அந்தக் கம்பெனியிலிருந்து நேர்முகத் தேர்விற்கு வரச் சொல்லி தீபாவுக்கு கடிதம் வந்திருந்தது.
எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தீபாவுக்கும்அப்படித்தானே இருக்கும்.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…!’ என்றேன்.
ஆனால் அவள் உம்மென இருந்தாள்.
மிகவும் விரும்பித்தான் விண்ணப்பித்திருந்தாள். அவள் வாழ்வின் லட்சியமே அந்த வேலைதான் ஆனால் கடிதம் வந்ததிலிருந்து அவள்முகம் சோகமாகவே இருந்தது.
என்ன காராணமோ?
இண்டர்வியூவுக்குப் போகும் போதும் அவளிடம் மகழ்ச்சியோ, பூரிப்போ இல்லை. அந்த கம்பெனிக்குச் சென்று மாலை வீடு திரும்பிய பிறகும் துயரத்தோடு இருந்தாள். கண்ணாடி முன் நின்று கண் கலங்கினாள். என்ன காரணமோ?
என்னால் பொறுக்க முடியவில்லை. கேட்டே விட்டேன்.
”என்னடி ஆச்சு? ஏன் இப்படி இருக்கே? இண்டர்வியூவிலே செல்க்ட் ஆகலையா?”
”செலக்ட் ஆயிட்டேம்மா…எனக்குத்தான் அதிக தகுதி இருக்குன்னு பாராட்டுனாங்க…நாளைக்கே வரச்சொல்லிட்டாங்க’ என்று தேம்பினாள்.
”அதுக்கு ஏன்டீ அழறே?”
‘பின்னே…மெகா சீரியல்லே நடிக்கல்லே செலக்ட் ஆகியிருக்கேன்..”
– தஞ்சை தாமு (31-1-11)