கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 6,715 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உமா:

இன்று பிற்பகல் மயிலாப்பூர் போயிருந்தேன். உள்ளே நுழைஞ்சதும் நுழையாததுமா அம்மா, ‘மாப்பிள்ளை இப் பத்தான் போனார். அவர் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தே வருஷம் மூனுக்குமேல் ஆறது. என்ன விசேஷம்: ஒரு கேலரி கிளறி, பஜ்ஜி போட்டுத் தரலாம்ன்னு பார்த்தால் இன்னிக்கு ரவையும் கடலைமாவும் கடையிலே இல்லே. தெரிஞ்சுண்டே மனுஷன் வந்தாரோன்னு எனக்கு அவர் மேலே ஆத்திரம் வந்தது. கடையிலே வாங்கினால் கடலைமாவா அது வெறும் பட்டாணி மாவு. தோச்சுப் போட்டால் எண்ணெய் பொங்கி வழியும். நம்ம வாங்கி அரைக்கற மாதிரி ஆகுமா?’’

சரி சரி… நீ அவரிடம் பஜ்ஜியைப் பத்தித்தான் பேசிண்டிருந்தையா? இல்லை, நீ போட முடியாத பஜ்ஜியைத் தின்ன அவர் வந்தாரா?”.

“நான் உன்னைக் கேட்டால், நீ என்னைக் கேக்கறே. வராத மனுஷன் வந்தால், விஷயமில்லாமல் வருவாரா? அதுவும் இந்த மாப்பிள்ளை’

“அட, உனக்கு எத்தனை மாப்பிள்ளை, இந்த மாப்பிள்ளையைத் தனியாக குறிக்க: சரி, என்ன விசேஷம்?”

“அதுதான் தெரியல்லியே! ஆனால் என்னவோ சொல்லத்தான் வந்திருக்கார். அதுக்குள் சொல்லலாமா வேண்டாமா-ரெண்டு மனசு போலவோ? உமா செளக்கிய மா’ன்னு கேட்டேன். எதோ ஒண்ணு) ஆரம்பிக்கனுமே!

“ஏன், அவள் இங்கேவந்துண்டு போயுண்டுதானே இருக்காள் …அவள் செளக்கியம் உங்களுக்குத் தெரியாதா?’ ன்னார். இடக்கன். நேர்க்கேள்விக்கு நேர்ப்பதில் சொல்லிட்டுப் போகட்டுமே…ஆனால் வம்பு அடிக்கற ஆளுமில்லே. யோசனைபண்ணிப்பண்ணி மண்டையைக் குடையறது.”

“அப்படியா? எனக்குப் புதுசாயிருக்கே! பேச்சுன்னா அலைவையே!”

“உமா, நீ இன்னும் கொஞ்சம் மரியாதையாயிருக்க லாம்னு உனக்குத் தோணல்லே?”

“எல்லாரும் பிறத்தியாருக்குத்தான் வாத்தியா ரம்மா!’

“உமா, சற்றே கிதானத்தில் இரு. உன் சுபாவம் எனக்குத் தெரியும்னாலும் அவரிடமும் இப்படித்தான் நடந்து இருப்பாயா?”

“இது என்ன பயமுறுத்தல்’ எனக்குக் கோபமாயும் இருந்தது. பீதியாவும் இருந்தது. அப்பா இருந்த நாளில், அவர் உத்தியோகமுறையில், “Witness Turned Hostile’ என்பார். அது மாதிரியா ஏதேனும்…

“நான் என்ன பயமுறுத்தி, நீ உக்கிராண உள்ளே ஒளிஞ்சுக்கறது?’ அம்மா சிரிச்சாலும் அவள் புருவ நெரிசல் இன்னும் வேவில்லை. கூடவே சீண்டிவிட்டேனோ?

‘’என்னவோ குருவித்தத்தல் மாதிரி, முன்னுக்குபின் தாக்கல் மோக்கல் இல்லாமல் பேச்சு தாவிண்டே போச்சு, ரொம்பநாள் கழிச்சு சந்திக்கிறோம். பேச்சு சகஜமா வரதா? அதுவும் மாமியாரும் மாப்பிள்ளையும் நான் என் அமரிக்கையில் கதவு மூலையில் கின்னுண்டு பேச அவர் கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கார், பேச்சுவாக்கில் சொன்னார்: நான் நாலு தங்கை களோடு பிறந்தேன். உங்கள் வீட்டில் நாலு உடன்பிறக் தார், நடுவில் ஒரு பெண்-இரண்டுக்கும் வித்தியாசம் இருக்காதா?’

‘தாராளமா’ன்னேன் பதிலுக்கு.

அவள் இன்னும், அப்படித்தான் இருக்காள்…’

எனக்கு சுருக்குன்னுது. ஆமா, இத்தனை வருஷம் கழிச்சு, நான் உமாவைப் பத்திச் சொல்லி, நீங்கள் புது சாகத் தெரிஞ்சுக்க என்ன இருக்கப் போறது?

இந்த வார்த்தை எப்படி, எந்த சம்பந்தத்தில் என் வாயிலிருந்து வந்ததுன்னு எனக்கே தெரியல்லே. கான் இப்படிச் சொன்னதும் அவர் என்னை ஒரு மாதிரியாப் பார்த்தார். ஏதேனும் தப்பிதமாய் பேசிட்டேனோ? எனக்கு ‘திக்’குன்னு ஆயிடுத்து.

‘லக்ஷத்தில் ஒரு வார்த்தை. நான் ஏதோ யோசனை கேட்க வந்தேன். நீங்கள் உபதேசமே பண்ணிட்டேள்! வரேன்.”

‘கிர்ர்’னு எழுந்து போயிட்டார். ‘புதுப்பால் வந்தாச்சு, டிகாக்ஷன் இறங்கிண்டிருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லத் தோணல்லே. நேரமேயில்லை…நான் வாசலுக்கு வரதுக்குள், அவர் முனை திரும்பிட்டார். ஆமாம்; உங்களுக்குள் என்னடி, உமா ?”

“என்னவாம் என்ன? எலிக்கு ஜட்டி கட்டல்லே, குழாயில் தண்ணி சொட்டறது, செம்பருத்திப் பூவை பறிக்காமலே தரையிலே உதிர்ந்து கிடக்கு”ன்னு வேடிக்கை ப்ேசற மாதிரி மழுப்பிட்டு-ரொம்ப நேரம் தங்கல்லே. உடனேயே கிளம்பிட்டேன். இருந்தால் பிடுங்கியெடுத்துடுவாள்.

ஒஹோ, என்னை முக்திண்டுட்டாரா மாமியாரை மத்தியஸ்துக்கு. No.No மாட்டவே மாட்டார். அந்த அளவுக்கு அவரை எனக்குத் தெரியாதா? ஆனால் நானும் மெனக்கெட்டு, இதே காரியமாத்தானே இன்னிக்கு இங்கே வந்தேன்! ஆனாலும் இன்னது தான் கடந்ததுன்னு விரல் வ்ெச்சு சொல்லிக்கற மாதிரி ஒண்ணும் கிடைக்கல்லியே: குணங்களின் மோதல்னா உருக் கிடைக்காமல் இப்படித் தான் இருக்குமோ?

இதெல்லாம் அடிப்படையில் எப்போ, எங்கே ஆரம்பிச்சுது? நினைவை முட்டி முட்டிப் பார்த்துக்கறேன். நூல் நுனி கிடைச்சால்தானே இழுக்கலாம் இழுத்தால் தானே சிக்கு வழிபிரியும் எவ்வளவு பெரிய சிக்கு ஆயி டுத்து? இனி பிரிஞ்சவரைக்கும்தானோ? ஒண்ணு, இருக்கிற முடிச்சோடு சமாளிக்கப் பார்க்கணும். இல்லை, இந்த இடத் தோடு வெட்டி எறியனும், வெட்டி எறியறதா? அப்புறம் மிச்சமே என்ன இருக்கப் போறது? அம்மாடி, பயமா யிருக்கே இனிமேல் அடியாவது, நுனியாவது?

Be honest with yourself – நான் காலேஜ் படிச்சேன் என்பதற்காக, இது ஒரு கோட்பாடின் உச்சரிப்பாய்க் காட்டிக் கொள்ளலாம். ஆனால் இதையே நான் மனசாட்சி யின் குரல்னு சொல்லிக் கொள்ள முடியுமா? இதனால் நான் புதுமைப்பெண் ஆகிவிடுவேனா? .

எங்கள் இடையே பேச்சு அனேகமா அறுந்து போச்சு. அவர் காரியத்தை அவர் பார்த்துக்கறார். என் காரியத்தை கான். எனக்குச் செளகரியப்பட்டபடி. ஆமாம்; அது அதுக்கு அதனதன் வேலைன்னு. அவருடைய கட்டுப்பாடு, ஒழுங்கெல்லாம் என் சுபாவத்துக்கு ஒத்துவர் சமாச்சார மில்லே. அவர் துணியை அவரே தோய்ச்சுக்கறார். அவருடைய சமையலை அவரே பண்ணிக்கறார். கும்மட்டியில்… கட்டம் அந்த அளவுக்கு முத்திப்போச்சு. ஆமாம்; ஒருநாள், சாப்பிடறதுன்னா இப்போ சாப்பிடணும். போட்டுட்டுப் போறேன். அப்புறம் எனக்கு வேலை யிருக்குன்னேன். வேலையென்ன வேலை? டி. வி. யில் சிவாஜி. அவருக்குப் புருவம் தாக்கித்து. ஒண்னும் பேசல்லே. படம் முடிஞ்சு நான் எதிர்வீட்டிலிருந்து வந்தால், அவர் இலையில் தனக்குப் பரிமாறிண்டிருக்கார், சாதம், குழம்பு, கறி எல்லாம் ஆவிபறக்க, என்னை நிமிர்ந்துகூடப் பார்க்கல்லே.

எனக்கு ஆத்திரம். அந்த கிமிஷத்தின் உஷ்ணத்தில், “ஓஹோ, அப்படியா? எத்தனை நாள் நடக்கப் போறது பார்த்துடறேன்’னேன்.

இன்னும் பார்த்துண்டேயிருக்கே.

அன்னிக்கு டி.வி.யும் நன்னாயில்லே. போனதுதான் மிச்சம். ஒரு பாசமலர் என்ன, ஒரு பாகப்பிரிவினை என்ன, ஒரு பாலும்பழமும் என்ன… அந்த சிவாஜியை இனி காணப் போறோமோ? சிவாஜியே அந்த சிவாஜியை இனி கண்டுக்க முடியுமோ?

நடுராத்திரியில் திடுக்கென விழிப்பு வந்து, படுக்கையில் எழுந்து உட்கார்ந்தேன். சிவாஜியைப் பத்தி கினைச்சுண்ட தெல்லாம் ஒருவேளை எனக்கே பொருந்துமோ அதனால் தான் கினைப்பே அப்படி வந்ததோ? அவனைச் சொல்லும் சாக்கில் என்னையே சொல்லிக்கிறேனோ?

எட்டிப் பார்க்கிறேன். ஆபீஸ் அறையில் விளக்கு எரியறது. ஃபைலா புஸ்தகமா? சிந்தனையா? எதில் ஆழ்ந்தாலும் மனுஷன் தன்னை மறந்தான்.

இன்னிக்கு லேடிஸ் கிளப்பிலிருந்து வீடு திரும் பறப்போ ராத்திரி நேரமே ஆயிடுத்து. அங்கேயும் என்ன? பேரென்னவோ கேரம், பூப்பந்து, லைப்ரரின்னு பேரு. ஆனால் அசல் என்னவோ அரட்டை தான்! கொள்ளைப் பசி. ஏதேனும் எனக்காகப் பொங்கித் தொலைச்சுக்கணும்காரியம்னாலே வெறுப்பாயிருக்கு.

உள்ளே நுழைஞ்சதும் சமையலறையிலிருந்து வெளிப் பட்டு என்னிடம் ஒரு தம்ளரை நீட்டினார்.

Hot சேமியா பாயஸம், முந்திரிப் பருப்பு முழுசா, குங்குமப்பூ-ஆமாம் மிதந்துண்டு-நெய் சுமா கமாளிக்கறது.

ருசிச்சேன். ‘H’-in-Tops.ரொம்ப தாங்க்ஸ். இன்னிக்கு என்ன விசேஷமோ?”

“ஒரு Celebration. இன்னியோடு 53 வாரம் பூர்த்தி, Not Out…”

எனக்குத் திக்’குன்னது. அத்தனை நாள் ஆயிடுத்தா?

“ஒரே நிமிஷத்தில் தேவாமிர்தத்தையே விஷமாக்க உங்களால்தான் முடியும்’ என்றேன்.

“கசப்பது பாயஸம் அல்ல. என் எண்ணமும் அல்ல. ஒருவேளை, உனக்குப்படும் யதார்த்தமோ என்னவோ? உனக்கு அப்படித் தோன்றினால், குடிப்பதோ-தொட்டி முற்றத்தில் கொட்டுவதோ உன் இஷ்டம் தானே!”

கோபமே தெரியாத Matter of fact voice!

இந்த மனுஷனுடன் ரோசம் கட்டுப்படி ஆகாது. ஆனால் கோபம் மட்டும் இருக்கு. ஒரு பக்கம் ருசி பிடிச்சி ழுக்கறது. பசியோ பிராணன் போறது. எதிரே குடிக்காமல் எடுத்துண்டு உள்ளே போயிட்டேன்.

ரவி:

தாரகராமன் ஸார் ஒரு கேர்த்தியான மனுஷன். நான் சொல்கிறேன் – A Real Son of a Gun- அவர் இல்லாது இப்போ எவ்வளவு கஷ்டமாயிருக்கு. இருந்தவரை அவர் ஸீனியர், அவரிடம் நான் ஜூனியர் என்றா பழகினோம்? எங்கள்வரை காங்கள் எப்பவும் Chums தான், இப்போது இருந்தால் தாட்சண்யம் இல்லாமல் கியாயம் சொல்லக் கூடிய மனுஷன் அவர் ஒருத்தர்தான். ஆனால் நானும் வேறுயாரை அறிவேன்?

வரவர என் நெஞ்சுள் தினம் ஒரு கோர்ட் நடக்கிறது. நானே நடத்தும் எதிர்த்தரப்பு வாதத்தில் அவர் குரலைத் தேடுகிறேன்.

“புருஷன், மனைவிக்கு இடையே – No Thank you Dthe Divorce Laws. ரவி, நீ ஒண்னு கவனித்திருப்பாய், நான் Divorce Cases எடுத்துக்கறதில்லே. சமாதானமாப் போவையோ வெட்டி மடிவையோ உங்கள் பாடு மத்யஸ் தத்துக்குக்கூட என்னிடம் வராதீர்கள், எல்லாமே பரம ஒற்றுமையா அமைஞ்சுட றதா? ராமனுக்கும் சீதைக்குமே ஒற்றுமையில்லே என்கிறேன்… அதற்கு என்ன சொல்லப் போறே?

“அப்படி முழு ஒற்றுமை அமையவும் கூடாது. தராசு ஆடிண்டேயிருக்கணும். அதுதான் வாழ்க்கை. விவாகரத்து சட்டம் இருக்கிறது என்பதனாலே. அக்கினி சாக்ஷி, அம்மி மிதிக்கறது, அருந்ததி பார்க்கறது எல்லாத்துக்கும் அப்புறம் என்ன அர்த்தம் இருக்கிறது ஐயா? ஒவ்வொன் றாய் போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் காட்டு பவர் சொல்லட்டும்…அவர்கள் வழக்கெடுத்துக் கொண்டு இந்த மடிசஞ்சி பிராம்மணனிடம் வர வேண்டாம்!

‘கல்யாணம் அவசியம், அத்தியாவசிம்கூட. ஆனால் கல்யாணம் ஒரு ஏற்பாடு. அவ்வளவுதான்! சமுதாயத்தின் F#5u TóLjTG. Marriages are not love Heaver. So, do not fall in love with your wife. 9345&lpujib oarssjä65ā துரோகம் பண்ணாதே. அதுதான் நான் சொல்வேன். There is love. ஆனால் அது ஒரு சக்தி, அது பலத்தைத் தான் தருமோ அழிக்கத்தான் அழிக்குமோ அறியேன். ஆனால் உறவுக்குஅது ஒத்ததல்ல…

கோர்ட்டில் வழக்காடும்போதுகூட இதுபோலத்தான் ஒரு மாதிரியா, வெடுக்கு வெடுக்கெனப் பேசுவார், பாலிஷ் இல்லாததுபோல். ஆனால் சட்டத்தில் நிபுணன். Approach, Argument, Summing up எல்லாமே ரத்னச் சுருக்கம். இதில் சத்து இவ்வளவு தான். மிச்சம் எல்லாம் சுத்தி வளைச்ச வெட்டிச்பேச்சு என்கிற மாதிரி, Cut and rightஆக இருந்ததனாலேயே அவரிடம் கேஸ்கள் குவிஞ்சு கிடந்தன என்று சொல்லும்படியில்லை.

“Oh I got along!’ அவர் வண்டியும் நன்றாய்த்தான் ஒடிக் கொண்டிருந்தது. Company Law வில் அவரை மிஞ்சச் கிடையாது.

ஒருநாள்-ஒருநாள் என்ன, எனக்கு அது அந்த காள். அவர் சேம்பர்ஸில் –

“இன்று மாலை நானும் மாமியும் உன் வீட்டுக்கு வர தாயிருக்கோம். Oh I know- முழிக்க வேண்டாம். உன் தாயார் invalid-தோன் சமைக்கிறாய், அவளுக்கு வேண்டி யதையெல்லாம் தோன் பண்ணுகிறாய் என்று தெரியும். நீ ஒரு சிரமமும் படாதே. காங்கள் சம்பந்தம் பேச வரோம். இந்தப் பெண் பார்க்கும் படலத்தைக் கட் பண்றேன். : தான் உமாவைப் பார்த்திருக்கையே!”

பார்த்திருக்கிறேனா?

அடுத்து என் தோள்மேல் கை வைத்துக் கொண்டு கண்சிமிட்டியபடி,

‘ரவிச்சந்தர், இது உனக்கும் எனக்கும் இடையே. They think you are a fine catch. And you are, you know! உன் தங்கைகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டே. கடமைகளைச் செய்துட்டே… உனக்கு இக்கு பிடுங்கல் கிடையாது. ஆனால் உமா ஒரு Tough Assignment. உன் இஷ்டம். நான் கட்டாயப்படுத்த மாட்டேன். Up to you.’

சார் ஒண்னும் சமஸ்கிருதத்தில் பேசவில்லை , ஆனால் அவர் எச்சரிக்கையை ஏற்கும் நிலையில் நான் இல்லை.

அம்மாவிடம் தெரிவித்ததும் கண்ணிரே விட்டுட்டாள். “ரவி, நீ பட்ட சோதனைக்கு, அம்பாள் கண் திறந்துட்டாள்டா… இனி நான் கிம்மதியாக கண் மூடுவேன்.’

In the name of all that is beautiful. நான், உமாவைப் பார்த்திருக்கிறேன், ஆனால் எதோ ஸன்னிதானம் என்கிற முறையில். ஆனால் எனக்குக் கிடைக்க இவ்வளவு அருகே இருக்கிறாள் என்று கனவில் கூட கினைத்திருப்பேனா? What a jolt!

சாம்பசிவனும் அவர்களுடன் வந்திருந்தான். அவன் தான் S.K.C. பண்ணினான். என்ன மாப்பிள்ளே!’ என்றே அவர்களுக்கெதிரேயே அழைத்து விட்டான். அவனுக்குஅங்கே அவ்வளவு சுதந்தரம் உண்டு.

சாம்பசிவன் இந்த சமயத்துக்கு விஸ் தாரமாவே நினைப்புக்கு வருகிறான். ஏன்? புரியவில்லை.

‘சாம்பசிவன் திறமையெல்லாம் பத்து வருஷத்துக்கு முன்னாடியே போச்சு. இப்போ அவன் சமையலா செய்யறான்? என்னத்தையோ பொங்கிப் போடறான். நாங்களும் தின்று வைக்கிறோம். பழைய வாஸனைகளை ஞாபகப்படுத்திண்டு!”

ஸார் என்ன வேனுமானாலும் சொல்லிக்கட்டும். நான் அங்குபோக நேரிடும் போதெல்லாம், அவன் கொண்டு வந்து வைக்கும் டிபனும் காப்பியும் A.1. எனக்குத் தேவை யும்கூட. இல்லாதவனுக்குத்தான் பசியும் கூடுதலாகக் காண்கிறது.

வீட்டைவிட்டுப் பதினைந்து வயதில் ஓடி வந்து ராவுக்கு இவர்கள் வீட்டுத் திண்ணையில் ஒதுங்கினவனை, தாரகராமனின் தாயார், முகம் பார்த்து உள்ளே அழைத்து சென்று அன்னமிட்டதுடன் அன்று தங்கினவன் தான்…

( எங்கேடா போறே?”ன்னா காசிக்காம். காசிக்குப் போற வயசைப் பாரு! நானே இன்னும் போன பாடு இல்லே!’-பெரிய பித்தளைப் பீப்பாய் போல் பாட்டி குலுங்கக் குலுங்கச் சிரிக்க கானே கேட்டிருக் கிறேன்!)

சமையலே பாட்டியிடம்தான் கற்றுக்கொண்டேன். அவனைப் படிக்க வைக்க இவர்கள் எவ்வளவோ முயன்றும் அவனுக்குப் படிப்பு ஏறவில்லை கரண்டி ஆபீஸ் எனக் குப் போதும் என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டான்.

ஸாருக்கும் அவனுக்கும் பிடிப்பு கூட. ஏறக்குறைய இருவரும் சமவயது.

“என்னை ரொம்ப நாளைக்குப் பேரைச் சொல்லித் தான் அழைத்துக் கொண்டிருந்தான். கட்சிக்காரன், பெரிய மனுஷா நாலுபேர் வந்திருக்கிற சமயத்தில் மானத்தை வாங்காதேடா என்று எல்லாரும் சொல்லிச் சொல்லி, ரொம்பக் கஷ்டப்பட்டுத்தான் நாலுபேர் நடுவில் அவன் வாயில் கான் ஸார்’ ஆக மாறினேன்… ஆனால் அவனை நம்ப முடியாது!’-அவுட்டுச் சிரிப்புச் சிரிப்பார்.

சாம்பசிவன் கல்யாணமெ பண்ணிக் கொள்ளவில்ல்ை. அதிலும் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை.

“அதெல்லாம் ஏதுக்கம்மா பெண்டாட்டி வந்துட்டா அப்புறம் என்னைத் தனிக்குடித்தனம் வெச்சுடுவேள்… உங்களையெல்லாம் துறக்கணும். எனக்குக் கொஞ்சற துக்கு குழந்தைகள் வேணும்னா, உங்கள் பையனின் பசங்கள் இருக்கான்களே! இந்த சந்தோஷத்துக்கு கொடுத்து வெச்சிருக்கணும். என்னை ரொம்பக் கெடுபிடி பண்ணினேள்னா, என் காசிப் பயணம் ஒத்திதான் போட் டிருக்கு’ என்று பாதி தமாஷ், பாதி மெய்யாக –

ஒருநாள் கானும் அவனும் தனியாயிருக்கையில் கேட்டேன்: ஏன் சாம்பு, நீ பிரம்மசாரியா, கல்யாணம் ஆகாதவனா? உனக்கு செக்ஸ் தேவைப்படவில்லையா?” நாங்கள் சகஜமாகவே பழகினோம்.

‘சொல்லித்தான் ஆகனுமா?” என்னை ஒருமாதிரி யாகப் பார்த்தான்.

“சொல்லேன், என்ன ஆகிவிடப் போறது?’ ஆனால் அவன் பார்வை அலரிப் போயிருந்தது.

“சரி சொல்றேன். நான் வீட்டை விட்டு ஓடிவந்ததே அதே காரணம் தான். இவாளுக்குக்கூட உண்மை தெரியாது. உன்னிடம் சொல்றேன்.

நான் இப்போ சொல்ற கட்டத்தில், என் வீட்டில், ஒண்டுக் குடித்தனமா ஒரு ஜோடி வந்தது. குழந்தை குட்டி யில்லை. மாமிக்கு முப்பது வயசிருக்கும் வர்ட்டசாட்ட மாயிருப்பாள்.

ஒரு மத்தியானம் வீட்டில் எங்கள் இருவரைத் தவிர யாருமில்லை.

‘சாம்பு, தாயக்கட்டான் ஆடலாமா? ஆட்ட சுவாரஸ்யம். காய் நகத்தற சிக்கலான யோசனை யில் மாமி எழுந்து போனதுகூடத் தெரியல்லே. கதவுத் தாழ்ப்பாள் விழற சத்தம் கேட்டுத் தலைநிமிர்ந்தால் –

சாம்பு கண்களைப் பொத்திக் கொண்டான். அந்தத் தருணம் அவனை இப்போது ஊடுருவுகையில் உடல் பூரா ஒருமுறை அவனுக்குக் குலுங்கிற்று.

“அவள் என்னை அழிச்சாள்; நான் பஸ்மமாப் போனேன்னுதான் சொல்லனும். அந்தக் காரியத்துக்கு, அதுவும் அவளோடு, நான் இன்னும் தயாராகல்லே… என்னவோ அருவருப்பா, அசிங்கமா அந்த ‘ஷாக்’ தான் மிச்சம். அந்தச் செய்கையில் எனக்கு எந்தப் பங்கு மில்லை.

அவளுக்குக் காரியம் முடிஞ்சதும் அவள் ஆடையைச் சரிப்படுத்திக் கொண்டே.

“சாம்பு, நீ No Good, ஆனால் எனக்கு யாருமே No Good. என் அதிர்ஷ்டம்… சாம்பு, நீ சமத்தாயிருப்பேன்னும் நினைக்கறேன். இல்லாட்டா, உன் பாடுதான் கஷ்டம். விவகாரம்னு வந்தால், உன்னை நம்புவாளா, நான் சொல்றதை நம்புவாளா? நீயே யோசனை பண்ணிக்கோ.’

என்னைச் செல்லமாகக் கன்னத்தில் தட்டினாள்,

அப்புறம் எனக்கு வீடே கிலி ஆயிடுத்து. எந்த சமயத்தில் என்ன பண்ணுவாளோ என்கிற பயத்தோடு அங்கே என்னால் வாழ முடியல்லே. வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். அன்னி தாயக்கட்டானை ஆயுளுக்கும் என்னால் மறக்க முடியாது. அது தாயக்கட்டானே அல்ல. நான் மாட்டிக் கொண்டு, இன்னமும் வெளியேற முடியாமல் தவிக்கும் சிலந்திவலை! ரவி, நீ இப்போ சொல்லனும்” என் கைகளைப் பற்றிக் கொண்டான். ‘நான் பிரம்ம சாரியா, கல்யாணமாகாதவனா?”

அவன் விழிகளைப் பார்க்க சகிக்கவில்லை. தலை குனிந்தேன்.

தாரகராமன் இறந்து அவன் அதிக காளில்லை. ஆறு மாதங்களுக்குள் ஒருநாள்-ஒரேநாள் ஜூரம்…நான்தான் கொள்ளி இட்டேன். அப்படித்தான் அவன் கடைசி இஷ்டம், ஆயுளுக்கும் கிளைக்க முடியாதபடி பஸ்பமாகி விட்ட வனுக்கு என் கொள்ளி அதிகப்படி அதனால்தான் அவன் இஷ்டம் அப்படியோ?


உமா:

“ஹல்லோ, உமா ஸ்பீக்கிங்…அங்கே யாரு? ஒ ராதா என்ன விசேஷம்? ஒl கோ, தாங்க்யூ. Don’t fee like it, Not in the mood, sorry, some other time…வெச்சுட்டுமா?Bye Bye..”.

‘ஷாப்பிங்காம்…’

I hate shopping.

I hate T. V.

I hate pictures.

I hate myself

above all

I hate you-you…


எப்போ எங்கள் பாதை பிசகிப் போச்சு? இன்னும் வெளிச்சமாத் தெரியல்லே. எப்படியும் மாமியாரும் பூlதரும் இருந்தவரை மேலுக்கு வரல்லே.

மாமியாரின் அந்திமகாலத்துலே அவர்தான் எல்லாம் செய்தார். எல்லாம்னா, எல்லாமே…ஆமாம், யாராவது ஒருத்தர் செய்யனும்! அம்மாவுக்குப் பிள்ளை செய்ய மார் செஞ்சுட்டுப் போகட்டுமேன்னு நான் எனக்கு சமாதானம் சொல்லிண்டாலும், அம்மாவுக்குப் பணிவிடை விஷயத்தில் நான் . இன்னும் ஆதரவாக இருந்திருக்கலாமோன்னு இப்போ தோண்றது. ஆனால் வியாதியஸ்தாளைக் கவனிக் கறது படு Bore. நீ ஒருநாள் படுக்கமாட்டியா…உனக்கு ஒருத்தர் செஞ்சாக வேண்டாமா?’ என்கிற கேள்வி எனக்கே தெரியறது. அதென்னவோ சொல்லத் தெரியல்லே.

சொல்லத் தெரியாமல் இல்லை. உன்னையே நீ ஏமாத்திக்கறே…இந்த வயசில் நீ இப்படி சொல்லிண்டால், யாருமே சிரிப்பா. இது என்ன தெரியுமா? பிறரைப் பற்றியே எண்ணம் இல்லாத அப்பட்ட சுயநலம்.

அம்மாவின் கடைசி சமயத்தில் கான் பக்கத்தில் இல்லை. அவர் தான் ஒருவாரமா, அம்மாவின் படுக்கை யண்டைவிட்டு அசையாமல், அன்ன ஆகாரம்கூட மறந்துட்டு..

தற்செயலா அன்னிக்கு மயிலாப்பூர் போயிட்டேன். ஆமாம்: தினமும்தான் அம்மாவுக்கு அப்படியிருக்கு. அதற்காக காரியங்கள் கின்னுட முடியுமா அங்கேகூடக் கேட்டா : என்னடி இந்த சமயத்தில் நீ அங்கேதானே இருக்கனும் கான் ஒன்றும் பதில் பேசல்லே. மறுநாள் காலையே ஆள் வந்துட்டான். வீட்டில் மத்தவாளோடு சேர்ந்து தான் போனேன்.

எனக்குப் பிணம்னாலே பயம். ஆனால் இதை இவா கிட்டகூட என்ன சொல்லிக்க முடியும். இந்த உண்மைக் காரணத்தை?


அவர் எதுவுமே என்னைக் கேட்டுக்கல்லெ. அதுவே குத்திப்பிடுங்கறது. பரவி, ரெண்டு அடிவேனும்னா என்னை அடிச்சுடேன்!


அப்புறம் இந்த பூரீதர் பண்ணின துரோகத்தை…

பெற்ற ஒரு பிள்ளையும் சம்பாதிக்கறேன்டா ராஜான்னு வாயில்கூட சரியா பேர் நுழையாத வெளி காட்டுச் சீமைக்குப் போயிட்டான்னா, எனக்கு இருக்கற ஒரு பிடிப்பும் போயிடுத்து. போய்வருஷம், அஞ்சாறது. 07ಕ್ಕಹಿ ஒரு கடிதாசு என்னவோ வரது-என் பேருக்குத் தான் வரது, அவரும் என்ன எழுதினான்னு கேக்கல்லெ, அவர் கேக்கல்லே நானும் காண்பிக்கல்லே. அங்கேதான் என்னவோ ஒரு வரட்டு கெளரவம் தடுக்கறது. அவர்தான் கேட்டால் என்ன? அவருக்கு ஆபீஸ் அட்ரெஸ்ஸுக்கு தனியாப் போடறானோ என்னவோ? அப்படி ஒண்றிரண்டு அவர் என் டேபிள்மேல் வெச்சுட்டுப் போயிருக்கார். என்னிடம் அந்த பரஸ்பரம் இல்லேன்னு தானும் காண் பிக்கறதை நிறுத்திண்டிட்டாரோ என்னவோ? ஆனால் எனக்குத் தெரியும். பிள்ளைக்கும் அப்பாவுக்கும் தான் என்னைக் காட்டிலும் ஒப்புறவு ஜாஸ்தி.

ஆனால் அவருக்கு தனியாப் போடுவான்னு தோணல்லே. எனக்கு எழுதறபோதே அப்பா, அம்மா வுக்கு நமஸ்காரம்னு சேர்த்துப் போட்டுடறான். தபால் செலவும் கொஞ்சமாவா இருக்கு ரீதர் இதெல்லாம் பாக்க றவன்தான். ஆள் சுபாவத்திலேயே கெட்டி. ஹூம்…

‘நீங்கள் சொல்லக்கூடாதா… இவன் இப்படிக் கரை தாண்டிப் போய்த்தான் ஆகனுமா? நமக்கு இருக்கிறது இவனுக்குப் போதாதா?’ன்னு நான் விக்கி விக்கி அழுத போது இவர், அவனுக்கு வயசாகல்லியா…நீ இப்போ சொல்றேதெல்லாம் ஏற்கெனவே அவனுக்குத் தெரியாதா? நான் தனியா எடுத்துச் சொல்ல மாட்டேன். அவனுக்குத் தோணினதை அவன் செய்யறான். அவன் விதியை அவன் நூற்றுக்கறான். அதுதான் முறை. உனக்கு கான், எனக்கு ,ே மிஞ்சறோமா பாரு…’

அப்போது என்னை அணைச்சாற் போல் என் தோள் மேல் அவர் கைப்பட்ட இடத்தைத் தொட்டுப் பார்த்துக்க றேன். பிரயோசனம்…? அது அந்தநாள்.

எந்த நாள்? அதுதான் புரியல்லை. நானா நெனைச்சுக்கற நாளோ?

அது அது அப்படி அப்படி விட்டுப் போச்சுன்னா விட்டுப் போனதுதான். அப்புறம் ஒட்றதுன்னா சதை யோடு சேர்ந்து வளர்றது கிடையாது. கோந்து, Fevicol போட்டு ஒட்டிக்கற சமாசாரம்தான். அதுதான் பயமாயி ருக்கு.

“No sun in life
No fun in Life
Life is not for fun, my gal.
lt may be a big joke
But certainly no fun.”

இதை கான் சொல்லவில்லை. என்னிடம் இந்த பாஷை எது? ஆனால் நள்ளிரவில் விழிப்பு வந்து, இனி தூக்கத்தில் இமைகள் மூடாது எனத் தெரிந்தபின் ஜன்னல் வழி சிலவு மயக்கும் முழுநிழல் அரைஒளி முக்கால் இருள் நிலையில், நிலைக்கண்ணாடியிலிருந்து என் முகம், எனக்கே புதுமுக மாக-அப்பவும் என்னிடம் சொல்லவில்லை, இவ்வார்த்தை களைச் சிரிக்கிறது. ஜன்னல் கம்பிகளின் கிழற்கோடுகளே புலியின் வரிக்கோடுகளாக மாறிக் காட்டும் மருள் நேரம்.

ஸ்ரீதர், இந்தநேரத்தில் நீ.என்ன பண்ணிக் கொண்டிருப்பாய் ? உன் ஊரில் இப்போ பகலா, விடிவேளையா? தனியாயிருக்கே. அம்மாவை கினைக்கிறாயோ? சிகரெட், சிகரெட்-? இந்த பழக்கம் எல்லாம் இங்கிருக்கும்போது உனக்கு இல்லை. ஆனால் தனிமையைக் கொல்லும் சாக்கில் தானே இந்தப் பழக்கம் ஆரம்பிக்குமாமே…? ஆனால் சிகரெட் இப்போ யார் பிடிக்கல்லே? அதைக் கெட்டபழக் கம், பாபம் என்று சொன்ன நாளெல்லாம் போயிடுத்து. அத்தோடு கிக்கறயா…இல்லை, இன்னும் வேறு ஏதானும்?

நானா நெனச்சுக்கறேன், நானே என்னைப் புண்படுத் திக்கறேன், நானே அனாவசியமா அகியாயம் கினைக்கி றேன். எனக்கே தெரியறது. ஆனால் மனசு என்கறது அதற்குத் துணையுமில்லாமல்-சும்மா இருக்கமாட்டன்கற தேடா… என்னடா செய்வேன், என் மகனே? சுருக்க வந்து டேன்! முடியல்லேடா!


இன்று பிற்பகல் சுமார் மூனுக்கு பழைய ட்ரங்கைஎதுக்குன்னுகூட மறந்து போச்சு. இப்போ கொஞ்ச நாளா அடிக்கடி Current Off-னு மெழுகுவத்திக்கா…? கொசு உபத்ரவம் பொறுக்காமல் டார்ட்டாய்ஸ் பாக்கெட் டுக்கோ? வேலைக்காரிக்குப் பழம்புடைவைக்கா? இல்லை, அது அது அப்பப்போ அகப்படறப்போ எல்லாத்துக்கு மேவா? ட்ரங்கைக் குடையறப்போ, ஒரு ப்ளாஸ்டிக் தம்ள ரில் பித்தளைத் தாயக்கட்டை ஒரு ஜோடி, சோழி, புளியங் கொட்டை, ஒரு சாக்பீஸ் உள்பட…இது இங்கே எப்படி வந்தது? அம்மாவின் வேலையாத்தான் இருக்கும்.

மாகாளிக்கிழங்கு ஊறுகாயோடு Biz பவுடர் வடாத் துடன், கருவேலம் பட்டைப்பொடி (இங்கே தேய்க்கறது பேஸ்ட், ஆனால் அது பற்றி அவளுக்குக் கவலையில்லை.) விளக்குக்குப் பஞ்சுத்திரிக்கட்டு. இதுமாதிரி அப்பப்போ அனுப்பற சீரோடு இதுவும் வந்து இங்கு அடைச்சிருப் பேன்

வாசற்கதவு Belt சத்தம் கேட்டுப் போய்த் திறந்தால் இவர் சிக்கறார். ஆனால்… இதென்ன கூத்து ஆச்சரியத் தில் பின்னடைந்தேன்.

அம்முகத்தில், லேசாக லஜ்ஜையின் திட்டு, கான் கதவைத் திறந்திருந்த இடைவெளிக்குள் உடம்பை இடுக்கிக் கொண்டு உள்ளே வந்தார், கையில் என்ன? ஆ. How Strange: ஒரு ஆட்டம் போடுவோமா?’’

‘இது எந்த சாமிக்கு வேண்டுதலை? எந்தக் காரிய சித்திக்குக் காணிக்கை: ஸ்னானம் ஆச்சா, இனிமேல் தானா?”

எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு: கூடவே வெறுப்பு. இதென்ன கோணங்கித்தனம்? ஆனால் ஆசாமி இடிச்ச புளி. ஏதோ காரணம் இருக்கணும்.

“ஸ்னானம் பண்ணலாம். ஆனால் முன்னால் ஒரு தாயக்கட்டான் போடலாம்…’

‘அதுக்கென்ன அவசரம்? ஸ்னானம் கூடப் பண்ணாமல்?”

என்மேல் படாது, என் கை தம்ளரைப் பிடுங்கிக் கொண்டு, உடனே தாழ்வாரத்தில் உட்கார்ந்து கட்டானை வரைய ஆரம்பித்து விட்டார். நானும் எதிரே உட்கார்க் தேன். திடீரென இவரிடம் ஒரு ஈர்ப்புசக்தியை உணர்ந்தேன்.

‘உன் கையில் தாயக்கட்டையைப் பார்த்தவுடன் என் தலையையும், நம் தலை விதியையும் இணைத்த ஏதோ ஒரு சேதியை-நம்மை மீறிய சக்திகள் அனுப்பியிருக்கும் சேதியைப் படிக்கிறேன்-‘

கேலியில் என் கீழ்உதடு சுருண்டது; என்னைச் சினிமாப் பித்துனு கேலி செய்வதில் குறைச்சலில்லே. ஆனால் எனக்குக் கூட இப்படி ஒரு சினிமா டயலாக் தோணாது!’

‘Perhaps So…வாழ்க்கையில் சில நெருக்கடி கட்டங்கள் நேர்கையில், வேஷங்கள் உரிந்து அந்த சமயம் நிர்வாணம் ஆகும்போது, அது Unreal ஆக Melodramatic ஆகப் படத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோம், கொஞ்சநாட்களாகவே-உனக்குத் தெரியவில்லையா?”

குரலில் ஓர் அசாதாரண நிதானம். அமைதி வாயடைத் துப் போனேன்.

‘என்றேனும் ஒரு நாள் நாம் இந்த வேளையை கேருக்கு நேர் சந்தித்துத்தானே ஆக வேண்டும்…? வேளை வந்துவிட்டது.”

எனக்கு உடம்பு பூரா ‘ஜிவ்’. This Man Means Business. இந்த மனிதன் திடீரென அன்னியனாகி விட்டான். நடுக்கூடத்தில் உட்கார்ந்திருக்கையிலேயே, ஏதோ இடு வகையில் மேல்கூரையைப் பிரிக்கிறான்…இந்த மனிதன் அஞ்சத் தக்கவனாகி விட்டான்.

அஞ்சுகையிலேயே மனம் ஏதோ ஒரு விடுதலையில் துள்ளிற்று. என் உண்மையைச் சந்திக்கப் போகிறேன். காத்திருந்த இத்தனை நாட்களும் ஒரு வழியா பின்னால் போச்சு… அப்பாடா! உங்கள் பயமுறுத்தல் இப்பவோடு சரி.

“Yes உமா… இந்தப் பொய்மையைக் கலைச்சாகனும். காம் விவரங்களுக்குள் போய் அலசிக் கொண்டு ஒருவரை யொருவர் குற்றம் சொல்லிக் கொண்டு, ஒருவரையொருவர் இன்னமும் ரணமாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். கட்டம் முற்றிப் போச்சு. காம் கணவன்- மனைவியாக வாழவில்லை. ஒருவரையொருவர் பலப்பரீட்சையில் இறங்கி விட்டோம். இது கணவன் மனைவியிடையே வரக்கூடாது. ஆனால் வந்துவிட்டது. யார்மேல் தப்போ யார் மேலானும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் வந்து விட்டபின் பரீட்சை நடந்தே ஆகணும். நடக்கட்டும். இதற்கு ஒரு முடிவு கண்டாகணும். அதற்காகத்தான் இப்போ சொக்கட்டான் ஆடப் போகிறோம், பணயத்துக்கு’

‘பணயமா?’-ஆச்சரியத்தில் கிமிர்ந்தேன்.

*Yes’’

‘அஞ்சு பைசா, பத்து பைசா?’’

‘ஏன், அதைவிடப் பெரிதாக உன்னால் நினைக்க முடியல்லையா?”

“ரூபாய்.”

புன்னகை புரிந்தார்.

‘பெரிய ரூபாய்க்கு நான் எங்கே போவது என்ககை களைக் கேக்கறேளா?

பெருமூச்செறிந்தார். “ஆட்டத்தைத் துவங்குவோம். முடிந்து, கெலிப்பு தோற்பு நிச்சயமான பின் சொல்கி றேன்.”

“நலமே. Childish.“

‘அதென்ன அவ்வளவு சுலபமாகச் சொல்லிட்டே?” கட்டானின் நடுக்கோடுகளையும் மலைகளையும் பட்டை தீட்டிக் கொண்டு அதைத் தெளிவாக்குவதில் அவர் கவனம் ஆழ்ந்து –

அந்த நெற்றியில் அகலமும், கறுகறு புருவங்களும், புருவமத்தியில் ஒரு வடு-செதுக்கினாற்போன்ற அந்த வாயும்-இப்பத்தான் பளிச்செனத் தெரிரியறது . Mr. G. ரவிச்சந்திரன், You are a Handsome Man.

‘இந்த விளையாட்டின் பரம்பரை வேதகாலத்தையே அல்லவா தொடறது. பரமேஸ்வரனும் பார்வதியுமே கைலாசத்தில் ஆடினதாக ஐதீகம் பேசறது. பாரதக்கதை யின் அச்சே, இந்தச்சொக்கட்டான் ஆட்டத்தில் தானே சுழல்கிறது! பொறுக்கவா? கோர்க்கவா?’சினிமாப் பிரியர் களின் Favourite moment அல்லவா? Enough-முதல் ஆட்டம் சாமிக்கு…’ கட்டை உள்ளங்கைகளில் ப ர ப ர வென்று தேய்த்து உருட்டினார். பன்னிரண்டு-இரண்டுக் கும் Blank Side. Faceless. சுவாமி ஆட்டம் Correct. இப்போ நீ?”

‘ஆடினேன். ஆடிவிட்டுக் கை கொட்டினேன்.

“எடுத்தவுடனேயே தாயமா? Beginner’s Luck!’’

எடுத்து ஆடினேன். மறுபடியும் தாயம்.

“Good, Good தாயம் என்கிறது லேசான சமாச் சாரமா? தாயமோ தலைவிதியோ…’

‘இதுக்கென்ன அவ்வளவு பெரிய வார்த்தைl?’’

‘Why not? ஒவ்வொரு தாயமும் காய்க்கு ஒரு பிறவி. Then the Excitement அடுத்து விழப்போகும் தொகையின் மர்மம் கட்டைக்குள் அடக்கம். No wonder, it is the Game of Life itself. மறுபடியும் தாயமா? So your luck holds on?”

எனக்கு மூன்றுகாய்கள் இறங்கிய பின்னர்தான் அவருக்கு முதல் தாயமே விழுந்தது. அப்புறம் நேரம் பொறுத்துக் கட்டைகளுக்கு மனமே இல்லாதுபோல் இன்னொரு தாயம். ஆனால் அவர் காய் இறங்கி வெளி வந்ததும் என் காய் காத்துக் கொண்டிருந்தது. பன்னி ரண்டு, ரெண்டு, இரண்டுக்கு வெட்டி, பன்னிரண்டுக்கு முதல் பழம் ஏறினேன்.

அவருக்கு அடுத்த ஆட்டத்திலேயே இரண்டு தாயங்களும், ஒரு மூச்சில் சொல்லி அடங்காத மாதிரி நீண்ட தொகையும் –

எனக்கு ஆட்டத்தில் சூடும், ரோஷமும் பிடித்து விட்டன. கட்டைகளை வீசிப் போட்டேன். நெருக்கிப் போட்டேன். அவர் காய்களை என் காய்கள் வெட்டின. வீழ்த்தின. துரத்தின, மடக்கின, தப்பின.pincer moves.

எதிர்க்காய்களை வெட்டும் ஒவ்வொரு சமயமும் என்னுள் ஒரு குருர மகிழ்ச்சி பொங்கிற்று. இத்தனை நாட்கள் என்னுள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் வடிகால கண்டது. இந்த மனுஷனை ஒரு பழம்கூட எற விடக் கூடாது. முழுக்கப் பழிவாங்கணும். அப்போத்தான் எனக்குக் கூந்தல் முடிச்சமாதிரி. ஆனால் அப்படி இவன் உனக்கு என்ன தீங்கு செய்தான்? I don’t know. I don’t care. இவனுடைய ஆணவத்தை பூரா அழித்தாகணும். கட்டைகளும் என் பங்கில் இருந்தன.

The hunter and the prey. ஒன்றை யொன்று ஒன்றுக் கொன்று எது எந்த சமயத்தில் இடமாற்றம் இது தான் த்ரில். என்னை வெறி பிடித்துக்கொண்டது. பலப்பரீட்சை யாம்! உங்கள் இஷ்டப்படியே, உங்கள் கிபந்தனைப்படியே, You are having it.

என் கடைசிக் காயைப் பழமெடுத்து தாயக்கட்டை களை வீசி எறிந்தேன்.

“ஐயா, ஆட்டம் இழந்தவரே, இப்போது என்ன சொல்கிறீர்கள்? உம்முடைய பணயத்தைக் கக்கும்!’

‘உள்ளே போய்க் குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டு வா!’-குரல் வெகு அமைதி.

“படம் தொடர்கிறதா’

‘இல்லை, விளக்கேற்ற கேரமாகி விட்டதே’

ஆம். இப்போத்தான் எனக்குத் தெரிந்தது. இத்தனை நேரமாகி விட்டதா? விளக்கை ஏற்றிக் கொண்டு வந்தேன்.

‘தாயக்கட்டானின் நடு மலையில் வை’

சொன்னபடி. எழுந்து கின்றார். திடீர்னு என்ன உயரம்?

“உமா, இந்த வீடு.வாசல்.இதில் அடங்கிய சகல சொத்துக்கள், மேலும் என் சுய சம்ப்ாதனையில் வாங்கிப் போட்டிருக்கும் நிலபுலன், என் பாங்க் பாஸ்புக்,எல்லாமே உனக்குச் சொந்தம்… எனறுமே இவை உன் லுடையவைதான். நம் உறவு சகஜமாக இருந்தால் கம் முடையது என்கிற முறையில் இருந்திருக்கும். ஆனால் இப்போதிலிருந்து எல்லாம் உனக்கு மட்டுமே சொந்தம். இவைமேல் எனக்கு இனி எந்த உரிமையும் இல்லே…’ என்பதற்கு அடையாளமாக தன் மழித்த தலையைத் தடவிக் கொண்டார். “இந்த நிமிஷத்திலிருந்து, நான் இன்னும் இங்கு கின்றுகொண்டிருப்பது உன் தயவு, உன் னிடம் கேட்காத அனுமதி…’

“அப்படின்னா? எனக்கு ஒண்னும் புரியல்லியே?’ உண்மையிலேயே திகைப்பாயிருந்தது.

உள்ளங்கைகளை விரித்தார்.

“I am going away…பலப்பரீஷை முடிந்தது.’

-வார்த்தைகளின் கனம் அந்தக் குரலின் அழுத்தத் தில், என்னுள் அமிழ்கையில், அர்த்தம் தோய்கையில், என் முழங்கால்கள் என் கீழ் இற்றன. காலடியில் பூமி வாய் திறந்தது.

“No No!! No!!!’ என்னுள் கற்கள் இடிந்து அவை களுடன் நான் சரிந்து அவர் முழங்கால்களைப் பற்றிக் கொண்டேன்.

“எனக்கு நீங்க வேணும்! நீங்கள் வேனும்!! நீங்கள் தான் வேனும்!!!’

-அடிவயிற்றிலிருந்து இந்தக் கதறல், மடையுடைந்த இந்தக் கண்ணிர்ப் பெருக்கு, அதில் என் குளிப்பு… தினம் என்னளவாய் இத்தனை நாட்களாக கல்லாய்க் கனத்து விட்ட என் இதய பாரம் இந்தக் கண்ணிர் ஸ்னானத்தில் அதன் கரையல் அம்மாடி-இதுவரை எதற்கேனும் அழுத தாகவே எனக்கு நினைவில்லே…எல்லாமே புதுமை. அழுகை இத்தனை மகத்தான அனுபவமா?

கன்னத்தில் கண்ணிர் புரண்ட வண்ணம் அவரை அண்ணாந்து நோக்கினேன்.

பனிப்படலத்தில் தெளிவு மங்கிய மலைச்சாரல்போல் ஏதோ வகையில் முடிவற்றவனாய் பயமாயிருந்தான். ஆனால் நான் மலையின்அடிவாரத்தில் இருக்தேன். அதுவே தான் என் தைரியம்! என் உண்மை இவரன்றி வேறு எது?

குத்துவிளக்கின் வெளிச்சத்தில்-

தாயக்கட்டைகள், விழுந்திருந்த நிலையில்,

தாயம் –

கண் சிமிட்டிற்றோ?

– புற்று (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1989, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *