‌டேன். உடனடியாக என் சீருடையில் உள்ள ஜேப்பியில் சேகரிக்கத்தேன். அவ்வாறு சேகரித்த பூக்களை வீட்டில் ஒரு மூலையில் இருந்த அலமாரிக்கு பின்னால் ஒளித்து வைக்கத்தொடங்கினேன்.

சில நாட்களுக்கு பின் என் அம்மாவும், அம்மாச்சியும் வீட்டில் ஏதோ துர்நாற்றம் ‌அடிப்பதாக பேசிக்கொண்டார்கள். எலி ஏதாவது வீட்டுக்குள் வந்து செத்துவிட்டதோ என்று எண்ணி பரண் மேல் தேடிப்பார்த்தார்கள், ஆனால் ஒன்றும் அகபடவில்லை. திடீரென்று உள்ளே வந்த என் அக்கா, அம்மா! அம்மா! என்று அலறினாள். என்னை பொறுத்தவரை என் அக்கா ஆபத்பாந்தவி (ஆபத்பாந்தவனின் பெண்பால்) ஆனால் அன்று அவள் ஆபத்பாந்தவி அல்ல பாவி என் பூக்கள் சேகரிப்பை கண்டுபிடித்துவிட்டு அம்மாவிடம் சொல்லத்தான் அலறுகிறாள் என்பதை பிறகு தான் உணர்ந்தேன்.

என்னடி என்று சற்று சலிப்புடன் வந்த அம்மாவிடம் என் ரகசியத்தை போட்டு உடைத்தாள். பரண் மேல் தேடிப்பார்த்தும் ஒன்றும் அகபடாத கோபத்தில், என் பூக்கள் சேகரிப்பு குப்பைத்தொட்டிக்கு சென்றது. நான் அக்காவை வாயாற திட்டினேன் (மனதாற இ்ல்லை). அம்மாச்சி தான் என்னை சமாதானபடுத்தி அன்று இரவு துாங்கவைத்தார். பின்னர் பூக்கள் கொண்டு உடைத்தயாரிக்கும் எண்ணம் கைவிடப்பட்டது. ஒரு வேளை அம்மா அனுமதித்திருந்தால் பெரிய பேஷன் டிசைனர் ஆகியிருப்பேன்!!! நல்ல வேளை தப்பித்தோம் என்று நீங்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.

காலப்போக்கில் என் லுசி பொம்மை எங்கள் வீட்டு அலங்கார பொம்மைகளின் நடுவே அமர்ந்து கொண்டது.

இன்று என் மகள் பார்பி பொம்மை கேட்பாள் என்று நினைத்தேன் ஆனால் அவள் கேட்டது எல்சா பொம்மை ஃப்ரோஷன் என்ற ஆங்கில அசைப்படத்தில் வந்ததாம். செல்ல மகள் விரும்பியதை வாங்காமல் இருப்பாரா என் கணவர், ஆனால் நாங்கள் தேடி அலையவில்லை மிகப்பெரிய பொம்மை கடைகளில் ஒன்றல்ல, இரண்டல்ல பல எல்சா பொம்மைகள் இருந்தது அதில் ஒன்றை என் மகள் தனதாக்கிக்கொண்டாள்.

அடுத்த நாள் மகள் பள்ளியிலிருந்து வந்ததும் ‌அவள் பையை திறந்தேன் உள்ளே புத்தகங்களிடையே குப்பையாக கலர் காகிதங்கள், கோபமாக என்னடி இது என்றேன்.

அவள் மாம், ப்ளீஸ் இந்த கலர் பேப்பர் வச்சு எல்சாவுக்கு டிரஸ் தைக்கலாமா என்று கெஞ்சலாக கேட்டாள். குப்பை என்று நினைத்து கோபம் வந்தாலும், என் நிறைவேறாத ஆசை என்னை சம்மதிக்கவைத்தது.

எப்பொழுதும் பழ‌மொழி கூறும் அம்மாச்சியின் குரல் அசரீரீயாக கேட்டது நுாலை போல சேலை, தாயை போல பிள்ள‌ை‌ என்று.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *