மும்பையில் உள்ள ஓரளவு புகழ் பெற்ற கட்டடம் கட்டும் கம்பெனியின் உரிமையாளரான பரசுராமன் ஏதோ யோசனையில் இருந்தார்.
உள்ளே வந்த மேலாளரின் க்கும்…என்ற கணைப்பை கேட்டு சற்று திருக்கிட்டு வாங்க நமசிவாயம், என்றவர் அன்றைய அலுவல்கள் என்னென்ன? என்று கேட்க, நமசிவாயம் அன்றைக்கு அவர் மும்பையில் உள்ள இதே போல உள்ள கட்டிடம் கட்டும் கம்பெனிக்கு செல்லவேண்டிய நிகழ்ச்சியை ஒப்பிவித்தார்.
சரி என்னைய பதினோறு மணிக்கு ஞாபகப்படுத்துங்க, என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த பஸ்ஸரை அமுக்கினார். அதற்குள் நமசிவாயம் அவா¢ன் அனுபதி பெற்று வெளியேறியிருந்தார்.
உள்ளே வந்த காரியதரிசியிடம் சில கடிதங்களை டிக்டேட் பண்ணச்சொன்னார். சரியாக பத்து மணி ஆனதும் உள்ளே வந்த நமசிவாயத்தை பார்த்ததும், திரும்பி காரியதரிசியிடம் ஓகே, நீங்க போலாம், என்று காரியதரிசியை அனுப்பி விட்டு நம்சிவாயம் கொஞ்சம் உட்காருங்க அஞ்சு நிமிசத்துல கிளம்பிடலாம் என்று சொல்லி விட்டு ஒய்வறைக்குள் நுழைந்தார்.
அரை மணி நேரத்தில் இருவரும் காரில் அந்த அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.வாசலில் இருந்து சற்று தொலைவு தள்ளி காரை நிறுத்த சொன்ன டிரைவா¢டம், கூப்பிட்டால் வந்தால் போதும் என்று சொல்லிவிட்டு இருவரும் அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.
ஏற்கனவே ஒருவர் நின்று கொண்டிருக்க, இவர்கள் இருவரையும் கை குலுக்கி வரவேற்று அங்குள்ள அதிகாரியின் அறைக்குள் அழைத்துச்சென்றார்.
அதிகாரி இவர்கள் இருவரையும் கைகுலுக்கி வர்வேற்று உட்காருங்க என்று சொல்லவும் மூவரும் உட்கார்ந்தனர்.
உங்க எஸ்டிமேட், ரிப்போர்ட் எல்லாம் பார்ததுட்டோம், பக்காவா இருக்கு,இப்ப நாங்க வேலை செய்ய போற இடம் தமிழ் நாட்டுல இருக்கற கோயமுத்தூர் டவுனுக்கு பக்கத்துல
இருக்கற பத்மநாதபுரம் அப்படீங்கற ஊர்ல ஆரம்பிக்கிறோம்.நீங்க கொடுத்த எஸ்டிமேட் பிரகாரம் நீங்க செய்ய முடியும்னா எங்களுக்கு ஒ.கே. நாளைக்கு உங்களுக்கு அப்ரூவல் காப்பி
கொடுத்துடறோம். மேற்கொண்டு உங்க வேலைய ஆரம்பிக்கலாம்.
காரில் இருவரும் திரும்பிக்கொண்டிருந்தனர். நமசிவாயம் சார் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே, என்று தயக்கத்துடன் ஆரம்பிக்க, சொல்லுங்க நமசிவாயம்
என்று ஊக்கப்படுத்தினார்.
இல்ல நாம கட்டிக்கொடுக்கறோம்னு சொன்ன கம்பெனி நம்மளுதை விட சின்னதுதான், அப்படியிருந்தும் அவங்க நம்ம கூட போட்டி போட்டு அந்த காண்ட் ராகடை பிடிச்சிட்டாங்க, அதுவே நம்பளை விட குறைஞ்ச லாபம் வச்சுத்தான். நீங்க அதை விட குறைஞ்சு அவங்க கிட்டயே கேட்டு அந்த காண்ட் ராக்டை வாங்க வேண்டிய அவசியம் என்ன?இதனால நமக்கு எந்த லாபமும் கிடைக்கப்போறதில்லையே?அதுவுமில்லாம அவங்களுக்கு எந்த செலவுமில்லாமல் அந்த லாபத்தை எடுத்துடறாங்களே?
உண்மைதான் நமசிவாயம், லாபம் வேணா குறைவா கிடைக்கலாம்,அதே நேரத்தில அந்த லாபம் அந்த ஊருக்கு ஏதோவொரு வகையில பயன்படணும். அதனால இந்த வேலையில எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அங்க என்னோட சொந்த கிராமமும் இருக்கு.அதனால அந்த ஊருக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு பாக்கலாமில்லையா?
சார் நீங்களே ஒரு தடவை சொல்லியிருக்கீங்க, உங்க ஊர்க்காரங்கனாலதான் அவமானப்பட்டு திருட்டு ரயில் ஏறி மும்பை வந்தேன், அப்படீன்னு. இப்ப திடீருன்னு உங்க ஊர் மேலே பாசம் வந்திடுச்சே?
மெல்ல சிரித்துக்கொண்டவர், நமசிவாயம் அன்னைக்கு சொன்னதும் சா¢தான், இப்ப நான் செய்யப்போற காரியமும் சா¢யாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பாருங்க.
அதற்கு மேல் எதுவும் கேட்காமல் நமசிவாயம் அமைதியாக இருக்க பரசுராமா¢ன் நினைவுகள் இருபத்தி ஐந்து வருடங்கள் பின்னோக்கி போக ஆரம்பித்து விட்டது.
அது அழகான கிராமம், பரசுராமரின் அப்பா கண்டிப்புக்கு பெயர் போனவர், அந்த நடத்தையே அவருக்கு ஊரில் ஒரு மா¢யாதையை கொடுத்துக்கொண்டிருந்தது. அவருடைய மகனான பரசுராமன் அப்பொழுதுதான் பட்டப்படிப்பு முடித்து வீட்டிலிருந்தார்.
வீட்டில் சும்மா இருக்க விடவில்லை அவர் அப்பா, தினமும் தோட்டத்துக்கு வந்து விவசாயத்தை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டார். தினமும் காலையில் சைக்கிளில் தோட்டத்துக்கு வந்து அப்பாவுக்கு உதவியாய் இருந்து விட்டு மாலை வீட்டுக்கு வந்து விட வேண்டும்.
அப்பா அன்று வரவில்லை, தோட்டத்தில் தண்ணீர் இறைக்கும் பம்பு வேலை செய்யாததால், பிளம்பரை வரச்சொல்லி சா¢ செய்து விட்டு வீட்டுக்கு சைக்கிளை அழுத்திக்கொண்டிருந்தார் பரசுராமன்.
கொஞ்சம் காட்டு வழியாகத்தான் அவர் ஊருக்கு செல்ல வேண்டும், அப்பொழுது ஒரு பெண்ணின் அலறல் கேட்டு இவர் திகைத்து நின்று சுற்று முற்றும் பார்க்க சற்று தொலைவில ஒரு பெண்ணை இருவர் பிடித்து பலவந்த படுத்திக்கொண்டிருந்தது தெரிந்தது. இவருக்கு உயிர்மேல் பயம் இருந்தாலும் அன்று ஒரு குருட்டு ¨தரியமும், இளமையின் வேகத்தாலும் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அவர்கள் மீது மோதி, சட்டென கீழே குதித்து கீழே கிடந்த கற்களை எடுத்து அவர்கள் இருவர் மீதும் சரமாரியாக வீச ஆரம்பித்தார்.
திடீரென இந்த தாக்குதல்களை, எதிர் பார்க்காத அவர்கள் மிரண்டு ஒடி விட்டனர். அவர்கள் ஓடி விட்டது கூட தெரியாமல், கீழே குனிந்து குனிந்து கற்களை எடுத்து வீசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அந்த பெண்னே அவர் கையை பிடித்து நிறுத்தி ரொம்ப நன்றிங்க என்று சொன்ன பின்னால்தான் தன்னை உணர்ந்து வீசுவதை நிறுத்தி இந்த பெண் யாரென பார்த்தார்.
இந்த பொண்ணு நம்ம பரமசிவத்தோட பொண்ணுதானே,அப்பாவுக்கும் இவங்கப்பாவுக்கும் எப்பவும் ஆகாதே,பணத்திமிறு புடிச்ச ஆளாச்சே.டவுனுக்குள்ள படிச்சுட்டு இருக்கறதா சொன்னாங்களே.இந்நேரத்துக்கு இந்த பொண்ணுக்கு இங்க என்ன வேலை? கேட்க நினைத்தவன் ஏதும் கேட்காமல் இந்நேரத்துல எல்லாம் இந்த பாதையில வரக்கூடாது, அதுவும் இந்த நேரத்துல. அழுத்தி சொன்னான்.
சரி வா வீட்டுல விட்டுட்டு போயிடறேன், சொன்னவனை இவள் பதற்றத்துடன் இந்நேரத்துக்கு வீட்டுக்கு போனா தப்பா நினைச்சுக்குவாங்க, அதனால உங்க வீட்டுல இராத்திரி இருந்துட்டு காலையில கொண்டு போய் விட்டுடுங்க. சொன்னவளை மறு பேச்சு பேசாமல் வீட்டுக்கு அழைத்து வந்தான் பரசுராமன்.
வீட்டில் அப்பா “முடியாது”, வயசுப்பெண்ண வீட்டுல வச்சிருந்தா ஊர் ஏதாவது சொல்லும், உடனே கொண்டு போய் விட்டுட்டு வந்துடலாம், பிடிவாதமாய் இருந்தவரை இந்த பெண் காலில் விழுந்து தயவு செய்து கொஞ்சம் கேளுங்க, நான் இந்நேரத்துக்கு வீட்டுக்கு போனா என்னை மட்டுமல்லாம உங்க பையனையும் தாறு மாறா பேசுவாரு, அதனால காலையில நீங்களே கொண்டு போய் விட்டுடுங்க. அவரும் சா¢ என்று தலையாட்டிவிட்டு விருப்பமில்லாமல் சென்று விட்டார்.
காலை விடியலில் எழுந்து பார்த்த பொழுது அந்த பெண் போயிருந்தாள்.பரவாயில்லை வீட்டுக்கு போய் விட்டாள். சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் என்று புலம்பிக்கொண்டே, அப்பா தோட்டத்துக்கு கிளம்ப தயாராகினார்.
காலை ஒன்பது மணியிருக்கும், வெளியே கச முச என்ற சத்தம் கேட்டு வெளியே பார்த்தார் பரமசிவன். வெளியே பரமசிவத்துடன் நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். அவர் பெண் விசயமாகத்தான் ஏதாவது சொல்ல வந்திருப்பார் என்று கருதி வேகமாக வெளியே வந்த பரசுராமா¢ன் சட்டையை பிடித்த பரமசிவம் எங்கடா என் பொண்ணை ஒளிச்சு வச்சிருக்க?அரண்டு விட்டான் பரசுராமன்.
சட்டையை விடுங்க. அதற்குள் வந்தவர்கள் சமாதானப்படுத்தி,பிடித்திருந்த சட்டையை விடுவித்து விட்டு தம்பி நேத்து உங்களோடு ஒரு பொண்ணு உங்க வீட்டுக்கு வந்தாள் இல்ல, அந்த பொண்ணை எங்க ஒளிச்சு வச்சிருக்கிங்க?
அதற்குள் வீட்டு முன் கூட்டம் கூடி விட்டது. உள்ளிருந்து ஏதோ சத்தம் கேட்டு வந்த அம்மாவும் வெளியே வந்தவள் தன் மகனை சுற்றி சிலர் மிரட்டிக்கொண்டிருப்பதை கண்டு மிரண்டு போய் இவன் அருகில் வந்து என்னடா? யாரு இவங்க் எல்லாம்? இவங்க எதுக்கு உன்னை மிரட்டுறாங்க? இவன் அம்மாவிடம் நேத்து நம்ம வீட்டுல ஒரு பொண்ணு தங்கினாளில்லையா? அதை நாமதான் ஒளிச்சு வச்சிருக்கோம்னு நினைச்சுட்டு கேக்காறாங்கம்மா.
ஐயா என் புள்ளைக்கு ஒண்ணும் தெரியாது, இராத்திரி யாரோ அந்த பொண்ணை நாலைஞ்சு பேரு இழுத்து ரகளை பண்ணானு இவந்தான் போய் காப்பாத்தி கூட்டி வந்தான்,
அவங்கப்பா கூட அப்பவே அந்த பொண்ணை கொண்டு போய் வீட்டுல விட்டிடறேன்னு கிளம்பினார். அந்த பொண்ணுதான் காலையில கிளம்பறேன் அப்படீன்னு சொல்லிடுச்சு.
காலையில யாருகிட்டயும் சொல்லாம போயிடுச்சேன்னு இவங்கப்பா கூட வருத்தப்பட்டுட்டே தோட்டத்துக்கு போனாரு.
இவள் சொலவதை அவர்கள் மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்தனர்.அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தவர்கள், இவன் பக்கம் திரும்பி நாங்க இந்தம்மா சொல்றதை நம்பறோம். மறுபடி அந்த பொண்ணு உங்க கிட்ட வந்தா கண்டிப்பா எங்களுக்கு தகவல் தெரிவிக்கணும். மிரட்டுவது போல சொல்லிவிட்டு கிளம்பினர். அதற்குள் விசயம் கேள்விப்பட்டு பரசுராமனின் தகப்பனார் தோட்டத்திலிருந்து வந்து விட்டார். வந்தவர் இவனை பார்த்து உனக்கு ஏண்டா வீண் வம்பெல்லாம்? இப்ப பாரு நம்ப குடும்பததை சந்தி சிரிக்க வச்சுட்டயே?
அவா¢ன் தாக்குதலுக்கு நிலைகுலைந்து போனார் பரசுராமன். அதன் பின் ஊர் அவனை ஒரு விதமாக பார்ப்பதாக பட்டது. அந்த பெண்ணை பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கவேயில்லை.
ஊராரின் பாரவைகள் கேள்விக்குறியாய் இருந்தன.அப்பாவின் சொல் ஒவ்வொன்றும், வீட்டுக்குள் நிம்மதியாய் இருக்க விடவில்லை.பொறுத்து பொறுத்து பார்த்த பரசுராமன் ஒரு நாள் யாருக்கும் சொல்லாமல் மும்பைக்கு இரயில ஏறினார்.
கார் ஒரு குலுக்கலுடன் நிற்க, சட்டென தன் நினைவுகளிலிருந்து மீண்டு, இறங்கி தன் அலுவலகத்துக்குள் நுழைந்தார் பரசுராமன்.
வீட்டு முன ஒரு கார் வந்து நிற்க, அந்த தெருவே ஆச்சர்யத்துடன் காரை பார்த்த்து.சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த ஒரு முதியவர் தன் வீட்டு முன்னால் ஒரு கார் நிற்பதை பார்த்து ஆச்சர்யத்துடன் கமலா கமலா என்று சத்தம் கொடுக்க உள்ளிருந்து இதோ வந்துட்டேன் என்ற சத்தத்துடன் வந்தவளிடம் வெளியே கார் ஒண்ணு நிக்குது போய் பாரு என்று சொல்லியவாறு தட்டு தடுமாறி எழுந்து வெளியே வந்தார். அதற்குள் அந்த மாது முன்னால் வெளியே சென்று பார்க்க காரிலிருந்து பரசுராமன் இறங்கினார்.
அப்பாவின் காலை தொட்டு வணங்கியவரை திகைப்புடன் பார்த்த பெரியவரிடம், அப்பா என்னை தெரியலியா? நான் பரசுராமன், என்று சொல்லவும் அவர்கள் நம்ப முடியாமல்
திகைப்புடன் ஒரு நிமிடம் நின்றனர். மெல்ல அருகில் வந்த அவர்கள் மகனை தொட்டு தொட்டு தடவி மகிழ்ந்தனர்.அம்மாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்த்து.இனிமேல் மகன் தங்களை பார்க்க வரவே மாட்டானா? என்று ஏங்கி கொண்டிருந்த அவர்கள் முன்னால் இப்படி திடீரென்று வந்து நின்றதால் அவர்களுக்கு வந்த ஆனந்தத்தை எப்படி அனுபவிப்பது என்று புரியாமல், திகைத்து நின்று கொண்டிருந்த்னர்.சா¢ வா என்று அவன் கையை பிடித்து உள்லே அழைக்க..
அப்பா என்னை மன்னிச்சுடுங்க. நான் உங்க கிட்ட சொல்லாம போனதுக்கு மன்னிச்சுக்குங்க, என்றவர் நீங்க அனுமதி கொடுத்தா உங்க மருமகளை கீழே இறங்க சொல்லலாமா? என்று கேட்க வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் அவ்ர்கள் தலையசைக்க காரிலிருந்து அன்று சொல்லாமல் போன பெண் இறங்கினாள். கொஞ்சம் முகம் முதிர்ச்சி அடைந்து இருந்தது. கூடவே ஒரு பெண்ணும் பையனும் இறங்கினர்.
அப்பா அம்மா, அவர்களின் முகம் வாட்டமுற்றது, அப்படின்னா நீ தான் அந்த பொண்ணை கூட்டிட்டு போனியா? அன்னைக்கு இந்த ஊர் உன்னை பத்தியும், அந்த பெண்ணை பத்தியும் சொன்னது சா¢தானோ? அன்று இவரை திட்டி தீர்த்த அதே கோபத்துடன் கேட்டவரை அப்பா தயவு செஞ்சு நான் சொல்றதை கேளுங்க, அன்னைக்கு நான் மும்பைக்கு ரெயில் ஏறி உட்கார்ந்தவன் இரண்டு நாள் கழிச்சு எப்படியோ மும்பை போய் சேர்ந்துட்டேன். அங்கேயே மூணு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை தேடி அலைஞ்சு ஒரு கட்டட வேலை செய்யறவங்கிட்ட உதவிக்கு போய் சேர்ந்தேன்.
அப்பத்தான் ஒரு நாள் இந்த பெண்ணை இரயில்வே ஸ்டேசன் கிட்ட பார்த்தேன்.போய் உன்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படறேன்னு சண்டை போட்டேன். அப்ப அந்த பொண்ணு அழுது கிட்டே அதுக்கு தண்டனையா அவன் என்னை ஏமாத்திட்டு போயிட்டான். நான் மறுபடி நம்ம ஊருக்கு எப்படி போறதுன்னு மூணு நாளா இந்த இரயில்வே ஸ்டேசன்லயே நிக்கறேன், அப்படீன்னு அழுதப்ப, எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. நம்ம ஊரு பொண்ணு இப்படி இடம் தெரியாத இடத்துல நின்னா, நான் எப்படி சும்மா போக முடியும்.
அவளை என் கூட கூட்டிட்டு போனேன். அவள் உடம்புல இருந்த மிச்ச நகைகளை கழட்டி எங்கிட்ட நம்பிக்கையா கொடுத்தா. இதை வச்சு ஏதாவது செய்யமுடியுமான்னு கேட்டா? மனசில்லாமா வாங்கி அதை வச்சு சின்ன வேலைய வாங்கினேன்.கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தேன்.எனக்காக இராத்திரி பகல்னு பாக்காம கூட இருந்து உதவி பண்ணினவளை நான் மனைவியா ஏத்துட்டேன்.
உண்மையை சொல்றேன், அன்னைக்கு இந்த பொண்ணு இராத்திரி ஓடிப்போகறதுக்கு வந்துதான் ஆளுக கிட்ட மாட்டிகிட்டாங்கறதும், நம்ம வீட்டுல இருந்து விடிய காலையில அவன் கூடத்தான் இரயில் ஏறி போனாள், அப்படீங்கறதும். இவளை மனைவியா அடைஞ்ச பிறகுதான் எனக்கு தெரியும்.
இப்ப கூட நம்ம ஊர் பக்கத்துல மத்திய அரசுல வேலை செய்யறவங்களுக்கு அரசாங்கம் வீடு கட்டி கொடுக்குது. அந்த கட்டட வேலைகளை நான் தான் கட்டிக்கொடுக்கிறேன். அதுல வர்ற லாபத்துல இந்த ஊருக்கு ஏதாவது நல்லது செய்யலாமுன்னு வந்திருக்கேன்.
இதுக்கு மேலையும் என் மேலே உங்களுக்கு நம்பிக்கை வரலையின்னா,எப்ப
என்னை நம்புறீங்க்ளோ அப்ப நம்ம ஊரு பக்கத்துல இருக்கற ஓட்டல்லதான் தங்கி இருக்கேன்,. அங்க வந்து பாருங்க. சொல்லிவிட்டு காருக்குள் ஏறச்சொல்லி விருட்டென கிளம்பினார்.
ஏங்க திடீருன்னு அப்படி கிளம்பி வந்துட்டீங்க? இரவில் கேள்வி கேட்ட மனைவியிடம் காலையில என்ன நடக்குதுன்னு பாரு, சொல்லி விட்டு தூங்கி விட்டார்.
காலையில் கதவை தட்டிய சத்தம் கேட்டு விழித்தவர்கள், கதவை திறந்து பார்த்த பொழுது அந்தப்பெண்ணின் பெற்றோரும், பரசுராமா¢ன் பெற்றோரும் நின்று கொண்டிருந்தனர்.