கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: July 10, 2012
பார்வையிட்டோர்: 12,217 
 
 

எங்கள் லோக​நா​தன் காலனி பயப்​ப​டும் ஒரே விஷ​யம் ஜிம்​மி​தான்.​ வங்​கி​யில் வேலை ​பார்க்​கும் சோமு​வின் வீட்டு நாய்​தான் இந்த ஜிம்மி.​ மருத்​து​வ​ம​னையை ஒட்​டி​யுள்ள வீட்​டில்​தான் சோமு குடி​யி​ருந்​தான்.​

மருத்​து​வ​ம​னைக்கு தினம்​தோ​றும் பத்து நோயா​ளி​க​ளை​யா​வது கூடு​த​லாக அனுப்பி வைப்​பதை ஜிம்மி ஒரு சேவை​யா​கவே பொறுப்​பு​டன் செய்து வந்​தது.​

இத்​த​னைக்​கும் ஜிம்மி நாட்​டு​நாய்​தான்.​ ஆனா​லும் சோமு வீட்​டார் அதைக் கொஞ்​சும்​போது பார்க்க வேண்​டுமே,​​ உல​கத்​தி​லேயே உயர்ந்த ஜாதி நாய்​களை வைத்​தி​ருப்​போர் கூட இப்​ப​டிக் கொஞ்​ச​மாட்​டார்​கள்.​ கால​னி​யின் மத்​தி​யில் உள்ள தெரு​வா​கப் போய்​விட்​ட​தால் எங்​க​ளால் ஜிம்​மி​யைத் தவிர்க்​கவே முடி​ய​வில்லை.​ காலை​யி​லும்,​மாலை​யி​லும் ஜிம்​மி​யி​டம் அர்ச்​ச​னை​யைப் பெறா​மல் எவ​ரா​லும் தப்​பவே முடி​யாது.​ வெளியே செல்​லும்​போது சகு​னம் ​பார்ப்​பது உங்​கள் ஊர் பழக்​க​மாக இருக்​க​லாம்.​ எங்​கள் ஊர் கதையே வேறு.​ ஜிம்மி தெரு​வில் தென்​ப​டு​கி​றதா இல்​லையா என்று பார்த்த பிற​கு​தான் எங்​கள் பாதங்​கள் தெரு​வில் பதி​யும்.​

எங்​கள் கால​னிக்​குள் போலீசே வந்​த​தில்லை.​ எல்​லாம் ஜிம்​மி​யின் கைங்​க​ரி​யம்​தான்.​ எங்​கள் காலனி பெண்​க​ளுக்​கும்,​​ ஆண்​க​ளுக்​கும் திரு​ம​ணம் ஆவது குதி​ரைக் கொம்​பாக இருந்​தது.​ இது​வும் ஜிம்​மி​யின் புகழ் அவ​னி​யெங்​கும் பர​வி​ய​தால்​தான்.​ திரு​ம​ணம் ஆக​வேண்​டு​மென நவ​கி​ர​கங்​களை வலம் வந்து வேண்​டி​ய​வர்​க​ளெல்​லா​ரும் தவ​றா​மல் ஜிம்மி குறித்த புகார்​க​ளை​யும் கட​வு​ளின் காதில் போட்டு வைத்​தார்​கள்.​ தபால்​கா​ரர் கூட ஜிம்​மி​யின் பார்​வை​யில் இன்று தப்​பித்​தால் மறக்​கா​மல் மாலை​யில் வீடு திரும்​பும்​போது தேங்​காய் உடைப்​ப​தாக வேண்​டிக் கொள்​வார் என்​றால் இதற்​கும் மேல் ஜிம்​மி​யின் பெரு​மையை சொல்​ல​வும் வேண்​டுமா என்ன?​

ஜிம்​மி​யின் திரு​வா​யால் கடி​ப​டா​த​வர்​கள் சோமு​வின் குடும்​பத்​தி​னர் மட்​டுமே.​ இரவு நேரத்​தில் ஜிம்​மிக்கு குஷி கரை​பு​ரண்​டோ​டும்.​ தனக்​குத் தெரிந்த அனைத்து ராகங்​க​ளி​லும் குரைத்​துத் தீர்த்​து​வி​டும்.​ நாங்​கள்​தான் ராத்​தூக்​கம் கெட்டு பக​லில் போதை வயப்​பட்​ட​வர்​கள் போல நட​மா​டிக் கொண்​டி​ருப்​போம்.​

சோமு​வி​டம் ஜிம்​மி​யைப் பற்றி ஊரே புகார் கூறிய போது,​​ துளி கூட அலட்​டிக் கொள்​ளா​மல்,​​ “”உங்க பாது​காப்​புக்​காக கறுப்​புப் பூனை​யையா வளர்க்க முடி​யும்?​” என்று நக்​க​ல​டித்​தான்.​ கிட்​டத்​தட்ட சோமு​வின் முக​வ​ரி​யா​க​வும்,​​ கௌர​வ​மா​க​வும் ஜிம்மி மாறி​விட்​டது.​ ஊரார் தன் மீதுள்ள பொறா​மை​யால்​தான் ஜிம்​மியை குறை கூறு​வ​தாக நினைத்​துக் கொண்​டான்.​ நக​ராட்​சிக்கு எழு​திப்​போட்​டும் பல​னே​து​மில்லை.​ நக​ராட்​சி​யின் ஊழி​யர்​கள் அனை​வ​ரும் சோமு வேலைப்​பார்க்​கும் வங்​கி​யில்​தான் கணக்கு வைத்​துள்​ள​னர்.​ போதாக்​கு​றைக்கு இப்​போ​தெல்​லாம் சம்​ப​ளம் கூட வங்கி மூல​மா​கத்​தான் அவ​ர​வர் கணக்​கு​க​ளில் போய்ச் சேரு​கி​றது.​ கேட்​கவா வேண்​டும்?​ சோமு​வின் தரப்பு நியா​யங்​களை எடுத்​துச் சொல்​லும் வக்​கீ​லாக அல்​லவா மாறி​விட்​டார்​கள்.​ பின் யாரி​டம்​தான் இக்​கு​றையை முறை​யி​டு​வது?​

இரவு வேளை​க​ளில் உணவு உண்​ணும் போது கிசு​கி​சுக்க ஆரம்​பித்து,​​ பின் மெது​மெ​து​வாக ஊருக்கு வெளியே கூடிப் பேசும் அள​வுக்கு துணிச்​சல் பெற்ற இளை​ஞர்​கள் சில​ரால் வெற்​றி​க​ரமாக ஒரு சதித் திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டது.​ கால​னி​யின் சுதந்​தி​ரம் பற்​றிய கன​வு​க​ளுக்கு இறகு முளைத்து ஊர் முழுக்க சுற்றி வர​லா​யின.​ ஜிம்​மியை ஒழித்​துக் கட்​டிய பின்​னர் ஊர் எவ்​வ​ளவு நிம்​ம​தி​யாக இருக்​கும் என்​பதை கற்​பனை செய்து புள​காங்​கி​தம் அடைந்​தோம்.​ ஜிம்​மி​யின் நட​வ​டிக்​கை​கள் வேவு பார்க்​கப்​பட்​டன.​ நாள் முழுக்க அதன் நிகழ்ச்சி நிரல் என்​னென்​ன​வென்​பது எங்​க​ளுக்கு அத்​துப்​ப​டி​யா​கி​விட்​டது.​ அதன் குரைப்​பின் தொனியை வைத்தே மாட்​டி​யது உள்​ளூ​ரானா,​​ வெளி​யூ​ரானா என்​ப​தைக் கணிக்​கும் அள​வுக்கு தேறி​விட்​டோம்.​

ஜிம்மி என்​னவோ நாட்டு நாய்​தான்.​ ஆனா​லும் அதன் தோரணை வெளி​நாட்டு புசு​புசு நாய்க்​கும்​கூட வாய்ப்​பது கடி​னம்.​ அப்​படி ஒரு கம்​பீ​ரம்,​​ லாக​வம்.​ தெரு​வில் அது லாந்​தும் போது பார்க்க வேண்​டுமே,​​ அடடா,​​ ஒரு சிங்​கத்​தின் கம்​பீ​ரத்​தோடு அது உலா வரும் அழகே அழகு.​ எதி​ரி​யை​யும் பாராட்​டும் அள​வுக்கு பண்​பா​டு​மிக்​க​வர்​கள் எங்​கள் கால​னி​வா​சி​கள்.​ ஜிம்​மி​யின் மீது ஒரு “அட்​டாக்’ தொடுப்​ப​தென இள​வட்​டங்​கள் முடி​வெ​டுத்​த​போது பெரு​சு​கள் தடுக்​க​வில்லை.​

சரி​யான தரு​ணம் பார்த்து காத்​துக் கிடந்த போது,​​ ஒரு நாள் சோமு குடும்​பத்​தி​னர் கோயி​லுக்கு மொட்​டைப் போட சென்ற செய்தி வாட்​ட​மாய் வந்து சேர்ந்​தது.​

உடனே செய​லில் இறங்க முடி​வெ​டுத்​தோம்.​ தெரு​வின் இரு பக்​கத்​தி​லும் ஆட்​களை நிற்க வைத்து,​​ சோமு​வின் வீட்டை மெது​வாக முற்​று​கை​யிட்​டோம்.​ மன்​னர்​கள் காலத்​தில் போருக்​குச் செல்​லும்​போது என்​னென்ன ஆயு​தங்​கள் எடுத்து சென்​ற​தாக சொல்​லப்​பட்​டதோ,​​ அதற்​குச் சற்​றும் குறை​யாத ஆயு​தங்​க​ளோ​டு​தான் ஜிம்​மி​யின் மீது படை​யெ​டுத்​தோம்.​ எல்லா பந்​தா​வும் ஜிம்​மி​யைப் பார்க்​கும் வரை​யி​லும்​தான்.​ படுத்​துக் கொண்​டி​ருந்த ஜிம்மி எங்​கள் சத்​தத்​தைக் கேட்​ட​தும் சிவுக்​கென எழுந்து படக்​கெ​னப் பாய்ந்து வந்து முதல் தெரு சீதா​ப​தியை மூர்க்​க​மாய் ஒரு கடி கடித்​த​து​தான் தாம​தம்,​​ ஏந்​திய ஆயு​தங்​களை அப்​ப​டி​யப்​ப​டியே போட்​டு​விட்டு,​​ கூடிய கும்​பல் ஒரு நொடி​யில் பறந்து விட்​டது.​

இந்த நிகழ்ச்​சிக்கு பிறகு ஜிம்​மி​யின் கோபம் எல்லை மீறிப் போய்​விட்​டது.​ தன்னை அடிக்​கத் திட்​ட​மிட்​ட​வர்​களை தேடித் தேடி கடிக்க ஆரம்​பித்​து​விட்​டது.​ ஜிம்​மி​யின் கோபத்தி​லி​ருந்​தும்,​​ பழி​வாங்கலி​லி​ருந்​தும் எப்​படி தப்​பிப்​பது என்​பதே உட​ன​டிப் பிரச்​னை​யா​கி​விட்​டது.​ பொறை,​​ சமோசா என ஜிம்​மிக்கு ஆசைக்​காட்டி தன் பக்​கம் இழுக்​கப் பார்த்​தும் பல​னில்லை.​ இறு​தி​யாக ஜிம்​மி​யின் நிகழ்ச்சி நிரலை அனு​ச​ரித்து எங்​க​ளது வெளி வேலை​களை முடித்​துக் கொள்​ளப் பழகி கொண்​டோம்.​

கால​னி​யின் பிள்​ளை​க​ளுக்கு பெற்​ற​வர்​கள் ஏதே​னும் வேலை வைத்​தால் ஜிம்மி பேரைச் சொல்லி தப்​பித்​து​வி​டு​வார்​கள்.​ பிள்​ளை​கள் சோம்​பே​றி​க​ளாக வலம் வரு​வதை காண்​கின்ற வருத்​தம் ஒரு பக்​கம்,​​ சொந்​தக்​கா​ரர்​கள் எவ​ரும் வரு​வ​தில்​லையே என்​கிற வருத்​தமோ இன்​னொரு பக்​கம்,​​ ஏற்​க​னவே குடி​யி​ருந்​த​வர்​க​ளும் காலி செய்து கொண்டு கால​னிக்கே பெரிய கும்​பிடு போட்​டு​விட்டு சென்​று​விட்​ட​தால்,​​ வாட​கைக்கு யாரா​வது வர​மாட்​டார்​களா என்ற ஏக்​கம் மறு​பக்​கம் என கால​னியே சோகத்​தில் ஆழ்ந்து போனது.​ இதை​வி​டக் கொடுமை என்​ன​வென்​றால்,​​ கால​னி​வா​சி​க​ளு​டன் கொடுக்​கல் வாங்​கல் வைத்​துக் கொள்​ளக்​கூட எந்த ஊரும் தயா​ராக இல்லை.​

அன்​றை​ய காலைப்​பொ​ழுது உண்​மை​யா​கவே கால​னி​வா​சி​க​ளுக்கு நல்ல செய்​தி​யு​டன்​தான் விடிந்​தது.​ சோமுவை பெங்​க​ளூ​ருக்கு மாற்​றி​விட்​டார்​க​ளாம்.​ இதைத் தானே இத்​தனை நாள் எதிர்​பார்த்​தி​ருந்​தோம்.​ பட்​டாசு,​​ தாரை தப்​பட்டை எல்​லாம் தயார்,​​ சோமு​தான் இன்​னும் கிளம்​பிய பாடாக இல்லை.​ மேலி​டத்​தில் போய் இந்த மாற்​றல் உத்​த​ரவை எதிர்த்து முறை​யிட்​ட​தா​க​வும்,​​ ஆனால் போட்ட உத்​த​ரவு போட்​ட​து​தான் என மேலி​டம் கூறி​விட்​ட​தா​க​வும்,​​ தக​வல்​கள் பியூன் ராமன் மூலம் கசிந்​தன.​ அந்த நாளும் வந்​தது.​ இருப்​ப​தை​யெல்​லாம் வந்த விலைக்கு விற்​று​விட்டு,​அத்​தி​யா​வ​சி​ய​மா​னதை மட்​டும் பார்​சல் லாரி​யில் அனுப்​பி​விட்​டான் சோமு.​ டாடா சுமோ வாச​லில் உறு​மிக் கொண்​டி​ருக்க,​​ சோமு​வின் குடும்​பம் மெது​வாக வெளி​யில் வந்து காரில் ஏறி​யது.​ மூச்​சைப் பிடித்​துக் கொண்டு இந்த இறுதி காட்​சி​க​ளைப் பார்த்​துக் கொண்​டி​ருந்​தோம்.​ காரும் நகர ஆரம்​பித்​தது.​ நாங்​க​ளும் இதைக் கொண்​டாட தயா​ரான வேளை​யில்​தான் அந்த விப​ரீ​தத்தை காண நேர்ந்​தது.​ புழு​தியை கிளப்​பி​ய​படி கார் போகி​றது,​​ அதைத் துரத்​தி​ய​படி ஜிம்மி ஓடு​கி​றது.​ சிறிது நேரம் கழித்​துத்​தான் எங்​க​ளுக்​குப் புரிந்​தது,​​ ஜிம்​மியை சோமு கைக​ழுவி விட்​டான் என்​பது.​

எங்​க​ளுக்கோ பெரிய குழப்​பம் இப்​போது என்ன செய்​வது?​ காரைத் துரத்​தி​ய​படி தெரு​முனை வரை ஓடிய ஜிம்மி மீண்​டும் திரும்பி வரு​வ​தைப் பார்த்​த​வு​டன் கால்​கள் வெட​வெ​ட​வென நடுங்க ஆரம்​பித்​தன.​ ஆனால் ஒரு ஆச்​ச​ரி​யம் பாருங்​கள்,​​ நடுக்​க​மி​ருந்​தா​லும் யாரும் நக​ர​வே​யில்லை.​ ஜிம்​மி​யும் நெருங்கி வந்து கொண்​டி​ருந்​தது.​ எங்​கள் பையன்​க​ளும் கையில் கிடைத்​ததை எடுத்​துக் கொண்டு தயா​ராக இருந்​த​னர்.​ ஜிம்மி ஏறெ​டுத்து யாரை​யும் பார்க்​கா​மல் துக்​கத்​துக்​குச் சென்று வந்த பெரிய மனி​தர் முகத்தை எப்​படி வைத்​தி​ருப்​பாரோ அப்​படி முகத்தை வைத்​துக் கொண்டு பற்​றற்ற ஞானி​யைப் போல வெறு​மை​யான பார்​வை​யு​டன் நேராக சோமு குடி​யி​ருந்த வீட்​டின் முன்​னால் வந்து நின்று எல்​லோ​ரை​யும் ஒரு பார்வை பார்த்​து​விட்டு அப்​ப​டியே சுருண்டு படுத்​துக் கொண்​டது.​ அதை அடிக்க ஓங்​கிய கைகள் பெரி​சு​கள் எவ​ரும் தடுக்​கா​ம​லேயே தயங்கி நின்​றன.​ எங்​க​ளைக் காலம்​கா​ல​மாய் பய​மு​றுத்​திக் கொண்​டி​ருந்த ஜிம்​மி​யல்ல இது.​ அத​னு​டைய நிலைமை எங்​களை என்​னமோ செய்​தது.​ சோமு​வின் சுய​ந​லத்தை நினைத்து கால​னியே காறி​துப்​பி​யது.​

சோமு இங்கு குடி​வந்​தபோது பக்​கத்து வீடு காலி​யாக இருந்​தது.​ அதன் தாழ்​வா​ரத்​தில் ஒரு பெட்டை நாய் நான்கு குட்​டி​கள் போட்​டி​ருந்​தது.​ நைநை​யென்று அவை​கள் போடும் சத்​தம் சோமுவை எரிச்​சல் படுத்த,​​ தடியை எடுத்​துக்​கொண்டு நாயை விரட்ட ஓடி​னான்.​ இவன் சத்​த​மிட்​டுக் கொண்டே ஓடி​வ​ரு​வ​தைக் கண்டு தனது குட்​டி​களை வாயால் கெüவிக் கொண்டு வேக​வே​க​மாக பக்​கத்தி​லி​ருந்த புதரை நோக்கி ஓடி​யது அந்த பெட்டை நாய்.​ ஆனால் சோமு வரு​வ​தற்​குள் அத​னால் மூன்று குட்​டி​களை மட்​டுமே அப்​பு​றப்​ப​டுத்த முடிந்​தது.​ சோமு வந்து பார்க்​கும் போது ஒரு குட்டி நாய் எழுந்து நிற்க முயற்​சித்​துக் கொண்​டி​ருந்​தது.​ ஆனால் அதன் கால்​களோ தழைந்து தழைந்​துப் போக அக்​குட்டி நிற்​க​மு​டி​யா​மல் தடு​மா​றிக் கொண்​டி​ருப்​ப​தைப் பார்த்த சோமு என்ன நினைத்​தானோ சட்​டென்று அதை வாரி​யெ​டுத்​துக் கொண்டு கொஞ்​ச​லா​னான்.​ அந்த குட்டி நாய்​தான் இந்த ஜிம்மி.​ அருமை பெரு​மை​யாய் வளர்த்​து​விட்டு இப்​படி அம்​போ​வென விட்​டு​விட்​டுப் போய்​விட்​டானே என கால​னியே சோமுவை மண்​வாரி தூற்​றாத குறை​யாய் சபித்​தது.​ போறது பெங்​க​ளூரு இல்ல,​​ அது​தான் கெüரவ குறைச்​சல்னு நாட்டு நாயை இங்​கேயே விட்​டுட்​டுப் போயிட்​டான் பாவி​ம​வன் புசு​பு​சுன்னு இருக்​கிற வெளி​நாட்டு நாயாக இருந்​தி​ருந்​தால் இப்​படி தெரு​வில் கிடா​சி​விட்டு போயி​ருப்​பானா என்று ஒரு பெருசு பொறு​மி​யது.​ அவ​ர​வர்​க​ளுக்​கென்று ஆயி​ரம் வேலை​கள் காத்​தி​ருப்​ப​தால் கூட்​டம் மெது​வாக கலை​ய​லா​யிற்று.​

சாப்​பிட்டு முடித்து படுக்​கப் போகும்​போ​து​தான் ஒரு மாற்​றத்தை கவ​னிக்க முடிந்​தது.​ ஜிம்​மி​யின் குரைப்​பொலி கேட்​க​வே​யில்லை.​ நேற்று வரை அக்​கு​ரைப்​பொலி நார​ச​மாய் என்று ஒழி​யு​மிந்த இம்​சை​யென தோன்​றி​யது.​ இன்றோ ஜிம்​மி​யின் குரைப்​பொலி கேட்​கா​தது ஏதோ ஒன்று குறைந்து போனது போல தோன்​றி​யது.​ இந்த விந்​தையை எண்​ணி​ய​ப​டியே காலனி உறங்​கிப் போனது.​ காலைப்​பொ​ழுது இப்​பொ​ழு​து​தான் உண்​மை​யான காலைப் பொழு​தாக கால​னி​வா​சி​க​ளுக்​குத் தோன்​றி​யது.​

ஜிம்​மி​யின் அட்​ட​கா​சம் இல்​லாத,​​ அமை​தி​யான வாழ்க்கை இன்று முதல் துவங்​கு​கி​றது.​ ஜிம்​மி​யைப் பார்த்​து​வ​ர​லா​மென ஊரே கிளம்​பி​விட்​டது.​ நேற்று மாலை எங்கு படுத்​துக் கிடந்​ததோ அதே இடத்​தில்​தான் இப்​பொ​ழு​தும் இருந்​தது.​ தலையை முன்​னங்​கால்​க​ளுக்​கி​டை​யில் புதைத்​துக் கொண்டு படுத்​துக்​கொண்​டி​ருந்​தது.​ காது​கள் மடிந்து தொங்​கட்​டான் போல தொங்​கிக் கொண்​டி​ருந்​தது.​ பழைய கோபம் மக்​க​ளுக்கு சட்​டென்று மாய​மா​கி​வி​டுமா என்ன?​ நாலு பக்​கத்தி​லி​ருந்​தும் பல்​வேறு தினு​சான கற்​கள் மட​ம​ட​வென ஜிம்​மி​யின் மீது பொழி​யத்​தொ​டங்​கின.​ ஜிம்மி லேசாக தலை​யைத் தூக்​கிப் பார்த்​த​தோடு சரி,​​ தண்​ட​னையை நேருக்கு நேராய் சந்​திக்​கும் நெஞ்​சத்​து​டன் அமைதி காத்​தது.​ எல்​லாம் சிறிது நேரம்​தான்.​ ஜிம்​மி​யின் மீதி​ருந்த கோபம் எங்கு போயிற்றோ?​ பக்​கத்து வீட்​டுப் பெண் கொஞ்​சம் சாதம் எடுத்​துக் கொண்டு வந்து ஜிம்​மி​யின் முன்​னால் தயங்​கி​ய​ப​டியே வைத்​தாள்.​ அதை முகர்ந்து கூடப் பார்க்​கா​மல் தலையை தனக்​குள்​ளாக புதைத்​துக் கொண்​டது.​ குற்​ற​வு​ணர்வு மேலிட கூட்​டம் மௌன​மாக கலைந்து போனது.​

நாட்​கள் பறந்த வேகத்​தில் லோக​நா​தன் கால​னி​வா​சி​கள் ஜிம்​மியை மறந்​துப் போனார்​கள்.​ ஜிம்​மியை கூட முன்​பு ​மா​திரி கால​னிப் பக்​கம் பார்க்​க​மு​டி​ய​வில்லை.​ இரவு நேரத்​தில் சாப்​பிட்டு முடித்​த​வு​டன் கையை தட்​டில் கழுவ என் தந்தை அனு​ம​திக்​க​மாட்​டார்.​ தட்​டில் கொஞ்​சம் சாதத்தை மிச்​சம் வைத்து,​​ அதை வீட்டு வாச​லில் ஓர​மா​க​வுள்ள கல்​லின் மீது கொட்டி,​​ ​ ஜூ..​ ஜூ..வென நாய்​களை கூப்​பிட்டு சாப்​பிட வைக்க வேண்​டும்.​ அதன் பிற​கு​தான் அப்​பா​வுக்கு ஏப்​பமே வரும்.​ அப்பா கால​மாகி பதி​னைந்து வரு​டங்​க​ளா​விட்​டது.​ காலம் மாறி​விட்​டது.​ விலை​வாசி ஏற்​றம் மனி​தர்​களை மட்​டுமா பாதித்​துள்​ளது.​ நாய்​க​ளை​யும்​தான் கடு​மை​யாக பாதித்​துள்​ளது.​ முன்பு மாதிரி யாரும் தட்​டில் மிச்​சம் வைப்​ப​து​மில்லை.​ மிச்​ச​மா​கு​ம​ள​வுக்கு சமைப்​ப​து​மில்லை.​ சிந்​தும் பருக்​கையை ஊசி​யால் குத்தி தண்​ணீ​ரால் அலசி சாப்​பி​டும் காலத்​தில் நாய்​க​ளுக்கு எங்கே சாப்​பாடு கிடைக்​கும்?​ தட்​டில் கையை கழு​வும் போதெல்​லாம் அப்​பாவை நினைத்​துக் கொள்​வேன்.​ கூடவே தவிர்க்க முடி​யா​மல் ஜிம்​மி​யின் ஞாப​க​மும் வந்​து​வி​டு​கி​றது.​ இப்​போ​தெல்​லாம் ராப்​பிச்சை கேட்டு பிச்​சைக்​கா​ரர்​கள் கூட வரு​வ​தில்லை.​ கடை​வீ​தி​க​ளில் பிச்சை எடுப்​ப​தோடு அப்​ப​டியே போய்​வி​டு​கின்​றார்​கள்.​ நாய்​க​ளுக்கே அன்​ன​மிட யோசிக்​கும் தேசம்,​​ பிச்​சைக்​கா​ரர்​க​ளுக்கா அன்​ன​மி​டும்?​

மருத்​து​வ​ம​னை​யி​லும் முன்பு போல நாய்க்​கடி ஊசிக்கு பெரிய அள​வுக்கு வேலை​யில்​லா​மல் போய்​விட்​டது.​ அன்று எனக்கு ஓய்வு நாள்.​ நண்​பனை பார்த்து வர​லா​மென சென்​றேன்.​ போகும் வழி​யில் ஒரு அரு​மை​யான காட்சி.​ ஜிம்​மி​யின் மீது நாலைந்து தெரு நாய்​கள் விழுந்து புரண்டு விளை​யா​டிக் கொண்​டி​ருந்​தன.​ ஜிம்​மியோ மோன தவத்​தி​லாழ்ந்​தி​ருந்​தது.​ இதைக்​காண எனக்கு ஆச்​ச​ரி​ய​மா​கி​விட்​டது.​ தனது தெரு​வுக்​குள் வேறெந்த நாயா​வது லேசாக தலைக்​காட்டி விட்​டால் போதும்.​ ஜிம்மி தெரு​வையே கல​வர பூமி​யாக்​கி​வ​டும்.​ ஊர​டங்​குச் சட்​டம் போடப்​பட்ட பகு​தி​யாக கப்​சிப்​பென ஊர் அடங்​கி​யொ​டுங்​கி​வி​டும்.​ வாலை பின்​னங்​கால்​க​ளுக்​கி​டை​யில் சுருட்​டிக் கொண்டு அந்த வெளி நாய் வெளி​யே​றும்​வரை இந்த அமளி அடங்​கவே அடங்​காது.​ அந்த ஜிம்​மி​தானா இது​வென என்​னால் நம்​ப​வே​ மு​டி​ய​வில்லை.​

ஜிம்​மியை அதற்​குப் பிறகு காண​மு​டி​ய​வில்லை.​ அதன் குரைப்​பொலி சுத்​த​மாக ஞாப​கத்​தி​லேயே இல்​லா​மல் போய்​விட்​டது.​ நீண்ட நாட்​க​ளுக்​குப் பிறகு ஒரு நண்​ப​ரு​டன் தேனீர் அருந்த எங்​கள் குடி​யி​ருப்​புக்​குப் பக்​கத்தி​லி​ருந்த கிருஷ்​ணன் கடைக்​குச் சென்​றி​ருந்​தேன்.​ அங்கே தேனீர் குடிக்க வரு​ப​வர்​க​ளின் காலை தமது முன்​னங்​கால்​க​ளால் சொறிந்து ஏதா​வது சாப்​பிட போடும்​படி நாலைந்து நாய்​கள் தொல்​லைக் கொடுத்​துக் கொண்​டி​ருந்​தன.​ ஆனால் ஒரு நாய் மட்​டும் இதில் கலக்​கா​மல் தூரத்​தில் உட்​கார்ந்​த​படி இதை​யெல்​லாம் அமை​தி​யாக பார்த்​துக் கொண்​டி​ருந்​தது.​ இதன் அமை​தி​யைப் பார்த்து யாரா​வது தானாக முன்​வந்து பொறை​யையோ,​​ வடை​யையோ போட்​டால் உட்​கார்​நத இடத்தி​லி​ருந்​த​ப​டியே அதை பதட்​ட​மின்றி முன்​னங்​கா​லால் பற்​றி​யி​ழுத்து மெது​வாக சாப்​பிட்​டது.​ இது என்னை வெகு​வாக கவர்ந்​த​தால் அந்த நாயை உற்​றுப் பார்த்​தேன்.​ அடடா,​​ இது நம்ம ஜிம்​மி​யல்​லவா?​ பார்த்​த​வு​டன் கண்​டு​பி​டிக்​க​மு​டி​யாத அள​வுக்கு வெகு​வாக மாறி​விட்​டி​ருந்​தது.​ பழைய வனப்பு இல்லை.​இளைத்​துப் போயி​ருந்​தது.​ போதாக்​கு​றைக்கு சொறிப் பிடித்​துப் போயி​ருந்​தது.​ உண்ணி அடை​அ​டை​யாய் மேய்ந்​துக் கொண்​டி​ருந்​தது.​ உரு​வத்தை வைத்து ஜிம்​மியை கண்​டு​பி​டிக்​கவே முடி​யாது.​ ஆனால் இந்த நிலை​யி​லும் அதன் கம்​பீ​ரம் சற்​றும் குறை​ய​வே​யில்லை.​ அதன் பார்​வை​யின் மோனத் தன்மை மாற​வே​யில்லை.​ புதி​ய​தாய் அதைப் பார்ப்​ப​வர்​க​ளுக்கு ஜிம்மி ஊமை நாயோ​வென சந்​தே​கப்​ப​டு​வர்.​ அவர்​கள் அறி​ய​மாட்​டார்​கள்,​​ ஜிம்​மி​யின் குரைப்​பொலி கேட்டு லோக​நா​தன் கால​னியே ஒரு​கா​லத்​தில் கதி​க​லங்​கிப் போயி​ருந்​ததை.​ ஜிம்​மி​யின் இந்​தக் கோலத்தை காணச் சகிக்​கா​மல் நண்​பரை அழைத்​துக் கொண்டு சட்​டென புறப்​பட்​டு​விட்​டேன்.​ ஜிம்​மி​யைப் பற்றி இன்​னும் சொல்ல என்​னி​டம் எது​வு​மில்லை.​ ஏனெ​னில்,​​ ஜிம்​மியை அதற்​குப் பிறகு வேறெங்​கும் நானும் பார்க்​க​வில்லை.​ வேறு யாரும் பார்க்​க​வும் இல்​லை​யாம்.

*** இந்த சிறுகதை தினமணி கதிரில் வெளியானது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *