கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 7,386 
 

அன்று வெள்ளிக்கிழமை. நான் பள்ளிக் கூடம் முடிந்து வீடு திரும்பியபோது மணி நான்கு. என் தம்பி என் கூட வரவில்லை. வாசலில் நான் வரும் மட்டும் என்றும் இல்லாத மாதிரி அம்மா காத்திருந்தாள். வழக்கத்தில் அவள் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருப்பாள். அப்பா வேலையாலை வர குறைந்தது ஏழுமணியாகும். அவளின் முகத்தில் எதோ பயமும் கோபமும் கலந்து தெரிந்தது.

“என்னம்மா இந்த நேரம் வாசிலிலை நிக்கிறாய்?” என்னால் என் பொறுமையை அடக்க முடியவில்லை. வாயில் விரலை வைத்து “உஷ்” என்றாள். இவள் ஏன சத்தம் போடதே என்கிறாள்? எதாவது அப்பாவோடை பிரச்சனையோ? என்றது என் மனம்.

“ஏன் அம்மா சத்தம் போடவேண்டாம் என்கிறாய்? என்ன விஷயம். எனக்குச் சொல்லன்”

“கிட்ட வா என்ற சைகை காட்டினாள் அவள். நான் கொண்ட வந்த புத்தகப் பையுடன் அவள் அருகே போனேன்.

“அப்பா இண்டைக்கு கெதியிலை வேலையாலை வந்திட்டார். வரக்கை சரியான கோபத்தோடை வந்தவர்”

“ஏன் என்ன நடந்தது அவருக்கு? சொல்லன்”

“அது சரி உண்டை தம்பி எங்கே. அவன் ஸ்கூலாலை உன்னோடை வரயில்லையா?”

“அம்மா இதென்ன விசர் கதை கதைக்கிறாய். தம்பி; ஸ்கூல் பாஸ்கட்;போல் டீமிலை இருக்கிறது உனக்குத் தெரியும் தானே. அது தான் பிரக்டிக்சுக்காக நிக்கிறாhன். நாளைக்கு மட்ச் இருக்கு. அது சரி அப்பா ஏன் கோபமாய் இருக்கிறார். வேலைiயிலை அவருக்கு எதும் பிரச்சனையா? அதை முதலிலை சொல்லு. நான் அவளை விடவில்லை.

“பிரச்சனைக்கு காரணமே உன் தம்பிதான்.”

“எண்டை தம்பியோ? ஏன் அவன் உனக்கும் அப்பாவுக்கும் அவன் மகன் இல்லையோ. என்ன நடந்தது எண்டு சொன்னால் தானே எனக்குத் தெரியும்.”

“எங்கடை மகன் மாதிரியே அவன் நடக்கிறான்? அவன் போக்கு கொஞ்சக் காலம் சரியில்லை. அப்பாவோடை முகம் கொடுத்து கதைப்பதில்லை. கேள்விகள் கேட்டால் அவன் வேண்டா வெறுப்பாய் சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு அலட்சியமாய் போய்விடுவான். தகப்பன் என்ற மரியாதை கூட இல்லை. அப்பாவுக்கும் எனக்கும் அவனை பற்றி சரியான கவலை. அப்பாவிண்டை சினேகிதர் முருகேசு மாமாவை உனக்குத் தெரியும் தானே?”

முருகேசு மாமாவி;ன் பெயரை அம்மா சொன்னவுடன் பிரச்சனை உருவாக அவர்தான் காரணம் என்று விளங்கிவிட்டது. அப்பாவும் அவரும் ஒட்டென்றால் ஒட்டு. கனடா வரமுன்பே அப்பாவுக்கு முருகேசு மாமாவைத் தெரியும். இருவரும் ஊரிலை ஒன்றாக படித்தவர்கள். பல காலச் சினேகிதம். நாங்கள் கனடாவுக்கு வர முன்பே முருகேசு மாமா கனடாவுக்கு வந்துவிட்டார். நாங்கள் கனடாவுக்கு வந்தவுடன் அப்பாவுக்கு வேலை கிடைக்க அதிக காலம் எடுக்கவில்லை. முருகேசு மாமா வேலை செய்த இடத்தில அப்;பாவுக்கு வேலை எடுத்துக் கொடுத்தார். அதாலை அப்பா அவர் கீறின கோட்டை தாண்டமாட்டார். எனக்கு முருகேசு மாமாவைப் பிடிக்காது. ஏன் என்றால் வீட்டை வந்தால் துருவித் துருவி நானும் தம்பியும் எப்படி படிக்கிறோம், யார் யார் எங்கடை நணபர்கள் , என்று தேவையில்லாமல் விசாரிப்பார். தம்பி ஸ்கூல் பாஸ்கட்போல் டீமிலை இருக்கிறது அவருக்கு தெரியும். முருகேசு மாமாவின் மகன் ரவி எவ்வளவு முயற்ச்சித்தும் டீமில் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதாலையோ என்னவோ தம்பியை சந்திக்கும் போது “ஸ்போர்ட்சை விட படிப்பு தான் முக்கியம். பாஸ்கட்போலிலை உன் முழக்கவனத்தையும் செலுத்தி படிப்பிலை கோட்டை விட்டிடாதே என்பார்”.

தம்பி என்னைப் போல அமைதியானவன் இல்லை. முகத்தை முறிக்கிற மாதிரி கதைப்பான். ஆனால் நல்லவன். அவனின் வித்தியாசமானப் போக்குக்கு காரணம் அவன் பிறந்து வளர்ந்தது முழுவதும் கனடாவில். ஊர் பழக்க வழக்கங்கள் தெரியாது. தமிழில்; என்னைப்போல் சரளமாக பேச மாட்டான். கனடாவுக்கு வரும் போது எனக்கு வயது மூன்று. தம்பி என்னுடன் மட்டும் தன் படிப்பைப்பற்றியும் தனது விருப்பு வெறுப்புகளைப் பற்றி கதைப்பான். அப்பாவுக்கு அவனுடைய போக்கு பிடியாது.

“உவன் வெள்ளை கனேடியன் போல வாழப்பாக்கிறான். சாப்பாடும் அப்படித்தான். தமிழ்பேச பழகெண்டால் முகத்தைச் சுழித்துப்போட்டு போகிறான். கோயிலுக்கு வா வெண்டால் சாக்கு போக்கு சொல்லுவான்.” என்று அடிக்கடி சொல்லிக் குறைப்படுவார். அவருக்கும் தம்பிக்கும் இடையே இடைவெளி விரிவடைந்து வருவதை என்னால் அறிய முடிந்தது. அப்பாவும் என் மூலமே அவனுடன் தொடர்பு கொள்வதை என்னால் அறிய முடிந்தது. அம்மாவுக்கோ ஒரு இக்கட்டான நிலை. என்ன சொன்னாலும் தம்பியும் அவள் வயிற்றில் பிறந்தவன் தானே. அதோடு அவனது தோற்றம் என் அப்பாவை போன்றது. இருவரும் ஒரே நட்சத்திரம் அது தான் இருவருக்கும் பொருத்தமில்லை என்பாள் அம்மா. ஆனால் நான் அதை ஏற்கவில்லை. காரணம் தம்பி பிறந்த மூன்றாம் மாதம் தான் அப்பாவுக்கு வேலை செய்யும் இடத்தில் சூப்பவைசராக பதவி உயர்வு கிடைத்தது. தம்பிக்கு என்;னை விட்டால் தனது பிரச்சனைகளை சொல்ல வீட்டில் ஒருவருமில்லை என்ற நிலை. படிப்பில் அவன் என்னைப் போல் கெட்டிக்காரன் இல்லாவிட்டாலும் பரீட்சைகளை எப்படியோ பாஸ் செய்து விடுவான். விளையாட்டில் மட்டும் அவனது திறமை வியக்கத் தக்கது. காரணம் வயதிற்கு அதிகமான வளர்த்தி. பதினைந்து வயதில் அவனது உயரம் ஐநதடி பினொரு அங்குலம் என்றால் இன்னும் இரண்டு வருஷத்தில் ஆறடி உயரத்தைத் தாண்டிவிடுவான். பதினெட்டு வயதான நானோ ஐந்தடி ஆறு அங்குலம் உயரம். யாரும் பார்த்தால் என்னை அவன் தம்பி என்று தான் நினைப்பார்கள். அம்மாவும் அப்பாவை விட உயரம். நான் அப்பா வழிபோல உயரம் குறைவு. அம்மா அடிக்கடி சொல்லுவாள்; அவன் தன்னுடைய அப்பாவைப் போல என்று. ஆறடிக்கும் கூடுதலான உயரமான அவர் ஊரிலை அவர்திறமையான கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர். அதே போல் தம்பியும் விளையாட்டில் வீரன் என்று. ஒருகாலத்தில் பிரபல்யமான அமெரிக்க விளையாட்டு வீரர்களை போல் கைநிறையச் சம்பாதிப்பான். அவன் படிக்க வேண்டும் எனபது அவசியமிலலை. இதை அப்பாவுக்குச் சொன்னால் புரியாது.

தம்பி பாஸ்கட் போலில் திறமைசாலி எனபதால் அவனுக்கு மற்றைய இனத்தைச் சேர்ந்த சினேகிதர்கள் அனேகம் இருந்தனர். அவர்கள் கூடவே அவனை அதிகம் காணலாம். தம்பி மேல் அப்பாவுக்கு வெறுப்பு வருவதற்கு முருகேசு மாமா தான் காரணம் என்று எனக்குத் தெரியும். “கொக்கைப் போல வளர்ந்திருக்கிறானே தவிர வளர்த்திக்கு ஏற்ற படிப்பில் வளர்ச்சியில்லை” என்பார் முருகேசு மாமா.. என் மேல் கூடிய அளவுக்கு அன்பு காட்டி, படிப்பில் எனது கெட்டித்தனத்தை அவனுக்கு சுட்டிக்காட்டுவார். அம்மாவுக்கு உள்ளுக்குள் தம்பி மேலே அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு பயந்து வெளியிலை காட்டி கொள்ளத்;தயங்குவாள். முருகேசு மாமாவுக்கு அவள் தனி மரியாதை. எப்பவோ அவர் செய்த உதவிக்கு வாழ்நாள் முழுவுதும் அவருக்கு அந்த மரியாதை கொடுக்கவேண்டுமா? குடும்பத்திலை சகோதரங்களுக்கிடையே பாகுபாட்டை வளர்க்க அவர்தான் காரணம் என்றது என்மனம்.

“ஏன் தெரியாது. அப்பாவோடை வேலை செய்கிற முருகேசு மாமாதானே?. அவருடைய மகன் ரவியும் எங்கடை ஸ்கூலிலை தான் படிக்கிறான். இப்ப அந்த மாமாவுக்கு என்ன?”

“அந்த மாமா எதைச் சொன்னாலும் அப்பா முழுக்க நம்புவார். அவர் தான் உன் தம்பியைப் பற்றி அப்பாவுக்கு கோல் மூட்டி வைத்திருக்கிறார்.”

“என் தம்பியைப் பற்றி அப்பாவுக்குச் என்ன சொன்னவர்?”

” உன் தம்பியை அடிக்கடி கறுவல் பெடியன்கோளோடு டிம் ஹோர்;டன்சிலை கோப்பி குடிக்க போகக்கை சிரிச்சு பேசிக் கொண்டிருக்கிறதை கண்டவராம். அதோட நேற்று அவங்களோடை சேர்ந்து சிகரட் பிடிக்கிறதை கண்டதாக முருகேசு மாமாவுடைய மகன் அவருக்குச் சொல்ல அவர் போய் அப்பாவுக்கு சொல்லியிருக்கிறார். அது போதும் அப்பாவுக்கு. ஏற்கனவே உன் தம்பிமேல் அப்பாவுக்கு வெறுப்பு. தான் சொல்லுகிற படி அவன் உன்னைப் போல் கேட்டு நடப்பதில்லை எண்டு.”

“இப்ப எனக்கு விளங்குது நீங்கள் ஏன் இப்படி பதட்டப் படுகிறியள் எண்டு. அம்மா ஒன்று மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறன். உங்கடை இரண்டு பேருடைய புறக்கணித்து நடக்கும் போக்கால் தம்பி உங்களை விட்டுத் தூர விலகிப் போகிறான். சில சமயம் எனக்குச் சொல்லி வருத்தப்படுவான். அப்பாவும்; அம்மாவும் தன்னைச் சரியாக விளங்கிக் கொள்ளினம் இல்லையென்று. வீட்டிலை அவனோடு அன்பாக நடக்கிறது நான் மட்டும் தான். அதனாலை ஒரு நாள் “ அண்ணா நீ மட்டும் வீட்டிலை இல்லாவிட்டால் எனக்கு வீட்டிலை இருக்கவே பிடிப்பதில்லை. ஓடிப் போவோமா என்று எனக்கு சிலசமயம் தோன்றுகிறது என்று குறைப்பட்டான்.

“ராசா நான் என்ன செய்ய?. அப்பாவின் முற்கோபக் குணம் உனக்கு தெரியும் தானே. அதோடை தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதக் குணம் வேறு. நான் அவரோடை ஒத்துப்போகாவிட்டால் வீட்டிலை ஒரே சண்டையும் சச்சரவுமாக இருக்கும். இப்ப உண்டை தம்பி சிகரட் குடிப்பான் நாலைக்கு அந்த கறுவல்களோடை சேர்ந்து போதை மருந்தும் எடுப்பான். உங்கடை பள்ளிக்கூடத்து பிலே கிரவுண்டிலை பின்னேரம் பள்ளி விட்ட பிறகு போதை மருந்து கடத்தில் வியாபாரம் நடக்குதாம். அதிலை ஒரு வேலை உண்டை தம்பியும் சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்று அப்பாவுக்கு செய்தி கிடைத்திருக்கு. அப்பாவுக்கு அது கேட்ட நேரம் முதல் கொண்டு வேலை செய்ய முடியவில்லையாம். அது தான் தனக்கு தலையிடி என்று சொல்லிப் போட்டு நேரத்தோடை வீட்டுக்கு வந்து படுத்திருக்கிறார். எனக்கு முழு விஷயமும் சொன்ன பொது அவருடைய முகம் கோபத்தாலை சிவந்து போச்சு. அவருக்கு பிளட் பிரசர் வேறை. அந்த நேரம் உண்டை தம்பி கிட்ட இருந்திருந்தால் அவன் மேலை கையும் வைச்சிருப்பார்.”

“அம்மா பிள்ளைகள் மேல் கைவைக்கிற பழக்கம் இங்கை கனடாவிலை சரிப்பட்டு வராது எண்டு அப்பாவுக்குச் சொல்லி வையுங்கோ. அவனும் தோலுக்கு மேலே வளந்திட்டான். உந்த பழக்கமெல்லாம் ஊரிலை. இங்கை பள்ளிக் கூடத்திலை கூட டீச்சர்மார் ஸ்டண்சிலை கைவைக்க மாட்டினம். பிறகு பொலீசுக்குத்தான் போக வேண்டிவரும். தம்பியிண்டை குணம் உங்களுக்குத் தெரியும் தானே. அவனுக்கு என்னைப் போல பொறுமையில்லை. அப்பா அவன் மேல் சொன்ன குற்றைச்சாட்டை நான் விசாரிக்கிறன். அவரை அவனோடு சிகரட், போதை மருந்து பற்றி கதைக்க வேண்டாம் எண்டு சொல்லுங்கோ. முருகேசு மாமா சொன்ன அந்த கதையிலை உண்மையிருக்கா என்று நான் கண்டுபிடிக்கிறன். அது மட்டும், அப்பாவை தெரிந்தும தெரியாதது போல இருக்கச் சொல்லுங்கோ.”

அம்மா யோசித்தாள். என் மூலமாக அப்பாவின் தலையிடு இல்லாமல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தான் நல்லது என்று நினைத்தாளோ என்னவோ, “ எண்டை ராசா. உன்னைப் போல பொறுப்புள்ள மகனாக தாய் தகப்பன் மாருடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு எப்ப அவன் வரப்போகிறானோ தெரியாது. நாங்கள் இரண்டு பேரும் கண்மூடின பிறகு அவன் பொறுப்பு உன் மேல் வந்து விழப்போகுது போல எனக்குத் தெரியுது. எதுக்கும் நான் அப்பா எழும்பினவுடன் கதைக்கிறன். நீ சொன்னதாக சொன்னால் அவர் கேட்பார். உன் சொல்லுக்கு அவர் கொஞ்சம் மரியாதை”

“ எனக்கு நீ இப்ப ஐஸ் வைக்கிறதை விட்டிட்டு; சாப்பிட ஏதும் இருந்தா தா. மத்தியானம் சாண்விச் தான் சாப்பிட்டனான்.. நான் வோஷ் ரூமக்கு போயிட்டு வாரன். தம்பி வர ஆறுமணியாகும்“ என்று என் அறைக்குள் போனேன். நானும்; தம்பியும் ஒரே அறையைத்தான் பாவித்தோம். அவனது படுக்கை வழக்கம் போல் அலங்கோலமாக இருந்தது. புத்தகங்கள் கிழே கிடந்தன. படுக்கைக்கு அருகே உள்ள சுவரில் பாஸ்கட் போல் விளையாட்டு வீரர்களின் படம் அலங்கரித்தன. அவர்களின் பெயர்கள் அவனுக்கு மட்டும் தான் தெரியும். தம்பி நல்லவன். எனக்கு நல்ல மரியாதை கொடுப்பான். நான் எனது புத்தகப்பையை என் மேசையில் வைத்துவிட்டு அவனது படுக்கையை சரிசெய்தேன். பாவம் விளையாடி கலைத்துப் போய் வருவான் சாப்பிட்டு விட்டு நேர படுக்கைக்கு போவான். படுககையை சரி செய்ய எங்கே அவனுக்கு நேரம் இருக்கப்போகுது. கிழே சிதறிக் கிடந்த புத்தகங்களை பொறுக்கி எடுத்து அவனது மேசையில் ஒழுங்காக அடுக்கினேன். அவனது நோட் புத்தகங்களை மேசையின் டிராயருக்குள் வைக்க அதைத் திறந்தேன். அதில நான் கண்ட சிகரட் பக்கட் என்னை திடுக்கிட வைத்தது. என்னால் நம்பமுடியவில்லை. எப்படி சிகரட் பக்கட் அங்கு வந்தது? போய் அறைக் கதவை சாத்திப்போட்டு வந்து சிகரெட் பக்கட்டுக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்த போது இன்னொரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது. சிகரட்டுகளை அங்கு காணவிலலை அதற்குப் பதிலாக இரணடு சரைகள் இருந்தன. அவைற்றில் ஒன்றை திறந்து பாhத்த போது பிறவுன்நிற பவுடர் இருப்பதைக கண்டேன். என் கைகள் நடுங்கத் தொடங்கின. அந்தப் பவுடரின் மணத்தில் இருந்து எதோ ஒரு வகைப் போதை மருந்து என என்னால் ஊகிக்க முடிந்தது, இதைத் தான் பிறவுன் சுகர் என்கிறார்களோ?. அப்போ முருகேசு மாமா சொன்னது சரியா?. தம்பி போதை மருந்து எடுக்கத் தொடங்கிவிட்டானா? அட கடவளே சில விiளாயாட்டு வீரர்கனைப் போல் தனது சக்தியை கூட்டி விளையாட்டில் திறமையைக் காட்ட இதைப் பழக்கமாக்கிக் கொண்டானா? அல்லது வீட்டில் நிம்மதி இல்லை என்பதறகாக கவலையைப் போக்க போதை மருந்து எடுக்கிறானா? பல கேள்விகள் என் மனதில் மோதின. சிகரட்பக்கட்டை நான் எடுத்து பரிசோதித்ததை தம்பி அடையாளம் காணாத வாறு திரும்பவும் மெதுவாக இருந்த இடத்தில் வைத்தேன். என் தம்பி இந்த நிலைக்கு போவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு தெரியும் சில மேற்கிந்திய மாணவர்களும் சீன மாணவர்களும் இரண்டொரு தமிழ் மாணவர்களும் போதை மருந்து பாவிப்பதை. ஆனால் என்தம்பியும் அவர்களில் ஒருவன் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இது வீடடில் தெரிந்தால் வீடே போர்கோளமாக மாறிவிடும். நல்ல காலம் அம்மா எங்கள் அறைக்குள் வருவதில்லை. அவள் கண்டிருந்தால் நிலமை என்னவாக மாறியிருக்கும். எனக்கு வந்த பசி எனக்குப் போய்விட்டது.

“ராசா சாப்பாடு ரெடி. வா வந்து சாப்பிடு” என்று கூப்பிட்டாள் அம்மா. சாப்பிட மேசைக்கு போன நான் அப்பாவும் படுத்தெழும்பி கோப்பியும் iயுமாக சாப்பாடு மேசையில் இருந்தார்.

“என்னப்பா நன்றாக தூங்கினீங்களா என்று அவரை கேட்படி போய் மேசையில் அமர்ந்தேன்.”

பதிலுக்கு ஓம் என்று தலையாட்டினார். இன்னும் அவர் கோபம் தனியவில்லை என்று தெரிந்தது. நானும் அவரை விடவில்லை. எதாவது சந்தோஷமான விஷயத்தைச் சொல்லி அவர் கோபத்தை தணிப்போம் என்று “ அப்பா இந்த முறையும் வகுப்பிலை எனக்கு தான் கணக்கிலையும் சயன்சிலையும் முதல் மார்க்ஸ்” என்றேன்.

“நல்லது” என்றார் சுருக்கமாக என்றார்.

“;கொம்பியூட்டர் சையன்ஸ்தான் நான் அடுத்து வருஷம் யூனிவசிட்டி கோசுக்கு செய்ய நினைத்திருக்கிறன். டீச்சரும் அதை தான் செய்யச் சொல்லுகிறா” நான் அவர் கவனத்த என்பால் இழுக்க கதையைத் தொடர்ந்தேன்.

“அது சரி உன் தம்பி வந்திட்டானா?”

“இல்லை. எந்த நேரமும் பாஸ்கட்போல் பிரக்டிஸ் முடித்து அவன் வரலாம்”

“அவனைப்பற்றி உனக்கு அம்மா சொல்லியிருப்பா எண்டு நினைக்கிறன். எனக்கு அவண்டை வருங்காலத்தை நினைக்க கவலையாக இருக்கு. அவன் சேருகிற கூட்டாளிமார் அவ்வளவு சரியல்ல. படிப்பிலை கூட அவன் அவ்வளவுக்கு கவனம் செலுத்துகிறான் இல்லை போல கிடக்கு. உன்னிடம் கூட கேட்டு படிக்கலாம். வேண்டும் எண்டால் டியூசனுக்கு கூட நான அனுப்ப ரெடி. ஆனால் விiளாட்டு என்று அதிலை முழக்கவனமும் செலுத்துகிறான். அவன் வந்ததும் நீ அவனோடை கதைச்சு விளங்கப்படுத்து. “ என்றார் கோபம் தணிந்து அமைதியாக.

“சரியப்பா. அவன் பிரச்சனையை என்னோடை விடுங்கள். அவனை அணுக வேண்டிய விதம் எனக்குத் தெரியும்”; என்றேன்.

ழூழூழூழூழூ

கதவுதட்டும் சத்தம் கேட்டது. அம்மா போய் கதவைத் திறந்தாள். தம்பி விiளாடி களைத்துப்போய் உள்ளே வநதான்.

“எப்படி இருந்தது தம்பி பிரக்டிஸ் மடச் என்றேன” அவன் திசையை நோக்கி

“நல்லது அண்ணா. எண்டை பக்கத்துக்கு 40யும் மற்ற டீமுக்கு 35யும் கிடைத்தது. எண்டை பகத்திலை நான் மட்டும் 20 ஸகோர் பண்ணினாhன்.

“கெட்டிக்காரன். கலைத்துப்போய்விட்டாய் போய் வோஷ் எடுத்து வந்து சாப்பிடு என்றேன்” ஒரு தாயைப்போல்.

“ சரி அண்ணா. பத்து நிமிடங்களில் வாறன்.” என்று எனக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அறைக்குள் போய்விட்டான். அப்பாவும் அம்மாவும் பேசாமல் இருந்தனர்.

டெலிபோன் மணி அடித்தது. நான் போய் எடுத்தேன். என்னோடு ஒரே வகுப்பில் படிக்கும் என் நண்பன் முகுந்தன் பேசினாhன்.

“ராஜா. உனக்கு விஷயம் தெரியுமே. இண்டைக்கு பின்னேரம் எங்டை ஸ்கூல் பிலே கிரவுண்டிலை போதை மருந்து கடத்தினபொது மூன்று போய்ஸ் பொலீசிலை பிடிப்பட்டிட்டாங்கள் எண்டு எனக்கு நியூஸ் வந்திருக்கு. உன் தம்பி வீட்டை வந்திட்டானா? முகுந்தன் பதட்டத்துடன் கேட்டான்.

“ஓம். நாம் இப்ப சாப்பிட்டுக்கொண்டிருக்கிறன் பிறகு அடியேன்”; என்று சுருக்கமாக

பதில் சொல்லிவிட்டு போய் சாப்பாட்டை தொடர்ந்தேன். அப்பா எனனை பார்த்தார். யாருடைய கோல் என்ற பார்வையில்.

“ அது முகந்தன்டை கோல் அப்பா. சயன்ஸ் புரெஜெக்ட் வேக் செய்துபோட்டனா என்று கேட்டான்” என்றேன். அவருக்கு நடந்ததை சொல்ல விருப்பமில்லை. பிறகு அதை தம்பிமேல் ஆயுதமாக பாவிக்க தொடங்கி பிரச்சனையை பெரிது படுத்துவார். சாப்;பாட்டை விரைவாக முடித்துக் கொண்டு என் அறைக்குள் போனேன்.

ழூழூழூழூழூழூ

தம்பி குளித்துப்போட்டு உடுப்பு மாற்றிக்கொண்டிருந்தான். நான் என் பேச்சை ஆரம்பித்தேன்.

“தம்பி ஸ்கூல் பிலே கிரவுண்டிலை இண்டைக்கு பின்னேரம் என்ன நடந்தது?”

“ஏன் அண்ணா தெரியாத மாதிரி கேட்கிறியள். பாஸ்கட் போல் பிரக்டிஸ் மட்ச்தான் நடந்தது” என்றான்

“அதில்லை. இப்பதான் முகுந்தன் எனக்கு போன் செய்தவன். இண்டைக்கு பின்னேரம், பிலே கிரவுண்டிலை, மூன்று போய்ஸ் போதை மருந்து வாங்கிற போது போலீசிலை பிடிப்பட்டு போச்சினமாhம். நீ அங்கை இருக்கக்கையே நடந்தது?”

இல்லை அண்ணா. அது நடந்தது எனக்குத் தெரியாது. ஒருவேளை நான் வீட்டை வெளிக்கிட்டு வந்த பிறகு நடந்திருக்கலாம். நான வரும்போது ஒரு மூலையிலை நாலைந்து பெடியன்கள் கதைத்து கொண்டுநின்றவங்கள். ஒரு ஹொண்டா ஸ்போர்ட்ஸ் கார் கூட அங்கை நிண்டது. ஆருடைய கார் எண்டு எனக்கு தெரியாது.”

“அது சரி உனக்கு அந்த கூட்டத்தோடை தொடர்பு இருக்கே?”

“அதிலை என்னோடை பாஸ்கட் போல் விளையாடுகிற ரொபர்ட் என்ற நீக்கிறோ பெடியன் தான் என் நண்பன். ஆனால் அவன் இப்போ போதை மருந்து எடுப்பதில்லை என்று என் தலை மேல் அடித்து போன மாதம் சத்தியம் செய்து தந்தவன். அவன் சொன்ன வாக்கு தவறாதவன்.”

“நீ என்ன சொல்லுகிறாய். உன் நண்பன் ரொபர்டடை போதை மருந்து எடுக்கவேண்டாம் என்று நீ தடுத்தனியா?”

“கொஞ்சம் பொறு அண்ணா” என்று போய் தன் மேசை டிரோயரைத் திறந்து நான் முதலிலை பார்த்த சிகெரட் பக்கட்டை எடுத்து வந்தான். வரும் போது எங்கள் அறைக் கதவைமுடிவிட்டு வந்தான். நான் பேசாமல் அதிர்ச்சியில எ;ன சொல்லப் போகிறான் என்று அவன் முகத்தைப் பார்த்படி நின்றேன்.

“அண்ணா இது என்ன தெரியுமா உனக்கு”

“சிகரட் பக்கட் என்று தெரியும். அதெப்படி சிகெரட் குடிக்காத உன் மேசைக்குள் வந்தது?” என்றேன் ஒன்றும் தெரியாதவன் போல்.

“இதுக்குள்ளை சிகரட் இல்லை. இதோ இது இரண்டு பகட்டிலையும் பிரவுண் சுகர் என்ற போதை மருந்து. இதுக்குத்தான் என் நண்பன் ரொபர்ட் அடிமையாகியிருந்தான். இதை எடுத்தால் உற்சாகமாக விளையாடமுடியுமாம். என்னயும் எடுத்து பார்க்கச் சொன்னவன் நான் மாட்டன் எண்டிட்டன். ரொபர்டை பேசி நிறுத்தப்பார்த்தேன் முடியவில்லை. இரண்டு கிழமை அவனோடு கதைப்பதை நிறுத்தினேன். அவனால் பொறுக்க முடியிவல்லை. எவ்வளவோ என்னோடு கதைக்கப் பார்த்தான் முடியவில்லை. கடைசியிலை தான் பிரவுண் சுகர் எடுக்கிறதை நிற்பாட்டுகிறன் என்று என் தலைமேல் அடித்த சத்தியம் செய்து தன்னிடம் இருந்த இந்த கடைசி இரண்டு சுகர்பகட்டுகளை தந்தவன். அதை நான் எடுத்து கொண்டு இங்கை பத்திரமாக வைத்திருக்கிறன். எப்போ அவன் தனது வாக்குறதியை மீறி திரும்பவும் எடுக்கத் தொடங்குறானோ அப்போ இதை கொண்டு போய் அவன் முகத்திலை வீசி எறிந்து, இதை எவ்வளவு வேண்டுமானாலும் திண்டு சீரழிந்து போ. உன் நட்பு எனக்கு வேண்டாம் எண்டு சொல்ல இருக்கிறன்” “ என்றான் தம்பி.

அவன் சொன்னதைக் கேட்டு நான் செய்வது அறியாமல் திகைத்த நின்றேன். நானும் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு என் அருமைத் தம்பி மேல் சந்தேகப்பட்டேனே. என் தம்பி தன் நண்பனைத் போதை மருந்து உண்ணாமல் செய்யும் அளவுக்கு தன் நற்பை ஆயுதமாக பாவித்த நல்ல மனம் படைத்தவன் என்று அப்பா அம்மாவுக்கு தெரிந்தால் எவ்வளவுக்கு சந்தோஷப்படுவார்கள்.

உடனே நான் அவைனை இறுகக் கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தேன். எனது கண்களில் இருந்த கண்ணீர் அவன் கன்னத்தை நனைத்து.

Print Friendly, PDF & Email

1 thought on “தம்பி

  1. கதை என் கதை போலவே உள்ளது என் தம்பியும் இது போலத்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *