தங்க மீன்களின் தகனக் கிரியை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 1,844 
 
 

‘’அய்யோ கடவுளே இதென்ன அநியாயம். மீன் தொட்டியில் இருந்த அத்தனை மீன்களும்…’’ மேற்கொண்டு சொல்ல முடியாமல் ஆனந்தி தடுமாறினாள்.அவளின் பரபரப்பான குரலைக்கேட்ட அவளின் கணவர் சுந்தரம் மீன் தொட்டியிடம் வந்ததும் அவளைப்போலவே ‘’அய்யோ பாவம்’’ என்று ஆச்சரியக் குரலில் கூவினார். அவர்களின் மூன்று வயதுக் கடைசி மகன் சிவா பெரும் சிரிப்புடன் தன் மழலைக் குரலில் ‘’வெரி நைஸ் அப்பா’’ என்றான். மீன் தொட்டியில் கடந்த சிலமாதங்களாக ஒரு பெரும் கூட்டமாக இருந்த இருபத்தாறு மீன்களும் சிவப்பு நிற நீரில்.குருதி படிந்த பிணங்களாக மிதந்து கொண்டிருந்த காட்சி>ஆனந்தி- சுந்தரம் தம்பதிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

திடுக்கிட்டுப் போய் நின்ற தாயும் தகப்பனும் சிரித்த முகத்துடன் குதாகலிக்கும் தங்கள் சிறு மகனைக் குழப்பத்துடன் பார்த்தனர். குழந்தை சிவா மிகவும் சந்தோஷமான முகத்துடன் தனது தாய் தகப்பனை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவர்களுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சின்னக் குழந்தை ’’வெரி நைஸ்’ என்று சொல்வதற்குக் காரணம் புரியத் தொடங்கியது.

சில மணி நேரங்களுக்குமுன் இரவு சாப்பாட்டுக்கு விருந்தாளிகளாக> ஆனந்தி-சுந்தரம் தம்பதிகளின் சினேகிதத் தம்பதிகளான மார்க்கரெட்டும் பிலிப்பும் வந்திருந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்களை விருந்துக்கு அழைத்தவர்களின வீட்டுக்குச் செல்லும்போது ஒரு போத்தல் சிவப்பு அல்லது வெள்ளை வைன் போத்தல் அல்லது சாம்பேய்ன் போத்தல் அத்துடன் ஒரு பூங்கொத்துவுடன் வருவார்கள்.அன்று பிலிப் ஒரு சிவப்பு வைன் போத்தலுடன் வந்தான். சாப்பாட்டு நேரத்தில்; அவனும் சுந்தரமும் சிவப்பு வைனைக் குடித்தார்கள். பிலிப் சிவப்பு வைனைக் குடித்தபோது ‘வெரி நைஸ்’ என்றான். கடைசியாகச் சாப்பாடு முடிந்ததும் அவன்>வைன் போத்தலைத் தூக்கிக் கொண்டு, தனதும் சுந்தரத்தினதும் கிளாஸ்களில் வைனை ஊற்றி விட்டுத் தனது கையிலிருந்து வைன் போத்தலுடன் மீன் தொட்டிக்கு அருகிற் சென்று மீன்களை ரசித்தான்.

அவர்கள் சாப்பாடு முடிய விட்டுச் செல்லும்போது கொஞ்சம் வைனுடனான போத்தல்>மீன் தொட்டிலருகில்; இருந்திருக்க வேண்டும். விருந்தாளிகள் சென்றதும்>ஆனந்தி சாப்பிட்ட சாமான்களை எடுத்துக் கொண்டு சமயலறைக்குசு; சென்றாள் அப்போது மோபைல் டெலிபோனில் சுந்தரும் பேசிக் கொண்டிருந்தான். கொஞ்சம் மிகுதியுடனான வைனுடனான போத்தல் மீன் தொட்டிக்கருகில் இருந்ததால் குழந்தை சிவா என்ன செய்திருக்கிறான் என்று தாய் தகப்பனுக்கு விளங்கியது. பெரியவர்கள்> ‘வெரி நைஸ்’; என்று சொல்லிக் கொண்டு பருகிய சிவப்பு வைனைத் தங்கள் சிறிய மகன் செல்லப் பிராணிகளாக தொட்டியில் வலம் வந்து கொண்டிருந்த ஒரு மீன் கூட்டம் பருகி மகிழப் போத்தலுடன் கொடடியிருக்கிறான் என்று தெரிந்தது.

அவர்கள் மீன் குஞ்சுளைப் பரிதாபத்துடன் பார்த்தார்கள். மீன்களுக்கு மது போதை தாங்க முடியவில்லை போலும். மருணித்துவிட்டார்கள். மிக கோரமான மரணம். அந்தத் தொட்டியில் ‘கோல்ட் பிஷ்’ எனப்படும் இரு தங்க நிற மீன்களும்> கொஞ்சம் சாடையான கறுப்பு நிறத்தில் இருந்த ‘கப்பி’ என்ற மீன் இனத்தைச் சேர்ந்த தம்பதிகளின் குஞ்சுகள் இருபத்திரண்டும் அகோரமான நிலையில் மரணமடைந்த நிலையில் சிவப்பு நீரில் பிணங்களாக மிதந்து கொண்டிருந்தார்கள்.

ஆனந்தி -சுந்தரம் தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள். நேசன் என்ற மூத்த மகனுக்கு ஒன்பது வயது அவன் எப்போதும் எதையோ வாசித்துக் கொண்டிருப்பான். அவன் ஜோர்ஜ் ஓர்வெல் என்பவர் எழுதிய மிகவும் பிரசித்தி பெற்ற’’அனிமல் பார்ம்’’ என்ற புத்தகத்தைப் படிக்கும்போது>அவர்களின் இரண்டாவது மகன் அமுதன் ஆறு வயதானவன்>தமயனிடம் அவன் வாசிப்பவை எதைப் பற்றியது என்று கேட்டு விசாரிப்பான். அமுதனுக்குச் சிறுவயதிலிருந்து சிறு பிராணிகளில் மிகவும் விருப்பம். அவர்களின் தோட்டத்திற்கு வரும் நத்தைகள்>பட்டாம் பூச்சிகள்,  மண்புழு போன்றவற்றைப் பற்றித் தமயனிடம்; கேள்விகள் கேட்பான். லைப்ரரியில் சிறு பிராணிகள் சம்பந்தமான புத்தகங்கள் எடுத்துப் படிப்பான்.அவர்களின் பாடசாலை அசெம்பிளியில் மண்புழுக்கள்> மண்ணுக்கும் மனிதர்களுக்கும் செய்யும் நன்மைகள பற்றி பற்றி ஐந்து நிமிடம் சொற்பொழிவு செய்து ஆசிரியர்களினதும் அவனது சக மாணவர்களினதும் பாராட்டையும் பெற்றான்.

மூன்றாவது மகன் சிவா தமயன்கள் படிக்கும் புத்தகங்களிலுள்ள படங்களைப் பார்த்து மகிழ்வான். அவர்களுடன் தோட்டத்திற்குத் தடக்கி வீழந்து நடந்து சென்று பறவைகளுக்குத் தன் கையிலிருக்கும் இனிப்புக்களைத் தீனி போட்டு மகிழ்வான்.

சில மாதங்களுக்கு முன்>ஆனந்தி- சுந்தரம் தம்பதிகளின் சினேகிதர்களான மெலனி-றிச்சார்ட் தம்பதிகள்>அவர்களின் உத்தியோக உயர்வு காரணமாக லண்டனை விட்டு லிவர்ப்பூல்; நகருக்குக் குடி பெயர்ந்தபோது அவர்களின் ஞாபகமாக> மூன்று பையன்களுக்கும்> முக்கியமாக அமுதனின் பொறுப்பில்>ஒரு பெரிய மீன் தொட்டியையும் அதில் ‘தங்க’ மீன் தம்பதிகள்> ‘கப்பி’ மீன் தம்பதிகளையும் தங்கள் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.அவை எப்போது குஞ்சுகள் பெறுவார்கள்> அவற்றை எப்படிப் பராமரிக்கவேண்டும் என்ற விளக்கத்தையும் பையன்களுக்குச் சொல்லி விட்டுச் சென்றார்கள். தங்க மீன் தம்பதிகளுக்கு மெலனி- றிச்சார்ட் தம்பதிகளின் ஞாபகமாக’மிலி- றிஷி’ என்று பெயரிட்டு மகிழ்ந்தான் அமுதன்.

இன்று அவர்கள் தங்களின் மாமாவுடன் (ஆனந்தியின் தம்பி கேசவன்) மிருகக் காட்சிச்சாலைப் போய்விட்டார்கள்.அவர்கள் மாமாவின் வீட்டில் இரவு தங்குவதாகவும் நாளைக் காலையில் திரும்பி வருவதாகவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ‘கடவுளே குழந்தை அமுதன் அவனுடைய செல்ல மீன்கள் செத்து தொலைந்ததை என்னவென்று தாங்க போகிறான்’. ஆனந்தி அழாத குறையா கணவனிடம் கேட்டாள். சுந்தரம். பதில் சொல்ல முடியாமல் மனைவியை தடவிக் கொடுத்துக் கொண்டு’இது பரிதாபமாக நடந்த விபத்து. மதுபோதை காரணமோ இல்லையோ மரணித்த மீன்களை. நாங்கள் உயிர்ப்பிக்க முடியாது. இந்த மீன் தொட்டியில் நாளைக்கு புதிய மீன்களை வாங்கி வைப்போம்’ என்று சொன்னார்.

‘அப்படியே சொல்ல முடியாது. ஏனென்றால் நாங்க புதிய மீன்களைவாங்கி வைத்து விட்டு பழைய மீன்களுக்கு எனக்கு என்ன நடந்தது என்று நாளைக்குச் சொல்வதை அவர்கள் தாங்க மாட்டார்கள். இப்போதே போன் பண்ணி உண்மையை சொல்வோம். அவர்கள் தம்பியுடன்> மிருகக் காட்சிச்சாலைக்குப் போயிருக்கிறார்கள். அங்கு பல மிருகங்களையும் பறவைகளையும் மீன்களையும் முதலைகளையும் ஆமைகளையும் பாம்புகளையும் பார்த்து பரவசப்பட்டதாகப் போன் பண்ணிச் சொன்னார்கள். அவர்களுக்குப் போன் பண்ணி விடயத்தைச் சொல்வோம்.’’ என்றாள்

தனது தம் கேசவனுக்கு உடனடியாகப் போன் பண்ணி மீன்களின் நிலை பற்றிச் சொன்னவுடன். அவன் ‘ஐயோ என்ன பரிதாபம்’ என்று சொல்லி விட்டு அமுதனிடம் டெலிபோனைக் கொடுத்தான். ‘என்னம்மா நடந்தது’? என்று பதற்றத்துடன் கேட்டான் மகன் அமுதன். ‘ஐயோ குழந்தைகளே மீன்களுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது டார்லிங்’. என்றாள் ஆனந்தி. ‘எப்படியம்மா’ என்று கேட்டான்; பெரிய மகன் நேசன். ‘’கெதியாக வீட்டுக்கு வாங்கோ ‘’ என்று ஆனந்தி சொன்னாள்.

அவர்கள் வந்ததும் மிகவும் கவனமாக ஆனந்தி விடயத்தைச் சொன்னாள்.மூன்று வயது மகன்தான் மதுவைக் கொடுத்து இந்த விபத்து நடந்தது என்ற விடயத்தை அவள் பெரிதாகச் சொல்லவில்லை.மீன்களின் மரணச் செய்தியை அமுதனால்த் தாங்க முடியவில்லை. ‘எனது மிலியும் றிஷியும் எத்தனை அழகானவர்கள். அவர்களின் படைக்கப் போகும் அவர்களின் குஞ்சு;சுகளுக்காக எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறேன்’ அமுதனின் அலறல். ஆனந்தியின் இருதயத்தைப் பிழந்தது.

மீன் தொட்டி கிடைத்த அடுத்த மாதமே கப்பி மீன் தம்பதிகளுக்குப் பல குஞ்சுகள் பிறந்து விட்டன. அமுதன் தங்க மீன் தம்பதிகளின் வாரிசுகளுக்காகக் காத்திருக்கிறான். தங்கமீன் தம்பதிகள் உல்லாசமாகத் தங்கள் தொட்டியில் பவனி வந்து கொண்டிருந்தார்கள். குஞ்சுகள்; பெறும் யோசனை இருப்பதாகத் தெரியவில்லை. அரச பவனி செய்யும் அதிகார தோரணையில் அவர்கள் தொட்டியில் வாழ்ந்தார்கள்.

மெலனிக்குப் அடிக்கடி போன் பண்ணி தங்க மீன்கள் எப்போது அப்பா -அம்மா ஆவார்கள் என்று கேட்டான் அமுதன்;.’விரைவில் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னாள் மெலனி. ‘கப்ப’p தம்பதிகளுக்கு அடுத்த மாதத்தில் இன்னும் பல குஞ்சுகள் பிறக்கலாம் என்றும் மெலனி சொன்னாள்.

மீன்களின் வரவும் வளர்ச்சியும் அவனின் ஆறுவயதுச் சினேகிதர்கள் பலரின் ரசனைக்குள்ளாகியது. குழந்தைகள் லைப்ரரிக்குச் சென்று மீன்கள் பற்றிய பல தகவல்களையம் படித்தார்கள். வசந்த காலம் என்ற படியால் அமுதனின் சினேகிதக் குழந்தைகள் பலர் அமுதனின் வீட்டுக்குப் பின்னால் இருந்த ஒரு பொதுத் தோட்டத்தில் பின்னேரங்களில் விளையாடுவார்கள். விளையாடி முடிந்ததும்> ஆனந்தி தம்பதிகள் வீட்டு தோட்டத்தில் வந்திருந்து> சிற்றுண்டி சாப்பிட்டு>பாழரசம் குடித்து>அதன்பின் மீன் தொட்டியை யும் ரசித்து விட்டு போவது வழக்கமாய்க் வந்தது.

தனது மூன்று மகன்கள் மட்டும் அல்லாமல் அக்கம் பக்கத்து சிறு குழந்தைகளுக்கும் அற்புதமான ஒரு காட்சிச்சாலை இருந்த மீன் தொட்டி இன்று மரணசாலையாக இருப்பதைப் பார்த்து ஆனந்தி கண்கலங்கினாள்.

‘நான் இப்போது. மெலனி க்கு ஃபோன் பண்ணி இந்த விடயத்தை உடனடியாக சொல்ல வேண்டும்’’ என்று அமுதன் தன் அழுகையுடன் சொன்னான். இப்போது இரவு 10:00 மணி. ஆனாலும். அமுதனால் அவனுடைய அன்புக்குரிய மெலனிக்கும் றிச்சார்ட்டுக்கும்; மீன்களின் கோர விபத்தைப் பற்றிச் சொல்லாவிட்டால் அதை அவனால்த் தாங்க முடியாது என்பதை அவனுடைய தாய் ஆனந்திக்கு புரிந்தது.

ஆங்கிலேயர்களுக்கு வார விடுமுறைகளில் யாரும் ஃபோன் பண்ணி தொல்லை கொடுப்பது பிடிக்காது. அத்துடன் இரவு 9:00 மணி க்குப்பின் ஃபோன் பண்ணுவது என்பது ஆங்கிலேயரால் அநாகரீகமாகப் பார்க்கப்படும்.

ஆனாலும் அமுதனின் வேதனை தாங்காதஆனந்தி, இரவு 10:00 மணிக்கு மேலாகி விட்டது என்று பார்க்காமல் மெலனிக்குப் போன் பண்ணாள்.

மெலனி உடனடியாக ‘என்ன பிரச்சனை’ என்று கேட்டாள். அதாவது அவளுக்கு தெரியும் ஒரு அவசரமான விஷயம் இல்லையென்றால் ஆனந்தி இந்த நேரத்தில் போன் பண்ண மாட்டாள் என்று. ஆனந்தி க்கு எப்படி இந்த மீன்களின் மரணவிடயம் பற்றி சொல்வது என்று விளங்கவில்லை. ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். அத்துடன் பிலிப்பும் மார்க்கரெட்டும் மெலனி- றிச்சார்ட் தம்பதிகளின் சினேகிதர்கள்.அவர்கள் நால்வரும் ஒன்றாகப் படித்தவர்கள். லண்டனில் நடக்கும் அகில உலக சமாதனக் கூட்டங்களில் சுந்தரத்தைச் சந்தித்து சினேகிதமானவர்கள்.

‘தயவு செய்து மன்னித்துக்கொள் மெலனி. இன்று இங்கே நம்முடைய் நண்பர்கள் பிலிப்பும் மார்க்கரெட்டும் சாப்பிட வந்திருந்தார்கள். சாப்பாட்டு நேரத்தின்பின் சிவப்பு வைன் கொஞ்சம் மிகுதி இருந்தது. அந்தப் போத்தலுடன்; பிலிப் மீனகளைப் பார்க்கப் போனபோது தொட்டிக்குப் பக்கத்தில் மறந்துபோய் வைத்திருக்கவேண்டும். அதிலிருந்த வைனைச் சின்ன மகன் சிவா மீன்களுக்காக அன்பளிப்பாக தொட்டியில் ஊற்றிவிட்டான் என்று நினைக்கிறேன். அதனால் அந்த மது போதையில். அத்தனை மீன் குஞ்சுகளும் மரணம் அடைந்துவிட்டார்கள்’ என்று சொல்லும் போது ஆனந்தி அழத் தொடங்கிவிட்டாள்.

”அய்யோ என்ன பரிதாபம். பிலிப் ஒருதுளியும் விடாமல்க் குடிப்பவன் ஏன் கொஞ்சம் மிச்சம் வைத்தான் தடியன்?. பாவம் சிவா தெரியாமல்ச் செய்து விட்டான்.’’ என்று ஆதங்கப்பட்ட மெலனி நடந்த. ‘விபத்துக்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு இன்னும் ஒரு மீன் தொட்டி வாங்கி கொடுக்கிறேன்’ என்று அமுதனிடம் சொன்னாள். ‘நீங்களிருவரும் வராமல் நாங்கள் மீன்களின் மரண சடங்குகளை செய்ய முடியாது’’ என்று அமுதன் அழுதபடி சொன்னான்.

‘ஓ மை டார்லிங். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை> நாங்கள் எங்கள் பெற்றோரைப் பார்க்கப் போகிறோம் அடுத்த சனிக்கிழமைக்கு முதல் எங்களால் லண்டனுக்கு வரமுடியாது. உங்களுக்குப் பிரச்சினை இல்லையென்றால் அதுவரைக்கும் நீங்கள் அவர்களை. அம்மாவின் குளிர்பெட்டியில் வைத்து விடுங்கள். நாங்கள் வந்த பிறகு மரண சடங்குகளைச் செய்வோம்’ என்று ரிச்சாட்டும் மெலனியும் குழந்தைகளுக்குச் சொன்னார்கள். ‘அப்படியே செய்கிறோம்’ என்று அழுதபடி சொன்னான் அமுதன்.

இவர்களைக் கொஞ்ச நேரத்துக்குமுன் அவசரமாக இறக்கிவிட்டுச் சென்ற ஆனந்தியின் தம்பி கேசவன் தனது வீட்டுக்குப் போனதும். என்ன நடக்கின்றது என்று ஃபோன் பண்ணி கேட்டான். ‘தம்பி> குழந்தைகள் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள் அதிலும் அமுதனின் துயர் தாங்கமுடியாதிருக்கிறது. மெலனியும் றிச்சார்ட்டும் உடனடியாக வரமுடியாததால் மீன்களின் மரணச் சடங்கு அடுத்த சனிக்கிழமை நடப்பதாக இருக்கிறது’’ என்று ஆனந்தி துக்கத்துடன் சொன்னாள்.

அடுத்த நாள் மீன்கள் மரணம் பற்றிய துக்கம் விசாரிக்க குழந்தைகளின் மாமனார் கேசவன் வந்திருந்தான். ஆனந்தியின் குடும்பம் இலங்கையின் கிழக்கில் மிகவும் பாரம்பரியமான கிராமத்திலுள்ளது. கிராமத்தைச் சுற்றியோடும் தில்லையாறும்> அதையண்டியிருக்கும் பற்றைகள்> வயல்கள் என்பன எண்ணிக்கையற்ற பிராணிகளின் இருப்பிடம். கிராமத்து வீடுகளில்.உணவைக் களவாடும் குரங்குகளின் சேட்டை கிழவர்களை எரிச்சல் பண்ணும். தண்ணிப் பாம்புகள் சரளமாக வீடுகளில் ஊர்ந்துபோகும். நாகபாம்புப் புற்றுக்கள் கோயிலையண்டியிருக்கின்றன. உடும்புகளும் ஓணான்களும் உல்லாசமாக ஊர்ந்து திரியும் பகுதியது. பல வர்ணக்கிளிகளைப் பிடித்து அவைகளைப் பேசப்பண்ணுவதில் கிராமத்துக் குழந்தைகளுக்கு அபார விருப்பம்.

ஆனந்தியின் தம்பி கேசவன் மிகவும் குறும்பானவன் அவனின் சிறுவயதிலிருந்து உலகத்தில் எதையும், மற்றவர்களை விட வித்தியாசமா பார்ப்பவன்.பல விடயங்களை நகைச்சுவையாக்கிச் சிரிப்பதில் மிக அலாதியான விருப்பம் உள்ளவன். அதிலும் இறந்துவிட்ட மீன்களுக்காக தனது தமக்கை வீட்டில் நடக்கும் துயரங்களைப் பார்த்து அவனுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை..

கேசவன் சின்ன குழந்தையா இருக்கும் போது> சிறிய ஓணான்களைப் பிடித்து>ஒணானின் வாயில் புகையிலையைத் திணித்து அந்த மயக்கத்தில் ஓணான்கள் தலை ஆட்டுவதை நடனமாக நினைத்து> அதைப் பல குழந்தைகளுடன் இருந்து ரசித்து ஒரு நாடக விழாவே வைத்து விடுவான். இப்படி லண்டனில் வாழும் குழந்தைகள் மாதிரி மிகவும் செல்லமாகப் பிரhணிகளைப் போற்றும் வழக்கம் அங்கிருக்கவில்லை.இப்படி>சிவப்பு வைன் கொடுத்து நடந்த மீன் தொட்டிக் கொலைகள் அங்கு அப்போது கேள்விப் படாத விடயம்.

கேசவன் சிறுவயதில் இருக்கும் போது>தங்களுடைய சிறிய காற்சட்டை> Nஷர்ட் என்பவைகளை நாய் குட்டி> பூனை குட்டிகளுக்கு அணிவித்து அவர்களை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்தவன். கோழிக் குஞ்சுகளுக்குப் பல வர்ணம் பூசி>அதைப் பார்த்த குஞ்சுகளின் தாய் ஆச்சரியத்தில் அலறும்போது அதை அலாதியாக ரசிப்பவன். தண்ணிப் பாம்பு வீட்டுப் பக்கம் வந்தால் அதைப்பிடித்துத் தலை கீழாகக் கட்டி> மல்லிகைக் கொடியில் தொங்கவிட்டு ஆச்சியிடம் அகப்பையால் அடிவாங்கியவன்.

இப்போது லண்டனில் தனது தமக்கை வீட்டில் நடக்கும்> அமுதனின் செல்ல மீன்களின் படுகொலை பற்றி விசாரிக்க வேண்டும் அவன் சொல்ல ஆனந்தி அவனைத் தன் கோபப் பார்வையால் அடக்கி விட்டாள். சின்ன மகன் சிவாவை>மீன்களைப் படுகொலை செய்த பாவியாக அமுதனின் ஆறுவயதுச் சினேகிதப் படையினரால்; குற்றம் சாட்டப் படுவதையும் அவள் விரும்பவில்லை.

‘’சின்ன மகன் சிவாவின் ஊழித்தாண்டவத்தில் இருபத்தி நான்கு சிறுமீன்கள் பலியானார்களா’’? ஏன்று கிண்டலாகக் கேட்டான் கேசவன்.

‘’ இந்த விடயம் பற்றி வேடிக்கை காட்டாதே.பிலிப் செய்த தவறால் சின்னப் பயல் சிவா தெரியாமல் செய்த பிழை இது’’ என்று ஆனந்தி தனது தம்பிக்கு எச்சரிக்கை விடுத்தாள்.

‘அது சரி மரண சடங்கு எப்படி நடக்க போகிறது’ என்று குழந்தைகளை கேட்டான் மாமா. ‘எங்களுக்கு எப்படி நடத்துவது என்று தெரியாது.மெலனியும் றிச்சார்டும் அடுத்த சனிக்கிழம வருவார்கள்’’ என்றான் பெரிய பையன் நேசன்.

‘மாமா நீங்க சொல்லுங்க நீங்க சொல்ற மாதிரி நாங்கள் மரணச் சடங்கிiன நிறைவேற்றுவோம்’ என்று அன்புடன் சொன்னான் அமுதன்.

அப்போது கேசவன் சொன்னான்>’ம்ம் மெலனியும் ரிச்சாட்டு கிறிஸ்தவர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. அவர்கள் சர்ச்க்கு போவோ இல்லையோ அதுவும் எனக்கு தெரியாது. ஆனால். உன்னுடைய அம்மா சின்ன வயதில் கோயில்களுக்குப் போனவள். உன்னுடைய அப்பா சுந்தரம் பகுத்தறிவாளர். கோயில்களையும் கடவுளரையும் பற்றி;ப் பல கேட்பார். அதனால் இப்போது உன்னுடைய அம்மா கோயிலுக்கு போவதை நிறுத்திவிட்டாள். ஆனாலும்> இந்த மீன்களின் மரணம் ஒரு இந்துக் குடும்பத்தில் நடந்தபடியால்> எங்கள் நம்பிக்கையின்படி>இந்த மீன்களுக்கு நாங்கள் எங்கள் சமய முறைப்படி>அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும்’ என்று மிகவும் அன்பான குரலில் தன் மருமகன்களுக்கு சொன்னான கேசவன்;.

‘மீன்களுக்கு சமய முறைப்படி மணச்சடங்கா?’. ஆனந்தி தன் தம்பியை ஆத்திரத்துடன் முறைத்தாள். சமயங்களில் நம்பிக்கையில்லாத அவளின் கணவருக்குக் கேசவன் செய்யும் குறும்புத்தனமான சடங்கு நடவடிக்கை எரிச்சலையுண்டாக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

‘அக்கா> அமுதன் தனது செல்லப் பிராணிகளான இந்த மீன்களை மனிதர்கள் மாதிரித்தான் பார்த்தான்.பெயர்கள் வைத்தான்.அன்புடன்; பராமரித்தான். அவனின் மனம் சநதோசப்பட இதைச் செய்யலாமே’ என்று பணிவான குரலில்ச் (?) சொன்னான் கேசவன். ஆனந்திக்குத் தெரியும் கேசவன் அமுதனின் துயரைத் தன் நகைச் சுவை நாடகமாக்கப் போகிறான் என்று. ஆனாலும் குழந்தைகளின் எதிர்பார்ப்பைக் குழப்ப அவள் விரும்பவில்லை.

‘’ உனது மைத்துனருக்குத் தெரிந்தால் உனது கன்னத்தைப் பதம் பார்ப்பார்;’’ ஆனந்த எச்சரித்தாள்.’’அக்கா> உங்கள் கணவர்> உலக அமைதிக்கும் சமாதானத்துக்குமான சொற்பொழிவுகளைக் கேட்கச் சனிக்கிழமைகளில் பல கூட்டங்களுக்கு லண்டனில் பல இடங்களுக்கு யாத்திரை செல்பவர். இன்று உலகில் எத்தனையோ இடங்களில் சிறிதும் பெரிதுமாகப் பல யுத்தங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆயுதம் தாயாரித்து விற்று இலாபம் பெறும் முதலாளிகள் போர்களை மறைமுகமாக உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப்; பற்றி அவர் எப்போது புரிந்து கொள்வார் என்று எனக்குத் தெரியாது. அடுத்த சனிக்கிழமையும் அவர் கூட்டத்திற்குப் போவார்;. குழந்தைகளுக்கு விருப்பப்படி சடங்குகளைச் செய்வோம். மனமுடைந்திருக்கும் அமுதனுக்கு அது ஆறுதலாகவிருக்கும்’’ என்று தமக்கையிடம் பணிவான(?) குரலில்ச் சொன்னான கேசவன்;.

ஆனந்தி அரைகுறை மனத்துடன் தனது தம்பியின் மரணச் சடங்கு ஒழுங்குகளுக்கு ஒப்புக் கொண்டாள். ‘மாமா அப்படி என்றால் சடங்கு தொடர்பாக நாங்கள் என்ன செய்வது’’? என்று குழந்தைகள் கேட்டார்கள். கேசவன் சொன்னான். ‘நீங்கள் இப்போது பெரிய இரண்டு தங்க மீன்களான மிலியையும் றிஷியையும் தனிமைப்படுத்திப் பத்திரமாக எடுத்து வையுங்கள்.அவர்களுக்கு மனிதர்களின் பெயர்கள் வைத்திருக்கிறீர்கள். அவர்களுக்கு நாங்கள் விசேட சடங்கு செய்ய வேண்டும்.அதாவது தங்க மீன் தம்பதிகளை இந்த சமய முறைப்படித் தகனம் செய்வோம் மற்றச் சின்ன குஞ்சுகளை நாங்கள் இலங்கையில் செய்வது போல் புதைத்து விடுவோம். ‘’ என்று சொன்னான்.

”அய்யோ மாமா எங்களுடைய அன்பான தங்க மீன்களான மிலியையும் அவளுடைய கணவன் றிஷியையும் நெருப்புல போடப் போறீங்களா?’’ அமுதன் கேட்டான். அப்போது கேசவன் தனது முகத்தை மிகவும் சோகமாக வைத்துக் கொண்டு>

’’ இந்த தங்கமீன்கள் இருவரும் பெரியவர்கள்.மனிதர்கள் மாதிரி இந்தத் தொட்டியில் வளர்க்கப் பட்டவர்கள் சின்ன மீன்களைப் பாதுகாக்கும் தலைவர்கள்போல் வலம் வந்தவர்கள். அவர்களுக்கு நாங்கள் பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கத்தானே வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும். எங்களுக்கு விருப்பமாக இருந்த அவர்களை அவர்களுக்கு தகுந்த மரியாதையுடன் நாங்கள் சொர்க்கலோகத்துக்கு அனுப்புவது தான் எங்கள் கடமையாக இருக்கும்’ என்றெல்லாம் சொன்னான்.கேசவன் தனது தமக்கையிடம்;>;’நல்ல காலம் தங்க மீன் மிலி மதுபோதையில் தனது கணவன் றிஷியுடன் பரலோகம் போகாமலிருந்தால் அவளை நெருப்பில் தள்ளி உயிருடன் உடன்கட்டையேற்ற வேண்டி வந்திருக்கும்’ என்று கிண்டலாக மெல்லமாக முணுமுணுத்ததை ஆனந்தி; ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்தாள்.

குழந்தைகளும்>மாமாவின் சடங்கு முறையை ஒப்புக்கொண்டார்கள். அன்று மாமாவின். உதவியுடன். இரண்டு தங்க மீன்களும் மிகவும் கவனமாக வெள்ளை துணியில் சுற்றப்பட்டு> புதிய பிளாஸ்டிக் பெட்டியில் பத்திரமாக வைக்க பட்டhர்கள. மற்ற கப்பி மீன் குஞ்சுகள்>அவர்களின் தாய் தகப்பன் உட்பட அத்தனை பிணங்களும் ஒரேயடியாகச் சுற்றப்பட்டு அவர்களும் இன்னொரு பெட்டியில் வைக்கப்பட்டார்கள்.

அம்மாவின்>சமைத்த சாப்பாடு சமைக்காத சாப்பாடு இருக்கும் ஃப்ரீஸரின்; ஒருபகுதி இன்று மீன்களின் மரண சாலையாக மாறியது. அப்பா சுந்தரம் nவளியில் போயிருக்கிறார். அவர் வந்ததும்>என்னவென்று இந்தச் சடங்கு விபரத்தை அவருக்குச் சொல்லுவது அல்லது சொல்லாமலிருப்பது என்று ஆனந்தி யோசித்தாள். ஏனென்றால் அவளது தம்பி; கேசவன் செய்யும் இந்த சமயச் சடங்கு விஷயங்களுக்கு அவர் ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்று அவளுக்கு தெரியும்.

அடுத்த சில நாட்களில்.அவளின் மகன்கள் மட்டுமல்லாது அவர்களின் சினேகிதச் சிறுவர்களின் கவனம் ஃப்ரீஸரpலேயே இருந்தது. அவர்கள் வந்து> அந்த ஃப்ரீஸரpல் பிணங்களாக இருக்கும் மீன்களைப் பற்றி; விசாரிப்பார்கள். ஆனந்தி கொடுக்கும் இனிப்புகளை சாப்பிட்டு கொண்டு மீன்களைப்பற்றித் துயரப்பட்டுக் கொண்டு பேசுவார்கள். இந்த ஆறு வயது. இளம் படையினரின் துக்கம் ஆனந்தியின் நெஞ்சை நெகிழ வைத்தது. இங்கpலாந்தில்> மனிதவுரிமை மட்டுமல்லாது குழந்தைகளைச் சிறு வயதிலிருந்தே ஆடு>மாடு>பூனை> மீன்>பாம்பு> பல்லி> ஓணான் போன்ற பிராணிகள் அனைத்திலும் அன்பாக இருக்க வேண்டுமென்று இந்த கலாச்சாரம் பழக்கி வைத்திருக்கிறது. மெலனியும் றிச்சார்ட்டும் போன் பண்ணி பிலிப்பைத் திட்டியிருக்கவேண்டும். அவன் குற்ற உணர்வுடன் குனிந்த முகத்துடன் வந்து மீன்களின் மரணத்திற்க அனுதாபம் சொல்லிக் குழந்தைகளிடம்; மன்னிப்புக் கேட்டான்.

அமுதனின் சினேகிதர்கள் மூலம் மீன்களின் அதிர்ச்சியான மரணம் பற்றி அவனின் பாடசாலையிலும் அவர்களின் ஒன்றிரண்டு சகோதரங்கள் செல்லும் ;நேர்ஸரியிலும் தெரியவந்ததால் ஆனந்தி தனது சின்ன மகன் சிவாவை நேர்ஸரிக்குக் கொண்டு செல்லும் நேரங்களில் பல தாய்மார்கள் தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்தார்கள்.

‘’;இந்தப் பக்கத்துப் பத்திரிகையாளர் வந்து இதை ’இலங்கையர் வீட்டில்’; நடந்த ஒரு மனிதமற்ற படுகொலைச் செய்தியாகப் போடாதிருப்பது நல்லது’’ என்று அவள் தம்பி கேசவன்; கிண்டலாகச் சொன்னான்.

அடுத்த சனிக்கிழமை வந்தது. குழந்தைகளுக்கு மீன்கள் வாங்கிக்கொடுத்த தம்பதிகளான மெலனியும் றிச்சார்ட்டும் லிவர்பூல் நகரிலிருந்து லண்டனுக்குவந்தார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களின் அணைப்பில் அமுதனின் ஓலம் பரிதாபமாகவிருந்தது. நேசன் மிகவும் விளக்கமாக அங்கு நடக்கவிருக்கும் தகனக் கிரியை பற்றித் தங்கள் ஆங்கில அன்பளிப்பாளர்களுச் சொன்னான். அவர்கள் மிகவும் சோகத்துடன் ஆனந்தி செய்து வைத்திருந்த அவர்களுக்குப் பிடித்த வடை>முறுக்குகளைச் சாப்பிட்டுக் கொண்டு மரண விளக்கத்தைக் கேட்டார்கள். பிலிப்பும் மார்க்கரெட்டும் மரணச் சடங்குக்கு மிகவும் தயக்கத்துடன் வந்தபோது>தங்கள் சினேகிதன் பிலிப்பை மெலனியும் றிச்சார்ட்டும் மெல்லிய குரலில்த் திட்டித் தீர்த்தார்கள்.

குழந்தைகளின் மாமா கேசவன் ஆனந்தியின் தோட்டத்தில்> தங்க மீன்களின் தகனத்திற்கான சுடலையை உண்டாக்கினான்.லண்டனில் யாரும் வீட்டுத் தோட்டத்துச் சருகுகளை எரிக்கக் கூடாது என்ற சட்டமிருக்கிறது. சட்டென்று> ஆனந்திக்குப் பயம் வந்து விட்டது. இவர்கள் நடத்தப் போகும் தகனப் புகையைக் கண்டு யாரும் தீயணைப்புப் படையை அழைத்தால் அது பெரிய களேபரமாக மாறி விடும்.

அது பற்றித் தம்பியிடம் பயத்துடன் குமுறினாள்.‘’அக்கா>இன்றைக்குச் சனிக்கிழமை. அக்கம் பக்கமெல்லாம் இறைச்சியையும் மீன்களையும் தங்கள் தோட்டங்களில் வெளி நெருப்பில் வதைத்து பாபேக்கியு என்ற விருந்து வைப்பார்கள் என்பது உனக்குத் தெரியாதா’’ என்று சமாதானப் படுத்தினான். அமுதனின் ஆறுவயதுச் சினேகிதர்களும்> நேசனின் ஒன்றிரண்டு ஒன்பது வயது அனுதாபிகளும் மட்டுமல்லாமல் தூரத்திலிருந்து வந்த சில அனுதாபிகளின் தாய்களும் அவர்களின் சிறு குழந்தைகள் தள்ளு வண்டிகளிலும் சடங்குக்குச் சமூகமளித்திருந்தார்கள்.

தோட்டத்தில் வீழ்ந்து கிடந்த மல்லிகை> ஆப்பிள் மர இலைகளைப் பொறுக்கி> கேசவன் தயாரித்த சிறு சருகுக்;குவியலிற்கு> அருகில் பல மெழுகுவத்திகளைக் கொழுத்தி அத்துடன் தமக்கை ஆனந்தி இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருந்து குத்து விளக்குகளையேற்றித் தங்க மீன்களின் தகனச் சடங்கு செய்ய ஆயத்தமானான கேசவன்;.

இத்தனைக்கும் காரணியான சிறுகுழந்தை சிவா எல்லா ஏற்பாடுகளையும் ஆச்சரியத்துடன் அவதானித்தபடி அடிக்கடி’வெரி நைஸ்’ என்று தனது தள்ளு வண்டியிலிருந்;தபடி கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தான்.

”மாமா, நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும’. என்று நேசனும் அமுதனும் கேட்டார்கள்.கேசவனின் ஆணைப்படி அமுதனின் தலைமையில் அவனுடன் அவனின் சினேகிதப் படையினர்>குளிர் பெட்டியிலிருந்த மீன்களை ஊர்வலமாகக் கொண்டு வந்தார்கள்.

அமுதனும், நேசனும் தங்க மீன் தம்பதிகள் இருவரையும் ஒன்றாகப் படலை ஏற்றினார்கள். அவர்களின் சினேகிதர்கள்>கப்பி மீன்கள் குடும்பத்தினரின் அடுத்த பெட்டியைக் கையில் ஏந்தியபடி வைத்திருந்தார்கள்.

‘’எங்களுடன் இவ்வளவு காலமும் வாழ்ந்து எங்களை மகிழ்வித்த இந்த மீன்களின் ஆவிகள் பரலோகத்தில் ஆத்மா சாந்தியடையக் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்’’ என்றான் கேசவன். வந்திருந்த சினேகிதப் பட்டாளமும் அவர்களின் சில தாய்களும் ‘ஆமென்’ என்று சொல்லி இறந்த மீன்களுக்கான தங்கள் பிரியாவிடையைச் சொன்னார்கள்.

‘அக்கா நீங்கள் தேவாரம் பாட வேண்டும்’’ என்று கேசவன் ஆனந்தியை அன்புடன் (?) கேட்டான். ஆனந்தpக்குக் கேசவனில் ஆத்திரம் வந்தாலும் குழந்தைகளைத் துக்கப்படுத்த விரும்பாமல் தேவாரம் பாடினாள்.

அதன்பின்’’அக்கா இந்தச் சடங்கை நீங்கள் விடியோ பண்ணுங்கள்> குழந்தைகள் தங்களின் மறைந்து விட்ட மீன்களின் ஞாபகத்திற்காக அடிக்கடி பார்த்துக் கொள்ள அதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்’’ என்றான். குழந்தைப் படையினர்’’ பிளீஸ் விடியோ எடுங்கள்’’ ஒருமித்த குரலில் தங்கள் கோரிக்கையை முன் வைத்தார்கள்.

தம்பியின் குறும்பு விளையாட்டை ஆனந்தி; புரிந்து கொண்டாலும்> குழந்தைகளுக்காக அதை ஒப்புக் கொண்டாள். தங்க மீன்கள் நெருப்பில் உருகியபோது அமுதனின் அலறல் பரிதாபமாகவிருந்தது.’’அவர்கள் சொர்க்கத்துச் சென்று விட்டார்கள்’’ என்ற அவர்களின் மாமாவின் விளக்கம் அமுதனின் அழுகையைக் கொஞ்சம் குறைத்தது. மரணச் சடங்கு விசேட அனுதாபிகளான மெலனியும் றிச்சார்ட்டும் அமுதனை அணைத்துக் கொண்டார்கள்.

. அடுத்ததாக ‘கப்பி’ மீன் குடும்பத்தினரின் சடங்கு ஆனந்தியின் மல்லிகை மரத்தின் கீழ் நடந்தது.

அவர்களின் ஞாபகமாக வெள்ளைத் துணி சுற்றிய சிறு குச்சுகள் புதையலில் நடுகற்களாக நடப்பட்டன. அங்கு வந்திருந்த ஆறு வயது இளம் படையிற் சிலர் மிக துக்கத்துடன் அந்த ஞாபகார்த்தக் குச்சுகளை நட்டார்கள்.மீன்களின் ஆவிகள் நிம்மதியாக சொர்க்கத்துக்கு போக வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்று சொன்னார்கள். இவ்வளவையும் கவனமாகத் தனது தம்பியின் வேண்டுகோளால் ஆனந்தி வீடியோ எடுத்தாள்.

’’ நீங்கள் உங்களின் அருமை மீன்களின் ஞாபகம் வரும்போது இந்த வீடியோ பார்க்லாம். .உங்களுக்கு மன ஆறுதலாக இருக்கும் தானே’’ என்று தனது குறும்பு சிரிப்பை மறைத்துக்கொண்டு தனது மருமகன்களுக்குச் கேசவன் சொன்னான்.

சடங்கு முடிந்ததும் வந்திருந்தவர்களுக்குப் பிரமாண்டமான பல இனிப்பு வகைகளுடனான. விருந்து கிடைத்தது. அதை உண்ணும் போது அவர்கள். தங்க மீன்களின் அழகு> அவர்கள் தொட்டியில் ஊர்வலமாகச் சென்ற விதம்> அவர்கள் ஒரு சில மாதங்களில் ஒருதொகை குஞ்சுகளை பெற்ற அற்புதம் பற்றி நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மெலனியும் ரிச்சhர்ட்டும் இந்த மரணச் சடங்கை மௌனமான ஆச்சரியத்துடன் அவதானித்தார்கள். இந்த குழந்தைகளுக்கு இந்த மீன்கள் இருந்த அன்பு அவர்கள் மனதை வருத்தியது. இவ்வளவு தூரம் இந்த மீன்களுக்காகத் துக்கப் படும் அமுதன்> நேசன். சின்னக் குழந்தை சிவா மூவரையும் மெலனி அள்ளி அணைத்து கொஞ்சினாள். அவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. அவளுக்கு. அமுதன்>நேசன் அத்துடன் சின்னப் பையன் சிவா போல தனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று ஆசைப் படுவதாகச் சொன்னாள். பிலிப்பும் மார்க்கரெட்டும் சடங்கு முடிந்ததும் அமுதனுக்குத் தங்கள் மனமார்ந்த துக்கத்தைச் சொல்லி விட்டு நழுவி விட்டார்கள்.

வெகு தூரத்திலிருக்கும் லிவர்ப்பூூல் நகரிலிருந்து தங்கள் வீட்டுக்கு வந்த மெலனியையும் ரிச்சார்ட்டையும்’’ நீங்களே இரவு தங்கிச் செல்லுங்கள்’ என்று ஆனந்தி கேட்டு இருந்தபடியால். அவர்கள் அன்றிரவு அங்கு தங்கினார்கள். அன்று இரவு. அவளுக்கு விருப்பமான மரக்கறி சமையல் செய்து கொடுத்தாள் ஆனந்தி. மெலனி சின்ன வயதிலிருந்தே மரக்கறி சாப்பிடுபவள். ஆனந்தியின் சமயல் பிடிக்கும். அவளுக்கு ஆனந்தி குடும்பத்தையும் மிகவும் பிடிக்கும்.

அத்துடன் குழந்தைகளிலும் மிகவும் பாசம் உள்ளவள் மெலனி. அன்றிரவு தங்கி> குழந்தைகளுடன் பேசி மரணச் சடங்கை ரசித்தது எல்லாம் அவளுக்கொரு புதிய அனுபவமாக இருந்தது. என்னை அழைத்ததற்கு உங்களுக்கு நன்றி என்று குழந்தைகளை கட்டியணைத்து மெலனி நீண்ட நேரம் கொஞ்சிக் கொண்டிருந்தாள். அப்போது அவர்களின் தகப்பன் தனது கூட்டங்களை முடித்து விட்டு வீடுவந்தார்.சுந்தரம் வந்ததும்>குழந்தைகள் பூரிப்புடன் தங்கள் மாமா நல்ல சடங்கு செய்து அவர்களின் அன்பு மீன்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி விட்ட விபரங்களை விரிவாகச்; சொன்னார்கள்.

‘’இந்து சமய குரவராக வந்து மரண சடங்கு செய்த உனது தம்பி> மீன்களின் சொர்க்கம் செல்லும் பிரயாணம் தடையில்லாமலிருக்கக் குடையும் காலணியும் கேட்டானா’’ என்று கிண்டலாகக் கேட்டார் சுந்தரம்.

‘ ஓ அம்மா மாமாவுக்கு நீங்கள் குடையும் காலணியும் கொடுக்கவில்லையே. அய்யோ அம்மா>மீன்கள் சொர்க்கத்திற்குப் போகக் கஷ்டப் படுவார்களே’ அமுதன் துயரக்; குரலில்த் தாயைக்; கேட்டான்.ஆனந்தி குழந்தைகளைத் துக்கப் படவைத்த கணவரில் வந்த கோபத்தை அடக்கி கொண்டு தர்மசங்கடத்துடன்’’இன்றைக்குப் பெரிய மழையோ வெயிலோ இருக்கவில்லை டார்லிங். அத்தோட எங்களின் தெருவைத் துப்பரவு செய்ய ஒவ்வொரு சனிக்கிழமையும் கவுன்சில் தொழிலாளிகள் வந்து அழகாகத்; துப்பரவு செய்வதுபோல் சொர்க்கத்திலும் நடந்திருக்கும். ஆனால் மீன்கள் தண்ணீரில் மிதந்துதானே சொர்க்கம் போவார்கள். எங்கள் பார்க்கில் உள்ள தடாகத்தையும் இன்று துப்பரவு செய்வதுபோல் சொர்க்கத்திற்குப் போகும் வழியிலுள்ள நீர்த் தொட்டிகளும் தடாகங்களும் அருமையாகத் துப்பரவு செய்யப் பட்டிருக்கும்.மீன்களின் சொர்க்க யாத்திரை சுகமாக நடந்திருக்கும்’’ என்று அன்பான குரலில் தன் மகன்களுக்குச் சொன்னாள்.

மகன்களைத் திருப்திப் படுத்திய ஆனந்தியின்; விளக்கத்தையும் அவளுடன் சமாதானம் செய்யும் தோரணையிலும் அவள் கணவர்> ‘’இன்று> சொர்க்கத்தைச் சுத்தம் செய்யும் தொழிலாளர் அதிக சம்பளம் கேட்டு வேலை நிறுத்தமும் செய்யவில்லையாம்’’ என்றார். அமுதனுக்கு அந்தப் பதில் திருப்தியாகவிருக்கும் என்று அவருக்குத் தெரியும்.

மெலனி- றிச்சார்ட் தம்பதிகள் சுந்தரம் சொன்ன பதிலால் தங்களுக்கு வந்த சிரிப்பை மறைத்துக் கொண்டு ஆனந்தி கொடுத்த பாயாசத்தைப் பருகிக் கொண்டிருந்தார்கள்.

சின்ன மகன் சிவா தனது குழந்தை மேசையிலிருந்து கொண்டு பிஸ்கட்டை வாயில் கடித்துக் கொண்டு>வழக்கமாகச் சொல்வதுபோல்’’வெரி நைஸ்’ என்றான்.

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *